Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Eppothum Thamizhan said:

பெரியார் ஒரு பகுத்தறிவுவாதி, அவரது கருத்துக்கள் முற்போக்கானவை என்றால் பெரியாரின் நாளிதழ்களான குடிஅரசு, விடுதலை போன்றவற்றை அரசுடைமையாக்கி எல்லோருக்கும் சென்றடையக்கூடியதாக செய்தால் பெரியாரைப்பற்றி எல்லோரும் அறிந்து கொள்வார்களே! ஏன் திராவிட கட்சிகள் செய்யவில்லை? 

இதற்கு ஏற்கனவே இதே திரியில் ஜஸ்டின் பதில் அளித்திருக்கிறார். படித்து பார்க்கவும். இப்போது திராவிடர் கழகம் பதிப்புரிமையை வைத்திருக்கிறது, அரசுடைமையாக்கினால் யார் வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம். அவ்வளவு தான் வேறுபாடு

  • Replies 544
  • Views 26k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    முதலில், நீங்கள் கருத்துகளை பகிர்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் எழுத்துநடை பிடித்திருக்கின்றது, நாதமுனி. வேறு பல கருத்துகளுக்கும் இடம் கொடுத்து, சொற்களால் அடிக்காமல் எழுதியுள்ளீர்கள். மிக்கநன்றி.

  • விசுகு
    விசுகு

    யாழ் கள உறவுகளே... வணக்கம்  இவர் போன்றவர்கள் இங்கே வருவதே இது போன்ற குப்பைகளை இங்கே கொட்டவும் அதனைக் கொண்டு எம்மிடையே மேலும் மேலும் பிளவுகளையும் ஒருமித்து நிற்க முடியாத அளவுக்கு சிக்கல்களை ஏ

  • சீமான் ஈழத்தமிழர்களின் போராட்டத்தையும், நடத்திய இயக்கத்தையும் வைத்து தன் பிழைப்பை நடத்தாமல் இருந்தாலே யாரும் அவரையும், ஆதரவாளர்களையும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வர். அது தொடரும் வரை இது போன்ற செய்திக

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

கறிக்கான விளக்கமும் முன்னர் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கேள்விக்கு மட்டும் அல்ல, இதை போல பல கேள்விகளுக்கு பதில் தரமுடியாத….

அது என்ன….ஆ…..நிறைகுடம் நீங்கள் என்பது யாழ் அறிந்ததுதான்🤣.

இனி என்ன எஸ்சாகிவிட்டு நிர்வாகத்தின் மீது பழியை போடவேண்டியதே🤣.

பிகு

நீங்கள் இங்கே எனக்கான பதிலில் ஜஸ்டின் அண்ணாவை இழுத்து குழுவாதம் ஏற்படாதா என ஏங்குவது புரிகிறது 🤣.

வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.

கொஞ்ச நேரம் நேர்த்தியாக கருத்தாடுனீர்கள்.

இதோ மரமேறி விட்டீர்கள். 🥹

நான் பதில் தர முடியாது என்று சொல்லவில்லை. நேரம் தேவை என்றேன்.

அப்புறம்.... அதே உருட்டு உடான்சு தானா?

குழுவாதமும் கத்தரிக்காயும்.... அதனை நீங்கள் செய்வதாகவே தெரிகிறது.

நான் இங்கு, பையனுக்கோ, ஓணாண்டிக்கோ வணக்கம் வைக்கவில்லை. ஆனால், ஜஸ்டின் வரவில்லை என்றவுடன் என்மேல் பாய்கிறீர்களா என்று குழு சேர்த்தது நீங்கள்.

நாளை பயணம்.... முன்பே சொன்னேன்!!

சரி... சந்திப்போம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Eppothum Thamizhan said:

தான் தட்டச்சில் ஏற்றவேண்டும் என்பதற்காக எழுத்துக்களை இலகுவாக்கினாரே ஒழிய உச்சரிப்பு, மொழியை மாற்றவில்லையே. அதற்கு ஏன் காட்டுமிராண்டி மொழி என்று கூற வேண்டும்.  இத்தனைக்கும் எழுத்து உருமாற்றத்தை முதலில் அறிமுகப்படுத்தியது,  கொண்டுவந்தது குருசாமி என்பவர். வரலாறு தெரியாவிட்டால் படித்துவிட்டு வந்து எழுதுங்கள். நாம் இங்கு மனிதர் பேசும் பாஷையை பற்றி விவாதிக்கிறோம் மிருக பாஷையை அல்ல, நீங்கள் எங்களுக்கு பாடம் எடுக்க  .

