Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்த கனடா!

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்த கனடா!

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கனடா 25 சதவீத வரி விதித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக  டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். பதவியேற்றது முதல் ட்ரம்ப் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்.

குறிப்பாக உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுதல், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல், அமெரிக்காவின் தென்பகுதியில் மெக்சிகோ எல்லைகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்துதல் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.  மேலும், பல்வேறு நாடுகள் மீதும் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி வரி விதிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதித்து ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவு இன்று முதல் அழுலுக்கு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்கா விதித்த இறக்குமதி வரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடாவும் வரி விதித்துள்ளது. அதன்படி, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று கனடா அறிவித்துள்ளது. இந்த இறக்குமதி வரி இன்று முதல் அமுல்படுத்தப்படும் என்றும் கனடா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1419324

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் பொருட்கள் எங்களுக்குத் தேவை இல்லை! -ட்ரம்ப் பதிலடி!

FR_TRUDEAU_TRUMP_VMS-750x375-1.webp

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக  கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி  பதவியேற்ற குடியரசு கட்சியின் தலைவர்  டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

குறிப்பாக அண்மையில் கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதித்து ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்கா விதித்த இறக்குமதி வரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடாவும்  அமெரிக்க உற்பத்திகளுக்கு அதிகளவான வரியனை விதித்துள்ளது. அதன்படி, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று கனடா அறிவித்துள்ளது. இந்த இறக்குமதி  பெப்பிரவரி 02 ஆம் திகதியிலிருந்து(நேற்று)   அமுல்படுத்தப்படும் என்றும் கனடா தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கனடாவின் அறிவிப்பால் ஆத்திரமடைந்துள்ள ட்ரம்ப் ”கனடாவில் உற்பத்தி செய்யப்படும்  எந்தப் பொருட்களும் எங்களுக்குத் தேவையில்லை. எங்களிடம் ஆற்றல் உள்ளது. எங்களால் சொந்தமாக உருவாக்க முடியும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன்  ”நாட்டு மக்களுக்கு தேவைப் படும் அளவை விட அதிகமான அளவு எங்களிடம் பொருட்கள் உள்ளன. கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக உருவாக்குவோம். அதன் மூலம் கனடா மக்களுக்கு மிக குறைந்த வரி மற்றும் இராணுவ பாதுகாப்புகள் ஆகியவற்றை உருவாக்குவோம்” என்றும் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

 

https://akkinikkunchu.com/?p=310702

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதற்கில்லை 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏனைய நாடுகளுடனான வர்த்தகப் போரில் அமெரிக்கர்களும் பாதிக்கப்படலாம் – ட்ரம்ப்

ஏனைய நாடுகளுடனான வர்த்தகப் போரில் அமெரிக்கர்களும் பாதிக்கப்படலாம் – ட்ரம்ப்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோ, கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் மீது விதித்துள்ள கடுமையான கட்டணங்கள் அமெரிக்கர்களுக்கு “குறுகிய கால” வலியை ஏற்படுத்தக்கூடும் என்று ஞாயிற்றுக்கிழமை (02) தெரிவித்தார்.

ஏனெனில் உலக சந்தைகளில் வரிகள் வளர்ச்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம் மற்றும் பணவீக்கத்தை மீண்டும் தூண்டலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய வரி விதிப்புகள் குறித்து கனடா மற்றும் மெக்சிகோ தலைவர்களுடன் திங்களன்று பேசுவேன் என்றும் ட்ரம்ப் கூறினார்.

புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ தோட்டத்தில் இருந்து வொஷிங்டனுக்குத் திரும்பிய ட்ரம்ப் செய்தியாளர்களிடம் உரையாற்றும் போதே இதனைக் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் கட்டணங்களும் “நிச்சயமாக நடக்கும்” என்று இதன்போது கூறிய டரம்ப், ஆனால் எப்போது என்று சுட்டிக்காட்டவில்லை.

கனடா மற்றும் மெக்சிகோ மீது 25% வரியும், சீனா மீது 10% வரியும் விதிக்கும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதியின் திட்டம் உலகளாவிய வளர்ச்சியைக் குறைக்கும் மற்றும் அமெரிக்கர்களுக்கு விலையை உயர்த்தும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும் உள்நாட்டுத் தொழில்களை ஊக்குவிக்கவும் அவை தேவை என்று ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2025/1419450

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் நியாயமற்ற வரிகளுக்கு பதிலாக வரித் திட்டம் : எமது தேசம் இலக்கு வைக்கப்படும்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை - கனேடிய அமைச்சர்கள் 

03 Feb, 2025 | 04:49 PM
image
 

ஐக்கிய அமெரிக்கா கனேடிய பொருட்கள் மீது விதித்த நியாயப்படுத்த முடியாததும், நியாயமற்றதுமான வரிகளுக்குப் பதில் நடவடிக்கையாக 155 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் மீது கனேடிய அரசு வரிகளை விதிக்குமென கனேடிய நிதியமைச்சரும்  பல்மட்ட அரசுகளுக்கு இடையிலான விவகாரங்களுக்கான அமைச்சருமான டொமினிக் லெப்ளாங்கும் வெளியுறவு அமைச்சர்  மெலனி ஜொலியும் இணைந்து அறிவித்தனர்.

