Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்த துப்பாக்கிதாரியின் காதலி கைது

Published By: VISHNU

21 FEB, 2025 | 09:26 PM

image

கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்த துப்பாக்கிதாரியின் காதலி என்று கூறப்படும் ஒரு பெண்ணை மஹரகம பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பெண் கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவவைக் கொலைசெய்த பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தனது காதலியுடன் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகியிருந்தமை தெரியவந்துள்ளது.

அதற்காக, அவளை நீர்கொழும்பு பகுதிக்கு அழைத்துச் செல்ல ஒரு நபர் மஹரகம பகுதிக்கு வந்துள்ளார்.

மேலும், அந்த நபரை கைது செய்த பொலிசார், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைத்தனர்.

மேற்கு மாகாண தெற்குப் பொறுப்பான துணைப் பொலிஸ் மா அதிபர் (டி.ஐ.ஜி) கயங்க மாரப்பனவின் அறிவுறுத்தலின் பேரில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/207327

  • Replies 81
  • Views 3.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    பாக்க நம்ம அர்ச்சனா மாதிரி இருக்கார் 🤣

  • goshan_che
    goshan_che

    பாலாவி இப்படியுமா பெயர் வைப்பார்கள்🤣 இல்லையாம்…பின்புர செவ்வந்தியாம்🤣

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    Clean Srilanka ல, அவனும் பங்கெடுக்க நினைத்தானோ..... என்னவோ... அதுவும் ID ல Covid QR code வச்சி அடிச்சான் பாரு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

480496289_1118544380283304_1985372755254

நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை வீரராக்கியுள்ளீர்கள்; இது முறையற்றதொரு செயற்பாடு - சாமர சம்பத்

Published By: VISHNU

21 FEB, 2025 | 09:04 PM

image

( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

டுபாயில் இருந்து கிடைக்கப் பெற்ற காட்டிக்கொடுப்பு தகவலுக்கமைவாகவே கொழும்பு நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேக நபர் 8 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டார். இந்த சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை வீரராக்கியுள்ளீர்கள். இது முறையற்றதொரு செயற்பாடு என்று எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.

கொழும்பு நீதிமன்றத்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணைகள் குறித்து வெள்ளிக்கிழமை (21) பாராளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்கள் தொடர்பில் தனது கருத்தை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

புதுக்கடை  நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டு  பிரதான  சந்தேக  நபரை 8 மணித்தியாலங்களில்  கைது செய்தாக பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் கூறினார். பொலிஸ் திணைக்களம் 8 மணித்தியலங்களில் திறமையாக சந்தேக நபரை கைது செய்தமை தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால் மற்றைய சந்தேக நபரான பெண்ணை இதுவரை கைது செய்யவில்லை. அந்தப் பெண் நீர்கொழும்புக்கு சென்று துப்பாக்கிதாரியிடம் இருந்து பிரிந்து தனியாக சென்றுள்ளார். ஆனால் பிரதான  துப்பாக்கிதாரி மாத்திரமே  கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் நீங்கள் (பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரை நோக்கி)  இவ்வாறு  கூறினாலும் ஊடக செய்திகளில் டுபாயில் இருந்து துப்பாக்கிதாரி காட்டிக்கொடுக்கப்பட்டமையினாலேயே துப்பாக்கிதாரியை கைது செய்தாக கூறப்பட்டுள்ளது. அதன்படி இது எமது திறமையால் அன்றி டுபாயில் இருந்து பாதாள கும்பலால் காட்டிக்கொடுத்தமை ஊடாகவே அவர் கைதாகியுள்ளார். இப்படிதான் ஊடகங்கள் கூறுகின்றன.

இதேவேளை சந்தேக நபரின் படங்களை வெளியிட்டு நாட்டுக்கு வீரராக்கியுள்ளீர்கள். இவ்வாறு புகைப்படங்களை பகிர்வதற்கு இடமளிக்க வேண்டாம். அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது பாதுகாப்பு தரப்பினரை பார்த்து சிரித்து, காதல் கொள்வது போல் காணொளிகள், படங்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்கள் எவ்வாறு சமூக வலைத்தளங்களுக்கும், ஊடகங்களுக்கும் வெளியாகின என்பது தொடர்பில் விசாரணை செய்யுங்கள் என்றார்.

https://www.virakesari.lk/article/207326

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இதேவேளை படங்களை வெளியிட்டு நாட்டுக்கு வீரராக்கியுள்ளீர்கள்.

