Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தொடர்ந்து ஊதாசீனப்படுத்தப்படும் சுற்றாடல் பாதுகாப்புக் குழுவின் தீர்மானம் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

இம்மாதம் ஆறாம் திகதி யாழ்.மாவட்ட சுற்றாடல் பாதுகாப்புக் குழுவின் கூட்டத்தில் யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துள்ள ஒலிபெருக்கித் தொல்லை தொடர்பில் பொதுமக்களினால் தொடர்ச்சியாக மாவட்டச்செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக அதனை கட்டுப்படுத்திவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதனை மீறுவோர்மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இம்முடிவு காவல்துறையினருக்கும் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை மீறுவோர் தொடர்பிலான தகவல்களை பிரதேச செயலகங்களுக்கு தெரியப்படுத்தினால் அவர்கள் காவல்துறையினருக்கு அறிவித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அரச அதிபரினால் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

எனினும், பல பிரதேச செயலகப் பிரிவுகளில் ஓரளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சில பிரதேச செயலகப் பிரிவில் ஒலிபெருக்கிப் பாவனையின் மோசமான செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமுள்ளது.

இது குறித்து பிரதேச செயலர்களுக்கு தெரியப்படுத்தினாலும் பொதுமக்ளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகள் ஒலிபெருக்கித்தொல்லையினால் தொடர்ச்சியாக பாதிக்கப்படுகின்றன.

இம்மாதம் 16 ஆம் திகதி சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மாதகல் புனித லூர்துமாதா ஆலய திருவிழாவில் மாதகலிலிருந்து பண்டத்தரிப்பு சந்திவரை 3 கிலோமீற்றர் நீளத்திற்கும் அதிகமாக ஏராளமான ஒலிபெருக்கிகளை பொருத்தி இரவு பகலாக பயன்படுத்தப்பட்டன.

இதனால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளானார்கள்.

நேற்று (26-02-2025) இதே பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட விளான் - சண்டிலிப்பாய் வீதியலுள்ள பிரான்பற்று நரசிம்ம வைரவர் என்ற சிறிய ஆலயம் ஒன்றில் அன்னதான நிகழ்விற்காக 15 இற்கும் அதிமான ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு நேற்று முன்தினம் இரவுமுதல் (25-05-2025) அதிக இரைச்சலுடன் ஒலி எழுப்பப்பட்டது.

அத்துடன் இன்றையதினமும் அந்த பகுதியில் ஒலிபெருக்கி இசைக்கப்படுகிறது. இதனால் அருகிலுள்ளவர்கள் மட்டுமன்றி் அயல் கிராமங்களிலுள்ள மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

இது குறித்து காவல்துறையிருக்கும் அறிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சண்டிலிப்பாய் பிரதேச செயலருடன் தொடர்புகொள்ள முயற்சி மேற்கொண்டபோதும் அது பலனளிக்கவில்லை.

சுற்றாடலை பாதிக்கும் ஒலி மாசு தொடர்பில் மாவட்டச்செயலகத்தினல் எடுக்கப்பட்ட தீர்மானம் சில பிரதேச செயலகங்களுக்கும் காவல் நிலையங்களுக்கும் அறிவிக்கப்படவில்லையா அல்லது தீர்மானம் உதாசீனம் செய்யப்படுகின்றதா என பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

GalleryGalleryGalleryGalleryGallery

https://ibctamil.com/article/loudspeaker-nuisance-on-the-rise-in-jaffna-1740637388

  • கருத்துக்கள உறவுகள்

கோவில் திருவிழாக்கள் கொண்டாட் எமக்கு ஒலிபெருக்கி வேணும்....பொம்பர் குன்டு போடக்குள்ள வராத சத்தமே இப்ப வரப் போகிறது

  • கருத்துக்கள உறவுகள்

எமது நாட்டில், ஒலி பெருக்கி ஒரு பெரும் தொல்லை. மாரித் தவக்கை மாதிரி கத்திக் கொண்டே இருப்பார்கள்.

இவர்கள் ஒலி பரப்புவதை… யார் காது கொடுத்து கேட்கிறார்களோ தெரியாது. பொது மகனுக்கு இதனால் பெரும் இடைஞ்சல்.

