Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • டாம் ஜியோகெகன்
  • பதவி,பிபிசி செய்தி
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அடுத்த சில நாட்களில் தனது பதவி விலகலை அறிவிக்கலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவில் ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவது குறித்து அவர் பரிசீலித்து வருகிறார், இது அவரது ஒன்பது ஆண்டு கால பிரதமர் பதவி காலத்தையும் முடிவுக்கு கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.

கனேடிய பொருட்களுக்கு அமெரிக்கா கடுமையான வரிகளை விதிக்கும் என்ற டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தலை எவ்வாறு சமாளிப்பது என்ற விவகாரம் உட்பட சில கருத்துவேறுபாடுகளை மேற்கோள் காட்டி கடந்த மாதம் அவரது நிதி அமைச்சர் பதவி விலகினார்.

ட்ரூடோவின் புகழ் கனடா மக்கள் மத்தியில் சரிந்துள்ளது. அவரது கட்சி இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் தோல்வியை சந்திக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஓரிரு நாட்களில் பதவி விலகலா?

ட்ரூடோ தனது சொந்த எம்.பி.க்களால் கட்டாயப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார் என்பது போன்ற ஒரு பிம்பம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, புதன்கிழமை நடக்கவுள்ள தனது கட்சியின் எம்.பி.க்கள் கூட்டத்திற்கு முன்பே பதவி விலகுவது குறித்து அவர் அறிவிப்பு வெளியிடலாம் என்று `குளோப் அண்ட் மெயில்' நாளிதழ் தெரிவித்துள்ளது.

`குளோப் அண்ட் மெயில்' தகவலின்படி, ட்ரூடோ உடனடியாக பதவி விலகுவாரா அல்லது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமராக நீடிப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அவர் தனது எதிர்காலம் குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்ரூடோவுக்குப் பிறகு யார் பொறுப்பேற்றாலும், அமெரிக்காவுடன் சாத்தியமான வர்த்தகப் போரை எதிர்கொள்ளும் அதேவேளையில், வலுவான பிரசாரத்தின் மூலம் தேர்தலில் கட்சியை வழிநடத்தவும் வேண்டியிருக்கும்.

கனடாவில் பொதுத்தேர்தல் அக்டோபர் மாதத்திற்கு முன் நடக்க வேண்டும். ஆனால் லிபரல் கட்சியின் தலைமையில் ஏற்படும் மாற்றம் வரவிருக்கும் மாதங்களிலேயே தேர்தல் நடப்பதற்கான சாத்தியங்களை உருவாக்கலாம்.

ட்ரூடோ மீது சொந்தக் கட்சியிலேயே அதிருப்தி

ட்ரூடோவின் பதவி விலகல் என்பது கனடா அரசியல் களத்தில் ஒரு சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும்.

அவர் யாரும் எதிர்பாராத சமயத்தில், 2015 இல் தனது கட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வந்தார்.

அப்போது 43 வயதாக இருந்த ட்ரூடோ, அரசியலில் புதிய முகமாகவும் இளம் தலைவராகவும் இருந்தார். வெளிப்படையான குடியேற்றக் கொள்கையை மையமாகக் கொண்ட ஒரு புதிய வகையான அரசியலை உறுதியளித்தார். செல்வந்தர்கள் மீதான வரிகளை அதிகரித்தார் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திட்டங்களுக்கு ஆதரவளித்தார்.

ஆனால் அவரது முதல் பதவிக்காலத்தில் ஊழல் புகார்கள் எழுந்தன. மிக சமீபத்திய ஆண்டுகளில், கனடாவில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம் மற்றும் அவரது ஆட்சி மீதான விரக்தி காரணமாக அவரின் செல்வாக்கு குறைந்து வருகிறது.

