Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
14 FEB, 2025 | 04:24 PM
image

உடல் நலப் பாதிப்பு காரணமாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது.

நெஞ்சுசளி பாதிப்பினால் பரிசுத்த பாப்பரசர் பாதிக்கப்பட்டுள்ளார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக சுவாசிப்பதில் பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்த 88 வயது பாப்பரசர் தனது உரைகளை வாசிக்கும் பொறுப்பை அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தார்.

இன்று காலை ஆராதனைக்கு பின்னர் பரிசுத்த பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/206696

  • கருத்துக்கள உறவுகள்

பாலின மாற்று அறுவைச் சிகிச்சை: வத்திக்கான் சர்ச்சைக் கருத்து!

போப் பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதி!

மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக மேலதிக பரிசோதனைகளுக்காக ரோமில் உள்ள மருத்துவமனையில் திருத்தந்தை பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.

இதேவேளை கடந்த இரண்டு ஆண்டுகளில் போப் பலமுறை காய்ச்சல் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிந்தார்

அத்துடன் அவர் தனது இளமை பருவத்தில் நுரையீரல்களில் ஒன்றை அகற்றினார் மற்றும் நுரையீரல் தொற்றுநோயால் அவதிப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1421520

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாப்பரசரின் உடல்நிலை குறித்து வத்திக்கானின் அறிவிப்பு

Published By: DIGITAL DESK 2   15 FEB, 2025 | 01:04 PM

image
 

பாப்பரசர் பிரான்ஸிஸ் சுவாசத்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் அவருக்கு லேசான காய்ச்சல் உள்ளதாகவும் வத்திக்கான் தெரிவித்துள்ளது.

88 வயதான பாப்பரசர் பிரான்ஸிஸ், வெள்ளிக்கிழமை (14)  திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, வத்திக்கானில் உள்ள வைத்தியசாலையில், சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் நுரையீரலில் தொற்றுப் பாதிப்பு இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து மேலதிக சிகிச்கைக்காக இத்தாலியின் ரோமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாப்பரசர் பிரான்ஸிஸுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/206741

  • கருத்துக்கள உறவுகள்

வத்திக்கான் வைத்தியசாலை  >>>> ரோம், இத்தாலி வைத்தியசாலை >>>> பிரான்ஸ் வைத்தியசாலை >>>> 👀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை மீண்டும் மோசம்

அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி 88 வயதான போப் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.

சோதனைகளில் சுவாச தொற்று இருப்பது தெரியவந்ததால், அவரது உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அண்மைக்காலமாக மூச்சுத் திணறல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது ரோமிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளார்.

88 வயதான பாப்பரசர் பிரான்சிஸ் உடல் நலக் குறைவு காரணமாக பிரதான மதக் கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்தும் அண்மைக்காலமாக விலகியிருந்தார்.

இதேவேளை, கடந்த 2021 மற்றும் 2023 ஆண்டுகளில் சத்திர சிகிச்சைகளுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Thinakkural.lk
No image preview

பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை மீண்டும் மோசம்

அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 88 வயதான போ...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிமோனியா தொற்குள்ளாகியுள்ளார் பாப்பரசர் பிரான்ஸிஸ் - வத்திக்கான் 

Published By: DIGITAL DESK 3

19 FEB, 2025 | 10:27 AM

image

பாப்பரசர் பிரான்ஸிஸுக்கு இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.

88 வயதான பாப்பரசர் சுவாச நோயால் பாதிக்கப்பட்டு ரோமில் உள்ள ஜெமெல்லி  வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை (14) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பாப்பரசருக்கு நேற்றையதினம் மேற்கொண்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில் இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.

பரிசோதனைகள், நெஞ்சு பகுதியில் எடுக்கப்பட்ட  எக்ஸ்ரே  மற்றும் மருத்துவ அறிக்கைகள் நோய் ஆபத்தானது என்பதை காட்டுக்கின்றது.

