Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
29 NOV, 2024 | 01:54 PM
image

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அனுபவசாலி, புத்திசாலி; தீர்வுகளை கண்டறியக்கூடியவர் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் யுத்தம் தொடர்பில் மேற்குலகிற்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான பதட்டநிலை அதிகரித்துள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கஜகஸ்தானில் செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள புட்டின் புதிதாக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு மேலதிக நெருக்கடிகளை உருவாக்கியமைக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனை  சாடியுள்ளார்.

ஒரேசினிக் என்ற கண்டம் விட்டு கண்டம் பாயு அணு ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைனை தாக்கப்போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஏடிசிஎம்எஸ்  ஏவுகணைகளை பயன்படுத்தி ரஸ்யாவிற்குள் தாக்குதலை மேற்கொள்வதற்கு பைடன் அனுமதியளித்துள்ளமை வோசிங்டன் மொஸ்கோவிற்கு இடையிலான உறவுகளை பாதிக்குமா என்ற கேள்விக்கு டிரம்ப் பதவியேற்ற பின்னர் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என புட்டின் தெரிவித்துள்ளார்.

எனக்கு தெரிந்தவரை புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி புத்திசாலி ஏற்கனவே அனுபவம் உள்ளவர் அவர் தீர்வுகளை கண்டறிவார் என புட்டின் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/199995

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஏராளன் said:

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அனுபவசாலி, புத்திசாலி; தீர்வுகளை கண்டறியக்கூடியவர் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

இதைத்தான் நானும் சொல்லுறன். 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, குமாரசாமி said:

இதைத்தான் நானும் சொல்லுறன். 

எந்த ஒரு நாடும் தனது நலனிலே அக்கறை காட்டும், அவர்களுக்கு நன்மை இல்லாவிட்டால் எதுவும் செய்யமாட்ட்டார்கள், பொதுவாக அமெரிக்கர்களுக்கு எந்தவிதமான அரசியல் நேர்மை இருப்பது கிடையாது என்பதனை வைத்தே இதனை கூறுகிறார் என கருதுகிறேன், உக்கிரேன் அதிபர் செலன்ஸ்கி தனது வெற்றி திட்டத்தில் தனது வழங்களை பகிர்ந்து கொள்வதற்கு தயாராக இருப்பதாக கூறியதன் காரணம் கூட அமெரிக்கர்கலின் சுயரூபத்தினை அறிந்தமையாலேயே, அமெரிகாவினை நம்பி போரினை தொடருகின்ற உக்கிர்ரேனிற்கான செலவுகளை அமெரிக்கா தொடராமல் விடுவதற்கு (தேவையில்லாமல் எதற்காக செலவு செய்ய வேண்டும் என நினைப்பவர்கள்) இரஸ்சியா ஒரு அமெரிக்க நலனினை பேணும் ஒரு திட்டத்தினை கொண்டு வந்தால் உக்கிரேனை அமேரிக்கா கைவிட்டு விடும்.

அமெரிக்கா இந்த போரினை தன்னிச்சையாக நிறுத்த முடியாது அதே நேரம் இரஸ்சியாவினை தோற்கடிக்கவும் முடியாது அதனால் சாட்சிக்காரனின் காலில் விழுவதனை விட செத்த கிளி இரஸ்சியாவின் காலில் விழ அமெரிக்கா முடிவெடுக்கக்கூடும்😁.

ஆனால் இதுவரை இருந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் எனும் மாயையினை சல்லி சல்லியாக உடைத்த இரஸ்சியாவுடன் சமரசம் செய்ய முடியாமல் அவர்களது ஈகோ இடிக்கிறது அதற்கு ஒரு ஒத்தடம் கொடுத்தால் நிலமை சரியாகிவிடும் என்பதனையே புட்டின் பூடகமாக கூறுகிறார்😁.

இதெல்லாம் அரசியலில் சகயம், ஆனால் இப்படி ஒரு நிலமை வரும் என தெரியாமல் உக்கிரேன் இருந்ததா என்பதனை நம்ப முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலக ஒழுங்கு மாறுகிறது, ரஷ்யா + இந்தியா + சீனா +இரான் + வட கொரியா + இஸ்லாமிய நாடுகள் ஒருபக்கம் கூடுகின்றன, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் உள்ள பிரச்னை ஓரளவுக்கு சமரசத்துக்கு வந்துள்ளதாக தெரிகிறது. 

ஆனாலும் இப்பொழுதும் அமெரிக்கா தலைமையில் ஆங்கிலோ அமெரிக்க வல்லரசு தான் மேலோங்கி உள்ளது, ஆயினும் அவர்களின் பலம் கொஞ்சம் குறைக்கப் பட்டுள்ளது. 

ஆகவே இந்த ukraine vs Russia சண்டையில் Ukraine ஓரளவுக்கு விட்டுக்கொடுத்தாக வேண்டும்.