கொஞ்சம் பொறுங்கோ: இதற்கு முதல் "மனித பாஷை" பற்றி உங்களுக்கு நான் பாடம் எடுக்கவேயில்லை என்கிறீர்களா அல்லது அந்த நேரம் நீங்கள் மிருகமாக இருந்தீர்களா😎?

24 minutes ago, Eppothum Thamizhan said:

பெரியார் ஒரு பகுத்தறிவுவாதி, அவரது கருத்துக்கள் முற்போக்கானவை என்றால் பெரியாரின் நாளிதழ்களான குடிஅரசு, விடுதலை போன்றவற்றை அரசுடைமையாக்கி எல்லோருக்கும் சென்றடையக்கூடியதாக செய்தால் பெரியாரைப்பற்றி எல்லோரும் அறிந்து கொள்வார்களே! ஏன் திராவிட கட்சிகள் செய்யவில்லை? 

"No copyright" என்றால் என்ன😂? இதை விளங்கிக் கொள்ளத் தானே செய்தி இணைப்பைத் தந்தேன்? இதை விட சீமான் தம்பிகளுக்கு எப்படி விளக்குவது?

"என்னாது? காப்பி ரைற்றா?? அப்படீல்லாம் கிடையாது, நாம எப்பவும் ரீ தான்😂!

22 minutes ago, Nathamuni said:

இந்த மாதிரி, கிறுக்குத்தனமான அலப்பறைகளால் தான் பதில் தர விரும்புவதில்லை.

நீங்களும் இன்னும் அதே பழசு தான்.

நல்லா இருங்கள். சந்திப்போம்.

இதில் கிறுக்குத் தனம் எங்கே இருக்கிறது? பதில் உங்களிடம் இல்லை, எனவே தரவில்லை😎! இது யாழுக்கும் புதிசில்லை, உங்களுக்கும் புதுமையில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

இவர் வாழும் காலத்தில் யாருமே பெரிதாக ஈழத்தில் தூக்கிப் பிடிக்கவில்லை.

இங்கே யாழ்களத்தில் தூக்கிக் காவடி ஆடுவது சிரிப்புத் தான். 

பெரியார் தமிழ் நாட்டு அரசியலையே பேசினார் , ஈழ அரசியலை பேசியதாக நான் படிக்கவீல்லை. அதனால் ஈழ அன்றாட அரசியலுக்கு யாரும் தூக்கி பிடிக்கவில்லை அதற்கான அவசியமும் இல்லை. அரசியலை தாண்டி அவரது சமூக கருத்துகள் பலரை கவர்ந்திருக்கிறது, தேடி படித்தீர்கள் என்றால் தெரியும். உதாரணத்திற்கு ஒன்று https://www.tamilnet.com/art.html?catid=13&artid=38148.

சிலநாட்கள் முன்னர் ஒரு காணொளி பார்த்தேன், அது புலிகளின் ரீவியில் வந்த ஒரு மாவீரர் குடும்பத்தை பற்றிய செய்தி குறிப்பு. வீட்டின் முகப்பிலேயே பெரியார் படம் வைத்திருந்தார்கள். மீண்டும் பார்த்தால் இங்கே பதிவிடுகிறேன்.

யாரும் விமர்சனத்திற்கு அப்பார் பட்டவர்கள் அல்ல, ஆனால் அது சரியானதாக இருக்க வேண்டும். சமீபத்தில் யாழ்ப்பாண கலாச்சார மையத்தின் பெயர் மாற்றதிற்கு எதிர்ப்பு கிளம்பியது. அதை சில நாட்கள் கழித்து திருவள்ளுவருக்கு யாழ்பாணத்தினர் எதிர்ப்பு என்று விமர்சித்தால் எப்படி தவறானதோ அப்படிதான் இன்று வரும் பெரும்பாலான பெரியார் மீதான விமர்சனங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

இதில் கிறுக்குத் தனம் எங்கே இருக்கிறது? பதில் உங்களிடம் இல்லை, எனவே தரவில்லை😎! இது யாழுக்கும் புதிசில்லை, உங்களுக்கும் புதுமையில்லை!

