Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Screen-Shot-2025-02-02-at-2.16.09-AM-800
 

அமெரிக்க வரி: கனடாவின் அதிர்ஷ்டம்

 

சிவதாசன்

அமெரிக்க ஜனாதிபதி ட்றம்ப் நேற்று இரவு (பெப். 01) விடுத்த அதிரடி வரித்திணிப்பு அறிவித்தலின்படி தனது அயல் நாடுகளான கனடா மற்றும் மெக்சிக்கோவிற்கு 25%; சீனாவுக்கு 10% என்ற வகையில் இறக்குமதித் தீர்வைகளை அறிவித்திருக்கிறார். ஜனாதிபதியாக வருவதற்கு முன்னரே பல்வேறு வாண வேடிக்கைகளை நிகழ்த்தியவர் ட்றம்ப். ‘இவர் சும்மா வெருட்டுகிறார், பொறுத்திருந்து பார்ப்போம்’ எனப் பல பண்டிதர்கள் அப்போது கூறினார்கள். இப்போது அது நிஜமாகியிருக்கிறது.

இந்த இறக்குமதித் தீர்வையால் அமெரிக்க, கனடிய, மெக்சிக்க, சீன மக்களுக்கு எவ்வித இலாப நட்டங்கள் ஏற்படலாம் என்பதுகூட ‘பொறுத்திருந்து பார்க்கவேண்டிய’ ஒரு விடயம் தான். இத்தீர்வையால் ஒன்ராறியோ மாகாணத்தில் மட்டும் பல இலட்சம் பேருக்கு வேலை இலாமல் போகலாம் என ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் கடந்த சில வாரங்களாக வெருட்டி வந்தார். ட்றம்பைப் போலவே ‘ Onrtario is Not For Sale’ எனத் தொப்பியையும் அணிந்துகொண்டு அவர் ட்றம்ப் பாணியில் பவனி வரும்போது இவரும் ஏதோ திட்டமிடுகிறார் எனப்பட்டது. இத் தொப்பி மூலம் திடீரென அவருக்கு ஏறிய மவுசைப் பயன்படுத்தி தனது ஆட்சியை நீடிக்கும் கனவோடு அவரும் அதிரடித் தேர்தல் ஒன்றை அறிவித்திருக்கிறார்.

 

இப்படியான அதிரடிகள் அரசியல்வாதிகளால் தற்காலிக வெற்றிகளுக்காகப் பாவிக்கப்படும் சுய இன்ப முயற்சிகள். பெரும்பாலான தருணங்களில் இவை எதிரான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கின்றன. ட்றம்பரைப் போலவே 1930 களில் ஹேர்பேர்ட் ஹூவர் என்னும் அமெரிக்க ஜனாதிபதி 20% இறக்குமதித் தீர்வையை அறிவித்து அமெரிக்க விவசாயிகளைக் காப்பாற்றப் போகிறேன் எனச் சூளுரைத்தார். ஆனால் The Great Depression என்ற பெயரில் அது அமெரிக்க பொருளாதாரத்தையே புரட்டிப் போட்டதுமல்லாது அவரையும் பதவியிலிருந்து தூக்கியெறிந்தது.

 

ட்றம்பர் ஜனாதிபதியாக வருவதை வரவேற்று இதற்கு முன் நான் எழுதியிருந்தேன். அதற்குப் பல முணு முணுப்புகள் கிடைத்தன. அவரின் வருகையால் அமெரிக்க ஏகாதிபத்தியம் அடிவாங்கும் அதனால் உலகம் கொஞ்சம் சுவாசிக்க இடைவேளை கிடைக்கும் என்பதுவே எனது வரவேற்புக்குக் காரணம். ஆனால் இந்த இறக்குமதித் தீர்வை விவகாரம் நான் எதிர்பார்த்ததை விட மேலும் அதிகமான நன்மைகளைத் தரப்போவதாக இப்போது நான் கருதுகிறேன்.

