Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல வினைக்கரிய யாவுள காப்பு

முதலில் நட்பை ஏற்படுத்திக் கொள்

அந்த நட்பே உன்னைப் பாதுகாக்கும்

இது மோடியின் ஒரு வகையான திட்டமிட்ட இலங்கைக்கான எச்சரிக்கை

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புலவர் said:

இதுதான் இந்தியாவின் அகிம்சை வழி ஆக்கிரமிப்பு ... உள்ளே இருப்பது ஆயுத அடக்குமுறை வெளியே தெரிவது அகிம்சை

1971 ஆம் ஆண்டு,1987 ஆம் ஆண்டு சிங்கள இளைஞர்களையும்.2009 வரை தமிழ் இளைஞர்களையும் பயங்கர வாதம் என முத்திரை குத்தி அழிப்பதில் முன்னின்று இன்று சிங்கள இடதுசாரிகளையே தலை வணங்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளனர் ...இது இந்தியாவுக்கு கிடைத்த மாபெரும் அரசியல் வெற்றி....

டோழரை இந்தியாவுக்கு வர வைச்சு நன்றாக பூஜை செய்து (வரவேற்பு)அனுப்பிய பின்பு ..... அதை இந்தியா பிரதமர் சிறிலங்காவில அறுவடை செய்கின்றார் ...

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, putthan said:

ஆனால் மோடி ஜீ தமிழில் நன்றி தெரிவித்துள்ளார் டுவிட்டரில் ...அந்த வகையில் மோடி ஜீ அச்சா ஜீ..

மோடி ஜீ அச்சா ஜீ..

45 minutes ago, putthan said:

மோடி ஜீ ,வாழ்முகி ராமாயணத்திலிருந்து கருத்துசொல்லாமல் தமிழ் மொழியில் கருத்து சொன்ன திருவள்ளுவரின் திருக்குரளிலிருந்து கருத்து சொன்னதை வர வேற்கின்றோம்...

திருவள்ளுவர் பெளத்தர்/சமணர் அதுதான் மோடி ஜீ அனுரா டோழரை குளிர பண்ண அப்படி சொல்லியிருப்பார் என சில கருத்துக்களும் வரலாம் ...

புத்தரே ..தமிழ்தான் அவரின் உயிர் என்று காட்டிவிட்டார்...13 கதக்காவிட்டாலும் ..அவரு மைன்ட்ல இருக்கு...😆

இதுகாணும் நம்ம சும் கோஸ்டிக்கு...குப்பை அள்ளுற ..லையிட்டுபூட்டுற..தேர்தலில் வோட்டுக் கேட்கிறதுக்கு

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, alvayan said:

புத்தரே ..தமிழ்தான் அவரின் உயிர் என்று காட்டிவிட்டார்...13 கதக்காவிட்டாலும் ..அவரு மைன்ட்ல இருக்கு...😆

இதுகாணும் நம்ம சும் கோஸ்டிக்கு...குப்பை அள்ளுற ..லையிட்டுபூட்டுற..தேர்தலில் வோட்டுக் கேட்கிறதுக்கு

நான் நினைக்கிறேன் இனி நாங்கள் உந்த சும் கோஸ்டிகள்,அர்ஜுனா கோஸ்டிகள்,என்.பி.பி தவ்வல்களின் அரசியல் சுத்துமாத்துக்களை கதைப்பதில் பிரயோசனமில்லை எண்டு....எமது அரசியல் ,சிங்களவர்களின் அரசியல் எல்லாம் கை நழுவி போய் சிறிலங்காவின் அரசியல் என்ற நிலைக்கு வந்துவிட்டது.சிறிலங்கா தேசியத்தை ஆட்டிப்படைக்க ஏனைய நாடுகள் முன்வந்து விட்டன ... .

..சிங்கள அரசியல் வாதிகள் தமிழர் பகுதிகளில் விகாரைகளை கட்டுவார்கள் , அதை ஏதிர்ப்பது மட்டுமே உள்நாட்டு அரசியல் ...அபிவிருத்தி என விளம்பர படுத்துவார்கள் ஆனால் .பணம் இருக்காது ...

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, வாத்தியார் said:

முதலில் நட்பை ஏற்படுத்திக் கொள்

அந்த நட்பே உன்னைப் பாதுகாக்கும்

இது மோடியின் ஒரு வகையான திட்டமிட்ட இலங்கைக்கான எச்சரிக்கை

சிங்களவனுக்கு பாடமெடுக்க ...தமிழில் குறள் வேண்டியிருக்குது.. நன்றி வாத்தியார்..

