Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

R

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) விதிகளின்படி, அக்கட்சியின் தலைவர் பதவியில் இருப்பவரை தன்னிச்சையாக யாராலும் நீக்க முடியாது; பாமகவின் பொதுக் குழுதான் 'தலைவர்' பதவியில் இருந்து ஒருவரை நீக்க முடியும்; நியமிக்க முடியும்; ஆகையால் அன்புமணி ராமதாஸை, பாமக தலைவர் பதவியில் இருந்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நீக்கியது செல்லாது என்கின்றனர் அன்புமணி ஆதரவாளர்கள்.

Also Read

அமித்ஷா வருகைக்கு என்ன காரணம்? பாஜக மாநில தலைவர் மாற்றம் உறுதியா? அண்ணாமலை சொன்ன தகவல்!

மேலும் பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவராக தாமே பதவி வகிப்பேன்; 2026 சட்டசபை தேர்தலுக்காகவே இந்த முடிவு என்று கூறிய ராமதாஸ், அன்புமணியை நீக்கிவிட்டதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதை எல்லாம் வெளியில் பகிரங்கமாக கூறிவிடவும் முடியாது என்றார்.

Chennai-Bengaluru Expressway Extend ஆகப்போகுது! | Oneindia Tamil

டாக்டர் ராமதாஸின் இந்த திடீர் அறிவிப்பு பாமகவில் மட்டுமல்ல தமிழ்நாட்டு அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டாக்டர் ராமதாஸின் முடிவுக்கு எதிராக அன்புமணியின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். ராமதாஸின் இந்த முடிவு ஜனநாயகப் படுகொலை என்கிறார் பாமக பொருளாளர் திலகபாமா. திண்டிவனத்தில் டாக்டர் ராமதாஸ் வீட்டை அன்புமணி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்துக்கு அனைத்து பாமக நிர்வாகிகளையும் வரவழைத்துள்ளார் டாக்டர் ராமதாஸ். ஆனால் அன்புமணியின் ஆதரவாளர்களோ, சென்னையை அடுத்த பனையூரில் உள்ள அவரது அலுவலகத்துக்கு சென்றுள்ளனர். பாமகவில் உச்சகட்ட குழப்பம் நீடித்து வருகிறது.

Recommended For You

நொறுங்குதே கூட்டணி கணக்கு..தமிழகத்தின் ஏக்நாத் ஷிண்டே? அதிமுகவை உடைக்கும் செங்கோட்டையன்? பரபர ப்ளான்

இந்த நிலையில், பாமகாவின் உட்கட்சி விதிகளின்படி, தலைவர் பதவியில் இருப்பவரை பொதுக்குழுவைக் கூட்டித்தான் நீக்கவே முடியும்; டாக்டர் ராமதாஸ் நினைத்த நேரத்தில் டிஸ்மிஸ் செய்யவே முடியாது என்கின்றனர் அன்புமணி ஆதரவாளர்கள். மேலும், அன்புமணியை பாமக தலைவராக நியமித்த போது, சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டுதான் முடிவு அறிவிக்கப்பட்டது; அதேபோலவே தற்போதும் பாமகவின் சிறப்பு பொதுக் குழுவை கூட்டிதான் முடிவெடுக்க வேண்டுமே தவிர தன்னிச்சையான அறிவிப்பை எல்லாம் ஏற்கவே முடியாது என்கின்றனர் அன்புமணி ஆதரவாளர்கள்.

அத்துடன், பாமக தலைவர் என்ற அடிப்படையில் அன்புமணி ராமதாஸ், பொதுக் குழுவை கூட்ட வாய்ப்புள்ளது; அந்த பொதுக் குழுவில் தம்மை புதிய தலைவராக அறிவித்துக் கொண்ட டாக்டர் ராமதாஸுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

https://tamil.oneindia.com/news/tamilnadu/ramadoss-has-no-authority-to-dismiss-anbumani-as-party-leader-general-council-to-convene-011-694649.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிஸ்கி

அமித் ஷா தன் டகால்டி வேலையை காட்டி விட்டார்.

எப்படி பால் தாக்ரே குடும்பத்தை உடைச்சு சாப்பிட்டார்களோ அதேபோல் ராமதாஸ் குடும்பத்தையும் உடைக்கிறார்கள்.

