Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

2138 கடற்படை மாலுமிகளுக்கு பதவி உயர்வு!

2138 கடற்படை மாலுமிகளுக்கு பதவி உயர்வு!

இலங்கைக் கடற்படை தனது 74 ஆவது ஆண்டு நிறைவை இன்று (09) கொண்டாடுகிறது.

இதனை முன்னிட்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பரிந்துரையின் பேரில், கடற்படையின் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், 2138 சிரேஷ்ட மற்றும் சாதாரண மாலுமிகள் இன்று முதல் அமுலாகும் வகையில் உயர் பதவிகளுக்காக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.

முதன்முறையாக, இலங்கையில் கடற்படையின் ஆரம்பம் 1937 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்கத் தொண்டர் கடற்படை கட்டளைச் சட்டத்தின் கீழ் ராயல் இலங்கை தன்னார்வ கடற்படை 1939 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

மேலும் அது 1943 அக்டோபர் 1 ஆம் திகதி ‘ராயல் இலங்கை தன்னார்வ கடற்படை சேவை’ ஆனது.

1950 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க கடற்படைச் சட்டத்தின் மூலம், 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் திகதி ‘ராயல் சிலோன் நேவி’ ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம், அன்றைய அரச இலங்கை தன்னார்வ கடற்படை சேவையில் செயற்பட்ட அதிகாரிகள் மற்றும் மாலுமிகளிடமிருந்து, நிரந்தரமான ஒரு தொடக்கமாக அமைந்தது.

அன்றிலிருந்து, நாட்டின் கடல் பரப்பின் பாதுகாவலர் என்ற சிறப்புப் பொறுப்பை நிறைவேற்றி, நாளுக்கு நாள் வளர்ந்து வந்த ராயல் சிலோன் கடற்படை, 1972 இல் இலங்கை குடியரசாக மாறியதும் ‘இலங்கை கடற்படை’ ஆனது.

1980 ஆண்டு முற்பகுதியில், நாட்டின் வடக்குப் பகுதியை மையமாகக் கொண்ட பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக, கடற்படையின் பாரம்பரியப் பாத்திரத்திலிருந்து போர்ப் பாத்திரமாக மாற்றப்பட்ட கடற்படை, அதன் பின்னர் தேசிய மனிதவளத்திலும் இராணுவத் திறனிலும் படிப்படியாக வளர்ந்தது.

2009 ஆம் ஆண்டு மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் நாட்டில் பயங்கரவாதத்தை வெற்றிகொள்வதில் சுமார் மூன்று தசாப்தங்களாக தனித்துவமான பங்களிப்பை வழங்கியது.

இலங்கை கடற்படை தற்போது போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காகவும், அத்துடன் அல்லாதவற்றைக் கட்டுப்படுத்தவும் தனது வளங்களைப் பயன்படுத்துகிறது.

கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பைப் பாதிக்கும் பாரம்பரிய கடல்சார் சவால்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுத்து கடற்படையினரின் அதிகபட்ச பலத்தைப் பயன்படுத்தி நாட்டின் கடல்சார் லட்சியத்தை அடைவதில் உறுதியாக உள்ளது.

https://athavannews.com/2024/1411486

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னத்தை சொன்னாலும் இந்திய வள்ளங்களின் அத்துமீறல்களை தடுக்கமுடியவில்லையே!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 நாட்டுக்குள் கடல்வழியாக வரும் போதைப்பொருட்களை, இந்திய கடற்தொழிலாளரின் அத்துமீறல்களை  கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு  பதவியுயர்வு. இதைவிட நம்மவர் சாதித்தவை மேலானவை. அவற்றை கட்டுப்படுத்தாமைக்கு உயர்வு வழங்குகினமோ?

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, satan said:

 நாட்டுக்குள் கடல்வழியாக வரும் போதைப்பொருட்களை, இந்திய கடற்தொழிலாளரின் அத்துமீறல்களை  கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு  பதவியுயர்வு. இதைவிட நம்மவர் சாதித்தவை மேலானவை. அவற்றை கட்டுப்படுத்தாமைக்கு உயர்வு வழங்குகினமோ?

முப்படை தளபதி ஒரு பெக்கோ என்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, satan said:

 நாட்டுக்குள் கடல்வழியாக வரும் போதைப்பொருட்களை, இந்திய கடற்தொழிலாளரின் அத்துமீறல்களை  கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு  பதவியுயர்வு. இதைவிட நம்மவர் சாதித்தவை மேலானவை. அவற்றை கட்டுப்படுத்தாமைக்கு உயர்வு வழங்குகினமோ?

