Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கந்தப்பு said:

CSK பந்து வீச்சு பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ் கூறுகையில், “தனது பந்துவீச்சை எதிரிகள் தற்போது நன்கு புரிந்து கொண்டிருப்பதால், மாதீஷ பதிரானா தன்னுடைய யுத்தவழிகளை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் எனவும் கூறினார். முக்கியமான ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் பதிரானாவை மிகவும் நுட்பமாக எதிர்கொண்டு விளையாடுகிறார்கள் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். அதன் விளைவாக, தனது செயல்திறனை மேம்படுத்தும் வகையில் தந்திர மாற்றங்கள் தேவைப்படுகின்றன என அவர் பரிந்துரை செய்தார். பதிரானாவின் அண்மைய பந்துவீச்சு முறைமாற்றங்களும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என சைமன்ஸ் குறிப்பிடினார். இருப்பினும், அவர் மேம்படும் திறன் இருக்கின்றது என்பதில் நம்பிக்கை வைத்திருப்பதாக” அவர் தெரிவித்தார்.

கடைசிப் போட்டியில் பத்திரானா ஒரு வைட் போல் ஒன்றும் வழங்க வில்லை. அதற்கு முதல் நடந்த பங்களூருக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுக்கள் எடுத்திருந்தார். இனி வரும் 2 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினால் பத்திரானவை நீக்கமட்டார்கள் என நினைக்கிறேன். எனெனில் 2026 ஐபிஎல்லுக் மினி ஏலம் தான் நடத்துவார்கள். சென்னை ஒரு சிலரை மட்டுமே அணியில் இருந்து நீக்குவார்கள் என நினைக்கிறேன்.

ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை

இவ‌ர் ப‌ந்து போடுவ‌து கிடையாது................இவ‌ரின் ப‌ந்து வீச்சில் ந‌ம்பிக்கை பெரிதாக‌ இல்லை.................டோனியின் செல்ல‌ப் பிள்ளை இவ‌ர்......................

  • Replies 3.3k
  • Views 94.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்

495319451_677737055124741_91022141232062

பையன் அனுஷ்காவின் விசிறி போல ....... பாவம் கோலி ........ !

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, suvy said:

495319451_677737055124741_91022141232062

பையன் அனுஷ்காவின் விசிறி போல ....... பாவம் கோலி ........ !

நானும் தானப்பா.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

495319451_677737055124741_91022141232062

பையன் அனுஷ்காவின் விசிறி போல ....... பாவம் கோலி ........ !

கோலிய‌ இனி ஜ‌பிஎல்லும் ச‌ர்வ‌தேச‌ ஒரு நாள் போட்டியிலும் தான் காண‌ முடியும்

2027உல‌க‌ கோப்பையோட‌ ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் இருந்து ஓய்வை அறிவிப்பார்.................கால‌ங்க‌ள் வேக‌மாக‌ போகுது..................

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கந்தப்பு said:

