Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் இன்று யொகானியின் இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு - போர்க்குற்றவாளிகளைபாராட்டியவர் என குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இன்று யொகானியின் இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு - போர்க்குற்றவாளிகளைபாராட்டியவர் என குற்றச்சாட்டு

21 FEB, 2025 |

image

இலங்கை பாடகி யோகானியின் இசைநிகழ்ச்சியொன்று இன்று லண்டனில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான அரங்கில் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு  புலம் பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

யொகானி போர்க்குற்றவாளிகளை போற்றும் பாடல்களை பாடியதை சுட்டிக்காட்டி இந்த எதிர்ப்பு வெளியாகியுள்ளது.

இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்டவர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் பிரசன்ன டிசில்வாவின் மகளான யொகானி அவரை பாராட்டி பாடியுள்ளதை  புலம்பெயர் தமிழர் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இனப்படுகொலையை ஆதரிப்பவரை,இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களை பாரட்டுபவரை லண்டனில் மாத்திரமல்லவேறு எங்கும் இசைநிகழ்;ச்சிகளை நடத்துவதற்கு அனுமதிக்ககூடாது தமிழ் இளைஞர் அமைப்பின் பிரித்தானியாவிற்கான ஒருங்கிணைப்பாளர் இது மிகவும் மனிதாபிமானமற்றது சீற்றத்தை ஏற்படுத்தகூடியது என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வை புறக்கணிக்கவேண்டும் ஏற்பாட்டாளர்கள் இந்த நிகழ்வை இரத்துசெய்யவேண்டும் என தமிழ் இளைஞர் அமைப்பின் பிரித்தானியாவிற்கான ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலைக்கு ஆதரவாக குரல்கொடுப்பவருக்கு லண்டனில் நிகழ்வுகளில் ஈடுபடுவதற்கு இடமில்லை என தெரிவித்துள்ள பிரித்தானியாவின் தமிழ் ஒருங்கிணைப்பு குழுவின் மகேஸ் அவர் எங்கள் போராளிகளை பயங்கரவாதி என அழைத்தார்,யுத்த குற்றவாளிகளிற்காக பாடினார் என தெரிவித்துள்ளார்.

யொகானி தனது தந்தையின் குற்றங்களை கண்டிக்காத வரை,யுத்த குற்றவாளிகளிற்கான தனது ஆதரவை விலக்கிக்கொள்ளாதவரை, இனப்படுகொலை குறித்த விசாரணைக்கான சர்வதேச பொறிமுறைக்கு ஆதரவளிக்காதவரை அவர் இங்கு நிகழ்வுகளை நடத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த நிகழ்வு இடம்பெறவுள்ள அரங்கின் உரிமையாளர்கள் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டவேளை யொகானியின் பின்னணி குறித்து தங்களிற்கு தெரியாது,தாங்கள் இந்த நிகழ்விற்கு பொறுப்பில்லை என தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/207275

பார்க்கலாம், இந்த நிகழ்வு நடந்தால், அதனை குழப்ப பெரியார் தொடர்பான கூட்டட்தை குழப்பிய மறத் தமிழ் காவாலிகள் வருவார்களா என.

  • கருத்துக்கள உறவுகள்+

முதல் சீட்டு வாங்கினவன் தமிழனாத்தானிருப்பான்.

போறதிலையும் பாதி தமிழராய்த்தான் இருக்கும்.

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

பார்க்கலாம், இந்த நிகழ்வு நடந்தால், அதனை குழப்ப பெரியார் தொடர்பான கூட்டட்தை குழப்பிய மறத் தமிழ் காவாலிகள் வருவார்களா என.

இசையையும்

இனப்படுகொலையையும் ஒன்றாகத்தான் பார்க்க வேண்டுமா?

வேறு வேறாக பார்க்க முடியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

பெளசரின் வாசகர் வட்ட கூட்டத்தை குழப்பிய கஞ்சா குடுக்கியள் இந்த பக்கம் தலைவைத்தும் படாயினம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2025 at 10:44, நன்னிச் சோழன் said:

முதல் சீட்டு வாங்கினவன் தமிழனாத்தானிருப்பான்.

போறதிலையும் பாதி தமிழராய்த்தான் இருக்கும்.

