Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மியான்மரில் அடுத்தடுத்து இரு பெரிய நிலநடுக்கங்கள்.. அண்டை நாடான தாய்லாந்திலும் அதிர்ந்த கட்டடங்கள்

VigneshkumarUpdated: Friday, March 28, 2025, 12:49 [IST]

மியான்மர்: மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து இரண்டு பெரிய நிலநடுக்கங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலநடுக்கம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் உணரப்பட்டது. இதில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

பூமிக்கு அடியில் பல்வேறு டெக்டோனிக் தட்டுகள் இருக்கின்றன. அவை ஒன்றுடன் ஒன்று மோதும் போது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுகிறது.

Myanmar earthquake

இதற்கிடையே மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ரிக்டர் அளவில் 7.7 & 6.4 என்று அடுத்தடுத்து ஏற்பட்ட பூகம்பத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் உணரப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

https://tamil.oneindia.com/news/international/myanmar-earthquake-strong-tremors-felt-in-myanmar-and-thailand-691213.html

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-384.jpg?resize=750%2C375&ssl

மியன்மார், தாய்லாந்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்!

மியன்மாரில் வெள்ளிக்கிழாமை (28) 7.7 மற்றும் 6.4 ரிக்டர் அளவிலான இரண்டு தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தினால் மியன்மாரின் மண்டலேயில் உள்ள புகழ்பெற்ற அவா பாலம் இராவடி ஆற்றில் இடிந்து விழுந்ததாகவும், சாகைங் அருகே மையமாக இருந்த பாரிய நிலநடுக்கங்களால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

GnG-24jbgAY3azO?format=jpg&name=900x900

நிலநடுக்கங்களின் தாக்கம் அந்த அளவுக்கு அதிகமாக இருந்ததால், சுமார் 900 கி.மீ தொலைவில் உள்ள பாங்கொக்கை நிலநடுக்கம் உலுக்கியது.

இதனால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் உயரமான கட்டிடங்களில் இருந்த நீர்த்தொட்டிகளில் இருந்து தண்ணீர் வெளியேறியது.

மேலும் நிலநடுக்கத்தின் தாக்கத்தால் பல கட்டிடங்கள் அசைந்ததால் அதிலிருந்தவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

எனினும், தாய்லாந்து தலைநகரில் சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.

https://athavannews.com/2025/1426755

  • கருத்துக்கள உறவுகள்

486858017_1100368318772692_5034413263245

487304140_1100368335439357_9527108780984

486966209_1100370032105854_8924179810812

487386331_1100369965439194_3387522874380

487094493_1100369985439192_8757967974220

487102056_1100369912105866_4759961602097

கட்டிடங்கள் அதிர்ந்து வீழ்ந்தன, பல சேதம்! மியன்மாரின் மண்டலே பகுதியில் சக்திவாய்ந்த நில அதிர்வு 7.7 ரிச்டர் அளவில் பதிவு, இந்த நில நடுக்கம் இலங்கை நேரப்படி 11.50 மணியளவில் ஏற்பட்டதாக தகவல்! நில அதிர்வின் அலைகளால் தாய்லாந்து பேங்கொக் பகுதியின் கட்டிடங்கள் அதிர்ந்து வீழ்ந்தன.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

தாய்லாந்து பேங்கொக் பகுதியின் கட்டிடங்கள் அதிர்ந்து வீழ்ந்தன.

கவலையளிக்கிறது,......வயது போன நேரம் இங்கே போய் இருக்கலாம் என்று எண்ணியிருந்தேன் .....இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை 🤣

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kandiah57 said:

கவலையளிக்கிறது,......வயது போன நேரம் இங்கே போய் இருக்கலாம் என்று எண்ணியிருந்தேன் .....இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை 🤣

அப்ப... பிலிப்பைனுக்கு போங்கோ.

அதுகும்... தாய்லாந்து மாதிரியான கலாச்சாரம் உள்ள இடம்தான்.

போன காசுக்கு, கைநிறைய பலன் கிடைக்கும்.

கை நடுக்கம் வந்தாலும்.... நிலநடுக்கம் வரவே... வராது. 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மியான்மரை புரட்டிப்போட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் - புகைப்படத்தொகுப்பு

Damaged pagodas are seen after an earthquake, Friday, March 28, 2025 in , Myanmar

பட மூலாதாரம்,AP

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மத்திய மியான்மர் பகுதியில் 7.7 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

நிலநடுக்கத்தின் மையப்புள்ளி சர்காயிங் நகருக்கு வடமேற்கே 16 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது.

