Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பொது வேட்பாளர் திரு.பா. அரியநேத்திரன் அவர்களைக் கட்சியிலிருந்து விலக்க முற்படுவது தொடர்பான – கண்டன அறிக்கை!

Vhg ஜனவரி 11, 2025

1000414901.jpg

தமிழ்ப் பொது வேட்பாளர் திரு. பா.அரியநேத்திரன் அவர்களைக் கட்சியிலிருந்து விலக்க முற்படுவது தொடர்பான – கண்டன அறிக்கை!

தமிழ் தேசிய அரசியல் வரலாற்றில், பல தசாப்தப் பாரம்பரியம் கொண்ட மூத்த தமிழ் கட்சிகளில் ஒன்றான, தமிழரசுக் கட்சியின் சமகாலச் செயற்பாடுகள், கட்சியின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு மோசமடைந்துள்ளது. தமிழரசு கட்சி எந்தத் தனி நபர்களின் சொத்தும் கிடையாது. இது ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட முதுபெருங்கட்சியாகும். கடந்த பல மாதங்களாக இந்தக் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் சிதைவடைந்து, சில நபர்களின் குழுநிலைவாதச் சர்வாதிகாரக் கையாள்கை தலைதூக்கியுள்ளது. இது போன்ற செயற்பாடுகள் எமக்கும், தமிழரசுக் கட்சியை நேசிக்கும் புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் மிகுந்த வேதனையைத் தோற்றுவித்துள்ளது.

முக்கியமாக, தமிழ் தேசிய கொள்கையின் அடிப்படையில் கடந்த சனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக 83 குடிசார் அமைப்புகள், 7 தமிழ் தேசியக் கட்சிகள், அனைத்துப் புலம்பெயர் அமைப்புகள், வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், முன்னாள் போராளிகள், தமிழீழ மக்கள் எல்லோரும் இணைந்து, தமிழ் தேசியக் கொள்கையின் அடிப்படையில், கடந்த சனாதிபதித் தேர்தலில், தமிழ் பொது வேட்பாளராகத் திரு.பா. அரியநேத்திரன் அவர்களை முன்நிறுத்தி, அந்த கொள்கைக்காக 2,26,343 தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று, தமிழ் தேசிய உறுதிப்பாட்டை நிரூபித்த, திரு.பா. அரியநேத்திரன் அவர்களை, 28/12/2024 அன்று நடைபெற்ற, தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் கட்சியில் இருந்து உத்தியோகபற்றற்ற முறையில் இடைநிறுத்தலாம் அல்லது விலக்கலாமெனக் கட்சியின் பேச்சாளர் திரு. சுமந்திரன் அறிவித்திருப்பது, தமிழரசுக் கட்சி, தான் வகுத்துக் கொண்ட, தமிழ் தேசியக் கொள்கைக்கு முரணாகச் செயற்படுகின்றதா? என்ற வலுவான சந்தேகத்தை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.

அத்தோடு, தமிழ் தேசியக் கொள்கை என்பது, இலங்கைத் தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கும்போது தந்தை செல்வா முன்வைத்த சமஷ்டிக் கொள்கையாகும். தமிழ் தேசியக் கொள்கையின் அடிப்படையில்தான், தமிழ் பொதுவேட்பாளர் சனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு, காத்திரமான வாக்குகளைப் பெற்றிருந்தார். இதற்கு முரணாக, ஈழத் தமிழினத்தின் உரிமைகளை முன்னிறுத்தாமல், சலுகைகளுக்காக காலங்காலமாக இனவாதச் சிங்களக் கட்சிகளை, ஆதரிப்பதும், அதனை ஆதரிக்காத தமிழ்த் தேசியவாதிகளை ஓரங்கட்ட விளைவதும், வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். முதலில் தமிழரசுக் கட்சியின் அடிப்படைக் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாக, மத்திய குழுவைச் செயற்படவைக்கும், உத்தியோகத்தர் சபை உறுப்பினர்களில் சிலரைக் கட்சியிலிருந்து விலக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்தோடு தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் பேச்சாளருமாகிய திரு.ம. சுமந்திரன் அவர்களால் கட்சியில் குழு நிலைவாதச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை நாம் அவதானித்து வருகின்றோம். முதல் கட்டமாக தனது துதிபாடிகளை வைத்து, கட்சியின் செயற்பாடுகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து, கட்சியின் புதிய தலைமைத்துவத்தையும், கட்சியின் பொதுக் குழுவையும் கூட்ட முடியாதவாறு முடக்கினார். பின்னர் தமக்கேற்றவாறு மாவட்டக் கிளைகளை மாற்றியமைத்தார். மத்திய குழுவில் தான் விரும்புவதை அமுல்படுத்துவதற்குச் சாதகமான அறுதிப் பெரும்பான்மையை திட்டமிட்டுப் பெறுவதற்காக, மத்திய குழுக் கூட்டங்களுக்குத் தமக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் அறிவித்துவிட்டு, தான் எதிர்பார்த்தவாறு சர்வாதிகாரமாகக் கட்சியை வழிநடாத்தி வருகின்றார். இவற்றைத் தட்டிக் கேட்பதற்கு திராணியற்றவர்களாக, தற்போதைய பதில் தலைவர் திரு. சி.வி.கே.சிவஞானம் அவர்களும், தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களும் இருப்பது, இந்தக் கட்சியின் வருங்கால இருப்புத் தொடர்பான பலத்த அவநம்பிக்கையை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.