இங்கு கருத்தெழுதும் பலரைப்போல, உங்களுக்கும் கூட தமிழர்கள் குறித்த பொதுவான நேர்மறை எண்ணங்கள் வீழ்ச்சியுற்றிருப்பது கவலைக்குரியது சகோ. 🥹

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கஞ்சா குடுக்கிகலோ, மறத்தமிழ் காவலிகளோ போவார்களோ, இல்லையோ என்று கவலைகொள்வோர், தமிழருக்கு நீதி, நியாயம் வேண்டி எதிர்ப்பு காட்டிய மானத்தமிழர்கள் ஒருசிலரை பாராட்டலாமே.

On 21/2/2025 at 12:44, Maruthankerny said:

இசையையும்

இனப்படுகொலையையும் ஒன்றாகத்தான் பார்க்க வேண்டுமா?

வேறு வேறாக பார்க்க முடியாதா?

இனப்படுகொலை செய்தவர்களை காவிய நாயகர்களாக புகழ்ந்து இசை பாடியவர்களை, அவர்களின் கொலைச் சாய முகங்களை கழுவி ஒப்பனை போட்டு கௌரவ படுத்தியவர்களை அவர்களின் அந்த செயல் தவறு என்று சுட்டிக்காட்டுவதில் தப்பில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யொஹானியின் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்ததே நேசன் என்ற தமிழர்தானாம்!

Yohani’s London show met with protests outside venue

250226%20Yohani%20London%20Protest%20(2)

British Tamils gathered in central London last week, to protest against a performance by Sri Lankan singer Yohani, condemning her history of supporting war criminals responsible for the genocide of Tamil civilians. 

The protest was held outside the Harley Lounge, a Tamil-owned venue that hosted the event despite Yohani’s documented praise for Sri Lankan war criminals, including her father, Major General Prasanna De Silva. Protesters held placards and chanted slogans denouncing the decision to allow her to perform in London, highlighting her ties to individuals accused of grave human rights violations.

250226%20Yohani%20London%20Protest%20(6)

“It was brought to our attention that an event was being planned by a Tamil organiser, Nesan, to host Yohani, a singer known for her support of war criminals who committed a genocide against the Tamil people,” said Theevan, a member of Phoenix TNG, a Tamil youth group based in London.

 “We as Eelam Tamils have a civic duty to the movement and our people, to call out injustice. Boycotts were simply not enough.”

250226%20Yohani%20London%20Protest%20(5)

250226%20Yohani%20London%20Protest%20(4)

250226%20Yohani%20London%20Protest%20(3)

The venue and event organisers had reportedly disabled comments on promotional posts about the event after Tamil activists voiced their outrage.

“The response to our grievances during the boycott from Harley Lounge and Nesan was to disable comments on posts, silencing us further. Automatically, the next step would be to protest the event,” Theevan explained. “Thankfully, despite the challenges we faced, many Tamil people attended the protest to show solidarity amongst each other and show opposition in the face of this disgraceful event taking place.”

Dozens of protestors were outside the venue, chanting slogans that demanded justice for genocide, and war criminals such as Yohani's father, be held to account.

Sources told the Tamil Guardian that staff from the Sri Lankan High Commission were also present at the event, with some of those going to see Yohani perform stop and take photographs of the protestors.

A significant Metropolitan Police presence was also noted.

Joining Phoenix TNG were members from the Movement for Self-Determination of Tamil Eelam (MSDTE). “We would like to thank the Tamil people and the few organisations that did attend for their support and camaraderie,” Theevan said.

Yohani has drawn widespread criticism for her continued praise of Sri Lankan military leaders responsible for the killing of tens of thousands of Tamil civilians. She is the daughter of Major General Prasanna De Silva, who led Sri Lanka’s 55th Division during the final stages of the armed conflict in 2009.

A United Nations investigation documented how hospitals in the Vanni were repeatedly shelled under the command of the 55th Division. Silva himself has been linked to enforced disappearances, and his security detail was once caught transporting pistols in a white van with altered license plates, a vehicle infamously used by Sri Lankan security forces to abduct and disappear Tamils.

Yohani has openly praised her father in her music, referring to him as a "hero" in a Sinhala-language song, Rawwath Dasin, where she is dressed in a military-style costume and surrounded by flaming wreckage.