இதை பார்த்து எடப்பாடி சுதாகரிக்க வேண்டும்.

தந்தை-மகன் உறவையே இப்படி உடைப்பவர்கள், அதிமுகவை எட்டாக உடைப்பார்கள்.

2026 இல் என் டி ஏ கூட்டணி ஆட்சி என அமித் ஷா சொன்னது இதைத்தான்.

சசி, செங்கோட்டையன், ஓபிஎஸ், தினகரன் எவரையும் உள்ளே எடுக்காது, விஜையுடன் 65 : 35 க்கு போவதே கட்சியையும், பதவியையும் தக்க வைக்க எடப்பாடி முன் உள்ள ஒரே தெரிவு.

விஜையும் ஓவர் கனவில் மிகக்காமல் இதற்கு உடன்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ராமதாஸ் - அன்புமணி மோதல்: கட்சிக்குள் பிளவு ஏன்? கூட்டணி கணக்குகள் காரணமா?

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியில் பிரச்னை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், திலகபாமா

பட மூலாதாரம்,@DRARAMADOSS/X

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ், சென்னை

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பா.ம.க-வின் தலைவர் பொறுப்பை தானே எடுத்துக் கொள்வதாகவும் செயல் தலைவராக அன்புமணியை நியமிப்பதாகவும் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு உள்கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது. "இந்த முடிவு தவறானது," என விமர்சித்துள்ளார், அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா.

கட்சியின் கட்டுப்பாட்டை யார் எடுத்துக் கொள்வது என்பது தொடர்பாகவே இந்த மோதல் வெடித்துள்ளதாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ராமதாஸ்

திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 10) பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "இதுவரை சட்டப்பேரவைக்கோ, நாடாளுமன்றத்துக்கோ செல்வதற்கு நான் ஆசைப்பட்டதில்லை. இனியும் செல்லப் போவதில்லை என உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறினார்.

"என் வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும் என இளைஞர்களும் கட்சி நிர்வாகிகளும் கட்டளையிட்டதாலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் வெற்றியைக் கருத்தில் கொண்டு சில செயல் திட்டங்களை வகுத்துள்ளேன்," என செய்தியாளர் சந்திப்பில் ராமதாஸ் குறிப்பிட்டார்.

அதன்படி கட்சி அமைப்பில் சில மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறிய அவர், "பா.ம.க-வை தொடங்கிய நிறுவனர் என்பதோடு இனி கட்சியின் தலைவராகவும் செயல்படுவதற்கு முடிவு செய்துள்ளேன்," எனக் கூறினார்.

இப்படியொரு முடிவை எடுப்பதற்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதையெல்லாம் கூற முடியாது. 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களை வழிநடத்துவதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று மட்டும் பதில் அளித்தார்.

2026-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் உழைக்க வேண்டும் என்பதற்காக அன்புமணி ராமதாஸை செயல் தலைவராக நியமித்துள்ளதாகவும் கட்சியின் இதர பொறுப்புகளில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியில் பிரச்னை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், திலகபாமா

பட மூலாதாரம்,THILAGABAMA MAHENDRASEKAR/FACEBOOK

படக்குறிப்பு,''இதுவரை மருத்துவர் ராமதாஸ் எடுத்த அனைத்து முடிவுகளும் சரியானது. ஆனால், இந்த முடிவு தவறு'' என திலகபாமா கருத்து

'முடிவு தவறானது' - பா.ம.க பொருளாளர் திலகபாமா

ராமதாஸின் இந்த அறிவிப்பு அக்கட்சியின் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தைலாபுரம் தோட்டத்தின் முன்பு அன்புமணியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அங்கிருந்த பா.ம.க நிர்வாகிகள் சிலர், "இது மருத்துவர் எடுத்த முடிவு. இதற்கு எதிராக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கக் கூடாது" எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

''பாட்டாளி மக்கள் கட்சியில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மருத்துவர் ராமதாஸ் எடுத்த அனைத்து முடிவுகளும் சரியானது. ஆனால், இந்த முடிவு தவறு''' என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார் பா.ம.க மாநில பொருளாளர் திலகபாமா.

