Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்

பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்

பார் போமிட் வழங்குவதற்குச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகர் பதவி விலகியது போன்று பதவி விலக வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சபாநாயகர் பதவி விலகியமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சபாநாயகர் கலாநிதிப் பட்டம் தனக்கு இருக்கின்றது, அதனை தற்போது நிரூபிக்க முடியாது என்பதால் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அது நல்லதொரு விடயம். அதை நான் வரவேற்கின்றேன். இதேபோன்று மற்றவர்களும் மற்ற மற்ற விடயங்களுக்காக விலகுவார்களாக இருந்தால் அதுவும் நல்ல விடயம்தான்.

பார் போமிட் எடுத்தவர்களும் தாமாகவே விலகுவார்களாக இருந்தால் அதுவும் நல்ல விடயம்.

விக்னேஸ்வரன் ஐயா தான் பார் போமிட் கொடுத்து விட்டேன் எனத் தெரிவித்து அவர் தேர்தலில் போட்டியிடமால் கொழும்புக்குப் போய் விட்டார்.

ஒவ்வொரு இடங்களிலும் நிறையப் பார் போமிட் கொடுக்கப்பட்டுள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.

அதைச் சிபார்சு செய்தவர்கள் யார் என்ற தகவல் இன்னும் வரவில்லை. அந்தத் தகவல் வருகின்றபோது சிபார்சு செய்தவர்களும் சபாநாயகர் பதவி விலகியமை போன்று விலக வேண்டும். அதனைச் சந்தோசமாக வரவேற்போம்.” – என்றார்.
 
https://oruvan.com/those-who-recommended-granting-of-parole-should-also-resign-like-the-speaker-sumanthiran/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமந்திரன் எப்படியும் நாடாளமன்றம் வரத்தான் நிற்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

May be an image of 7 people, temple and hospital

May be an image of text

மானிப்பாயில்... "பார்" திறந்து வைத்த சுமந்திரனுக்கு, 
இதை சொல்ல, எந்த யோக்கியதையும் கிடையாது. 

முதலில்... உங்கள் முதுகில் உள்ள  அழுக்குகளை சுத்தம் செய்து  கொள்ளவும். 
மக்களிடம் வாங்கிய அடி காணாது என்று, ஊருக்கு உபதேசம் பண்ண வந்திட்டார்கள்.  

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

பாவம் அவர் வேட்டி நுணி றோட்டைக் கூட்டுவது தெரியாத அளவுக்கு குடித்துவிட்டார் போலிருக்கிறது.🧐😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, RishiK said:

சுமந்திரன் எப்படியும் நாடாளமன்றம் வரத்தான் நிற்கிறார். 

அவருக்கு அனுராவோடை சப்போட்டு இருக்கல்லே....ரணிலுக்கும் ,சுமதிரனுக்கும் பிரதமர் பதவிமீது ண்ணெல்லே...

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
24 minutes ago, Paanch said:

பாவம் அவர் வேட்டி நுணி றோட்டைக் கூட்டுவது தெரியாத அளவுக்கு குடித்துவிட்டார் போலிருக்கிறது.🧐😂

May be an image of 7 people, temple and hospital

கோவிலுக்குப் போகும் போது... வேட்டியை அழகாக கட்டிக் கொண்டு போக வேண்டும்.
தவறணைக்கு போகும் போது... வேட்டியால், றோட்டு... கூட்டிக் கொண்டு போக வேணும். 😂
முன்னாள் பா.உ. சுமந்திரன்... சரியாய்த்தான் செய்திருக்கிறார். 🤣

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 7 people, temple and hospital

May be an image of text

மானிப்பாயில்... "பார்" திறந்து வைத்த சுமந்திரனுக்கு, 
இதை சொல்ல, எந்த யோக்கியதையும் கிடையாது. 

முதலில்... உங்கள் முதுகில் உள்ள  அழுக்குகளை சுத்தம் செய்து  கொள்ளவும். 
மக்களிடம் வாங்கிய அடி காணாது என்று, ஊருக்கு உபதேசம் பண்ண வந்திட்டார்கள்.  

பாவம் சிறியரும் அவர் புள்ளிங்கோவும், 

Hotel and Restaurant க்கும் தெருவோர சாராயக் கடைக்கும் வித்தியாசம் தெரியாத நிலையில் சிறியர் & Co. இருக்கிறார்கள். 

இதற்காகத்தான் படியுங்கோ , பள்ளிக்கூடம் போங்கோ என்று பிள்ளைகளைப் பெற்றவர்கள் கத்துவது. 

😏

Edited by Kapithan

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.