Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கீரிமலையில் ஜனாதிபதி மாளிகையில் ஆய்வு – எதிர்கால பயன்பாடு குறித்து கலந்தாய்வு!

Published By: VISHNU

25 APR, 2025 | 09:02 PM

image

கீரிமலையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை வெள்ளிக்கிழமை (25) பார்வையிடும் விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த கட்டிடத்தின் எதிர்கால பயன்பாடு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையாக விரிவான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

FB_IMG_1745587417620.jpg

இந்த விஜயத்தில், நகர அபிவிருத்தி, கட்டுமான மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு. அனுர கருணாதிலக, கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் திரு. ராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாணம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் உயர் செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

FB_IMG_1745587411931.jpg

இக்கட்டிடத்தை சமூக மற்றும் அபிவிருத்தி நோக்கில் மக்களுக்கு பயனுள்ள விதத்தில் பயன்படுத்துவது குறித்து பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டு, விரைவில் திட்டமிடல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

FB_IMG_1745587395697.jpg

FB_IMG_1745587407554.jpg

FB_IMG_1745587420223.jpg

FB_IMG_1745587430870.jpg

FB_IMG_1745587443459.jpg

FB_IMG_1745587446285.jpg

https://www.virakesari.lk/article/212944

Edited by ஏராளன்

  • ஏராளன் changed the title to கீரிமலை ஜனாதிபதி மாளிகை - எதிர்கால பயன்பாடு குறித்து கலந்தாய்வு!
  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியே கொஞ்சக்காலம் விடுங்கோ, கட்டிடம் தன்பாட்டிலே விழுந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, RishiK said:

இப்பிடியே கொஞ்சக்காலம் விடுங்கோ, கட்டிடம் தன்பாட்டிலே விழுந்துவிடும்.

தேவை நிறையக் கிடக்கு...தயிட்டி விகாரைக்கு வாற சிங்களவருக்கு மடமாக மாற்றிவிட்டால் புண்ணியமாகப் போகும்..

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, alvayan said:

தேவை நிறையக் கிடக்கு...தயிட்டி விகாரைக்கு வாற சிங்களவருக்கு மடமாக மாற்றிவிட்டால் புண்ணியமாகப் போகும்..

தமன்னா யாழில் வந்து ஆடினது இந்த கட்டிடத்தை தொழில்நுட்ப கூடமாக மாற்றுவதற்கு தானே ...பிறகு என்ன் புதுசா இவர்கள் ....ரணில் ஏதோ செய்தவ்ர் அல்லோ

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

தமன்னா யாழில் வந்து ஆடினது இந்த கட்டிடத்தை தொழில்நுட்ப கூடமாக மாற்றுவதற்கு தானே

அது வேறு ஒரு தனியார் பல்கலை கழக கட்டுமானத்துக்கு ஆடின குத்தாட்டம்...

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Sasi_varnam said:

அது வேறு ஒரு தனியார் பல்கலை கழக கட்டுமானத்துக்கு ஆடின குத்தாட்டம்...

அந்த நபர் தான் இதை 99வருட‌ குத்தகைக்கு எடுத்தவர்...ரணிலுடன் ஒப்பந்தம் செய்தவராம்...கந்தர்மடத்தில் ஒர் பெரிய கட்டிடம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தா, கோத்தா போன்ற இடி அமீன்களின் உல்லாச விடுதிகள், அதற்கு இணையாக விகாரைகள். இதுதான் போருக்குப் பின்னான சாதனையென தெற்கு மக்களுக்கு அறிவியுங்கள். பொருளாதார வீழ்ச்சியின் காரணம் எதுவென தெரிவியுங்கள். இனிமேலும் இவர்களோ, இவர் சந்ததியினரோ ஆட்சிபீடம் ஏறுவதை கனவிலும் காணாதபடி செய்யுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, satan said:

மஹிந்தா, கோத்தா போன்ற இடி அமீன்களின் உல்லாச விடுதிகள், அதற்கு இணையாக விகாரைகள். இதுதான் போருக்குப் பின்னான சாதனையென தெற்கு மக்களுக்கு அறிவியுங்கள். பொருளாதார வீழ்ச்சியின் காரணம் எதுவென தெரிவியுங்கள். இனிமேலும் இவர்களோ, இவர் சந்ததியினரோ ஆட்சிபீடம் ஏறுவதை கனவிலும் காணாதபடி செய்யுங்கள். 

தெற்கு மக்களுக்கு கண் முன்னே சாட்சியாக மத்தள விமான நிலையம் இருக்கிறது ....

வடமாகாண ஜனாதிபதி மாளிகை திறக்கும் பொழுது மிகவும் அழகாக இருந்தது இன்று பராமரிப்பற்ற காரணத்தால் எப்படீருக்கின்றது?

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, putthan said:

தமன்னா யாழில் வந்து ஆடினது இந்த கட்டிடத்தை தொழில்நுட்ப கூடமாக மாற்றுவதற்கு தானே ...பிறகு என்ன் புதுசா இவர்கள் ....ரணில் ஏதோ செய்தவ்ர் அல்லோ

நீங்கள் சொல்வது சரி:

https://rtisrilanka.lk/en/keerimalai-presidential-palace-given-on-unrestricted-lease-to-a-private-university/

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணத்தில் ஜனாதிபதிக்கு மாளிகை அமைத்த மஹிந்தா, இப்போ உத்தியோகபூர்வ மாளிகையை விட்டு வெளியேற மறுக்கிறார். போற போற இடங்களில் சின்ன வீடு வைப்பதுபோல். வீடு மாறுவதற்கு பணம் இல்லையாம். தமிழ் மக்களை சொந்த இல்லங்களில் இருந்து விரட்டி ரசித்தவருக்கு இந்த நிலை. இலங்கை அரசியலை சொந்த குடும்ப அரசியலாக்க கனவு கண்டவருக்கு விழுந்த அடிமேல் அடி. தங்கள் அரசியலை உறுதிப்படுத்துவதற்கு தமிழ் மக்களை கொன்றார்கள், இப்போ தம் ஊழல் கொலைகளை மறைப்பதற்கு தங்கள் விசுவாசிகளையே கொலை செய்கின்றனர்.

4 hours ago, putthan said:

வடமாகாண ஜனாதிபதி மாளிகை திறக்கும் பொழுது மிகவும் அழகாக இருந்தது இன்று பராமரிப்பற்ற காரணத்தால் எப்படீருக்கின்றது?

மக்கள் பணத்தில் ஆடிய ஆட்டம், இந்த நிலைக்குத் தம்மை தள்ளுமென எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பௌத்த மதமே கர்மா பற்றி அதிகம் சொல்கிறது. இவர்கள் தமது சொந்த லாபத்திற்காக மதத்தை மாறினார்கள், உபயோகித்தார்கள். இப்போ அது தன் வேலையை தொடங்கியுள்ளது. எத்தனை பேரை கொன்றாலும் இவர்கள் தப்ப முடியாது. இன்னும் குற்றங்கள், தண்டனைகள் இவர்கள் மேல் பெருகும். 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.