Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

 

வைத்திய கலாநிதியா? அல்லது ஏதாவது துறை சார் கலாநிதியா.?

வழமையா இதை வலதுசாரிகள் தான் செய்வார்கள் ...இடதுகள் இதை(பட்டங்களை) செய்வது ஆச்சரியமாக இருக்கு ..
மருத்துவர்கள் அரைவாசி பேர் பாராளுமன்றில் இருந்தால் யாரப்பா மக்களுக்கு மருத்துவ‌ சேவை செய்வது 

உண்மையில் பாராளுமன்றம் இப்படி படித்தவர்களால் நிரம்பி வழிவது ஆரோக்கியமான போக்கு அல்ல.

சகல துறை, வாழ்க்கை அனுபவம் உள்ளவர்களும் இருக்கும் போதுதான் அங்கே சராசரி மனிதன் சார்ந்த முடிவுகள் எடுக்கப்படும்.

குறிப்பாக நடைமுறை அனுபவம் உள்ளோர்.

இல்லாட்டில் ஏட்டு சுரக்காய் போல் ஆகிவிடலாம்.

வைத்திய கலாநிதி என்றே நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, putthan said:

வைத்திய கலாநிதியா? அல்லது ஏதாவது துறை சார் கலாநிதியா.?

பேரா எம்பிபிஎஸ். பின் கொழும்பில் PGDip மற்றும் MSc.

https://manthri.lk/en/politicians/jagath-wickramaratne

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

பேரா எம்பிபிஎஸ். பின் கொழும்பில் PGDip மற்றும் MSc.

https://manthri.lk/en/politicians/jagath-wickramaratne

கலாநிதிக்கு PhD செய்ய வேண்டுமே? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, RishiK said:

கலாநிதிக்கு PhD செய்ய வேண்டுமே? 

ஓம்.

தினக்குரலுக்கு கலாநிதிக்கும் மருத்துவருக்கும் உள்ள வித்தியாசம் விளங்கவில்லை என நினைக்கிறேன்.

எனது அறிவின்படி

MBBS/MD = மருத்துவர் அல்லது வைத்திய கலாநிதி

ஏனைய PhD = கலாநிதி, அது மருத்துவ துறை PhD ஆயினும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சபாநாயகர் கலாநிதி என்பதால் பாராளுமன்றத்துக்கு மதிப்பு கிடைக்காது அண்ணை. உறுப்பினர் நடக்கும் விதம்தான் அதை தீர்மானிக்கும்.

உண்மையை சொல்கின்ற நல்ல கருத்து 👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உண்மையில் பாராளுமன்றம் இப்படி படித்தவர்களால் நிரம்பி வழிவது ஆரோக்கியமான போக்கு அல்ல.

👍................

தேசிய மக்கள் சக்தியிலேயே ஏதோ சில காரணங்களால் இன்றிருக்கும் கல்வி முறையில் சோபிக்க முடியாத, ஆனால் மிகவும் தெளிவான சிந்தனையும், தூரநோக்கும் உள்ள சிலர் இருக்கக்கூடும். இவர்களின் 'பட்டம் முக்கியம்' என்ற நிலைப்பாட்டால், அவர்களால் சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய பயன்கள் இல்லாமல் போக்கப்படுகின்றன. 

35 minutes ago, goshan_che said:

MBBS/MD = மருத்துவர் அல்லது வைத்திய கலாநிதி

ஏனைய PhD = கலாநிதி, அது மருத்துவ துறை PhD ஆயினும்.