கென்யா இலங்கை, வங்காளதேசம், சிம்பாவே , கனடா போன்ற நாடுகளை மட்டுமே வென்றது. கென்யா அரை இறுதி போட்டிக்கு சென்றதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நியூசிலாந்து அணி கென்யாவில் நடந்த கென்யாவுக்கு எதிரான போட்டியினை பாதுகாப்பு காரணமாக புறக்கணித்து விளையாடாத காரணம். நியூசிலாந்து விளையாடாததினால் கென்யா 4 புள்ளிகள் பெற்றது. அத்துடன் இங்கிலாந்து சிம்பாவேயில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி சிம்பாவேக்கு எதிரான போட்டியை முகாம்பே அரசின் இனவெறி காரணமாக புறக்கணித்தது. இதனால் சிம்பாவே 4 புள்ளிகள் பெற்று சூப்பர் 6 க்கு தெரிவானது . இப்போட்டியில் இங்கிலாந்து கலந்து வெற்றி பெற்றால் இங்கிலாந்து சூப்பர் 6 க்கு சென்றிருக்கும். சூப்பர் 6 இல் இங்கிலாந்தினை கென்யா வென்று இருக்குமா என்பது கேள்விக்குறி. இலங்கை சூப்பர் 6 இற்கு செல்ல நல்ல ஓட்ட விகிதம் தேவை என்பதினால் தான் ( இலங்கை இருந்த குழுவில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியா தீவு போன்ற பலமான நாடுகளும் கனடா, வங்காளதேசம், கென்யா ஆகியவையும் இருந்தன) கனடா, வங்கதேசம் , கென்யா போன்ற நாடுகளுக்கு எதிரான போட்டிகளில் ஓட்டவீதத்தினை அதிகரிக்கலாம் என முடிவெடுத்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்றால் பந்து வீச்சினை முதலில் எடுத்து எதிரணியை குறைந்த ஓட்டத்தில் ஆட்டமிழக்க செய்து குறைந்த ஓவர்களில் வெற்றி பெற்றால் ஒட்டவிகிதத்தினை கூட்டலாம் என இலங்கை அணி முடிவெடுத்தது. 3 போட்டிகளிலும் இலங்கை அணியே நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது. வங்கதேசம் 124 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை 21.1 ஓவர்களில் வெற்றி பெற்றது. கனடா 36 ஓட்டங்களுக்கு வெற்றி பெற்றது. 4.4 ஓவர்களில் இலங்கை வெற்றி பெற்றது . கென்யாவுக்கு எதிரான போட்டியில் இரண்டாவதாக துடுப்பாடும் அணி வெல்வது கடினம் என வர்ணனையாளர்கள் சொல்லி இருந்தும் இலங்கை முதலில் பந்து வீச்சினை தெரிவு செய்தது. சூப்பர் 6 இற்கு இலங்கை, நியூசிலாந்து, கென்யா இக்குழுவில் இருந்து தெரிவானது. இலங்கை 4 புள்ளிகளுடனும், கென்யா 8 புள்ளிகளுடனும் நியூசிலாந்து புள்ளிகளுடன் தெரிவானது. (ஏற்கனவே ஆரம்ப சுற்றில் கென்யா, இலங்கை, நியூசிலாந்துக்கு இடையிலான போட்டிகளின் புள்ளிகள் சூப்பர் 6 இல் சேர்க்கப்பட்டது. இந்நாடுகளுக்கு கிடையில் சூப்பர் 6 இல் போட்டிகள் நடைபெறவில்லை).சூப்பர் 6 இல் சிம்பாவே அணியை மட்டுமே வென்று அரை இறுதிக்கு தெரிவானது கென்யா

https://www.espncricinfo.com/series/wills-world-cup-1995-96-60981/kenya-vs-west-indies-20th-match-65175/full-scorecard

கென்யா ஒருமுறை மேற்கிந்திய தீவுகளையே 1996 உலகக்கோப்பை பந்தயத்தில் வென்றிருக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Eppothum Thamizhan said:

https://www.espncricinfo.com/series/wills-world-cup-1995-96-60981/kenya-vs-west-indies-20th-match-65175/full-scorecard

கென்யா ஒருமுறை மேற்கிந்திய தீவுகளையே 1996 உலகக்கோப்பை பந்தயத்தில் வென்றிருக்கிறது!

ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருந்த‌து இந்த‌ அணிக்கு , இப்ப‌ எல்லாமே முடிந்து விட்ட‌து.....................உக‌ன்டா அணி ப‌ல‌மான‌ அணியாக‌ மெது மெதுவாய் வ‌ள‌ந்து வ‌ருது..................கென்னிய‌ அணி இப்ப‌ இருக்கும் சின்ன‌ அணிக‌ளுட‌ன் தொட‌ர் தோல்விய‌ ச‌ந்திக்குது......................ப‌ழைய‌ அணிய‌ மீண்டு வ‌ர‌ வாய்ப்பில்லை..........................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

https://www.espncricinfo.com/series/wills-world-cup-1995-96-60981/kenya-vs-west-indies-20th-match-65175/full-scorecard

கென்யா ஒருமுறை மேற்கிந்திய தீவுகளையே 1996 உலகக்கோப்பை பந்தயத்தில் வென்றிருக்கிறது!