கியூபெக், ஒன்டோரியோ மற்றும் அட்லாண்டிக் கனேடிய மாகாணங்களைச் சேர்ந்த டஜன்கணக்கான, ட்ரூடோவின் சொந்தக் கட்சி எம்.பி.க்கள் அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தியுள்ளனர். கருத்துக்கணிப்புகளில் பங்கேற்ற மூன்றில் இரு பங்கு பேர் ட்ரூடோ மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் மாதம் `Ipsos' தளத்திற்கு பதிலளித்தவர்களில் 26% பேர் மட்டுமே ட்ரூடோ பிரதமருக்கான சிறந்த தேர்வு என்று கூறினர். அந்த கருத்துக்கணிப்பில் கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரேவை விட 19 புள்ளிகள் பின்தங்கி இருந்தார் ட்ரூடோ.

கனேடிய அரசியல் வரலாறும் ட்ரூடோவுக்கு சாதகமாக இல்லை. கனடாவில் இதுவரை இரண்டு பிரதமர்கள் மட்டுமே தொடர்ந்து நான்கு முறை பதவி வகித்துள்ளனர்.

வரிகளைக் குறைப்பது, பண வீக்கத்தைச் சமாளிப்பது மற்றும் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாப்பது போன்ற வாக்குறுதியின் பேரில் 2022 இல் பொய்லிவ்ரே (Poilievre) தனது கட்சியின் உயர்மட்டத்திற்கு உயர்ந்தார்.

45 வயதான அவர் கோவிட் ஆணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஃப்ரீடம் கான்வாய் டிரக்கர்களுக்குப் பின்னால் ஆதரவைத் திரட்டினார் - இது ஒட்டாவா உள்ளிட்ட கனேடிய நகரங்களை ஸ்தம்பிக்கச் செய்த முற்றுகை ஆகும்.

கனடாவின் அடுத்த பிரதமர் டிரம்பின் அச்சுறுத்தலுக்கு தீர்வு காண வேண்டும்.

ஒழுங்கற்ற குடியேற்றம், சட்ட விரோத போதைப்பொருள் விற்பனை ஆகியவற்றுக்கு எதிராக, அமெரிக்காவுடனான தனது எல்லையை கனடா பாதுகாக்கவில்லை என்றால் கனேடியப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இது "கடுமையான சவால்" என முன்னாள் கனடா நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்டின் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் தனது வருடாந்திர பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு பதவி விலகினார்.

"நான் ட்ரூடோ அரசாங்கத்தின் உயர்மட்ட பொருளாதார ஆலோசகராக இருப்பதை அவர் விரும்பவில்லை என என்னிடம் தெரிவித்தார்" என்றும் கிறிஸ்டியா கூறினார்.

ருடோ, லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அத்துடன் பிரதமர் பதவியில் இருந்தும் விலக விரும்புவதாகவும் தெரிவுத்துள்ளார். 

கனடிய பாராளுமன்றத்தினை மார்ச் வரைக்கும் ஒத்தி வைத்துள்ளனர் (propagated).

கனடாவின் மிகவும் தோற்றுப்போன ஒரு பிரதமர்களில் ஒருவராக வரலாறு இவரை பதிவு செய்யும்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவிப்பு - என்ன காரணம்?கனடா, ட்ரூடோ பதவி விலகல்

பட மூலாதாரம்,CPAC

6 ஜனவரி 2025, 16:23 GMT
புதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர்

கனடாவில் எதிர்பார்க்கப்பட்டபடியே, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் புதன்கிழமை கனடாவை ஆளும் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடவிருந்த நிலையில், ட்ரூடோ தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள தனது வீட்டில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "2015-ஆம் ஆண்டில் பிரதமரான கணம் முதலே கனடாவுக்காகவும் கனேடிய மக்களுக்காகவும் பாடுபட்டு வந்துள்ளேன். நடுத்தர மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்துள்ளேன். கொரோனா தொற்று காலத்தில் மக்கள் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்ததை கண்ணுற்றேன். வட அமெரிக்க கண்டத்தில் தடையில்லா வர்த்தகம் நீடிக்க உழைத்தேன்" என்றார்.

தனது கடந்த கால செயல்பாடுகளை விவரித்த பிறகு அவர் தனது பதவியை ராஜினாமா செய்வது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக அறிவித்த அவர், அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தற்போதைய பதவியில் நீடிப்பேன் என்றார்.