இருந்தாலும், பாப்பரசர் நல்ல நிலையில் உள்ளாரெனவும் "செபித்தல், ஓய்வெடுத்தல் மற்றும் பிரார்த்தனை செய்வதில்" நாளை கழித்துவருவதாகவும் வத்திக்கான் தெரிவித்துள்ளது.

தனது உடல் நலத்திற்காக செபிக்குமாறு பாப்பரசர் கேட்டுக் கொண்டதாக வத்திக்கான் தெரிவித்துள்ளார்.

பாப்பரசர் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு முன்பு பல நாட்களாக மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்தார். திருப்பலி பூசை வேளையில் முன்னெடுக்கப்படும் ஆராதனைகளின் போது தயாரிக்கப்பட்ட உரைகளை வாசிக்க அதிகாரிகளை நியமித்தார்.

இவ்வாண்டு புது வருடத்திற்கான வார இறுதியில் பல ஆராதனைகளை பாப்பரசர் பிரான்ஸிஸ் வழி நடத்தவிருந்தார்.  இந்த நிகழ்வுகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை நடைபெறும். இந்நிலையில், பாப்பரசர் பங்கேற்க இருந்த அனைத்து பொது நிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

பாப்பரசருக்கு அவரது 21 ஆவது வயதில் நுரையீரலில் ஒரு பகுதி அகற்றப்பட்டமையினால் வயது முதிர்ந்த நிலையில் நுரையீரல் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு பாப்பரசராக 12 ஆண்டுகள் சேவையாற்றிய பாப்பரசர் பிரான்சிஸ் 2023 ஆம் ஆண்டு ஆர்ஜன்டீனாவில் மூச்சுக்குழாய் அழற்சியினால் 3 நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் பல தடவைகள்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிமோனியா தொற்குள்ளாகியுள்ளார் பாப்பரசர் பிரான்ஸிஸ் - வத்திக்கான்

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-317.jpg?resize=750%2C375&ssl

போப் பிரான்சிஸின் உடல்நிலை மோசமான நிலையில்!

முன்னதாக சனிக்கிழமையன்று “நீண்ட ஆஸ்துமா போன்ற சுவாச நெருக்கடியால்” பாதிக்கப்பட்ட புனித போப் பிரான்சிஸின் உடல்நிலையானது தொடர்ந்தும் “மோசமாக” இருப்பதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.

பல நாட்களாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், கடந்த 14 ஆம் திகதி கத்தோலிக்க பேரவையின் தலைவர் போப் பிரான்ஸிஸ் ரோமின் ஜெமெல்லி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவருக்கு இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் சனிக்கிழமை (22) மாலை வத்திக்கான் ஒரு அறிக்கையில், 88 வயதான பிரான்சிஸ் காலை வேளையில் “நீண்ட நேர ஆஸ்துமா போன்ற சுவாச நெருக்கடியை” எதிர்கொண்டாகவும், அதற்கு “அதிக ஓட்ட ஆக்ஸிஜனை” நிர்வகிக்க வேண்டியிருந்ததாகவும் கூறியது.

மேலும், பரிசுத்த பாப்பரசரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதுடன், அவர் இன்னும் ஆபத்திலிருந்து மீளவில்லை.

அதேநேரம், “புனிதத் தந்தை விழிப்புடன் இருக்கிறார், நேற்றைய தினத்தை விட அவர் அதிகமாக அவதிப்பட்டாலும், ஒரு நாற்காலியில் இன்றைய நாளைக் கழித்தார். தற்போது அவரது உடல் நிலை தொடர்பான பாதுகாப்பு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கூடுதல் ஆக்ஸிஜனைத் தவிர, அவருக்கு இரத்த மாற்றமும் மேற்கொள்ளப்பட்டதாக வத்திக்கான் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியது.