முதலில் வடக்கு பக்கம் இருக்கும் கடற்படையை தெற்குக்கு மாற்றி விடனும் என்கிறார்கள் அங்கிருப்பவர்கள் கேரள கஞ்சா கொண்டு வரும் ரோலருக்கு பாதுகாப்பு கொடுப்பதே இந்த சிங்கள நேவிதானமே ?

முதலில் தமிழர் பகுதியை கரையான் அரிப்பது போல் அரிக்க சிங்கள அரசியல்வாதிகள் கொடுப்புக்குள் சிரித்து கொண்டு கண்டும் காணாமல் இருந்தார்கள் கடைசியில் சிங்கள பகுதி பள்ளிக்கூட வாசல் மட்டும் விற்பனை நடக்க தொடங்க புதிதாய் வந்த வேட தாரிகள் குய்யோ முய்யோ என்று அலறிக்கொண்டு இருக்கினம் .

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதில ஜெ.வி.பி ஆதரவு கடற்படையினர் அதிமாக இருப்பினம்....அனுராவின் பாதுகாப்புக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, putthan said:

இதில ஜெ.வி.பி ஆதரவு கடற்படையினர் அதிமாக இருப்பினம்....அனுராவின் பாதுகாப்புக்கு 

நா நா…அனுர தெய்யோ ஏம கத்த வெட கரண் நா அப்பா🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, goshan_che said:

நா நா…அனுர தெய்யோ ஏம கத்த வெட கரண் நா அப்பா🤣

இஸ்சரா ஏ வாகே கரண்ன ...தங் ...தன்னத்தே .....
அமெரிக்கன் கடற்படை நாட்டிலும் பிராந்தியத்திலும் செல்வாக்கு செலுத்த வெளிகிடுகிறது ...ஆகவே அணுரா தெய்யோ தன்னுடைய தோழர்களை உற்சாகப்படுத்தி வைக்க வேணுமல்லோ...(இதை நான் சிங்களத்தில எழுதினால் பிற்கு கெட்ட பாசையில் எழுதின் மாதிரி இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, goshan_che said:

முப்படை தளபதி ஒரு பெக்கோ என்கிறீர்களா?

அது உங்களின் கருத்து, அதற்கு நான் பொறுப்பல்ல.  தங்களது  கடமையை அவர்கள் சரியாக செய்யவில்லை என்பதற்கு, எமது மக்கள் அனுபவிக்கும்  பிரச்சனைகளே  சான்று என்பதே எனது கருத்து. 

5 hours ago, goshan_che said:

நா நா…அனுர தெய்யோ ஏம கத்த வெட கரண் நா அப்பா🤣

 

5 hours ago, putthan said:

இஸ்சரா ஏ வாகே கரண்ன ...தங் ...தன்னத்தே ...

இங்கே, சிங்களம் தெரியாதவர்களிடம்  சிங்களம் பேசுவதால் பயனில்லை. இதைத்தான் சிங்களமக்களிடம் பேசும்படி வெகுநாளாக வேண்டுகிறேன். ஆனால் அதை செய்யாமல் நையாண்டி செய்கிறார்கள். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, satan said:

இங்கே, சிங்களம் தெரியாதவர்களிடம்  சிங்களம் பேசுவதால் பயனில்லை. இதைத்தான் சிங்களமக்களிடம் பேசும்படி வெகுநாளாக வேண்டுகிறேன். ஆனால் அதை செய்யாமல் நையாண்டி செய்கிறார்கள். 

அதெல்லாம் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் பேசி வேலைக்கு ஆகாது எண்டு எப்பவோ முடிவும் எடுத்தாச்சு ப்ரோ….

நீங்க இப்ப வந்து இந்திராகாந்தி செத்துட்டாவா எண்டு கேட்டா நாங்க என்ன செய்வது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, goshan_che said:

அதெல்லாம் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் பேசி வேலைக்கு ஆகாது எண்டு எப்பவோ முடிவும் எடுத்தாச்சு ப்ரோ…

ஓ.... அதுதான் இங்குவந்து கலக்குகிறீர்களோ? கேள்வி கேட்க மாட்டார்கள்  என்று. அவர்களுக்கு விளங்கும் விதத்தில் பேசமுடியவில்லையோ உங்களால்? ரவிராஜ் பேசினாரே!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 hours ago, putthan said:

இதில ஜெ.வி.பி ஆதரவு கடற்படையினர் அதிமாக இருப்பினம்....அனுராவின் பாதுகாப்புக்கு 

அவசரம் என்றால் இந்தியா , மாலைதீவுக்கு..ஓடுறதிற்கு...🤣

Edited by alvayan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/12/2024 at 13:36, satan said:

 

 

இங்கே, சிங்களம் தெரியாதவர்களிடம்  சிங்களம் பேசுவதால் பயனில்லை. இதைத்தான் சிங்களமக்களிடம் பேசும்படி வெகுநாளாக வேண்டுகிறேன். ஆனால் அதை செய்யாமல் நையாண்டி செய்கிறார்கள். 

