Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாவப்பட்ட 🇪🇺🇨🇦 புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறை..

இலங்கையிலிருந்து 1990களிலிருந்து தான் தமிழர்கள் அதிகளவாக புலம்பெயர ஆரம்பித்தார்கள் ஐரோப்பா,கனடாவை நோக்கி..

நான் ஐரோப்பா வந்தது 2002ல், வெற்றிகரமாக 23 ஆண்டுகள் ஐரோப்பாவில் பல நாடுகளில் காலம் தள்ளியாச்சு..
சரி நான் சொல்ல வந்த விசயம்..
புலம் பெயர்ந்து வந்த முதலாவது தலைமுறையில் 50-60% வீதமானவர்கள் இப்போது ஓய்வூதியம் பெறும் வயதில் இருக்கிறார்கள்..

இவர்களைப் பற்றிய ஒரு சில தகவல்கள்..

🔗புதிதாக வந்த நாட்டில் மொழி தெரியாமல், கல்வி தகமை அதிகம் தேவையில்லாத தொழில்கள் (துப்பரவு,உணவகம்) மூலம் தங்கள் வாழ்க்கையை தொடங்கியவர்கள்.
முதலாவது தலமுறையில் இங்கு முதல் வந்தவர்கள் 90% ஆண்கள் தான்.
(ஒவ்வொரு நாடுகளிலும் குறிப்பிட்ட சிலரே மொழி படித்து, மேற்கொண்டு படித்து வேறு வேலைகளுக்குள் சென்றவர்கள்)
மேலும் சிலர் ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு சொந்த தொழில் தொடங்கி அதில் ஈடுபட்டார்கள்.
ஆனால் இன்றும் பலர் ஆரம்பத்தில் என்ன வேலையில் இருந்தார்களோ இன்று வரை அதே தொழிலில் தான் இருக்கிறார்கள்.

🔗பல பேர் வந்து அகதி அந்தஸ்து கிடைத்தபின் மனைவிமாரை இலங்கையிலிருந்து கூப்பிட்டார்கள்.
🔗பல பேர் சகோதரர்களை, ஒரு சிலர் மனைவிமாரை பல லட்சங்கள் கட்டி இலங்கையிலிருந்து கூப்பிட்டார்கள்.
🔗பின் மனைவிமாரின் சகோதரங்களையும் கூப்பிட உதவி செய்தார்கள்.
🔗வெளிநாடு வராத நாட்டிலிருக்கும் பெற்றோர்,சகோதரங்கள், சகோதரங்களின் பிள்ளைகள் என எல்லோருக்கும் உதவி செய்தார்கள்.

இப்படி தனது இளமைக்காலம் முழுவதும் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்தவர்கள் தான் இந்த பெரும்பாலான முதலாம் தலைமுறையினர்..
இவர்களில் பெரும்பாலானோரை இன்றுவரை எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அவர்களின் உறவுகள் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

சரி இலங்கையிலிருக்கும் உறவுகள் தான் இவர்களை பயன் படுத்துகிறார்கள் என்றால், இங்கு பிறந்து, நன்றாக கல்வி கற்று, பெற்றோரை விட நல்ல வேலையில், நல்ல சம்பளத்தில் இருக்கும் சொந்த பிள்ளைகளும் இதை தான் செய்கிறார்கள்..

🔗 இங்கு பிறந்தவர்கள் தங்களது முதல் வீடு வாங்குவதற்க்கு வங்கிக்கு கட்ட வேண்டிய 10-15% வீத முன் பணத்தை பெற்றோரிடம் தான் எதிர் பார்க்கிறார்கள்.(பெற்றோர் எந்த உதவியும் இல்லாமல் தங்கள் சொந்த முயற்சியில் தான் வீடு வாங்கியிருப்பார்கள்)
🔗தங்களின் ஆடம்பர கல்யாணத்திற்க்கும் பெற்றோர்களை தான் எதிர்பார்க்கிறார்கள்..
🔗அவர்களை வளர்துவிட்டது காணது என்று அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளையும் இவர்கள் தான் கவனித்துக்கொள்கிறார்கள்..
இப்படி சொல்வதற்க்கு ஏராளம் இருக்கின்றது..
ஒரு சில பிள்ளைகள் இதற்கு விதிவிலக்காகவும் இருக்கிறார்கள்..

