Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

25 Mar, 2025 | 01:46 PM

image

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தர்க்கத்தையடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா மற்றும் இளங்குமரன் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக இந்த கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, கடும் குழப்ப நிலை ஏற்பட்டதையடுத்து, கூட்டத்தின் தலைவர் அமைச்சர் சந்திரசேகரனால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமற்போனதனால் கூட்டம் இடைநிறுத்தப்பட்டது.


Edited by பிழம்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடைநிறுத்தம் | Virakesari.lk

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலிருந்து வெளியேறினார் சிறீதரன்.

image

தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளை கட்டுப்படுத்தும் ஆற்றலை ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு சுட்டிக்காட்டி கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வெளியேறினார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்றது.

அதன்போது, வலி.வடக்கில் முன்னெடுக்கப்படும் மின் இணைப்பு விடயம் தொடர்பில் விவாதம் முன்வைக்கப்பட்டபோது ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான இளங்குமரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அவர்களது தனிப்பட்ட விடயங்களை முன்னிறுத்தியதாக மாறியது.

குறிப்பாக, இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றவரது காதல் விடயங்கள், மோசடி மற்றும் நிதி மோசடிகள் முதலான பல விடயங்களை முன்னிறுத்தி அதிகாரிகள் முன்னிலையில் தர்க்கித்துக்கொண்டனர்.

இந்நிலையில் இந்த வாக்குவாதத்தை இடைநிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஒருங்கிணைப்பு குழு தலைவரிடம் வலியுறுத்தினார்.

எனினும், ஒருங்கிணைப்பு குழு தலைவரால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் கட்டுப்படுத்த முடியாத நிலையே காணப்பட்டது. 

இதனால் அங்கு நிலவிய குழப்பமான சூழ்நிலை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூட்டத்தை விட்டு வெளியேறி சென்றார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலிருந்து வெளியேறினார் சிறீதரன் | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடரும் -அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளார். இனிவரும் காலங்களில் தலைவருக்குரிய அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்துவேன் என்று அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்ட தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.  

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று காலை 9 மணியளவில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல்வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன்,ரஜீவன், ஸ்ரீ பவானந்தராஜா, சிவஞானம் ஸ்ரீதரன், இராமநாதன் அர்ச்சுனா, வட மாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் உள்ளிட்டவர்களுடன் திணைக்களங்களின் பதவிநிலை அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், பாதுகாப்பு தரப்பின் அதிகாரிகள் மற்றும் பிரதேச அதிகாரிகள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

கூட்டம் நிறைவடைந்ததன்பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்; வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடர் முடிவடைந்துள்ள நிலையில், யாழ்.மாவட்டத்துக்கு பாதீட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பதற்காகவே இன்றைய ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்படவிருந்த இக்கூட்டத்தில் சிவன் பூஜையில் கரடி புகுந்ததுபோல சம்பவங்களும் இடம்பெற்றன. தொல்லை தாங்க முடியாமல் எம்.பியொருவர் வெளியேறி சென்றுள்ளார். மேலும் சில அதிகாரிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். எவருடைய பேச்சுக்கும் கட்டுப்படாத நபரொருவரால் தான் இப்படி நடந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மோசமாக நடந்துகொண்டார். தனக்குள்ள தனிப்பட்ட பிரச்சினை காரணமாக சம்பந்தமில்லாத விடயங்களைக்கூட அவர் குறிப்பிட்டுள்ளார்.

எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடரும். அவை உரிய வகையில் முன்னெடுக்கப்படும். ஒருங்கிணைப்புக்குழு தலைவருக்குள்ள அதிகாரம் இனி முழுமையாக பயன்படுத்தப்படும். சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வரும். நாம் இது பற்றி மக்களிடமே முறையிடுகின்றோம். அவர்கள் பார்த்தக்கொள்வார்கள்- என்றார்.

எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடரும்;

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்படவிருந்த இக்கூட்டத்தில்

மாவட்ட அபிவிருத்திக்கு முன்பாக சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் வார்த்தைகளை அபிவிருத்தி செய்ய முற்பட வேண்டும். தனிநபர்கள் தங்களின் அந்தரங்களை பொது வெளியில் போட்டுத்தாக்குவது எதிர்கால இளவல்களுக்கு நல்ல முன் உதாரணம் அல்லவே. எங்கே செல்லும் இந்தப் பாதை ?

  • கருத்துக்கள உறவுகள்

download-3-2.jpg?resize=750%2C375&ssl=1

யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமளி துமளி – வெளிநடப்பு செய்தார் ஸ்ரீதரன் எம்பி!

தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு இல்லாமையை சுட்டிக்காட்டி கூட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வெளியேறினார்.

யாழ். ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தனிப்பட்ட விடையத்தை முன் நிறுத்தி இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்படதால் சில நிமிடங்கள் அமளிதுமளி ஏற்பட்டது.

வலி வடக்கில் முன்னெடுக்கப்படும் மின் இணைப்பு விடையம் தொடர்பில் விவாதம் முன்வைக்கப்பட்டபோது ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினரான இளங்குமரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அவர்களது தனிப்பட விடையங்களை முன்னிறுத்தியதாக மாறியது.