அமெரிக்கா உருவாகிய காலத்திலிருந்து கனடாவை அது தனது சின்னத் தம்பியாகவே கருதி வந்தது. கனடாவின் இயற்கை வளங்களை வேறெவரும் அனுபவிக்காதவாறு ‘தலையைத் தடவித்’ தன்னிடமே பாதுகாப்பாக வைத்திருந்தது. கனடிய வரியிறுப்பாளர்களின் தலைகளில் மிளகாயை அரைத்து அது தனது சுயநலத்திற்காக கனடாவைச் சுரண்டிக்கொண்டு வந்தது. அமெரிக்க – கனடிய – மெக்சிக்கோ சுதந்திர வலய ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்நாடுகளிடையே பண்டப் பரிவர்த்தனை பரஸ்பர பலன்களுடன் சுமுகமாக நடைபெற்று வந்தமையால் எவரும் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. இதன் பலனாக உறவு அமைதியாகவும் பலமாகவும் இருந்தாலும் அமெரிக்கப் பெரியண்ணரே கூடிய அனுகூலங்களைப் பெற்றுவந்தார். முக்கியமான விவகாரங்களில் அவரே முடிவு எடுப்பவராகவும் சின்னத் தம்பிமார் சொல்வதைக் கேட்கும் கிளிப்பிள்ளைகளாகவும் இருந்து வந்தனர். வெளியார் அச்சுறுத்தல் எதுவும் இல்லாத நிலையிலும் தமது பாதுகாப்பை பெரியண்ணர் பார்த்துக்கொள்வார் என்ற நிலையில் அவரது சலசலப்புக்களைப் பொருட்படுத்தாது இனிதே வாழ்ந்து வந்தனர். இதனால் தமது சுய தேவைகளைக் கவனிக்காது அசமந்தமாக இருந்து வந்தனர். ட்றம்பரின் வருகையால் அவர்கள் இப்போ விழித்துக்கொண்டு விட்டனர். இனிமேல் கனடாவும் மெக்சிக்கோவும் தமது சுய அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்தும் அவசியம் ஏற்பட்டிருக்கிறது. சிறிது காலம் சிரமப்பட்டாலும் எதிர்காலச் சந்ததிகளுக்கு அது அவசியமானது என்ற நினைப்பு இவ்விரு நாடுகளுக்கும் ஏற்பட்டதற்கு ட்றம்பருக்கே நன்றி சொல்ல வேண்டும்.

ட்றம்பரின் அறிபிப்பிற்கு எதிர்வினையா நேற்றிரவு கனடிய பிரதமர் ட்றூடோ பதிலடி அறிவிப்பைக் கொடுத்திருக்கிறார். அமெரிக்காவிலிருந்து கனடா இறக்குமதி செய்யும் சுமார் $155 பில்லியன் டாலர் பெறுமதியான இறக்குமதிகளுக்கு 25% தீர்வை வசூலிக்கப்படும் என ட்றூடோ அறிவித்திருக்கிறார். இன்னும் இரண்டு நாட்களில் $30 பில்லியன் பெறுமதியான இறக்குமதிப் பண்டங்களுக்கு இத்தீர்வை அமுலாக்கப்படும். மேலும் மூன்று வாரங்களின் பின் மீதமான பண்டங்கள் தீர்வைக்குள்ளாக்கப்படும்.

இத்தீர்வைக்குள்ளாகும் பண்டங்களில் சில: அமெரிக்க பியர், வைன், சில வகை விஸ்கி, பழங்கள், பழரசங்கள், மரக்கறி வகைகள், வாசனைத் தைலங்கள், ஆடைகள், சப்பாத்துகள், வீட்டுப் பாவனை உபகரணங்கள் (appliances), தளபாடங்கள், விளையாட்டு உபகரணங்கள், மரம் மற்றும் பிளாஸ்டிக் தயாரிப்புகள் உட்பட மேலும் பல பொருட்கள் அடங்கும்.