கனடாவின் நலன்களையும் நுகர்வோரையும் பணியாளர்களையும் வணிக நிறுவனங்களையும் பாதுகாப்பதும் தற்காப்பதுமே இந்தப் பதில் நடவடிக்கைகளின் ஒரே நோக்கமாகும் என்றும் தேவையற்றும் நியாயமின்றியும் எமது தேசம் இலக்கு வைக்கப்படும் போது நாம் எதுவும் செய்யாது பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

வரித் திட்டம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,

எமது பதில் நடவடிக்கையின் முதல் கட்டத்தில் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 30 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் மீதான வரிவிதிப்பு உள்ளடங்குகின்றது. 

ஐக்கிய அமெரிக்க வரிகள் நடைமுறைக்கு வரும் 2025 பெப்ரவரி 4 ஆம் திகதி அன்றே இந்த வரிகளும் நடைமுறைக்கு வரும். தோடம்பழச்சாறு, கச்சான்பட்டர், வைன், மதுபானங்கள், பியர், கோப்பி, வீட்டு உபகரணப்பொருட்கள், ஆடைகள், பாதணிகள், மோட்டார் சைக்கிள்கள், அழகுசாதனப்பொருட்கள், கடதாசிக்கூழ், கடதாசி போன்றன வரிவிதிப்புப் பட்டியலில் அடங்கியிருக்கும். இந்தப் பொருட்களின் விரிவான பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.

ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 125 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மேலதிக பொருட்களுக்கும் வரிகளை விதிக்க அரசு உத்தேசித்துள்ளதாக அமைச்சர் லெப்ளாங் மேலும் அறிவித்தார்.

வரி நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக முழுமையான பட்டியல் பகிரங்கப்படுத்தப்பட்டு, மக்கள் கருத்து வெளியிடுதவற்கு 21 நாட்கள் வழங்கப்படும். மின்சார வாகனங்கள் உட்படப் பயணிகள் வாகனங்களும் பார ஊர்திகளும் உருக்கு மற்றும் அலுமினியப் பொருட்கள், குறிப்பிட்ட பழங்களும் மரக்கறிகளும் மாட்டிறைச்சி, பன்றியிறைச்சி, பாற்பொருட்கள், பார ஊர்திகள், பேருந்துகள், பொழுதுபோக்கு வாகனங்கள், பொழுதுபோக்கு படகுகள் போன்றனவும் இந்தப் பட்டியலில் அடங்கியிருக்கும்.

நியாயப்படுத்த முடியா வரிகளைக் கனடா மீது ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்து நடைமுறைப்படுத்தினால், முதல் கட்டப் பதில் நடவடிக்கைகளுக்கு மேலதிகமான நடவடிக்கைகளை ஆராயும் போது வரி அல்லாத நடவடிக்கைகள் உட்பட அனைத்துத் தெரிவுகளையும் அரசு கருத்திற் கொள்ளுமென அமைச்சர்கள் லெப்ளாங்கும் ஜொலியும் வலியுறுத்தியுள்ளனர்.

தேவையற்றும் நியாயமின்றியும் எமது தேசம் இலக்கு வைக்கப்படும் போது நாம் எதுவும் செய்யாது பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை. கனேடிய நலன்களையும் வேலைவாய்ப்புக்களையும் அரசு பாதுகாக்கும். பாதிக்கப்படும் பணியாளர்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் உதவியளிக்க நாம் தயாராகவிருக்கின்றோம்.

வரிகளை விதிக்கும் ஐக்கிய அமெரிக்க அரசின் முடிவு, அமெரிக்க பொருளாதாரத்திற்கும் மக்களுக்கும் பேரழிவான விளைவுகளை ஏற்படுத்தும். வரிகள் ஐக்கிய அமெரிக்க மோட்டார் கார்த் தொழிற்சாலைகளிலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் விற்பனை நிலையங்களிலும் அமெரிக்க நுகர்வோரின் செலவினத்தை அதிகரித்து, அமெரிக்க செல்வச் செழிப்பை ஆபத்துக்குள்ளாக்கும்.

உடனடிப் பதில் நடவடிக்கையாகக் கனடா விதித்த வரிகளாலும் எதிர்காலத்தில் விதிக்கக் கூடிய வரிகளாலும் கனேடிய தொழிலாளர்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைப்பதற்கு விதிவிலக்கான நிவாரணத்தை வழங்குமாறு விடுக்கப்படும் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்கு வரி நிவாரணப் பொறிமுறை ஒன்றை உருவாக்கவும் அரச நடவடிக்கை எடுக்கின்றது. இந்தக் கட்டமைப்பு மற்றும் நடைமுறை குறித்த விபரங்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும்.

கனடாவின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் பலப்படுத்தவும், ரீம் கனடாவாக ( Team Canada ) உறுதியான பதில் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கும் ஐக்கிய அமெரிக்காவில் முடிவெடுப்போரிடம் அனைத்துக் கனேடியர்களின் சார்பாகவும் வாதிடவும் மாகாண, பிராந்திய அரசுகளுடனும் வணிகத்துறை மற்றும் தொழிலாளர் தலைவர்களுடனும் அரசு தொடர்ந்தும் நெருக்கமாக இணைந்து செயலாற்றி வருகின்றது.

அமெரிக்காவின் நியாயமற்ற வரிகளுக்கு பதிலாக வரித் திட்டம் : எமது தேசம் இலக்கு வைக்கப்படும்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை - கனேடிய அமைச்சர்கள்  | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.