குடும்பத்துடன் நடத்திய நீண்ட ஆலோசனைக்குப் பிறகு பதவி விலகும் முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார். தனது வெற்றிக்கு அவர்களது ஆதரவே காரணம் என்று அவர் கூறினார். தனது பதவி விலகல் முடிவு குறித்து நேற்றைய இரவு உணவின் போது குழந்தைகளிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.

ட்ரூடோ பதவி விலக என்ன காரணம்?

ட்ரூடோவின் பதவி விலகல் கனடா அரசியல் களத்தில் ஒரு சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

அவர் யாரும் எதிர்பாராத சமயத்தில், 2015 இல் தனது கட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வந்தார்.

அப்போது 43 வயதாக இருந்த ட்ரூடோ, அரசியலில் புதிய முகமாகவும் இளம் தலைவராகவும் இருந்தார். வெளிப்படையான குடியேற்றக் கொள்கையை மையமாகக் கொண்ட ஒரு புதிய வகையான அரசியலை உறுதியளித்தார். செல்வந்தர்கள் மீதான வரிகளை அதிகரித்தார் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திட்டங்களுக்கு ஆதரவளித்தார்.

ஆனால் அவரது முதல் பதவிக்காலத்தில் ஊழல் புகார்கள் எழுந்தன. மிக சமீபத்திய ஆண்டுகளில், கனடாவில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம் மற்றும் அவரது ஆட்சி மீதான விரக்தி காரணமாக அவரின் செல்வாக்கு குறைந்து வருகிறது.

கியூபெக், ஒன்டோரியோ மற்றும் அட்லாண்டிக் கனேடிய மாகாணங்களைச் சேர்ந்த டஜன்கணக்கான, ட்ரூடோவின் சொந்தக் கட்சி எம்.பி.க்கள் அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தியுள்ளனர். கருத்துக்கணிப்புகளில் பங்கேற்ற மூன்றில் இரு பங்கு பேர் ட்ரூடோ மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் மாதம் `Ipsos' தளத்திற்கு பதிலளித்தவர்களில் 26% பேர் மட்டுமே ட்ரூடோ பிரதமருக்கான சிறந்த தேர்வு என்று கூறினர். அந்த கருத்துக்கணிப்பில் கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரேவை விட 19 புள்ளிகள் பின்தங்கி இருந்தார் ட்ரூடோ.

கனேடிய அரசியல் வரலாறும் ட்ரூடோவுக்கு சாதகமாக இல்லை. கனடாவில் இதுவரை இரண்டு பிரதமர்கள் மட்டுமே தொடர்ந்து நான்கு முறை பதவி வகித்துள்ளனர்.

வரிகளைக் குறைப்பது, பண வீக்கத்தைச் சமாளிப்பது மற்றும் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாப்பது போன்ற வாக்குறுதியின் பேரில் 2022 இல் பொய்லிவ்ரே (Poilievre) தனது கட்சியின் உயர்மட்டத்திற்கு உயர்ந்தார்.

45 வயதான அவர் கோவிட் ஆணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஃப்ரீடம் கான்வாய் டிரக்கர்களுக்குப் பின்னால் ஆதரவைத் திரட்டினார் - இது ஒட்டாவா உள்ளிட்ட கனேடிய நகரங்களை ஸ்தம்பிக்கச் செய்த முற்றுகை ஆகும்.

கனடாவின் அடுத்த பிரதமர் டிரம்பின் அச்சுறுத்தலுக்கு தீர்வு காண வேண்டும்.

ஒழுங்கற்ற குடியேற்றம், சட்ட விரோத போதைப்பொருள் விற்பனை ஆகியவற்றுக்கு எதிராக, அமெரிக்காவுடனான தனது எல்லையை கனடா பாதுகாக்கவில்லை என்றால் கனேடியப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இது "கடுமையான சவால்" என முன்னாள் கனடா நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்டின் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் தனது வருடாந்திர பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு பதவி விலகினார்.

