Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Poilievere-800x445.webp

கனடா

கனடா மத்திய தேர்தல் 2025: பாவம் கன்சர்வேட்டிவ் கட்சி!

சிவதாசன்

45 ஆவது பாராளுமன்றத் தொடருக்கான மத்திய தேர்தல், திகதி நிர்ணயிக்கப்பட்ட கனடாவின் தேர்தல் சட்டத்தின்படி, எதிர் வரும் அக்டோபர் 20, 2025 இல் நடக்க வேண்டும். இருப்பினும் பிரதமரின் கோரிக்கைக்கு இணங்க இத்திகதிக்கு முன்னரே இன்னுமொரு திடீர் தேர்தலை நடத்த ஆளுனர் அறிவிப்பைச் செய்ய முடியும். மாறாக பாராளுமன்றத்தில் நம்பிக்கையீனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டோ அல்லது அரசாங்க அலுவல்களை நடத்துவதற்கான பணம் முடக்கப்பட்டாலோ (Supply Bill) – இது வரவு செலவுத் திட்டம் மீதான தோல்வியாக அமைவது வழக்கம் – பாராளுமன்றம் கலைக்கப்படலாம். ஆனால் பிரதமர், கெட்டித்தனமாக, பாராளுமன்றத்தை ஒத்தி வைத்ததனால் அரசாங்கத்தை வீழ்த்த நினைக்கும் எதிர்க்கட்சிகள் மார்ச் 24 இல் பாராளுமன்றம் கூடும்வரை பொறுத்திருக்க வேண்டும். இதையே தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லியேர்வ் அடிக்கடி கோரிக்கை விடுத்து வருகிறார். என்.டி.பி. ஜக்மித் சிங்கைப் பொறுத்தவரை அவரும் வாயளவில் தேர்தலுக்கான அறைகூவலை விடுத்து வந்தாலும் மக்களின் ஆதரவு அவருக்கு இன்னும் கை காட்டவில்லை.

ட்றூடோவின் லிபரல் கட்சிக்குள் எழுந்த சுனாமியால் அவர் கரையொதுக்குப்பட கன்சர்வேட்டிவ் கட்சி அலை வேகமாகக் கரை நோக்கி வந்துகொண்டிருந்தது. லிபரல் கட்சி சிதறிச் சின்னாபின்னமாகி ஒதுக்குப்படுவதை எதிர்பார்த்து கட்சியும், தொண்டர்களும், – பாவம் கொள்கை வகுப்பாளர்களும் – சந்திர பயணத்துக்கு ஆயத்தப்படுத்திவரும் வேளையில் தெற்கே ட்றம்ப் என்ற எதிர் சுனாமி கன்சர்வேட்டிவ் அலையை – ஓரளவு தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறது. அந்த விடயத்தில் ட்றம்ப் ட்றூடோவுக்கு வாராது வந்த மாமணி.

லிப்ரல் கட்சி உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ட்றூடோவுக்கு படலையைக் காட்டியதில் அவசரப்பட்டு விட்டோமோ என அங்கலாய்க்கும் இவ்வேளையில் ட்றூடோ சாதுரியமாகத் தனது வாரிசு ஒன்றை உள்ளே கொண்டுவந்து மீசையில் மண்படாமல் தப்பிக்கொண்டுவிட்டார். இதில் ட்றூடோவின் சாதுரியத்தை உதவிப் பிரதமர் முதற்கொண்டு, இதர புரட்சியாளர்கள் தவறாக எடைபோட்டுக்கொண்டு விட்டனர் எனவே நினைக்கிறேன். ஜான் கிறைத்தியேனைப் போலவே ஜஸ்டின் ட்றூடோவும் திட்டமிட்டுப் பழிவாங்கக் கூடியவர்கள் என்பதைப் பாவம் இவர்கள் அறிந்திருக்கவில்லை. ட்றூடோவுக்கு அடுத்தபடியாகக் கட்சிக்குள் இருந்த, வாக்குகளையும் மனங்களையும் கொள்ளை கொள்ளக்கூடிய அடுத்த தேவதை வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலியாக இருந்தாலும் கன்சர்வேட்டிவ் கட்சியின் அலையைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஆளுமை முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் மார்க் கார்ணியை விட வேறெவருக்கும் இல்லை என ட்றூடோ நினைத்ததால் தனது நண்பி ஜோலியையும் ஓரம் தள்ளிவிட்டு கார்ணியை முன்தள்ளினார். இதற்காக அவர், ‘அடுத்த பிரதமர் நானே’ எனக் கனவுகண்டுகொண்டிருந்த கிறிஸ்ரியா ஃபிறீலாண்ட்டை ஓரம்கட்ட முனைந்தபோது எழுந்த பனிப்போரே ட்றூடோவை அவசரமாக வெளித்தள்ளியது. பிரதமராக இருப்பதற்கான ஆளுமை அவரிடம் இல்லை என்பதில் பலர் உடன்படுவார்கள். ஆனாலும் அதை ஒரு ‘பெண்ணீய’ விடயமாக மாற்றி அவரும் அவரது தோழிகளும் பிரசாரம் செய்தனர். முதன் முதலாகக் கனடிய அரசாங்கத்தில் 50% பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்த ட்றூடோவின் மீது சுமத்தப்படும் இப்பழி அபாண்டமானது.