கிறுக்குத்தனமான செயல்படுவர்களுக்கு, தம் கிறுக்குத்தனம் தெரியாது என்று நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா?

உங்களைப் பற்றி யாழறீயும், நீங்கள் அறிய சந்தர்ப்பம் இல்லை!

😢

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

கொஞ்ச நேரம் நேர்த்தியாக கருத்தாடுனீர்கள்.

இதோ மரமேறி விட்டீர்கள். 🥹

நான் பதில் தர முடியாது என்று சொல்லவில்லை. நேரம் தேவை என்றேன்.

அப்புறம்.... அதே உருட்டு உடான்சு தானா?

குழுவாதமும் கத்தரிக்காயும்.... அதனை நீங்கள் செய்வதாகவே தெரிகிறது.

நான் இங்கு, பையனுக்கோ, ஓணாண்டிக்கோ வணக்கம் வைக்கவில்லை. ஆனால், ஜஸ்டின் வரவில்லை என்றவுடன் என்மேல் பாய்கிறீர்களா என்று குழு சேர்த்தது நீங்கள்.

நாளை பயணம்.... முன்பே சொன்னேன்!!

சரி... சந்திப்போம்.

சரி, சரி ஓரமாய் நிண்டு விளையாடுங்கோ…

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:
 
நாதம், சம்பந்தமில்லாமல் அலட்டிக் கொண்டிருக்கிறீர்கள். கீழே உள்ள பட்டியலில் மதம் மாறி, உருமறைப்புச் செய்த தமிழர்/கள் யார்?

 Sirimavo Bandaranaike

  Ranasinghe Premadasa        
  Ranil Wickremesinghe        
  Dudley Senanayake        
  Ratnasiri Wickremanayake        
  D. M. Jayaratne        
  D. S. Senanayake        
  Mahinda Rajapaksa        
  Dingiri Banda Wijetunga        
  S. W. R. D. Bandaranaike        
  Dinesh Gunawardena        
  John Kotelawala        
  J. R. Jayewardene        
  Wijeyananda Dahanayake        
  Harini Amarasuriya        
  Chandrika Bandaranaike

@Nathamuni ஒவ்வொன்றாக தாவி கொண்டிருக்கிறீர்கள், இதற்கான பதிலுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

கிறுக்குத்தனமான செயல்படுவர்களுக்கு, தம் கிறுக்குத்தனம் தெரியாது என்று நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா?

உங்களைப் பற்றி யாழறீயும், நீங்கள் அறிய சந்தர்ப்பம் இல்லை!

😢

அறியும் என்பது சரி, ஜஸ்ரின் காவாலி தான், அவனை விடுங்கள்! யார் அந்த உருமறைத்து ஆட்சி பெற்ற சிறி லங்காத் தமிழர்? மொத்தம் ஒரு 25 பேர் தான் பட்டியலில்? யார் அவர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, செவ்வியன் said:

பெரியார் தமிழ் நாட்டு அரசியலையே பேசினார் , ஈழ அரசியலை பேசியதாக நான் படிக்கவீல்லை. அதனால் ஈழ அன்றாட அரசியலுக்கு யாரும் தூக்கி பிடிக்கவில்லை அதற்கான அவசியமும் இல்லை. அரசியலை தாண்டி அவரது சமூக கருத்துகள் பலரை கவர்ந்திருக்கிறது, தேடி படித்தீர்கள் என்றால் தெரியும். உதாரணத்திற்கு ஒன்று https://www.tamilnet.com/art.html?catid=13&artid=38148.

சிலநாட்கள் முன்னர் ஒரு காணொளி பார்த்தேன், அது புலிகளின் ரீவியில் வந்த ஒரு மாவீரர் குடும்பத்தை பற்றிய செய்தி குறிப்பு. வீட்டின் முகப்பிலேயே பெரியார் படம் வைத்திருந்தார்கள். மீண்டும் பார்த்தால் இங்கே பதிவிடுகிறேன்.

யாரும் விமர்சனத்திற்கு அப்பார் பட்டவர்கள் அல்ல, ஆனால் அது சரியானதாக இருக்க வேண்டும். சமீபத்தில் யாழ்ப்பாண கலாச்சார மையத்தின் பெயர் மாற்றதிற்கு எதிர்ப்பு கிளம்பியது. அதை சில நாட்கள் கழித்து திருவள்ளுவருக்கு யாழ்பாணத்தினர் எதிர்ப்பு என்று விமர்சித்தால் எப்படி தவறானதோ அப்படிதான் இன்று வரும் பெரும்பாலான பெரியார் மீதான விமர்சனங்கள்.