இது சரியென்றே நானும் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா உறுப்பினர்களுக்கும் ஒரு கௌரவ கலாநிதி பட்டத்தை - அவர்களின் அரசியல் சேவையை பாராட்டி - வழங்கினால் ஒரு பிரச்சனையையும் இருக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பேரா எம்பிபிஎஸ். பின் கொழும்பில் PGDip மற்றும் MSc.

https://manthri.lk/en/politicians/jagath-wickramaratne

நன்றி Goshan

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாதவூரான் said:

ரணிலுக்கு இப்ப உதுதானே வேலை

பதினாறு சமையல்காரர் போனதினால், சுவையான சாப்பாட்டை இழந்துவிட்டார், தள்ளாத வயதில் சமையல் செய்ய வேண்டுமே என்கிற கவலை, வாழ்க்கையில் உருப்படியா ஜனாதிபதியாக ஒருபோதும் காலத்தை நிறைவு செய்ய வில்லையே என்கிற கவலை, வீட்டில் சந்தோசமாக நாட்களை கழிக்க சந்ததியில்லையே என்கிற கவலை, வசதி வாய்ப்புகள் இல்லாமல் போகப்போகுதே என்கிற கவலை, தமிழ் மக்களின் நிலங்களை முற்றாக அபகரித்து விகாரை, இராணுவமுகாம் ஆக்க முடியவில்லையே என்கிற கவலை, தமிழ் சமூகத்தை துரோகிகளை உருவாக்கி சிதைக்க முடியவில்லையே என்கிற கவலை,  இப்படி எத்தனையோ கவலை அவருக்கு. தனக்கு சவாலானவர்களின் கையிலிருந்து நாட்டை பெற்று நிம்மதியாக நாட்டை ஆளலாம் என்று கனவு கண்டவருக்கு எங்கிருந்தோ எதிர்பாராத விதமாக வந்த பேரிடி! இதுக்கெல்லாம் காரணமான N.N.P யை துரத்த என்னென்ன வழி இருக்கென்று தேடிக்கொண்டிருக்கிறார். அவர்களும் விடுவதாக இல்லை. 

9 hours ago, தமிழ் சிறி said:

வக்கீல்... சேர்டிபிக்கட் எடுக்க, 
பேராசிரியர் பீரிஸை வைத்து  குதிரை ஓடிய நாமல் ராஜபக்சவும்,
பத்தாம் வகுப்பு "பாஸ்" பண்ணாத, பசில் ராஜபக்ச... நிதி அமைச்சராகவும்,
அமெரிக்காவில் பெற்றோல் ஸ்ரேசனில் வேலை செய்த, கோத்தா ராஜபக்ச ஜனாதிபதியாகவும்....
எந்த வித பிரச்சினையும் இல்லாமல்... நாட்டை   ஆண்டு விட்டு போயிருக்கின்றார்கள். 😂

அனுரவுக்குத்தான்... ஆரம்பித்த இரண்டு மாதத்திலேயே... சேர்டிபிக்கட் பிரச்சினை வந்திட்டுது.
அனுபவம் காணாது போலுள்ளது. 🤣

ஆம், கஞ்சா வியாபாரிகளும், அடிதடிகளும், கொலை கொள்ளைக்காரரும் சிறைக்கைதிகளும்  பாராளுமன்றத்தை தங்கள் தங்கள் தொழிற் கூடங்களாக மாற்றி கதிரைகளாலும் மிளகாய்ப்பொடிகளாலும் தாக்கி தெருச்சண்டை பிடித்ததை வேடிக்கை பார்த்த அனுரா, படித்தவர்களை கொண்டுவந்து கௌரவமாக பாராளுமன்றத்தை நடத்த வெளிக்கிட்டது இவர்களுக்கு பிடிக்கவில்லை போலுள்ளது. தங்களது பதவிகளையும் வசதிகளையும் ஊழல்களையும் மறைக்க, இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்த குடிமகன்களின் கைகளில் நாட்டை ஒப்படைத்ததை நிறைவேற்றவும் இதை தவிர ரணிலுக்கு ஏனையோருக்கும் வேறு வழியில்லை. குறுக்கு வழியில் பதவியை பெற்றுக்கொண்டவர் அது நிலைக்குமென்று எதிர்பார்த்திருக்க, இப்படி நிரந்தரமாக வீட்டில் தன்னை அமர்த்தி விடுவார்களென்று அவர் எதிர்பார்க்கவில்லை. இவர்களை இப்படியே விட்டுவிட்டால் இனி யாரும் அரசியல் வாழ்வை  கனவுகாண முடியாது. அவர்களின் வெற்றி இவர்களுக்கு எதிர்கால அரசியல், கடந்தகால ஊழல் பயத்தை கடுப்பை  உருவாக்குது. அனுரா அரசு, ஊழலையும் லஞ்சத்தையும் ஒழித்தாலே நாடு தானாக முன்னேறும். 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, RishiK said:

எல்லா உறுப்பினர்களுக்கும் ஒரு கௌரவ கலாநிதி பட்டத்தை - அவர்களின் அரசியல் சேவையை பாராட்டி - வழங்கினால் ஒரு பிரச்சனையையும் இருக்காது. 

