Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேலே கூறிய கருத்துக்கள் ( சில) புலிகளின் காலத்தில் ஏன் இங்கு எழுதப்படவில்லை என்பது யாருகாவது ஆச்சரியம் அளிக்கிறதா??

  • கருத்துக்கள உறவுகள்

485794284_122143397300555185_72537893364486460935_122143397252555185_76456892935486244068_122143397198555185_47955637492485951271_122143397138555185_72619717597485974937_122143397090555185_34902565727

அமைச்சர் சந்திரசேகர் ஒரு ப**ச்சைத் துரோகி: இவரை யாழ்ப்பாணத்தை விட்டு தமிழ் மக்கள் விரட்டுங்கள்: பிரபாகரன் புலி என்று இப்போது நன்றாக நடித்து வருகிறார்.

மினிஸ்டர் சந்திரசேகர் விமலோடு இருக்கும் போது தமிழ் துரோகியாக இருந்தார்: இப்போது திருந்தி விட்டார்: யார் சொன்னது- அவரே சொன்னார்

இந்த ஆர்ப்பாட்ட வரலாற்றை நாம் சொல்கிறோம் கேளுங்கள், அதாவது யுத்த நிறுத்தம் வேண்டாம் என்று தமிழில் கோசங்களை எழுப்பியவர்தான் இந்த சந்திரசேகர்,

போராட்டத்தில் 50,000 பேர் கலந்து கொண்டனர், இதில் பெருந்தொகையான புத்த பிக்குகள் இருந்தனர். அத்துடன் பல தமிழ் மக்களை சந்திரசேகர் திரட்டினார்

பாலியகொடை பகுதியில் போராட்டக்காரர்கள் திரண்டு, பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லம்" நோக்கி செல்ல தொடங்கினர். ஆனால் பிரதமரின் இல்லத்தை பாதுகாத்திருந்த சிறப்பு பணிப்படை படையினர் மற்றும் காவல்துறையினர், ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் போராட்டக்காரர்களை நீர்ப்பீரங்கிகளும் கண்ணீர்ப்புகை குண்டுகளும் பயன்படுத்தி தடுத்து நிறுத்தினர்.

இந்த நிகழ்வை செய்திக்காக ஒளிப்பதிவு செய்ய சென்ற சில ஊடகவியலாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர். "தி ஐலண்ட்" பத்திரிகையின் புகைப்பட செய்தியாளர் திரு. எரங்க ஜயவர்தன தாக்கப்பட்டு, கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அவருடைய மதிப்புயர்ந்த நிகொன் டிஜிட்டல் கேமரா (மொத்த மதிப்பு ரூ. 400,000) முற்றிலும் சேதமடைந்தது.

ஜேவிபி, ஐக்கிய தேசிய முன்னணி அரசு மற்றும் விடுதலைப் புலிகள் கையெழுத்திட்ட சமாதான ஒப்பந்தம் ஒரு வருடத்தை நிறைவுசெய்வதை எதிர்த்து இந்தப் பேரணியை ஏற்பாடு செய்தது.

முன்னதாக, ஜேவிபியின் பிரச்சார செயலாளர் திரு. விமல் வீரவங்ச செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றும்போது, அவரது கட்சி விரைவில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிராக ஒரு மிகப்பெரிய பேரணியை நடத்தும் என்று தெரிவித்தார்.

#awareness

Thevarasa Kailanathan

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிழலி said:

சந்திரசேகரர் இன்று நேற்று அல்ல ஜேவிபி யில் இணைந்து, எனக்கு தெரிந்தே இவர் கடந்த 30 வருடங்களாக இருக்கின்றார். மலையக தமிழரான இவர் பல ஜேவிபி சார்பான நூற்றுக்கணக்கான போராட்டங்களில் ஈடுபட்டவர்.

ஜேவிபி ஒரு கடும் இனவாதக் கட்சி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதனால் தான் சங்குக்கு வாக்களிப்பதன் மூலம் ஜேவிபியிற்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும், ஈற்றில் தமிழ் தேசிய கட்சிகளை மக்கள் நிராகரிப்பர் என கடந்த ஆண்டு பெப்ரவரியில் இருந்து எழுதி வந்தேன்.

ஆனால் இன்று இவர் வடக்கில் செய்யும் பல விடயங்கள், முக்கியமாக இந்திய கடல் கொள்ளைக்கு எதிரான நிலைப்பாடு மற்றும் நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியவை. வடக்கு தமிழனான டக்கிளஸை விட பல மடங்கு சிறப்பாக உள்ளார்.