''சமூகத்தின் நலன் காக்கப்பட வேண்டும் என்றால் தற்போதைய சூழலில் அன்புமணியின் தலைமையில் மட்டுமே முடியும்'' எனக் கட்சியின் தொண்டர் பதிவிட்ட கருத்தையும் தனது முகநூல் பக்கத்தில் திலகபாமா பகிர்ந்திருந்தார்.

ராமதாஸின் முடிவு தொடர்பாக அன்புமணியிடம் இருந்தும் விளக்கம் எதுவும் வெளிவரவில்லை.

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியில் பிரச்னை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், திலகபாமா

பட மூலாதாரம்,THILAGABAMA MAHENDRASEKAR/FACEBOOK

படக்குறிப்பு,முகநூலில் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்த திலகபாமா

டிசம்பரில் தொடங்கிய நேரடி மோதல்

அதே நேரம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்தே மருத்துவர் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே மோதல் உருவாகிவிட்டதை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி பா.ம.க-வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பா.ம.க-வின் இளைஞர் அணித்தலைவராக முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்படுவதாகவும் அன்புமணிக்கு உதவியாக அவர் செயல்பட உள்ளதாகவும் ராமதாஸ் அறிவித்தார்.

முகுந்தனின் நியமனத்துக்கு மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, "கட்சியில் சேர்ந்து நான்கு மாதங்களே ஆன ஒருவருக்கு இளைஞர் அணித்தலைவர் பதவியை கொடுப்பதா? கட்சியில் அனுபவம் வாய்ந்தவர்களுக்குக் கொடுங்கள்" எனக் கூறினார்.

ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகனான முகுந்தனுக்குப் பதவி கொடுப்பதைத்தான் இவ்வாறாக அன்புமணி விமர்சித்தார்.

இதனை ஏற்க மறுத்த ராமதாஸ், "கட்சியில் யாராக இருந்தாலும் நான் சொல்வதைக் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்கவில்லையென்றால் கட்சியிலேயே நீடிக்க முடியாது" என்றார்.

மேலும், இது நான் உருவாக்கிய கட்சி எனக் கூறிவிட்டு முகுந்தன் பரசுராமனை இளைஞர் அணித் தலைவராக நியமிக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்தார். இதனை ஏற்க மறுத்த அன்புமணி, "பனையூரில் அலுவலகம் ஒன்றைத் திறந்துள்ளேன். அங்கு வந்து தொண்டர்கள் என்னைச் சந்திக்கலாம்" எனக் கூறிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

இதன்பிறகு ராமதாஸ் - அன்புமணி இடையே சமரசத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் பா.ம.க கௌரவ தலைவர் ஜி.கே.மணி, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும் வழக்கறிருமான கே.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் ஈடுபட்டனர்.

மறுநாள் (டிசம்பர் 29) தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, "கட்சியின் பொதுக்குழுவில் இதுபோன்ற காரசாரமான விவாதங்கள் நடப்பது இயல்புதான்," எனக் கூறினார். பா.ம.க ஜனநாயகக் கட்சி எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் முகுந்தன் பரசுராமனின் நியமனம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது, "உள்கட்சிப் பிரச்னைகளை நாங்களே பேசித் தீர்த்துக் கொள்வோம். வேறு யாரும் பேச வேண்டியதில்லை" எனவும் பதில் அளித்தார்.

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியில் பிரச்னை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள்,

பட மூலாதாரம்,@DRARAMADOSS/X

படக்குறிப்பு,பா.ம.க-வின் இளைஞர் அணித்தலைவராக முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பின் தந்தை மகனுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியது

கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்துமா?

"கட்சியின் முக்கிய பொறுப்பில் தனது பேரன் முகுந்தன் பரசுராமனும் இருக்க வேண்டும் என ராமதாஸ் நினைக்கிறார். ஆனால், தன்னுடைய எண்ணத்தின்படி கட்சி செயல்பட வேண்டும் என அன்புமணி நினைக்கிறார். இதுவே பிரச்னைக்கு காரணமாக உள்ளது," எனக் கூறுகிறார், அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கட்சியில் வாரிசுகளை நியமிக்க மாட்டேன் எனக் கூறிய ராமதாஸ், அன்புமணியை முக்கிய பொறுப்புக்கு கொண்டு வந்தார். ராமதாஸுடன் அன்புமணி இணைந்து போவது தான் அக்கட்சிக்குப் பலனைக் கொடுக்கும். இருவரும் மோதல் போக்கைத் தொடர்ந்தால் அக்கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்தும்" எனவும் குறிப்பிட்டார்.