பெரியார் எமக்கு தேவையில்லை. அவர் முரண்பாடுகளின் மூட்டை.

எமக்கு செயல்வீரன் பிரபாகரன் போதும்! 👍

  • கருத்துக்கள உறவுகள்

@Nathamuni

ஓணாண்டி, பையன் வேற டீம்.

நீங்கள் வேற டீம்.

நீங்கள் #team Sri Lanka 🤣.

உங்களுடன் இன்னும் ஒருவர்தான் சேர்த்தி😎

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

சரி, சரி ஓரமாய் நிண்டு விளையாடுங்கோ…

யாரோட 🤣🤣🤣

வாங்க ஓரமா போவம்!!!😜

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

யாரோட 🤣🤣🤣

வாங்க ஓரமா போவம்!!!😜

உங்களை போல அன்றி, நான் ஆண்களுடன் ஓரம்போவதில்லை🤣

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

பிகு

ஓணாண்டி, பையன் வேற டீம்.

நீங்கள் வேற டீம்.

நீங்கள் #team Sri Lanka 🤣.

உங்களுடன் இன்னும் ஒருவர்தான் சேர்த்தி😎

உங்களது ரீம் தான் தெரியுமே!! 🤣🤗

24 minutes ago, goshan_che said:

உங்களை போல அன்றி, நான் ஆண்களுடன் ஓரம்போவதில்லை🤣

சீ...

கெட்ட பையா 😊😂

நான் சொன்னது ஓரமா போய் இருந்து, விடுகதை சொல்லி விளாடுவது பற்றி!

சரீ....

இப்போது மட்டுமல்ல, முன்னரும் கூட, சிறப்பாக கருத்தாடுவீர்கள்.

மேற்படியான் வந்தால் சாமியாடி மரமேறுவீர்கள்.

உந்த சீமான், பெரியார் சமாச்சாரத்தை விட்டுட்டு, செய்யும் பங்கு யாவாரத்தையும் றியல் எஸ்டேற் யாவாரத்தையும் அக்கறையா செய்யுங்கள். பின்னடிக்கு உதவும்! 🤣😊

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, செவ்வியன் said:

@Nathamuni ஒவ்வொன்றாக தாவி கொண்டிருக்கிறீர்கள், இதற்கான பதிலுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

இதற்கான பதில் கேட்பவருக்கு தெளிவாக தெரியும்.

ஏன் கேட்கிறார்கள் என்று எனக்குத் தெரியும்.

இந்த பதிலை இங்குள்ள இன்னுமொருவர் முன்பே சொல்லியுள்ளதால், தவிர்க்கிறார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

இதற்கான பதில் கேட்பவருக்கு தெளிவாக தெரியும்.

ஏன் கேட்கிறார்கள் என்று எனக்குத் தெரியும்.

இந்த பதிலை இங்குள்ள இன்னுமொருவர் முன்பே சொல்லியுள்ளதால், தவிர்க்கிறார்.

நாதம், இந்த "அவர், உவர், இவர்"  கிறீஸ் போத்தல் விளையாட்டை என்று விளையாடாமல், யார் நீங்கள் குறிப்பிட்ட தமிழ் சிறி லங்கா ஆட்சியர் என்று சொல்லுங்கள்!

அல்லது வேறு யாராவது "மணி" இதற்கும் மனது வைக்க வேண்டுமா😂?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

நாதம், இந்த "அவர், உவர், இவர்"  கிறீஸ் போத்தல் விளையாட்டை என்று விளையாடாமல், யார் நீங்கள் குறிப்பிட்ட தமிழ் சிறி லங்கா ஆட்சியர் என்று சொல்லுங்கள்!

அல்லது வேறு யாராவது "மணி" இதற்கும் மனது வைக்க வேண்டுமா😂?