இவர் மட்டுமல்ல, எந்த தேசியக் கட்சிகளும், அரசுகளும் இனப்படுகொலை பற்றி பேசப்போவதில்லை. போர்க் குற்றம் புரிந்ததாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இது தான் யதார்த்தம். இதனை அங்குள்ள தமிழ் மக்களும் நன்கு புரிந்து கொண்டமையால் தான் தேசியக் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்க தொடங்கி உள்ளனர்.

ஆனால் இந்த யதார்த்தை புரிந்து கொள்ளாமல் வெறுமனே சந்திரசேகரனை குறிப்பிட்டு திட்டுவது அவர் மலையகத்தமிழர் என நன்கு தெரிந்த பின்னும் சந்திரசேகர என்று சிங்கள பெயர் சூட்டி விமர்சிப்பது யாழ்பாணிகளின் மலையக தமிழர் மீதான வழக்கமான குறும் பார்வையின் அம்சமாகவே தெரிகின்றது.

மற்றது, தையிட்டி விவகாரம், அங்கே பெளத்த வழிபாடு போன்றவை எப்போது தொடங்கியது என்று தெரியுமா உங்களுக்கு?

// மற்றது, தையிட்டி விவகாரம், அங்கே பெளத்த வழிபாடு போன்றவை எப்போது தொடங்கியது என்று தெரியுமா உங்களுக்கு?//

தையிட்டியில் பவுத்த வழிபாடு சரியாக 1345 ம் ஆண்டு , பங்குனி மாதம் இரண்டாம் திகதி தொடங்கியது .

ஆனபடியால் , தையிட்டியில் , அங்கினேக்கு அக்கம் பக்கத்தில இருக்கிற உறுதிக்காணிகளையெல்லாம் பிடிச்சு , பன்சல , மண்டபம் , இத்தியாத்தி ஐடம்ஸை கட்டிக்கொள்வது சாலச்சிறந்ததவும் பொருத்தமானதும் ஆகி நிற்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, putthan said:

அப்படி பார்த்தால் இஸ்ரேல்காரன் ஹாசாவை அடிக்கிறது பலஸ்தீனத்தை அடிக்கிறது சரிதான் (3500 வருடங்களுக்கு முன்பு மத்திய கிழக்கு முழுவதும் தங்கன்ட இடமாம்)

நான் சுட்டிக்காட்டியது இனவாதத்தை பற்றியது மட்டுமே. தமிழர், சிங்களவர் இருவருமே இனவாதம் உள்ளவர்களே. எண்ணிக்கை பலம் என்ற அடிப்படையில் சிங்கள இனவாதம் மேலோங்கி இருந்தாலும் தமிழர்களும் இனவாதம் உள்ளவர்களே என்பதையே வரலாறு கூறுகிறது. அந்த நோயை தீர்த்து ஒன்று பட்ட இலங்கையில் வாழ்வதற்கு இரு பகுதியும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். ஒருவரை ஒருவர் கைகாட்டுவதே தத்தமது குற்றங்களை மறைக்கவே.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, island said:

இது சரி தான் ஆனால் தமிழரின் இனவாதம். சிங்களவருக்கு அல்லது சிங்கள மக்களுக்கு என்ன பாதிப்பு எற்படுத்தியுள்ளது. ?? அவர்களை லட்சக்கணக்கில் கொன்று குவிந்து உள்ளதா??

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

இலங்கையின் கிழக்கு பகுதிகளில் தமிழர் பிரதேசங்களாக இருந்த கந்தளாய் திருகோணமலை பறி போவதைப்பற்றி யாரும் மூச்சு விடுவதில்லை.

