Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லொஸ் ஏஞ்சல்ஸ் அருகே மீண்டும் காட்டுத்தீ; 9,400 ஏக்கருக்கு பரவியது  

Published By: DIGITAL DESK 3   23 JAN, 2025 | 11:37 AM

image
 

அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் லொஸ்ஏஞ்சல்ஸின் வடப்பகுதியில் புதன்கிழமை (23) புதிதாக காட்டுத்தீ பரவியுள்ளது.

காட்டுத் தீ  பலத்த காற்றினால் பற்றைக் காடுகளில் 9,400  ஏக்கர் நிலப்பரப்புக்கு (32 சதுர கிமீ) வேகமாக பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் 19,000 க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கட்டாயமாக வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

லொஸ்ஏஞ்சல்ஸின் பெருநகரப் பகுதியில் ஏற்பட்ட இரண்டு பாரிய காட்டுத்தீகளை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்பு வீரர்களை மீண்டும்  வடக்கே சுமார் 50 மைல் (80 கிமீ) தொலைவில் உள்ள பாரிய காட்டுத்தீயை அணைக்க வரவழைக்கப்பட்டுள்ளனர்.

5.jpg

லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியைச் சூறையாடிய இரண்டு பாரிய காட்டுத்தீகளில் ஒன்றான ஈடன் தீ மண்டலத்தின் அரைவாசி அளவுக்கு புதனன்று ஒரு சில மணிநேரங்களில் காட்டுத் தீ பரவியுள்ளது.

காஸ்டிக் பகுதியில் மொத்த சனத்தொகையில் சுமார் 19,000 பேரை கட்டாயம் வெளியேற்ற வேண்டும் என்கின்ற உத்தரவுகளின் கீழ் இருப்பதாக லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. 

மேலும் 16,000 பேர் வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சான் கேப்ரியல் மலையில் உள்ள  700,000 ஏக்கர் (2,800-ச.கி.மீ) தேசிய பூங்கா மூடப்பட்டுள்ளது.

வேகமாக பரவும் தீயினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தெற்கு கலிபோர்னியாவைச் சுற்றி சுமார் 1,100 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக வள வள மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு திணைக்களங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/204640

  • Replies 105
  • Views 4.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • விசாரித்தமைக்கு நன்றி! நான் கிழக்குக் கரையில் (எங்களுக்கு வேற பிரச்சினை, கடுங்குளிர், கூதல் காற்று, ஆனால், பழகிய காலநிலை தான்). மருதர், தியா, நிகே ஆகியோரும் ஆபத்தில்லாத "பனிவனத்தில்" ! யூட் எங்கே

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    இப்போது தீ பிடித்திருக்கும் இடங்கள் மிகவும் பணக்கார இடம் என்கிறார்கள். இப்போது தான் மகளுடன் கதைத்தேன்.அவர்களது இடத்திலிருந்து வேறு இடங்களுக்கு நகருமாறு அறிவுறுத்தியுள்ளனர். அவசர அவசரமாக தே

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    அடிக் கணக்காக பனி கொட்டிக்கிடக்க நீச்சல் தடாகத்தில் ஈழப்பிரியன் குடும்பம். இதுவும்  கலிபோர்ணியா தான்.

  • கருத்துக்கள உறவுகள்

@ரசோதரன் @நீர்வேலியான் என்ன தான் நடக்குது தென் கலிபோர்ணியாவில்?

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஈழப்பிரியன் said:

@ரசோதரன் @நீர்வேலியான் என்ன தான் நடக்குது தென் கலிபோர்ணியாவில்?

எரியுது, எரியுது....................... வேற என்ன சொல்வது, அண்ணா.

இப்பொழுது இங்கு நடுக்குளிர் காலம், ஆனால் இன்றைய வெப்பநிலை 27 C அல்லது 81 F ................🫣.

இந்த இடத்திலிருந்து 10 மைல்கள் தெற்குப் பக்கமாக சில நண்பர்கள் இருக்கின்றார்கள். தங்களின் பகுதிக்கு இன்னும் ஆபத்தில்லை என்று நேற்றிரவு சொன்னார்கள்................

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

@ரசோதரன் @நீர்வேலியான் என்ன தான் நடக்குது தென் கலிபோர்ணியாவில்?

அண்ணை,

வழமை போல அதுபாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் எரியுது. என்ன இந்தமுறை வித்தியாசமாக நிறைய குடியிருப்புகளை தாக்கியுள்ளது. அதுவும் பணக்காரர்களின் இடங்களை தாக்கியுள்ளது. அதனால் முக்கியத்துவம் அதிகமாகியுள்ளது. இது கிட்டத்தட்டஆயிரம் வருடத்துக்கு ஒருமுறை நடக்கும் Fire என்று வகைப்படுத்தியுள்ளார்கள். நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம், நேற்று பக்கத்தில் சிறிய Fire ஒன்று உருவாக்கி, control பண்ணிவிட்டார்கள். ஏற்கனவே பல இன்சூரன்ஸ் கம்பெனிகள் இனி கலிபோர்னியாவில் சேவை செய்வதில்லை என்று விலகிவிட்டார்கள், வரும் காலத்தில் விட்டு இன்சூரன்ஸ் நன்றாக ஏறப்போகிறது

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நீர்வேலியான் said:
On 23/1/2025 at 09:38, ரசோதரன் said:

 

,

தலைவர் துக்கம் விசாரிக்க வருகிறாராம்.

வரவேற்க தயாராக இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

தலைவர் துக்கம் விசாரிக்க வருகிறாராம்.

வரவேற்க தயாராக இருங்கள்.

🤣................

தல இந்த தடவை கொஞ்சம் வித்தியாசமாக நடக்குது............. சில feasible studies செய்யச் சொல்லி தல தன்னுடைய குரூப்பிற்கு கட்டளை போட்டிருக்குதாம்........... எலான் மஸ்க் வேற மனிதர்களின் தலைக்குள் ஒரு சிப் வைக்கப் போகின்றேன் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்................😜.  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.