Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

24-6761478976235.webp

இலங்கையில் கைது செய்யப்பட்ட  பிரித்தானிய தமிழ் பிரஜை விடுதலை. 

பிரித்தானியாவிலிருந்து தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பிரித்தானிய தமிழ் பிரஜையை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பயணத்தடை

உலகத்தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மற்றும் உலகத்தமிழர் பேரவையின் நிர்வாகிகளுடன் இணைந்து குறித்த பிரித்தானிய பிரஜை பயங்கரவாத அமைப்பின் மீளுருவாக்கத்திற்கு நிதி திரட்டி இலங்கைக்கு அனுப்பியதாக 2012 ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுடன் அவருக்கெதிராக பயணத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் இலங்கைக்கு திரும்பியபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 30.11.2024 அன்று கைது செய்யப்பட்டிருந்தார்

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், 

“உலகத்தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மற்றும் உலகத்தமிழர் பேரவையின் நிர்வாகிகளுடன் இணைந்து பிரித்தானிய பிரஜையான குறித்த நபர், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின்  மீள் உருவாக்கத்திற்காக நிதி திரட்டி இலங்கைக்கு அனுப்பியதாக 2012 ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுடன் அவருக்கெதிராக பயணத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

பிரித்தானிய பிரஜையான விஜயசுந்தரம் சங்கர் தனது தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி இலங்கை வருகை தந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்ற புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இலங்கையில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Court Order Regarding British Citizen

இந்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் மன்றில் எடுத்தும் கொள்ளப்பட்டபோது சந்தேக நபர் சங்கர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தனது வாதத்தில் இந்த சந்தேக நபரை கைது செய்தமை சட்டரீதியற்ற கைது என்றும் 2009 ஆண்டு யுத்தம் மௌனிக்கபட்ட பின்னர் பல நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கைது செய்யப்பட்ட பொழுது இந்த சந்தேக நபரும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமந்த முடியாத நிலையில் விடுதலை செய்யப்பட்டார் என்றும் கூறியுள்ளார்.

பிரித்தானியாவுக்கு பயணம்

அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு பயணமாகிய இவர் பிரித்தானிய பிரஜாவுரிமையும் பெற்றுக்கொண்டார்.

பொலிஸார் 2012 இல் சந்தேக நபர் சங்கருக்கு எதிராக நிதி சேகரித்ததாக நீதி மன்றில் அறிக்கையை தாக்கல் செய்து விசாரணை செய்த போதிலும் 2024 ஆம் ஆண்டு கைது செய்யப்படும்வரை இவருக்கெதிராக பொலிஸ் விசாரணையில் நீதிமன்றில் எவ்வித சான்றுகளும் முன்வைக்கப்படவில்லை என்பதோடு சந்தேக நபர் எந்த குற்றதை புரிந்தார் என்பதை பொலிஸார் நீதிமன்றில் தாக்கல் செய்த அறிக்கைகளில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Court Order Regarding British Citizen

மேலும், 2010 ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு கைது செய்யப்படும் வரை சந்தேக நபர் இலங்கைக்கு எந்த விஜயமும் மேட்கொண்டிருக்கவில்லை என்பதை நீதி மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்ததுடன் மேலும் தனது வாதத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா இவ்வாறான சட்டரீதியற்ற கைதுகளினால் புலப்பெயர் தமிழர்களின் வெளிநாட்டு முதலீடுகள் குறைவடைவதுடன் சுற்றுலாத்துறையிலும் பாரிய பாதிப்புகள் ஏற்படுத்துவதுடன் இது இலங்கை பொருளாதாரத்தில் வீழ்ச்சியையும் ஏற்படுத்தும் என்பதனையும் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

https://tamilwin.com/article/court-order-regarding-british-citizen-1734428313

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

இந்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் மன்றில் எடுத்தும் கொள்ளப்பட்டபோது சந்தேக நபர் சங்கர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தனது வாதத்தில் இந்த சந்தேக நபரை கைது செய்தமை சட்டரீதியற்ற கைது என்றும் 2009 ஆண்டு யுத்தம் மௌனிக்கபட்ட பின்னர் பல நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கைது செய்யப்பட்ட பொழுது இந்த சந்தேக நபரும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமந்த முடியாத நிலையில் விடுதலை செய்யப்பட்டார் என்றும் கூறியுள்ளார்.