உங்கள் படமும் வந்திருக்கே ஐயா.👇😁

2 hours ago, ஏராளன் said:

21 FEB, 2025 | 09:04 PM

image

( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்திலேயே சட்டவிரோத கும்பல் தலைவரை கொன்ற நபர்

ஒரு புத்தகத்தின் உள்ளே ஓட்டை போட்டு அந்த கைத்துப்பாக்கியை மறைத்து வைத்து நீதிமன்றத்திற்கு கொண்டு வந்துள்ள ஒரு பெண், அதை துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு வழங்கியுள்ளார். ஆனால் அந்தப் பெண் இன்னும் தலைமறைவாக உள்ளார் என அறியப்படுகின்றது.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிரதிவாதியை சுடப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ஒரு புத்தகத்துக்குள் மறைத்து வைத்துக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது

கட்டுரை தகவல்

  • எழுதியவர், கோ ஈவ்

  • பதவி, பிபிசி செய்திகள்

  • 21 பிப்ரவரி 2025

குற்றப் பின்னணி உள்ள சட்டவிரோத கும்பல் ஒன்றின் தலைவர், இலங்கையில் நீதிமன்றத்தின் உள்ளேயே, வழக்கறிஞர் வேடமிட்ட ஒரு நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை அளித்த தகவலின்படி, தாக்குதல் நடத்திய நபர் ஒரு கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளார்.

ஒரு புத்தகத்தின் உள்ளே துளையிட்டு அந்த கைத்துப்பாக்கியை மறைத்து வைத்து நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்துள்ள ஒரு பெண், அதைத் துப்பாக்கிச்சூடு நடத்திய நபருக்கு வழங்கியுள்ளார். ஆனால் அந்தப் பெண் இன்னும் தலைமறைவாக உள்ளதாக அறியப்படுகிறது.

சட்டவிரோத கும்பலின் தலைவர் சஞ்சீவ குமார சமரரத்னே, வழக்கு விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மேலும் அவர் பல்வேறு கொலை வழக்குகளில் சந்தேகத்திற்குரிய நபராக இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தலைநகர் கொழும்பில் நடந்த இந்தத் துப்பாக்கிச்சூடு, கும்பல்களுக்கு இடையிலான போட்டியின் தொடர்ச்சியாக நடந்துள்ள கொலைச் சம்பவங்களில் ஒன்று.

நாட்டில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் கும்பல்களை அடக்குவோம் என அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ள நிலையில், இது போன்ற சம்பவம் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கணேமுல்லே சஞ்சீவ என்று பிரபலமாக அறியப்படும் அந்த சட்டவிரோதக் கும்பலின் தலைவர், 2023 செப்டம்பரில் கைது செய்யப்பட்டதில் இருந்து காவலில் இருந்தார்.

காவல்துறை தெரிவித்த தகவலின்படி, அவர் காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் புதன்கிழமையன்று நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பின்னர், சுடப்பட்டுக் காயமடைந்ததும் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரால் சம்பவ இடத்திலிருந்து தப்பிக்க முடிந்தாலும், பின்னர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அதிகாரிகள் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் அவரை வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடும் நிலையில், அவர் பல்வேறு பெயர்களைப் பயன்படுத்தி வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் 25 வயதான பின்புர தேவகே இஷாரா செவ்வாண்டிதான் அந்தப் பெண் குற்றவாளி என்று காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. அதிகாரிகள், அந்தப் பெண்ணைப் பற்றிய தகவல் வழங்குபவருக்குப் பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து, துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட இருவருக்கும் உதவியதாக சந்தேகிக்கப்படும் ஒரு காவலர் மற்றும் ஒரு வாகன ஓட்டுனரைக் கைது செய்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இலங்கையில் வழக்கறிஞர் வேடமிட்டு சட்டவிரோத கும்பலின் தலைவரைக் கொன்ற நபர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

புதன்கிழமையன்று நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் கும்பல்களைக் கட்டுப்படுத்துவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்தனர். நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் இதை "முக்கியமான பாதுகாப்புப் பிரச்னை" என்று குறிப்பிட்டார்.