spacer.png

spacer.png

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

திருமதி.ச.அசோகா

பொறுப்பாளர்

தமிழீழ அரசியல்துறை

அனைத்து நாடுகள்

https://www.battinatham.com/2025/01/blog-post_30.html

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

தமிழ்ப் பொது வேட்பாளர் திரு.பா. அரியநேத்திரன் அவர்களைக் கட்சியிலிருந்து விலக்க முற்படுவது தொடர்பான – கண்டன அறிக்கை!

இந்தக் கட்டுரையை நான் வாசிக்கப் போவதில்லை. தலையங்கத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

ஒரு கட்சியின் மத்திய குழு எடுத்த தீர்மானத்துக்கு எதிராகச் செயற்பட்ட ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பது அந்தக் கட்சியின் முடிவு.  தலையிட வெளியாருக்கு என்ன உரிமை இருக்கிறது?

புலிப்படம் போட்டு பிரசுரம் வந்திருப்பதால் நானும் ஒன்றைச் சொல்லலாம். யேர்மனியில் நான் வாழும் மாநிலத்தில் யாராவது கோயில் கட்டினால், இங்குள்ள புலிகளின்(?) செயற்பாட்டாளர்கள் தங்களுடைய ஆட்களை அனுப்பி உறுப்பினர்களாக்கி, செயற்பாட்டுக்குழுவில் இடம் பெற வைத்து, வாக்கெடுப்பில் தலைவரையே மாற்றி கோயிலையும் தம் வசமாக்கி விடுவார்கள். இவ்வாறான செயற்பாடுகள் கோவில்களுக்குள் மட்டும் என்றில்லை. கட்சிகளுக்குள்ளும் செய்வார்கள். ‘சங்கு’ ,’பார்’ எல்லாம் அதற்குள் அடங்கி இருக்கலாம்.

 இது பற்றி பஞ்ச் அவர்களுக்கு என்னைவிட நன்கு தெரியும். விரும்பினால் எழுதட்டும்.

ஆக இவர்கள் வந்து அறிக்கை விட்டு என்னவாகப் போகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Kavi arunasalam said:

நன்றாக பச்சை மட்டையால் வாங்கிக்கொண்டவரா நீங்கள்??

எதற்கெடுத்தாலும் ஜேர்மனியில் புலிகள் என்று.....??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

நன்றாக பச்சை மட்டையால் வாங்கிக்கொண்டவரா நீங்கள்??

எதற்கெடுத்தாலும் ஜேர்மனியில் புலிகள் என்று.....??

பிரான்ஸில் பச்சை மட்டை அடி கொடுக்க விசுகு ஐயா ஏவிவிட்டால் சாத்த ஆட்கள் இருப்பதுபோல ஜேர்மனியிலும் இருக்கின்றார்களா?🤪

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

அத்தோடு தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் பேச்சாளருமாகிய திரு.ம. சுமந்திரன் அவர்களால் கட்சியில் குழு நிலைவாதச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை நாம் அவதானித்து வருகின்றோம். முதல் கட்டமாக தனது துதிபாடிகளை வைத்து, கட்சியின் செயற்பாடுகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து, கட்சியின் புதிய தலைமைத்துவத்தையும், கட்சியின் பொதுக் குழுவையும் கூட்ட முடியாதவாறு முடக்கினார். பின்னர் தமக்கேற்றவாறு மாவட்டக் கிளைகளை மாற்றியமைத்தார். மத்திய குழுவில் தான் விரும்புவதை அமுல்படுத்துவதற்குச் சாதகமான அறுதிப் பெரும்பான்மையை திட்டமிட்டுப் பெறுவதற்காக, மத்திய குழுக் கூட்டங்களுக்குத் தமக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் அறிவித்துவிட்டு, தான் எதிர்பார்த்தவாறு சர்வாதிகாரமாகக் கட்சியை வழிநடாத்தி வருகின்றார். இவற்றைத் தட்டிக் கேட்பதற்கு திராணியற்றவர்களாக, தற்போதைய பதில் தலைவர் திரு. சி.வி.கே.சிவஞானம் அவர்களும், தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களும் இருப்பது, இந்தக் கட்சியின் வருங்கால இருப்புத் தொடர்பான பலத்த அவநம்பிக்கையை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.