Yohani%20Silva%20(9).jpeg

In addition, she has personally met Shavendra Silva, who has been banned from entering the United States due to his role in executing surrendering Tamils, and sang for Gotabaya Rajapaksa, the former defence secretary accused of overseeing war crimes.

201018%20Yohani%20Gotabaya.jfif

https://www.tamilguardian.com/index.php/content/yohanis-performance-london-met-tamil-protests

  • கருத்துக்கள உறவுகள்
  1. போரடிய உறவுகளுக்கு நன்றி. மஞ்சள் சிவப்பு நிறத்தை மட்டும் தாங்கி பிடித்திருக்கலாம், சின்ன-கொடி, பயங்கரவாதிகளின் எதிர்ப்பு என இலகுவாக கடந்து போகும் வாய்ப்பை இலங்கைக்கு கொடுத்திருக்கும்.

  2. கஞ்சா குடுக்கியள், இசை வேறு, அரசியல் வேறு என நாக்கை பிரட்டி விட்டு, குப்புறபடுத்திருப்பார்கள். வீரம் எல்லாம் தமிழ் பெண்களிடமும் 60 வயது தாண்டியவர்களிடமும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நேரில் காணவில்லை, கேட்கவில்லை, அனால் இந்த பாடகி அவ்வப்போது த்தமிழர்களை அடித்த து சரி என்று சாரப்பட கருத்து தெரிவித்ததாக (சமூக வலைத்தளங்களில் அல்ல) என்ற பலமான கருத்தை கேள்விப்பட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Kadancha said:

நான் நேரில் காணவில்லை, கேட்கவில்லை, அனால் இந்த பாடகி அவ்வப்போது த்தமிழர்களை அடித்த து சரி என்று சாரப்பட கருத்து தெரிவித்ததாக (சமூக வலைத்தளங்களில் அல்ல) என்ற பலமான கருத்தை கேள்விப்பட்டேன்.

ஒரு போர்குற்றவாளி தளபதியின் மகள். பாடல்கள் இலங்கை ஆமியை போற்றுவன.

யாழிலும் ஒரு லங்காஅபிமானி இவவை பிரபல்யபடுத்த முனைந்தவர்.

அவர்தான் நேசனோ தெரியாது🤣

  • கருத்துக்கள உறவுகள்+
8 hours ago, Sasi_varnam said:

இங்கு கருத்தெழுதும் பலரைப்போல, உங்களுக்கும் கூட தமிழர்கள் குறித்த பொதுவான நேர்மறை எண்ணங்கள் வீழ்ச்சியுற்றிருப்பது கவலைக்குரியது சகோ. 🥹

ஐயனே.... இதை நடத்தினவனே ஒரு தமிழன் தான்.... இதுக்கு என்ன சொல்லப்போறியள் ... 🥲

  • கருத்துக்கள உறவுகள்

தன் இனத்தின் வலி தெரியாது, சக தமிழன் சுட்டிக்காட்டிய தவறு, கவனயீர்ப்பு நடவடிக்கை இவற்றை உதாசீனம் செய்து "பெயரலவில் தமிழனாக" இருக்கும் ஒருவன் சிங்களத்திற்கு தன் விசுவாசத்தை காட்டியுள்யுள்ள சிங்கள (நேசன்) அவ்வளவே!!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:
  1. போரடிய உறவுகளுக்கு நன்றி. மஞ்சள் சிவப்பு நிறத்தை மட்டும் தாங்கி பிடித்திருக்கலாம், சின்ன-கொடி, பயங்கரவாதிகளின் எதிர்ப்பு என இலகுவாக கடந்து போகும் வாய்ப்பை இலங்கைக்கு கொடுத்திருக்கும்.

  2. கஞ்சா குடுக்கியள், இசை வேறு, அரசியல் வேறு என நாக்கை பிரட்டி விட்டு, குப்புறபடுத்திருப்பார்கள். வீரம் எல்லாம் தமிழ் பெண்களிடமும் 60 வயது தாண்டியவர்களிடமும்தான்.