“ட்றம்ப் கூறுவதைப் போல் அமெரிக்கா ‘பொற்காலத்தில்’ நுழைய வேண்டுமாகில் கனடாவுடன் பங்காளியாகப் போகவேண்டுமே தவிர அதைத் தண்டிக்கக் கூடாது. ட்றம்பின் இந்நடவடிக்கை உங்களுக்குப் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும்” என பிரதமர் ட்றூடோ அமெரிக்க மக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்லாது “கனடியரும் தம் பங்கினைச் சரியாகச் செய்யவேண்டும்; அமெரிக்கத் தயாரிப்புகளுக்குப் பதிலாக நீங்கள் கனடியத் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்” என கனடியருக்கும் அவர் ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறார். இரண்டாம் உலக யுத்ததிற்குப் பிறகு இப்போதுதான் கனடியத் தேசியம் விழித்துக்கொண்டிருக்கிறது.

அல்பேர்ட்டா முதல்வரைத் தவிர ஏனைய மாகாண முதல்வர்களும், நாட்டு மக்களும் பிரதமர் பின் அணி திரள்கிறார்கள். சரிந்துபோயிருந்த அவரது செல்வாக்கு திடீரென்று உச்சம் பெறுவதுடன் அவரது கட்சிக்கான ஆதரவையும் அது மேலெழச் செய்திருக்கிறது. ட்றம்பின் அலை சிலவேளைகளில் கன்சர்வேட்டிவ் கட்சியின் சமீபத்திய அலையையே அடித்து சென்றுவிடக்கூடிய ஆபத்தை ஏற்படுத்திருக்கிறது என்கிறார்கள். பொதுமக்கள் பலர் அமெரிக்க தயாரிப்புகளைப் புறக்கணிக்கும் இயக்கங்களை ஆரம்பித்திருக்கிறார்கள்.

அல்பேர்ட்டாவின் மசகு எண்ணை இதுவரை குழாய்கள் மூலம் அமெரிக்காவிற்கே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. மேற்குப் பக்கமாக வான்கூவர் மூலம் ஆசிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய, மானில அரசாங்கங்கள் எடுத்த முயற்சியை சுதேசிகள் நிறுத்தி வைத்திருந்தார்கள். இதனால் கனடாவின் எண்ணை வருமானம் தனியே அமெரிக்காவின் தயவிலேயே இதுவரை இருந்து வருகிறது. ட்றம்பரின் அதிரடி அறிவிப்பிற்குப் பின் சுதேசிகளின் தலைவர்கள் தாமாகவே முன்வந்து மேற்கு இணைப்புக்குழாய் திட்டத்தைத் தொடரும்படி கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இதுவரை கனடிய மசகு எண்ணையைச் (crude oil) சுத்திகரிக்கும் நிலையங்கள் எதையும் கனடா தனது மண்ணில் நிர்மாணிக்கவில்லை. அதனால் மசகு எண்ணையை அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கு சுத்திகரிக்கப்பட்டபின் பெற்றோலாக நாம் வாங்கவேண்டியிருந்தது. ட்றம்பரின் அறிவிப்பின் பின் கனடா இனிமேல் தனது சொந்த சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணித்துக்கொள்ள வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. மொத்தத்தில் ‘வாயும் வயிறும் வேறு’ என்று கனடியர்கள் உணரும் நிலைக்கு ட்றம்பர் தள்ளிவிட்டிருக்கிறார்.

இதுவரை அமெரிக்காவின் பணிப்பின் பேரில் சில சீன இறக்குமதிகளுக்கு, குறிப்பாக மின் வாகனங்களுக்கு அதிக தீர்வையை வசூலிக்கப் போவதாக கனடா அறிவித்திருந்தது. இதனால் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் மின்வாகங்கள் ரெஸ்லா போன்ற அமெரிக்க இறக்குமதிகளூடன் போட்டி போட முடியாத நிலை இருந்தது. இனிமேல் அமெரிக்க ரெஸ்லா வாகனங்களுக்கு கனடாவில் வழங்கப்படும் ஊக்கப்பணம் நிறுத்தப்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.