இப்ப சொல்லுங்கள் இந்த முதலாம் தலைமுறையினர் பாவப்பட்டவர்கள் தானே??😔

https://www.facebook.com/share/p/18ohX1u8m1/?mibextid=wwXIfr

  • கருத்துக்கள உறவுகள்

இளம் தலைமுறையினர் பற்றிய தகவல்கள் தவறு.

ஆறுதலாக எழுதுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

இளம் தலைமுறையினர் பற்றிய தகவல்கள் தவறு.

ஆறுதலாக எழுதுகிறேன்

பாவம் ஆரோ ஒருத்தர் தன்ர சுய அனுபவம் = சமூகத்தின் அனுபவம் என நினைத்து எழுத அதை ஜி யும் பகிர்ந்துள்ளார் 🤣.

நானறிய யூகேயில் 90-2000 இடையே வந்து அதே வேலையில் எவருமே இல்லை.

படித்தவர்கள் அந்த வழியிலும், படியாதவர்கள் முதலாளிகளாயும், குறைந்த பட்சம் சுய சம்பாத்திய தரும் ஊபர் ஓட்டிகளாயாவது ஆகி விட்டார்கள்.

அதுவும் வீடு - பலர் இருந்த நல்ல கவுன்சில் வீட்டையே அதீத விலை கழிவுடன் வாங்கி விட்டார்கள்.

இலண்டனில் இப்படி 90 களில் வந்து, இப்போ சராசரி தொழிலில் இருக்கும் பலருக்கு இருக்கும் வீடுகளை, இப்போ படித்து வெளி வரும் ஒரு மருத்துவரால் வாங்க முடியாது. சந்தை விலை அப்படி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2025 at 00:20, goshan_che said:

பாவம் ஆரோ ஒருத்தர் தன்ர சுய அனுபவம் = சமூகத்தின் அனுபவம் என நினைத்து எழுத அதை ஜி யும் பகிர்ந்துள்ளார் 🤣.

தலைப்பில் ஐரோப்பிய யூனியன், கனடா கொடிகள் இருக்கின்றன. பிரித்தானியாவின் கொடி இல்லை! பிரித்தானியாவில் முன்னேற நிறைய வாய்ப்புக்கள் உள்ளன என்பதால் பலர் தும்படியில் இருந்து வெளியேறிவிட்டனர். ஆனால் இதே நிலை எல்லா நாடுகளிலும் இங்குள்ள வீதத்தில் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2025 at 01:20, goshan_che said:

பாவம் ஆரோ ஒருத்தர் தன்ர சுய அனுபவம் = சமூகத்தின் அனுபவம் என நினைத்து எழுத அதை ஜி யும் பகிர்ந்துள்ளார் 🤣.

"என்ன சார் இப்படி சொல்லிப் போட்டீங்க?"

முகநூலில் அவர் குறிப்பிட்டிருப்பது தொன்னூறுகளில் நடந்த இடம் பெயர்வுகளைப் பற்றியதாக இருந்தது. ஆனால் அதற்குமுன்பே, எண்பதுகளில் பெரிய அளவில் இடம் பெயர்வுகள் நடந்திருந்தன. பல சிரமங்களின் மத்தியில் தான் அந்த வாழ்க்கை இருந்தது.

1983, 1984 காலப்பகுதியில் பலருக்கும் யேர்மனி ஒரு இடைநிலையாக இருந்தது. இங்கிருந்து தான் பலர் பிற நாடுகளுக்குப் போனார்கள்.

1985-இல் இங்கிலாந்து ஈழத் தமிழர்களுக்காக கதவைத் திறந்தபோது, பலர் எளிதாக அங்கு சென்றுவிட்டார்கள். ஆனால் இது தொடர்ந்தால் கட்டுக்குள் இருக்காது, முழுத் தமிழர்களும் வந்துவிடுவார்கள் என்ற பயத்தில், அந்தத் திறந்த கதவை இங்கிலாந்து  மெதுவாக மூடிக் கொண்டது.

மற்ற நாடுகளைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் யேர்மனியில் அந்த நேரத்திலிருந்த வாழ்க்கை எளிதானதல்ல. சிலரால் ஒரு மாதம் கூடத் தாங்க முடியாமல் திரும்பிப் போய்விட்டார்கள்.