"நான் ட்ரூடோ அரசாங்கத்தின் உயர்மட்ட பொருளாதார ஆலோசகராக இருப்பதை அவர் விரும்பவில்லை என என்னிடம் தெரிவித்தார்" என்றும் கிறிஸ்டியா கூறினார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவிப்பு - என்ன காரணம்? - BBC News தமிழ்

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் ட்ரூடோ சகாப்தம் முடிவுக்கு என்ன காரணம்? - டிரம்ப் அச்சுறுத்தலா? உள்கட்சி மோதலா?

ட்ரூடோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ட்ரூடோ தான் பதவி விலகுவதை அறிவித்தார் கட்டுரை தகவல்
  • எழுதியவர்,மைக் வென்ட்லிங், நாடின் யூசிஃப், ஜான் சுட்வொர்த்
  • பதவி,பிபிசி நியூஸ்

கனடாவின் லிபரல் கட்சிக்குள் அதிகரித்துவரும் அழுத்தங்களைத் தொடர்ந்து, ஒன்பது ஆண்டுகாலமாக தான் வகித்து வந்த பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

தனது லிபரல் கட்சி ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை மட்டுமே தான் பதவியில் நீடிக்கப் போவதாகவும், மார்ச் 24 வரை நாடாளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படும் எனவும் ட்ரூடோ கூறினார்.

"அடுத்த தேர்தலில், மக்கள் விரும்பும் தலைவரை தேர்வு செய்வதற்கான உரிமை கனடாவுக்கு உள்ளது. உட்கட்சி மோதல்களை மட்டுமே கவனித்துக்கொண்டிருந்தால், என்னால் அந்த தேர்தலில் ஒரு நல்ல வேட்பாளராக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது." என திங்கட்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் ட்ரூடோ கூறினார்.

கனடாவில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நாடாளுமன்ற தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில், ட்ரூடோ மீதான கனேடியர்களின் அதிருப்தி அவரது கட்சியின் வெற்றிக்கு ஒரு பெரிய தடையாக மாறியுள்ளது.

 

'ட்ரூடோவின் ராஜினாமாவால் எதுவும் மாறவில்லை'

ஒட்டாவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இந்த முடிவைப் பற்றி, நேற்று இரவு உணவு உண்ணும்போது என் குழந்தைகளிடம் சொன்னேன்" என்று கூறினார்.

"ஒரு முறையான, நாடு தழுவிய போட்டி செயல்முறை மூலம் கட்சிக்கான அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலக விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.

லிபரல் கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறையைத் தொடங்க, இயக்குநர்கள் குழுவின் கூட்டம் இந்த வாரம் நடைபெறும் என்று கட்சியின் தலைவர் சச்சித் மெஹ்ரா கூறினார்.

"எங்கள் கட்சிக்கும் நாட்டிற்கும் பத்தாண்டுகளுக்கும் மேலாக தலைமை வகித்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நாடு முழுவதும் உள்ள லிபரல் கட்சியினர், மிகவும் கடமைப்பட்டுள்ளோம்." என தனது அறிக்கையில் சச்சித் மெஹ்ரா தெரிவித்திருந்தார்.

"ஒரு பிரதமராக, அவரது தொலைநோக்குப் பார்வை கனேடியர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியது," என்று அவர் கூறினார்.

குழந்தைகள் நலத் திட்டம் உள்பட ட்ரூடோ ஆட்சியில் நாட்டின் மருத்துவத்துறையில் கொண்டுவரப்பட்ட சில நலத்திட்டங்களை மேற்கோள் காட்டி இவ்வாறு அவர் தெரிவித்தார்.

"ட்ரூடோவின் ராஜினாமாவால் எதுவும் மாறவில்லை" என்று கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்ரே கூறினார்.

"லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமைப் பதவிகளுக்கு போட்டியிட்டவர்கள், 9 ஆண்டுகளாக ட்ரூடோ செய்த அனைத்தையும் ஆதரித்தனர். இப்போது அவர்கள் பெயரளவுக்கு தங்கள் தலைமையின் முகத்தை மாற்றி, அடுத்த நான்கு வருடங்களுக்கு, கனேடியர்களை ஏமாற்ற விரும்புகிறார்கள். அதாவது ஜஸ்டினைப் போலவே" என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பொய்லிவ்ரே தெரிவித்தார்.