2013 ஆம் ஆண்டு முதல் போப்பாக இருக்கும் பிரான்சிஸ், கடந்த இரண்டு ஆண்டுகளில் உடல்நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு இளம் வயதிலேயே நுரையீரல் ஒவ்வாமை ஏற்பட்டு, ஒரு நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டதால், அவர் நுரையீரல் தொற்றுக்கு ஆளாக நேரிடும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1422610

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரிசுத்த பாப்பரசர் ஆபத்தான நிலையில்

23 FEB, 2025 | 09:25 AM

image

சுவாசப்பாதிப்பு காரணமாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆபத்தான நிலையில் உள்ளார் என அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அஸ்;துமா  போன்ற சுவாச பாதிப்பினால் பரிசுத்த பாப்பரசரின் நிலை தொடர்ந்தும் மோசமடைந்துவருகின்றதுஎன வத்திக்கான் தகவல்கள்தெரிவித்துள்ளன.

பரிசுத்த பாப்பரசரிற்கு இரத்தம் ஏற்றப்பட்டது நேற்று காணப்பட்ட நிலையை விட அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது என வத்திக்கான் தகவல்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/207415

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரிசுத்த பாப்பரசரின் உடல்நிலை-சிறுநீரகம் செயலிழந்திருக்கலாம் என அச்சம்

24 FEB, 2025 | 10:18 AM

image

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தொடர்ந்தும் ஆபத்தான நிலையிலேயே உள்ளார் என தெரிவித்துள்ள வத்திக்கான் குருதிபரிசோதனைகளின் போது அவரது சிறுநீரகம் செயல் இழந்திருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள்தென்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஒருவார காலத்திற்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாப்பரசர் மேலும்சுவாசபாதிப்புகளை எதிர்கொண்டுள்ளார் என்பதற்கான அறிகுறிகள் இல்லை என தெரிவித்துள்ள வத்திக்கான் ஆரம்பகட்ட குருதி பரிசோதனைகளில் சிறுநீரக செயல்இழப்பிற்கான அறிகுறிகள் தென்பட்டன எனினும் தற்போது அது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/207491

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-347.jpg?resize=750%2C375&ssl

போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்தும் கவலைக்கிடம்; வத்திக்கான் தகவல்!

நிமோனியா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள புனித போப் பிரான்சிஸ், இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், அவரது சிறுநீரக செயல்பாட்டில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வத்திக்கான் ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்துள்ளது.

நீண்டகால ஆஸ்துமா போன்ற சுவாச நெருக்கடியை எதிர்கொண்ட 88 வயதான கத்தோலிக்க பேரவையின் தலைவருக்கு சனிக்கிழமை இரண்டு யூனிட் இரத்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

பெப்ரவரி 14 அன்று போப் பிரான்சிஸ், ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த சனிக்கிழமை (22 அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக வத்திக்கான் முதன்முதலில் அறிவித்தது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் ஒரு அறிவிப்பில், பரிசுத்த தந்தையின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது, எனினும் நேற்று இரவு (சனிக்கிழமை இரவு) முதல் அவருக்கு சுவாசக் கோளாறுகள் எதுவும் ஏற்படவில்லை என்று சுட்டிக்காட்டியது.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட இரத்தப் பரிசோதனைகள் சிறுநீரக செயல்பாட்டில் இலகுவான பாதிப்பை குறிக்கின்றன, இது தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் வத்திக்கான் கூறியது.

2013 ஆம் ஆண்டு முதல் போப்பாக இருக்கும் பிரான்சிஸ், கடந்த இரண்டு ஆண்டுகளில் உடல்நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு இளம் வயதிலேயே நுரையீரல் ஒவ்வாமை ஏற்பட்டு, ஒரு நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டதால், அவர் நுரையீரல் தொற்றுக்கு ஆளாக நேரிடும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1422751

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடும் குளிர் கொட்டும் மழையில் வத்திக்கானின் சென்பீட்டர்ஸ் சதுக்கத்தில் பாப்பரசருக்காக மக்கள் பிரார்த்தனை

Published By: RAJEEBAN

25 FEB, 2025 | 02:06 PM

image

cbs news

உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பரிசுத்த பாப்பரசர் குணமடையவேண்டும் என  வத்திக்கானின் சென்பீட்டர்ஸ் சதுக்கத்தில் கடும் குளிரின் மத்தியிலும்நூற்றுக்கணக்கானவர்கள்  பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