அது ஒரு அதிர்ச்சிகரமான போட்டி. இப்பிடி, ஏதாவது ஒன்று, ஒவ்வொரு உலகக் கிண்ணத் தொடரிலும் நடைபெறும்.

பல உலகக் கிண்ணத்தில் இலங்கையும் அப்பிடித்தான். 1996 வரையும், இலங்கை 4 போட்டிகளைத்தான் வென்றிருந்தது. பாக்கிஸ்தான் வென்ற 1992ல், இலங்கை ஒரு போட்டியிலும் வெல்லவில்லை. 1996ல் எல்லாம் மாறியது. ஒரு போட்டியையும் தோற்காமல், கோப்பையைத் தூக்கியது.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, செம்பாட்டான் said:

பல உலகக் கிண்ணதில் இலங்கையும் அப்பிடித்தான்.

அப்போதிருந்த இலங்கை அணி பலமானதாகவே இருந்தது.

ஏதோ குருட்டு லக்கில் வெல்வதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

அது ஒரு அதிர்ச்சிகரமான போட்டி. இப்பிடி, ஏதாவது ஒன்று, ஒவ்வொரு உலகக் கிண்ணத் தொடரிலும் நடைபெறும்.

பல உலகக் கிண்ணதில் இலங்கையும் அப்பிடித்தான். 1996 வரையும், இலங்கை 4 போட்டிகளைத்தான் வென்றிருந்தது. பாக்கிஸ்தான் வென்ற 1987ல், இலங்கை ஒரு போட்டியிலும் வெல்லவில்லை. 1996ல் எல்லாம் மாறியது. ஒரு போட்டியையும் தோற்காமல், கோப்பையைத் தூக்கியது.

நீங்க‌ள் ப‌ழைய‌ காய்

உங்க‌ளின் எழுத்தை பார்க்க‌ உங்க‌ளுக்கு 55வ‌ய‌து இருக்கும் போல் தெரியுது.................நான் 1996ம் ஆண்டு தான் முத‌ல் முறை தொலைக் காட்சியில் கிரிக்கேட் பார்த்தேன் நான் கிரிக்கேட் தொலைக் காட்சியில் பார்க்க‌ முத‌ல் இல‌ங்கை உல‌க‌ கோப்பை தூக்கி விட்ட‌து.................

1996ம் ஆண்டு இல‌ங்கையில் வைச்சு ஒரு தொட‌ர் ந‌ட‌ந்த‌து

இல‌ங்கை

இந்தியா

அவுஸ்ரேலியா

அந்த‌ தொட‌ரில் இல‌ங்கை எல்லா மைச்சையும் வென்று கோப்பையை வென்ற‌வை...................அப்ப‌ தான் கிரிக்கேட் விளையாட்டின் மீது என‌க்கு அதிக‌ ஆர்வ‌ம் வ‌ந்த‌து................1999ம் ஆண்டு இங்கு வ‌ந்தேன் டென்மார்க்கில் கிரிக்கேட்டை இங்க‌த்தை தொலைக் காட்சியில் பார்க்க‌ முடியாத‌ கால‌ம்.................ஸ்கோரை ம‌ட்டும் பார்க்க‌லாம் , 2003ம் ஆண்டு உல‌க‌ கோப்பையோட‌ கிரிக்கேட் தொலைக் காட்சியில் பார்க்கும் வ‌ச‌தி வ‌ந்து விட்ட‌து..................2006ம் ஆண்டு இணைய‌த்தில் நேர‌டியா பார்க்கும் வ‌ச‌தி வ‌ந்து விட்ட‌து

பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில் இணைய‌த்தில் போய் நானும் என்ர‌ ந‌ண்ப‌னும் அடிக்க‌டி ஸ்கோரை பாப்போம்..................இப்ப‌ சின்ன‌ கைபேசி ஊடாக‌ அனைத்து விளையாட்டையும் பார்த்து ர‌சிக்க‌லாம்👍....................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, செம்பாட்டான் said:

பாகிஸ்தான் வென்றது 1992

1987 இல் அவுஸ்திரேலியா வென்றது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அப்போதிருந்த இலங்கை அணி பலமானதாகவே இருந்தது.