வலுவான நில நடுக்கங்கள் தாய்லாந்து மற்றும் தென்மேற்கு சீனாவின் யுனான் வரை நீண்டிருந்தது.

Damage is seen to part of the emergency department of a hospital in Nay Pyi Taw on March 28, 2025, after an earthquake in central Myanmar.

பட மூலாதாரம்,AFP

நேபிடோவில் உள்ள ஒரு மருத்துவமனை வளாகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது அவசர சிகிச்சைப் பிரிவிற்கான நுழைவாயில் சேதமடைந்தது.

மியான்மரின் ராணுவ தளபதி மின் ஆங் ஹலேய்ங் பாதிப்புகளை ஆய்வு செய்து, தப்பிப்பிழைத்து மைதானங்களில் திரண்டவர்களை சந்தித்தார்

Damage is seen to part of the emergency department of a hospital in Nay Pyi Taw on March 28, 2025, after an earthquake in central Myanmar.

பட மூலாதாரம்,AFP

Earthquake victims lie on the ground of the compound of a hospital in Nay Pyi Taw on March 28, 2025, after an earthquake in central Myanmar.

பட மூலாதாரம்,AFP

Earthquake survivors wait to receive medical attention in the compounds of a hospital in Nay Pyi Taw on March 28, 2025, after an earthquake in central Myanmar.

பட மூலாதாரம்,AFP

Survivors wait to receive medical attention as they lie on the ground of the compound of a hospital in Nay Pyi Taw on March 28, 2025, after an earthquake in central Myanmar. A powerful earthquake rocked central Myanmar on March 28,

பட மூலாதாரம்,AFP

Blood is seen on the face of an earthquake survivors as she rests in a hospital in Nay Pyi Taw on March 28, 2025, after an earthquake in central Myanmar.

பட மூலாதாரம்,AFP

Myanmar's military chief Min Aung Hlaing (C) gestures as earthquake survivors gather in the compound of a hospital in Nay Pyi Taw on March 28, 2025, after an earthquake in central Myanmar.

பட மூலாதாரம்,AFP

நில நடுக்கத்தின் தாக்கத்தால் சாலைகள் சிதிலமடைந்தன, மியான்மர் தலைநகர் முழுவதும் கட்டடங்கள் சேதமடைந்தன.

People look at a damaged road on the Naypyidaw-Yangon highway after an earthquake, in Nay Pyi Taw, Myanmar, 28 March 2025.

பட மூலாதாரம்,EPA

Myanmar's military chief Min Aung Hlaing (C) gestures as earthquake survivors gather in the compound of a hospital in Nay Pyi Taw on March 28, 2025, after an earthquake in central Myanmar.

பட மூலாதாரம்,AFP

Cars pass a damaged road in Nay Pyi Taw on March 28, 2025

பட மூலாதாரம்,AFP

A damaged road in Nay Pyi Taw on March 28, 2025

பட மூலாதாரம்,AFP

நேபிடோவில் பெளத்த மத மட வளாகத்தின் பெரும்பகுதிகள் சேதமடைந்தன.

Damaged pagodas are seen after an earthquake, Friday, March 28, 2025 in Nay Pyi Taw, Myanmar.

பட மூலாதாரம்,AP

A Buddhist monk walks near a damaged building at a monastery compound after an earthquake, Friday, March 28, 2025 in Nay Pyi Taw, Myanmar.

பட மூலாதாரம்,AP

A damaged monastery is seen after an earthquake, Friday, March 28, 2025 in Nay Pyi Taw, Myanmar.

பட மூலாதாரம்,AP

மத்திய மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருகில் உள்ள தாய்லாந்தின் பாங்காக் வரை நீண்டது.

தாய்லாந்து தலைநகரில் ஒரு பெரிய கட்டடம் சரிந்ததைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்கிறது

Rescuers work at the site of a collapsed building after the tremors of a strong earthquake that struck central Myanmar on Friday affected Bangkok, Thailand, March 28, 2025.

பட மூலாதாரம்,REUTERS

A worker reacts after the tremors of a strong earthquake that struck central Myanmar on Friday affected Bangkok, Thailand, March 28, 2025.