சென்பீட்டர்ஸ் சதுக்கத்தில் பிரார்த்தனைகளில் ஈடுபட்டவர்கள் பாப்பரசர் பிரான்சிஸின்  உடல்நிலைகுறித்து கவலை வெளியிட்டதுடன் அவர் விரைவில் குணமடைவார் என நம்பிக்கையும் வெளியிட்டனர்.

vatican_prayer1.jpg

கத்தோலிக்க திருச்சபையை புதிய பாதையில் செலுத்தும் அவரது முயற்சிகளிற்காக அந்த மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மழைநாளில் கடும் குளிரின் மத்தியில் இடம்பெற்ற இந்த பிரார்த்தனைகளிற்கு வத்திக்கானின்; தலைமை தாங்கினார்.

vatican_pray_4.jpg

வத்திக்கான் பரிசுத்த பாப்பரசரின் உடல்நிலை குறித்து முன்னைய நாட்களை விட நம்பிக்கை அளிக்ககூடிய செய்தியை வெளியிட்ட போதிலும்,இருப்பினும் சென்பீட்டர்ஸ் சதுக்கத்தில் காணப்பட்டவர்களின் மனோநிலை பெரும்பாலும் சோகமானதாகவே காணப்பட்டது.அங்கு காணப்பட்ட 4000க்கும் அதிகமானவர்கள் தாங்கள் பாப்பரசரின் இறுதிநாட்களிற்காகவே  ரோமிற்கு செல்லவேண்டியிருக்கும் என்பதை உணர்ந்திருந்தனர்.

vatican_prayer_3.jpg

பாப்பரசர் துன்புறுவதை பார்ப்பது மனவேதனையை ஏற்படுத்துகின்றது என கர்தினால் பியட்டிரோ பரோலின் தெரிவித்தார்.அதேவேளை கிறிஸ்தவ திருச்சபைக்கு அவர் ஆற்றிய பணிகளிற்காக நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம் என அவர் குறிப்பிட்டார்.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்கற்றுக்கொடுத்த விடயங்களிற்கு நன்றிதெரிவிப்பதற்காக அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விடயங்களிற்கு நன்றி தெரிவிப்பதற்காக தங்கள் சமூகத்தினர்அங்குவந்துள்ளனா என மெக்சிக்கோவை சேர்ந்த என மெக்சிக்கோவை சேர்ந்த மதகுரு ஒருவர் தெரிவித்தார்.

பலமொழிகளை பேசுபவர்கள் அங்கு திரண்டிருப்பது கத்தோலிக்க திருச்சபைக்கு பெரும் ஆறுதல் என கர்தினால் அஞ்சலோ பக்னாசோ தெரிவித்தார்.

ஆராதனை ஆரம்பமாவதற்கு முன்னர் குடைகளுடன் வந்த சிக்காக்கோவை சேர்ந்த கத்தோலிக்க சுற்றுலாப்பயணிகள் சென்பீட்டர்சில்  நாளாந்த ஆராதனைகளில் பாப்பரசருக்காக பிரார்த்தனை செய்ததாக தெரிவித்ததுடன் மீண்டும் வருவதற்கு தீர்மானித்ததாக குறிப்பிட்டனர்.

பாப்பரசரின் பிரான்சிஸின் இறுதி நாட்களிற்காக ரோமில் இருப்போம் என்பது ஏனைய பலரை போல தங்களுக்கும் தாங்கமுடியாத விடயமாக காணப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

vatican_pray5.jpg

நாள்; நேரம் குறித்து எவருக்கும் எதுவும் தெரியாது எனினும் இது வரலாற்றுதருணம் என எட்வேர்ட் பேர்ஜெக் என்பவர் தெரிவித்தார்.

பெருவை சேர்ந்த ஹட்சுமி வில்லானுவேவாவும் அதே உணர்வை வெளிப்படுத்தினார்.பரிசுத்த பாப்பரசர் ஜோன் போலை தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்த அவர் ஆனால் பிரான்சிஸ் இலத்தீன் அமெரிக்க பாப்பரசர் என்பதால் நெருக்கமாக உணர்ந்ததாக தெரிவித்தார்.