ஏதோ குருட்டு லக்கில் வெல்வதில்லை.

அதுவும் சரிதான். அன்றைய காலகட்டத்தில், இந்தியா கூட அவ்வளவாக வெல்வது கிடையாது. இப்போ எல்லாம் தலைகீழ்.

2 minutes ago, கந்தப்பு said:

பாகிஸ்தான் வென்றது 1992

மாற்றிவிட்டேன். நன்றி சுட்டிக் காட்டியமைக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வீரப் பையன்26 said:

ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை

இவ‌ர் ப‌ந்து போடுவ‌து கிடையாது................இவ‌ரின் ப‌ந்து வீச்சில் ந‌ம்பிக்கை பெரிதாக‌ இல்லை.................டோனியின் செல்ல‌ப் பிள்ளை இவ‌ர்......................

பத்திரானா Death Bowler-மேற்கிந்தியா வீரர் டுவைன் பிராவோ போல இறுதி ஓவர்களுக்கு பந்து வீசவே அழைக்கப்படுவார்.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கந்தப்பு said:

பத்திரானா மேற்கிந்தியா வீரர் டுவைன் பிராவோ போல இறுதி ஓவர்களுக்கு பந்து வீசவே சென்னை அணி அழைக்கப்படுவார். Death bowler

அப்ப‌டி இருந்தும் அதிக‌ ஓட்ட‌ங்க‌ளை விட்டு கொடுக்கிறார்..................ஒரு நாள் தொட‌ரில் கூடுதலான‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் ப‌ந்து போட்ட‌து கூட‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்த‌து குறைவு............ப‌த்திரானாவின் ஒரு நாள் தொட‌ரில் குறைந்த‌ ப‌ந்துக்கு அதிக‌ ஓட்ட‌த்தை விட்டு கொடுத்து இருக்கிறார்.....................இவ‌ரை எல்லாம் ம‌லிங்காவுட‌ன் ஒப்பிட‌ முடியாது......................ம‌லிங்கா யோக்க‌ர் கிங்......................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, செம்பாட்டான் said:

அது ஒரு அதிர்ச்சிகரமான போட்டி. இப்பிடி, ஏதாவது ஒன்று, ஒவ்வொரு உலகக் கிண்ணத் தொடரிலும் நடைபெறும்.

பல உலகக் கிண்ணத்தில் இலங்கையும் அப்பிடித்தான். 1996 வரையும், இலங்கை 4 போட்டிகளைத்தான் வென்றிருந்தது. பாக்கிஸ்தான் வென்ற 1992ல், இலங்கை ஒரு போட்டியிலும் வெல்லவில்லை. 1996ல் எல்லாம் மாறியது. ஒரு போட்டியையும் தோற்காமல், கோப்பையைத் தூக்கியது.

இதே போலதான் 1979 இல் இந்தியா உலகக்கோப்பையில் எல்லா போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. அக்காலத்தில் டெஸ்ட் அந்தஸ்து கிடைக்காத இலங்கையுடனும் தோல்வி அடைந்தது. ஆனால் அடுத்த உலகக்கோப்பையில் 1983 இல் வெற்றிக்கிண்ணத்தை தட்டி கொண்டது

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கந்தப்பு said:

பத்திரானா மேற்கிந்தியா வீரர் டுவைன் பிராவோ போல இறுதி ஓவர்களுக்கு பந்து வீசவே சென்னை அணி அழைக்கப்படுவார். Death bowler

Screenshot-20250514-231920-ESPNCricinfo.

