Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

ஆகச் சிறிய சீன இறக்குமதி பைட் ஒரு கோடி தாண்டுது.

இலங்கையில் இந்த கார் £29,000.

யூகேயில் 26,000.

வெறும் £3000 தான் வித்தியாசம்.

ஒப்பீட்டளவில் இலங்கையில் பெற்றோல் காருடன் ஒப்பிடும் போது பைட் மலிவு….

எலக்ரிக் காருக்கு வரி குறைவு, பைட் இலங்கைக்கு profit margin ஐ குறைத்து விற்பதாக இருக்கலாம்.

6 minutes ago, ரசோதரன் said:

ஏழைகளின் டெஸ்லாவே இந்த விலையா இலங்கையில்..............

இங்கு அமெரிக்காவில் நான் பார்க்கவில்லை, ஆனால் எங்கேயாவது இருக்கலாம்....

ஏழை எண்டால் இப்ப நடுத்தர வர்க்கம்தானே அண்ணை🤣.

அமெரிக்கா சீன வாகனங்களுக்கு கெடுபிடி (தம் வாகன உற்பத்தி துறையை பாதுகாக்க) என்பதால் பல நிறுவனங்கள் வருவதே இல்லை என கேள்விப்பட்டேன்.

  • Replies 54
  • Views 2.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    மத்திய தரவர்க்கதின் கனவுகளில் ஒன்றான கார் வாங்குவதை இது மேலும் கடினமாக்குகிறது. இந்தியன், சீன கம்பெனிகள் பல எலெக்ரிக் கார்கள் செய்கிறன. இவற்றில் ஒன்றை வைத்து ஒரு உள்ளூர் எலெக்ரிக் தயாரிப்பை

  • goshan_che
    goshan_che

    ஒரு இலட்சம் = 100,000 Rs ஒரு கோடி = 100 இலட்சம். ஒரு மில்லியன் = 10 இலட்சம். ஒரு கோடி = 10 மில்லியன் ஒரு கோடி = 100x100,000=10,000,000 Rs ஒரு கோடி 10,000,000 Rs = 100 இலட்சம்

  • அக்னியஷ்த்ரா
    அக்னியஷ்த்ரா

    எனது 2011 Allion இனது தற்போதைய விலை ஒருகோடி 10 லட்சம். வாங்கும்போது 55 லட்சம்  இரண்டாவது ஓனர். டொயோட்டா பேட்ச்சை ஒட்டிய எந்த அரதல் பழசையும் இலங்கையில் கண்ணை மூடிக்கொண்டு பாடிப்பாடி விற்கலாம். இலங்கை

  • கருத்துக்கள உறவுகள்

25 minutes ago, goshan_che said:

அமெரிக்கா சீன வாகனங்களுக்கு கெடுபிடி (தம் வாகன உற்பத்தி துறையை பாதுகாக்க) என்பதால் பல நிறுவனங்கள் வருவதே இல்லை என கேள்விப்பட்டேன்.

அதுவே தான். சீன வாகன இறக்குமதிக்கு எக்கச்சக்கமான வரி விதிப்பு மற்றும் சீனப் பொருட்களின் தரங்களைப் பற்றிய பொதுவான குறைந்த அபிப்பிராயம் என்பன சீன வாகனங்களை இங்கே வரவிடாமல் தடுக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2025 at 20:29, தமிழ் சிறி said:

குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் இந்த சிறப்பு சலுகை விலைகளுக்கு வாடிக்கையாளர்கள் புத்தம் புதிய BYD வாகனங்களை முன்கூட்டிய முன்கட்டளை (ஆர்டர்) செய்யலாம்.

BYD SEALION 6 SUPERIOR – 21.7 மில்லியன் ரூபா

BYD SEALION 6 PREMIUM – 25.3 மில்லியன் ரூபா

BYD SEAL DYNAMIC – 19.7 மில்லியன் ரூபா

BYD SEAL PREMIUM – 54.7 மில்லியன் ரூபா

BYD SEAL PERFORMANCE – 78.1 மில்லியன் ரூபா

BYD ATTO 3 ADVANCED – 14.6 மில்லியன் ரூபா

BYD ATTO 3 SUPERIOR – 16.8 மில்லியன் ரூபா

BYD M6 STANDARD – 16.2 மில்லியன் ரூபா

BYD M6 SUPERIOR – 17.4 மில்லியன் ரூபா

BYD DOLPHIN DYNAMIC 49 – 10.7 மில்லியன் ரூபா

பாவித்து ஒரு 7-8 வருடம் அல்லது உத்தரவாதம் முடிந்தபின் காய்லாங்கடைக்குத்தான் போட வேண்டுமாம். இந்த வகைகளின் Blade பேட்டரியினை திரும்ப மாற்றுவதற்க்கே வாகனத்தின் விலையில் பாதி வருமாம். சிங்கையில் அதிகமாக டாக்சி ஓட்டுனர்கள் தான் பாவிக்கிறார்கள். உத்தரவாதம் முடிவதற்குள் போட்ட பணத்தை எடுத்துவிடலாம். இலங்கையில் இவ்வளவு கொட்டி எடுத்து பாவிக்குமளவுக்கு வெர்த்து கிடையாது

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

சரி இலங்கையில் பாவித்த சூப்பர் ஏசி டாடா வான் என்ன விலை வரும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-321.jpg?resize=750%2C375&ssl

வாகன இறக்குமதி வரிகளை குறைப்பதில் அரசாங்கம் கவனம்!

சந்தை நடத்தையின் அடிப்படையில், எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரிகளை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

சுமார் 5 வருடங்களாக தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த தனியார் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை 2025 பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் மீண்டும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், வாகன இறக்குமதி வரி 300 வீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளமையினால் புதிய வாகனங்களின் விலைகள் மிக அதிகமாக இருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான இறக்குமதி வரிகள் காரணமாக வேகனார் என்ற சிறிய ரக காரின் விலை 70 இலட்சத்தில் இருந்து ஒரு கோடியாக உயரும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சுட்டுக்காட்டுகின்றனர்.

இந்த இறக்குமதி வரிகள் காரணமாக சந்தையில் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்றின் விலை டேவிட் பீரிஸ் நிறுவனத்தித்தின் தகவல்களுக்கு அமைவாக சுமார் 20 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது.

அதேநேரம், சந்தையில் பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிகளின் விலைகளும் அசாதாரணமாக அதிகரித்துள்ளன.

இந்த வாகன விலைகளின்படி இன்று ஒரு சாதாரண மனிதனால் வாகனம் வாங்கி செலுத்த முடியாத நிலை காணப்படுவதாக வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலையில், சந்தையின் விலை நிலவரங்களை கண்காணித்து வாகன இறக்குமதி வரிகளை குறைக்க வாய்ப்புள்ளதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை, இலங்கை மத்திய வங்கியும் இதற்கான வழிகாட்டல்களை வழங்கி வருவதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1422621

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.