Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, வாலி said:

சரிதானே! கள்ளனுக்குக் கள்ளன் தானே மாற்றீடாக முடியும். கருணாநிதி இப்ப உயிரோடு இல்லை எனவே இருக்கும் அந்த வெற்றிடத்துக்கு (கள்ளருந்தும்) செந்தமிழன் சீமான் அண்ணாதான் சிறந்த மாற்றீடாக இருக்கமுடியும்.😂

🤣 ரைட்டு…நாமதான் இந்த லொஜிக் விளங்காமல் கிடந்து புரண்டிருக்கிறம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, island said:

அது மட்டுமல்ல 1982 ல் பாண்டி பஜார் துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பின் பிரபா, உமா இருவரையும் தம்மிடம் ஒப்படைக்குமாறு ஜே. ஆர் கேட்ட போது  தமிழ் நாட்டில் இருந்த திராவிட கட்சிகள், திராவிட இயக்கங்கள் மற்றும் வேறு பல கட்சிகளும் இணைந்து   அவர்களை நாடு கடத்துவதற்கு எதிராக போராடியதோடு  மத்திய அரசுக்கு கடும் அழுத்தத்தை கொடுத்தனர்.  அதனாலேயே அந்த நாடுகடத்தில் தவிர்க்கப்பட்டது.  அன்று பிரபாவோ  உமாவோ தமிழ் நாட்டில்  எந்த அரசியல் முக்கியத்துவமும் அற்ற வெறும் தமிழ்  போராளிகள்  மட்டுமே. 

அதை விட போராட்டம் நடைபெற்ற காலத்தில்  பல திராவிட இயக்க தொண்டர்கள் நினைத்து பார்கக   பாரிய உதவிகளை போராளிகளுக்கு செய்திருந்தனர். குளத்தூர் மணி  புலிகள் மறைவாக  பயிற்சி பெற  பெரும் நிலப்பரப்பை தனது ஊரில் ஏற்பாடு செய்து கொடுத்ததோடு போராட்டத்திற்கு பல விடயங்களில் உறுதுணையாக இருந்தார். அவரின் சிபார்சுலேயே சீமான் ஈழத்திற்கு சென்றார். 

ராஜீவ் கொலைக்கு பின்  இந்திய கியூ பிராஞ் பொலிசாரால் அதிகம் துன்புறுத்தப்பட்டவர்கள் திராவிட இயக்க தோழர்களே. அந்த அடக்கு முறையையும்  மீறி பலர் உதவி செய்ததி ருந்தனர்.  அதனால் பலர் வருடக்கணக்கில் சிறை சென்றனர்.  

ஆனால் நன்றி கெட்ட புலம் பெயர் ஈழ தமிழர்கள்  சீமானின்  சொல்லை கேட்டு அவர்களில் பலரை துரோகிகளாக முத்திரை குத்தினர்.

உண்மை, நாம் நன்றி கெட்டவர்கள் தான்.

எங்களுக்காக போராடிய, சிறையில் அடைக்கப்பட்ட எத்தனையோ பல முகம் தெரியாத திராவிட இயக்க, திமுக தொண்டர்களை தெலுங்கன் என்றும் முதுகில் குதியவர்கள் என்றும் 2009 இல் facebook, youtube மூலம் மட்டுமே உலகை அறிந்துகொண்ட  தலைமுறை திட்டியப்பொழுது நான் இல்லை என்று சொன்ன பொழுது என்னையும் தெலுங்கன் list ல் சேர்த்து விட்டார்கள் இந்த நன்றி கெட்ட கயவர்கள். பிறகு இல்லை நான் இந்த ஊர், இன்னார் சொந்தம் என்று சொன்ன பின் கிடைத்தது சாதி வெறியன் பட்டம். கடைசி வரைக்கும் நல்ல தமிழனாக உண்மையை சொல்ல வெளிக்கிட்டால் கிடைப்பது துரோகி, சாதி வெறியன், சிங்களவனுக்குப் பிறந்தவன் மற்றும் தெலுங்கன் பட்டமே. 

 

Edited by பகிடி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, புலவர் said:

அவர் கடவுள் மறுப்பாளர் இல்லையே. பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லிக் கொண்டு.கருணாநிதி சாய்பாபாவைச் சந்திக்கலாம். அவரின் மனைவி துணைவி எல்லாம் சாய்பாபாவின் காலில் விழுந்து ஆசிகள் வேண்டலாம். செஉதயநிதி  கோவிலுக்குப் பேபாகலாம்> துர்க்கா போலாம். சபரீசன் சத்துரு எதிர்ப்பு யாகமே நடத்தலாம்.  சீமான் மட்டும் ய்தால் எரியுதடி மாலா!!!!!!

கருணாநிதியில் சுயநல அரசியலில் சீமான் அவரின் வாரிசு தான். ஆனால் கருணாநிதி சாயிபாபாவை சென்று சந்திக்கவில்லை. சாயிபாபா தான் கருணாநிதியிடம்  நேரம் கேட்டு,  வீடு தேடிசென்று சந்தித்தார். 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு இனம் தனக்கான நாட்டை அடைய முதல்ப்படி தம்மை தனித்த வேறுபடுத்தக் கூடிய இயல்புடையவர்கள் என்று காட்டுவது.

அதை சரியாக செய்ய முயன்றவர்கள் திராவிட இயக்க சிந்தனையாளர்கள் 

அவர்களையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றியவர்கள் நாம்.

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.