Congrats Congratulations Sticker - Congrats Congratulations Clap - Discover  & Share GIFs

உண்மையை, உரக்கச்  சொன்ன அறிக்கை. பாராட்டுக்கள். 👍

செல்வநாயகம் தோற்றுவித்த 75 வருட பாரம்பரியம் மிக்க  தமிழரசு கட்சியை, 
பொதுத்  தேர்தலில் படு தோல்வி அடைந்த..  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  சுமந்திரன், 
குழி தோண்டிப் புதைக்க முதல்.. அக்கட்சியில் உள்ளவர்கள்  விழித்துக் கொள்வது நல்லது. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

பிரான்ஸில் பச்சை மட்டை அடி கொடுக்க விசுகு ஐயா ஏவிவிட்டால் சாத்த ஆட்கள் இருப்பதுபோல ஜேர்மனியிலும் இருக்கின்றார்களா?🤪

உங்களுக்கு ஒரு வரலாற்றை சொல்கிறேன்.

90 களில் நானும் இன்னொருவரும் (கேணல் பானுவின் தம்பி) பிரான்ஸிலுள்ள ஒரு கிராமத்திற்குள் முதன்முதலாக உள்ளிடுகிறோம். அங்கே ஈழத் தமிழர்களும் வாழ்கின்றனர். அங்கே ஒரு சங்கம் இருக்கிறது. அச்சங்கத்தில் ஒரு சட்டம் இருக்கிறது.  புலிகளின் பிரசுரங்கள் மற்றும் வெளியீடுகள் இங்கே வரக்கூடாது என்று. 3 மாதத்தில் அங்கே தலைவர் செயலாளர் மற்றும் பொருளாளர்களே அனைத்தையும் அலுவலகத்தில் வந்து எடுத்துச் சென்று அங்கே வைத்து விடுவார்கள். இது 2004க்கு முன்பான விசுகு. 

  • கருத்துக்கள உறவுகள்

குப்பை அறிக்கை.  ஒரு லப்ரொப் இருந்தால் நானும் விபு க்களின் புலனாய்வுத் துறையாகிவிடுவேன். 🤣

உண்மையான புலிகள் ஒரு போதும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்காகவோ அல்லது, கட்சி நபருக்காகவோ இப்படி பரிந்துரைப்பதில்லை.

ஆனால் புலிகளின் வளத்தையும் பணத்தையும் கொள்ளை அடித்து கொளுத்த சருகுப் புலிகள் தான் இவ்வாறான வேலைகளை செய்வர்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kavi arunasalam said:
20 hours ago, கிருபன் said:

தமிழ்ப் பொது வேட்பாளர் திரு.பா. அரியநேத்திரன் அவர்களைக் கட்சியிலிருந்து விலக்க முற்படுவது தொடர்பான – கண்டன அறிக்கை!

இந்தக் கட்டுரையை நான் வாசிக்கப் போவதில்லை. தலையங்கத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

ஒரு கட்சியின் மத்திய குழு எடுத்த தீர்மானத்துக்கு எதிராகச் செயற்பட்ட ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பது அந்தக் கட்சியின் முடிவு.  தலையிட வெளியாருக்கு என்ன உரிமை இருக்கிறது?

👍

மற்றது   கட்சி கட்டுபாட்டை மீறி ஜனாதிபதி வேட்பாளராக வரவதற்கு ஆசைபட்ட அரியநேத்திரனுக்கு கட்சியை விட்டு தானாகவே விலகுகின்ற குறைந்த பட்ச நேர்மை வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

 அரசியல் துறை என்று கூறுகிறார்கள் அடுத்த கட்சியின் உள்விவகாரவ்களில் தலையிடுவது தவறு என்ற அடிப்படை அரசியல் அறிவு கூட இல்லைப்போலும்.  அரசியல் என்றால் அடாவடியில் ஈடுபடுவது தான் என்று கற்றுக்கொண்ட கூட்டம் தானே. வச்சுக்கோண்டா வஞ்சகம் செய்கிறார்கள். 

 அரசியல் துறை என்று இணையத்தில் அனேமதயங்களாக குரைத்து கொண்டு நிற்பவர்கள் நிச்சயமாக போராட்டத்திற்காக மக்களின் பணத்தை  ஆட்டையைப் போட்ட மாபியா கும்பலாக தான் இருக்கும். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.