பட மூலாதாரம்,REUTERS

An injured construction worker is transported out of a collapsed building on a stretcher by Thai rescue workers following an earthquake on March 28, 2025 in Bangkok, Thailand

பட மூலாதாரம்,GETTY IMAGES

Patients, their families members and medics are evacuated after an earthquake, at a hospital in Bangkok, Thailand, 28 March 2025.

பட மூலாதாரம்,GETTY IMAGES

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgq9q3qd1zyo

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

மியான்மர் நிலநடுக்கத்தில் 1,002 பேர் பலி, 2,376 பேர் காயம் - ஆங் சாங் சூச்சி என்ன ஆனார்?

மியான்மர் நிலநடுக்கம்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

28 மார்ச் 2025

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மார்ச் 28 அன்று மியான்மர் நாட்டின் மையப் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 1002 பேர் உயிரிழந்ததாகவும், 2,376 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் ராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 30 பேரைக் காணவில்லை. மாண்டலே நகரில் மட்டும் 694 பேர் உயிரிழந்துவிட்டதாக மியான்மரின் ராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் தடைபட்டதால் மியான்மரின் பெருநகரங்கள் பலவும் இருளில் மூழ்கின. மியான்மர் நாட்டின் ராணுவம் மற்றும் இதர துறைகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

தாய்லாந்திலும் நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நிலடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியா மற்றும் உலக நாடுகள் பலவும் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளன.

மியான்மரை உலுக்கிய நிலநடுக்கம்

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றின்படி, நிலநடுக்கத்தின் மையப்புள்ளி மியான்மர் நகரான சர்காயிங்-ன் வடமேற்கில் 16 கிலோமீட்டரில், அமைந்திருந்தது. இந்த பகுதி தலைநகர் நேபிடோவிற்கு வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மியான்மரில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு 12 நிமிடங்களே ஆன நிலையில், மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரண்டாவது ஏற்பட்ட நிலநடுக்கம் 6.4 ஆக பதிவானது. இதன் மையம், சர்காயிங்கிற்கு தெற்கே 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

நேபிடோவில் சாலைகள் சிதைந்திருப்பதை படங்கள் காட்டுகின்றன. நாட்டின் ராணுவ அரசு 6 பகுதிகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மியான்மர்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,தாய்லாந்தில் முழுமையாக கட்டி முடிக்கப்படாத 30 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது

மியான்மருக்கு இந்தியா உதவி

நிலநடுக்கம் மியான்மரை புரட்டிப் போட்டுள்ள நிலையில், அதன் ராணுவ ஆட்சியாளர் மின் ஆங் ஹிலெய்ங் உலக நாடுகளிடம் உதவி கேட்டுள்ளார். "எந்தவொரு நாடோ, அமைப்போ அல்லது தனி நபரோ மியான்மருக்கு வந்து உதவ விரும்பினால் வரவேற்கிறோம்." என்று அவர் தனது தொலைக்காட் உரையில் கூறியுள்ளார்.

அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏஷியான் ஆகியவை மியான்மருக்கு உதவ உறுதியளித்துள்ளன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களுக்கு உதவுவதற்காக முதல் தொகுதி நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மியான்மர் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,INDIAN GOVERNMENT

ஆங் சாங் சூச்சி என்ன ஆனார்?

மியான்மரில் ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சாங் சூச்சி இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்படவில்லை என்று பிபிசியின் பர்மியன் சேவைக்கு சிறைத்துறை அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். தலைநகரில் உள்ள சிறைச்சாலையில் சூச்சி பாதுகாப்பாக உள்ளார் என்று அந்த தகவல்கள் கூறுகின்றன.

2021-ஆம் ஆண்டு ராணுவப் புரட்சியால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட சூச்சி, அது முதல் அங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 2023-ம் ஆண்டு வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்ட அவர் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மியான்மர் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தாய்லாந்தில் 6 பேர் பலி

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அண்டை நாடுகளான தாய்லாந்து மற்றும் சீனாவிலும் உணரப்பட்டது. தாய்லாந்தில் முழுமையாக கட்டி முடிக்கப்படாத 30 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது.

இதில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளதாக தாய்லாந்தில் உள்ள தேசிய அவசர கால மருத்துவ சேவை மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக 43 பேரை காணவில்லை என தெரிவித்திருந்தது.

