Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
29 NOV, 2024 | 08:30 PM
image

சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் அந்த நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான அலப்போவை நான்கு வருடங்களின் பின்னர் மீண்டும் கைப்பற்றியுள்ளனர்.

சிரியாவின் வடமேற்கில் நிலை கொண்டுள்ள  கிளர்ச்சியாளர்கள் கடும் தாக்குதலை மேற்கொண்டு அலப்போ நகரிற்குள் நுழைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

alepo.jpg

ஹயாட் டஹ்கிரிர் அல் ஷாம் என்ற அமைப்பை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் இட்லிப்பிலிருந்து இந்த வாரம் தாக்குதலை ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் அலப்போ நகருக்குள் நுழைந்துள்ளனர் என துருக்கியின் செய்திஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

நகரின் புறநகர் பகுதிகளில் ஏவுகணைகள் விழுந்து வெடிக்கும் சத்தம் கேட்பதாக பொதுமக்கள் ஏஎவ்பிக்கு தெரிவித்துள்ளனர்.

மூன்று நாட்களிற்குள் கிளர்ச்சியாளர்கள் அலப்போவின் கிராமப்பகுதிகள் பலவற்றை கைப்பற்றியுள்ளதுடன் இராணுவ தளமொன்றை கைப்பற்றி சிரிய இராணுவத்தின் டாங்கிகள் உட்பட பல ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/200046

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சில நாடுகளுக்கு சண்டைகள் இல்லா விட்டால் கை கடித்துக்கொண்டே இருக்கும். காஸா யுத்தம் ஓய......அடுத்தது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து முன்னேறும் கிளர்ச்சியாளர்கள் - அலப்போவிலிருந்து வெளியேறியது சிரிய இராணுவம்

01 DEC, 2024 | 11:29 AM
image

கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து முன்னேறி வருவதை தொடர்ந்து சிரிவின் அலப்போ நகரிலிருந்து சிரிய இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.

allepo5.jpg

ஜனாதிபதி பசார் அல் அசாத்தின் ஆட்சியை எதிர்க்கும் கிளர்ச்சியாளர்கள் அலப்போ நகரிற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே சிரிய படையினர் பின்வாங்கியுள்ளனர்.

நகரின் பெரும்பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக தெரிவித்துள்ள சிரிய இராணுவம் எனினும் அந்த நகரை மீள கைப்பற்றுவதற்காக பதில் நடவடிக்கையொன்றை  முன்னெடுக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

சிரியாவின் உள்நாட்டு போரில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

கிளர்ச்சியாளர்கள் கடந்த புதன்கிழமை தங்கள் நடவடிக்கையை ஆரம்பித்தது முதல் 20 பொதுமக்கள் உட்பட 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என சிரியாவின் மனித உரிமை நிலவரத்தை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை சிரிய ஜனாதிபதி தனது நாட்டின் ஸ்திரதன்மை ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

சிரியாவிற்கு அதன் நண்பர்கள் சகாக்களின் உதவியுடன் கிளர்ச்சியாளர்களை ஒழிக்கும் திறன் உள்ளது என சிரிய ஜனாதிபதி அசாத் தெரிவித்தார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஹயட் டஹ்ரிர் அல்சாம் என்ற அமைப்பே தற்போதைய தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இந்த அமைப்புடன் துருக்கி ஆதரவுபெற்ற குழுவும் இணைந்து செயற்படுகின்றது.

இவர்கள் அலப்போவின் விமானநிலையம் உட்பட பல பகுதிகளை கைப்பற்றியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/200121

  • கருத்துக்கள உறவுகள்

கடாபி,சதாம்,பின்லாடன்,ஈரானிய முன்னாள் ஜனாதிபதி, வரிசையில் அசாத் ?எது எப்படியோ ரஸ்யாவை நம்பினால் அதோ கேதி தான்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, putthan said:

கடாபி,சதாம்,பின்லாடன்,ஈரானிய முன்னாள் ஜனாதிபதி, வரிசையில் அசாத் ?எது எப்படியோ ரஸ்யாவை நம்பினால் அதோ கேதி தான்...

இந்த முறையும் வழமை போல் ஜேர்மனிதான் மூன்றாம் உலக போரை சம்பிரதாயமாக ஆரம்பிக்கும் போல் தெரிகின்றது. அப்படி ஆரம்பித்தால் இனிமேல்  ஜேர்மனி உலக வரைபடத்தில் இருக்காது. அல்லது புல் பூண்டுகள் முளைக்காத பாலைவனமாக மாறும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

கிளர்ச்சியாளர்கள் இலக்குகள் மீது சிரிய, ரஷ்ய விமானங்கள் தாக்குதல்

damithDecember 3, 2024
02-5-1.jpg

சிரியாவின் அலெப்போ, இட்லிப் நகர்களை கைப்பற்றியுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சிரிய, ரஷ்ய யுத்த விமானங்கள் கடும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளன.

