Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் 22 கட்சிகளும் 13 சுயேட்சைகளும் நிராகரிப்பு

21 Mar, 2025 | 09:37 AM

image

யாழ்ப்பாணத்தில், 22 கட்சிகளுடையதும் , 13 சுயேட்சை குழுக்களினதும் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். 

யாழ். மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (20) ஊடகவியலாளர்களிடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக 148 கட்சிகளும் 27 சுயேட்சை குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தி இருந்தனர். 

அவற்றில் 136 கட்சிகளும், 23 சுயேட்சை குழுக்களும் நியமன பத்திரத்தை தாக்கல் செய்தனர். அதில் 114 கட்சிகளினதும், 10 சுயேட்சை குழுக்களினதும், நியமன பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 22 கட்சிகளுடையதும், 13 சுயேட்சை குழுக்களினதும் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டன. 

யாழ் . மாநகர சபையில் தமிழ் மக்கள் கூட்டணி , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி  ஈரோஸ் ஆகிய கட்சிகளினதும், ஞானப்பிரகாசம் சுலக்சன் , கௌசல்யா நரேந்திரன் ஆகியோரின் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வல்வெட்டித்துறை நகர சபையில், இராமச்சந்திரன் சுரேன் மற்றும் யோகேஸ்வரி அருளானந்தம் ஆகியோரது சுயேட்சை குழுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சாவகச்சேரி நகர சபையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கட்சியினுடையதும், மகாலிங்கம் சதீஸ் மற்றும் சிவகுருநாதன் ஆகியோரின் சுயேட்சையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

காரைநகர் பிரதேச சபை, நெடுந்தீவு பிரதேச சபை மற்றும் ஊர்காவற்துறை பிரதேச சபை ஆகியவற்றில்  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நியமன பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கட்சியும் துரைராசா சுஜிந்தனின் சுயேட்சையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கில் சபரிமுத்து ஸ்டாலின் என்பவரது சுயேச்சை குழு நிராகரிக்கப்பட்டுள்ளது.  

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில், ஸ்ரீலங்கா கம்பினியுஸ் கட்சியின் நியமன பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் தமிழ் மக்கள் கூட்டணி ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் நியமன பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வலிக்காமம் கிழக்கு பிரதேச சபையில், மக்கள் போராட்ட முன்னணி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் நியமன பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி தென்மேற்கில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளினுடையதும் , தவம் தவநிலைதாசன் என்பவரின் சுயேட்சை குழுவின் நியமன பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பிரதேச சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளினுடையதும் ரெஜி ராஜேஸ்வரன் என்பவரின் சுயேட்சை குழுவின் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பிரதேச சபையில் வைத்திலிங்கம் ஜெகதாஸ் மற்றும் குணரட்ணம் குகானந்தன் ஆகியோரின் சுயேட்சை குழுவின் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளினதும் , திலீப் ஜீவரஞ்சன் என்பவரின் சுயேட்சை குழுவின் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகர சபை மற்றும் வேலணை பிரதேச சபைகளில் அனைத்து நியமன பத்திரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் தெரிவித்தார்.

யாழில் 22 கட்சிகளும் 13 சுயேட்சைகளும் நிராகரிப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தல்; தபால் மூல வாக்களிப்பு திகதிகள் அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அன்றைய தினம் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் என அந்த தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/316605

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல்; விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு முக்கிய அறிவித்தல்

31 MAR, 2025 | 06:39 PM

image

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்கள் தங்களது வாக்குச் சீட்டை அடையாளமிடுவதற்கு வாக்கெடுப்பு நிலையத்திற்கு உதவியாளர்  ஒருவரை அழைத்துச் செல்வது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்கள் தங்களது வாக்குச் சீட்டை அடையாளமிடுவதற்கு வாக்கெடுப்பு நிலையத்திற்கு உதவியாளர்  ஒருவரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

  • விசேட தேவையுடைய வாக்காளர்களுடன் வாக்கெடுப்பு நிலையத்திற்கு செல்லும் உதவியாளர்கள், 

1. 18 வயதை பூர்த்தி செய்த ஒருவராக இருத்தல் வேண்டும் என்பதோடு தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளராக இருத்தல் கூடாது.

2. தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சி ஒன்றின் அதிகாரமளிக்கப்பட்ட முகவராகவோ வாக்கெடுப்பு நிலையத்தின் முகவராகவோ இருத்தல் கூடாது.

3. விசேட தேவையுடைய வாக்காளர்கள் தங்களது உதவியாளர்களை உடன் அழைத்துச் செல்ல தகுதி சான்றிதழல் ஒன்றை உரிய வாக்கெடுப்பு நிலையத்தின் அலுவலருக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.

4. தகுதி சான்றிதழலை பெற்றுக்கொள்ள தேவையான விண்ணப்பங்களை கிராம அலுவலர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் அல்லது https://www.elections.gov.lk/ என்ற தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். 

MR_LAE__34______Tamil_1_-1.jpg

https://www.virakesari.lk/article/210760

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சி வேட்பாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளரின் வீட்டின் மீது நேற்று (31) இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதல் காரணமாக வீட்டிலிருந்த யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லையென வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

இம்முறை உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போரதீவுப்பற்று பிரதேச சபைக்காக போட்டியிடும் அருள்ராஜா பிரேமாகரன் என்பவரின் வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

குறித்த நபர் நேற்று இரவு மரண வீடு ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் அந்தநேரத்தில் வீட்டில் மனைவி, பிள்ளைகள் உறங்கிக்கொண்டிருந்ததாகவும் பிரேமாகரன் தெரிவித்தார். 

இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வீட்டின் கூரையின் மீது இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ள நிலையில் வீட்டின் உட்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீற் எரிந்துள்ளதாகவும் வேறு சேதங்கள் ஏற்படவில்லையெனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

https://adaderanatamil.lk/news/cm8y3k5cg00he10a6ppfpj5lq

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-48.jpg?resize=750%2C375&ssl=

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான அப்டேட்!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையம் சுமார் 700,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.

தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுடையவர்களுக்கான விண்ணப்ப செயல்முறை மார்ச் 3 தொடங்கி மார்ச் 17 ஆம் திகதி நிறைவடைந்தது.

இதற்கிடையில், தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட அரசு அதிகாரிகள் குறித்த தகவல்களைத் தொகுக்கும் பணி நிறைவடையும் தருவாயில் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இன்னும் தங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்காத பொது அதிகாரிகள் உடனடியாக அவ்வாறு செய்யுமாறு தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.

அத்தகைய அதிகாரிகள் தங்கள் தகவல்களை, தங்கள் நிறுவனத் தலைவரின் பரிந்துரைகளுடன், அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்டத் தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் – என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1427269

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 89 முறைப்பாடுகள் பதிவு

07 APR, 2025 | 05:30 PM

image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில்  கடந்த 24 மணி நேரத்திற்குள் 89 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 87  முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 02  முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற தேர்தல்  முறைப்பாடுகளின் சாராம்சக் குறிப்பு .  (2025.04.06 - பி.ப 4.30 மணி வரை )

d52e11ad-7ec2-41f5-8632-4666045590a0.jpg

https://www.virakesari.lk/article/211410

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 1,121 முறைப்பாடுகள் பதிவு!

11 APR, 2025 | 02:44 PM

image

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி ) 1,121  முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 06 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1,062 முறைப்பாடுகளும் ஏனைய விடங்கள் தொடர்பில் 53 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. 

