Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

10 மே 2025, 12:31 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் ஷங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே புரிதல் எட்டப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அனைத்து வடிவத்திலும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து உறுதியான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டை கடைபிடித்து வருவதாகவும். இந்த நிலை தொடரும் எனவும் ஜெய்ஷங்கர் கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, "பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) இன்று பிற்பகல் 3:35 மணிக்கு இந்திய DGMOவை அழைத்துப் பேசினார்.

அதன்படி, இரு தரப்பினரும் நிலம், வான் மற்றும் கடல் வழியாக அனைத்து துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.

இந்த உடன்பாட்டைப் புரிந்துக் கொண்டு செயல்படுத்துமாறு இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் மே 12 ஆம் தேதி மதியம் 12:00 மணிக்கு மீண்டும் பேசுவார்" என்று வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.

பாகிஸ்தானும் இந்தியாவும் உடனடியாக அமலுக்கு வரும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் டார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடியாக பேசியதாகவும் அதன் முடிவாக கூட்டு புரிதல் எட்டப்பட்டதாகவும் இஷாக் டார் ஜியோ டிவியிடம் கூறியுள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம்

முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில்,"இந்தியா மற்றும் பாகிஸ்தான் முழுமையான மற்றும் உடனடியான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன" என பதிவிட்டுள்ளார்.

"இரவு முழுவதும் அமெரிக்காவின் மத்யஸ்தத்துடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடியான பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுள்ளன என நான் அறிவிக்கிறேன்" என்று டிரம்ப்பின் சமூக வலைத்தள பதிவு கூறுகிறது.

"பொதுஅறிவு மற்றும் புத்திசாலித்தனத்தை பயன்படுத்திய இரு நாடுகளுக்கும் பாராட்டுக்கள். இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியதற்கு நன்றி" என்றும் டிரம்பின் பதிவில் கூறப்பட்டுள்ளது.

''இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன மற்றும் பொதுவான நாட்டில் பரந்த அளவிலான பிரச்னை குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குவார்கள்'' என அமெரிக்க வெளியுறத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்

இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம்

இந்திய ராணுவம் செய்தியாளர்கள் சந்திப்பு

இதனை தொடர்ந்து இன்று மாலை இந்திய பாதுகாப்புத்துறை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.

அப்போது பேசிய கடற்படை கேப்டன் ரகு நாயர், ''சண்டை நிறுத்தம் கடைபிடிக்கப்படுகிறது. கடற்படை, விமானப்படை மற்றும் ராணுவம் சண்டை நிறுத்தத்தை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.

மேலும், ''பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா மேற்கொண்ட பதில் நடவடிக்கைகள், கட்டுப்படுத்தப்பட்டதாகவும், பொறுப்புணர்வுடனும் இருந்தன'' என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங்,'' தவறான தகவல்'' பிரசாரத்தை மேற்கொள்ள பாகிஸ்தான் பல முயற்சிகளை எடுத்ததாக கூறினார்.

''பாகிஸ்தான் இழப்புகளைச் சந்தித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள விமானத் தளங்கள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது'' என்று வியோமிகா சிங் கூறினார்.

அடுத்து பேசிய கர்னல் சோஃபியா குரேஷி, ''முதலில், பாகிஸ்தான் தனது ஜி.எஃப் 17ஐக் கொண்டு இந்தியாவின் எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பை சேதப்படுத்தியதாக கூறியது. இது முற்றிலும் பொய்யான தகவல். அதேபோல, இரண்டாவதாக சிர்சா, பதான்கோட், ஜம்மு, பட்டிண்டா, நலியா மற்றும் புஜ்-இல் உள்ள விமானப்படைத் தளங்களை தாக்கியதாவும் பிரசாரம் செய்யப்பட்டது. இதுவும் பொய்ப்பிரசாரம் தான்'' என்றார்.

மேலும், ''சண்டிகர் மற்றும் பியாஸில் உள்ள இந்திய ஆயுதக் கிடங்கு சேதமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. இதுவும் பொய்யான தகவல். நாங்கள் இன்று காலை கூறியதுபோல, அவை அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன.''