கட்டடம் இடிந்து விழுந்தபோது சுமார் 320 தொழிலாளர்கள் அந்த இடத்தில் இருந்ததாகவும், மின் தூக்கியில் 20 பேர் சிக்கிக்கொண்டிருப்பதாகவும் முகநூல் பதிவொன்றில் தெரிவித்திருந்தது.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து தெளிவில்லாத நிலையில், சம்பவ இடத்திலேயே ஒரு கள மருத்துவமனை அமைக்கப்பட்டு மீட்புப் பணியாளர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Play video, "பாங்காக்: சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த 30 மாடி கட்டடம்", கால அளவு 0,13

00:13

p0l0yz07.jpg.webp

காணொளிக் குறிப்பு,பாங்காக்: சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த 30 மாடி கட்டடம்

சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில் பாங்காக்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். இரண்டாம் நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்ற சூழலில், தாய்லாந்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் ஒரு கட்டடத்தின் கூரை மீது இருந்த தண்ணீர் தெறித்து பல தளங்களை தாக்கி இறுதியாக கீழே தெருக்களில் ஊற்றியது.

பிபிசி குழுவினர் பாங்காங்கில் கட்டடங்கள் அசைந்ததாக தெரிவிக்கின்றனர். மேலும், மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

நில அதிர்வு தலை சுற்றலை தருமளவு இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மியான்மர்

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,மியான்மர் தலைநகரில் இடிந்து விழுந்த கட்டடம்

'நூற்றுக்கணக்கானவர்கள் இறந்திருக்கலாம்'

மியான்மரின் மாண்டலேவில் இருக்கும் மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் சேதம் மிகப் பெரியது என பிபிசியிடம் தெரிவித்தார்.

''உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் மிகவும் அதிகம். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதால் இப்போதைக்கு எங்களால் இவ்வளவுதான் சொல்லமுடியும்," என்று அவர்கள் கூறுகின்றனர்.

''உயிரிழந்தவர்கள் எவ்வளவு பேர் என்பது சரியாக இன்னமும் தெரியவில்லை ,ஆனால் பல நூறு பேர் இறந்திருப்பார்கள்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

மியான்மர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

'நிலநடுக்கத்தை நீண்ட நேரம் உணர்ந்தேன்'

மியான்மரின் மிகப்பெரிய நகரான யாங்கானில் வசிக்கும் சோ லிவின் நிலநடுக்கத்தை நீண்ட நேரம் உணர்ந்ததாக தெரிவித்தார்.

நாட்டின் முன்னாள் தலைநகரான இந்த நகரில் பரவலாக சேதம் ஏற்பட்டதாக தெரியவில்லை என அவர் தெரிவித்தார். எதிர்வரும் நாட்களில் இதைவிட பெரிய நிலநடுக்கம் ஏற்படுமோ என மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மியான்மர்

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,மியான்மரில் சிகிச்சைக்காக காத்திருக்கும் மக்கள்

விமான நிலையத்தில் பதற்றம்

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் மியான்மரின் மண்டலே விமானநிலையத்தில் எடுக்கப்பட்டதாக தோன்றும் உறுதிசெய்யப்படாத காணொளி வெளியாகியுள்ளது.

அதில் மக்கள் கூச்சலிட்டுக்கொண்டு தார்சாலையில் அமர்ந்திருக்கின்றனர். பின்புலத்தில் ஜெட்விமானம் ஒன்று காணப்படுகிறது.

''அமருங்கள், ஓடாதீர்கள்'' என்ற குரல்கள் எழுவதை கேட்கமுடிகிறது.

ஆன்லைனில் வெளியாகும் வீடியோக்களின் நம்பக்கத்தன்மையை உறுதி செய்ய பிபிசி முயற்சி செய்துகொண்டிருக்கிறது.

மியான்மர்

பட மூலாதாரம்,MYANMAR'S MILITARY REGIME

படக்குறிப்பு,மியான்மர் தலைநகர் நேபிடோவில் சாலைகள் சிதைந்துள்ளன

மியான்மரிலிருந்து தகவல்களை பெறுவது ஏன் கடினம்?

மியான்மரில் 2021ஆம் ஆண்டு முதலே ராணுவம் ஆட்சி செய்து வருவதால், தகவல் பெறுவது கடினமாக இருக்கிறது. உள்ளூர் வானொலி, தொலைக்காட்சி, அச்சு மற்றும் ஆன்லைன் ஊடகங்களை அரசு கட்டுப்படுத்துகிறது.