WhatsApp_Image_2025-04-11_at_14.17.14.jp

https://www.virakesari.lk/article/211803

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல்; வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை எடுத்த அரசியல் கட்சிகள், சுயேச்சை குழுக்களுக்கு முக்கிய அறிவித்தல்

15 APR, 2025 | 03:55 PM

image

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக  நீதிமன்ற நடவடிக்கைகளை எடுத்த அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது, 

2025.05.06 ஆம் திகதியன்று நடத்தப்படவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் போட்டியிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட பெயர் குறித்த நியமனப் பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், அந்த மனுக்கள் மற்றும் வழக்குத் தீர்ப்புக்களின் பிரதிகளை குறித்த மாவட்டத்தின் மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்துக்கு சமர்ப்பிக்குமாறு அந்தந்த அரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் அதிகாரம் பெற்ற முகவர்கள், சுயேட்சைக் குழுத் தலைவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட சுமார் 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 4 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (11) நீக்கியுள்ளது.

குறித்த 18 உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீள ஏற்றுக்கொள்ளுமாறு அந்தந்த தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு எழுத்தாணை ஒன்றை பிறப்பித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த இடைக்காலத் தடையுத்தரவை நீக்கியுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான சகல பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் வாரம் 22,23,24, ஆகிய தினங்களில் தபால்மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

IMG_0001-1.jpg

https://www.virakesari.lk/article/212031

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு திகதிகளில் மாற்றம்

எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு சில தினங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இதன்படி 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புகள் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

முன்னதாக 22ஆம், 23ஆம் திகதிகளில் அஞ்சல் மூல வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பான தீர்ப்பின் நிமித்தம், அந்தத் திகதிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக ஒதுக்கப்பட்ட மேலதிக நாட்களான 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/317118

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 2,298 முறைப்பாடுகள் பதிவு!

23 APR, 2025 | 02:15 PM

image

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி) 2,298 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 11 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 2,116 முறைப்பாடுகளும் ஏனைய விடங்கள் தொடர்பில் 171 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. 

WhatsApp_Image_2025-04-23_at_13.51.55.jp

https://www.virakesari.lk/article/212724

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்றுடன் ஏப்ரல் 25, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளிலும் தபால்மூல வாக்குகளை அளிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரசு நிறுவனங்கள், பொலிஸார், முப்படைகள், பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்பு சபை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் தபால்மூல வாக்கு விண்ணப்பதாரர்கள் இந்த நான்கு நாட்களில் தங்கள் தபால்மூல வாக்குகளை பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக 648,495 விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/317270

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 2,623 முறைப்பாடுகள் பதிவு!

25 APR, 2025 | 03:57 PM

image

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி) 2,623 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 13 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 2,421 முறைப்பாடுகளும் ஏனைய விடங்கள் தொடர்பில் 189 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. 

LAE_2025_70_S-1.jpg

https://www.virakesari.lk/article/212924

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தபால்மூல வாக்களிப்பு செவ்வாயுடன் நிறைவு : தகுதி பெற்றவர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் - தேர்தல்கள்  ஆணைக்குழு வலியுறுத்தல்

Published By: DIGITAL DESK 2

27 APR, 2025 | 07:55 PM

image

(இராஜதுரை ஹஷான்)

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு செவ்வாய்க்கிழமை (28) உடன் நிறைவடைகிறது. வாக்களிப்புக்கான  காலம் இனி நீட்டிக்கப்படாது. ஆகவே வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள சகல அரச உத்தியோகத்தர்களும் தவறாமல் வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு  அறிவுறுத்தியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் அதிகார சபைகளுக்கான உத்தியோகபூர்வ வாக்கெடுப்பு எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது. உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கு இம்முறை 647,495 அரச உத்தியோகத்தர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதற்கமைய கடந்த 24, 25 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்கெடுப்பு நடைபெற்றது.இன்றும், நாளையும்  வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. தபால்மூல வாக்கெடுப்பு வழங்கப்பட்ட காலவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளதால் இனி  வாக்களிப்புக்கு அவகாசம் வழங்க்கபடமாட்டாது.

