Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அநுர – மோடி கூட்டறிக்கையில் ’13’ஏன் இல்லை; ‘ இந்து பத்திரிகை ‘கேள்வி

anura-modu.jpg

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசா நாயக்க இந்தியாவுக்குமேற்கொண்டிருந்த விஜ யத்தின் போ து பாரதப்பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பை தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் மாகாண சபைகளுக்கு சுயாட்சியை வழங்கும் இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தம் குறித்து எந்தக் குறிப்பும் இல்லை என்று ‘ இந்து’ பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது .

”திரும்பவும் அதுவே: இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயம்” என்று மகுடமிட்டு நேற்று புதன்கிழமை ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ள அப்பத்திரிகை மேலும் தெரிவித்திருப்பதாவது,

இலங்கை ஜனாதிபதி அநு ரகுமார திசா நாயக்கவின் இந்தியவிஜய மானது பாரம்பரியத்திற்கு அமைவான அவரது முதலாவது வெளிநாட்டுப் பயணமாகும் .இந்தவிஜயம் இந்தியா-இலங்கை இருதரப்பு உறவுகளின் தொடர்ச்சியைக் குறிக்கிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான அவரது சந்திப்பின் பின்னரான கூட்டறிக்கையானது , 2023 இல் அவரது முன்னோடியான ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்திற்குப் பின் வெளியிடப்பட்டிருந்த கூட்டறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தவை போன்ற அம்சங்களை உள்ளடக்கியிருக்கிறது . இலங்கை தனது ஆ ட் புல எல்லையை இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பாதகமான முறையில் பயன்படுத்தஎந்தவிதத்திலும் அனுமதிக்காது என்ற திசாநாயக்கவின் உறுதிமொழியானது மேலோட்டமாகப் பார்க்கையில், கொழும்பின் நீண்டகாலநிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவது போல் தோன்றுகிறது.

ஆனால் திசாநாயக்கா வின் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஒரு இடது-சார்பு சீனா சார்பு கட்சி என்ற அபிப்பிராயத்தை கருத்தில் கொள்கையில் இது குறிப்பிடத்தக்கதொன்றாக இருந்தது. அடுத்த மாதம் முடிவடையவுள்ள அனைத்து “வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள்” பயணங்களுக்கும் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் ஓராண்டு தடைக்காலம் (இந்தியாவின் கவலைகளுக்குப் பிறகு) என்பதன்அடிப்படையில் , இலங்கைக்கு வருகை தரும் சீனக் கப்பல்களுக்கான அனுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவே அவரது அவதானிப்பை இந்தியா கருதுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், சீனக் கப்பல்கள் அடிக்கடி வருவது இருதரப்பு உறவுகளில் எரிச்சலை ஏற்படுத்தியது. விக்கிரமசிங்கவின் ஆட்சி “சீனாவை மட்டும் தடுக்க முடியாது” என்று ஆறு மாதங்களுக்கு முன்பு நிலைப்பாடொன்றை எடுத்திருந்த நிலையில் இந்தியாவின் கவலைகளுக்கு ஆட்சி முறைமையானது எவ்வளவு தூரம் உணர்திறன் கொண்டதாக இருக்கும் என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது .

மேலும் அதானி குழுமத்தின் திட்டங்களின் நிலைமை பற்றி எதிர்பார்க்கப்பட்டிருந்தநிலையில் இரு தலைவர்களின் அறிக்கைகளோ அல்லது கூட்டறிக்கையோ அது பற்றிக் குறிப்பிட்டிருக்க வில்லை. விவசாயம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற துறைகளில் இலங்கைக்கு உதவுவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு குறித்து கூட்டறிக்கையில் பேசப்பட்டுள்ளது. விவசாயம் தொடர்பான கூட்டுப் பணிக்குழுவை அமைக்கும் திட்டம் வரவேற்கத்தக்கதாகும் . முன்மொழியப்பட்ட பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது .

அதுகுறித்து இதுவரை 14 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. மீன்பிடி பிரச்சனையில், இரு தரப்பினரும் வெளிப்படையாக தங்கள் நிலைப்பாட்டில் நின்றதாக தென்படுகிறது , ஆனால் இரு நாடுகளிலும் உள்ள மீனவர் சங்கங்களுக்கிடையில் ஒரு விரைவான சந்திப்பை எளிதாக்குவதற்கு கொழும்பு உதவ வேண்டும். மிக முக்கியமாக, கூட்டாகஇடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மோடியின் அறிக்கையின் ஆங்கிலத்திலான பதிப்பினை பொறுத்தவரை , ஒரு நுணுக்கமான மாற்றம் இருப்பதாகத் தெரிகிறது. நல்லிணக்கம்,இலங்கை தனது அரசியலமைப்பை “முழுமையாக அமுல்படுத்துவதற்கான ” கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டியதன் அவசியம்,மாகா ணசபைகளுக்கு தேர்தலைநடத்துதல் போன்ற விடயங்களை மோடி உள்ளடக்கியிருந்த போதிலும், மாகாண சபைகளுக்கு சுயாட்சியை வழங்கும் இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தம் பற்றி எந்த குறிப்பும் இல்லை. 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக, திருத்தத்திற்கு எதிராக ஜே.வி.பி ஒரு கடுமையான போராட்டத்தை மேற்கொண்டிருந்தது .