கோவில், தேவாலயம், மசூதி, விகாரை… என்று எல்லா இடமும், இதனை கட்டுப்படுத்த வேண்டும்.

இங்கு மில்லியன் கணக்கில் வாகனங்கள் ஓடிக் கொண்டு இருந்தாலும், ஒலி எழுப்பவே மாட்டார்கள். தேவையாக இருந்தால்… வெளிச்சத்தை ஒரு முறை பாய்ச்சினால்… மற்றவர் தனது தவறை புரிந்து கொள்வார்.

ஒவ்வொரு ஒலி பெருக்கியை பொது வெளியில் பூட்டும் போது… அதற்கு நகரசபையின் அனுமதி பெற்று, பணம் செலுத்த வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்து பரீட்சித்துப் பார்க்கலாம்.

Edited by தமிழ் சிறி

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பரீட்சை காலங்களிலும் அலறும் ஒலிபெருக்கிகள் : இளவாலை காவல்துறையினர் தூக்கத்திலா?

யாழ்ப்பாணம் (Jaffna) - சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று வைரவர் ஆலயத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பித்த நாள் முதல் ஆறு நாட்களாக ஒலிபெருக்கிகளின் ஒலியால் பரீட்சையினை எதிர்கொண்டுள்ள மாணவர்களும் பொதுமக்களும் பெரும் இடர்பாடுகளை எதிர்கொள்வதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக அன்றைய பாடத்தினை இறுதி மீட்டல் செய்யும் போது காலை 6.15 மணி தொடக்கம் ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் என்ற பெயரில் மக்களால் சகிக்கமுடியாத மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய ஒலியெழுப்ப படுவதால் மக்களும் மாணவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட சுற்றாடல் பாதுகாப்பு குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய பரீட்சை காலங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த முடியாது என கூறப்பட்டுள்ளது.

மக்கள் விசனம் 

இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. பல இடங்களில் குறிப்பாக இளவாலை காவல்துறை பிரிவிலும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இக் கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

யாழில் பரீட்சை காலங்களிலும் அலறும் ஒலிபெருக்கிகள் : இளவாலை காவல்துறையினர் தூக்கத்திலா? | Loudspeakers That Blare Even During Olexam Periods

பரீட்சை தவிர்ந்த காலங்களிலும் ஆக கூடியது நான்கு ஒலிபெருக்கிகள் மட்டும்தான் பாவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

அதுவும் 1980ஆம் ஆண்டு, 924/12 ம் இலக்க சுற்றாடல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் சத்தத்தின் எல்லை (Noise Level) பகல் நேரத்தில் 55 dB எல்லையை தாண்டாமலும், இரவு நேரத்தில் 45 dB எல்லையை தாண்டாமலும் இருக்க வேண்டும் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதனையும் மீறி இவ்வாலயத்தில் ஆறு ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு அதிக ஒலி எழுப்பப்படுவது இளவாலை காவல்துறையினதும்  சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தினதும் அசண்டையீனத்தையே புலப்படுத்துகின்றது.

யாழில் பரீட்சை காலங்களிலும் அலறும் ஒலிபெருக்கிகள் : இளவாலை காவல்துறையினர் தூக்கத்திலா? | Loudspeakers That Blare Even During Olexam Periods

புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட அண்மைக்காலங்களில் இதே பிரிவில் சில வணக்க ஸ்தலங்களில் இவ்வாறான சட்ட மீறல்களை பொதுமக்கள் காவல்துறையினருக்கும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளினாலும் ஒலிபெருக்கிகள் குறித்த கட்டுப்பாடுகளும் அவை தொடர்பில் பொதுமக்கள் அறிவிக்கவேண்டிய தொலைபேசி இலக்கங்களும் அந்தந்த பிரதேச செயலர்களால் செயலகங்களின் உத்தியோகபூர்வ முகநூல்கள் மூலமும், சுவரொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த பட்டபோதும் யாழ். மாவட்டத்தில் ஒலிபெருக்கியால் பெரிதும் பாதிக்கப்படும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தினால் அவ்வாறு எவையும் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட வில்லை. 

யாழ். மாவட்ட அரச அதிபர் இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

https://ibctamil.com/article/loudspeakers-that-blare-even-during-olexam-periods-1742633792#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இன்னும் கனக்க முன்னேறணும்.....😭

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.