இணைய சேவை பயன்பாடும் கட்டுபாட்டுக்கு உட்பட்டது.

தொலைத்தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. பிபிசியால் அடிமட்டத்தில் இயங்கும் உதவி முகமைகளை அணுகமுடியவில்லை.

மியான்மர்

பட மூலாதாரம்,REUTERS

தாய்லாந்து நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் இல்லை என்பதுடன் அங்கு அபூர்வமாக உணரப்படும் அனைத்து நிலநடுக்கங்களும் அண்டை நாடான மியன்மாரில் ஏற்படுகின்றன.

பாங்காங்கில் உள்ள கட்டடங்கள் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை தாங்ககூடியவகையில் வடிவமைக்கப்பட்டவை அல்ல என்பதால், கட்டமைப்புக்கு ஏற்படும் பாதிப்பு தீவிரமானதாக இருக்கலாம்.

நிலநடுக்கம் ஏற்பட்ட போதுதான் வீட்டில் சமைத்துக்கொண்டிந்ததாக பாங்காங்கில் வசிக்கும் பிபிசி செய்தியாளர் புய் து பிபிசி உலக சேவையின் நியூஸ்டே நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

"நான் மிகவும் பதற்றத்தில் இருந்தேன், நான் அச்சமடைந்திருந்தேன்," என்கிறார் அவர். "அது என்னவென்றே எனக்கு தெரியவில்லை, ஏனென்றால், பாங்காங்கில் இது போன்ற ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன்."

"எனது அபார்ட்மெண்டில் சுவர்களில் சில வெடிப்புகளை மட்டும் பார்த்தேன், நீச்சல் குளங்களிலிருந்து தண்ணீர் வெளியே தெளித்தது, மற்றும் மக்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.

பின்னதிர்வு ஏற்பட்டவுடன் அவர் மேலும் பலருடன் சேர்ந்து தெருவுக்கு ஓடினர். "என்ன நடந்தது என புரிந்துகொள்ள நாங்கள் முயன்றுகொண்டிருந்தோம்," என்கிறார் அவர்.

"பாங்காங்கில் உள்ள கட்டடங்கள் நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும்வகையில் கட்டமைக்கபடவில்லை, எனவே பெரிய அளவு சேதம் இருக்கப் போகிறது என நான் நினைக்கிறேன்,"

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2kgk5nyv4eo

  • கருத்துக்கள உறவுகள்

4560688_1_org_THAILAND_20Earthquake_2022

மியன்மார் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1002 ஆக உயர்வு.

மியன்மாரில் ஏற்பட்ட நில அதிர்வில் இதுவரை சுமார் 1002 பேர் உயிரிழந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நில அதிர்வில்  2,376பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளதுடன் ,
உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஐயம் நிலவுவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்த நிலநடுக்கம் தாய்லாந்தையும் தாக்கியதால் தலைநகர் பெங்கொக்கில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தாய்லாந்தில் நில அதிர்வுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என அந்த நாட்டு நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

மியன்மாரில் நில அதிர்வில் சிக்குண்டு பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு உதவும் வகையில் இரத்த தானம் மற்றும் மருத்துவ பொருட்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில், அத்திலாந்திக் பெருங்கடலில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.

பிரேசிலிலிருந்து 585 கிலோமீட்டர் தொலைவில் அத்திலாந்திக் பெருங்கடலில் 6.4 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, இன்று அதிகாலை ஆப்கானிஸ்தானில் 4.2 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஜூர்மிலிருந்து தென்கிழக்கே 24 கிலோ மீற்றர் தொலைவில் 226.9 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேதவிபரங்கள் குறித்து இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது

இந்நிலையில், மியன்மார் நில அதிர்வை அடுத்து காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக சீனா மீட்பு குழுவொன்றை அனுப்பியுள்ளது.

இந்த மீட்பு குழுவில் வைத்தியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 37 பேர் கொண்ட சீன மீட்பு குழு இன்று மியன்மாரை சென்றடையவுள்ளது.

மியன்மாருக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு சீனா தயாராகவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை உணவு , போர்வைகள் , மருந்து , மின்பிறப்பாக்கி என 15 டன் நிவாரண பொருட்களை இந்தியா மியன்மாரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அனுப்பியுள்ளது.