லிபரல் கட்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 53 வயதான ட்ரூடோ பதவி விலக வேண்டுமென்ற அழுத்தங்கள் அவரது லிபரல் கட்சிக்குள் இருந்து எழுந்தன

ட்ரூடோவுக்கு எதிரான உள்கட்சி அழுத்தங்கள்

ட்ரூடோ பதவி விலக வேண்டுமென்ற அழுத்தங்கள் அவரது லிபரல் கட்சிக்குள் இருந்து எழுந்தன. டிசம்பரில் கனடாவின் துணைப் பிரதமரும் ட்ரூடோவின் நீண்ட கால நண்பருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் திடீரென ராஜினாமா செய்தபோது, இந்த அழுத்தம் அதிகரித்தது.

ஃப்ரீலேண்ட் தனது ராஜினாமா கடிதத்தில், "அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் கனேடிய பொருட்கள் மீதான வரி தொடர்பாக பல அச்சுறுத்தல்களை விடுக்கிறார். ஆனால் டிரம்ப் முன்வைக்கும் இந்த 'கடுமையான சவாலை' எதிர்கொள்ள ட்ரூடோ போதுமான அளவு பணியாற்றவில்லை" என்று குற்றம் சாட்டினார்.

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் உறுதியளித்துள்ளார். இது கனடாவின் பொருளாதாரத்தை கணிசமாக பாதிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

"ஃப்ரீலாண்ட் துணைப் பிரதமராகத் தொடர்ந்து செயல்படுவார் என்று நம்பினேன். ஆனால் அவரது முடிவு வேறுவிதமாக இருந்தது" என்று ட்ரூடோ செய்தியாளர்களிடம் கூறினார்.

டிரம்பின் இந்த அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவுடனான எல்லையில் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தப்போவதாக கனடா அறிவித்துள்ளது.

டிரம்ப் ஒரு ஆன்லைன் பதிவில், வரிகள் தொடர்பான அழுத்தம் ட்ரூடோவின் ராஜினாமாவுக்கு வழிவகுத்தது என்று கூறினார், மேலும் கனடாவை, 'அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்ற வேண்டும்' என்ற தனது வழக்கமான கருத்தை மீண்டும் கூறினார்.

"கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், வரிகள் குறையும். கனடாவைத் தொடர்ந்து சுற்றி வரும் ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலில் இருந்து கனடா முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும்," என்றும் டிரம்ப் அந்த பதிவில் கூறினார்.

டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் உறுதியளித்துள்ளார்

லிபரல் கட்சியின் அடுத்த தலைவர்

கனடாவில் 2019 முதல், லிபரல் கட்சி பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி செய்து வருகிறது.

ஃப்ரீலாண்டின் ராஜினாமாவைத் தொடர்ந்து, ஆட்சியைத் தக்கவைக்க லிபரல் கட்சிக்கு உதவிய பிற கட்சிகளின் ஆதரவை ட்ரூடோ இழந்தார். அதாவது இடதுசாரி சார்பு கொண்ட புதிய ஜனநாயகவாதிகள், மற்றும் கியூபெக் தேசியவாத கட்சியான பிளாக் கியூபெகோயிஸ் (Bloc Quebecois) போன்ற கட்சிகளின் ஆதரவை இழந்தார்

கனடாவின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி, கருத்துக்கணிப்புகளில் பல மாதங்களாக லிபரல் கட்சியை விட முன்னிலையில் உள்ளது. ஒரு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால், லிபரல் கட்சி கணிசமான தோல்வியை சந்திக்க நேரிடும் என்று கன்சர்வேடிவ் கட்சி கூறுகிறது.

இப்போது லிபரல் கட்சியினர் அடுத்த தேர்தலுக்கான தங்கள் கட்சியின் முகமாக இருக்க ஒரு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். இந்தத் தேர்தல் அக்டோபர் 20 அல்லது அதற்கு முன் நடைபெற வேண்டும்.