ஆகவே தபால்மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்ற சகல அரச உத்தியோகத்தர்களும் தவறாமல் வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நேற்றைய தினம் விசேட தபால் சேவை ஊடாக விநியோகிக்கப்பட்டன. வாக்காளர் அட்டை விநியோகம் நாளையுடன் நிறைவடையும்  இதுவரையான காலப்பகுதியில் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் 2024 உள்ளூர் அதிகார சபைகள்  தேர்தலுக்காக  தேருநர் இடாப்பில் தாம் பதிவு  செய்துக்கொண்ட  முகவரிக்குரிய தபால் நிலையத்துக்குச் சென்று தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர்  உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை கைவசம் வைத்திருப்பது வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்காளரை அடையாளம் காண்பதற்கு வசதியானதாக அமையுமென்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/213092

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த தேர்தல்களில் அசெளகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை இம்முறை தவிர்த்து மென்மேலும் வினைத்திறனாக செயற்படுமாறு யாழ் அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

Published By: DIGITAL DESK 2

29 APR, 2025 | 05:33 PM

image

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத்  தேர்தலில்  பொறுப்பாக நியமிக்கப்படும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் ஒவ்வொருவரும் வாக்களிப்பு நிலையங்களுக்குரிய முழுமையான பொறுப்பு மற்றும் அதிகாரம் கொண்டவர்களாக இருப்பதால் இத் தேர்தலில் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் பங்களிப்பானது  மிகவும் முக்கியமானது என யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள  உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக மூன்றாவது கட்டமாக தெரிவு செய்யப்பட்ட  சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்றது. 

இதன் போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த  தேர்தலில்களில் கற்றுக்கொண்ட பாடத்தினை அடிப்படையாகக் கொண்டு சில அசெளகரியங்கள் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கு  ஏற்பட்டிருந்தால்  அவற்றை இம்முறை தவிர்த்து மென்மேலும் வினைத்திறனாக செயற்படுமாறும் தெரிவித்ததுடன், இம் முறை வட்டார ரீதியாக வாக்கெண்ணல் நடைபெறவுள்ளதால் தங்களுக்குரிய பொறுப்புக்களை உணர்ந்தும் செயற்பட வேண்டும் என்பதுடன், அஞ்சல் வாக்கெண்ணல் தொடர்பாகவும் உரிய அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் கேட்டுக் கொண்டார்.

மேலும், ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் பார்வைக்குறை பாடுடையவர்களுக்கான வசதிகளை அறிவுறுத்தல்களுக்கு அமைய மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்குமாறும் தெரிவத்தாட்சி அலுவலர் கேட்டுக்கொண்டார். 

கடந்த தேர்தலில் கடமைகளில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கிய அசெளகரியங்கள் மற்றும் பிரச்சனைகளைக் கேட்டறிந்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்ததுடன் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நீதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக   பிரதித் தேர்தல் ஆணையாளர் இ. சசீலனால் விளக்கமளிக்கப்பட்டது. 

FB_IMG_1745917040148.jpgFB_IMG_1745917051634.jpgFB_IMG_1745917044348.jpgFB_IMG_1745917037729.jpg

https://www.virakesari.lk/article/213286

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி தேர்தல் வாக்களிப்பு; தனியார் துறை முதலாளிகளிடம் தேர்தல் ஆணையம் விடுத்திருக்கும் கோரிக்கை

உள்ளூராட்சி தேர்தல் வாக்களிப்பு; தனியார் துறை முதலாளிகளிடம் தேர்தல் ஆணையம் விடுத்திருக்கும் கோரிக்கை

6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கும் வகையில், தனியார் துறை ஊழியர்களுக்கு தேவையான விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணையம் முதலாளிகளை கேட்டுக் கொண்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தின் பிரிவு 84A (1) இன் படி, இந்த விடுப்பு ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு அல்லது தனிப்பட்ட விடுப்பு இல்லாமல் வழங்கப்பட வேண்டும்.