இத்தாக்குதல்களில் பல கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர் என்று ரஷ்ய உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம்

சிரிய இராணுவ கட்டளை தலைமையகத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவளை சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத், ரஷ்ய ஜனாதிபதி விளடிமிர் புட்டின், ஈரான் ஜனாதிபதி மசூட்பெசஸ்கியான், ஈராக் பிரதமர் முஹம்மத் அல் சூடானி உள்ளிட்ட பல தலைவர்களுடன் உரையாடியுள்ளார். ரஷ்யா, ஈரான், சீனா, ஈராக் உள்ளிட்ட நாடுகள் சிரிய ஆட்சியாளர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன.

ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாசி அராக்‌ஷி சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ்ஸூக்கு நேற்று முன்தினம் நேரில் விஜயம் செய்து சிரிய ஜனாதிபதியுடன் நிலமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

பயங்கரவாத நிலைகள் மீதும் அவற்றுக்கான விநியோகப்பாதைகள் மீதும் கடும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அலெப்போ பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஞாயிறன்று நடாத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

https://www.thinakaran.lk/2024/12/03/world/99849/கிளர்ச்சியாளர்கள்-இலக்க/#google_vignette

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இந்த முறையும் வழமை போல் ஜேர்மனிதான் மூன்றாம் உலக போரை சம்பிரதாயமாக ஆரம்பிக்கும் போல் தெரிகின்றது. அப்படி ஆரம்பித்தால் இனிமேல்  ஜேர்மனி உலக வரைபடத்தில் இருக்காது. அல்லது புல் பூண்டுகள் முளைக்காத பாலைவனமாக மாறும்.

நன்றி புட்டின்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, விசுகு said:

நன்றி புட்டின்??

பிரான்ஸ்லும் ஆட்சி தடுமாற்றங்களாமே? நேற்று இங்கே செய்தியாக சொன்னார்கள்.😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிரியாவின் இரண்டாவது நகரமும் கிளர்ச்சியாளர்கள் வசம்

05 DEC, 2024 | 07:59 PM
image

சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் ஹமா நகரை கைப்பற்றியுள்ளனர்.

சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் அந்த நகரை முற்றுகையிட்டிருந்த நிலையில் சிரிய படையினர் அந்த நகரிலிருந்து வெளியேறியுள்ளனர்.

கடந்த சில மணித்தியாலங்களில் எங்கள் படையினருக்கும் பயங்கரவாதிகளிற்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ளன, எங்கள் தரப்பில் பலர்  மரணித்துள்ளனர். அந்த குழுக்கள் ஹமா நகரின் பல பகுதிகளிற்குள் நுழைந்துள்ளன என சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

சிரிய அரசாங்கம் அலப்போவை அவர்களிடமிருந்து மீள கைப்பற்றுவதற்கான நடவடிக்கையை ஆரம்பித்துள்ள போதிலும்  சிரிய கிளர்ச்சியாளர்கள் ஹமா நகரை கைப்பற்றும் நிலையில் உள்ளனர்.

சிரியாவிற்கும் ஜனாதிபதி பசார் அல் அசாத்திற்கும் மூலோபாய ரீதியில் ஹமா நகரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிரியாவை ஆட்சி செய்பவர்களிற்கும் தங்கள் அதிகாரத்தை தக்கவைப்பதற்கு இந்த நகரம் மிகவும் முக்கியமானது.

https://www.virakesari.lk/article/200535

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிரியாவின் அலப்போ நகரம் மீண்டும் கிளர்ச்சியாளர்கள் வசம் - 2016 இல் தோற்கடிக்கப்பட்டவர்கள் மீண்டும் புதிய வலுவுடன் போர்க்களத்தில்

02 DEC, 2024 | 10:48 AM
image

bbc

பலவருடங்களிற்கு பின்னர் கிளர்ச்சியாளர்கள் சிரிய அரசாங்கத்திற்கு எதிரான இராணுவநடவடிக்கையை புதன் கிழமை ஆரம்பித்தனர்.

சனிக்கிழமையளவில் அவர்கள் அலப்போவின் பெருமளவு பகுதியை கைப்பற்றியுள்ளனர்.

கிளர்ச்சியாளர்களின் இந்த எதிர்பாராத நடவடிக்கையை தொடர்ந்து ரஸ்யா அவர்களின் நிலைகள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளது – 2016ம் ஆண்டின் பின்னர் ரஸ்யா கிளர்ச்சியாளர்கள் மீது மேற்கொண்ட முதலாவது தாக்குதல் இது.

2016ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக சிரியபடையினர் இந்த நகரத்திலிருந்து பின்வாங்கியுள்ளனர்.

ஹயட் டஹ்ரிர் அல் சாம் என்ற இஸ்லாமிய  அலப்போ மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளது. சிரிய மோதலில் இந்த அமைப்பிற்கு நீண்டகால வரலாறுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹயட் டஹிரிர் அல் சாம் அமைப்பின் வரலாறு என்ன?

aleppo1.png

2011 இல் இந்த அமைப்பு ஜபாட் அல் நுஸ்ரா என்ற பெயரில் அல்ஹைதாவின் இணை அமைப்பாக செயற்பட்டது.