உங்கள் ரீம் மெம்பர், நிறைகுடம் முன்னர் உது குறித்து விலாவாரியா சொன்னார். அவரிடமே கேளுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

அரைகுறையாய் வரலாற்றை படித்துவிட்டு அத்துடன் தான் இட்டுக்கட்டிய கற்பனைகளை சேர்த்து, தான் நீண்ட காலமாய் காவித்திரியும்   அந்த இத்து போன தனது போத்துகேய வரலாற்றை உண்மையாக்கி சீமான் என்ற அயோக்கிய அரசியல்வாதிக்கு முட்டுக்கொடுக்க ஒருவர் படாத பாடுபடுகிறார்.  சீமானின்  தம்பிகள் போல இங்கு சிந்திக்கும் அறிவு அற்ற முட்டாள்கள் இருக்கிறார்கள் என்ற நினைப்பு போலும். சீமானுடன் சேர்ந்தாலே பொய்யும் புரட்டும் வியாதியை போல் பரவி விடுகிறது போலும்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Justin said:

யார் நீங்கள் குறிப்பிட்ட தமிழ் சிறி லங்கா ஆட்சியர் என்று சொல்லுங்கள்!

எல்லாளன்    ..  . ஒன்று 

இராசராசசோழன் ......இரண்டு 

பாரக்கிரமசிங்கம்,...... மூன்று 

ஆனந்த குமாரசாமி.   ......நாலு     (யாழ் கள உறுப்பினர்.  இல்லை 😂)

பாரக்கிரமசிங்கம் .......ஐந்து   

பிரபாகரன்,......ஆறு    மற்றப்பெயர்களை  மறந்து விட்டேன் அண்ணை   😂😂😂😂😂😂

நேரம் உள்ள நேரம் தேடி எடுத்து போடுகிறேன் 

எனவே… முழு இலங்கையும் தமிழருக்கு சொந்தமானது   

குறிப்பு,...ஏதாவது பிழைகள் இருந்தால்  நீங்கள் தாராளமாக திருத்தலாம்.   எனக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை  

ஏனெனில்  நான் சாதாரண மனிதன்  பிழைகள் விடுவதும். சாதாரணமானது 🙏

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

நீங்கள் சற்று ஆழமாக தமிழக சாதீய அமைப்புக்குள் சென்று ஆய்ந்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.நான், அயல் நாட்டுத் தமிழர் என்ற வகையில் அவ்வளவு ஆழமாக செல்ல வேண்டியதில்லை என்பதே என் கருத்து.

நீங்கள் சொல்வது சரியே, நாதமுனி. நீங்க சொல்வது போலவே, அயல் நாட்டுத் தமிழர் என்ற வகையில் நாங்கள் அவர்களின் சாதி அடுக்குக்குள், அதன் மேல் கட்டமைக்கப்பட்டிருக்கும் அவர்களின் சமூக, அரசியல் அமைப்புகளுக்குள் ஆழமாக போகத் தேவையேயில்லை.

ஆனால், நான் ஆழமாக போகவேண்டி இருந்ததிற்கு இரண்டு காரணங்கள்:

1. நீங்கள் என்னிடம் கேட்டிருந்த ஒரு கேள்வியும், நீங்களே சொல்லியிருந்த விளக்கமும்:

"நீங்கள் தமிழக அரசியலை, ஈழ அரசியல் ஊடாக பார்க்கிறீர்கள் என்று நிணைக்கிறேன், சரியா?

எனக்கும் அதே குழப்பம் இருந்தது. தமிழக அரசியலை தனித்தே அதன் போக்கில் மட்டும் பார்தால் சில பரிமாணங்கள் புரியும்."

2. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நான் ஒரு அயல் நாட்டுத் தமிழனே இல்லை. எனக்கு இலங்கையின் வடக்கு கிழக்கை விட தமிழ்நாடு தான் அதிகப் பரிச்சயம். ஒப்பிடுகையில், அதிகமான ஆட்களை எனக்கு தமிழ்நாட்டில் தான் பழக்கம். நான் அவர்களின் தமிழைக் கூட சில வட்டாரவழக்குகளில் அப்படியே பேசுவேன். 

இதன் பின்னணி, எங்கள் பலரினதும் வாழ்வில் இருப்பது போன்ற, துன்பமும், அலைச்சலும் தான். இது ஒரு மகிழ்வோ அல்லது பெருமையோ கிடையாது. இவற்றை கதைகளாக எழுதினால் அனுதாபம் கிடைக்கும், ஆனால் அது என்னத்திற்கு...................