ட்றம்பரின் இவ்வெருட்டுக்கள் எல்லாம் உண்மையில் இறக்குமதி சம்பந்தப்பட்டதல்ல, அவை வேறு விடயங்களில் கனடா, மெக்சிக்கோ போன்ற நாடுகளை இணங்க வைக்க ட்றம்பர் பாவிக்கும் ஒரு ஏமாற்று வித்தை எனச் சிலர் கூறுகிறார்கள். கொலம்பியாவில் இந்ந்டைமுறையைப் பாவித்து அவர் வெற்றிகண்டுவிட்டார் எனவும் இதன் மூலம் அமெரிக்க எல்லைகளைப் பாதுகாக்க அவர் எடுக்கும் முயற்சிகளே இவை எனவும் சிலர் நம்புகிறார்கள். கனடாவிலிருந்து ஃபென்ரனில் எனப்படும் போதை மருந்து அமெரிக்காவுக்குள் வருகிறது என்பது அவரது குற்றச்சாட்டு. அமெரிக்காவிற்குள் கொண்டுவரப்படும் ஃபென்ரனில் போதை மருந்தின் அளவு 0.2% மட்டுமே.

அடுத்த சில மாதங்கள் கனடிய மக்களுக்குச் சிரமமான ஒன்றாக இருக்கலாம். வேலை வாய்ப்புகள் இழக்கப்படலாம். கனடிய டொலரின் பெறுமதி வீழ்ச்சியால் வெளிநாட்டுப் பயணங்கள் அதிக செலவீனத்தை ஏற்படுத்தலாம். வீட்டு விலைகள் மேலும் வீழ்ச்சி காணலாம். வாழ்க்கைப் பயணம் கொஞ்சம் கரடு முரடாக இருக்க வாய்ப்புண்டு. ஆனாலும் எதிர்காலம் பிரகாசமாக இருக்குமெனவே பட்சி சொல்கிறது. பார்ப்போம்.

https://veedu.com/அமெரிக்க-வரி-கனடாவின்-அத/?fbclid=IwY2xjawIMamhleHRuA2FlbQIxMQABHQJ_b9AA4eTrx0CVohnSiUPhQaHDzOVLFWHxmOEEntyOeY6VlWt3yeK0bw_aem_5s4krdp_DP8GXYgD88VeEw#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்ப் போன்ற "4 வருடங்களுக்கு அப்பால் என்ன நடக்கும்?" என்று யோசிக்க முயலாத தலைவர்களால், உலகில் ஏற்படப் போகும் மாற்றங்கள் சிலவற்றைச் சுட்டிக் காட்டியிருக்கும் நல்ல கட்டுரை. இதே போன்ற மாற்றங்கள் பல முன்னரும் நடந்திருக்கின்றன.

1. 2000 களில் இந்தியாவுக்கு றொக்கற் இயந்திரங்களை விற்க அமெரிக்கா தடை போட்டு அவர்களது விண்வெளி ஆய்வுகளை முடக்கிய போது, இந்தியாவே சுயமாக, மலிவான றொக்கற் இயந்திரங்களை வடிவமைத்து வெற்றி கண்டது.

2. 2014 இல் கிரைமியாவை ரஷ்யா ஆக்கிரமித்த போது அமெரிக்கா செயலற்றிருந்தது. விழித்துக் கொண்ட ஐரோப்பிய நாடுகள், ஈட்டி முனை என்ற திட்டம் மூலம் சில நேட்டோ அணிகளை உருவாக்கி சகல ஐரோப்பிய நேட்டோ எல்லைகளுக்கு அருகில் நிறுத்தினார்கள். 

3. 1970 களில் இஸ்ரேலுக்கு ஆதரவு தந்த அமெரிக்காவிற்கு  எரிபொருள் விற்க அரபு நாடுகள் மறுத்து பாரிய எரிபொருள் தட்டுப் பாட்டை ஏற்படுத்தினார்கள். இதன் பின்னர் தான் எரிபொருள் சிக்கனமான வாகனங்களை உருவாக்கவும், உள் நாட்டு எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கவும் ஆரம்பித்தார்கள். பசுமைத் தொழில் நுட்பத்தின் தோற்றுவாய் இது எனலாம்.

4. மிக அண்மையாக, ரஷ்யாவின் எரிவாயுவை கணிசமாகக் குறைத்து விட்டு, நோர்வேயில் இருந்து வடகடல் வழியாக எரிவாயுவை இறக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அத்தோடு, அமெரிக்க எரிவாயுவை திரவமாக்கி, ஐரோப்பாவிற்கு LNG ஏற்றுமதி செய்வதை அதிகரித்திருக்கிறார்கள். இது ரஷ்யாவின் ஐரோப்பா மீதான மிரட்டலால் வந்த விளைவு. 