கூட்டணி காரணமா?

மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "ராமதாஸின் முடிவில் அரசியல் நோக்கம் உள்ளதா எனப் பார்க்க வேண்டும். பா.ஜ.க கூட்டணியின் மீது ராமதாஸுக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அ.தி.மு.க கூட்டணியுடன் மனதளவில் அவருக்கு நெருக்கம் உண்டு" எனக் கூறினார்.

"அமித் ஷாவின் தமிழ்நாடு வருகையை ஒட்டி, அ.தி.மு.க உடன் பா.ஜ.க கூட்டணி இறுதி செய்யப்படலாம் என்ற பேச்சு நிலவுகிறது. ராமதாஸின் இந்த முடிவு, தமிழ்நாடு அரசியலில் ஏதேனும் விளைவுகளை ஏற்படுத்தலாம்" எனவும் ஷ்யாம் குறிப்பிட்டார்.

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியில் பிரச்னை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள்,

பட மூலாதாரம்,DR S RAMADOSS/X

ராமதாஸின் முடிவு தொடர்பாக பா.ம.க கௌரவ தலைவர் ஜி.கே.மணியிடம் விளக்கம் கேட்கும் முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை.

பாமக சேலம் மாநகர் மாவட்ட செயலாளரும், சேலம் மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான அருளிடம் பிபிசி தமிழ் பேசியது.

" இதை ஒரு பெரிய விஷயமாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. இது ஜனநாயகப்பூர்வமான கட்சி. அதில் எல்லாம் நடக்கத் ன் செய்யும். இதுதொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் சரிசெய்யப்பட்டுவிடும்" என்று மட்டும் பதில் அளித்தார்.

பா.ம.க மாநில பொருளாளர் திலகபாமாவின் முகநூல் பதிவு குறித்துக் கேட்டபோது, "அதற்குள் போக விரும்பவில்லை" என்றார்

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cj3xxk08kk2o

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

டிஸ்கி

அமித் ஷா தன் டகால்டி வேலையை காட்டி விட்டார்.

எப்படி பால் தாக்ரே குடும்பத்தை உடைச்சு சாப்பிட்டார்களோ அதேபோல் ராமதாஸ் குடும்பத்தையும் உடைக்கிறார்கள்.

இதை பார்த்து எடப்பாடி சுதாகரிக்க வேண்டும்.

தந்தை-மகன் உறவையே இப்படி உடைப்பவர்கள், அதிமுகவை எட்டாக உடைப்பார்கள்.

2026 இல் என் டி ஏ கூட்டணி ஆட்சி என அமித் ஷா சொன்னது இதைத்தான்.

சசி, செங்கோட்டையன், ஓபிஎஸ், தினகரன் எவரையும் உள்ளே எடுக்காது, விஜையுடன் 65 : 35 க்கு போவதே கட்சியையும், பதவியையும் தக்க வைக்க எடப்பாடி முன் உள்ள ஒரே தெரிவு.

விஜையும் ஓவர் கனவில் மிகக்காமல் இதற்கு உடன்பட வேண்டும்.