லிபரல் அரசுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்படவேண்டும் என்பதில் நான் உடன்படுகிறேன். ஆனால் பியர் பொலியெவின் கன்சர்வேட்டிவ் கட்சி கனடியர்கள் விரும்பும் மாற்று ஆட்சியைத் தரவல்லதா என்பதிலும் எனக்குச் சந்தேகமுண்டு. பியர் பொய்லியேவின் தற்போதைய தேர்தல் பிரச்சாரங்களுக்குப் பொறுப்பானவர் ஜெனி பேர்ண்ஸ் எனப்படும் பெண். இவரது நிறுவனமாந ‘ஜெனி பேர்ண் அண்ட் அஸோசியேட்ஸ்’ எனப்படும் நிறுவனம் லொப்ளோஸ் போன்ற கொள்ளைக்கார நிறுவனங்களால் பதியப்பட்ட லொபியிஸ்ட். 2015 இல் இவரது வழிநடத்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி படு தோல்வியடைந்தது. இப்போது பியர் பொய்லியேவ் ஜெனி பேர்ண்ஸை ஆலோசகராக நியமித்திருக்கிறார்.

தெற்கே ட்றம்பின் சுனாமி புறப்பட்டவுடனேயே ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் போன்றவர்கள் கனடிய சுதேச வாகனங்களில் ஏறிப் பரப்புரைகளை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். ட்றூடோவின் அதிர்ஷ்டமோ என்னவோ அவர் கையிலும் ஒரு மக் ட்றக் கிடைத்துவிட்டது. ஆனால் பாவம் பொய்லியேவ் இன்னும் மிதி வண்டியில் அப்பிளைக் கடித்துக்கொண்டு ஹாயாக வருகிறார். ட்றம்ப் சுனாமிக்கு எதிராகக் கனடிய தேசிய அலையில் இணைந்துகொள்ளாமால் தனியே ஓரமாகச் சைக்கிளோட்டிவருவது அவரது பலவீனத்தைப் புட்டு வைத்துவிட்டது. இதற்கு அவரது ஆலோசகரைத் தான் குறை சொல்ல வேண்டும்.

இன்னும் இரண்டரை வாரங்களில், மார்ச் 09, லிபரல் கட்சியின் புதிய தலைவராக மார்க் கார்ணி பதவியேற்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. இது ட்றூடோவுக்கு வெற்றி. ட்றம்பைப் பொறுத்தவரை பியர் பொய்லியெவ் மீது மதிப்பு இருப்பதாகத் தெரியவில்லை. சண்டியர்கள் மீது தான் அவருக்கு கவர்ச்சி அதிகம். எனவே பொய்லியேவின் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியிலிருந்தாலென்ன கார்ணியின் லிபரல் ஆட்சியிலிருந்தாலென்ன கனடா அவருக்கு 51 ஆவது மாநிலம் தான். இதை ட்றூடோவும், டக் ஃபோர்ட்டும் புரிந்துவைத்திருக்குமளவுக்கு பொய்லியேவ் புரியவில்லை என்பது ஆச்சரியம்.

சமீபத்தில் நடந்த ஒரு கருத்துக்கணிப்பின்படி, 22,000 பேரிடம் கேட்டுப் பெற்ற முடிவுகள்: மார்க் கார்ணி 47.3 %, பியர் பொய்லியேவ் 45.64 %. அக்டோபர் மாதத்திற்குள் எவ்வளவோ மாறலாம். ஆனால் லிபரல் பாரவண்டியைத் தடம்புரட்டக்கூடிய ஆயுதங்கள் எதுவும் பியர் பொஇலியேவிடம் – இப்போதைக்கு – இல்லை.

வரப்போகும் தேர்தலில் யார் வெல்லப் போகிறார்கள் என்பதை ட்றம்பே தீர்மானிப்பார். அவரது நிலைப்பாடுகளில் மாற்றமேதும் ஏற்பட்டாலே தவிர, என்னைப் பொறுத்தவரை, பொய்லியேவ் பஸ்ஸைத் தவறவிட்டுவிட்டார் போலத் தெரிகிறது. (Image Courtesy: Wikipedia)

https://veedu.com/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2025-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%ae/?fbclid=IwY2xjawIpw2NleHRuA2FlbQIxMQABHaRDz-1rzuoX6ceojeiMtFTfV9wEbMdOTnxsJN2_63b_V8YPBae8MfBLCQ_aem_ZF0C_etelEb6BkdaTZGsPg#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

சிவதாசன் பாவம் தன்ட விருப்பத்தை எழுதியுள்ளார். கனடாவில் அடுத்த 8 வருடங்களுக்கு கன்சர்வேட்டிவ் கட்சிதான் ஆட்சியமைக்கும். அதுவும் பெரும்பான்மை பலத்துடன் அமைக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவனுக்கு ஒரு ஆசை

கெட்டவனுக்கு ஒரு ஆசை

இடையில நிக்கிறவனுக்கும் ஒரு ஆசை

கூட்டிக் கழித்தால்

ஆசையே அலை போலே

நாம் எல்லாம் அதன் மேலே

தான் மிஞ்சும் ...