நவம்பர் 14 பாரா ளுமன்றத் தேர்தலில்திசாநாயக்கா தலைமையிலான கூட்டணி நாடு முழுவதும் பாரிய ஆணையைப் பெற்றுள்ளதால், இந்தியாவுடனான உறவுகளுக்கு ஒரு புதிய திசையைக் காண்பிக்கக்கூடிய சவுகரியமான நிலையில் அவர் உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே யான கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காண்பதற்கு இதுவொரு வாய்ப்பாகும்.

 

https://akkinikkunchu.com/?p=303831

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை, இந்திய தரப்புகளிடையேயான இந்தசந்திப்பு, வெறுமனே இந்திய நலன் மட்டும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது, இலங்கைக்கு எந்த நலனும் கிட்டவில்லை, 13 இல்லை என்பதன் மூலம் இலங்கைக்கு நன்மை ஏற்பட்டுள்ளது என  இலங்கை தரப்பினை நம்பவைக்கப்பட்டுள்ளது.

13 நீக்கத்தினால் இலங்கையின் பொருளாதாரத்திற்கோ அல்லது அதன் பாதுகாப்பிற்கோ எந்த நன்மையும் ஏற்படவில்லை, தமிழர் தரப்பிற்கு இது ஒரு பின்னடைவு.

அதே வேளை இலங்கை தரப்பிற்கும் இந்த உடன்பாடுகளின் மூலம் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவர்கள் பேசினாலோ இல்லையென்றாலும் 13ம் திருத்தம் இன்றும் எமது அரசியல் சாசன சட்டம் நடைமுறையில் உள்ளது. 

ஆனால் முழுமையாக நடைமுறைப் படுத்தப்பட முடியாது/மாட்டாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, RishiK said:

அவர்கள் பேசினாலோ இல்லையென்றாலும் 13ம் திருத்தம் இன்றும் எமது அரசியல் சாசன சட்டம் நடைமுறையில் உள்ளது. 

ஆனால் முழுமையாக நடைமுறைப் படுத்தப்பட முடியாது/மாட்டாது. 

வேறு ஒரு  திரியில் இந்த சந்திப்பின் பின்னணியில் இடம்பெற்ற பேரம் தொடர்பாக கோசான் குறிப்பிட்டுள்ளார்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாத்தையா, சீனாவுக்கு போய் என்ன வாங்கிக்கொண்டு வாறார் என்று பாப்போம். எங்களின் நாடு இவ்வளவு சீரழிந்ததற்கும் இரத்தம் சிந்தியதற்கும் காரணம் இந்தியாவின் பாதுகாப்பு முன்னுரிமை, தன்னைவிட இலங்கை முன்னேறிவிடக்கூடாது என்கிற கொள்கை. அதை இனவாதிகளும் பயன்படுத்திக்கொண்டனர். இது அனுராவுக்கு ஒன்றும் தெரியாததல்ல, தெரிந்தும் அந்த வலையில் விழுகிறாரென்றால் இவரால் மற்றைய தலைவர்களை விட பெரிசாய் எதை சாதிக்கப்போகிறார்? இனப்பிரச்சினையை  தீர்க்காமல் நாடு முன்னேறுவது இயலாத காரியம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எற்கனவே எல்லோருடனும் கதைத்த விடையம்...நடை முறைபடுத்த விரும்பாத விடையம்...எழுத்தில் மட்டுமே இருக்கின்ற விடையம் ..அலங்காரத்துக்கு மட்டும் இருக்கின்ற விடையம்.. இதைகதைத்து ஏன் நெரத்தை வீணாக்குவான் என்று இருவரும் நினத்திருப்பினம்..😄

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராஜீவ் காந்தி…   13 ஒப்பந்தத்தில் கையெழுத்து வைக்க,
ஶ்ரீலங்கா போய்… துவக்குப் பிடியால், பிடரியில் அடி வாங்கினது தான் 
கண்ட மிச்சம். 😂 🤣



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.