பணியிடத்திலிருந்து வாக்குச் சாவடிக்கு உள்ள தூரத்தின் அடிப்படையில் வழங்கப்படும் விடுப்பின் நீளம் கீழ்கண்டவாறு தீர்மானிக்கப்பட வேண்டும்.

• 40 கிலோமீட்டர் அல்லது அதற்கும் குறைவான தூரமாக இருந்தால் அரை நாளாகவும்,

• 40 முதல் 100 கிலோ மீட்டர் வரை இருந்தால் ஒரு நாளாகவும்,

• 100 முதல் 150 கிலோ மீட்டர் வரை இருந்தால் ஒன்றரை நாளாகவும்,

• 150 கிலோ மீட்டருக்கு மேல் இருந்தால் இரண்டு நாட்களாகவும் விடுமுறை காலத்தை சரிசெய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்து

https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/317418

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,998 முறைப்பாடுகள் பதிவு!

02 MAY, 2025 | 04:10 PM

image

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 01 ஆம் திகதி) 3,998 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 26 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 3,722 முறைப்பாடுகளும் ஏனைய விடங்கள் தொடர்பில் 250 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. 

MR_2025_LAE_85_T_1_-1.jpg

https://www.virakesari.lk/article/213512

  • கருத்துக்கள உறவுகள்

495367167_10026061934082727_155908938702

உள்ளூராட்சி தேர்தல் மாதிரி வாக்குச் சீட்டு. - யாழ்.மாநகர சபை.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் நாளையும் பாடசாலைகள் மூடப்படும் அரசு அறிவித்துள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் கடமையில் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள்

தேர்தல் கடமையில் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் இன்று காலை ஆரம்பமானது.

தேர்தலுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேவையேற்படின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினரை இணைத்துக் கொள்ள எதிர்பார்ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.

இதற்கமைய பொலிஸாரால் நடமாடும் கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்போது எவரேனும் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுவார்களாயின் குறிந்த நபரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

அத்துடன் அமைதிக் காலப்பகுதியில் தேர்தல் சட்டத்தை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/317535

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 வாக்களிப்பு நிறைவு : சற்று நேரத்தில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பம்! 

Published By: DIGITAL DESK 3

06 MAY, 2025 | 04:23 PM

image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவுற்றுள்ளதாகவும் அமைதியான முறையில் செயற்படுமாறும் தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

2025 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (06) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்தது.

இந்நிலையில், சற்றுநேரத்தில் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகள் வாக்கெடுப்பு கட்டளைச்சட்டத்தின் படி 8287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 339 உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளுக்கான தேர்தல் வாக்கெடுப்பு இன்று இடம்பெற்று தற்போது நிறைவடைந்துள்ளது.

இதன் மூலம் 28 மாநகர சபைகளுக்கும் 36 நகர சபைகளுக்கும் 275 பிரதேச சபைகளுக்கும் 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெற்றுள்ளது. 

நாடளாவிய ரீதியில் 4877 உள்ளூராட்சி மன்ற அதிகார சபை வட்டாரங்களில் அமைக்கப்பட்டுள்ள 13, 759 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் ஊடாக இன்று வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன. 

வாக்கெண்ணும் பணிகளுக்காக தொகுதி மட்டத்தில் 5,783 மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இன்னும் சற்று நேரத்தில் குறித்து வாக்கெண்ணும் மத்திய நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயோட்சைக் குழுக்கள் சார்பில் 75,589 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றன நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பின் கூட்டிணைக்கப்பட்ட பெயர் பட்டியலுக்கமைய இம்முறை 17,156,338 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

https://www.virakesari.lk/article/213845

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகல உள்ளுராட்சிமன்றங்களிலும் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துங்கள்; தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம்

Published By: VISHNU

07 MAY, 2025 | 09:24 PM

image

(நா.தனுஜா)

உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம், உள்ளுராட்சிமன்றங்களில் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படுவதை உறுதிசெய்யவேண்டிய சட்டரீதியான கடப்பாடு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இருக்கிறது. எனவே ஒவ்வொரு உள்ளுராட்சிமன்றமும் இளம் பெண்கள் உள்ளடங்கலாக 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருப்பதனை தேர்தல்கள் ஆணைக்குழு இறுக்கமாக நடைமுறைப்படுத்தவேண்டும். அதிலிருந்து தவறும் அரசியல் கட்சிகள் பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டும் என 34 பெண்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

இதுகுறித்து மன்னார் பெண்கள் அபிவிருத்திப்பேரவை, சமூக அபிவிருத்தி நிலையம், கிழக்கு சமூக அபிவிருத்தி நிதியம், பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு, முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நிதியம் என்பன உள்ளடங்கலாக 34 பெண்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணையாளர்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் முடிவடைந்திருப்பதுடன், உள்ளுராட்சிமன்றங்களில் பெண்களின் 25 சதவீத கட்டாய பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படவேண்டியதன் அவசியத்தை இது மீளநினைவூட்டியிருக்கிறது. இம்முறை தேர்தலில் வாக்களித்தோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பினும், பிரசாரம், வாக்களிப்பு, தேர்தலில் போட்டியிடல், போனஸ் ஆசனத்தில் பதிவுசெய்யப்படல் என தேர்தல் செயன்முறையின் சகல கூறுகளிலும் பெண்கள் உத்வேகத்துடன் பங்கேற்றமையைக் காணமுடிந்தது. இதற்கு முன்னர் உள்ளுராட்சிமன்றங்களில் அங்கம்வகித்த அனுபவத்தைக்கொண்ட பெண்கள் பலர் இம்முறை கட்சிகளின் ஊடாகவோ, சுயேட்சையாகவோ போட்டியிட்டனர்.

அதேவேளை இத்தேர்தலில் அநேகமான பெண்கள் அதிகளவு வாக்குகளைப் பெற்றிருப்பதையும், மீண்டும் உள்ளுராட்சிமன்ற அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்பினைப் பெற்றிருப்பதையும் அவதானிக்கமுடிகிறது. இருப்பினும் பல சிறிய கட்சிகள் ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களையே கைப்பற்றியிருப்பதானது, 'ஒவ்வொரு மூன்று ஆசனங்களுக்கு ஒரு பெண்' என்ற பிரதிநிதித்துவ வீதத்தை உறுதிசெய்வதில் சிக்கலை தோற்றுவித்திருக்கிறது. கடந்தகால தேர்தல் நடைமுறைகளை அவதானிக்கையில், பெரும்பாலான கட்சிகள் பெண்களை வேட்பாளர்களாக முன்மொழிவதில் தயக்கம் காண்பித்திருப்பதுடன், சில உள்ளுராட்சிமன்றங்கள் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதற்கு முழுமையாகத் தவறியிருந்தன.

இருப்பினும் உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் சட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் பிரகாரம், 25 சதவீத பெண் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படுவதை உறுதிசெய்யவேண்டிய சட்டரீதியான கடப்பாடு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு உள்ளுராட்சிமன்றமும் இளம் பெண்கள் உள்ளடங்கலாக 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருப்பதனை தேர்தல்கள் ஆணைக்குழு கட்டாயமாக நடைமுறைப்படுத்தவேண்டும்.

குறித்தவொரு கட்சி இரண்டு ஆசனங்களை வென்றிருப்பின், அவற்றில் குறைந்தபட்சம் ஒரு ஆசனமேனும் பெண் பிரதிநிதிக்கு ஒதுக்கப்படவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தவேண்டும். இக்கட்டாய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு அதற்குரிய அங்கீகாரம் பகிரங்கமாக வழங்கப்படும் அதேவேளை, அதனை உறுதிப்படுத்தாத கட்சிகள் பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/214139 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.