13 hours ago, வாலி said:

சிவதாசன் பாவம் தன்ட விருப்பத்தை எழுதியுள்ளார். கனடாவில் அடுத்த 8 வருடங்களுக்கு கன்சர்வேட்டிவ் கட்சிதான் ஆட்சியமைக்கும். அதுவும் பெரும்பான்மை பலத்துடன் அமைக்கும்!

வரும் 27 இல் நடக்கவிருக்கும் ஒன்ராரியோ மாகாணத் தேர்தலில் லிபரலுக்கு கிடைக்க போகும் அடி கனடா பொதுத் தேர்தலிலும் எதிரொலிக்கும்.

லிபரல் கட்சி மத்திய, மாகாண அரசுகளில் இருந்து துடைத்தெறியப்படல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2025 at 08:59, நிழலி said:

வரும் 27 இல் நடக்கவிருக்கும் ஒன்ராரியோ மாகாணத் தேர்தலில் லிபரலுக்கு கிடைக்க போகும் அடி கனடா பொதுத் தேர்தலிலும் எதிரொலிக்கும்.

லிபரல் கட்சி மத்திய, மாகாண அரசுகளில் இருந்து துடைத்தெறியப்படல் வேண்டும்.

லிபரல் கட்சி 8 சீட்டில் இருந்து 14 சீட்டுகள் எடுத்து எகிறி குதித்து உத்தியோக பூர்வ கட்சி அந்தஸ்தையும் வாங்கி இருக்கிறது. ஒரு பாரம்பரிய காட்ச்சியை துடைத்து எறிவதெல்லாம் ஒன்னும் சுலபம் இல்லை நிழலியர்.

2 minutes ago, Sasi_varnam said:

லிபரல் கட்சி 8 சீட்டில் இருந்து 14 சீட்டுகள் எடுத்து எகிறி குதித்து உத்தியோக பூர்வ கட்சி அந்தஸ்தையும் வாங்கி இருக்கிறது. ஒரு பாரம்பரிய காட்ச்சியை துடைத்து எறிவதெல்லாம் ஒன்னும் சுலபம் இல்லை நிழலியர்.

விழுந்தும் மீசையில் மண் படாத moment என்பது இதுவா?

லிபரல் கட்சியின் ஒன்ராரியோ மாகாண தலைவர் / leader மண் கவ்வி விட்டார்.

வெறும் 11.3 வீத வாக்குகளை பெற்று லிபரல் கட்சி மூன்றாவதாக வந்திருக்கின்றது.

ஆனாலும் மீசையில் மண் படவில்லை என்ற சந்தோசம் உங்களுக்கு.

Fedal தேர்தலிலும் இதே நிலைதான் வரும்.

ஆனாலும் உங்கள் இந்த பதிலை நான் பின்னூட்டம் இட்ட அன்றே போட்டிருந்தால் கொஞ்சம் மதிப்பு கொடுக்கும் ஒன்றாக இருந்திருக்கும். ஆனால் election result வரும்வரை இருந்திருக்கின்றீர்கள். அவ்வளவு நம்பிக்கை லிபரல் கட்சி மீது?

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் நீங்கள் போட்ட பதிவை பார்த்து ஒரு மணித்தியாலத்தில் நான் எழுதியது பாதியில் நிற்கிறது. இப்பொழுதெல்லாம் யாழின் போக்கு யாரையாவது கரித்து கொட்டுவதும், முஷ்டியை தட்டுவதும், மீசையை முறுக்குவதுமாகத் தானே போகிறது.

அதுபோகட்டும் விடுங்கள், லிபரல் கட்சி விழாது மண் மீசையில் படாது என்று நான் சொல்லவில்லை. மாறாக நீங்கள் ஆசைப்பட்ட அந்த துடைத்தெறியும் நிகழ்வு நிகழ்ந்தேறவில்லை அவ்வளவுதான் சாமியார். 34 வருஷம் ஒண்டாரியோவில் குப்பை கொட்டுகிறோம் அரசியல் நிலவரம், யார் வெல்வார்கள் தோற்பார்கள் என்ற புரிதல் இல்லாமலா வாழ்வோம்?

பின் குறிப்பு - கடந்த 3 தேர்தலிலும் PC கட்சிக்குத்தான் நான் உட்பட எங்கள் குடும்பத்தின் மொத்த வாக்குகளும் சென்றன.

பொதுவாக லிபரல் காட்ச்சியை எனக்கு பிடிக்கும் என்ற தகவலையும் சொல்லி வைக்கிறேன். :)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.