எமக்கு பிரச்சனையை உருவாக்கும் பொழுது... அவர்கள் மொழியில் புரிந்து தான் உருவாக்கினார்கள் ...சிங்கள வாக்காள பெருமக்கள் வரவேற்றனர் ...
அவர்களின் மதக் கொள்கை உலகத்தில மிகவும் சிறந்தது அந்த மதக் கொள்கையை சிறப்பாக அமுல் படுத்தினாலே நாடு சுபீட்சம் அடைந்திருக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/12/2024 at 20:20, alvayan said:

அவசரம் என்றால் இந்தியா , மாலைதீவுக்கு..ஓடுறதிற்கு...🤣

இவரின்ட தோழரின் 71 ஆம் ஆண்டு அட்டகாசத்தின் பொழுது ,அப்போதைய் நாட்டின் பிரதமர் கடற்படையின் உதவியுடன் தான் யாழ்நகர் சென்றதாக ஒர் தகவல் உண்டு....

ஏன் இவரின்  அரகலய அட்டகாசத்தின் பொழுது கோத்தாவும் ,மகிந்தாவும் திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்தவர்கள் ..

சிறிலங்கா இராணுவத்தைவிட சிறிலங்கா கடற்படையை அதிகம் சிறிலங்கா அரச தலீவர்கள் லவ் பண்ணுகின்ற்னர்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/12/2024 at 09:14, satan said:

ஓ.... அதுதான் இங்குவந்து கலக்குகிறீர்களோ? கேள்வி கேட்க மாட்டார்கள்  என்று. அவர்களுக்கு விளங்கும் விதத்தில் பேசமுடியவில்லையோ உங்களால்? ரவிராஜ் பேசினாரே!

அதான் போட்டு தள்ளீடாங்களே🥲.

செவிப்புலனறோர் காதில் நான் சங்கூதுவதில்லை.

நீங்கள் விதிவிலக்கு🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

அதான் போட்டு தள்ளீடாங்களே🥲.

செவிப்புலனறோர் காதில் நான் சங்கூதுவதில்லை.

நீங்கள் விதிவிலக்கு🤣

நீங்கள் உப்பிடி சொல்வீர்கள் என்று நினைத்தேன், சொல்லியே விட்டீர்கள். அதனாற்தான் பயந்தோ என்னவோ களத்தில் சிங்களம் கதைத்து திறமையை வெளிப்படுத்துகிறீர்கள். மக்களுக்கு தெரியாத மொழியில் பேசினால் நீங்கள் திறமைசாலிகள் என்று நினைப்பர், யாரென்பது உங்களுக்குத்தான் தெரிய வேண்டும். இதைத்தான் ரணிலாரும் லண்டன் போய் நம்மவருக்கு சொல்லி, தானே சிரித்து அசடு வழிந்தார். அதுதான் நான் சொல்லுறது என்னெண்டால்  முகநூல் முகநூல். நான் சொல்லுறது விளங்குதோ என்னோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, satan said:

நீங்கள் உப்பிடி சொல்வீர்கள் என்று நினைத்தேன், சொல்லியே விட்டீர்கள். அதனாற்தான் பயந்தோ என்னவோ களத்தில் சிங்களம் கதைத்து திறமையை வெளிப்படுத்துகிறீர்கள். மக்களுக்கு தெரியாத மொழியில் பேசினால் நீங்கள் திறமைசாலிகள் என்று நினைப்பர், யாரென்பது உங்களுக்குத்தான் தெரிய வேண்டும். இதைத்தான் ரணிலாரும் லண்டன் போய் நம்மவருக்கு சொல்லி, தானே சிரித்து அசடு வழிந்தார். அதுதான் நான் சொல்லுறது என்னெண்டால்  முகநூல் முகநூல். நான் சொல்லுறது விளங்குதோ என்னோ?

ஏன் சிங்களம் உங்கள் தெய்வம் அனுரவின் தாய் மொழி ஆச்சே….

