Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லசந்த படுகொலை சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை - நாளை எதிர்ப்பு போராட்டம்

Published By: Rajeeban

05 Feb, 2025 | 11:47 AM
image

சண்டேலீடர் ஆசிரியர் லசந்தவிக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.

நாளை வியாழக்கிழமை இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் சட்டமாஅதிபர் அலுவலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

சட்டமா அதிபர் பதவி விலகவேண்டும்,லசந்த விக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்களை விடுதலை செய்வதன் பின்னால் உள்ள காரணங்களை பகிரங்கப்படுத்தவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள இளம் பத்திரிகையாளர் சங்கம்நீதி கோரும் அனைவரையும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவை வழங்குமாறு கோரியுள்ளது.

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க  படுகொலை விவகாரத்தில் சாட்சியங்களை அழித்தமை மாற்றியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு கடந்த ஐந்து மாதங்களாக விளக்கமறியலில்  வைக்கப்பட்டிருந்த பின்னர் பிணையில்  விடுவிக்கப்பட்ட முன்னாள்பிரதிப்பொலிஸ் மா அதிபர் பிரசன்ன  நாணயக்கார, பொலிஸ் பரிசோதகர்  திஸ்ஸ சுகந்தபால இராணுவ புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜர் உதலாகம ஆகியோரை முற்றாக வழக்கிலிருந்து விடுவிக்க சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

https://www.virakesari.lk/article/205842

  • கருத்துக்கள உறவுகள்

லசந்த விவகாரம்; சர்ச்சையை எழுப்பிய சந்தேக நபர்களை விடுவிக்கும் தீர்மானம்!

லசந்த விவகாரம்; சர்ச்சையை எழுப்பிய சந்தேக நபர்களை விடுவிக்கும் தீர்மானம்!

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்வதற்கான தீர்மானம் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த வழக்கின் மூன்று முக்கிய சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடராது என ஜனவரி 27 ஆம் திகதி சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) பணிப்பாளரிடம் அறிவித்தார்.

முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி பிரேம் ஆனந்த உடலகம, முன்னாள் கல்கிசை குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்ஐ திஸ்ஸசிறி சுகதபால, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார ஆகியோர் விடுவிக்கப்படலாம் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சட்டமா அதிபர் ரணசிங்க பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தத் தவறிவிட்டார் என உரிமைக் குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளதுடன், 2009 ஜனவரி 9 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட விக்கிரமதுங்கவிற்கு நீதி வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நண்பகல் 12 மணிக்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றையும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் சந்தேக நபர்களை விடுவிப்பதற்கான உத்தரவு தொடர்பில் வெளிப்படைத்தன்மையை கோருவதுடன் சட்டமா அதிபரை பதவி விலகுமாறும் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://athavannews.com/2025/1419876

  • கருத்துக்கள உறவுகள்

லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை வழக்கு: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை வழக்கு: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரை விடுதலை செய்வதற்கு சட்ட மாஅதிபர் பரிந்த ரணசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த விவகாரமானது, சமகால அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டமா அதிபரின் இந்த நடவடிக்கை தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்

சண்டே லீடர் பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரை விடுதலை செய்வதற்கு சட்ட மாஅதிபர் பரிந்த ரணசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

அந்தவகையில், லசந்த விக்கிரமதுங்க படுகொலை விவகாரத்தில் சாட்சியங்களை அழித்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார, பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ சுகந்தபால மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜர் உதலாகம ஆகியோரை இந்த வழக்கிலிருந்து முற்றாக விடுவிக்கவே சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த விடயமானது சமகால அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான நளிந்த ஜயதிஸ்ஸவிடம் இதுகுறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ”
2006 ஆம் ஆண்டுக்கு பின்னர் தெற்கில் மட்டுமல்ல வடக்கிலும் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனைக் கொடுக்க வேண்டும்.

இதற்கான மக்கள் ஆணையும் எமக்கு உள்ளது. ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலின்போதும் மக்கள் இவற்றுக்காகத்தான் எமக்கு அதிகாரத்தை வழங்கினார்கள். இதனை நாம் நன்றாக உணர்வோம். கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் கடத்தல், கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.

படுகொலையாளிகளுக்கு எதிராக சட்டம் நிச்சமயாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. இந்த நிலையில், இந்த சட்டமா அதிபரின் இந்த அறிவிப்பு தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பான இந்த விடயம் தொடர்பாக நாம் விரைவிலேயே அறிவிப்போம்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் வழங்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த படுகொலையை மூடி மறைக்க வேண்டியத் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. இந்த விசாரணையில் சில தாமதங்கள் இருப்பதற்கு காரணம் தொழில்நுட்ப விடயங்களினாலேயே ஒழிய அரசாங்கத்தினால் அல்ல.