குறிப்பாக இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் தனிப்பட்ட விடயங்கள், நிதி மோசடிகள் உள்ளிட்ட பல விடையங்களை முன்னிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குறித்த விவாதத்தை இடை நிறுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஒருங்கிணைப்பு குழு தலைவரிடம் வலியுறுத்தினார்.

ஆனால் ஒருங்கிணைப்பு குழு தலைவர் குறித்த இருவரையும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டதாகவும், இதன் காரணமாக, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கூட்டத்தை விட்டு வெளியேறி சென்றிருந்தமையையும் எமது செய்தியாளர் உறுதிப்படுத்தியிருந்தார்.

https://athavannews.com/2025/1426402

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

ஒருங்கிணைப்புக்குழு தலைவருக்குள்ள அதிகாரம் இனி முழுமையாக பயன்படுத்தப்படும்.

என்ன அதிகாரமாக இருக்கும்? ஏன் உடனடியாக பயன்படுத்தவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

486612344_23904535202514002_745015337059

486458750_23902800252687497_646791655692

நேற்றைய கூட்டத்தில்... இளங்குமரனும், அர்ச்சுனாவும் அருகருகே அமர்ந்து இருந்து வாக்குவாதப்பட்ட காட்சி.

அடுத்த கூட்டத்திற்கு இவர்களை வெவ்வேறு இடங்களில் அமர வைக்க வேண்டும். 😂

  • கருத்துக்கள உறவுகள்

இருவரும் வாய் தர்க்கத்தில் ஈடுபட்ட வேளை யாரோ இருவரின் மைக்கை நிப்பாட்டும் படி கேட்டார். யாரென்று தெரியவில்லை.

இளங்குமரனுக்கு அருகில் இருப்பவருக்கு காதால் புகை வந்திருக்கும்.

😄

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nunavilan said:

இருவரும் வாய் தர்க்கத்தில் ஈடுபட்ட வேளை யாரோ இருவரின் மைக்கை நிப்பாட்டும் படி கேட்டார். யாரென்று தெரியவில்லை.

இளங்குமரனுக்கு அருகில் இருப்பவருக்கு காதால் புகை வந்திருக்கும்.

😄

3 hours ago, தமிழ் சிறி said:

486612344_23904535202514002_745015337059

486458750_23902800252687497_646791655692

நேற்றைய கூட்டத்தில்... இளங்குமரனும், அர்ச்சுனாவும் அருகருகே அமர்ந்து இருந்து வாக்குவாதப்பட்ட காட்சி.

அடுத்த கூட்டத்திற்கு இவர்களை வெவ்வேறு இடங்களில் அமர வைக்க வேண்டும். 😂

அவர்தான் தேசிய மக்கள் கட்சியின் சார்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட வைத்தியர் ஶ்ரீ பவானந்தராஜா. 🤣

பாராளுமன்ற உறுப்பினர் பதவி… எவ்வளவு கஸ்ரமானது என்பதை நேற்று அறிந்து இருப்பார். 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 26/3/2025 at 00:31, பிழம்பு said:

வட மாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம்

வட மாகாணசபை நடை பெறுவதில்லை பிறகு எப்படி இவர் அவை தலவராக இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றார்...யாராவ்து இதற்கு விளக்கம் சொல்ல முடியுமோ?ஆளுனர் அரச பிரதிநிதி வடமாகாணத்தை அரசு சார்பாக பிரதிநித்துவம் பண்ணுகின்றார் ஆனால் இயங்காத வடமாகாணசபைக்கு இவருக்கு என்ன வேலை?

  • கருத்துக்கள உறவுகள்
On 26/3/2025 at 00:31, பிழம்பு said:

சிவன் பூஜையில் கரடி புகுந்ததுபோல சம்பவங்களும் இடம்பெற்றன.

இவருக்கு கடவுள் பக்தி இல்லை ஆனால் அதிகாமாக இந்த பழமொழியை பாவிக்கின்றார் முதலில் பாராளுமன்றிலும் பாவித்துள்ளார் ...சிவபக்தன் பேசும் பழமொழியை சிவபக்தன் இல்லாதவர் பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன் .

On 26/3/2025 at 00:31, பிழம்பு said:

ஒருங்கிணைப்புக்குழு தலைவருக்குள்ள அதிகாரம் இனி முழுமையாக பயன்படுத்தப்படும்.

நீங்கள் இப்படியான சண்டைக்கு எப்படி பதில் வழங்குவது என‌ பாடமாக்கி கொண்டு வரவில்லைத்தானே 🤣...யாழ்ப்பாணிஸ் செந்தமிழில் பேசும் பொழுது அதற்கு உடனடியாக பதில் வழங்கவோ அல்லது தடுத்து நிறுத்தவோ கஸ்டமாக இருந்திருக்கும்...உங்கள் பிறோப்பளம் புரிகிறது எனக்கு

அடுத்த கூட்ட தொடரில் நீங்கள் சரியாக பாடமாக்கி கொண்டு வந்து பதிலடி கொடுங்கள் ....செந்தமிழில்🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.