"நான் அவனைப்போல திரும்பப்போக ஏலாது. காணி வித்து அம்மா அனுப்பியிருக்கிறா? நகை வித்து அனுப்பினவையள்…" என்று பலர் புலம்பிக்கொண்டிருந்ததைக் கண்டிருக்கிறேன்.

யேர்மனியில் அகதிகளை ஏற்றுக் கொள்வதில் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி கொள்கைகளைக் கொண்டிருந்தன. நான் இருந்த Baden-Württemberg மாநிலத்தில், அகதிக்கான விசாரணையை நேரத்தில் நடத்தாமல் இழுத்தடித்தார்கள். விசாரணை நடந்த பிறகும் முடிவுகள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.

அதனால், சுமார் இரண்டு வருடங்கள் அகதிகள் முகாம்களிலேயே நான் இருந்தேன். சாப்பாடு, உடை ஆகியவையுடன், மாதச் செலவுக்கு கையில் 60 மார்க்குகள் தந்தார்கள்.

என்னுடன் பழகிய சிலர் கனடா, பரீஸ், கொலண்ட், டென்மார்க், லண்டன் போன்ற நாடுகளுக்குப் போய்விட்டார்கள். அவர்களில் சிலர் யேர்மனியின் வடமாநிலங்களில் அகதிகளைக் ஏற்றுக் கொண்டு வேலை செய்ய அனுமதிக்கிறார்கள் என்ற செய்தியை நம்பி அங்கே போய் புதிய விண்ணப்பம் செய்தார்கள். ஆனால் கைரேகையில் மாட்டிக்கொண்டு, மீண்டும் முகாமுக்குத் திரும்பி வந்தார்கள்.

ஒருவாறு, 1986 இலையுதிர் காலத்தில் வசந்தம் வீசத் தொடங்கியது. அகதிகளுக்கு வேலை செய்ய அனுமதி அப்போது கிடைத்தது. வேலை கிடைத்தவர்கள் முகாமைவிட்டு தனியாக வீடு எடுத்துக்கொண்டு வசிக்கலாம் என்ற ஒளி மின்னத் தொடங்கியது.

ஆனால், ஒருவர் அகதிக்கான உரிமை பெறும்வரைக்கும், அவர் வசிக்கும் நகரத்தைவிட்டு வெளியே செல்லக்கூடாது என்ற அறிவுறுத்தலும் அப்போது இருந்தது. இன்னும் பல சிரமங்களும் அதனோடு சேர்ந்த நல்ல அனுபவங்களும் கிடைத்திருக்கின்றன. இன்றுவரை அவை நினைவில் இருக்கின்றன.

கோசான் சார், இப்போ சொல்லுங்கள். நாங்கள் அனுபவித்த சிரமங்கள் கூடுதலா இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

கோசான் சார், இப்போ சொல்லுங்கள். நாங்கள் அனுபவித்த சிரமங்கள் கூடுதலா இல்லையா?

ஐயா,

இதைவிட மொழி விளங்காது செல்லபிராணிகளின் உணவை வாங்கி சமைத்து சாப்பிட்டு கஸ்டபட்ட ஜேர்மனி கதைகளும் தெரியும்.

கஸ்டபடவில்லை என நான் கூறவில்லை. ஆனால் இப்போ அவர்கள் அதே நிலையில் இல்லைதானே?

16 hours ago, கிருபன் said:

பிரித்தானியாவில் முன்னேற நிறைய வாய்ப்புக்கள்

ஏன் மற்றநாடுகளில் கள்ள மட்டை போடுறது கஸ்டமோ😂.

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே சொந்த பந்தங்ளிடம் கையேந்தி வாழும் பழக்கம் உள்ளவர்கள் தென்னிந்திர்களும் எரித்திரிய எதியோப்பிய மக்களும் தான் .

இதன் விளைவு - உடனடிப் பயன் கிடைகின்றது ஆனால் நீண்ட காலநோக்கில் சமூகத்துக்கான தீமை அதிகம்.

இது புத்தாக்கங்களை நீர்த்துப்போக செய்கிறது. தங்கி வாழ்வதை ஊக்கிவித்து சமுகம் தேங்கிப் போக வழி செய்கிறது.