சட்டத்தரணி தவராசாவுக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதிலை பகிடி என்னவென்றால்.. சுரேன்..சுரெந்திரனுடன் சேர்ந்து காசு சேர்த்தவராம்..சுரேன் எத்தினையோதடவி இலங்கை வந்து போய் விட்டார்..அதுவும் அரச விருந்தினராக.. இவரை காசு சேர்த்த குற்றத்திற்கு கைது..இளனி குடித்தவன் தப்பிவிட்டான்...கோம்பை நக்கினவன் மாட்டுப்பட்டான்...

சட்டத்தரணி தவராசாவுக்கு பாராட்டுக்கள்....நன்றியும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

சட்டத்தரணி தவராசாவுக்கு பாராட்டுக்கள்.

12 minutes ago, alvayan said:

சட்டத்தரணி தவராசாவுக்கு பாராட்டுக்கள்....நன்றியும்

சட்டத்தரணி தவராசாவும், இவரின் காலஞ்சென்ற மனைவியும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான  கௌரிசங்கரி  தவராசாவும் பல ஆயிரம் தமிழ் இளைஞர்களுக்காக இலவசமாக வாதாடி  வெளியே கொண்டு வந்துள்ளார்கள் என அறிந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

சட்டத்தரணி தவராசாவும், இவரின் காலஞ்சென்ற மனைவியும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான  கௌரிசங்கரி  தவராசாவும் பல ஆயிரம் தமிழ் இளைஞர்களுக்காக இலவசமாக வாதாடி  வெளியே கொண்டு வந்துள்ளார்கள் என அறிந்தேன்.

சும்மரும் செய்தவர் என யாராவது போர் கொடி தூக்கினால் உங்கள் பதில்?😅

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, putthan said:

சும்மரும் செய்தவர் என யாராவது போர் கொடி தூக்கினால் உங்கள் பதில்?😅

🤣..........

ஊர்த் திருவிழாவில் ஒன்றிரண்டு எலி வாணங்களை கூட்டத்துக்குள்ளும் விட்டுவிடுவார்கள்...... அது போல இருக்கின்றது உங்களின் கேள்வி...............😜.

ஒரு தடவை ஒருவரின் சீலை பற்றி எரிந்தும் விட்டது..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

சும்மரும் செய்தவர் என யாராவது போர் கொடி தூக்கினால் உங்கள் பதில்?😅

சும்மர்…. வெளியிலை இருக்கிற ஆட்களை தனக்கு குண்டு வைக்க வந்தவர்கள் என்று பொய் முறைப்பாடு கொடுத்து  உள்ளே தூக்கி போடுகின்றவர். 
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  சுமந்திரானால்… 20 பேர் வரையான தமிழ் இளைஞர்கள் பாதிக்கப் பட்டுள்ளார்கள் என ஒரு செய்தியில் வாசித்தேன். 
செய்த பாவம்தான்… ஆளை இப்பிடி, வீட்டிலை குந்த வைத்திருக்குது. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

செய்த பாவம்தான்… ஆளை இப்பிடி, வீட்டிலை குந்த வைத்திருக்குது. 😂 🤣

இதிலை ஒரு திருத்தம் கசங்கினசேர்ட்டும்...வெளியே இழுத்துவிட்ட சேர்ட்டுடனும் வெள்ளைக்கரனை சந்திக்க வைத்திருக்காது..

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

சும்மர்…. வெளியிலை இருக்கிற ஆட்களை தனக்கு குண்டு வைக்க வந்தவர்கள் என்று பொய் முறைப்பாடு கொடுத்து  உள்ளே தூக்கி போடுகின்றவர். 
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  சுமந்திரானால்… 20 பேர் வரையான தமிழ் இளைஞர்கள் பாதிக்கப் பட்டுள்ளார்கள் என ஒரு செய்தியில் வாசித்தேன். 
செய்த பாவம்தான்… ஆளை இப்பிடி, வீட்டிலை குந்த வைத்திருக்குது. 😂 🤣

ஓ அப்படியா ..இது காணும் எனக்கு கொஞ்ச நாளைக்கு சும்மருக்கு எதிராக கருத்து வைக்க 😅

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம், இப்பொழுது அவரது பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதா ? 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.