இந்த உட்கட்சி தேர்தல் வெளிப்படையாக நடைபெறும் என்றும், பிரதமர் அலுவலகம் இந்த செயல்முறையிலிருந்து முற்றிலும் விலகி இருக்கும் என்றும், லிபரல் கட்சி உறுப்பினர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை அவர்களிடமே வழங்கப்படும் என்றும் மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய பிளாக் கியூபெகோயிஸ் தலைவர் ஈவ்ஸ்-பிரான்சுவா பிளான்செட், 'லிபரல் கட்சியினர் தங்கள் புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்தவுடன், கனடாவுக்கான தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வேண்டும்' என்று பரிந்துரைத்தார்.

ட்ரூடோ சகாப்தத்தின் முடிவு

ட்ரூடோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ட்ரூடோவின் முதல் பதவிக்காலத்தில் ஊழல் புகார்கள் எழுந்தன

1970கள் மற்றும் 80களில் கனடாவின் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய முன்னாள் கனேடிய பிரதமர் பியர் ட்ரூடோவின் மகன் தான் ஜஸ்டின் ட்ரூடோ.

ஜஸ்டின் ட்ரூடோ யாரும் எதிர்பாராத சமயத்தில், 2015இல் தனது கட்சியை பெரும்பான்மை ஆதரவுடன் கனடாவின் அதிகாரத்திற்கு கொண்டு வந்தார்.

ட்ரூடோவின் அமைச்சரவையில் வழங்கப்பட்ட பாலின சமத்துவம் (இப்போதும் 50% பெண் உறுப்பினர்கள் என்ற அமைப்பே தொடர்கிறது), கனடாவில் பழங்குடி மக்களுடனான நல்லிணக்கச் செயல்பாடுகளில் முன்னேற்றம், தேசிய கார்பன் வரி கொண்டு வரப்பட்டது, குடும்பங்களுக்கு வரி இல்லாத குழந்தை நலத் திட்டத்தை அமல்படுத்துதல், மற்றும் கஞ்சாவை (Recreational cannabis) சட்டப்பூர்வமாக்குதல் போன்றவை அவரது புகழ்பெற்ற அரசியல் திட்டங்களில் அடங்கும்.

ட்ரூடோவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அசெம்பிளி ஆஃப் ஃபர்ஸ்ட் நேஷன்ஸ் (Assembly of First Nations) அமைப்பின் தேசியத் தலைவர் சிண்டி உட்ஹவுஸ் நெபினாக், பழங்குடியின பிரச்னைகளில் ட்ரூடோ முன்னெடுத்த நடவடிக்கைகளை பாராட்டினார்.

நெபினாக் வெளியிட்ட அறிக்கையில், "அசெம்பிளி ஆஃப் ஃபர்ஸ்ட் நேஷன்ஸ் அமைப்பின் முக்கியமான பிரச்னைகளைத் தீர்க்க பல அர்த்தமுள்ள நடவடிக்கைகளை ட்ரூடோ எடுத்துள்ளார்" என்று கூறினார்.

"இதில் இன்னும் நிறைய வேலைகள் எஞ்சியுள்ளன, ஆனால் ட்ரூடோவின் நடவடிக்கைகள் எதிர்கால முன்னேற்றத்திற்கான ஒரு அடித்தளத்தை அமைத்துள்ளன." என்று கூறினார் நெபினாக்.

ட்ரூடோவின் முதல் பதவிக்காலத்தில் ஊழல் புகார்கள் எழுந்தன. அதன் பிறகு கொரோனா பெருந்தொற்று காலத்தின் தடுப்பூசி தொடர்பான ஆணைகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளும் சில கனேடியர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டன.

இது 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 'ஃப்ரீடம் கான்வாய் டிரக்' (Freedom Convoy truck) போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இறுதியில் போராட்டக்காரர்களை அகற்ற அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தினார் ட்ரூடோ.

மிக சமீபத்திய ஆண்டுகளில், கனடாவில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம் மற்றும் ட்ரூடோவின் ஆட்சி மீதான விரக்தி காரணமாக அவரின் செல்வாக்கு குறைந்து வருகிறது. செப்டம்பர் மாதம் `Ipsos' தளத்திற்கு பதிலளித்தவர்களில் 26% பேர் மட்டுமே ட்ரூடோ பிரதமருக்கான சிறந்த தேர்வு என்று கூறினர்.