நாய் கல்லக்கண்டா காலைத்தூக்குமாம்.. இதுக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை.. இது குடும்ப சண்டை.. மகளுக்கும்(பேரனுக்கு) மகனுக்கும் கட்சிய பிரிச்சுக்குடுக்கணும் என்பது ராமதாஸ் நிலைப்பாடு.. அன்புமணிக்கு அந்த கதையே தேவை இல்லை.. கட்சி என் முழுக்கன்றோலில் இருக்கணும்.. கிட்டத்தட்ட ஒருகாலத்தில் ஸ்டலினுக்கு அழகிரிக்கும் இடையில் இருந்ததுபோல.. புலநாய்வுப்புலி கோசான் நல்லவேளை றோவை இதுக்க இழுக்கல..🤣🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாய் கல்லக்கண்டா காலைத்தூக்குமாம்.. இதுக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை.. இது குடும்ப சண்டை.. மகளுக்கும்(பேரனுக்கு) மகனுக்கும் கட்சிய பிரிச்சுக்குடுக்கணும் என்பது ராமதாஸ் நிலைப்பாடு.. அன்புமணிக்கு அந்த கதையே தேவை இல்லை.. கட்சி என் முழுக்கன்றோலில் இருக்கணும்.. கிட்டத்தட்ட ஒருகாலத்தில் ஸ்டலினுக்கு அழகிரிக்கும் இடையில் இருந்ததுபோல.. புலநாய்வுப்புலி கோசான் நல்லவேளை றோவை இதுக்க இழுக்கல..🤣🤣

இராமதாஸ் முகுந்தனை உள்ளே கொண்டு வந்ததே….

அன்புமணி கூட்டணி விடயத்தில் தன்னை கேட்காமல் பாஜக பக்கம் சாய்கிறார் என்பதால்தான்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் கேட்பதை இராமதாஸ் விரும்பவில்லை. ஆனால் அன்புமணி அவர் வாயை அடைத்து விட்டார்.

அதிமுகவுடன் சேர்ந்து கேட்டகலாம் என இராமதாஸ் வலியுறுத்தியும் அன்புமணி பாஜகவோடு போய் தர்மபுரியை சொற்பவாக்கில் இழந்தார் செளமியா.

அப்போதே நான் சொன்னபடி கூட்டணி அமைத்தால் - செளமியா வென்றிருப்பார் என கூறிய இராமதாஸ் - கூட்டணி முடிவை இனி நான் மட்டுமே எடுப்பேன் என அறிவித்தார்.

இவை எல்லாவறுக்கும் அடிப்படை - அன்புமணியை பாஜக தம் கையில் எடுத்து கொண்டதே.

அன்புமணி மூலம் யானை விளாம்பழம் தின்றது போல் கட்சியை பாஜக கட்டுபடுத்த விழைவதை உணர்ந்து, தடுக்க இராமதாஸ் எடுத்த முயற்சியே விருப்பமே இல்லாத முகுந்தனை இராமதாஸ் வலுகட்டாயமாக அரசியலில் இறக்கியது.

இதுதான் அன்புமணி-இராமதாஸ் முறுகலின் பிண்ணனி.

பிகு

ஏனையவர்களை நக்கல் அடிக்க முன், யூடியூப் உருட்டல்களை மட்டும் உள்வாங்கி அதை இரை மீட்காமல் - கொஞ்சம் நடப்பதை வைத்து, நாலு களத்தில் இருப்பர்களோடு பேசினால், புத்தியை பாவித்து உய்தறிந்தால் நடப்பதை உணரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இராமதாஸ் முகுந்தனை உள்ளே கொண்டு வந்ததே….

அன்புமணி கூட்டணி விடயத்தில் தன்னை கேட்காமல் பாஜக பக்கம் சாய்கிறார் என்பதால்தான்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் கேட்பதை இராமதாஸ் விரும்பவில்லை. ஆனால் அன்புமணி அவர் வாயை அடைத்து விட்டார்.

அதிமுகவுடன் சேர்ந்து கேட்டகலாம் என இராமதாஸ் வலியுறுத்தியும் அன்புமணி பாஜகவோடு போய் தர்மபுரியை சொற்பவாக்கில் இழந்தார் செளமியா.

அப்போதே நான் சொன்னபடி கூட்டணி அமைத்தால் - செளமியா வென்றிருப்பார் என கூறிய இராமதாஸ் - கூட்டணி முடிவை இனி நான் மட்டுமே எடுப்பேன் என அறிவித்தார்.

இவை எல்லாவறுக்கும் அடிப்படை - அன்புமணியை பாஜக தம் கையில் எடுத்து கொண்டதே.

அன்புமணி மூலம் யானை விளாம்பழம் தின்றது போல் கட்சியை பாஜக கட்டுபடுத்த விழைவதை உணர்ந்து, தடுக்க இராமதாஸ் எடுத்த முயற்சியே விருப்பமே இல்லாத முகுந்தனை இராமதாஸ் வலுகட்டாயமாக அரசியலில் இறக்கியது.