நாங்கள் பாப்பரசருக்காக பிரார்த்தனை செய்யவந்தேன் அவர் விரைவில் குணமடைவார்,அவர் சமாதானத்தின் செய்தியை பகிர்ந்துகொள்ளும் பெரும் பணியில் ஈடுபட்டுள்ளார் என அவர் தெரிவித்தார்.

குடியேற்றவாசிகள் குறித்து பாப்பரசர் வெளிப்படுத்திய கருணையை அவர் பாராட்டினார்.

vatican_stpeter.jpg

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாப்பரசருக்காகதாங்கள் பிரார்த்திப்பதாக கத்தோலிக்கர்கள் அல்லாதவர்களும் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/207620

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-437.jpg?resize=750%2C375&ssl

போப் பிரான்சிஸின் உடல் நிலை முன்னேற்றம்!

இரட்டை நிமோனியாவுடன் இரண்டு வாரங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புனித போப் பிரான்சிஸ், மற்றொரு அமைதியான இரவைக் கழித்ததாகவும், தற்போது ஓய்வெடுத்து வருவதாகவும் வத்திக்கான் வெள்ளிக்கிழமை (28) தெரிவித்துள்ளது.

88 வயதான பிரான்சிஸ், பெப்ரவரி 14 அன்று ரோமின் ஜெமெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

முதலில் மூச்சுக்குழாய் ஒவ்வாமையால் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது, பின்னர் அது மிகவும் தீவிரமான ஒன்றாக வளர்ந்தது கண்டறியப்பட்டது.

இந்த நிலயைில் வியாழக்கிழமை மருத்துவப் புதுப்பிப்பில், போப்பின் உடல்நிலையில் “தொடர்ந்து முன்னேற்றம் காணப்பட்டது” என்று வத்திக்கான் கூறியது.

போப்பின் உடல்நிலை குறித்து விவாதிக்க அதிகாரம் இல்லாததால் பெயர் வெளியிட விரும்பாத வத்திக்கான் அதிகாரி ஒருவர், வியாழக்கிழமை அறிக்கை போப்பின் உடல்நிலை “மோசமானது” என்று விவரிக்காத தொடர்ச்சியான இரண்டாவது அறிக்கை என்று குறிப்பிட்டார்.

அவர் ஆபத்தான கட்டத்தை கடந்து விட்டார் என்று கூறலாம் என்றும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

வத்திக்கானின் மனித மேம்பாட்டு அலுவலகத்தின் தலைவரான கார்டினல் மைக்கேல் செர்னி, இத்தாலியின் லா ஸ்டாம்பா செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், பிரான்சிஸின் உடல் நிலை நாம் எதிர்பார்ப்பதை விட மொதுவாக குணமடைந்து வருவதாக குறிப்பிட்டார்.

https://athavannews.com/2025/1423542

  • கருத்துக்கள உறவுகள்

ஆள் முடிய முதலே எப்படி அடக்கம் செய்வது என்று ஒத்திகைகள் வேறு நடக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஆள் முடிய முதலே எப்படி அடக்கம் செய்வது என்று ஒத்திகைகள் வேறு நடக்கின்றன.

பாப்பரசர் ,வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதவியில் இருப்பவர் .எனவே இறுதி நிகழ்வுகள் பெரும் ஆயத்தங்களுடன்தான் தொடங்கும்.அதற்காக முற்கூட்டியே திடடமிடுகிறார்கள் என எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

thumb_large_vatican_prayer.jpg

எத்தனையோ கிறிஸ்தவ குழந்தைகள் பட்டினியில் சாகிறார்கள்

இவர்கள் தங்க கட்டிகளின் மேல் படுத்து கிடக்கிறார்கள் ........ இந்த கொடியவர்கள் வயதான காலத்தில் சாகப்போகிறார்கள் என்று இங்கு ஒரு அடி முடடால்கள் கூட்டம் அழுதுகொண்டு கிடக்கிறது.