தமது முழுபலத்தையும் பாவித்து போராட்டம் செய்து விட்டு எதிரியால் அதை இலகுவாக முறியடிக்க பொன்னான வாய்ப்பையும் வழங்கி மொக்கயீனப்படுவதுப் பின்னர் அழுது புலம்புவதும் தமிழரின் வழமையான போராட்ட நடைமுறை. அதை மாற்ற யாராலும் முடியாது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Sasi_varnam said:

தமிழ் கஞ்சா குடுக்கிகலோ, மறத்தமிழ் காவலிகளோ போவார்களோ, இல்லையோ என்று கவலைகொள்வோர், தமிழருக்கு நீதி, நியாயம் வேண்டி எதிர்ப்பு காட்டிய மானத்தமிழர்கள் ஒருசிலரை பாராட்டலாமே.

இனப்படுகொலை செய்தவர்களை காவிய நாயகர்களாக புகழ்ந்து இசை பாடியவர்களை, அவர்களின் கொலைச் சாய முகங்களை கழுவி ஒப்பனை போட்டு கௌரவ படுத்தியவர்களை அவர்களின் அந்த செயல் தவறு என்று சுட்டிக்காட்டுவதில் தப்பில்லை.

யாழ்களத்தில் நல்லவனாக இருந்தாலும் அடிக்கிறீர்கள்

கெட்டவனா இருந்தாலும் அடிக்கிறீர்கள் .

ஏன் வில்லங்கம் என்று உங்களை மாதிரியே இருந்து கொள்கிறோம் என்றாலும் அடிக்கிறீர்களே ....... எனக்ளுக்கு விமோசனம் கிடையாதா?

இனப்படுகொலை உச்சத்தில் இருந்த நேரம் அதுக்கும் அதை முன்னின்று நடத்தியவர்களுக்கு வக்காலத்து வாங்கியர்களையும் பற்றி எழுதியபோது

கிரிகெடையும் இனப்படுகொலையையும் ஏன் ஒன்றாக பார்க்கிறீர்கள் என்கிறார்கள்

விடுதலைப்போரை கொச்சைப்படுத்தும் விதமாக பின்பு சினிமா எனும் போர்வையில் படங்கள் எடுத்தபோது அதுபற்றி எழுதும்போது

சினிமாவையும் போரையும் ஏன் ஒன்றாக பார்க்கிறீர்கள் என்கிறார்கள்

ஏன் வில்லங்கம் என்று நாம் வேறு வேறாக பார்த்து பழகுவதற்கு முடிந்த அளவில் முயறசி செய்யும்போது

இப்போ இப்பிடி எழுதுகிறீர்கள் .........

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிட்டு உள்ள பரபரப்புக்களை பார்த்துவிட்டு அங்கிட்டு சென்று யோகானியின் பாடல் காணொளிகள் பார்த்தேன். பிள்ளை கொஞ்சும் தமிழில் சின்ன சின்ன ஆசை என்று பாடுகின்றது. லோக்கல் தமிழிலும் பாடுகின்றது. கேட்க நன்றாய்த்தான் உள்ளது. நீங்கள் நடத்துங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Sasi_varnam said:

தமிழ் கஞ்சா குடுக்கிகலோ, மறத்தமிழ் காவலிகளோ போவார்களோ, இல்லையோ என்று கவலைகொள்வோர், தமிழருக்கு நீதி, நியாயம் வேண்டி எதிர்ப்பு காட்டிய மானத்தமிழர்கள் ஒருசிலரை பாராட்டலாமே.

இனப்படுகொலை செய்தவர்களை காவிய நாயகர்களாக புகழ்ந்து இசை பாடியவர்களை, அவர்களின் கொலைச் சாய முகங்களை கழுவி ஒப்பனை போட்டு கௌரவ படுத்தியவர்களை அவர்களின் அந்த செயல் தவறு என்று சுட்டிக்காட்டுவதில் தப்பில்லை.

பாராட்டுவேன் ஆனால் எனக்குள்ளே சிறிலங்கா தேசிய வீரன் பல வருடங்களாக ..ஒழிந்திருக்கிறானே அவனை வெளிக்காட்ட இதுதான் சரியான சந்தர்ப்பம்😂

அந்த காவாலிகளுக்கு கஞ்சா வாங்கி கொடுத்து குழப்ப‌ சொல்வது யாரோ ...

