Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Markham நகர இல்லத்தில் இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கி பிரயோகம் – தமிழ் பெண், வளர்ப்பு நாய் மரணம்!

March 7, 20250

Share0

markham-960x504.jpg

Markham நகர இல்லம் ஒன்றில் இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழ் பெண்ணும், வளர்ப்பு நாயும் பலியாகினர்.

இதில் மற்றொரு ஆண் படுகாயமடைந்தார்.

வெள்ளிக்கிழமை (07) காலை 6:30 மணியளவில் நெடுந்தெரு  48 – Castlemore வீதிகளுக்கு அருகில் உள்ள Solace வீதியில் உள்ள இல்லம் ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இதில் 20 வயதான நிலட்சி ரகுதாஸ் என்ற தமிழ் பெண் பலியானார்.

26 வயது ஆண் கடுமையான, ஆனால் உயிருக்கு ஆபத்தற்ற காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்தத் தாக்குதலின் போது German Shepherd நாய் ஒன்றும் உயிரிழந்துள்ளதாக York பிராந்திய காவல்துறையினர் கூறினர்.

இந்த சம்பவம் இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கிச் சூடு என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பிட இல்லம் கடந்த காலங்களில் பல முறை குறி வைக்கப்பட்டது என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

2018 ஆம் ஆண்டு முதல் இந்த இல்லத்தின் மீது குறைந்தது ஐந்து முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த வருடம் மாத்திரம் இதுபோன்ற மூன்று சம்பவங்கள் குறித்து விசாரித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவங்களில் சந்தேகத்திற்குரிய நபர்கள் தூரத்தில் இருந்து குறிப்பிட இல்லத்தை நோக்கி சுட்டதாக தெரியவருகிறது.

இந்த சம்பவம் குறித்த விசாரணை காவல்துறைனர் ஆரம்பித்துள்ள நிலையில், இந்த கொலைக்கான சாத்தியமான நோக்கம் குறித்து ஊகிக்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு சந்தேக நபர்கள் புதிய ரக, கருப்பு நிறமுடைய, நான்கு கதவுகள் கொண்ட Acura TLX வாகனத்தில் குறிப்பிட இல்லத்தில் இருந்து வேகமாக செல்வதை கண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால் சந்தேக நபர்கள் குறித்து விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

https://thesiyamnation.com/41110/

  • கருத்துக்கள உறவுகள்

7 வருசமா..நடக்குது...போனவருசம் 3 தடவை...என்னம்மா நடக்குது...இறந்த பிள்ளைக்கும்..நன்றியுள்ள ஜீவனுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

7 வருசமா..நடக்குது...போனவருசம் 3 தடவை...என்னம்மா நடக்குது...இறந்த பிள்ளைக்கும்..நன்றியுள்ள ஜீவனுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

கனடா காவல் துறையினருக்கு வேறு வேலைப் பளு அதிகம் போலும்?😪

ஆழ்ந்த இரங்கல்கள்் நான் முதலில் நினைத்தேன் காதல் பிரச்சனையாக இருக்குமோ என்று.ஆனால் அந்த பெண் பிள்ளை 13 வயதாக இருக்கும் போதே துப்பாக்கி சூடு நடந்து இருக்கிறது யாரோ பலிவாங்கிஇருக்கிறார்கள் இளம் அப்பாவி பெண் பலிகிடாய் போல??????

  • கருத்துக்கள உறவுகள்

இரு Tow truck குழுக்களுக்கு இடையிலான சண்டை என கூறப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/3/2025 at 22:16, alvayan said:

7 வருசமா..நடக்குது...போனவருசம் 3 தடவை...

இதைவிட அகதியாமல் ஈழத்திலேயே இருந்து இருக்கலாமோ ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இதைவிட அகதியாமல் ஈழத்திலேயே இருந்து இருக்கலாமோ ?

உண்மைதான்..

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கை பெண் பலி!

%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21+

கனடாவின் மார்க்காமில் வசித்து வந்த இலங்கைப் பெண் ஒருவர் நேற்று முன்தினம் (09) அந்த வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தின் முன்னாள் நகரபிதா ஆல்பிரட் துரையப்பாவின் பேத்தி எனத் தெரிவிக்கப்படுகிறது. 20 வயதுடைய ரகுதாஸ் நிலாக்ஷி என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் கோண்டாவிலிருந்து கனடாவுக்குச் சென்ற இந்த பெண் இரண்டு வருடங்கள் அந்த வீட்டில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் அந்த வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இந்த பெண்ணுடன் வசித்து வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். 

