Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழமை போல் உங்கள் எழுத்துக்களும் கதை சொல்லும் விதமும் மிகப்பிரமாதம்.👍🏼

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழும்வரை போராடு . ........ 09. 

                                                                அடுத்தநாள் காலையில் பீற்றரின் அண்ணருடைய வீட்டில் இருந்து மினிபஸ்சும் லொறியுமாக இரு வாகனங்களும் கிளம்பி புத்தளம் போகாமல் குருநாகல் வீதியைப் பிடித்துச் சென்று தொடர்ந்து கொழும்பு செல்கிறார்கள். வழியில் அவ்வளவு பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆங்காங்கே பயணிகளையும் இறக்கி விடுகிறார்கள். லொறியை அவர்களது விலாசத்தில் கொண்டுபோய் சேர்ப்பித்து விட்டு அங்கிருந்து சந்துரு போன்மூலம் இராகவனின் தந்தை தாமோதரத்துக்கும், மாணிக்கம் முதலாளிக்கும் தங்கள் நலமாக வந்து சேர்ந்த தகவல் சொல்லிவிட்டு அவரின் மூத்தமகனுடைய கடைக்குச் சென்று எல்லாப்பொருட்களையும் ஒப்படைத்து கணக்கு வழக்கெல்லாம் முடித்துக் கொண்டு ஒரு லொட்ஜுக்குச் சென்று பீற்றரும் சந்துருவும் ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள்.

                                                                            இரண்டு நாட்களின் பின் அவர்கள் யாழ்ப்பாணம் வந்ததும் அவர்களை மாணிக்கம், தாமோதரம் எல்லோரும் பாராட்டிக் கொண்டாடி விட்டார்கள். அவர்களுடைய கொழும்பில் இருந்து கொண்டுவந்த பொருட்கள் கணக்குகள் எல்லாம் முடித்து விட்டு இராகவன் எங்கே என்று கேட்கிறான். அப்போது தாமோதரம் அவனிடம் கலவரம் நடந்த அன்று ஸ்ரீ காந்திடம் இருந்து அவனுக்கு போன் வந்ததும் அவன் பெட்டியில் தனது உடுப்புகள் எல்லாம் அள்ளிப் போட்டுக்கொண்டு திரும்பி வர சில நாளாகும் என்று சொல்லிப் போனவன்தான் இன்னும் ஆளைக் காணவில்லை. எங்களுக்கும் எங்கேயென்று தெரியவில்லை என்ன நடக்குது என்று ஒன்றும் புரியவில்லை என்று சொல்கிறார். சரியப்பா நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்கவேண்டாம் நான்போய் விசாரித்து வந்து சொல்கிறேன் என்று சொல்லிப் போகிறான். அவர் வீட்டில் இருந்து கிளம்பியதும் அவர்கள் பஸ்ஸை ஒரு மோட்டார் சைக்கிள் பின்தொடர்ந்து வந்து முன்னால் வந்து மறிக்கின்றது. அதில் இருந்து ஸ்ரீ காந் இறங்கி வந்து சந்துருவிடம், டே சந்துரு இவன் இராகவனைக் கண்டனியோ அவனைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லை.

--- நீ என்னடா சொல்கிறாய் அன்று நீ போன் பண்ணித்தான் அவன் வெளியே போனவனாம்.அவர்களும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று சந்துரு சொல்ல....

--- ஓமடா நான் அன்று சொன்னதுதான் ஆனால் இப்ப பிரச்சனையெல்லாம் சரிப்பண்ணிப் போட்டன் அதுதான் அதை சொல்ல அவனைத் தேடுகிறேன் கிடைக்கிறான் இல்லை.

--- சரி....சரி.....முதலில் என்னுடைய வீட்டுக்கு போய் முகத்தைக் காட்டிவிட்டு அவனைப் போய்த் தேடலாம் என்று ஸ்ரீகாந் திடம் சொல்லிவிட்டு பீற்றரிடம் அண்ணை நீங்கள் போய் வண்டியைக் கழுவிக்கொண்டு வீட்டுக்கு வாங்கோ என்று அனுப்பிவிட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் சந்துருவின் வீட்டுக்குப் போகின்றனர்.வீட்டுக்கு வெளியே சைக்கிளை விட்டுட்டு உள்ளே போனால் அங்கு விறாந்தையில் சந்துருவின் தந்தையுடன் இராகவன் செஸ் விளையாடியபடி தேநீர் குடித்துக் கொண்டிருக்கிறான்.

--- அந்தக் காட்சியைக் கண்ட ஸ்ரீகாந், டே இராகவ் நீ ஒழிக்கிறதுக்கு இதைவிட சிறந்த இடம் ஒன்று கிடையாதுடா என்று சொல்ல எல்லோரும் துன்பங்களை மறந்து சிரிக்கிறார்கள்.......!

 

                                                                 யாவும் கற்பனை.

 

யாழ் இணையம் அகவை 27 க்காக ……… !