இப்போது உள்ள நிலையில் சப்ராரோஸியா + luhansk + donestsk + கிரீமியா + kerson ஆகிய பிராந்தியங்கள் ரஷ்யா கைக்குள் முழுவதும் போவதை தடுக்க முடியாது. 

அதற்கு பதிலீடாக Ukraine க்கு மீண்டும் nuclear state அந்தஸ்தை கொடுக்க அமெரிக்கா ஆராய்வதாக தகவல்.அத்துடன் poland, ருமேனியா, பிரான்ஸ், uk, ஜெர்மனி ஆகிய நாடுகள் ukrainin ஏனைய பிறதேசங்களின் பாதுகாப்பு பொறுப்பை பிரித்து எடுப்பதாகவும் ஒரு தகவல்.

ரஷ்யா கிட்டத்தட்ட 5 லட்ஷம் வீரர்களை இழந்து இருக்கிறது, ukraine க்கும் அதே நிலை தான். இந்தப் போரை ரஷ்யா இன்னும் கொஞ்சக் காலம் நீடிக்க முடியும். Ukraine ஆல் அது இனிமேல் முடியாது. இந்த அளவில் அவர்கள் ரஷ்யாவுக்கு இழப்பை ஏற்படுத்தியதே பெரும் வெற்றி தான். 

செக்கோஸ்லாவிக்கியாவை கொடுங்கள் இதோடு விட்டு விடுகிறேன் என்று சொன்ன ஹிட்லர் போல் தான் புட்டினும். ரஷ்யா ஒரு பேரரசு, அவர்கள் மொல்டோவா, ஜோர்ஜியா, போன்ற நாடுகளை தம்மோடு இணைக்கும் வரைக்கும் ஓய மாட்டார்கள். இந்த யுத்தம் முடிந்து ஒரு 15 ஆண்டுகளில் மீண்டும் ஒரு போரை ஆரம்பிப்பார்கள். அது தான் அமெரிக்காவின் பயம். (அதனால்த் தான் இப்போது ரஷ்யாவின் கூட்டணி நாடான இந்தியாவுக்கு எதிரான நகர்வுகள் இங்கே நடக்கிறது, அதானி மீதான குற்றச்சாட்டு, கனடா இந்திய பிரச்னை. ) 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, vasee said:

எந்த ஒரு நாடும் தனது நலனிலே அக்கறை காட்டும், அவர்களுக்கு நன்மை இல்லாவிட்டால் எதுவும் செய்யமாட்ட்டார்கள், பொதுவாக அமெரிக்கர்களுக்கு எந்தவிதமான அரசியல் நேர்மை இருப்பது கிடையாது என்பதனை வைத்தே இதனை கூறுகிறார் என கருதுகிறேன், உக்கிரேன் அதிபர் செலன்ஸ்கி தனது வெற்றி திட்டத்தில் தனது வழங்களை பகிர்ந்து கொள்வதற்கு தயாராக இருப்பதாக கூறியதன் காரணம் கூட அமெரிக்கர்கலின் சுயரூபத்தினை அறிந்தமையாலேயே, அமெரிகாவினை நம்பி போரினை தொடருகின்ற உக்கிர்ரேனிற்கான செலவுகளை அமெரிக்கா தொடராமல் விடுவதற்கு (தேவையில்லாமல் எதற்காக செலவு செய்ய வேண்டும் என நினைப்பவர்கள்) இரஸ்சியா ஒரு அமெரிக்க நலனினை பேணும் ஒரு திட்டத்தினை கொண்டு வந்தால் உக்கிரேனை அமேரிக்கா கைவிட்டு விடும்.

அமெரிக்கா இந்த போரினை தன்னிச்சையாக நிறுத்த முடியாது அதே நேரம் இரஸ்சியாவினை தோற்கடிக்கவும் முடியாது அதனால் சாட்சிக்காரனின் காலில் விழுவதனை விட செத்த கிளி இரஸ்சியாவின் காலில் விழ அமெரிக்கா முடிவெடுக்கக்கூடும்😁.

ஆனால் இதுவரை இருந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் எனும் மாயையினை சல்லி சல்லியாக உடைத்த இரஸ்சியாவுடன் சமரசம் செய்ய முடியாமல் அவர்களது ஈகோ இடிக்கிறது அதற்கு ஒரு ஒத்தடம் கொடுத்தால் நிலமை சரியாகிவிடும் என்பதனையே புட்டின் பூடகமாக கூறுகிறார்😁.

இதெல்லாம் அரசியலில் சகயம், ஆனால் இப்படி ஒரு நிலமை வரும் என தெரியாமல் உக்கிரேன் இருந்ததா என்பதனை நம்ப முடியவில்லை.