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, வாத்தியார் said:

முதலில் நட்பை ஏற்படுத்திக் கொள்

அந்த நட்பே உன்னைப் பாதுகாக்கும்

இது மோடியின் ஒரு வகையான திட்டமிட்ட இலங்கைக்கான எச்சரிக்கை

சகலரும்(ஜெய்சங்கர்,டோவால்) வந்தது ஒர் எச்சரிக்கை போலத்தான் தெரிகிறது ....

மோடி ஜீ சொல்கின்றார் போல....நீ சீனாவிடம் பணம் பெற்று அபிவிருத்தி செய்,நானும் சீனனும் நண்பேன்டா.இதை மறந்திடாத‌..நீ அரிவரியில் இந்தியா எதிப்பு அரசியல் செய்த மாதிரி இல்லை இப்ப உலகம்வேற லெவல்....

அதை மனதில் வை....

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, putthan said:

சகலரும்(ஜெய்சங்கர்,டோவால்) வந்தது ஒர் எச்சரிக்கை போலத்தான் தெரிகிறது ....

மோடி ஜீ சொல்கின்றார் போல....நீ சீனாவிடம் பணம் பெற்று அபிவிருத்தி செய்,நானும் சீனனும் நண்பேன்டா.இதை மறந்திடாத‌..நீ அரிவரியில் இந்தியா எதிப்பு அரசியல் செய்த மாதிரி இல்லை இப்ப உலகம்வேற லெவல்....

அதை மனதில் வை....

உண்மையில் இந்த வரவேற்பு...கொண்டாட்டம் அனைத்தையும் பார்க்க..இது இலங்கையில் நடந்த நிகழ்வாக தெரியவில்லை..தனியாக போறார் ..இந்திய மக்களை சந்திக்கிறார்..கைகுடுக்கிறார்...குழந்தைப் பிள்ளையை தூக்கிறார்...தமிழான குறளில் பேசுகிறார்.. எக்ஸ் தளத்தில் தமிழில் நன்றி சொல்கிறார்..போதாக்குறைக்கு முசுலிம்களூம் குல்லாவும் ...முட்டாக்கும் போட்டு நாமளும் உங்கடையாக்கள் என்று .கைகுடுக்கினம் ...அப்ப எங்கையப்பா சிங்களவர்.. இலங்கையா ..இந்தியாவா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

ஒரு காலத்தில் இந்த டோழர் கோஸ்டியினர் அப்பட்ட எப்பா மசால தோசை ,வட என அரச சொத்துக்களையும் ,தமிழ் மக்களின் உயிர்களையும் ,சொத்துக்களையும் நாசமாக்கிய கோஸ்டிகள் இன்று இந்தியா பிரதமருக்கு ராஜ மரியாதை....

முன்பு தமிழ் மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் எரித்து நாசமாக்கிய சிவப்பு புரச்சியாளர்கள் போன வருடம் ஆட்சிக்கு வரும்வரை கடுமையான இந்திய எதிர்ப்பை தான் கடைபிடித்தனர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-83.jpg?resize=750%2C375&ssl=

அனுராதபுரத்தை சென்றடைந்தார் பிரதமர் மோடி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்று நாள் இலங்கைப் பயணத்தின் இறுதி நாளான இன்று, சற்று நேரத்திற்கு முன்பாக அனுராதபுரத்தை சென்றடைந்துள்ளார்.

இந்தியப் பிரதமருடனான இந்த பயணத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் கலந்து கொண்டுள்ளார்.

இரு தலைவர்களும் அநுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்கு சென்று வழிபாட்டில் ஈடுபடவுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு திட்டமான அனுராதபுரம் ரயில் நிலையத்தில் புதிய ரயில் சமிக்ஞை அமைப்பையும், புதிதாக மேம்படுத்தப்பட்ட மஹோ-ஓமந்தை ரயில் பாதையையும் அவர்கள் திறந்து வைப்பார்கள்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆகியோரின் வருகையை முன்னிட்டு இன்று அனுராதபுரத்தில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம் அமுலில் உள்ளது.

https://athavannews.com/2025/1427633

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-89.jpg?resize=750%2C375&ssl=

அனுராதபுரம்-மஹோ ரயில் சமிக்ஞை அமைப்பை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவும் இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு திட்டமான அனுராதபுரம்-மஹோ ரயில் சமிக்ஞை அமைப்பையும், புதிதாக மேம்படுத்தப்பட்ட மஹோ-ஓமந்தை ரயில் பாதையையும் சற்று முன்னர் திறந்து வைத்தனர்.

இந்தத் திட்டம் வடக்குப் பாதையின் மஹோ-அனுராதபுரம் பிரிவில் மேம்பட்ட சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்பை நிறுவுவதை உள்ளடக்கியது.