ஆக்கம் சுவி ..........!  💚 💚

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2025 at 07:46, கிருபன் said:

சுவி ஐயாவின் கதை ஒரு மார்க்கமாகப் போகின்றது. தொடருங்கள்..

நம்ம பாஷையில் ஜவுளிக்கடையை புடவைக்கடை என்றுதானே சொல்வது?🥹

 

இக்கதையில் புடவைகள் கடத்தலில் வருவதால் அவர்கள் புழங்கும் பாஷையில் ஜவுளி என்று சொல்ல வேண்டியதாகி விட்டது ........!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிருபன் . ..........!

  • கருத்துக்கள உறவுகள்

இடை தழுவி தனிமைநாடி தனியிடம் தேடினவர்களை ‘அம்போ’ என்று விட்டு விட்டு வாழும் வரை போராடுவதில் என்ன இருக்கப் போகிறது? கதை சொன்ன விதம் அருமை. உங்களுக்கு ‘ஜ’வில் ஒருவித மயக்கம் இருக்கிறது என நினைக்கிறேன். ஆரம்பத்தில் காதல் ஜோடி. பிறகு ஜவுளி. வடமராட்சிப் பக்கம் புடவை அல்லது சாரிதான்.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/2/2025 at 14:53, குமாரசாமி said:

கோட்டை முனியப்பர் மணியோசையோடு போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறீர்கள். நீங்கள் போராடுங்கள்.நான் இருந்தபடி இரசிக்கின்றேன்.🙂

On 5/2/2025 at 15:09, ஈழப்பிரியன் said:

படிக்கும் காலத்தில் பாடசாலைக்கு போகாமல் முனியப்பர் கோவில் கோட்டை பண்ணை போன்ற இடங்களை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.

On 5/2/2025 at 18:09, தனிக்காட்டு ராஜா said:

கடையை திறங்க நாங்க சேலை வாங்க வருகிறோம் 

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே ...........! 😁

விறுவிறுப்பான சம்பவங்களுடன் நகர்ந்த கதையை வாசித்துக் கொண்டிருந்தபோது எப்படி முடியப் போகிறது என்று யோசனையாக இருந்தது. வித்தியாசமான முறையில் கடைசிப் பந்தியில் சிறப்பாக முடித்துள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருந்ததை விரைவாக்க முடித்துவிட்டீர்களே அண்ணா.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பானவர்களுக்கு , நான் இங்கு ஒரு விடயத்தை சொல்ல விரும்புகின்றேன் . ......... இந்த யாழ் அகவை 27 க்காக ஒரு கதை எழுதத் தொடங்கி அரைவாசி வரை எழுதியாச்சுது ....... ஆனால் அப்பொழுது இந்த அகவைக்கான திரி திறக்கப்படவில்லை . ........ அந்நேரம் நான் ஊருக்கு போகவேண்டிய தேவை ஏற்பட்டதினால் டிக்கட் எல்லாம் போட்டாகி விட்டது . ...... திரும்பி வர தாமதமாகலாம் அதனால் ஒரு அன்பரிடம் இந்த யாழ் அகவையில் எனது ஆக்கம் ஒன்று இருக்கவேண்டும் என்று விரும்புகின்றேன் ....... ஆகவே ஒரு கதையை உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன், அதை நீங்கள் இந்த திரி திறந்ததும் சேர்த்து விடுமாறு கூறியிருந்தேன் ........ !

அந்நேரம் எதிர்பாராவிதமாக எனக்கு சுகவீனம் ஏற்பட்டுவிட்டது ....... ஆஸ்பத்திரியும் அப்பாயின்மென்ட் என்றும் அலைந்ததனால் ஊருக்குப் போக முடியவில்லை . ........ டிக்கடை ரத்து செய்தாச்சுது . ........ இந்தப் பக்கமும் திறக்கப்பட்டு விட்டது ......... உடல்நிலை மோசமான நிலையிலும் இதில் பங்கு பற்ற வேண்டும் என்னும் ஆர்வத்தினால் (எங்கே செத்துக் கித்துப் போய் விடுவோமோ என்னும் யோசனையில் ) அரைவாசி எழுதிய அக்கதையை ஒதுக்கி விட்டு இரண்டு நாளில் "வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம் " என்ற இக் கதையை அவசரமாக எழுதி முடித்து இங்கு பதிவிட்டிருந்தேன் . ........ இதிலும் ஒரு விசேஷமாக பெண்களைத் தவிர்த்து முழுக்கதையையும் ஆண்கள் மூலமாகவே நகர்த்தியிருந்தேன் . ........... நான் கேட்டதும் மறுக்காமல் உதவிசெய்ய முன்வந்த அந்த அன்பருக்கு மிக நன்றி . ......... இனி நேரம் கிடைக்கும்பொழுது அந்தக் கதையை எழுதி முடிக்க வேண்டும் . .......... !

இக்கதையை வாசித்து ஊக்கப்படுத்திய அத்தனை உறவுகளுக்கும் மிக்க நன்றி . ....... ! 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.