டிசம்பரில் இத்தகைய குற்றச் செயல்களை ஒடுக்குவதாக உறுதியளித்திருந்த சுகாதாரம் மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, "ஒருங்கிணைக்கப்பட்ட நிழல் உலகக் கும்பல்களின் செயல்களை அரசு மிகுந்த முக்கியத்துவத்துடன் எடுத்துக்கொள்ளும்" என்று புதன்கிழமையன்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம், நீதிமன்றத்தின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அதிகாரிகள் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, குறிப்பிட்ட நபர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது ஆயுதமேந்திய காவலர்களை நிறுத்துவது உள்ளிட்ட புதிய பாதுகாப்பு நெறிமுறைகள் செயல்படுத்தப்படுகின்றன.

ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் பணியாளர்கள் பொதுவாக நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படுவதில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வியாழக்கிழமை தெரிவித்தார்.

காவல்துறையின் தரவுகளை மேற்கோள்காட்டிய ஏ.எஃப்.பி செய்தி முகமை, இந்த ஆண்டில் மட்டும் கும்பல்களுக்கு இடையிலான விரோதத்தின் காரணமாக ஏற்பட்ட தொடர் துப்பாக்கிச்சூடுகளில் குறைந்தபட்சம் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c04zp6kzy3po

  • கருத்துக்கள உறவுகள்

கணேமுல்ல சஞ்ஜீவ கொலை பயங்கரவாத சம்பவமில்லை- பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகநபர்களை தடுத்துவைக்க முடியாது – அம்பிகா சற்குணநாதன்

22 FEB, 2025 | 02:51 PM

image

கணேமுல்ல சஞ்ஜீவ கொலை பயங்கரவாத சம்பவமில்லை சந்தேகநபர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்க முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்

அவர் சமூக ஊடக பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது

கணேமுல்ல சஞ்ஜீவ கொலை சந்தேகநபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்படவுள்ளனர் என்ற தகவல் உண்மை என்றால்இது பயங்கரவாத தடைச்சட்டத்தை துஸ்பிரயோகம் செய்யும் செயல், இது பயங்கரவாத குற்றமல்ல,

பயங்கரவாத குற்றமல்லாதவற்றிற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தும்போது அதுவழமையானதாக மாற்றப்படுகின்றது,

இது அதளபாதாளத்தை நோக்கிய வீழ்ச்சியாகும்.தேசிய மக்கள் சக்தி அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என தெளிவாக தெரிவித்துள்ளது

நம்பகதன்மை மிக்க புலனாய்வு தகவல்களின் அடிப்படையிலேயே பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகத்தின் இயக்குநர் தெரிவித்தார் என ஒக்டோபர் 29ம் திகதி தகவல்கள் வெளியாகியிருந்தன.

அரசியல் பழிவாங்கலுக்காக அதனை பயன்படுத்தமாட்டோம்,என அவர் தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/207373

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-315.jpg?resize=750%2C375&ssl

கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கி சூடு; மேலும் மூவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலையுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைதுகளுடன் குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் மொத்த எண்ணிக்கையானது 08 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட மூவரும் கம்பஹா மற்றும் உடுகம்பொல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்தமை, குற்றம் நடந்த தினத்திற்கு முந்தைய நாள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு துப்பாக்கியை வழங்கியமை போன்ற குற்றச்சாட்டில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் அஸ்கிரிய, கம்பஹா மல்வத்தை வீதியைச் சேர்ந்த தமிது லக்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதேநேரம், படுகொலை சம்பவத்தின் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரையும் மற்றைய சந்தேக நபரையும் முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றதற்காகவும், குற்றச் செயல்களுக்கு உதவிய குற்றத்திற்காகவும் 25 வயதுடைய தமித் அஞ்சன நயனஜித் என்ற இளைஞனும், அஸ்கிரியவல்பொல, உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸாரும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2025/1422604

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

481670875_1045767324254906_8526073705386

480829433_1045769250921380_3930373528548

  • கருத்துக்கள உறவுகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் பதில் பொலிஸ்மா அதிபருக்கும் தொடர்பு? ; ரவி செனவிரத்ன நடவடிக்கை எடுப்பாரா ? - உதய கம்மன்பில கேள்வி

Published By: DIGITAL DESK 2

24 FEB, 2025 | 05:13 PM

image

(எம்.மனோசித்ரா)

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கும் தொடர்பிருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே தகவல் கிடைத்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறி பதில் பொலிஸ்மா அதிபர் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரவி செனவிரத்ன நடவடிக்கை எடுப்பாரா  என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில கேள்வியெழுப்பினார்.