On 4/5/2025 at 17:20, goshan_che said:

பாவம் ஆரோ ஒருத்தர் தன்ர சுய அனுபவம் = சமூகத்தின் அனுபவம் என நினைத்து எழுத அதை ஜி யும் பகிர்ந்துள்ளார் 🤣.

நானறிய யூகேயில் 90-2000 இடையே வந்து அதே வேலையில் எவருமே இல்லை.

படித்தவர்கள் அந்த வழியிலும், படியாதவர்கள் முதலாளிகளாயும், குறைந்த பட்சம் சுய சம்பாத்திய தரும் ஊபர் ஓட்டிகளாயாவது ஆகி விட்டார்கள்.

அதுவும் வீடு - பலர் இருந்த நல்ல கவுன்சில் வீட்டையே அதீத விலை கழிவுடன் வாங்கி விட்டார்கள்.

இலண்டனில் இப்படி 90 களில் வந்து, இப்போ சராசரி தொழிலில் இருக்கும் பலருக்கு இருக்கும் வீடுகளை, இப்போ படித்து வெளி வரும் ஒரு மருத்துவரால் வாங்க முடியாது. சந்தை விலை அப்படி

உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் ஓய்வு பெற்ற பின் மனுஷன் மாதிரி வாழ இன்றைய காலத்தில் கணவனுக்கும் மனைவுக்கும் சேர்த்து மாதம் $4000 வேண்டும். ஓய்வு பெற முன் வீட்டுக்கு முழுப் பணமும் செலுத்தி முடித்து இருக்க வேண்டும். ஓய்வூதியம் தலா ஒருவருக்கு $2000 வர வேண்டும் என்றால் ஓரளவுக்கு நல்ல வேலையில் இருந்து இருக்க வேண்டும்.

இது பலருக்கு இங்கே இல்லை. இதில் பிள்ளைகளும் இவர்களை இன்னும் நம்பி வாழ்ந்தால் என்னாவது?

Edited by பகிடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, goshan_che said:

ஐயா,

இதைவிட மொழி விளங்காது செல்லபிராணிகளின் உணவை வாங்கி சமைத்து சாப்பிட்டு கஸ்டபட்ட ஜேர்மனி கதைகளும் தெரியும்.

உவர் நாய் பூனைகளுக்கெண்டு விக்கிற நெத்தலி கருவாட்டை கத்தரிக்காயோட சேர்த்து சமைச்ச கதைய சொல்ல வாறார்....... உந்த கதைய வளர விடக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

கஸ்டபடவில்லை என நான் கூறவில்லை. ஆனால் இப்போ அவர்கள் அதே நிலையில் இல்லைதானே?

கஸ்டம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது.

அந்த நாட்களில் புலம்பெயர்வு என்பது போரின் பின்னணியில்தான் இருந்தது. இன்று போல இலவச தொலைத்தொடர்பு வசதிகள், சமூக ஊடகங்கள் எதுவும் இல்லை. ஊரில் ஏதாவது நிகழ்ந்தால், வேலை முடிந்தவுடன் பதற்றத்தோடன் ஓடி வந்து தொலைபேசியில் ஊருக்குப் பேசினாலே, அந்த மாத சம்பளத்தில் பாதி போய்விடும். அவசரத் தேவை என்று அவர்கள் கேட்டு பணம் அனுப்பினால், “எங்கடை வீட்டுக்கு அவசரத் தேவை ஒன்றும் கிடையாதுதானேஎன்ற முணுமுணுப்பு இங்கே வந்துவிடும்.