ப‌த்திரானா ஒரு நாள் தொட‌ரில் 508 ப‌ந்து போட்டு 616 ர‌ன்ஸ் விட்டு கொடுத்து இருக்கிறார்..................இவ‌ரின் ப‌ந்து வீச்சு ச‌ரி இல்லை என்று ப‌ல‌ மைச்சில் இவ‌ரை இல‌ங்கை தேர்வுக்குழு தெரிவு செய்ய‌ வில்லை.................த‌ன்ட‌ இஸ்ட‌த்துக்கு ப‌ந்தை அங்கையும் இங்கையும் என‌ அதிக‌ வயிட் ப‌ந்தையும் போட்டு எதிர் அணியின் ஸ்கோர‌ தானாக‌வே கூட்டுவார்.......................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

நீங்க‌ள் ப‌ழைய‌ காய்

உங்க‌ளின் எழுத்தை பார்க்க‌ உங்க‌ளுக்கு 55வ‌ய‌து இருக்கும் போல் தெரியுது.................நான் 1996ம் ஆண்டு தான் முத‌ல் முறை தொலைக் காட்சியில் கிரிக்கேட் பார்த்தேன் நான் கிரிக்கேட் தொலைக் காட்சியில் பார்க்க‌ முத‌ல் இல‌ங்கை உல‌க‌ கோப்பை தூக்கி விட்ட‌து.................

1996ம் ஆண்டு இல‌ங்கையில் வைச்சு ஒரு தொட‌ர் ந‌ட‌ந்த‌து

இல‌ங்கை

இந்தியா

அவுஸ்ரேலியா

அந்த‌ தொட‌ரில் இல‌ங்கை எல்லா மைச்சையும் வென்று கோப்பையை வென்ற‌வை...................அப்ப‌ தான் கிரிக்கேட் விளையாட்டின் மீது என‌க்கு அதிக‌ ஆர்வ‌ம் வ‌ந்த‌து................1999ம் ஆண்டு இங்கு வ‌ந்தேன் டென்மார்க்கில் கிரிக்கேட்டை இங்க‌த்தை தொலைக் காட்சியில் பார்க்க‌ முடியாத‌ கால‌ம்.................ஸ்கோரை ம‌ட்டும் பார்க்க‌லாம் , 2003ம் ஆண்டு உல‌க‌ கோப்பையோட‌ கிரிக்கேட் தொலைக் காட்சியில் பார்க்கும் வ‌ச‌தி வ‌ந்து விட்ட‌து..................2006ம் ஆண்டு இணைய‌த்தில் நேர‌டியா பார்க்கும் வ‌ச‌தி வ‌ந்து விட்ட‌து

பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில் இணைய‌த்தில் போய் நானும் என்ர‌ ந‌ண்ப‌னும் அடிக்க‌டி ஸ்கோரை பாப்போம்..................இப்ப‌ சின்ன‌ கைபேசி ஊடாக‌ அனைத்து விளையாட்டையும் பார்த்து ர‌சிக்க‌லாம்👍....................

ஓ... அப்பிடியா. உங்கடை கதையைக் கேட்டா நீங்கள் 90களின் பையன் போல.

1996க்கு முன் எவ்வளவோ நடந்திருக்கு. இப்போ அப்போதிருந்த வீரர்கள் இருந்தால், தூள் கிளப்புவினம். அவர்கள் எந்த காலத்திலும் எந்த இடத்திலும் எப்படிப்பட்ட மைதானத்திலும் விளையாடக்கூடிய வீரர்கள். கிரிக்கெட்டில் Golden era என்று சொல்ல முடியும். இப்போது இருக்கும் வீரர்கள் அப்படி என்று சொல்ல முடியவில்லை.

கிரிக்கெட் என்றால் என்ன என்று அறிந்தது அந்தக் காலகட்டத்தில் தான். இலக்கங்களையோ, தரவுகளையோ வைத்து ஒரு வீரையோ அல்லது ஒரு அணியையோ அனுமானிக்க கூடாது என்பது அன்றைய காலகட்டத்தில் நான் அறிந்தது, படித்தது

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, செம்பாட்டான் said:

ஓ... அப்பிடியா. உங்கடை கதையைக் கேட்டா நீங்கள் 90களின் பையன் போல.