எனவே, சிவதாசன் சொல்வது போல, கனடா தன் "வேட்டைப் பல்லைத்" தீட்டிக் கொள்ள வேண்டும். அமெரிக்காவின் சனத்தொகையில் பத்திலொரு பங்கை வைத்துக் கொண்டே இவ்வளவு வளர்ச்சியைக் கண்ட கனடா உண்மையில் ரௌத்திரம் கொண்டால், மெக்சிகோவோடு NAFTA இற்கு மாற்றான ஒரு ஏற்பாட்டைச் செய்து அமெரிக்காவிற்கு சில நட்டங்களை ஏற்படுத்தலாம்! 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2025 at 08:21, Justin said:

ட்ரம்ப் போன்ற "4 வருடங்களுக்கு அப்பால் என்ன நடக்கும்?" என்று யோசிக்க முயலாத தலைவர்களால், உலகில் ஏற்படப் போகும் மாற்றங்கள் சிலவற்றைச் சுட்டிக் காட்டியிருக்கும் நல்ல கட்டுரை. இதே போன்ற மாற்றங்கள் பல முன்னரும் நடந்திருக்கின்றன.

1. 2000 களில் இந்தியாவுக்கு றொக்கற் இயந்திரங்களை விற்க அமெரிக்கா தடை போட்டு அவர்களது விண்வெளி ஆய்வுகளை முடக்கிய போது, இந்தியாவே சுயமாக, மலிவான றொக்கற் இயந்திரங்களை வடிவமைத்து வெற்றி கண்டது.

2. 2014 இல் கிரைமியாவை ரஷ்யா ஆக்கிரமித்த போது அமெரிக்கா செயலற்றிருந்தது. விழித்துக் கொண்ட ஐரோப்பிய நாடுகள், ஈட்டி முனை என்ற திட்டம் மூலம் சில நேட்டோ அணிகளை உருவாக்கி சகல ஐரோப்பிய நேட்டோ எல்லைகளுக்கு அருகில் நிறுத்தினார்கள். 

3. 1970 களில் இஸ்ரேலுக்கு ஆதரவு தந்த அமெரிக்காவிற்கு  எரிபொருள் விற்க அரபு நாடுகள் மறுத்து பாரிய எரிபொருள் தட்டுப் பாட்டை ஏற்படுத்தினார்கள். இதன் பின்னர் தான் எரிபொருள் சிக்கனமான வாகனங்களை உருவாக்கவும், உள் நாட்டு எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கவும் ஆரம்பித்தார்கள். பசுமைத் தொழில் நுட்பத்தின் தோற்றுவாய் இது எனலாம்.

4. மிக அண்மையாக, ரஷ்யாவின் எரிவாயுவை கணிசமாகக் குறைத்து விட்டு, நோர்வேயில் இருந்து வடகடல் வழியாக எரிவாயுவை இறக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அத்தோடு, அமெரிக்க எரிவாயுவை திரவமாக்கி, ஐரோப்பாவிற்கு LNG ஏற்றுமதி செய்வதை அதிகரித்திருக்கிறார்கள். இது ரஷ்யாவின் ஐரோப்பா மீதான மிரட்டலால் வந்த விளைவு. 

எனவே, சிவதாசன் சொல்வது போல, கனடா தன் "வேட்டைப் பல்லைத்" தீட்டிக் கொள்ள வேண்டும். அமெரிக்காவின் சனத்தொகையில் பத்திலொரு பங்கை வைத்துக் கொண்டே இவ்வளவு வளர்ச்சியைக் கண்ட கனடா உண்மையில் ரௌத்திரம் கொண்டால், மெக்சிகோவோடு NAFTA இற்கு மாற்றான ஒரு ஏற்பாட்டைச் செய்து அமெரிக்காவிற்கு சில நட்டங்களை ஏற்படுத்தலாம்! 