பிவிதுரு ஹெல உருமய அலுவலகத்தில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு கேள்வியெழுப்பிய அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதற்கு முதல் வாரம் கம்பஹா நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்படவிருந்த போது அவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்படவிருந்ததாக தனக்கு தகவலொன்று கிடைத்ததாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக அன்றைய தினம் மெய்நிகர் ஊடாக அவரை வழக்கு விசாரணைகளில் முன்னிலைப்படுத்தியதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். கம்பஹா நீதிமன்றத்தில் சஞ்சீவ மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்படவிருந்தமைக்கான காரணம் அந்த நீதிமன்றத்தின் மீதுள்ள கோபத்தால் அல்ல, சஞ்சீவ மீதிருந்த கோபத்தினாலாகும்.

கம்பஹா நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதலுக்கான சந்தர்ப்பத்தை பொலிஸார் தடுத்துள்ளனர் என்பதால், அதனை கொழும்பு நீதிமன்றத்தில் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கலாம் என்பதை ஊகிப்பதற்கு பெரும் புலமை தேவையில்லை. ஆனால் தகவல் கிடைத்திருந்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத பதில் பொலிஸ்மா அதிபர், கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்படுவதற்கு இடமளித்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றார்.

கொழும்பிலும் சஞ்சீவ மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என பதில் பொலிஸ்மா அதிபர் சிந்திக்காமல் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. சஞ்சீவ மீது இலக்கு வைத்தவர்கள் கைது செய்யப்படும் வரை அவருக்கான அச்சுறுத்தல் நீங்கவில்லை என்பதையும் பதில் பொலிஸ்மா அறிந்திருப்பார். அந்த வகையில் இந்தக் கொலையில் பதில் பொலிஸ்மா அதிபருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற நியாயமான சந்தேகம் எமக்கு ஏற்படுகிறது.

அவ்வாறெனில் பதில் பொலிஸ்மா அதிபர் மீது யார் நடவடிக்கை எடுப்பது? பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கே அந்த அதிகாரம் காணப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் 12 நாட்களுக்கு முன்னரே தகவல் கிடைத்திருந்தும் நடவடிக்கை எடுக்கத் தவறிய ரவி செனவிரத்னவுக்கே இந்த பொறுப்பு காணப்படுகிறது. இவர் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியிலிருக்கும் வரை புலனாய்வு தகவல்கள் கிடைத்தாலும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமலிருக்கும் நோய் ஒருபோதும் குணமடையப் போவதில்லை என்றார். 

https://www.virakesari.lk/article/207550

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 20/2/2025 at 12:02, goshan_che said:

இப்படியுமா பெயர் வைப்பார்கள்🤣

இல்லையாம்…பின்புர செவ்வந்தியாம்🤣

👉 https://www.facebook.com/reel/1769672023853237 👈

👆 இந்தப் பெயர்களை ஒருக்கால் பாருங்கள்.

சிங்களவனின் பெயர் பரவாயில்லை என்று தோன்றும்.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு நீதிமன்றப் படுகொலையின் பின்னணியில் இந்தியா?

இலங்கையின் தலைநகர் கொழும்பில் (Colombo) உள்ள புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் ஒரு சட்டத்தரணி போன்ற தோற்றத்துடனும், சட்டத்தரணியின் அடையாள அட்டையுடன் நுழைகின்றார்.

சட்டத்தரணியின் தேற்றத்தில் வருகின்ற ஒரு பெண் - கொலையாளியிடம் ஒரு சட்டப் புத்தகத்தை ஒப்படைக்கின்றார்.

சட்டப்புத்தகத்தின் உள்ளே - அதன் பக்கங்கள் கச்சிதமாக நீக்கப்பட்டு, அதனுள்ளே ஒரு கைத்துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றது.

வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது - விசாரணைக் கூண்டில் நின்றுகொண்டிருந்த கனேமுல்ல சஞ்சீவ என்ற பாதாள உலக குழு ஒன்றின் தலைவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, சாதாரணமாக மக்களோடு மக்களாகக் கலந்து தப்பிச் சென்றிருந்தார் கொலையாளி.