மார்க்கண்டேயர்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கந்தப்பு said:

பத்திரானா Death Bowler-மேற்கிந்தியா வீரர் டுவைன் பிராவோ போல இறுதி ஓவர்களுக்கு பந்து வீசவே அழைக்கப்படுவார்.

எனக்கென்றால் அவருக்கு முறையான ஒரு பயிற்சியாளர் தேவை என்று நினைக்கிறேன். அத்தோடு உடற்தகுதியையும் பேணவேண்டும். அவரின் பந்துவீச்சு முறைமையால், அடிக்கடி காயம் வரும்.

மலிங்க இல்லாட்டி பும்ரா இல்லை. அதேபோல் ஒருவர் பதிரானவுக்கும் வேண்டும். அவரின் கை சுழற்சியிலேயே ஒரு ஒழுங்கு இல்லை. தட்டையாக கையை நீட்டி வீசுவது இலகு இல்லை. வேகம் எடுப்பதற்கு எத்தனிக்கும் போதுதான் அதிகமான அகலப்பந்தை வீசுவார்.

பிராவோ எல்லாம் அதில வின்னன். எப்ப மெதுவாக வீசவேண்டும் தெரியும். இப்போ எல்லாம் வேகத்துக்கு மதிப்பில்லை. துல்லியமான வீச்சுதான் முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, செம்பாட்டான் said:

ஓ... அப்பிடியா. உங்கடை கதையைக் கேட்டா நீங்கள் 90களின் பையன் போல.

1996க்கு முன் எவ்வளவோ நடந்திருக்கு. இப்போ அப்போதிருந்த வீரர்கள் இருந்தால், தூள் கிளப்புவினம். அவர்கள் எந்த காலத்திலும் எந்த இடத்திலும் எப்படிப்பட்ட மைதானத்திலும் விளையாடக்கூடிய வீரர்கள். கிரிக்கெட்டில் Golden era என்று சொல்ல முடியும். இப்போது இருக்கும் வீரர்கள் அப்படி என்று சொல்ல முடியவில்லை.

கிரிக்கெட் என்றால் என்ன என்று அறிந்தது அந்தக் காலகட்டத்தில் தான். இலக்கங்களையோ, தரவுகளையோ வைத்து ஒரு வீரையோ அல்லது ஒரு அணியையோ அனுமானிக்க கூடாது என்பது அன்றைய காலகட்டத்தில் நான் அறிந்தது, படித்தது

என‌க்கு இல‌ங்கை வீர‌ர்

அர‌விந்த‌ டி சில்வா

இவ‌ரின் விளையாட்டை பார்த்து தான் கிரிக்கேட்டில் ஆர்வ‌ம் வ‌ந்த‌து , இவ‌ர் விளையாடின‌ கால‌ங்க‌ளில் இல‌ங்கை ப‌ல‌மான‌ அணியாக‌ இருந்த‌து , இவ‌ரின் ஓய்வுக்க்கு பிற‌க்கு

ஜெய‌வ‌த்த‌னா

ச‌ங்க‌க்க‌ரா

முர‌ளிர‌த‌ர‌ன்

டில்ஷான்

ச‌மிந்த‌ வாஸ்.............இவ‌ர்க‌ள் அணிய‌ கீழ் ம‌ட்ட‌த்துக்கு போக‌ விடாம‌ ப‌ல‌ வெற்றிக‌ளை பெற்று மீண்டும் தாங்க‌ள் ப‌ல‌மான‌ அணி என‌ ப‌ல‌ வ‌ருட‌ம் நிருபித்து காட்டின‌வை

2015 இவ‌ர்க‌ளின் ஓய்வுக‌ளோட‌ இல‌ங்கை கிரிக்கேட்டின் க‌தை கிட்ட‌ த‌ட்ட‌ முடிந்து விட்ட‌து