ஒட்டாவாவில், ட்ரூடோவின் ராஜினாமாவைக் கொண்டாடும் வகையில், ஒரு சிறிய எதிர்ப்பாளர்கள் குழு நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியே நடனமாடினர்.

ஆனால், அங்கிருந்த ஒரு நபர் 'ட்ரூடோவின் ஆட்சியில் அனைத்தும் சரியாகவே இருப்பதாக தான் கருதுவதாகக்' கூறினார்.

"நான் ஒரு தச்சன். நான் என் சொந்த வணிகத்தில் கவனம் செலுத்துகிறேன், எனக்கு வருமானம் வருகிறது, அதை வைத்து வாழ்க்கையை நடத்துகிறேன். எல்லாம் சரியாகவே இருக்கிறது" என்று பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஹேம்ஸ் கமர்ரா பிபிசியிடம் கூறினார்.

மற்றொரு கனேடியரான மரிஸ் காசிவி, இது ஒரு அரசியல் சகாப்தத்தின் முடிவு போல தோன்றுகிறது என்றார்.

ட்ரூடோ பதவி விலகியதற்கு வருத்தப்படுகிறீர்களா என்று அவரிடம் கேட்டதற்கு, "இல்லை, இதுதான் சரி" என்று பதிலளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

On 7/1/2025 at 06:12, ஏராளன் said:

ஜஸ்டின் ட்ரூடோ சகாப்தம் முடிவுக்கு என்ன காரணம்? - டிரம்ப் அச்சுறுத்தலா? உள்கட்சி மோதலா?

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

கனடா தமிழர்களுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பொங்கல் வாழ்த்து உரை - BBC  News தமிழ்

வருகின்ற பொங்கலுக்கு, ஜஸ்டின் ட்ரூடோ... வேட்டியுடன் வருவாரா, இல்லையா. 

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் நீடிக்கும் அரசியல் கொந்தளிப்பு – தலைமை பதவி போட்டியில் இருந்து அனிதா விலகல்

கனடாவில் நீடிக்கும் அரசியல் கொந்தளிப்பு – தலைமை பதவி போட்டியில் இருந்து அனிதா விலகல்

கனடாவில் அரசியல் கொந்தளிப்பு நீடித்துள்ள நிலையில், லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அந்த கட்சியின் முக்கிய உறுப்பினரும், அமைச்சருமான அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் பதவி விலகினார். அவரின் பதவி விலகளுக்கு பின்னர் லிபரல் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியெழுந்துள்ளது.

இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் அடுத்த தலைவராக தெரிவுசெய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தலைமைப் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

அனிதா ஆனந்த் ட்ரூடோவின் மாற்றாகக் கருதப்பட்டார். இந்நிலையில், லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என்று அனிதா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அடுத்த தேர்தல் வரை தனது தொகுதி மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் சேவை செய்வேன் என்று கூறிய அவர், தனது எதிர்காலப் பயணத்தைப் பற்றியும் யோசித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் அறிவித்தார். தமிழ் தந்தை மற்றும் பஞ்சாபி தாயின் மகளான அனிதா, ட்ரூடோவின் அமைச்சரவையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

அவர் பாதுகாப்பு மற்றும் பொது சேவை போன்ற அமைச்சகங்களையும் வகித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சராக, ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு அனிதா தலைமை தாங்கினார்.

 

https://oruvan.com/anita-anand-withdraws-from-leadership-race/

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை

 ஒருக்கால் திரும்ப ஓக்வில் தொகுதியில் போட்டியிட்டுப் பாக்கிறது. மக்கள் செருப்பைக் கழற்றி அடிப்பார்கள்!

அதோட பாவம் சங்கிகள், கனடாவுக்குள் ஆயிரம் பிரச்சினை இருக்கலாம், ஆனால் ஒர் இந்தியனை ஆளவிடமாட்டம்!✌️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.