இதுதான் அன்புமணி-இராமதாஸ் முறுகலின் பிண்ணனி.

பிகு

ஏனையவர்களை நக்கல் அடிக்க முன், யூடியூப் உருட்டல்களை மட்டும் உள்வாங்கி அதை இரை மீட்காமல் - கொஞ்சம் நடப்பதை வைத்து, நாலு களத்தில் இருப்பர்களோடு பேசினால், புத்தியை பாவித்து உய்தறிந்தால் நடப்பதை உணரலாம்.

முக்கி முக்கி பந்தி எழுதின அளவுக்கு அப்படி ஒண்டும் நடக்க இல்லை.. 🤣🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிகு

இப்போ கூட அன்புமணியை இராமதாஸ் தூக்கி அடிக்க காரணம் - அமித்ஷாவை சென்னையில் சந்தித்து 2026 கூட்டணி அறிவிப்பை நேரடியாக NDA யில் என அறிவிக்க அன்புமணி அவசரப்பட்டு, கிட்டதட்ட சந்திப்பது, கூட்டணி அறிவிப்பு வெளியிடுவது என்ற முடிவை எடுத்த பின்….

அன்புமணி அவசரப்படுகிறார், முதலில் அதிமுக என்ன செய்கிறது என பார்ப்போம், காலம் இருக்கிறது என முடிவு செய்த இராமதாஸ் - வேறு வழி இன்றி எடுத்த முடிவுதான் அன்புமணியை தூக்கி அடித்தல்.

இத்தனை காலம் எத்தனையோ ஆட்களை விரட்டி, கட்சியை அன்புமணி கையில் கொடுத்தார் இராமதாஸ் - ஆனால் அவரே கட்சியை எடுப்பார் கைப்புள்ளை ஆக்குவாதல் இப்போ அவரையே தூக்கி அடித்துள்ளார் இராமதாஸ்.

தமிழக அரசியலில் பாலபாடம் ஆட்சியை விட கட்சி முக்கியம்.

அப்படி இருந்தபடியால்தான் எம் ஜி ஆரிடம் தொடர் தோல்வியின் பின்னும் கருணாநிதி ஆட்சியை பிடித்தர்.

எம்ஜிஆர், ஜெ, ஸ்டாலின் அனைவரும், இதுவரைக்கும் எடப்பாடி கூட எடுக்கும் நிலைதான் இது.

4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

முக்கி முக்கி பந்தி எழுதின அளவுக்கு அப்படி ஒண்டும் நடக்க இல்லை.. 🤣🤣

உங்களுக்கு கோழி கூவும் சத்தம் கேட்கும் வரை நாள் விடியாது…🤣

இதையே யாரும் யூடியூப்பர் சொல்லும் வரை - இது நடக்காத விடயமாகவே இருக்கும்.

#யூடியூப்பில் அறிவித்தால்தான் சூரியன் உதயமானது என நம்புவோர் சங்கம்🤣

1 hour ago, ஏராளன் said:

ராமதாஸ் - அன்புமணி மோதல்: கட்சிக்குள் பிளவு ஏன்? கூட்டணி கணக்குகள் காரணமா?

கோஷானுக்கு உருவான கனவு, பிபிசி க்கும் உருவாகியுள்ளது🤣

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு சாதி வெறி கட்சி . குடும்ப அதிகார போட்டியில் பிளவுபட்டு உடைந்து போனால் தமிழ்நாட்டுக்கு ஆரோக்கியம் தானே

🙌

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2025 at 19:00, பாலபத்ர ஓணாண்டி said:

நாய் கல்லக்கண்டா காலைத்தூக்குமாம்.. இதுக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை.. இது குடும்ப சண்டை.. மகளுக்கும்(பேரனுக்கு) மகனுக்கும் கட்சிய பிரிச்சுக்குடுக்கணும் என்பது ராமதாஸ் நிலைப்பாடு.. அன்புமணிக்கு அந்த கதையே தேவை இல்லை.. கட்சி என் முழுக்கன்றோலில் இருக்கணும்.. கிட்டத்தட்ட ஒருகாலத்தில் ஸ்டலினுக்கு அழகிரிக்கும் இடையில் இருந்ததுபோல.. புலநாய்வுப்புலி கோசான் நல்லவேளை றோவை இதுக்க இழுக்கல..🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்

