Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை கடலில் ஆளில்லா விமானம் மீட்பு !

image
 

திருகோணமலை கடலில் சிறிய ரக ஆளில்லா விமானம் ஒன்று மிதப்பதை நேற்று வியாழக்கிழமை (26) அதிகாலை அவதானித்த மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து கடற்படையினர் குறித்த விமானத்தை மீட்டு அதனை கரைக்கு கொண்டுவந்ததாக  விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் எரந்த கிகனகே தெரிவித்தார்.

திருகோணமலை கரையில் இருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது கடலில் சிறிய ரக விமானம் மிதப்பதை கண்ட மீனவர்கள் அதனை கைப்பற்றி தமது படகில் இணைத்து கொண்ட பின்னர் கடற்படையினருக்கு தகவல் வழங்கினர் இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற கடற்படையினர் விமானத்தை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.

இந்த விமானம் ஆளில்லா விமானம் என்பதுடன் இந்த வகை விமானம் 2020 ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சுமார் 40 கிலோ எடையுடையது என்றும் விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில்  தெரியவந்துள்ளது.

இருந்தபோதும் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விமானம் எப்படி வந்தது, ஏன் வந்தது  தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது என விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் எரந்த கிகனகே தெரிவித்தார்.

466055191_1311186013228359_7162550366810

466651715_1279186210073637_3895541989575

466972395_928830479379754_39699753818275

467246929_1504546493546152_3600234429004

467543580_1127898188689663_6314849919342

 

 

 
  • கருத்துக்கள உறவுகள்

இது மகிந்த..அணியின் திருவிளையாடலாக இருக்குமோ...😁

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, alvayan said:

இது மகிந்த..அணியின் திருவிளையாடலாக இருக்குமோ...😁

அதன் நிறமும்... சிவப்பு, மஞ்சள்  என,  புலிக்கொடியின் நிறத்தில் உள்ளது. 😂
அப்ப  மகிந்தவுக்கு.... 160 பாதுகாப்பு படையினருடன், 
மூன்றடுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியதுதான். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை கடலில் மீட்கப்பட்ட ஆளில்லா விமானம்!

திருகோணமலை கடலில் மீட்கப்பட்ட ஆளில்லா விமானம்!

திருகோணமலை கடற்பரப்பில் இலக்கு ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு மீனவர்கள் குழுவினால் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இது பொதுவாக விமான எதிர்ப்புக் குழுக்களின் பயிற்சியில் பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானம் என்று இலங்கை விமானப்படையின் (SLAF) ஊடகப் பேச்சாளர் கேப்டன் எரந்த கீகனகே தெரிவித்துள்ளார்.

இது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம் அல்ல என்றும், அது இலங்கையின் முப்படைக்கு சொந்தமானது அல்ல என்றும் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இது சர்வதேச ரீதியில் தயாரிக்கப்பட்ட இலக்கு ஆளில்லா விமானம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இது பயிற்சியின் போது இடம்பெயர்ந்து இலங்கை கடற்பரப்பில் தரையிறக்கப்பட்டிருக்கலாம்.

அது வெடிபொருட்கள் எதையும் கொண்டு செல்லவில்லை என்றும், ஆளில்லா விமானத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் அல்லது அச்சுறுத்தலும் இல்லை என்றும் விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.

எவ்வாறெனினும், இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2024/1414337

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வகை (Shikra Target) ஆளில்லா வான்வழி இலக்கு விமானங்கள் (Aerial Target Unmanned Airgraft) இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ள ANADRONE என்ற தொழிற்சாலையில்  உற்பத்தி செய்யப்படுகின்றன. முன்பும் ஒருமுறை(2022 ஆம் ஆண்டில்) இலங்கையை அண்டிய கடற்பிரதேசத்தில் இதுபோன்ற ஆளில்லா விமானத்தை மீனவர்கள் கண்டுபிடித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vanangaamudi said:

இந்த வகை (Shikra Target) ஆளில்லா வான்வழி இலக்கு விமானங்கள் (Aerial Target Unmanned Airgraft) இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ள ANADRONE என்ற தொழிற்சாலையில்  உற்பத்தி செய்யப்படுகின்றன. முன்பும் ஒருமுறை(2022 ஆம் ஆண்டில்) இலங்கையை அண்டிய கடற்பிரதேசத்தில் இதுபோன்ற ஆளில்லா விமானத்தை மீனவர்கள் கண்டுபிடித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரிசாவுக்கு அண்மையில் கடலில் தொலைந்து இங்கே நீரோட்டம் கொண்டு வந்து விட்டிருக்கலாம்.

விஜயனும் தோழர்களும் வந்தது போல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.