எல்லாம் சரிதான்...அதென்ன செத்த கிளி?  :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, குமாரசாமி said:

எல்லாம் சரிதான்...அதென்ன செத்த கிளி?  :cool:

தப்பா நினைக்காதீர்கள், திரியினை சுவாரசியமாக்க குறிப்பிட்டேன் (இந்த பதிவு இட்டதிற்கு காரனம் கள உறுப்பினர்களை ஆர்வமாக பங்கு பற்றுவார்கள் என்பதற்காக).

Posted

ZELENSKY மீது நம்பிக்கை இழந்த மக்கள்- போர்க்களத்தை விட்டு ஓடும் உக்ரைன் வீரர்கள்! 

 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இனப்பிரச்சினை என்பதே இல்லை, பொருளாதார பிரச்சினைதான் இருக்கு என சொல்வதனை கேட்டு  எல்லோரும் நம்புகிறார்கள், ஆனால் ஒரு சிலர் (நீங்கள் உட்பட) மட்டும் நம்ப மறுக்கிறீர்கள், ஆகையால் நீங்கள்தான் மாறவேண்டும்😁.
    • அது வேற ஒன்றுமில்லை இந்த இரண்டு தரப்பும் குளிர்காய நாங்கள் சாக வேண்டியிருந்தது, அதனால இந்த இரண்டு தரப்பினையும் கோர்த்டுவிடுவம் என்று ஒரு முயற்சிதான்.😁
    • இந்திய மீனவர்கள் செய்வது திருட்டு , திருட்டுக்கு எப்படி நட்டஈடு கோருவது?  திருட்டுக்கு தண்டனை அடி உதை , சிறை,பறிமுதல்தான். மஹிந்த ஆட்சிக்காலத்தில் சுப்பிரமணி சுவாமி கொடுத்த ஐடியாவில் படகுகளை பறிமுதல் செய்து இலங்கை மீனவர்களுக்கு ஏலம் விடுவது,கடற்படை பாவனைக்கு வழங்குவது, கரைகளில் நிறுத்தி வைத்து ஒன்றுக்கும் உதவாமல் பண்ணுவது என்று அது ஒரு சிறந்த திட்டம்தான். இந்திய இழுவைப்படகுகள் வலைகள்  இலங்கை பெறுமதியில் கோடிகளில் பெறுமதியானவை, ஓரிரு லட்சம் பெறுமதியான மீனை திருட வந்து குத்தகைக்கு எடுத்துவரும் கோடி பெறுமதியான படகை இழப்பது மீனவர்களுக்கும், ஆபத்து படகின் உரிமையாளர்களுக்கும் ஆபத்து & பெரு நஷ்டம். பின்னாளில் இந்திய அரசின் அழுத்தத்தால் அது கைவிடப்பட்டது. அது ஒருகாலமும் சாத்தியம் இல்லை, யுத்தம் நடக்கும் ஒருநாட்டுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபடும்போது அந்நாட்டு படைகளால் கொல்லப்பட்டால் அதற்கு இருநாட்டு அரசுகளும் எந்த பொறுப்பும் ஏற்காது. எந்த நட்ட ஈடும் தராது. யுத்த பூமிக்குள் அத்துமீறி நுழைந்து உயிரைவிட்டுவிட்டு, செத்துபோனோம் காசு தாருங்கள் என்றால் எந்த தெய்வம்கூட அவர்களுக்கு உதவாது. இலங்கை மீனவர்களை  சிங்களவன் கொத்தி குதறி மீன்பிடியை முற்றாக தடை செய்த காலத்தில் அந்த இடைவெளியை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் இலங்கை பரப்பில் வந்து மீனள்ளி போவது ஒருவகையில் தண்டிக்கப்படவேண்டிய இரக்கமற்ற நியாயம்தான். சில தமிழக செய்தி தளங்களில், இலங்கை அகதிகளுக்கு எப்படியெல்லாம் நாங்கள் உதவி செய்தோம், அவர்கள் நன்றிகெட்ட தனமாக இப்போது இலங்கை கடற்படைக்கு ஆதரவாக நின்று எம்மை கொல்கிறார்கள், கைது செய்கிறார்கள் என்று பின்னூட்டம் இடுகிறார்கள். அதாவது பசிக்கு சோறுபோட்டால், அவனை பட்டினிபோட்டு கொல்லவும் நமக்கு உரிமை இருக்கு என்கிறார்கள். பட்டினி போட்டு கொல்வதை நீங்கள் நியாயப்படுத்தினால் அப்புறம் ஏன் அவன் பசிக்கு சோறு போட்டதை பெருமையாக சொல்கிறீர்கள் என்பதை அவர்களிடம் கேட்டுத்தான் தெளிவு பெறவேண்டும்.
    • தமிழர்களுக்குள் இருக்கும் மொழி சார்பான புரிதல் சிங்களவர்களுக்குள் இல்லை.  எந்த விடயமாகினும் தமிழர்கள் முக்கித்தக்கி சிங்களத்தில் கதைக்க முயற்சிப்பார்கள். அவர்கள் அப்படியல்ல.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.