இவர்களுக்கு தானே பா.உ பட்டத்தை மக்கள் கொடுத்திருக்கினம் பிறகு ஏன் கலா பட்டம் வேணும் என்று அடம் பிடிக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

 

வைத்திய கலாநிதியா? அல்லது ஏதாவது துறை சார் கலாநிதியா.?

வழமையா இதை வலதுசாரிகள் தான் செய்வார்கள் ...இடதுகள் இதை(பட்டங்களை) செய்வது ஆச்சரியமாக இருக்கு ..
மருத்துவர்கள் அரைவாசி பேர் பாராளுமன்றில் இருந்தால் யாரப்பா மக்களுக்கு மருத்துவ‌ சேவை செய்வது 

எம்.பி வேலை சம்பளம் இல்லாத வேலையல்லோ... கட்டாயம் பகுதி நேர வேலையா டாக்குத்தர் வேலை செய்வினம்....பிரச்சினையென்டால்ல் அருச்சுனா பார்த்துக்கொள்ளுவார் தானே🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

எம்.பி வேலை சம்பளம் இல்லாத வேலையல்லோ... கட்டாயம் பகுதி நேர வேலையா டாக்குத்தர் வேலை செய்வினம்....பிரச்சினையென்டால்ல் அருச்சுனா பார்த்துக்கொள்ளுவார் தானே🤣

இவர்களுக்கு தானே பா.உ பட்டத்தை மக்கள் கொடுத்திருக்கினம் பிறகு ஏன் கலா பட்டம் வேணும் என்று அடம் பிடிக்கினம்

1 hour ago, alvayan said:

எம்.பி வேலை சம்பளம் இல்லாத வேலையல்லோ... கட்டாயம் பகுதி நேர வேலையா டாக்குத்தர் வேலை செய்வினம்....பிரச்சினையென்டால்ல் அருச்சுனா பார்த்துக்கொள்ளுவார் தானே🤣

இவர்களுக்கு தானே பா.உ பட்டத்தை மக்கள் கொடுத்திருக்கினம் பிறகு ஏன் கலா பட்டம் வேணும் என்று அடம் பிடிக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

இவர்களுக்கு தானே பா.உ பட்டத்தை மக்கள் கொடுத்திருக்கினம் பிறகு ஏன் கலா பட்டம் வேணும் என்று அடம் பிடிக்கினம்

பா. உறுப்பினர் வேலையை உருப்படியா செய்த்தால் அது தேவையில்லை. அதைத்தான் அவர்கள் செய்வதில்லையே? கல்வியமைச்சர் வேலை வேணுமாம்! எங்கன்ர சுமந்திரனுக்கு வெளிநாட்டலுவலர் பதவி கிடைக்கப்போகுதென்று உதயன் கம்மன்பில சொன்னார், அதற்கு சுமந்திரன் சொன்னார், அது உதயன் கம்மன்பிலவின் கற்பனை. எனக்கு பிரதம மந்திரி பதவிக்கு அனுரா அழைப்பு விடுவார் என்று சொல்லி காத்திருந்தார். அது ஏன் அப்படிச்சொன்னார்? மக்கள் அதனை நம்பி தனக்கு வாக்களிப்பார்கள் என்று ஒரு உத்தி. ஆனால் அனுரா பக்கமிருந்து அவரை தலைகுனிய வைக்கும் அவர் எதிர்பார்க்காத  பதில், மக்களிடம் இருந்து ஒரு ஆணை!