அன்புமணியுடன் ராமதாஸ் சமரசமா? எக்ஸ் தளத்தில் பரபரப்பு பதிவு

32L-2.jpg?type=webp&quality=80திண்டிவனம்: ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவால் அன்புமணியுடன் சமரசமாகி விட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அறிக்கை : மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு நாள் மாநாட்டை, இதுவரை நடந்தவற்றை விட 100 மடங்கு சிறப்பாக நடத்த வேண்டும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு 2025-ல் நடைபெறும் சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கான பணிகளை மேற்கொள்ளும் மாநாட்டுக்குழு தலைவராக அன்புமணியை நியமித்திருக்கிறேன். இஸ்லாமியர்களுக்கு ஹஜ் பயணமும், கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம் பயணமும், இறை நம்பிக்கைக் கொண்ட இந்துக்களுக்கு காசி யாத்திரையும் புனிதமானவை.

பாட்டாளிகளைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ஒருநாள் சித்திரை முழுநிலவு நாளில் மாமல்லபுரம் கடற்கரை மணற்பரப்பில் கூடுவது தான் புனித யாத்திரை. இந்த ஒரு பயணம் கொடுக்கும் உற்சாகம் பாட்டாளிகளுக்கு அடுத்த ஓராண்டுக்கு சுறுசுறுப்பாக பணியாற்ற வகை செய்யும். இதுவரை நடத்தப்பட்ட 20 மாநாடுகள் எவ்வாறு சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் நடத்தப்பட்டனவோ, அதை விட 100 மடங்கு சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் இந்த ஆண்டு மாநாடு நடத்தப்பட வேண்டும் என்பது தான் எனது கனவு ஆகும்.

அந்தக் கனவை நிறைவேற்றும் வகையில் அனைத்து கிராமங்களில் இருந்தும் அணி அணியாய் வாகனங்கள் புறப்பட வேண்டும். அனைத்தையும் விட மிகவும் முக்கியம் மாநாட்டுக்காக நாம் மேற்கொள்ளும் பயணம் அமைதியாகவும், ஆர்ப்பாட்டம் இன்றியும் அமைய வேண்டும். பயணப் பாதையில் எந்த ஒரு சலசலப்புக்கும் இடம் கொடுத்து விடாமல் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். மாமல்லபுரம் மாநாட்டுத் திடலில் பாட்டாளிகளின் வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் யார் என்று ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது. தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார். அதற்கு பதிலடியாக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நானே தலைவராக தொடர்வேன் என்று அன்புமணி தெரிவித்தார். தந்தைக்கும், மகனுக்கும் இடையே மோதலால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தைலாபுரம், பனையூர் என இரண்டு பேரின் வீட்டிற்கும் சென்று சமரசம் செய்து வந்தனர். இதுகுறித்து பேட்டியளித்த பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பாமகவில் சலசலப்பு சரியாகிவிட்டது. விரைவில் ராமதாஸ், அன்புமணி ஒன்றாக பேசுவார்கள்’ என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, சித்திரை முழுநிலவு நாள் மாநாடு ஏற்பாடுகளை அன்புமணி பார்வையிட்டு ஆய்வு செய்து வந்தார். இந்நிலையில், மாநாட்டு குழுத்தலைவராக அன்புமணியை நியமித்து இருக்கிறேன். பாட்டாளிகள் ஆவலுடன் வர வேண்டும் என்று ராமதாஸ் அழைப்பு விடுத்து உள்ளார். இதனால் அன்புமணியுடன் ராமதாஸ் சமரசமாகி விட்டாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. தந்தைக்கும், மகனுக்கும் இடையே மோதலால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தைலாபுரம், பனையூர் என இரண்டு பேரின் வீட்டிற்கும் சென்று சமரசம் செய்து வந்தனர்.

https://www.dinakaran.com/anbumani_ramadoss_compromise/?utm_source=izooto&utm_medium=on_site_interactions&utm_campaign=Exit_Intent_Recommendations

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.