வத்திக்கானில் சொத்து மதிப்பு பலநூறு பில்லியன் டாலர்கள்

இவர் இறந்ததும் இன்னொரு ரட்ஷகரை அறிமுகம் செய்து வைப்பார்கள் அவர் மொத்த உலகையும் இரடசிப்பார். ரோம இராச்சியம் அழிந்துபோகவில்லை அது வத்திக்கான் என்று பெயர்மாற்றம் கொண்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-28.jpg?resize=750%2C375&ssl=

சுவாசக் கோளாறுக்குப் பின் போப் பிரான்சிஸ் விழிப்புடன் – வத்திக்கான்!

திங்கட்கிழமை (03) பிற்பகல் இரண்டு முறை “கடுமையான சுவாசக் கோளாறு” ஏற்பட்டதைத் தொடர்ந்து புனித போப் பிரான்சிஸ் விழிப்புடன் இருப்பதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.

88 வயதான போப்பாண்டவர் தனது சுவாசத்திற்கு உதவ ஆக்ஸிஜன் முகக்கவசம் மற்றும் வென்டிலேட்டரைப் பயன்படுத்துவதை மீண்டும் தொடங்கியுள்ளார்.

எனினும், அவர் எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் உள்ளதாக வத்திக்கான் குறிப்பிட்டுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப்பாண்டவர் 18 நாட்களுக்கு முன்பு நிமோனியாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து கடுமையான உடல் நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

வெள்ளிக்கிழமை, போப் பிரான்சிஸ் வாந்தியுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட சுவாசக் கோளாறுக்கு ஆளானார் என்றும் வத்திக்கான் தெரிவித்துள்ளது.

உடல் நலப் பிரச்சினையால் ஈஸ்டருக்கு வழிவகுக்கும் ஆறு வார காலமான தவக்காலத்தின் முதல் நாளைக் குறிக்கும் இந்த புதன்கிழமை ஊர்வலம் மற்றும் திருப்பலியையும் அவர் தவறவிடுவார்.

இதனிடையே, திங்கட்கிழமை (03) மாலையில் நூற்றுக்கணக்கான கத்தோலிக்கர்கள் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் வெளியே கூடி போப்பின் உடல்நலத்திற்காக பிரார்த்தனை செய்தனர்.

https://athavannews.com/2025/1423929

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போப் பிரான்சிஸ் எப்படி இருக்கிறார்?; வெளியான புதிய தகவல்

போப் பிரான்சிஸின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. போப் பிரான்சிஸுக்கு ஒரே நேரத்தில் மூச்சுக் குழாயின் 2 இடங்களில் பாதிப்பு ஏற்பட்டதால், மீண்டும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.

கத்தோலிக்கத் தலைவரான போப் பிரான்சிஸ் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டதை அடுத்து, கடந்த மாதம் 14ஆம் திகதி ரோமில் உள்ள ஜெமிலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 வாரத்தில் இரண்டு முறை நிமோனியாவால் பாதிக்கப்பட்ட போப்புக்கு, ஒக்சிஜன் உதவியோடு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், செயற்கை சுவாசத்தின் உதவியின்றி அவர் இயல்பாக சுவாசித்ததோடு, அவராகவே காலை உணவு எடுத்துக்கொண்டதாகவும், சிறிது காபி அருந்தியதாகவும் வாடிகன் தேவாலயம் தெரிவித்தது.

இந்நிலையில், போப் பிரான்சிஸுக்கு நேற்று ஒரே நேரத்தில் மூச்சுக் குழாயின் 2 இடங்களில் பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால், அவருக்கு மீண்டும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாக வாடிகன் குறிப்பிட்டுள்ளது.

https://thinakkural.lk/article/315596

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-96.jpg?resize=750%2C375&ssl=

உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி; வைத்தியசாலையிலிருந்து வந்த போப்பின் குரல் செய்தி!