இனவாதத்தை தடுக்க பயங்கரவாத தடைசட்டம் அவசியம் என்று எந்த ஒரு இனவாதியும் கூட சொல்லாத அரிய கண்டுபிடிப்பை சொல்லி முட்டு கொடுக்கும் நீங்கள் ஆங்கிலத்தில் முகபுத்தகத்தில் போய் எழுதலாமே?

சிங்கள இனவாதிகளிடம் நான் முடிந்தளவு பேசியாகி விட்டது - ஒரு மண்ணாங்கட்டியும் நடவாது என்பது பட்டறிவு.

The definition of insanity is doing the same thing over and over, expecting a different outcome. 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • உலகம் முழுவதும் வட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவைகள் முடங்கின December 12, 2024  01:03 am உலகின் பல்வேறு பகுதிகளில் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவை முடங்கியுள்ளது. இதனால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இரவு 11 மணி முதல் வட்ஸ்அப் செயலியின் மூலம் குறுந்தகவல்கள் எதுவும் பகிர இயலவில்லை என்று எக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் முறைப்பாடுகளை அளித்து வந்தனர்.  அதன் பிறகு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களும் செயல்படவில்லை. முக்கிய தளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் முடங்கும் நேரங்களில் அது குறித்த தகவலை நிகழ்நேரத்தில் தெரிவிக்கும் டவுன் டிட்டெக்டர் தளத்தில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் தளங்கள் முடங்கியது குறித்து ஏராளமான பயனர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மெட்டா நிறுவனம் இது தொடர்பில் தமது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வௌியிட்டுள்ளது. அதில், "தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக சில பயனர்களின் பயன்பாடுகளை அணுகும் திறனைப் பாதிக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவாக விடயங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர நாங்கள் உழைத்து வருகிறோம், சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்." என்று பதிவிட்டுள்ளது.   https://tamil.adaderana.lk/news.php?nid=197158
    • 11 இலட்சம் மக்கள் சட்டவிரோதமாக இருக்கின்றார்கள் என்று ஒரு கணக்கு சொல்லுகின்றனர். ஆனால் அதில் இரண்டு லட்சம் மக்களைக் கூட கைது செய்து வெளியேற்றுவதற்கு தேவையான வளங்கள் அதற்கு பொறுப்பானவர்களிடம் இல்லை என்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக விவசாயம் மற்றும் தொழிற்துறைகளில் இவர்களின் இடத்தை யார் நிரப்பப் போகின்றார்கள்.................. அமெரிக்கர்களும், இந்தியர்களும் குனிந்து புல்லுப் பிடுங்கப் போவதில்லை........ எனக்குத் தெரிந்த அளவில் என்னுடைய சுற்றுவட்டாரத்தில் புல்லு வெட்டிக் கூட்டும் ஒரே ஒரு 'இந்தியன்'.............. நான் மட்டுமே............🤣.  
    • இது என்ன வருத்தம்? ஹொஸ்பிட்டல் செகியுற்றியை வீடியோ எடுத்தது என்று வெருட்டுவதும் சண்டித்தனம் காட்டுவதும் கீழே வந்திருக்கு! இந்தப் பனிப்பைத்தியருக்கு நிறைய fan clubs இருக்கு @ரதி🤪   ‘சேர்’ பைத்தியம்பிடித்து அலையும் வைத்திய அதிகாரியும், மக்கள் பிரதிநிதியும்! யாழில் உலாவரும் அதிகார போதை!! By Independent Writer 3 hours ago  எங்களுடைய தமிழ் வைத்தியர்களை பிடித்தாட்டிக்கொண்டிருக்கின்ற ‘சேர்’ வியாதியை நினைத்தால் ஒரு பக்கம் வெட்கமாக இருக்கிறது. மறு பக்கம் கோபம் கோபமாக வருகின்றது. ‘Call me Sir’ என்று ஒரு சிரேஷ்ட வைத்தியர் கூறியதை அவருக்கே தெரியாமல் ஒலிப்பதிவுசெய்து வெளியே கசியவிட்டு அனுதாபம் தேடி