அங்கிருக்கும் ஊர்கள் மட்டும் இல்லை, எம்மவர்களின் அகதி முகாம்களும் தெரியும். அங்கு தங்கியும் இருக்கின்றேன். எம்மவர்கள் ஏதாவது பிரச்சனைகள், சிக்கல்கள் வந்தால், அங்கே யாரிடம் போகின்றார்கள் என்றும் தெரியும். நிச்சயமாக நீங்கள் சொல்லும் ஆட்களிடம் இல்லை. அவர்களை நான் அங்கே பார்த்ததே இல்லை.

தமிழ்நாட்டு அரசியல் பற்றிய என்னுடைய பார்வை தமிழ்நாட்டுக்காரர் ஒருவருடையதாகவே இருக்கின்றது. 'முல்லைப் பெரியாறு அணைக்காகப் போராடுங்கள், அது தான் முக்கியம்...............' என்று தான், என் தமிழ்நாட்டு நண்பர்கள் போலவே, நானும் நாதகவிற்கு சொல்கின்றேன்..............    

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரசோதரன் said:

Translation: நீங்கள் "கூகிள் மப்பில்" பார்த்து விட்டு தமிழ்நாட்டைப் பற்றி எழுதவில்லை👍!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

தமிழகத்தல் வாழ்ந்துள்ளீர்கள். அதுவே உங்கள் ஆதீத ஆர்வத்துக்கு காரணம் என்று நிணைக்கிறேன்.

இலங்கை திவாலானதன் காரனம் கிச்சன் கபினைற். மணைவி சிராந்தி சொல் கேட்டு குடுமபத்தையே அரசியலுக்கு கொண்டு வந்ததால் மகிந்தா திருடராக பெயர் வாங்கி  நிற்கிறார். இதை அப்படியே தமிழகத்துக்கு பொருத்திப் பார்த்தால், கருணாநிதி திருடராகவும், அண்ணாத்துரை நேர்மையாளராகவும் தெரிகிறார்கள்.

பல வருடங்களுக்கு முன் கலைஞர் காலத்தில், மதுரைக்குகாரில் சென்றிருந்தேன். அழகிய மலை ஒன்றின் அடிவாரத்தில், இராட்சத இயந்திரங்கள்.

டிரைவர் கர்ணன், மலையை விழங்கப்போறார்கள் என்றார்கள்.

போனவருடம் போன போது, மலை இல்லை, அடுக்குமாடி வீடுகள். அதே திமுக: வித்தியாசம் மகனாட்சி: பேரனும், பூட்டனும் ரெடி.

முன்னாள் நிதி அமைச்சர் தியாகராஜன் சொன்ன மச்சான்மார் 30,000கோடி கொள்ளை பொய்யல்ல.

இந்த கொள்ளையர்கள் போடும் முகமூடீ பெரியார். அவர் உண்மையிலேயே பாவம்.

கொள்ளையடித்த பணத்தை, வைத்துக்கொண்டு, கம்யூனீஸ்ட், VCK, இஸ்லாமிய கட்சிகளை வளைத்துப் போட்டுள்ளனர்.

தமிழகத்தை யாராவது காப்பாற்ற வேண்டும். அதன் சூழலியல் அழிவு குறித்து பேசும் ஒரு சிலரில், நாதக வும் ஒன்று.

அந்த வகையில், வாக்குக்கு காசு கொடாமல் அரசியல் செய்கிறார்கள் என்பதாலே எனது அனுதாபமே அன்றி, எமது பிரச்சணைக்கு உதவக்கூடும் என்றல்ல.

தலைவர் சீமானை, தேர்வு செய்தது, எமது பிரச்சணையை, அதன் நியாயத்தை தமிழக மக்களுக்கு, ஓர் 5000 பேருக்காவது சொல்வார் என்று.

இன்று 36 இலட்சம் பேர், பிரபாகரன் தலைமை கொண்ட கட்சியின் பின்னால். இன்னும் அதிகரிக்கும் என்றே நிணைக்கிறேன்.

இது நமக்கு பெருமைக்குரிய விடயம்.

அவர்கள் எமக்கு எதிர்காலத்தில் உததவுவது அப்புறம். முதலில் தமிழகத்தை, அதன் வளங்களை, அப்பாவிப் பெரியார் முகமூடித் திருட்டுதிராவிடத்திடம் இருந்து காக்கட்டும்.