இந்தக் கொலையின் பின்னணியிலி இந்தியாவின் (India) கரங்கள் இருக்கின்றதா என்கின்ற கோணத்தில் ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: 

https://ibctamil.com/article/conspiracy-over-colombo-court-incident-1740496285#google_vignette

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

481054033_1048112774020361_6717311417914

482074219_1048070464024592_4974261820437

  • கருத்துக்கள உறவுகள்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: 20 பாதுகாப்பு அதிகாரிகளின் தொலைபேசிகள் பறிமுதல்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக, அன்றைய தினம் நீதிமன்றத்தில் அவரைப் பாதுகாத்து வந்த காவல்துறை சிறப்புப் படை மற்றும் சிறைச்சாலைகள் துறையைச் சேர்ந்த சுமார் 20 அதிகாரிகளின் கையடக்கத் தொலைபேசிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை சிறப்பு அதிரடிப்படை மற்றும் சிறைச்சாலைகள் துறையைச் சேர்ந்த சுமார் 30 அதிகாரிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய கொழும்பு குற்றப்பிரிவு அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.

வாக்குமூலங்கள் 

அதன்படி, அவர்களின் தொலைபேசிகளை சம்பந்தப்பட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: 20 பாதுகாப்பு அதிகாரிகளின் தொலைபேசிகள் பறிமுதல்! | Ganemulla Sanjeewa Murder Case Investigation

இதேவேளை, கொலை சம்பவம் தொடர்பாக 15 சிறைச்சாலை அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொலைத் திட்டம்

அத்தோடு, கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு காவல் நிலையத்தின் காவல் அதிகாரி, கொலைத் திட்டம் குறித்து ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: 20 பாதுகாப்பு அதிகாரிகளின் தொலைபேசிகள் பறிமுதல்! | Ganemulla Sanjeewa Murder Case Investigation

இந்த கொலையின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள தற்போது தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி என்ற பெண் சந்தேகநபருடன் தொடர்பு வைத்திருந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/ganemulla-sanjeewa-murder-case-investigation-1740653459

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

இந்த கொலையின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள தற்போது தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி என்ற பெண் சந்தேகநபருடன் தொடர்பு வைத்திருந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/ganemulla-sanjeewa-murder-case-investigation-1740653459

செவ்வந்தியை கைது செய்து விட்டார்களா?

மேலே உள்ள பந்தியில்.. ஐ.பி.சி. ….தேடப்பட்டு வரும் என்றும், கைது செய்யப்பட்டிருந்தமை என்றும் குளப்பமாக எழுதியுள்ளது போல் எனக்குத் தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

செவ்வந்தியை கைது செய்து விட்டார்களா?

மேலே உள்ள பந்தியில்.. ஐ.பி.சி. ….தேடப்பட்டு வரும் என்றும், கைது செய்யப்பட்டிருந்தமை என்றும் குளப்பமாக எழுதியுள்ளது போல் எனக்குத் தோன்றுகின்றது.

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு காவல் நிலையத்தின் காவல் அதிகாரி, கொலைத் திட்டம் குறித்து ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த பொலீஸ் அதிகாரி கைதை குறிப்பிடுகிறார்கள் அண்ணை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு காவல் நிலையத்தின் காவல் அதிகாரி, கொலைத் திட்டம் குறித்து ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த பொலீஸ் அதிகாரி கைதை குறிப்பிடுகிறார்கள் அண்ணை.

இப்போ புரிந்து விட்டது. நன்றி ஏராளன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

செவ்வந்தியை கைது செய்து விட்டார்களா?.........................

பின்புர.....பிடிபட்டிருந்தாலும் (கைது) பாதுகாப்பு காரணங்களுக்காக சொல்லமாட்டார்கள் ..யார் முதலில் பிடித்தது என்ற சர்ச்சை முப்படைகளுக்கும் ,அதிரடிப்படை,பொலிஸார் இடையே ஏற்பட வாய்ய்பு இருக்கு என்ற காரணத்தால்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-31.jpg?resize=750%2C375&ssl=

கணேமுல்ல சஞ்சீவ சம்பவ துப்பாக்கிதாரி மற்றொரு துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்பு!

பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி, கடந்த ஆண்டு டிசம்பரில் கந்தானையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

2024 டிசம்பர் 13 அன்று கந்தானையில் உள்ள ஒரு வீட்டில் சமிந்து தில்ஷான் பியுமாங்க கந்தானாராச்சி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளில், வெளிநாட்டில் வசிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் வழிகாட்டலின் கீழ் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவு (CCD) சந்தேக நபரை 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரித்த பின்னர் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.

27 வயதான சந்தேக நபர் பெப்ரவரி மாதம் கொழும்பு நீதிமன்றத்திற்குள் இருந்தபோது ஒரு வழக்கறிஞராக மாறுவேடமிட்டு கணேமுல்ல சஞ்சீவா மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

https://athavannews.com/2025/1423943

  • கருத்துக்கள உறவுகள்

‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை  ; சந்தேகநபர் தொடர்பில் தகவல் வழங்கினால் ரூ.12 இலட்சம் சன்மானம்

Published By: Digital Desk 3

05 Mar, 2025 | 09:08 AM

image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த  ‘கணேமுல்ல சஞ்சீவ’வின் கொலையுடன் தொடர்புடைய பெண் சந்தேகநபரைக் கைது செய்வதற்கு தகவல் வழங்குபவர்களுக்கு 12 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதிமன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் பெண் சந்தேகநபர் தலை மறைவாகியுள்ளார்.

அவரை கைது செய்வதற்கு உண்மையான தகவல்களை பொதுமக்களை வழங்குமாறு கோரி பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தகவல்களை பின்வரும் எண்களுக்குத் தெரிவிக்கலாம்:

• பணிப்பாளர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு  (CCD): 071-8591727

• பொறுப்பதிகாரி (OIC), கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு  (CCD): 071-8591735

https://www.virakesari.lk/article/208312

  • கருத்துக்கள உறவுகள்

தங்க நகைகளுடன் இந்தியாவுக்கு தப்பியோடியுள்ள செவ்வந்தி - அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்லே சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இளம் பெண் இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று அது தொடர்பில் விசாரணை நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் மறைந்திருப்பதாக நம்பப்படும் சுமார் 200 இடங்களில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் செவ்வந்தி தொடர்பில் எந்த தகவலும் கண்டுபிடிக்க முடியவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இஷாரா செவ்வந்தி தனது கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதால், அவரைப் பற்றிய எந்த தடயமும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தப்பியோடிய செவ்வந்தி

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட இரண்டு நாட்களின் பின்னர் களுத்துறை பகுதியிலுள்ள தங்க நகைக் கடைக்கு சென்ற இஷாரா செவ்வந்தி, சுமார் 500,000 ரூபாய் மதிப்புள்ள நகைகளை எடுத்துச் சென்றதாக தெரியவந்தது. ஆனால் அவரைப் பற்றிய குறிப்பிடத்தக்க தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

தங்க நகைகளுடன் இந்தியாவுக்கு தப்பியோடியுள்ள செவ்வந்தி - அதிகாரிகள் வெளியிட்ட தகவல் | Ishara Sewwandi Escaped From Sri Lanka

சந்தேக நபர் தென் மாகாண கடற்கரை வழியாக படகு மூலம் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://tamilwin.com/article/ishara-sewwandi-escaped-from-sri-lanka-1741401560#google_vignette

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரத்தில் சிக்கிய சிறைச்சாலை அதிகாரி!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக இன்று (17) கைது செய்யப்பட்ட பூஸ்ஸ சிறைச்சாலை அதிகாரியை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (17) கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனாவல முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

விசாரணை 

சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள், சம்பவம் நடந்த அன்று சந்தேக நபரான கணேமுல்ல சஞ்சீவவை சந்தேகநபரான சிறைச்சாலை அதிகாரி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரத்தில் சிக்கிய சிறைச்சாலை அதிகாரி! | Jailer Ganemulla Sanjeewa Murder Case Arrested

அதன்படி, அவர் கடமை தவறியதால் இந்தக் குற்றம் நடந்ததா என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்ற சந்தேக நபரைக் கைது செய்ய சந்தேகநபரான அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவு

இவ்வாறானதொரு பின்னணியில், சந்தேக நபரின் தொலைப்பேசி அழைப்புகளின் பதிவை அழைக்கவும் காவல்துறையினர் நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரத்தில் சிக்கிய சிறைச்சாலை அதிகாரி! | Jailer Ganemulla Sanjeewa Murder Case Arrested

இதன்படி, கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சந்தேக நபரை 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளனர்.