எம்பியானவர்தான் வைத்தியர் அர்ச்சுனா. ஆனால் அதே அர்ச்சுனா நேற்று யாழ் வைத்தியாலைக்குள் நுழைந்து மாவட்டப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி முன்பாக கால்மேல் கால்போட்டு அமர்ந்தபடி, ‘நீங்கள் என்னை சேர் என்றுதான் அழைக்கவேண்டும்’ என்றும், ‘நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பறவாயில்லை... என்னை சேர் என்றுதான் அழைத்தாகவேண்டும்;’ என்று அடாவடி புரிகின்ற காட்சியைப் பார்க்கின்றபோது, ‘இவர்களுக்கெல்லாம் என்னதான் நடந்துவிட்டது..’ என்று நினைக்கத்தோன்றுகின்றது. அது மாத்திரமல்ல, வைத்தியசாலை ஊழியர் ஒருவரை அவரது நெஞ்சில் கையைவைத்துத் தள்ளிவிட்டதுடன், ‘வாயை மூடுடா..’ ‘ராஸ்கல்..’ அது இது என்று கண்டிபடி அந்த ஊழியரை வைத்தியர் அரச்சுனா பலர் முன்னிலையில் பகிரங்கமாகத் திட்டுவதான CCTV காட்சி தற்பொழுது வெளியாகி தமிழ் மக்கள் மத்தியில் பரபரப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்திவருகின்றது. ‘உனக்குத் தெரியுமா நான் யாரென்று..’ ‘CID யிடம் பிடித்துக்கொடுப்பேன்…’ என்று அந்த ஊழியரை அவர் மிரட்டுவதையும் அந்த வீடியோவில் காண முடிகின்றது. சக மனிதர்களையும், அரச ஊழியர்களையும் மதித்துப் பேசுவதற்கு முதலில் மக்கள் பிரதிநிதிகள் கற்றுக்கொள்ளவேண்டும். தெரு ரவுடிகள் போன்றும், சினிமாக்களில் வருகின்ற தாதாக்கள் போன்றும் நடந்துகொள்ளாது, பதவிகள் உயருகின்றபோது தனது பண்புகளையும் உயர்திக்கொள்வற்கு அர்ச்சுனா என்கின்ற மக்கள் பிரதிநிதி கற்றுக்கொள்ளவேண்டும்.  ‘ என்னை சேர்’ என்று அழையுங்கள்..’ “உனக்குத் தெரியுமாடா நான் யார் என்று..’ “ராஸ்கல்..’ இவ்வாறு நீங்கள் அழைக்கின்ற நபர்கள்தான் உங்களுக்கு வாக்களித்து உங்களை நாடாளுமன்றம் அனுப்பிவைத்தவர்கள் என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் சீ.ஐ.டி.யிடம் பிடித்துக்கொடுக்கமுனையும் அந்தத் தமிழ் இளைஞனைத்தான் நீங்கள் இன்று நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றீர்கள் என்பதை தயவுசெய்து உணர்ந்துகொள்ளுங்கள். மக்கள் பிரச்சனைகளைப் பற்றிப் பேசாமல் தனது தனிப்பட்ட காழ்ப்புணர்வு அழுக்குகளைக் கக்குகின்ற காரியத்தைத்தான் நீங்கள் தொடர்ந்துசெய்வீர்களாக இருந்தால், உங்களை நாடாளுமன்றம் அனுப்பிவைத்த யாழ் மக்கள் உங்களையிட்டு வெட்கப்பட்டு நிற்பார்கள் என்பது மாத்திரமல்ல, உங்களது அரசியல் எதிர்காலத்துக்கும் கூட நிச்சயம் ஆப்பு வைத்துவிடுவார்கள். உங்களைப் போல அதிகார வெறியில் ஆடிய பல நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரு நமட்டுச் சிரிப்புடன் கடந்துசென்ற பண்பாளர்கள் நிறைந்துள்ள மண்ணில் நின்று நீங்கள் கூத்தாடிக்கொண்டிருக்கின்றீர்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடவேண்டாம்.       https://ibctamil.com/article/mp-arjunas-atrocity-in-jaffna-hospital-1733949837
    • விநாயகனை வழிபட்ட பின்பு தான் மூலவர் தரிசனம்... அதுதான் எழுதப்படாத விதி ...அதை விடுத்து என்னுள் இறைவன் இருக்கிறான் நான் தான் கடவுள் என கூறிய பல சாமிமார் காணாமல் போன சரித்திரம் உண்டு .... முதல் தன்னிறைவு அடைய (ஞானம்) பெற வேண்டும் அதன் பின்பு சித்தன் ஆகலாம் ,அது ஒர்ர் நீண்ட பயணம் அணுரா மாத்தையா அறியுமல்ல...
    • உலகில் எந்த நாடுகள் jus soli எனப்படும் அங்கே பிறந்தாலே-பிரசை கொள்கையை பின்பற்றுகிறன என்ற தகவல் கீழே👇. https://worldpopulationreview.com/country-rankings/countries-with-birthright-citizenship
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.