முதல் புலம் பெயர்ந்தவர்கள், எப்போதும் நாட்டில் உறவுகளுடன் ஒட்டியே இருந்தார்கள். ஊரில் இருந்த உறவுகளின் வாழ்வாதாரத்தை இவர்களே பார்த்துக் கொண்டார்கள். இங்கே பிள்ளைகள், குடும்பம், அங்கே உறவுகள் எல்லாவற்றுக்குமாக முழு நேரம், பகுதி நேரம் என வேலைகள் செய்தார்கள். ஓய்வில்லை, பொழுது போக்குகள், விளையாட்டுக்கள் எதுவுமேயில்லை. வாழும் நாட்டவர்களோடு பழக முடியவில்லை. வாழும் நாட்டின் பழக்க வழக்கங்களுடன் ஒன்றிப் போக முடியவில்லை. தன் வரம்புக்கு மீறிய சுமைகள். அதைச் சுமந்து நடந்த கால்கள், இன்று தள்ளாட வைக்கிறது. அநேகருக்கு முழங்கால் முக்கிய பிரச்சினையாகிப் போனது. இலங்கையரின் பாரம்பரிய நீரழிவு நோயும் சேர்ந்து கொண்டிருக்கிறது. உடல் உழைப்பும், மன அழுத்தமும் சேர்ந்து இன்று அவர்களுடைய உடல்நலத்தை பாதித்திருக்கிறது. மூட்டுவலி, நீரழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவை  (முதல் புலம் பெயர்ந்தவர்கள்) பலருக்கு  இன்று சாதாரண நிலையாகவே போய்விட்டன.

மகனோ? மகளோ? ‘இனி உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்என இவர்களால் ஒதுங்கிப் போக முடியவில்லை. ஏனென்றால் இன்னமும் இவர்கள் தங்களது வடிவத்தை விட்டுக் கொடுக்காமல் பாரம்பரியம், பண்பாடு பேணுகிறார்கள். அதனால், முகநூலில் அவர் குறிப்பிட்டது போல் பிள்ளைகளும் தங்களது தேவைகளுக்கு இவர்களை இலகுவாகப் பயன்படுத்த முடிகிறது.

18 hours ago, பகிடி said:

கனடாவில் ஓய்வு பெற்ற பின் மனுஷன் மாதிரி வாழ இன்றைய காலத்தில் கணவனுக்கும் மனைவுக்கும் சேர்த்து மாதம் $4000 வேண்டும். ஓய்வு பெற முன் வீட்டுக்கு முழுப் பணமும் செலுத்தி முடித்து இருக்க வேண்டும். ஓய்வூதியம் தலா ஒருவருக்கு $2000 வர வேண்டும் என்றால் ஓரளவுக்கு நல்ல வேலையில் இருந்து இருக்க வேண்டும்.

இது பலருக்கு இங்கே இல்லை

நீங்கள் குறிப்ப்பிட்ட பணப் பிரச்சினை எல்லா இடத்திலும் இருக்கிறது.

யேர்மனியில் ஓய்வூதியம் பெற வேண்டுமாயின் 67 வயதுவரை உழைக்க வேண்டும் 45 வருடங்கள் வேலை செய்திருந்தால் மட்டுமே வெட்டுக்கள் கொத்துக்கள் இல்லாமல் முழுமையான பென்சன் கிடைக்கும். வாழ்வாதாரத்துக்கு வரும் பென்சன் காணாது என்று சமூகநல உதவி கேட்டால் சொத்துக்களை காட்டு என்பார்கள். கடந்த பத்து வருடங்களில் சொத்துக்கள் விற்கப்படனவா? அல்லது மாற்றப்பட்டனவா? என்பதைச் சொல்லவும் வேண்டும். 80களில் வந்தவர்களில் ஓரளவு வயதில் முதிர்ச்சியாக இருந்தவர்களால் நல்ல பென்சன் எடுக்க வாய்ப்பில்லை.

நான் யேர்மனிக்கு வந்த போது யாருமே எனக்கு முன்னர் அறிந்தவர்களாக இருக்கவில்லை. வழிகாட்ட யாரும் இருக்கவில்லை. பின்னாட்களில் வந்தவர்களுக்கு அந்த நிலை இல்லை. சொல்லித் தரவும் உதவிகள் செய்யவும் யாராவது இருக்கிறார்கள். எங்கள் வாழ்க்கையை மிக அடிமட்டத்தில் இருந்தே கட்ட எழுப்ப வேண்டி இருந்தது. இந்த நிலை அடுத்த சந்ததிக்கு இல்லை. அவர்களுக்கு ஏதும் தேவையென்றால் உடனே கண்ணுக்குத் தெரிபவர்கள் பெற்றோர்கள்தான்ஆக தொல்லைகளும், சுமைகளும் தொடரத்தான் செய்கின்றன.

