Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Eppothum Thamizhan said:

ஏன் SRHஐ விட்டுட்டியல்! அவையையும் சேர்த்தால் இரண்டு மூன்றுதான் மிஞ்சும் போல கிடக்கிது!

நான் போட்ட அணிகளில் இரண்டு ஏற்கனவே வெளியாலை. சன்ரைசேர்ஸ் எப்பிடியும் இண்டைக்கு வெளியாலை போகும் அடுத்தது கேகேஆர் அதுவும்நாளைக்கோ தெரியாது. எப்பிடியிருக்கு என் தெரிவு!

  • Replies 3.3k
  • Views 94.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்

494536672_685593517391715_26670372859821

அப்பாடா ....... ஒருமாதிரி சிந்தா வைப் பதிந்தது பிரீதியாய் இருக்கு . ......... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

வயதினை பார்ப்பதனை விட்டு திறமையினை பார்த்தால் பிரச்சினை இருக்காது என கருதுகிறேன், பொதுவாக வயது குறைவான ஒருவருக்கு வழங்கப்படும் ஆர்ப்பாட்டமான ஆதரவு அவரது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் எனும் எதிர்பார்ப்பே காரணமாக இருக்கின்றது.

பிரித்திவ் சா வந்த போது அவரது உள்ளூர் போட்டியில் விளையாடிய பெறுபேறுகள் தெண்டுல்கரின் பெறுபேறு போல இருந்தமையால் அவர் பெரிதும் கொண்ட்டாடப்பட்டார், அப்போதய இந்தியணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கினால் நன்றாக இருக்கும் என விரும்பினோம் (நான் அவாரது விளையாட்டினை பார்த்திருக்கவில்லை).

பின்னர் ஒருவாறு தேசிய அணியில் இடம் பெற்றார் அதனை தொடர்ந்து ஐ பி எல் இலும் இடம்பெற்றார், இப்போது அவர் பற்றி யாரும் பேசுவதில்லை.

அதே போல் வயதானவர் தொடர்ந்து விளையாடினால் அவருக்கெதிரான கருத்துக்களும் வருகின்றன, இளையோருக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் எனும் விருப்பே அதற்கு காரணமாக இருக்கின்றது.

இங்கு வயது ஒரு பேசு பொருளாகின்ற நிலை காணப்படுகிறது.

இவர் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் போல சிந்திக்கிறார், நேற்றைய போட்டியில் சாகரின் பந்து வீச்சில் ஜெஸ்வால் எதிர் கொண்ட போது அடுத்த பக்கம் இருந்தார்.

நீங்கள் இதனை அவதானித்திருப்பீர்கள் என கருதுகிறேன், ஜெஸ்வாலுக்கு களத்தடுப்பு எல்லைக்கோட்டில் உள்ள இரண்டு வீரர்கள் wide deep third man, deep backward square leg.

இவர் ஆடவந்த போது களத்தடுப்பில் சிறிய மாற்றம் செய்தார்கள் wide deep third man இனை fine deep third man ஆக மாற்றினார்கள்.

அதனை பார்த்து பந்து 4 ஆவது 5 ஆவது விக்கெட்டுக்கு அளவு குறைந்த பந்தாக வரும் என கணித்து தனது நிலையினை பந்து வீசுவதற்கு முன்னதாகவே எடுத்திருந்தார் (பின் கால் 3ஆவது விக்கெட்டிலும் முன் கால் திறந்த நிலையில் முதலாவது விக்கெட்டுக்கு வெளியே என), ஆனால் அது மும்பாய் அணி திட்டமிட்டே அவ்வாறு செய்திருந்தது அவருக்கு தேவையான அளவு குறைந்த பந்து வரும் என எதிர்பார்க்க வைத்து புல் லெந்தில் பந்து வீசி தூக்கி அடிக்க முடியாதவாறு செய்து ஆட்டமிழக்க செய்தார்கள்.

அனுபவமான வீரர்களே non strike இல் நிற்கும் போது வாய்பார்த்துக்கொண்டிருப்பார்கள் (ஒரு போட்டியில் மனிஸ் பாண்டே non striker இல் வாய்பாத்துக்கொண்டிருந்து தோனியிடம் பரிதாபகரமாக திட்டு வாங்கியிருந்தார்.) ஆனால் இவர் மிக அவதானமாக விடயங்களை அவதானிக்கிறார்.

இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் எனவே தோன்றுகிறது .

கைதராபாத் தனது கட்டாந்தரையில் இன்று டைட்டன்ஸை உருட்டி எடுப்பார்கள் என்றே கருதுகிறேன். ஆனால் டைட்டன்ஸ் இடம் நல்ல பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள், இன்றைய போட்டியில் கில் அதிக ஓட்டங்களை எடுத்தால் அதிக ஓட்டம் எடுப்பவராக கில்லை தெரிவு செய்த எனக்கு புள்ளி கிடைக்கும் அத்தோடு குஜராத்திற்கு வெற்றியும் கிடைக்கும் (கட்டாந்தரையில் கில்லும் மிக நன்றாக விளையாடுவார்)😂

பிரித்வி சா - தலைமேல் வைத்துக் கொண்டாடப் பட்டார். அதுவே அவரின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. அவர் தலையில் கனம் ஏறி, சொல்பேச்சுக் கேக்காமல், தன்னைத்தானே அழித்துக் கொண்டார். அவர் விசம் என்றும் மற்ற வீரர்களை மதிப்பதில்லை என்றும் கருதி, ஒட்டு மொத்தமாக அணிகளால் ஒதுக்கப்பட்டார்.

வைபவ் அவ்வாறான பாதையில் போகமாட்டார் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

கைதராபாத் தனது கட்டாந்தரையில் இன்று டைட்டன்ஸை உருட்டி எடுப்பார்கள் என்றே கருதுகிறேன். ஆனால் டைட்டன்ஸ் இடம் நல்ல பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள், இன்றைய போட்டியில் கில் அதிக ஓட்டங்களை எடுத்தால் அதிக ஓட்டம் எடுப்பவராக கில்லை தெரிவு செய்த எனக்கு புள்ளி கிடைக்கும் அத்தோடு குஜராத்திற்கு வெற்றியும் கிடைக்கும் (கட்டாந்தரையில் கில்லும் மிக நன்றாக விளையாடுவார்)😂

இன்று மேட்ச் அகமதாபாத்தில் அதுவும் கறுப்பு நிற பிட்சில் நடக்கிறது! யார் நாணய சுழற்சியில் வெல்கிறார்களோ அவர்களுக்கே இன்று வெற்றி!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வாதவூரான் said:

நான் போட்ட அணிகளில் இரண்டு ஏற்கனவே வெளியாலை. சன்ரைசேர்ஸ் எப்பிடியும் இண்டைக்கு வெளியாலை போகும் அடுத்தது கேகேஆர் அதுவும்நாளைக்கோ தெரியாது. எப்பிடியிருக்கு என் தெரிவு!

இன்று SRH தோல்வி அடைந்தாலும் அதிகாரபூர்வமாக தோல்வி அடையாது. இன்றைய போட்டி உட்பட 5 போட்டிகள் SRH விளையாடவேண்டும். 5 இல் 4 இனை வென்றால் SRH 14 புள்ளிகள் பெறும்.

  • கருத்துக்கள உறவுகள்

5 hours ago, vasee said:

நீங்கள் இதனை அவதானித்திருப்பீர்கள் என கருதுகிறேன், ஜெஸ்வாலுக்கு களத்தடுப்பு எல்லைக்கோட்டில் உள்ள இரண்டு வீரர்கள் wide deep third man, deep backward square leg.

இவர் ஆடவந்த போது களத்தடுப்பில் சிறிய மாற்றம் செய்தார்கள் wide deep third man இனை fine deep third man ஆக மாற்றினார்கள்.

அதனை பார்த்து பந்து 4 ஆவது 5 ஆவது விக்கெட்டுக்கு அளவு குறைந்த பந்தாக வரும் என கணித்து தனது நிலையினை பந்து வீசுவதற்கு முன்னதாகவே எடுத்திருந்தார் (பின் கால் 3ஆவது விக்கெட்டிலும் முன் கால் திறந்த நிலையில் முதலாவது விக்கெட்டுக்கு வெளியே என), ஆனால் அது மும்பாய் அணி திட்டமிட்டே அவ்வாறு செய்திருந்தது அவருக்கு தேவையான அளவு குறைந்த பந்து வரும் என எதிர்பார்க்க வைத்து புல் லெந்தில் பந்து வீசி தூக்கி அடிக்க முடியாதவாறு செய்து ஆட்டமிழக்க செய்தார்கள்.