உண்மை, கனடியர்கள் வேற்றுமை மறந்து ஒற்றுமையாகியுள்ளார்கள், bullying ஐ அனுமதிக்கக்கூடாது என்று சோசியல் மீடியாக்களில் எதிர்வினைகள்நிறைய வருகிறது, இதற்கு நிறைய அமெரிக்கர்களும் support. தடை எடுத்தால்பிறகும், கனடாவில் சூப்பர் மார்கெட்டுகளில் அமெரிக்க பொருட்களை நீக்குவதாக தகவல்கள் வருகிறது. இவர் உண்மையிலேயே என்ன நினைத்துக்கொண்டு செயல்படுகிறார் என்று புரியவில்லை, அமெரிக்காவின் நட்பு வட்டாரங்களை படிப்படியாக பகைத்துக்கொண்டு வருகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

. இவர் உண்மையிலேயே என்ன நினைத்துக்கொண்டு செயல்படுகிறார் என்று புரியவில்லை, அமெரிக்காவின் நட்பு வட்டாரங்களை படிப்படியாக பகைத்துக்கொண்டு வருகிறார்.

அதுதான் அவருக்கு புட்டின் இட்ட கட்டளை.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அதுதான் அவருக்கு புட்டின் இட்ட கட்டளை.

வெறும் conspiracy யாக தெரிந்தாலும், இந்த doubt எனக்கு உண்மையிலேயே இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நீர்வேலியான் said:

வெறும் conspiracy யாக தெரிந்தாலும், இந்த doubt எனக்கு உண்மையிலேயே இருக்கு

ஒம்…இப்போதைக்கு இது conspiracy theory தான். சந்தர்ப சாட்சியம் கூட இல்லை.

ஆனால் நடக்கும் ஒவ்வொரு விடயமும் இதை confirm பண்ணுவதாகவே என் மனதில் படுகிறது.

தனியே நாடுகளை சீண்டுவது மட்டும் அல்ல.

1. காசாவை அமரிக்கா எடுக்கும் என்பது பற்றி இன்று சொன்னது - அமெரிக்க இஸ்லாமிய மோதலை இன்னும் கூர்மையாக்கும்

2. எப் பி ஐ முடக்கம் - பட்டேல் நியமனம் - நேரடியாக அமெரிக்க உள்ளக பாதுகாப்பை முடக்கும் செயல். 

3. யூ எஸ் எயிட் முடக்கம் - அமெரிக்காவின் உதவி மூலம் உலக நல்லெண்ணத்தை வாங்கும் செயலுக்கு அடி. இலங்கையில் பல செயல்திட்டங்கள் மூடுவிழா காணும். கோவம் அமெரிக்கா மீதே போகும். உலக அளவில் இது நீண்டகால ராஜதந்திர பின்னடைவை தரும்.

அடுத்து அரச சேவையில் செலவீன குறைப்பு என ஸ்டேர்ட் டிபார்மெண்ட், சி ஐ ஏ யை முடக்குவார் மஸ்க் என நினைக்கிறேன்.

அதேபோல் நேட்டோ, ஈயூவை உடைக்கும் அல்லது பலமிழக்க செய்யும் நடவடிக்கைகள்.

நான் சொல்வதை ஒரு சதி கோட்பாடு என நானே ஏற்கிறேன்.

4 வருடத்தில் ரஸ்யாவின் உலக ஆளுமை கூடி இருந்தால் நான் சொல்வது சரி, இல்லை எண்டால் பிழை.

பிகு

4 வருடத்தின் பின்னும் பதவியில் தொடர டிரம்ப் விரும்புவார், முயல்வார் எனவும் நான் நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

4 வருடத்தின் பின்னும் பதவியில் தொடர டிரம்ப் விரும்புவார், முயல்வார் எனவும் நான் நினைக்கிறேன்.

ஏற்கனவே ரம்புக்கு சார்பாக கதைக்கத்தொடங்கி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Niccolò Machiavelli என்னும் இத்தாலியன் சொன்னது இந்த கீழ்வரும் விஷயங்கள் 

1)"Mighty is right"( பலம் பொருந்தியவன் சொல்வது தான் சரி )

2)Necessity knows no laws" (  தேவை என்று வரும்பொழுது சட்டங்கள் அதை தடுக்கக் கூடாது )

3)"End justify the means" ( முடிவே நீதியைத் தீர்மானிக்கும் )

இந்தக் கருத்துக்களே முசோலினி, ஹிட்லர் போன்றோரின் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்குக் காரணம்.