🙏

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Justin said:

Translation: நீங்கள் "கூகிள் மப்பில்" பார்த்து விட்டு தமிழ்நாட்டைப் பற்றி எழுதவில்லை👍!

கோசன் எனக்குப் பிடித்த அற்புதமான கருத்தாளர்.

உங்களைப் பார்த்து அல்லது உங்களுடன் சேர்ந்து, அடுத்த கருத்தாளர்களை bully பண்ணுவது, நக்கல் அடிப்பது, இடையூறு செய்வது போன்ற பழக்கங்கள் தொற்றிக் கொண்டு விட்டன.

ரசோதரனுடனான கருத்தாடலில், தயவுடன் குழப்ப வேண்டாம் என்று அவரை கோர வேண்டிய நிலை.

இதோ, உங்கள் சேட்டையை பாருங்கள்.

ஓய்வு பெற்ற பின் பல வழிகளில் நேரத்தை செலவிடலாம். ஆனால், cyber bullying நல்லதல்ல.

உங்கள் கருத்துடன் ஒத்துப் போகாமல் இருப்பவர்கள் மீது நீங்கள் வன்மத்துடன் தாக்குவது அழகல்ல, அசிங்கம்.

நான் உங்களுக்கு பதில் அழிக்காமல் நகர்ந்தாலும் விடாமல் திரத்தி பின் சொறிச் சேட்டை விடுவதே உங்கள் வழமை!

ஏதோ, நல்லா இருங்கள்.

🙏

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் ஈழத்தமிழரை ஏமாற்றி  மக்களின் பணத்தை திருடிய திருட்டு கூட்டங்களே இன்று சீமானுக்கும் வக்காலத்து வாங்குகின்றன. தாம் திருடிய பணத்தில் ஒரு சிறு பகுதியை  தமிழ் நாட்டில் இருக்கும் சீமானுக்கு அள்ளி வீசி அந்த பணத்தை பெற்ற புளுகத்தில்  சீமான் அங்கு குறளிவித்தை காட்ட  பணத்தை தம்மிடம் பறி கொடுத்த மக்களுகளுக்கு சீமானை வைத்து  என்ரெரெயின் கொடுத்தால்  முடியுமான அளவுக்கு இன்னும் மக்களுடம் திருடலாம் என்ற காரணமே சீமானுக்கு முட்டுக்கொடுக்கும் திருடர்களின் நோக்கமாக இருக்கலாம்.  சீமானும் வாங்கிய பணத்திற்கு நல்லா தான் வித்தை காட்டுது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

கோசன் எனக்குப் பிடித்த அற்புதமான கருத்தாளர்.

உங்களைப் பார்த்து அல்லது உங்களுடன் சேர்ந்து, அடுத்த கருத்தாளர்களை bully பண்ணுவது, நக்கல் அடிப்பது, இடையூறு செய்வது போன்ற பழக்கங்கள் தொற்றிக் கொண்டு விட்டன.

ரசோதரனுடனான கருத்தாடலில், தயவுடன் குழப்ப வேண்டாம் என்று அவரை கோர வேண்டிய நிலை.

இதோ, உங்கள் சேட்டையை பாருங்கள்.

ஓய்வு பெற்ற பின் பல வழிகளில் நேரத்தை செலவிடலாம். ஆனால், cyber bullying நல்லதல்ல.

உங்கள் கருத்துடன் ஒத்துப் போகாமல் இருப்பவர்கள் மீது நீங்கள் வன்மத்துடன் தாக்குவது அழகல்ல, அசிங்கம்.

நான் உங்களுக்கு பதில் அழிக்காமல் நகர்ந்தாலும் விடாமல் திரத்தி பின் சொறிச் சேட்டை விடுவதே உங்கள் வழமை!

ஏதோ, நல்லா இருங்கள்.

🙏

😂 கொஞ்சம் மூச்செடுத்து விடுங்கள், இப்போது வாசியுங்கள்.