ஐஎஸ் அமைப்பின் கொல்லப்பட்ட தலைவர் அபு பக்கர் அல் பக்தாதியும் இந்த அமைப்பின் உருவாக்கத்துடன் தொடர்புபட்டிருந்தார்.

 

சிரிய ஜனாதிபதிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட குழுக்களில் இந்த குழுவே மிகவும் வலிமை வாய்ந்தத- ஆபத்தான குழுவாக  கருதப்பட்டது.

இந்த அமைப்பின் உந்துசக்தியாக அதன் ஜிகாத் கொள்கைகாணப்பட்டது.புரட்சிகர கொள்கைகளை விட ஜிகாத் உணர்வே மேலோங்கி காணப்பட்டது.

சுதந்திர சிரியா என்ற பதாகையின் செயற்பட்ட பிரதான அமைப்பின் கொள்கைகளுக்கு முரணாண கொள்கைகளை  இந்த குழு கொண்டிருந்தது.

எனினும் 2016 இல் இந்த அமைப்பின் தலைவர் அபு முகமட் அல் ஜவ்லானி அல்ஹைடாவுடன் பகிரங்கமாக முரண்பட்டார்,ஜபாட் அல் நுஸ்ராவை கலைத்துவிட்டு புதிய அமைப்பை ஏற்படுத்தினார்.இதுவேஹயட் டஹ்ரிர் அல் சாம் அமைப்பின் உருவாக்கம்.

சிரியாவை யார் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர்.?

சிரியாவின் உள்நாட்டு யுத்தம் உத்தியோகபூர்வமாக முடிவிற்கு வந்துவிட்டது என்ற உணர்வே கடந்த நான்கு வருடங்களாக காணப்பட்டது.

நாட்டின் பிரதான நகரங்களில் ஜனாதிபதி பசார் அல் அசாட்டிற்கு எதிர்ப்போ போட்டியோ இருக்கவில்லை. எனினும் சிரியாவின் சில பகுதிகள் இன்னமும் அவரின் கட்டுப்பாட்டின் இல்லாததும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சிரியாவின் கிழக்கில் உள்ள குர்திஸ் இனத்தவர்கள் அதிகமாக வாழும் பகுதி 2011 முதல் சிரியாவிலிருந்து பிரிந்த ஒரு பகுதி போல காணப்படுகின்றது.

2011 இல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பமான சிரியாவின் தென்பகுதியில் தொடர்ந்தும் சிறியளவு அமைதியின்மை காணப்படுகின்றது.

சிரிய பாலைவனத்தில் ஐஎஸ் அமைப்பின் எஞ்சியுள்ள சில பிரிவினர் இன்னமும் செயற்படுகின்றனர் சிரியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர்.

சிரியாவின் வடமேற்கு இட்லிப்பில் ஜிகாத் இயக்கங்களும் கிளர்ச்சியாளர்களும் செயற்படுகின்றனர்.

பல வருடங்களாக சிரியாவில் கடும் மோதல்கள் இடம்பெறும் பகுதியாக இட்லிப் காணப்பட்டது.சிரிய படையினர் அந்த பகுதியை கைப்பற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

எனினும் சிரிய அரசாங்கத்தினதும்,துருக்கியினதும் நெருங்கிய சகாவான ரஸ்யாவின் முயற்சியால் சாத்தியமான யுத்த நிறுத்தம் கடந்த நான்கு வருடங்களாக நீடித்தது.

அலப்போவில் நான்கு மில்லியன் மக்கள் வசிக்கின்றனர், இவர்கள் ஜனாதிபதி அசாத் கடும் ஒடுக்குமுறையை பயன்படுத்தி கைப்பற்றிய நகரங்களில் வசித்தவர்கள்.

அலப்போ மிக மோசமான இரத்தக்களறியை சந்தித்த ஒரு நகரம்.கிளர்ச்சிக்காரர்கள் மிகமோசமான தோல்வியை சந்தித்த நகரமாகவும் இது காணப்பட்டது.

ரஸ்யாவின் வான்வலு ஈரானின் ஆதரவு ,ஈரான் சார்பு குழுக்களின் ஆதரவு ஆகியவற்றின் மூலமே சிரிய ஜனாதிபதி 2016 இல் இந்த நகரத்தை கைப்பற்றியிருந்தார்.

 ஹெஸ்புல்லா அமைப்பினரும் அவருக்கு உதவியிருந்தனர்.

சமீபத்தில் லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலிடம் எதிர்கொண்ட தோல்விகள் சிரியாவில் உள்ள ஈரான் இராணுவ தளபதிகள் மீதான இஸ்ரேலின் தாக்குதல், கிளர்ச்சிக்காரர்கள் அலப்போவை கைப்பற்றுவதற்கு உதவியாக அமைந்துள்ளன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

https://www.virakesari.lk/article/200201

  • கருத்துக்கள உறவுகள்

அசாத்துக்கும் அவரது குடும்பத்துக்கும் புடின் அடைக்கலம் தருவார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.