அனுபவமான வீரர்களே non strike இல் நிற்கும் போது வாய்பார்த்துக்கொண்டிருப்பார்கள் (ஒரு போட்டியில் மனிஸ் பாண்டே non striker இல் வாய்பாத்துக்கொண்டிருந்து தோனியிடம் பரிதாபகரமாக திட்டு வாங்கியிருந்தார்.) ஆனால் இவர் மிக அவதானமாக விடயங்களை அவதானிக்கிறார்.

இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் எனவே தோன்றுகிறது .

கைதராபாத் தனது கட்டாந்தரையில் இன்று டைட்டன்ஸை உருட்டி எடுப்பார்கள் என்றே கருதுகிறேன். ஆனால் டைட்டன்ஸ் இடம் நல்ல பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள், இன்றைய போட்டியில் கில் அதிக ஓட்டங்களை எடுத்தால் அதிக ஓட்டம் எடுப்பவராக கில்லை தெரிவு செய்த எனக்கு புள்ளி கிடைக்கும் அத்தோடு குஜராத்திற்கு வெற்றியும் கிடைக்கும் (கட்டாந்தரையில் கில்லும் மிக நன்றாக விளையாடுவார்)😂

நல்ல அவதானிப்பு வசி. இந்த trap எப்பவுமே நடக்கிறதுதானே. நீங்களும் சரியாகப் பார்த்திருக்கிறீங்கள். அவர்களின் ஆட்டத்தை நான் நேரலையில் பார்க்கவில்லை.

அவரின் முன்னங்கால் நகர்த்தல் எல்லாம் பார்க்க அருமையா இருக்கு. Effortless. எந்தப் பந்தையும் அநாயாசமாக எதிர்கொள்கிறார். அடுத்தடுத்த போட்டிகளில் பார்க்கத்தானே போறம்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Eppothum Thamizhan said:

இன்று மேட்ச் அகமதாபாத்தில் அதுவும் கறுப்பு நிற பிட்சில் நடக்கிறது! யார் நாணய சுழற்சியில் வெல்கிறார்களோ அவர்களுக்கே இன்று வெற்றி!

SRH பந்து வீச முடிவு செய்திருக்கினம். அப்ப அடிச்சு வெளுக்கிறதெல்லாம் பொய்யா.

SRH இன்றோட வீட்ட போகினமா.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கந்தப்பு said:

Old is gold

என்றாங்களே எல்லாமே பொய்யா கோப்பாலு.

பொய் இல்லை நேற்று ரோகித் அடித்த அடி பார்க்கவில்லையா

இரண்டு கிழமை சன்பிரான்சிஸ்கோவில் நிற்கிறபடியால் போட்டிகளை அதிலும் முதல் துடுப்பெடுத்தாடுபவர்களின் விளையாட்டைப் பார்க்க முடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

கைதராபாத் தனது கட்டாந்தரையில் இன்று டைட்டன்ஸை உருட்டி எடுப்பார்கள் என்றே கருதுகிறேன்.

57-0. 4.2 overs!

51) வெள்ளி 02 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

57-0. 4.2 overs!

51) வெள்ளி 02 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஆறாவது தடவையாக 50 ஓட்டங்களைக் கடந்துள்ளார்கள் ஆரம்ப துடுப்பர்கள் இருவரும்.

தற்போது 82 ஓட்டங்கள் 6வது பரிமாற்றம் முடிவில்.

  • கருத்துக்கள உறவுகள்

அது என்னங்க, எப்பவும் ஒரு இடைவேளை விட்டா, விக்கட் விழுகுது. தேவையில்லா ஆட்டமிழப்பு சுதர்சா.

  • கருத்துக்கள உறவுகள்

செந்நிறத் தொப்பியை மீண்டும் தனதாக்கிக் கொண்டார் சாய் சுதர்சன். மும்முனைப் போட்டி: சாய், சூரியா, கோலி

  • கருத்துக்கள உறவுகள்

பேட் கம்மின்ஸ் வெளியேபோனால்தான் SRH உருப்படும்! உதவாத பௌலிங், உதவாத கேப்டன்சி, இன்று உதவாத பீல்டிங்!! அவர் ஒரு T20 பிளயரே இல்லை! டெஸ்ற் மேட்ச், 50 ஓவர் மேட்சுகளுக்கு நல்ல வீரர்!