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kandiah57 said:

மக்கள் சக்திக்கு    கிழவன் ரணில்   இருக்க கதிரை. தேடுகிறார்.  

இவருக்கு ஒரு கதிரையை கொடுத்துவிட்டால்; இழுத்துபோட்டுக்கொண்டு இருந்து சபையை ரசிப்பாரே. இதுகூட அனுராவுக்கு புரியவில்லையே. தடாலடியாக யாரும் பதவி கேட்டு வரவேண்டாமெண்டு ஒரு போடு போட்டார் பாருங்க, அதுதான் யாராலும் பொறுக்க முடியாத ஒன்று. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

எம்.பி வேலை சம்பளம் இல்லாத வேலையல்லோ.

என்னது...... சம்பளமில்லாத தொழலுக்கா இவ்வளவு அடிபாடு? இவர்கள்தான் பெருத்த ஊழல் பெருச்சாளிகளும் தெருச்சண்டியரும். பொறுங்கோ, அனுரவை குடைச்சல் இல்லாமல் இருக்க விட்டால், இவர்களெல்லோரும் தீயில நடக்கவேணும். வேண்டுதல் ஒன்றுமில்லை, மக்களுக்கு சேவை செய்து உறுதிப்படுத்தினாலே அவருக்குரிய வேதனத்தை பெற முடியும், அது போக சமூக சேவை செய்பவர் தனது காரை தானே ஓட்டிப்போக வேண்டும். மக்கள் அலுவல் சம்பந்தமான போக்கு வரத்துக்கு மட்டும் எரிபொருள் வழங்கப்படவேண்டும், இல்லையேல் ஒதுங்க வேண்டும். அதிகாரிகள் குறிப்பிட்ட நாட்களுக்கிடையில் குறிப்பிட்ட வேலைகளை செய்து உறுதிப்படுத்தவேண்டும், இல்லையேல் தங்கள் சொந்த நேரத்தில் முடிக்க வேண்டும் சம்பளம் கிடையாது. திறமையற்றவர்கள் விலகி, படித்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு இடம்விட வேண்டும்.    

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kandiah57 said:

இவர்கள் தங்களை அறியாமல் ஜேவிபி யை   மேலும் உறுதியாக்கிறார்கள் இந்த கருத்துகள் உண்மையான ஒரிஜினல் கருத்துகள்   பிறகு என்னை அனுர வலு. என்பதில்லை

எனக்கு அளிக்கப்பட்ட பதவியை பார்த்து பயந்து விட்டீர்கள் போலிருக்கிறது! பரவாயில்லை, தங்கள் கருத்தோடு ஒத்துப்போகாதவர்களை இவ்வாறு பல முத்திரை குத்துவார்கள். அதற்காக நாங்கள் சொல்ல வேண்டியதை சொல்லாமல் இருக்க முடியாது. நான் யாரென்று எனக்குத்தெரிந்தால் இதற்கெல்லாம் பயப்படவேண்டியதில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன தெரிவு

Published By: DIGITAL DESK 3

17 DEC, 2024 | 09:52 AM
image
 

10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இடம்பிட்டிய கெதரயோ வணிகசூரிய முதியான்சலாகே ஜகத் விக்கிரமரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/201475

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்கால சபாநாயகருக்கான அடிப்படைத் தகுதி மும்மொழி புலமை வாயந்தவராக இருக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, RishiK said:

எதிர்கால சபாநாயகருக்கான அடிப்படைத் தகுதி மும்மொழி புலமை வாயந்தவராக இருக்க வேண்டும். 

எந்தத் தகுதியும் இல்லாமலே நானும் கிளறிக்கல் சேவன்ராக வேலைபார்த்த காலமும் உண்டு. அதைக் கிளற அப்போது ரணிலும் இல்லை, சஜித்தும் இல்லை.

என் பேரன் இரண்டு வயதில் ஏதோ கல்லை விழுங்கிவிட்டான், அது என்ன கல் என்று பார்ப்பதற்கு அவன் கடன்களை முடித்த வேளைகளில் எல்லாம் நானும் அதனைக் கிளறிக் கல் பார்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தேன்.🤪

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.