Gn1GC6eXYAERtTR?format=jpg&name=4096x409

Gn1GF5lW4AAnin9?format=jpg&name=4096x409

முன்னதாக, இந்தியப் பிரதமர், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா போதிக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.

Gn1BeffWQAA27Wh?format=jpg&name=large

Gn1BjgXXwAApqRk?format=jpg&name=large

Gn1BiRDWMAAwotb?format=jpg&name=large

இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி,

அனுராதபுரத்தில் உள்ள ஜய ஶ்ரீ மகா போதியில் ஜனாதிபதி திசாநாயக்க அவர்களுடன் இணைந்து வழிபாடுகளை மேற்கொண்டிருந்தேன்.

பௌத்தமதத்தின் அதி சிறப்புமிக்கதும் மதிப்புக்குரியதுமான ஸ்தலங்களில் ஒன்றான இத்தலத்தில் வழிபாட்டினை மேற்கொள்வது உண்மையில் மிகவும் பணிவுக்குரிய தருணமாகும்.

அமைதி, ஞானம் மற்றும் ஆன்மீக நீட்சியின் வாழும் குறியீடாக இத்தலம் திகழ்கின்றது. புத்தபெருமானின் போதனைகள் எப்போதும் எமக்கு வழிகாட்டட்டும் என்றார்.

மேலும் மற்றொரு பதிவல், அநுராதபுரத்தில், மாஹோ-ஓமந்தை இடையேயான தரமுயர்த்தப்பட்ட புகையிரதப் பாதையினை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களும் நானும் கூட்டாக அங்குரார்ப்பணம் செய்துவைத்தோம்.

அதேபோல மாஹோ முதல் அனுராதபுரம் வரையிலான தொகுதிக்குரிய நவீன சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் தொலைத் தொடர்பு பொறிமுறையினை ஸ்தாபித்தல் உள்ளிட்ட சமிக்ஞை தொகுதி திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கையின் அபிவிருத்தி பயணத்தின் பல்வேறு அம்சங்களிலும் இலங்கைக்கான ஆதரவை நல்குவதில் இந்தியா பெருமிதம் கொள்கின்றது – என்றார்.

https://athavannews.com/2025/1427657

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-100.jpg?resize=750%2C375&ssl

இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் வெற்றிகரமாக நிறைவு!

இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்‍தை முடித்துக் கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (06) பிற்பகல் தாயகம் திரும்பியுள்ளார்.

இந்த விஜயம் குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி,

இலங்கைக்கான எனது விஜயத்தின்போதான அன்பான அரவணைப்புக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மக்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கொழும்புக்கான விஜயமாக இருந்தாலும் சரி, அநுராதபுரத்துக்கான விஜயமாக இருந்தாலும் சரி இரண்டுமே நமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கலாசார, ஆன்மீக மற்றும் நாகரீக உறவுகளை மீள உறுதிப்படுத்துவதாகவே அமைந்தன. இந்த விஜயம் நமது இருதரப்பு உறவுகளுக்கு நிச்சயமாக உத்வேகத்தை தரும் – என்று பதிவிட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான அரச விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இன்று (06) முற்பகல் அநுராதபுரம் விமானப்படைத் தளத்தில் இருந்து இந்தியாவிற்குப் புறப்பட்டுச் சென்றார்.

anuradhapura-modhi.jpg?ssl=1

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இலங்கை்கு அரச பயணம் மேற்கொண்டிருந்தார்.

இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்த நான்காவது தடவை இதுவாகும் என்பதுடன், இந்த அரச விஜயத்தினால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார, கலாசார மற்றும் வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கிடையிலான பன்முக ஒத்துழைப்புகளும் பலப்படுத்திக்கொள்ளப்பட்டன.

அத்துடன், அயலவருக்கு முதலிடம் என்ற இந்திய வெளிவிவகாரக் கொள்கை மற்றும் மஹாசாகர் நோக்குக்கு அமைவாக, இராஜதந்திர விவகாரங்களில் இலங்கைக்கு சிறப்பிடம் உண்டு என்பதையும் இந்தியப் பிரதமரின் விஜயத்தினால் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த விஜயம் பல முக்கியமான பல்வேறு எதிர்கால ஒத்துழைப்புகளுக்கு உடன்பாடுகளை எட்டக்கூடியதாக அமைந்ததுடன், இந்த ஒத்துழைப்புகளின் வெற்றிகரமான பலன்களை இலங்கை மக்கள் விரைவில் அனுபவிக்க முடியும். மேலும், மக்களுக்கான நிலைபேறான அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் அரசாங்கத்தின் பயணத்தில் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் விஜயம் முக்கிய மைல்கல்லாக அமையும்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இந்திய அரசின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.