19 hours ago, goshan_che said:

ஐயா,

இதைவிட மொழி விளங்காது செல்லபிராணிகளின் உணவை வாங்கி சமைத்து சாப்பிட்டு கஸ்டபட்ட ஜேர்மனி கதைகளும் தெரியும்.

கோசன் சார் மொழி தெரியாது எழுந்து நின்று முழித்த கதையொன்றை போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறேன்.

IMG-8314.jpg

அப்பொழுதெல்லாம் அகதியாகப் போன தமிழர்களுக்கு நல்ல வாழ்க்கை சுவிஸ் நாட்டில் இருந்தது. யேர்மனியில் இருந்த தமிழர்களில்  சிலர் அங்கு போவதற்கு களவாக ரயிலில் பயணிப்பார்கள். இரவு இரயிலில் பயணிகளின் சீட்டுக்கு அடியில் படுத்துக் கொண்டால் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஒரு தடவை நம்மவர் ஒருவர் சீட்டுக்கு அடியிலே படுத்திருந்தார். அவர் படுத்திருந்த பெட்டிக்குள் வந்த ரிக்கெற் பரிசோதகர், “மோர்கன்எனச் சொல்லிக் கொண்டு அங்கிருந்தவர்களின் ரிக்கெற்றை பரிசோதித்துக் கொண்டு வந்தார். திடேரென பயணிகளின் கால்களை விளக்கிக் கொண்டு நம்மவர் வெளியே வந்து எழுந்து நின்றார். பயணிகளும், பரிசோதகரும் திகைத்து நின்றிருந்தார்கள்.

(Guten) Morgen  என்றால் காலை வணக்கம். ஆனால் கீழே படுத்திருந்த நம்மவருக்கு, எப்படி என் பெயர் ரிக்கெற் பரிசோதகருக்குத் தெரிந்தது? யாரோ போட்டுக் கொடுத்து விட்டார்கள். அது யாரா இருக்கும்? என்ற கேள்வி. அவரின் பெயர் மோகன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

கஸ்டம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது.

அந்த நாட்களில் புலம்பெயர்வு என்பது போரின் பின்னணியில்தான் இருந்தது. இன்று போல இலவச தொலைத்தொடர்பு வசதிகள், சமூக ஊடகங்கள் எதுவும் இல்லை. ஊரில் ஏதாவது நிகழ்ந்தால், வேலை முடிந்தவுடன் பதற்றத்தோடன் ஓடி வந்து தொலைபேசியில் ஊருக்குப் பேசினாலே, அந்த மாத சம்பளத்தில் பாதி போய்விடும். அவசரத் தேவை என்று அவர்கள் கேட்டு பணம் அனுப்பினால், “எங்கடை வீட்டுக்கு அவசரத் தேவை ஒன்றும் கிடையாதுதானேஎன்ற முணுமுணுப்பு இங்கே வந்துவிடும்.

முதல் புலம் பெயர்ந்தவர்கள், எப்போதும் நாட்டில் உறவுகளுடன் ஒட்டியே இருந்தார்கள். ஊரில் இருந்த உறவுகளின் வாழ்வாதாரத்தை இவர்களே பார்த்துக் கொண்டார்கள். இங்கே பிள்ளைகள், குடும்பம், அங்கே உறவுகள் எல்லாவற்றுக்குமாக முழு நேரம், பகுதி நேரம் என வேலைகள் செய்தார்கள். ஓய்வில்லை, பொழுது போக்குகள், விளையாட்டுக்கள் எதுவுமேயில்லை. வாழும் நாட்டவர்களோடு பழக முடியவில்லை. வாழும் நாட்டின் பழக்க வழக்கங்களுடன் ஒன்றிப் போக முடியவில்லை. தன் வரம்புக்கு மீறிய சுமைகள். அதைச் சுமந்து நடந்த கால்கள், இன்று தள்ளாட வைக்கிறது. அநேகருக்கு முழங்கால் முக்கிய பிரச்சினையாகிப் போனது. இலங்கையரின் பாரம்பரிய நீரழிவு நோயும் சேர்ந்து கொண்டிருக்கிறது. உடல் உழைப்பும், மன அழுத்தமும் சேர்ந்து இன்று அவர்களுடைய உடல்நலத்தை பாதித்திருக்கிறது. மூட்டுவலி, நீரழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவை  (முதல் புலம் பெயர்ந்தவர்கள்) பலருக்கு  இன்று சாதாரண நிலையாகவே போய்விட்டன.