முதலில் கோசானையும், ஜஸ்ரினையும் கோத்து விட்டுக் கூத்துப் பார்க்கிற உங்கள் குதர்க்கப் பார்வையை நிராகரிக்கிறேன். எங்களிடையே அடிப்படை ஒற்றுமை ஒரு விடயத்தில் உண்டு: "எருமை மாடு பறக்கிறது" என்ற ரீதியிலான கருத்துகளைக் கண்டால் நேராகக் கேள்வி கேட்கும் பழக்கம் ஒன்றே அந்த ஒற்றுமை. (ஜஸ்ரினைப் பிடிக்காமல் போனதால், விஞ்ஞான அறிவையே தூக்கிக் கடாசி விட்டு நாசாவைக் குழுவாகப் போட்டுத் தாக்கும் அளவுக்கு குழுவாதம் இருக்கும் யாழ் உறவுகளை விட கோசான் ஜஸ்ரின் ஒற்றுமையொன்றும் ஆரோக்கியமற்ற குழுவாதம் அல்ல!)

உங்கள் பிரச்சினை நானோ, குழுவாதமோ, இணைய இம்சையோ அல்ல.  ஆதாரமேயில்லாத அண்டப் புழுகுகளையெல்லாம் சொலிட்டான கருத்தாக இங்கே பதிந்து  விடுவீர்கள். கேள்வி கேட்டால் cyber bullying என்று  புதிதாக நீங்கள் கண்டு பிடித்திருக்கும் சொற்களின் பின்னால் ஒளிந்து கொள்வீர்கள். இவையெல்லாம் ஆதாரமற்றவை என்று உணரும் பொதுப்புத்தி உங்களிடம் நிறையவே இருக்கிறது, ஆனாலும் ஒரு சராசரி தமிழ் நாட்டு அரசியல்வாதியின் தொடர் பொய்களை தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இவற்றை பல வருடங்களாக யாழில் தொடர்ந்து பரப்பி வருகிறீர்கள். இதை முகநூல், இன்ஸ்ரா, ரிக் ரொக்கில் செய்யலாம், யார் கேட்கப் போகிறார்கள்?

யாழில் செய்தால் கேள்வி வருவது தவிர்க்க இயலாதது. பிரச்சினை இருந்தால் அப்படியே நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்து விடுங்கள்!   

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

கோசன் எனக்குப் பிடித்த அற்புதமான கருத்தாளர்.

உங்களைப் பார்த்து அல்லது உங்களுடன் சேர்ந்து, அடுத்த கருத்தாளர்களை bully பண்ணுவது, நக்கல் அடிப்பது, இடையூறு செய்வது போன்ற பழக்கங்கள் தொற்றிக் கொண்டு விட்டன.

ஓம் கோஷான் பபா…ஜஸ்டின் பழுதாக்கி போட்டார் 🤣.

நீங்கள் தலைகீழாக நின்று தண்ணி குடித்தாலும் குழுவாதத்தை தீண்ட முடியாது நாதம்.

3 hours ago, Nathamuni said:

இந்த கொள்ளையர்கள் போடும் முகமூடீ பெரியார். அவர் உண்மையிலேயே பாவம்.

ப்ரோ,

இதைத்தான் நான் 11 வருசமா எழுத…இல்லை…இல்லை என என்னுடன் திரி திரியாக மல்லு கட்டினீர்கள்.

3 hours ago, Nathamuni said:

பல வருடங்களுக்கு முன் கலைஞர் காலத்தில், மதுரைக்குகாரில் சென்றிருந்தேன். அழகிய மலை ஒன்றின் அடிவாரத்தில், இராட்சத இயந்திரங்கள்.

டிரைவர் கர்ணன், மலையை விழங்கப்போறார்கள் என்றார்கள்.

போனவருடம் போன போது, மலை இல்லை, அடுக்குமாடி வீடுகள். அதே திமுக: வித்தியாசம் மகனாட்சி: பேரனும், பூட்டனும் ரெடி.

இது எந்த மலை என்ற விபரம் கிடைக்குமா?

அண்ணாமலை இல்லைத்தானே?

3 hours ago, Nathamuni said:

தலைவர் சீமானை, தேர்வு செய்தது, எமது பிரச்சணையை, அதன் நியாயத்தை தமிழக மக்களுக்கு, ஓர் 5000 பேருக்காவது சொல்வார் என்று.

தலைவர் சீமானை ஒரு பிரச்சாரகராக மட்டுமே தெரிவு செய்தார்.

3 hours ago, Nathamuni said:

இது நமக்கு பெருமைக்குரிய விடயம்.

36 இலட்சம் வரவு மூணரை கோடி நட்டம் - இதில் இலாபமும் இல்லை பெருமையும் இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.