MAHAWA.jpg?ssl=1

https://athavannews.com/2025/1427696

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

488909089_1077600264410975_4518198673836

யார் அணுகுவது என்று கடைசி வரை சொல்லவில்லை. இப்படித்தான் முன்பு இருந்த ஆட்சியாளர்களும் சொன்னார்கள். இதற்கு முடிவு கிடையாது போல.

//Tharcius Emmanuvel Dixict Pachchake.

மனிதாபிமானமமுறை பேணுவதாயின் முதலில் எல்லை தாண்டுபவர்களை தடுப்பது பாரத பிரதமரின் முதற்பணி. ஆகாயத்தில் செய்மதி அனுப்பும் உங்களுக்கு உங்கள் நாட்டு மக்களின் வாழ்வாதரத்தை உங்கள் நாட்டின் வளங்களால் மேம்படுத்த முடியாமலா இலங்கையின் வழங்களை நாடுகின்றார்கள்.//

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

488613605_682972674403237_12287167893969

இந்தியப் பிரதமர் மோடி, இன்று அனுராதபுரத்தில் புத்த பிக்குவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.

சென்ற முறை மோடி... இலங்கைக்கு வந்த தருணம் நல்லூர் கோவிலுக்கு உள்ளே போக விரும்பினார். கோவிலுக்குள் போவதென்றால்... மேல் சட்டையை கழட்டி விட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும் என்று நல்லூர் கோவில் நிர்வாகம் உறுதியாக சொல்லியதால்... நல்லூர் கோவிலுக்கு போகும் திட்டத்தையே கைவிட்டு விட்டார்கள்.

தனது மதத்துக்கு வளைந்து கொடுக்காத இந்தியப் பிரதமர், இன்று ஸ்ரீலங்கா பிக்குவின் காலை தொட்டு வணங்குகின்றார். இது, என்ன.. டிசைனோ தெரியவில்லை. 😂

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

489788516_1081279734036998_5199972878150

488885200_1081300810701557_6239782419827

489421346_1081300037368301_6663755138006

489787459_1081291477369157_6007986085898

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

489714829_1081522054012766_2606296818706

489448682_1082042223960749_5505834333369

489953441_1082068877291417_3194696331737

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2025 at 23:21, putthan said:

நான் நினைக்கிறேன் இனி நாங்கள் உந்த சும் கோஸ்டிகள்,அர்ஜுனா கோஸ்டிகள்,என்.பி.பி தவ்வல்களின் அரசியல் சுத்துமாத்துக்களை கதைப்பதில் பிரயோசனமில்லை எண்டு....எமது அரசியல் ,சிங்களவர்களின் அரசியல் எல்லாம் கை நழுவி போய் சிறிலங்காவின் அரசியல் என்ற நிலைக்கு வந்துவிட்டது.சிறிலங்கா தேசியத்தை ஆட்டிப்படைக்க ஏனைய நாடுகள் முன்வந்து விட்டன ... .

..சிங்கள அரசியல் வாதிகள் தமிழர் பகுதிகளில் விகாரைகளை கட்டுவார்கள் , அதை ஏதிர்ப்பது மட்டுமே உள்நாட்டு அரசியல் ...அபிவிருத்தி என விளம்பர படுத்துவார்கள் ஆனால் .பணம் இருக்காது ...

புத்தன்… சரியாக சொன்னீர்கள். எந்த விடயத்தையும் சூட்டோடு செய்யாமல் ஆறப் போட்டதால் வந்த வினை.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

489714829_1081522054012766_2606296818706

489448682_1082042223960749_5505834333369

489953441_1082068877291417_3194696331737

கிரி பத் கொடுக்கிறார்

இந்தியாவின் வடக்கே ஜம்மு கஸ்மீரை இரண்டு யூனியன் பிரதேசமாக்கி ஒரு பகுதியை பெளத்த மதத்தை பின்பற்றும் மக்களுக்கும் மற்றைய பகுதி இஸ்லாமிய மக்களுக்கு என பிரித்து வைத்து ...பெளத்த பிரதேசத்தை ஆளூனரின் ஆட்சியின் கீழ் வைத்துள்ளனர்....

பெளத்தம் இந்துக்களின் ஒர் பகுதி என சொல்லி அரசியல் செய்கின்றனர்...

விவேகானந்தருக்கு செருப்பு எறிந்த பெளத்த பூமி சிறிலங்கா என்பதை நிச்சயம் இந்தியா கொள்கை வகுப்பாளர்கள் அறிந்திருப்பார்கள்

Edited by putthan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.