மகனோ? மகளோ? ‘இனி உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்என இவர்களால் ஒதுங்கிப் போக முடியவில்லை. ஏனென்றால் இன்னமும் இவர்கள் தங்களது வடிவத்தை விட்டுக் கொடுக்காமல் பாரம்பரியம், பண்பாடு பேணுகிறார்கள். அதனால், முகநூலில் அவர் குறிப்பிட்டது போல் பிள்ளைகளும் தங்களது தேவைகளுக்கு இவர்களை இலகுவாகப் பயன்படுத்த முடிகிறது.

நீங்கள் குறிப்ப்பிட்ட பணப் பிரச்சினை எல்லா இடத்திலும் இருக்கிறது.

யேர்மனியில் ஓய்வூதியம் பெற வேண்டுமாயின் 67 வயதுவரை உழைக்க வேண்டும் 45 வருடங்கள் வேலை செய்திருந்தால் மட்டுமே வெட்டுக்கள் கொத்துக்கள் இல்லாமல் முழுமையான பென்சன் கிடைக்கும். வாழ்வாதாரத்துக்கு வரும் பென்சன் காணாது என்று சமூகநல உதவி கேட்டால் சொத்துக்களை காட்டு என்பார்கள். கடந்த பத்து வருடங்களில் சொத்துக்கள் விற்கப்படனவா? அல்லது மாற்றப்பட்டனவா? என்பதைச் சொல்லவும் வேண்டும். 80களில் வந்தவர்களில் ஓரளவு வயதில் முதிர்ச்சியாக இருந்தவர்களால் நல்ல பென்சன் எடுக்க வாய்ப்பில்லை.

நான் யேர்மனிக்கு வந்த போது யாருமே எனக்கு முன்னர் அறிந்தவர்களாக இருக்கவில்லை. வழிகாட்ட யாரும் இருக்கவில்லை. பின்னாட்களில் வந்தவர்களுக்கு அந்த நிலை இல்லை. சொல்லித் தரவும் உதவிகள் செய்யவும் யாராவது இருக்கிறார்கள். எங்கள் வாழ்க்கையை மிக அடிமட்டத்தில் இருந்தே கட்ட எழுப்ப வேண்டி இருந்தது. இந்த நிலை அடுத்த சந்ததிக்கு இல்லை. அவர்களுக்கு ஏதும் தேவையென்றால் உடனே கண்ணுக்குத் தெரிபவர்கள் பெற்றோர்கள்தான்ஆக தொல்லைகளும், சுமைகளும் தொடரத்தான் செய்கின்றன.

கோசன் சார் மொழி தெரியாது எழுந்து நின்று முழித்த கதையொன்றை போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறேன்.

IMG-8314.jpg

அப்பொழுதெல்லாம் அகதியாகப் போன தமிழர்களுக்கு நல்ல வாழ்க்கை சுவிஸ் நாட்டில் இருந்தது. யேர்மனியில் இருந்த தமிழர்களில்  சிலர் அங்கு போவதற்கு களவாக ரயிலில் பயணிப்பார்கள். இரவு இரயிலில் பயணிகளின் சீட்டுக்கு அடியில் படுத்துக் கொண்டால் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஒரு தடவை நம்மவர் ஒருவர் சீட்டுக்கு அடியிலே படுத்திருந்தார். அவர் படுத்திருந்த பெட்டிக்குள் வந்த ரிக்கெற் பரிசோதகர், “மோர்கன்எனச் சொல்லிக் கொண்டு அங்கிருந்தவர்களின் ரிக்கெற்றை பரிசோதித்துக் கொண்டு வந்தார். திடேரென பயணிகளின் கால்களை விளக்கிக் கொண்டு நம்மவர் வெளியே வந்து எழுந்து நின்றார். பயணிகளும், பரிசோதகரும் திகைத்து நின்றிருந்தார்கள்.