இந்திய விமானப்படை விமானம் மூலம் 15 டன் நிவாரணப் பொருட்கள் மியான்மருக்கு வெளியுறவுத்துறை அனுப்பி வைத்தது.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய விமானப்படையின் C17 விமானம் இன்று அதிகாலை 4 மணியளவில் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை நிலையத்திலிருந்து மியான்மருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் கூடாரங்கள், போர்வைகள், உணவு, தண்ணீர் சுத்திகரிப்பான்கள், சுகாதார கருவிகள், சூரிய விளக்குகள், அத்தியாவசிய பொருட்கள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மீட்புக்குழுவும் செல்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1426785

  • கருத்துக்கள உறவுகள்

👉 https://www.facebook.com/reel/512168525081568 👈

👉 https://www.facebook.com/reel/648162494606562 👈

👉 https://www.facebook.com/reel/2049533672207735 👈

👆 நேற்று தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

29myanmar-earthquake-visual-stack-01-jwc

மியன்மாரை உலுக்கிய நிலநடுக்கம்: பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது!

மியான்மாரை உலுக்கிய நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 2000ஐக் கடந்துள்ளது.  மியான்மார், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று முன் தினம் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவான நிலையில், நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது.

இந் நிலநடுக்கத்தால் நேபிடாவ், மண்டலே ஆகிய 2 நகரும் பெரும் சேதத்தை சந்தித்தன. நேபிடாவில் புத்தர் கோவில் உள்பட வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. அதேபோல மண்டலே நகரில் உள்ள பழமையான அரண்மனையும் இடிந்தது.

நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டிடங்களில் இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் பலியாகினர். படுகாயம் அடைந்தனர். ஒட்டு மொத்த நாட்டையும் நிலநடுக்கம் உலுக்கியதை தொடர்ந்து மியான்மார் இராணுவ அரசாங்கம் நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது.

அதோடு நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளை அரசு முடுக்கிவிட்டது. எனினும் ராணுவம்-கிளர்ச்சி குழுக்கள் இடையேயான மோதல் மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகளை சிக்கலாக்கி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மியான்மரை புரட்டிப்போட்ட இந்த பயங்கர நிலநடுக்கம் அதன் அண்டை நாடுகளில் ஒன்றான தாய்லாந்திலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது.

தலைநகர் பாங்காக் உள்பட தாய்லாந்தின் பல நகரங்களை நிலநடுக்கம் தாக்கியது. அங்கும் வானுயுர கட்டிடங்கள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். தாய்லாந்திலும் நிலநடுக்கம் பாதித்த அனைத்து பகுதிகளிலும் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

இந் நிலையில் மியன்மார் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கத்துக்கு 150-க்கும் மேற்பட்டோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன. தற்போது மியன்மாரில் மட்டுமே பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துவிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2,300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நிலநடுக்கத்தால் மோசமான பாதிப்பை சந்தித்துள்ள மியான்மருக்கு உலக நாடுகள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1426833

  • கருத்துக்கள உறவுகள்

MYANMAR-QUAKE.jpg?resize=750%2C375&ssl=1

மியன்மார் நில அதிர்வு: உலக நாடுகளிடம் உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை!

மியன்மாரில் ஏற்பட்டுள்ள பாரிய நில அதிர்வை தொடர்ந்து அங்கு மனிதாபிமான உதவிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக 8 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது.

மியன்மாரில் கடந்த 28 ஆம் திகதி 7.7 ரிச்டர்  அளவிலான பாரிய நில அதிர்வு ஏற்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினமும் இருவேறு சந்தர்ப்பங்களில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மியன்மாரில் கடந்த 28 ஆம் திகதி பாரிய நில அதிரவு ஏற்பட்டிருந்த நிலையில் சுமார் 72 மணித்தியாலங்களில் 1 700க்கும் மேற்பட்ட வர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ள நிலையில் மீட்பு பணிகள் இடம்பெறும் பகுதிகளில் அவர்களின் உறவினர்கள் காத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதனிடையே மியன்மாரில் ஏற்பட்ட நிலஅதிர்வை தொடர்ந்து தாய்லாந்து உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் அதன் தாக்கம் உணரப்பட்டுள்ளதுடன் அங்கு சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் பாங்கொக் நகரின் மிக உயரமான கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் அங்கு சிக்குண்டுள்ள கட்டுமானத்தொழிலாளர்கள் 76 பேரை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரியவந்துள்ளது.

நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பெற்றுவருவதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

மியன்மாரில் தற்போது வெப்பமான காலநிலை காரணமாக குறிப்பாக குடிநீர் தேவை அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மியன்மாரில் மனிதாபிமான உதவிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக 8 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1426903

  • கருத்துக்கள உறவுகள்

மியன்மார் பூகம்பம் - திங்கட்கிழமை இடிபாடுகளிற்குள் இருந்து மற்றுமொரு பெண் உயிருடன் மீட்பு - கர்ப்பிணியை காப்பாற்றும் முயற்சி தோல்வி

Published By: RAJEEBAN 31 MAR, 2025 | 04:20 PM

image

மியன்மாரை பூகம்பம் உலுக்கிய 60 மணித்தியாலங்களிற்கு பின்னர் திங்கட்கிழமை இடிபாடுகளிற்குள் இருந்து பெண்ணொருவர் மீட்கப்பட்டுள்ளார்என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிர் பிழைத்திருக்க கூடியவர்களை மீட்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள மீட்பு பணியாளர்களிற்கு இது ஒரு நம்பிக்கை அளிக்கும் விடயமாக காணப்படுகின்றது.

இயந்திரங்கள் அற்ற தன்னார்வ தொண்டர்களான மீட்பு பணியாளர்கள் பூகம்பம் தாக்கிய பின்னர் கட்டிட இடிபாடுகளிற்குள் இருந்து உயிருடன் இருப்பவர்களை மீட்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை இந்த பூகம்பத்தினால் மியன்மாரிலும் தாய்லாந்திலும் 2000 பேர் உயிரிழந்துள்ளமை உறுதியாகியுள்ளது.

3_mrpxtN.jpg

உயிரிழப்புகளின் உண்மையான அளவு இதுவரை தெரியவரவில்லை என்ற அச்சமும் நிலவுகின்றது.

திங்கட்கிழமை காலையில்  ஐந்து மணிநேர மீட்பு நடவடிக்கையின் பின்னர் மண்டலாயின்  கிரேட்வோல் ஹோட்டலின் இடிபாடுகளிற்குள் இருந்து பெண் ஒருவரை மீட்பு பணியாளர்கள் வெளியே கொண்டுவந்தவேளை மகிழ்ச்சியான நிலை காணப்பட்டது என மியன்மாருக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

மீட்பு பணியாளர்களையும் உதவிகளையும் அனுப்பியுள்ள நாடுகளில் சீனாவும் ஒன்று என்பது குறிப்பிடத்க்கது.

உயிருடன் மீட்கப்பட்ட பெண் ஸ்டிரெச்சரில் கொண்டு செல்லப்பட்டவேளை அங்கு காணப்பட்டவர்கள் கரகோசங்களை எழுப்பியதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

மியன்மாரில் பூகம்பம்காரணமாக தரைமட்டமாகியுள்ள அலுவலகங்கள் பாடசாலைகள் ஹோட்டல்கள் மதவழிபாட்டுதலங்கள் மருத்துவமனைகள் போன்றவற்றின்  இடிபாடுகளிற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெறுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை மண்டலாயின் தொடர்மாடியொன்றின் இடிபாடுகளிற்குள் இருந்து கர்ப்பிணியொருவரை மீட்பதற்கான முயற்சிகளில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டனர், அவரை மீட்பதற்காக அவரது காலை துண்டித்தனர் ஆனால் பின்னர் அவர் உயிரிழந்தார்.

https://www.virakesari.lk/article/210750

  • கருத்துக்கள உறவுகள்

myanmar-thailand-01-lkht-superJumbo.jpg?

மியன்மாரில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 3,000 ஐ கடந்தது!

மியன்மாரில், கடந்த மாதம் 29ம் திகதி  ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3000 ஐ கடந்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஒருவாரம் கடந்துள்ள நிலையில், இந் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,145 ஆக அதிகரித்துள்ளதுடன், ‘4,589 பேர் காயமடைந்துள்ளனர் எனவும், 221 பேர் காணாமற் போயுள்ளனர் எனவும், இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகின்றது.

இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து, உணவு மற்றும் தங்குமிடங்களை, அரசுடன் இணைந்து பல தனியார்  நிறுவனங்கள் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற போதும்  வீதிகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வது  சவாலாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1427359

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.