ந‌ட‌ந்து முடிந்த‌ ச‌ம்பிய‌ஸ் கிண்ண‌ தொட‌ரில் கூட‌ இவைக‌ளால் க‌ல‌ந்து கொள்ள‌ முடிய‌ வில்லை...................20ஓவ‌ர் போட்டியில் இல‌ங்கை அணிய‌ இப்ப‌ இருக்கும் அப்கானிஸ்தான் அணி சிம்பிலா வெல்லும்....................இப்ப‌ இருக்கும் இல‌ங்கை அணியில் ஒரு சில‌ வீர‌ர்க‌ளை த‌விற‌ ப‌ல‌ருக்கு அனுப‌வ‌ம் குறைவு மாதிரி தெரியுது..................

2004 ஆசியா கோப்பை பின‌லில் இல‌ங்கை 230க்கு உள்ள‌ தான் அடிச்ச‌வை , இந்தியாவால‌ இந்த‌ ஸ்கோர‌ அடிச்சு வெல்ல‌ முடிய‌ வில்லை..................

அப்ப‌ இல‌ங்கை அணி கிரிக்கேட்டில் அவுஸ்ரேலியா அணிக்கு அடுத்து ம‌லை போல‌ இருந்த‌ அணி.................

இல‌ங்கை கிரிக்கேட் அழிந்து போன‌துக்கு அர‌சிய‌ல் த‌லையீடு தான் கார‌ண‌ம் என‌ முத்தையா முர‌ளித‌ர‌ன் தொட்டு ப‌ல‌ர் வைச்ச‌ குற்ற‌ச் சாட்டு

இனி கிரிக்கேட் உல‌கில் இந்திய‌னின் ஆதிக்க‌ம் தான்👍........................

  • கருத்துக்கள உறவுகள்

496510529_1917934828990136_6404761125484

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ........ காவ்யா & srh விசிறி ......! 😁

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

496510529_1917934828990136_6404761125484

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ........ காவ்யா & srh விசிறி ......! 😁

இந்த‌ ஜ‌பிஎல் இவாவின் அணிக்கு ந‌ல்ல‌ மாதிரி அமைய‌ வில்லை...............ல‌க்னோ ஓன‌ர் எடுத்த‌துக்கு எல்லாம் கோவ‌ப் ப‌டுவார்................இவா தோல்வியோ வெற்றியோ வீர‌ர்க‌ளுக்கு ஊக்க‌ம் கொடுப்பா👍......................

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, செம்பாட்டான் said:

எனக்கென்றால் அவருக்கு முறையான ஒரு பயிற்சியாளர் தேவை என்று நினைக்கிறேன். அத்தோடு உடற்தகுதியையும் பேணவேண்டும். அவரின் பந்துவீச்சு முறைமையால், அடிக்கடி காயம் வரும்.

மலிங்க இல்லாட்டி பும்ரா இல்லை. அதேபோல் ஒருவர் பதிரானவுக்கும் வேண்டும். அவரின் கை சுழற்சியிலேயே ஒரு ஒழுங்கு இல்லை. தட்டையாக கையை நீட்டி வீசுவது இலகு இல்லை. வேகம் எடுப்பதற்கு எத்தனிக்கும் போதுதான் அதிகமான அகலப்பந்தை வீசுவார்.

பிராவோ எல்லாம் அதில வின்னன். எப்ப மெதுவாக வீசவேண்டும் தெரியும். இப்போ எல்லாம் வேகத்துக்கு மதிப்பில்லை. துல்லியமான வீச்சுதான் முக்கியம்.

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. 2023 இல் பிராவே சென்னை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருக்கும் போது பத்திரான சிறப்பாக பந்து வீசினார். அவ்வருடம் சென்னை சாம்பியன் ஆனாது. தற்பொழுது பிராவோ கொல்கத்தா அணியிக்கு பயிற்சியாளராக இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. 2023 இல் பிராவே சென்னை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருக்கும் போது பத்திரான சிறப்பாக பந்து வீசினார். அவ்வருடம் சென்னை சாம்பியன் ஆனாது. தற்பொழுது பிராவோ கொல்கத்தா அணியிக்கு பயிற்சியாளராக இருக்கிறார்.