 

நாகரீக உலகு "End justify the means" என்பதை ஏற்க முடியாது. ஒரு நன்மைக்காக ( நன்மை என்று நம்பும் ஒன்றுக்காக )அப்பாவியை பலியிட முடியாது. ஆனால் இதைச் சொல்லித்தான் ஐரோப்பாவில் யூதர்களை கொன்று குவித்தார்கள், இலங்கையில் மகிந்த தமிழர்களை கொன்று குவித்தார். 

டிரம்ப், மஸ்க், புட்டின், சீமான், மோடி , நெத்தன்யாகு மற்றும் இங்கே டிரம்பை ஆதரிக்கும், புட்டினை ஆதரிக்கும்  சில சாமிகளுக்கும் உண்மையில் இதுதான் தத்துவமே 

100 ஆண்டுகளுக்குப் பின்னால் மனித வர்க்கம் கொலைக்களம் நோக்கிப் பயணிப்பது கண்ணெதிரே தெரிகின்றது. Niccolò Machiavelli யின் கருத்தை ஏற்றவர்கள் மீண்டும் உலக ஒழுங்கை தீர்மானிக்கும் நிலைக்கு வந்து விட்டனர், இவர்களால் ஏற்படப்போவது இரத்தக் களரி.  எங்களால் தடுக்க முடியாது விட்டாலும் இதுபோன்ற விஷக் கருத்துக்களுக்கு ஆதரவாய் இருக்காமலாவது இருப்போம்.

 

 

 

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்பின் நடவடிக்கைகள் ரசியா, சீனா போன்ற இராணுவ பலம் கொண்ட  நாடுகளும் சர்வதேச உலக ஒழுங்குக்கு எதிராக அவர்களும் சுயநலத்துடன்  நடக்க முடியும் என்ற  சமிக்ஞையையே கொடுக்கும். கிரின்லாண்டையும் கனடாவையும் அமெரிக்காவுடன் இணைப்பதும்,  பனாமா கால்வாயை ஆக்கிரமிப்பதுடன்  காசாவிலிருந்து பலஸ்த்தீன் மக்களை விரட்டி அவர்களது  நாட்டை கைப்பற்றும் திட்டத்தை அறிவிப்பதும் சர்வதேச ஒழுங்கில் எவ்வளவு பாரதுரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் அவர் அறியாததல்ல.  

உண்மையில் டிரம்ப் ஒரு அரசியல்வாதி அல்ல அவரின் சுற்றுவட்டத்தில் உள்ளவர்களும் அவருக்கு கொம்புசீவிவிட்டு தூபம்போடுவோராகவே உள்ளனர். ஒரு நாட்டை நிர்வகிக்க தேவையான கல்வியையோ அல்லது அரசியல் அனுபவத்தையோ கொண்டிராத ஒரு மனிதர். பதவிக்கு வந்தவுடனேயே கனடா, கிரின்லாந்து விடயங்களில் ஒரு காணி  விற்பனை தரகர் போல செயற்பட்டதை இந்த உலகமே கண்டது. இனிவருங்காலங்களில் உள்நாட்டுக்குள்ளேயே டிரம்புக்கு எதிராக குரல்களும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்ப்புகளும் அதிகரிக்கும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

காசாவிலிருந்து  அடாவடியாக பாலஸ்தீன் மக்களை டிரம்பால் விரட்டமுடியும் என்றால் உக்ரேனில் இருந்து உக்ரேனியர்களை புட்டினால் ஏன் விரட்ட முடியாது. டிரம்பின் நடவடிக்கைகளால் அமெரிக்கா இப்போது  இருக்கும் மதிப்பு மரியாதையையும்  இழந்து நடுத்தெருவுக்கு வரும்போது காலம் 4 வருடத்தைக் கடந்திருக்கும்.

Edited by vanangaamudi

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.