கோண்டாவில கோண்டாவில் ஆக மாறியது

கொக்குவில கொக்குவில் ஆக மாறியது

இணுவில இணுவில் ஆக மாறியது

யாப்பன யாழ்ப்பாணம் ஆக மாறியது

கொடிகாம கொடிகாமம் ஆக மாறியது

மிருசுவில மிருசுவில் ஆக மாறியது....இப்பிடியே சொல்லிக்கொண்டு போக வேண்டியதுதான்.🤣

குமாரசாமி, நீங்கள் குறிப்பிட்ட அவர்கள் வசம் இருந்த கோண்டாவில, கொக்குவில, இணுவில, யாப்பன, கொடிகாம, மிருசுவில எல்லாம் இப்பொழுது தமிழர்கள் வாழும் இடங்களாகத்தானே இருக்கின்றன. அது போல் நாங்கள் வாழும் பகுதிகள் அவர்கள் வசம் போயும் இருக்கின்றன. இன்று சிவனொளி பாதம் நான்கு மதங்களாலும் உரிமை கொண்டாடப்படுகின்றது. கதிர்காமக் கந்தனும் ஓரளவு அந்தவகைக்குள் அடங்குகிறார். தமிழர், சிங்களவர், வேடுவர் என பலரும் வழிபடும் தளமாக அது இருக்கிறது. சிங்களவர்கள் எப்படி அழைத்தாலும் தமிழர்களுக்கு அது கதிர்காமம்தான். அத்தோடு கந்தன் தமிழர்களின் முப்பாட்டன் அல்லவா?

பல காரணங்களுக்காக குடியேற்றங்கள் இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இவை அவரவர்கள் தேவைகளுக்காக நடக்கின்றன. இதில் சில அரசின் திட்டமிடல்களூடாகவும் நடந்ததை மறுப்பதற்கில்லை. ஆனால்  முன்னைய அரசாங்கங்களைப் போல் இந்த அரசாங்கம் தீவிரம் காட்டவில்லை என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

17 hours ago, நியாயம் said:

இப்போது நாங்கள் என்னதான் செய்யவேண்டும்? பழசை எல்லாம் மறக்கலாம், மன்னிக்கலாம் ஒன்றாக கைகோர்த்து நடக்கலாமா?

நியாயம், அப்போ கைகலப்பில் ஈடுபடலாம் என்கிறீர்களா? பேசிப் பார்த்தோம் பலனில்லை. போராடிப் பார்த்தோம், பரம்பதம் விளையாட்டு மாதிரி இன்னும் கீழே போய் இருக்கின்றோம்.

சரி,மறக்கவும் வேண்டாம். மன்னிக்கவும் வேண்டாம். அடுத்து என்ன செய்யலாம் என்று நியாயமாக நீங்களே சொல்லிவிடுங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/3/2025 at 12:42, Kavi arunasalam said:

குமாரசாமி, நீங்கள் குறிப்பிட்ட அவர்கள் வசம் இருந்த கோண்டாவில, கொக்குவில, இணுவில, யாப்பன, கொடிகாம, மிருசுவில எல்லாம் இப்பொழுது தமிழர்கள் வாழும் இடங்களாகத்தானே இருக்கின்றன. அது போல் நாங்கள் வாழும் பகுதிகள் அவர்கள் வசம் போயும் இருக்கின்றன. இன்று சிவனொளி பாதம் நான்கு மதங்களாலும் உரிமை கொண்டாடப்படுகின்றது. கதிர்காமக் கந்தனும் ஓரளவு அந்தவகைக்குள் அடங்குகிறார். தமிழர், சிங்களவர், வேடுவர் என பலரும் வழிபடும் தளமாக அது இருக்கிறது. சிங்களவர்கள் எப்படி அழைத்தாலும் தமிழர்களுக்கு அது கதிர்காமம்தான். அத்தோடு கந்தன் தமிழர்களின் முப்பாட்டன் அல்லவா?

பல காரணங்களுக்காக குடியேற்றங்கள் இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இவை அவரவர்கள் தேவைகளுக்காக நடக்கின்றன. இதில் சில அரசின் திட்டமிடல்களூடாகவும் நடந்ததை மறுப்பதற்கில்லை. ஆனால்  முன்னைய அரசாங்கங்களைப் போல் இந்த அரசாங்கம் தீவிரம் காட்டவில்லை என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

நியாயம், அப்போ கைகலப்பில் ஈடுபடலாம் என்கிறீர்களா? பேசிப் பார்த்தோம் பலனில்லை. போராடிப் பார்த்தோம், பரம்பதம் விளையாட்டு மாதிரி இன்னும் கீழே போய் இருக்கின்றோம்.

சரி,மறக்கவும் வேண்டாம். மன்னிக்கவும் வேண்டாம். அடுத்து என்ன செய்யலாம் என்று நியாயமாக நீங்களே சொல்லிவிடுங்களேன்.

எங்கள் பின்னணி பற்றியே எங்களிடம் போதிய தகவல்/விளக்கம் இல்லை. உணர்ச்சியை முறுக்கேற்றி வைத்துள்ளோம். என்னிடம் பதில் இல்லை ஓவியர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.