துப்பாக்கிதாரிகள் வீட்டைக் காத்துக்கொண்டிருந்த நாயையும் சுட்டுக் கொன்றதாகக் தெரிவிக்கப்படுகிறது. 

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நால்வர் கெப் ரக வாகனத்தில் தப்பிச் செல்வது சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதாக கனேடிய காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. 

மேலதிக விசாரணைகளை கனடா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Hiru News
No image preview

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கை பெண் பலி!

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கை பெண் பலி! . Most visited website in Sri Lanka.
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-137.jpg?resize=750%2C375&ssl

கனடா துப்பாக்கிச் சூட்டில் இலங்கை யுவதி உயிரிழப்பு; மேலும் ஒருவர் காயம்!

கனடாவின் மார்க்காம், ஒன்ராறியோவில் அமைந்துள்ள ஒரு வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 20 வயதுடைய யுவதி ஒருவரும், அவரது வளர்ப்பு நாயும் உயிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு ஆணும் படுகாயமடைந்துள்ளார்.

இந்த வீட்டில் கடந்த காலங்களில் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக யார்க் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.

அந் நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை (07) காலை 6:30 மணியளவில் நெடுஞ்சாலை 48 மற்றும் காசில்மோர் அவென்யூ அருகே சோலஸ் சாலையில் அமைந்துள்ள வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக யார்க் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் மார்க்காமைச் சேர்ந்த 20 வயதுடைய நிலாக்ஷி ரகுதாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மற்றொரு பாதிக்கப்பட்ட நபர் 26 வயதுடைய ஆண் ஆவார்.

பலத்த காயமடைந்துள்ள அவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்ச‍ை பெற்று வருகின்றார்.

இந்த தாக்குதலின் போது ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாயும் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

கடந்த 2024 பெப்ரவரியில் குறித்த வீட்டில் ஒரு முறையும், அடுத்த மாதத்தில் இரண்டு முறையும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக யார்க் பிராந்திய காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவங்களில் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

புலனாய்வாளர்களுக்கு உதவக்கூடிய தகவல் அல்லது பாதுகாப்பு கமரா வீடியோ உள்ள எவரும் யார்க் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு அல்லது குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு உதவிக்குறிப்பை வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1424742

  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2025 at 04:17, தமிழ் சிறி said:

இருவர் கைது செய்யப்பட்டிருபதாக தகவல் ...இருவரும் தமிழர்கள்தான் என்பது வேதனையான விடையம்

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இலங்கை பெண் சுட்டுக்கொலை – இருவர் கைது

April 4, 2025 9:45 am

கனடாவில் இலங்கை பெண் சுட்டுக்கொலை – இருவர் கைது

கனடாவில் கடந்த மாதம் இலங்கை தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் ஏழாம் திகதி காலை 6:30 மணியளவில் மார்க்கம் நகரின் சோலஸ் வீதியிலுள்ள வீட்டிற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

குறித்த வீட்டில் 20 வயது நிலக்ஷி ரகுதாஸ் மற்றும் 26 வயது ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், அந்த வீட்டில் ஒரு நாய் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலக்ஷி ரகுதாஸ் உயிரிழந்தார்.

இந்நிலையில், சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொலிஸார், துப்பாக்கிச் சூடு இலக்கு வைக்கப்பட்ட ஒன்று என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த புதன்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 28 வயதான ஏக்வோன் முர்ரே மற்றும் 35 வயதான ஹெஷ்மத் ரசூலி-கலந்தர்சேட் ஆகியோர் டொராண்டோவில் கைது செய்யப்பட்டதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக முதல் நிலை கொலை, கொலை முயற்சி, விலங்குகளைக் கொல்வது அல்லது காயப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவலில் உள்ளனர் என்றும், இந்த மாத இறுதியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிலக்ஷி ரகுதாஸ் தனது பெற்றோர் மற்றும் இரண்டு சகோதரர்களுடன் வசித்து வந்த சோலஸ் வீதியில் அமைந்துள்ள வீடு, 2018 முதல் குறைந்தது ஐந்து முறை குறிவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக தன்னை குமார் என்று மட்டுமே அடையாளம் கண்டுகொண்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர், அந்த ஐந்து சம்பவங்களில் மூன்று சம்பவங்கள் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் நடந்ததாக கூறினார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

https://oruvan.com/two-arrested-in-connection-with-the-shooting-death-of-nilakshi-raguthas/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.