நிமோனியாவால் வைத்தியசாலையில் சுமார் மூன்று வாரங்கள் போராடி வரும் போப் பிரான்சிஸ், தான் குணமடைய பிரார்த்தனை செய்து வருபவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஆடியோ செய்தியை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

அந்த குரல் பதிவில் அவர்,

சதுக்கத்திலிருந்து என் உடல்நலத்திற்காக நீங்கள் செய்த பிரார்த்தனைகளுக்கு என் இதயப் பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இங்கிருந்து உங்களுடன் இணைகிறேன் – என்று செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஒளிபரப்பப்பட்ட செய்தியில் பிரான்சிஸ் கூறினார்.

மேலும், கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக, கன்னிகை உங்களைப் பாதுகாக்கட்டும். நன்றி – என்று அவர் தனது தாய்மொழியான ஸ்பானிஷ் மொழியில் பேசும்போது மூச்சு விட சிரமப்பட்டார்.

இதன்போது, சில வார்த்தைகளில் வெளியில் விடவும் அவர் அவதிப்பட்டார்.

88 வயதான பிரான்சிஸ், பெப்ரவரி 14 அன்று ரோமின் ஜெமெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உலகம் அவரது குரலைக் கேட்பது இதுவே முதல் முறை.

போப்பின் உடல் நலவுக்காக பிரார்த்தனை செய்ய ஒவ்வொரு மாலையும் புனித பீட்டர் சதுக்கத்தில் அவரது நலன் விரும்பிகள் கூடி வருகின்றனர்.

18984234491741322209.jpg?ssl=1

வியாழக்கிழமை (06) அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் அவரது செய்தியைக் கேட்டதும் கைதட்டினர்.

2013 முதல் உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருக்கும் ஆர்ஜென்டீனியர் “நிலையான” நிலையில் இருப்பதாக வத்திக்கான் வியாழக்கிழமை முன்னதாகக் கூறியது.

https://athavannews.com/2025/1424372

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

download-7.jpg?resize=750%2C375&ssl=1

போப் பிரான்சிஸ்ஸின் புதிய புகைப்படம் வெளியானது!

உடல் நலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ்,  உடல் நலம் தேறி வருவதாகத் தகவல் வெளிவந்த நிலையில், அதனை உறுதிப் படுத்தும் வகையில் அவரது புதிய புகைப்படத்தை வத்திக்கான்  நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

குறித்த புகைப்படத்தில்  போப் பிரான்சிஸ்  ஜெமில்லி மருத்துவமனையில் சக பாதியார்களுடன்  பலிபீடத்தின் முன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்து திருப்பலியில்  பங்கேற்றிருப்பதைக்  காணலாம்.

போப் பிரான்சிஸ் கடந்த பெப்ரவரி  மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  வெளியான முதல் புகைப்படம் இதுவாகும்.

…..

88 வயதான போப் பிரான்சிஸ் மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பெப்பிரவரி மாதம் 14-ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு அண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1425408

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிகிச்சைக்கு பின்னர் பாப்பரசர் எப்படி இருக்கிறார்; வத்திக்கான் வெளியிட்ட புகைப்படம்

போப் பிரான்சிஸ் உடல் நலம் தேறிய நிலையில், தேவாலயத்தில் நடந்த திருப்பலி நிகழ்ச்சியில் பங்கேற்ற படத்தை வத்திக்கான் வெளியிட்டுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், (88, வயது) முதுமை காரணமாக உடல் நலம் குன்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல்ரீதியாக பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறார்.

கடந்த பெப்ரவரி14ம் திகதி ரோமில் உள்ள அகஸ்டினோ ஜெமெலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

முதலில் அவர் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரது உடல்நிலை முன்னேற்றம் கண்டு வருகிறது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Thinakkural.lk
No image preview

சிகிச்சைக்கு பின்னர் பாப்பரசர் எப்படி இருக்கிறார்; வத்திக...

போப் பிரான்சிஸ் உடல் நலம் தேறிய நிலையில், தேவாலயத்தில் நடந்த திருப்பலி நிகழ்ச்சியில் பங்கேற்ற படத்தை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், (88, […]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.