Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

490346494_3976140269330600_8554738173188

எண்பது வயதைக் கடந்த முதியவர் ஒருவர் தம் மனைவியைத் தாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் கையைப்பிடித்து அழைத்துச் சென்று கொண்டிருந்தார். ஆனால், அவரோடு சென்ற அவரின் மனைவியோ அடிக்கடி அங்குமிங்கும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நடக்காமல் நின்றுவிடுவதையும், அந்த முதியவர் அப்பெண்மணியின் கவனத்தைத் திருப்பித் தம்மோடு விடாமல் அழைத்துச் செல்வதையும் தொடர்ந்து கவனித்துவந்தார் அப்பகுதியைச் சேர்ந்த மனிதர் ஒருவர்.

அவர் ஒருநாள் அந்த முதியவரைப் பார்த்து, “பெரியவரே! உங்கள் மனைவி ஏன் உங்களோடு நடக்காமல் இடையிடையே நின்றுவிடுகிறார்? ஏன் அங்குமிங்கும் மிரண்டு பார்க்கிறார்?” என்று வினா எழுப்பினார். அதற்கு அந்த முதியவர், “தம்பி! என் மனைவி மறதிநோயால் (Alzheimer's disease) பாதிக்கப்பட்டிருக்கிறாள்; அதனால்தான் அவள் இப்படி நடந்துகொள்கிறாள்” என்று பதில் சொன்னார்.

அதைக்கேட்ட அந்த மனிதர், ”மறதிநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் உங்கள் மனைவிக்கு உங்களையும் அடையாளம் தெரியாதுதானே?” என்று கிண்டலாகக் கேட்கவே, அதனை ஆமோதித்த அந்த முதியவர், ”உண்மைதான்! என் மனைவி நான் அவள் கணவன் என்பதை மறந்து(ம்) பல ஆண்டுகள் ஆகிவிட்டன” என்று சொன்னார் சற்று வருத்தத்தோடு.

வினாத் தொடுத்தவர் அத்தோடு நிறுத்தவில்லை. ”அப்படியானால் நீங்கள் உங்கள் மனைவியை நடுவழியில் விட்டுச்சென்றாலும் அவர் அதைப்பற்றிக் கவலைப்படப் போவதில்லை; பின்பு ஏன் நீங்கள் செல்லுமிடமெல்லாம் அவரை விடாது அழைத்துச் செல்கின்றீர்கள்?” என்று நக்கலாகக் கேட்க, எரிச்சலூட்டும் அவ்வினாவைக்கூடச் சிறுபுன்னகையோடு எதிர்கொண்ட அந்த முதியவர், ”தம்பி! என் மனைவிக்கு வேண்டுமானால் என்னை அடையாளம் தெரியாமல் போயிருக்கலாம்; ஆனால், அவள்தான் என் மனைவி என்பதும், என் வாழ்க்கைக்கு இனிமை சேர்த்தவள் அவளே என்பதும் எனக்குத் தெரியுமே” என்று பதிலளித்தார். அதைக்கேட்டதும் வினாத்தொடுத்தவரின் முகம் தொங்கிப்போனது; தம்முடைய பண்பாடற்ற வினாவுக்காக முதியவரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு அங்கிருந்து நடையைக் கட்டினார் அந்த மனிதர்.

நண்பர்களே, உறவுகள் நமக்குப் பயன்படும் நிலையில் இருக்கும்போது மட்டும் அவர்களிடம் அன்புகாட்டுவதும் இல்லையெனில் தூக்கியெறிந்துவிட்டுச் செல்வதும் மனிதத்தன்மையற்ற செயல்கள். பின்னாளில் அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களிடம் அன்பு காட்டுவதும், கைவிடாது அரவணைப்பதுமே உறவுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை; அதனைத் தம் செயலால் நிரூபித்திருக்கும் அந்த முதியவரைப் போற்றுவோம்!🙏

[About That Street (ATS) எனும் முகநூல் பக்கத்தில் நான் படித்த ஆங்கிலக் கதையின் தமிழாக்கம் இது.]

Megala Ramamourty 

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான கருத்தைச் சொல்லும் அருமையான கதை . ......... ! 😁