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Eppothum Thamizhan said:

பேட் கம்மின்ஸ் வெளியேபோனால்தான் SRH உருப்படும்! உதவாத பௌலிங், உதவாத கேப்டன்சி, இன்று உதவாத பீல்டிங்!! அவர் ஒரு T20 பிளயரே இல்லை! டெஸ்ற் மேட்ச், 50 ஓவர் மேட்சுகளுக்கு நல்ல வீரர்!

அவரின் பெறுபேறு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பந்து வீச்சிலும் வலுக் காணாது. எல்லாரும் அடிக்கினம். இன்றைக்கு அவர் ஆரம்பத்திலேயே வீசியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பட்லரின் இரண்டு கேட்சுகளை விட்டார்கள்! மேட்ச் முடிஞ்சுது!

  • கருத்துக்கள உறவுகள்

240 அடிக்க வேணும். இல்லாட்டி SRH கலைப்பாங்கள் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அபிஷேக்கின் அதிரடித் தாக்குதல் இன்றைக்கு ஆரம்பமாகிவிட்டது. எல்லாரும் வாங்கோ வேடிக்கை பார்க்கலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 51வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்கள் புயல்வேகத் துடுப்பாட்டத்தினால் எதிரணியின் பந்துவீச்சை சின்னாபின்னமாக்கினர். சாய் சுதர்சன் 48 ஓட்டங்களையும், சுப்மன் கில் 76 ஓட்டங்களையும், ஜொஸ் பட்லர் 64 ஓட்டங்களையும் எடுத்து வலுவான நிலைக்குச் செல்ல உதவியதால் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ஓட்டங்களை அள்ளிக் குவிக்கமுடிந்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர்களில் அபிஷேக் ஷர்மா மாத்திரம் மின்னல் வேகத்தில் 74 ஓட்டங்களை எடுத்தார். மற்றையோர் எல்லோரும் குறைந்த ஓட்டங்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறியனர். இறுதியில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ஓட்டங்களையே எடுத்தனர்.

முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 38 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0777.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

ஆகா. 50 புள்ளிகளைப் பெற்றாச்சு.

வசியின் தலைமையில் எட்டுப்பேர் கதவைத் தட்டிக்கொண்டு நிற்கினம். கண் அசந்தா, 15வதாக் கொண்டே விட்டுடும் போலையே. நம்ம இராசி என்ன இராசி.

அந்த இரண்டு பேரோடையும் சேராத வரைக்கும், ஒரு நம்பிக்கை இருக்கு. 😁

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

GMT நேரப்படி நாளை சனி 03 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

52) சனி 03 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்

RCB எதிர் CSK

08 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் 15 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

  • ஈழப்பிரியன்

  • வாத்தியார்

  • சுவி

  • பிரபா

  • செம்பாட்டான்

  • கிருபன்

  • எப்போதும் தமிழன்

  • நந்தன்

சென்னை சூப்பர் கிங்ஸ்

  • வசீ

  • அல்வாயன்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • சுவைப்பிரியன்

  • கந்தப்பு

  • வாதவூரான்

  • ஏராளன்

  • ரசோதரன்

  • நுணாவிலான்

  • தமிழ் சிறி

  • குமாரசாமி

  • புலவர்

  • கோஷான் சே

  • அகஸ்தியன்

இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? honeybee_1f41d.gif

  • கருத்துக்கள உறவுகள்

11 minutes ago, கிருபன் said:

நாளைக்கு எப்போதும் தமிழனுக்கு கனதியான நாள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜயகோ. ஞான் 15வதாக வருவதற்குரிய முயற்சிகள் யாவும் எடுக்கப்பட்டு விட்டன. அவனுக்குத் தெரியும் எங்கே சேர்க்கணுமோ அங்கே சேர்க்கவேணும் என்டு. சேர்த்து விட்டானே அந்த இருவரோடு. ஒருவராலும் இனி காப்பாத்தவே முடியாது.

KGF படத்தில ஒரு வசனம் வரும் "நீங்க மட்டும் அவன் குறுக்க போயிடாதீங்க சார்" அதே நிலைமைதான் இங்கேயும்.

Screenshot-20250502-122556-Chrome.jpg

Edited by செம்பாட்டான்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.