Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Clean Sri Lanka வேலைத் திட்டத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமித்து வர்த்தமானி அறிவித்தலொன்று கடந்த 19ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர், முப்படைத் தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட 18 பேர் இந்த ஜனாதிபதி செயலணிக்கு பெயரிடப்பட்டுள்ளனர்.

குறித்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை என்பது தமி்ழ் பேசும் மக்களின் அரசியல் பரப்பில் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில், அநுர அரசாங்கம் இலங்கையர்களாக சிந்திப்போம் என்று கூறுகின்றமையானது, தமிழ் மக்களுக்கு பிரச்சினை இல்லாதது போன்று காட்டும் தந்திரோபாயமாக உள்ளதாக என அரசியல் ஆய்வாளர் திபாகரன் குறிப்பிட்டுள்ளார்.

Clean Sri Lanka வேலைத் திட்டத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியும் தமிழர்களை அதாள பாதாளத்திற்கு தள்ளுவதாக உள்ளது.தமிழர்களை அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றார்.

https://tamilwin.com/article/clean-sri-lanka-special-gazette-released-anura-1734792198

  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, பெருமாள் said:

குறித்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை என்பது தமி்ழ் பேசும் மக்களின் அரசியல் பரப்பில் பேசுபொருளாகியுள்ளது.

 

அமைச்சரவையில் முஸ்லீம்கள் எவரும் இடம்பெறவில்லை என குறைப்பட்டதற்கும் ஜனாதிபதி நியமித்த செயலணி ஒன்றில் தமிழர்கள், முஸ்லீம்கள் எவரும் இல்லை என குறைப்படுவதற்கும் இடையில் ஏதாவது ஒற்றுமை உள்ளதா?

Clean Sri Lanka பற்றிய விபரங்களை தாருங்கள் என்ன உள்ளது என வாசித்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரச்சனை குறைவாக இருப்பது பிணந்தின்னி ஊடகங்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பெருமாள் said:

 

குறித்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை என்பது தமி்ழ் பேசும் மக்களின் அரசியல் பரப்பில் பேசுபொருளாகியுள்ளது.

.

 

Clean Sri Lanka....எனபது ..கடந்தகால ஆட்ட்சியினரையும்...நிகழ்கால ..ஊழல்களையும் கொண்டுவருவதற்கான முயற்சி...இதில்போய் இசுலாமியனையும் ,தமிழனயும் சேர்ப்பானா...காசுக்கு விலை போகக் கூடியசன் ..இந்த இரண்டுவகையும் என்பது என்.பி.பி ..அறியாததல்ல

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜேவிபியின் அமைச்சரவையில் தமிழ்பேசும் மக்களையும் நியமித்து இருந்தார்கள்
இரு மொழி பேசும் நாட்டின் இந்த செயலணியில் தமிழ்பேசும் மக்கள் எவரும் இல்லை.
ஒரே ஸ்ரீ லங்கா சிங்களம் பேசும் உறுப்பினர்கள்  மட்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆரிய கூத்தாடினாலும் காரிய கூத்தாக இருக்க வேண்டும் என கூறுவார்கள், சிறுபான்மையினர் இந்த இலங்கையர்கள் எனும் மாயையில் சிக்கி சீரழியாமல், இலங்கையிலுள்ள அவர்களது உள்வீட்டு பிரச்சினைகளில் தேவையில்லாமல் தலையிடாமல் (அவர்கள் சிறுபான்மையினரின் நாடாக இலங்கையினை கருதுவதே இல்லை என்பதே யதார்த்தம்) எமது பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதனை மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என கருதுகிறேன்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.