ஏன் பிராவோவப் போக விட்டவை. நல்ல ஒரு ஆலோசகராக இருந்திருப்பாரே.

இலங்கை அணிக்கு பத்திரான தேவையா இல்லையா என்பதைப் பொறுத்து, அவர்கள் உதவிக்கு வருவார்கள். நான் நினைக்கிறேன் அவர்களுக்கு பத்திரானாவில் அவ்வளவு நம்பிக்கை இல்லையென்று. அவர் உள்ளூர்ப் போட்டிகளிலும் பெரிதாக விளையாடுவதில்லை. சென்னைக்கு விளையாடினதுதான் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, செம்பாட்டான் said:

ஏன் பிராவோவப் போக விட்டவை. நல்ல ஒரு ஆலோசகராக இருந்திருப்பாரே.

இலங்கை அணிக்கு பத்திரான தேவையா இல்லையா என்பதைப் பொறுத்து, அவர்கள் உதவிக்கு வருவார்கள். நான் நினைக்கிறேன் அவர்களுக்கு பத்திரானாவில் அவ்வளவு நம்பிக்கை இல்லையென்று. அவர் உள்ளூர்ப் போட்டிகளிலும் பெரிதாக விளையாடுவதில்லை. சென்னைக்கு விளையாடினதுதான் அதிகம்.

க‌ர்விய‌ன் தீவிலும் ஜ‌பிஎல்ல‌ போல‌ தொட‌ர் ந‌ட‌த்துகிற‌வை

அந்த‌ அணிக‌ளில் ஒன்றை சாருக்கான் தான் வேண்டி இருக்கிறார்................அந்த‌ அணியில் பிராவோ விளையாடினார் , சாருக்கான் கேட்டு கொண்ட‌துக்கு இன‌ங்க‌ கே கே ஆர் ப‌ந்து வீச்சு ப‌யிற்ச்சியாள‌ர‌ மாறி விட்டார்......................CPL தொட‌ரில் விளையாடும் வீர‌ர்க‌ள்............அணியின் பெய‌ர் TKR.............................

Screenshot-20250515-184522-ESPNCricinfo.

Screenshot-20250515-184535-ESPNCricinfo.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

க‌ர்விய‌ன் தீவிலும் ஜ‌பிஎல்ல‌ போல‌ தொட‌ர் ந‌ட‌த்துகிற‌வை

அந்த‌ அணிக‌ளில் ஒன்றை சாருக்கான் தான் வேண்டி இருக்கிறார்................அந்த‌ அணியில் பிராவோ விளையாடினார் , சாருக்கான் கேட்டு கொண்ட‌துக்கு இன‌ங்க‌ கே கே ஆர் ப‌ந்து வீச்சு ப‌யிற்ச்சியாள‌ர‌ மாறி விட்டார்......................CPL தொட‌ரில் விளையாடும் வீர‌ர்க‌ள்............அணியின் பெய‌ர் TKR.............................

Screenshot-20250515-184522-ESPNCricinfo.

Screenshot-20250515-184535-ESPNCricinfo.

அதுசரி. இப்போ இந்தியன்தானே கனக்க T20 கழகங்களை வைத்திருக்கினம். கரிபியன். தென்னாபிரிக்கா, அமெரிக்கா.

நான் பெரிதாக போட்டிகளைப் பார்ப்பதில்லை. செய்திவாயிலாக அறிந்தது மட்டும்தான். உண்மையிலேயே பெரிய ஈர்ப்பில்லை. பணத்துக்காக போட்டி.

இதைவிட, நான் கூடுதலாக உதைப்பந்துக் கழகங்களைத்தான் பார்ப்பது. பார்சிலோனா எனது விருப்புக்குரிய அணி. அங்கு விளையாட்டின் இதம் குறையவில்லை. கிரிக்கட்டில் எல்லாவற்றையும் மாத்தி வைத்திருக்கினம். நாலும் ஆறும் பறக்க வேணும் என்றால், ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.