  • கருத்துக்கள உறவுகள்

இதே மாதிரியான ஒரு கதை அண்மையில் கேள்விப்பட்டேன். ஒரு முதியவர் தனது குடும்ப வைத்தியரிடம் தனது நோயின் காரணமாக சென்றாராம். வைத்தியர் அவரை பரிசோதித்து ஆலோசனை கூறுவதற்குள், முடிந்ததா வைத்தியரே, இப்போது நான் போகலாமா, போகலாமா? என்று அவசரமாக கேட்டுக்கொண்டே இருந்தாராம். பொறுமையிழந்த வைத்தியர், இப்போ எங்கே போவதற்கு இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்கள் என பொறுமையிழந்து கேட்டாராம். அதற்கு அந்த மனிதர், தனது மனைவியை பார்க்க போவதாக கூறினாராம். ஏன் அவருக்கு ஏதாவது உதவி தேவையா? என்று கேட்டாராம் வைத்தியர். இல்லை, அவர் முதியோர் இல்லத்தில் மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றாராம் அந்த மனிதர். ஆமா உங்கள் மனைவிக்கு மறதி நோய் என்றால், உங்களையும் அவர் அடையாளம் காணாமாட்டாரே, பின் எதற்கு இவ்வளவு அவசரப்படுகிறீர்கள் என்று வைத்தியர் கேட்டாராம். ஆம், அவருக்கு என்னை அடையாளம் தெரியாது, ஆனால் எனக்கு அவள் தான் எனது மனைவி என்று தெரிகிறதே. எனக்கு நினைவுள்ளவரை, அவருக்கு உயிருள்ளவரை அவள்தான் என் மனைவி என்று சொல்லிவிட்டு அவசரமாக வெளியேறிய அந்த மனிதரை, வைத்தியர் ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தாராம். எனக்குத்தெரிந்து, நம்மூரில் பலர் வயதான தம்பதியினர். மனைவியர் நடமாட முடியாத நிலை, கணவர்மாராலும் முடியாது, இருந்தாலும் தம்மை கவனியாது தமது மனைவியரை அடுத்தவரின் உதவியோடு கருத்தாக கவனித்து வந்தனர், ஆனால் அவர்கள் மனைவியருக்கு முன்பே இறந்துவிட்டனர். மனைவியரின் நிலையை நினைத்துப்பாருங்கள்! கணவர் இறந்தபின் அதிக காலம் அவர்களால் வாழ முடியவில்லை, ஆறு மாதம் ஒரு வருடத்திற்குள் அவர்களும் இறந்துவிட்டனர். மனமொத்த தம்பதியினர் என்று பலரும் புகழ்ந்து கொண்டனர். காரணம் அதுவல்ல என நான் நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதேபோல ஒருசிறு கதை .. ஒரு வயதான மூதாட்டியை ரிச்சர்ட் என்பவர் அன்னையர் தினத்தன்று அவரது தங்குமிடத்துக்கு சென்று, அழகான ஆடை அணிவித்து நம் வெளியே சென்று வரலாம் என்றான். நீண்டகாலமாக மகள் வராது இருந்ததால் மூதாட்டியும் ஆவலுடன் விரும்பி அவனுடன் வெளியே ஒரு காலையுணவு உண்ணும் கடைக்கு கூட்டிச் சென்றான். காபி sandwich அவருக்கு விரும்பிய அனைத்தும் ஓடர் செய்து உண்டனர் .

இடையிடையே சிறிது மெளனமா இருப்பர் . எனக்கு இவை விருப்பமென்பது உமக்கு எப்படி தெரியும் ? என்றாள் திரும்ப திரும்ப அவன் பெயரையும் கேட்டுக் கொண்டாள். இவனுக்கு உள்ளூரக் கவலை, பெற்ற கடைசி மகனை மறந்து விடடார் என்று இவன் பெயரைச் சொன்னதும் ஓ எனக்கும் கடைசி மகன் விடுதியில் ஆறாம் வகுப்பு படிக்கின்றான். விடுமுறைக்குபண்ணைவீட்டுக்கு வருவான். நீர் நல்ல ஆடை அணிந்து கம்பீரமாய் இருக்கிறீர் .மீண்டும் .....உமது பெயர் என்ன ? அடுத்த தடவை வரும்போது எமக்கு ஊரின் எல்லையில் அழகான தோடடக் காணி, விடுமுறைக்கு ஏற்ற பங்களா வீடு அங்கே சென்று சில நாட்கள் களிக்கலாம்.நான் அமைத்து வைத்த றோசாக்கன்றுகளின் பூக்களையும் ரசிக்கலாம். அருகே உள்ள சிறு நீரோடையில் வாத்துக்கள் நீந்துவதை பார்க்கலாம். மிக்க நன்றி

அடுத்த தடவையும் வருவீர் எனக் காத்திருப்பேன் என்றாள்.மீண்டும்

Handsome Guy What is your nice name ? (அவரது கணவன்

இறப்பின் பின் வீடு வளவு விற்று பங்கு போடப்பட்ட்து ஞாபகம் இல்லை , மூன்று மாதங்களின் பின் தலைசுற்றி விழுந்த பின், ஒரு வருடம் வைத்திய சிகிச்சையில் இருந்தபின் பலத்த அடிகாரணமாக மறதி நோய்க்கு ஆளாகி விடடார் முதியோர் இல்லத்தில் வாழ்ந்தார்..)

இந்த முதிர் குழந்தைகளுக்காக வாவது அன்னையர் தினம் தந்தையர் தினம் வரவேணும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.