https://ibctamil.com/article/jailer-ganemulla-sanjeewa-murder-case-arrested-1742216032

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2025 at 07:51, ஏராளன் said:

தப்பியோடிய செவ்வந்தி

சந்தேக நபர் தென் மாகாண கடற்கரை வழியாக படகு மூலம் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வந்தி… மாலதீவுக்கு சென்று விட்டதாக இணையத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

இதே மாதிரி ஈஸ்டர் குண்டு வெடிப்பில் தொடர்பு உள்ளதாக கருதப்படுபவரும், முஸ்லீம் மதத்துக்கு மாறியவருமான புலேந்தினி என்ற பெண்ணையும் பல வருடங்களாக தேடுகின்றார்கள் இன்னும் கண்டு பிடிக்கவில்லை.

ஒளிப்பதில்…. பெண்கள் கெட்டிக்காரர் போலுள்ளது. ஆண்கள்தான்… சூடு ஆற முதல் அம்பிட்டு விடுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

செவ்வந்தி… மாலதீவுக்கு சென்று விட்டதாக இணையத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

இதே மாதிரி ஈஸ்டர் குண்டு வெடிப்பில் தொடர்பு உள்ளதாக கருதப்படுபவரும், முஸ்லீம் மதத்துக்கு மாறியவருமான புலேந்தினி என்ற பெண்ணையும் பல வருடங்களாக தேடுகின்றார்கள் இன்னும் கண்டு பிடிக்கவில்லை.

ஒளிப்பதில்…. பெண்கள் கெட்டிக்காரர் போலுள்ளது. ஆண்கள்தான்… சூடு ஆற முதல் அம்பிட்டு விடுகின்றார்கள்.

அப்ப தேசபந்து தென்னக்கோன் பெண்ணா?☹️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

அப்ப தேசபந்து தென்னக்கோன் பெண்ணா?☹️

தேசபந்து தென்னக்கோனுக்கு….. முன்னாள் ஜனாதிபதிகளின் செல்வாக்கு உள்ளது. அவரை இலேசில் பிடிபட அவர்கள் விரும்ப மாட்டார்கள். அப்படி பிடி பட்டால்… முன்னாள் ஜனாதிபதிகளின் பல குற்றச் செயல்கள், பாதாள உலகத் தொடர்புகள் அனைத்தும் வெளிவந்ததற்கு சமன். ஆன படியால்… அவரை ஏதோ விதத்தில் தலைமறைவாகவே வைத்திருக்க விரும்புவர்கள்.

இந்தக் “கள்ளன் பொலிஸ்” விளையாட்டு எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 18/3/2025 at 05:55, தமிழ் சிறி said:

தேசபந்து தென்னக்கோனுக்கு….. முன்னாள் ஜனாதிபதிகளின் செல்வாக்கு உள்ளது. அவரை இலேசில் பிடிபட அவர்கள் விரும்ப மாட்டார்கள். அப்படி பிடி பட்டால்… முன்னாள் ஜனாதிபதிகளின் பல குற்றச் செயல்கள், பாதாள உலகத் தொடர்புகள் அனைத்தும் வெளிவந்ததற்கு சமன். ஆன படியால்… அவரை ஏதோ விதத்தில் தலைமறைவாகவே வைத்திருக்க விரும்புவர்கள்.

இந்தக் “கள்ளன் பொலிஸ்” விளையாட்டு எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம்.

அண்ணை, அவருக்கு முன்னாள் ஜனாதிபதிகளின் செல்வாக்கு இருக்கோ இல்லையோ! பொலீசில நல்ல செல்வாக்கு இருக்கு! புதிய அரசிலும் செ.வாக்கு இருக்குதோ?! யாரறிவார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஏராளன் said:

அண்ணை, அவருக்கு முன்னாள் ஜனாதிபதிகளின் செல்வாக்கு இருக்கோ இல்லையோ! பொலீசில நல்ல செல்வாக்கு இருக்கு! புதிய அரசிலும் செ.வாக்கு இருக்குதோ?! யாரறிவார்.

உண்மைதான் ஏராளன்.

பொலிஸ்காரன் இன்னுமொரு போலிஸ்காரனை காட்டிக் கொடுக்க மாட்டான்.

அவர்கள் தமிழர்களைப் போல்... கோடாலிக் காம்புகள் அல்ல. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.