உள்ளே சிறிலங்கா தேசியம் வெளியே தமிழ் தேசிய ஆதரவாக செயல்பட்டு ...தமிழ் தேசியத்தை சிதைக்க பல செயல்பாட்டாளர்கள் களம் இறங்கியுள்ளனர்...அவர்களை இனம் காணுவது மிகவும் கடினம்...மேலும் இந்த போலி இடதுசாரி ஆட்சி வந்த பின்பு தமிழ் தேசியத்தை இலகுவாக சிதைக்க கூடியதாக உள்ளது ..யாழ் நூலகத்தை எரித்தவர்களின் வாரிசுகள் அதை வைத்தே அரசியல் செய்கின்றனர் ....ஆனால் இனப்படுகொலை செய்ததை ஏற்று கொள்ளவில்லை ..இன்றுவரை மன்னிப்பும் கேட்கவில்லை....

யாழ் மாவட்ட செயலாளர் ஒருவரின் மகன் கார் விபத்தில் காயம் அடைந்த செய்தி யாவரும் அறிந்த ஒன்று ...அந்த வாகனம் அரச வாகனம் இல்லை என சில ஊடகங்கள் செய்தி வெளிட்ட பொழுதும் ...பாராளுமன்றில் சுயேட்சை பிரதிநிதியும் ,யாழ்களத்திலும் சில உறவுகளும், அது அரச வாகனம் என குரல் கொடுத்து சிறிலங்கா தேசிய விசுவாசத்தை காட்டினர்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நியாயம் said:

இங்கிட்டு உள்ள பரபரப்புக்களை பார்த்துவிட்டு அங்கிட்டு சென்று யோகானியின் பாடல் காணொளிகள் பார்த்தேன். பிள்ளை கொஞ்சும் தமிழில் சின்ன சின்ன ஆசை என்று பாடுகின்றது. லோக்கல் தமிழிலும் பாடுகின்றது. கேட்க நன்றாய்த்தான் உள்ளது. நீங்கள் நடத்துங்கோ.

ரசியுங்கோ...இன்று தமிழில் பாடுவது ,தமிழில் அரசியல் பேசுவது எல்லாம் தமிழுக்கே ஆபத்தாக வந்து நிற்கும் ..அது தான் நியதி,நியாயம் என்றால் யாரால் தான் தடுத்து நிறுத்த முடியும்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

.. எனக்ளுக்கு விமோசனம் கிடையாதா?

2 hours ago, Maruthankerny said:

விமோசனம் இருக்கு ....உங்கள் ஜாதகப்படி இப்பொழுது இனபடுகொலையாளிகள் வக்கிரமடைந்து இடதுசாரி ஆட்சியின் உச்சத்தில் உள்ளது இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்த ஆட்சி தொடரும்,இந்த கால கட்டத்தில் நீங்கள் மிகவும் அவதானமாக செயல் பட வேணும் ,யாழ் கள உறவுகளுடனோ',ஏனைய நண்பர்களுடனோ கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும்....

பரிகாரம்..உங்களுக்கு விரும்பிய பூக்களாகிய லைக்,ஹா ஆஹா,தடுமாற்றம்,சோகம்,மைனஸ்1

போன்ற பூக்களை போட்டு உங்களுக்கு வரும் மனதொல்லைகளில் இருந்து விமோசனம் பெறலாம்..

மைனஸ்1 பூஜைக்கு உகந்தது அல்ல ...அதை பாவிக்கும் பொழுது மிகவும் அவதானம் வேண்டும்..

இனபடுகொலையாளிகளை இனப்படுகொலையாளியாக பாருங்கள் ....அவர்களை ஆதரியுங்கள் வரவேற்பு செய்யுங்கள் ....(தமிழர்களை இனப்படுகொலை செய்தவர்களை மட்டும்...உங்கள் ஆதர்வுக்கு ட்ரம்ப் மற்றும் நெத்தியாகுவை துணைக்கு வைத்திருங்கள் ...

ஏனைய இனங்களை(தமிழர் அல்லாத ) படுகொலை செய்தவர்களுக்கு எதிராக குரல் கொடுங்கோ....ஹமாஸ்,பலஸ்தீனம்....ஆதரவாக ...

Edited by putthan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.