(Guten) Morgen  என்றால் காலை வணக்கம். ஆனால் கீழே படுத்திருந்த நம்மவருக்கு, எப்படி என் பெயர் ரிக்கெற் பரிசோதகருக்குத் தெரிந்தது? யாரோ போட்டுக் கொடுத்து விட்டார்கள். அது யாரா இருக்கும்? என்ற கேள்வி. அவரின் பெயர் மோகன்.

அந்த சந்ததியின் வலிகளை அப்படியே படம்பிடித்து காட்டி உள்ளீர்கள்.

மோகன் கதை சோகத்திலும் இழையோடிய சிரிப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Kavi arunasalam said:

யேர்மனியில் ஓய்வூதியம் பெற வேண்டுமாயின் 67 வயதுவரை உழைக்க வேண்டும் 45 வருடங்கள் வேலை செய்திருந்தால் மட்டுமே வெட்டுக்கள் கொத்துக்கள் இல்லாமல் முழுமையான பென்சன் கிடைக்கும். வாழ்வாதாரத்துக்கு வரும் பென்சன் காணாது என்று சமூகநல உதவி கேட்டால் சொத்துக்களை காட்டு என்பார்கள். கடந்த பத்து வருடங்களில் சொத்துக்கள் விற்கப்படனவா? அல்லது மாற்றப்பட்டனவா? என்பதைச் சொல்லவும் வேண்டும். 80களில் வந்தவர்களில் ஓரளவு வயதில் முதிர்ச்சியாக இருந்தவர்களால் நல்ல பென்சன் எடுக்க வாய்ப்பில்லை.

ஜேர்மனியில் நான் பார்த்த அளவில் சொத்துக்கள் வைத்திருப்பவர்களை விட சொத்துக்கள் இல்லாத நடுத்தர மக்கள் மிக சந்தோசமாக வாழ்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஜேர்மனியில் நான் பார்த்த அளவில் சொத்துக்கள் வைத்திருப்பவர்களை விட சொத்துக்கள் இல்லாத நடுத்தர மக்கள் மிக சந்தோசமாக வாழ்கின்றார்கள்.

ஏனைய நாடுகளை போல் சொந்தமாக வீடு வாங்கினால்தான் வாழ்க்கை எனவும் ஜேர்மன் மக்கள் நினைப்பதில்லை. வாடகை வீட்டில் இருப்பது சர்வசாதாராணம்.

  • கருத்துக்கள உறவுகள்

சொத்துக்கள் வைத்திருக்கும் ஈழதமிழர்கள் மகிழ்ச்சி இழப்பதிற்கு காரணம் ஷோ காட்டுவதற்காக ஓவர் கடன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 8/5/2025 at 00:50, goshan_che said:

ஏனைய நாடுகளை போல் சொந்தமாக வீடு வாங்கினால்தான் வாழ்க்கை எனவும் ஜேர்மன் மக்கள் நினைப்பதில்லை. வாடகை வீட்டில் இருப்பது சர்வசாதாராணம்.

ஜேர்மனியில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் வாடகை வீடு என்பது சர்வ சாதாரணம்.

நம்ம புலம்பெயர் தமிழர்களுக்கு மட்டும் தான் சொந்த வீடு இல்லாவிட்டால் அவமானம்.

வங்கிக்கணக்கில் லச்சக்கணக்காக கடன் இருந்தாலும் வெளியே தெரியாது தானே.🤣

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

ஜேர்மனியில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் வாடகை வீடு என்பது சர்வ சாதாரணம்.

நம்ம புலம்பெயர் தமிழர்களுக்கு மட்டும் தான் சொந்த வீடு இல்லாவிட்டால் அவமானம்.

வங்கிக்கணக்கில் லச்சக்கணக்காக கடன் இருந்தாலும் வெளியே தெரியாது தானே.🤣

இல்லை…இது ஒரு பிரிதானியர், இந்தியர், அமேரிக்கர், கனடாகாரர், அவுஸ்ரேலியர் என பலருக்கும் இருக்கும் obsession (என்ன தமிழ்?).

பிரிதானியாவில் 62% வசிப்பாளர் சொந்த வீட்டிலும் ஜேர்மனியில் 47% வசிப்பாளர் சொந்த வீட்டிலும் வசிக்கிறானர்.

ஆனால் இந்த obsession பு-பெ.தமிழர்களிடம் ஒரு படி கூடத்தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.