நாம் இந்த விடயத்தில் ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்து வந்த தரப்பினராகும். ஜனாதிபதி உள்ளிட்டவர்களும் லசந்த விக்கிரமதுங்கவின் மரணம் தொடர்பாக குரல் எழுப்பியுள்ளார்கள். எனவே, இந்த விடயத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.
மக்களை ஆணைக்கு எதிராக ஒருபோதும் செயற்பட அரசாங்கம் தயார் இல்லை” இவ்வாறு நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1420005

இந்த படுகொலையின் சூத்திரதாரி கோத்தா. அவரை விட்டு விட்டு, வால்களை பிடிச்சு உள்ளே வைப்பதால் ஒரு பயனும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

May be a doodle of one or more people

 

 

May be an illustration of text that says 'TALK 1 ACTION INVESTIGATIONS INTO JOURNALIST KILLINGS handhicts fictera ickera 06/02/25 Cchandehictera lihande'

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

May be a doodle of text

 

May be an illustration of one or more people, clothes iron and text that says 'ទ Z Ma CLERN LANKA LANKA SRI தமிழ் Mirror ONO ΑπαυιA 07.02.2025 2025'

  • கருத்துக்கள உறவுகள்

சட்டமா அதிபரின் தீர்மானம் – சட்டத்தரணிகள் சங்கம் கவலை

சட்டமா அதிபரின் தீர்மானம் – சட்டத்தரணிகள் சங்கம் கவலை.

லசந்த விக்கிரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை, விடுவிப்பது தொடர்பான சட்டமா அதிபரின் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இதற்கு சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

ஊடவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுவிப்பதற்கான சட்ட மா அதிபரின் தீர்மானத்தை அமைச்சரவை மறுபரிசீலனை செய்யக்கூடும் என்ற செய்திகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அறிவித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றையும் சட்டத்தரணிகள் சங்கம் அனுப்பியுள்ளது.

இதில், சட்ட மா அதிபர் பொதுமக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர் என்றாலும், அவர் ஒரு நீதித்துறை சார்ந்த பதவியை வகிக்கிறார் என்றும், கிடைக்கக்கூடிய சான்றுகள் மற்றும் சட்டப்பூர்வ அனுமதியின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியது.

வழக்குத் தொடரும் தீர்மானங்களில் அரசியல் தலையீடு சட்ட மா அதிபரின் சுதந்திரத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் குறை மதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் சங்கம் எச்சரித்துள்ளது.

சட்ட மா அதிபரின் தீர்மானங்களை ரிட் அல்லது அடிப்படை உரிமைகள், உட்பட நீதித்துறை செயல்முறைகள் மூலம் மதிப்பாய்வு செய்ய முடியும் என்று உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நீதித்துறை மற்றும் நீதித்துறை தீர்மானங்கள் எப்போதும் பொதுக் கருத்துடன் ஒத்துப்போகாது என்று தெரிவித்துள்ள குறித்த சங்கம், சட்டத்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறும் ஜனாதிபதியை வலியுறுத்தியது.

https://athavannews.com/2025/1420369

  • கருத்துக்கள உறவுகள்

சந்தேகநபர்களை விடுவிப்பதற்கான சட்டமா அதிபரின் தீர்மானம் ஏற்புடையதல்ல - ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டு

09 FEB, 2025 | 09:35 AM
image

(நா.தனுஜா)

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சாரதி கடத்தப்பட்டார் என்பதை அனைவரும் அறிந்திருக்கும் நிலையில், அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் கூறுவது பொருத்தமானதல்ல என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் கல்கிசை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டிருக்கும் பிரேம் ஆனந்த உதலாகம, தொன் திஸ்ஸ சிறி சுகதபால மற்றும் பிரசன்ன நாணயக்கார ஆகிய மூவரையும் அவ்வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க சிபாரிசு செய்திருப்பது குறித்து கண்டனங்கள் வலுத்திருக்கின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் குறித்தவொரு குற்றவியல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் உள்ளிட்ட விசாரணை அதிகாரிகள், அவ்விசாரணை அறிக்கைகள் மற்றும் சாட்சியங்களை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கவேண்டும் எனச் சுட்டிக்காட்டிய எம்.ஏ.சுமந்திரன், அவற்றின் அடிப்படையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதா, இல்லையா எனும் தீர்மானத்தை சட்டமா அதிபரால் மேற்கொள்ளமுடியும் எனத் தெளிவுபடுத்தினார்.

அதேபோன்று சட்டமா அதிபர் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானங்களை மேற்கொள்ளும்போது, அதில் அரசாங்கம் தலையீடு செய்யக்கூடாது எனவும், மாறாக சட்டமா அதிபர் சுயாதீனமாக இயங்குவதை உறுதிசெய்யவேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

இருப்பினும் சட்டமா அதிபரின் அண்மைய தீர்மானத்தைப் பொறுத்தமட்டில், லசந்த விக்ரமதுங்கவின் சாரதி கடத்தப்பட்டார் என்பதை அனைவரும் அறிந்திருக்கும் நிலையில், அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விடுவிக்குமாறு கூறுவது பொருத்தமானதல்ல என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டு 16 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், இன்னமும் இவ்வழக்கில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை என விசனம் வெளியிட்ட அவர், இதுகுறித்த விசாரணைகளை விரைவுபடுத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டியது அவசியம் என்றார்.

https://www.virakesari.lk/article/206194

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of clothes iron and text

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அரசு மகிந்த அரசில் வன்முறை செய்தவர்களுக்கு மென் போக்கை  காட்டுவது ஏன்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.