''பாகிஸ்தானில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர்களது மூத்த ராணுவ அதிகாரிகள் உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளனர். இந்திய ராணுவம், மசூதிகளை சேதப்படுத்தியதாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். நான் இந்த விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, இந்திய ராணுவம் கலாசாரத்தை மதிக்கிறது.

இந்திய ராணுவம், பாகிஸ்தானுக்கு மிக அதிகமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுடைய நிலம் மற்றும் வான்வெளி சொத்துக்களுக்கு சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது.'' என்றார் சோஃபியா குரேஷி.

கர்னல் சோஃபியா குரேஷி

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,கர்னல் சோஃபியா குரேஷி

இந்தியா பாகிஸ்தானுக்கு உணர்த்துவது என்ன?

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முழு அளவிலான போர் மற்றொரு முறை தடுக்கப்பட்டுள்ளது - குறைந்தபட்சம் இப்போதைக்கு, என்கிறார் பிபிசி தெற்காசிய செய்தி ஆசிரியர் அன்பரசன் எத்திராஜன்

மேலும் அவர், ''சண்டை நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்ததில் மீண்டும் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்துள்ளது.

இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது தளத்துக்குத் திரும்பி, தாங்கள் பெற்றதையும், இழந்ததையும் மதிப்பிடும் வேளையில் உலக அமைதி காப்பாளராக டிரம்ப் தன்னை காட்டிக்கொள்ளலாம். மேலும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, இதனைத் தனது முதல் ராஜ்ஜீய வெற்றியாகக் கோரலாம்.

இந்தியாவின் தாக்குதலை தாங்கள் தடுத்ததாகப் பாகிஸ்தான் மக்களிடம் அந்நாட்டின் ராணுவம் சொல்லலாம். இந்த பதற்றத்தில் மக்கள் ராணுவத்தின் பின் திரண்டுள்ளனர். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ராணுவத்துக்கு எதிராகப் போராடியது குறிப்பிடத்தக்கது.

மறுபக்கம், பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருந்தாலும் பாகிஸ்தானுக்கு உள்ளே''பயங்கரவாத உள்கட்டமைப்பு'' என தாங்கள் கருதும் இடங்களைத் தாக்கத் தயங்க மாட்டோம் என இந்தியா வாதிடலாம்'' என்கிறார்

இந்தியா-பாகிஸ்தான் மோதல் தொடங்கியது எங்கே?

கடந்த மாதம் ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, மே 7ஆம் தேதி அதிகாலையில் பாகிஸ்தானில் ஒன்பது இலக்குகளைக் குறிவைத்து இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

இந்தத் தாக்குதல்கள் தீவிரவாத மறைவிடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகவும் எந்தவொரு ராணுவ முகாமையோ பொது மக்களையோ குறிவைக்கவில்லை என்றும் இந்தியா கூறியது.

மே 8ஆம் தேதி மாலையில், ஜம்மு உள்ளிட்ட மேற்கு எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டதாக இந்தியா மே 9ஆம் தேதி கூறியது. ஆனால், இந்தக் கூற்றை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

இதற்கிடையில், அதிகரித்து வரும் பதற்றத்தைக் குறைக்குமாறு அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் இரு நாடுகளிடமும் வேண்டுகோள் விடுத்தன.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cg5v6zlj0g2o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் ! 

10 MAY, 2025 | 07:39 PM

image

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியன இரு தரப்பு போர் நிறுத்தத்துக்கு இணங்கியிருக்கின்றன.

இந்த அறிவிப்பை இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரியும், பாகிஸ்தான் உதவி பிரதமர் இஷாக் டார்ரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவ நிலைகள் மீது தாக்குதல்கள் மற்றும் பதில் தாக்குதல்களை நடத்திய பின்னர், "முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு" இணங்கயுள்ளமையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார்.

காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்ப காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.

இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் பதில் தாக்குதல் மேற்கொண்டது.

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், இந்தியா -பாகிஸ்தானுக்கிடையில் போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக பாகிஸ்தான் துணை பிரதமர் இசாக் தார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "பாகிஸ்தானும் இந்தியாவும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டது. பாகிஸ்தான் எப்போதும் தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யாமல், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்தியா போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றம் முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/214391

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு நாட்களிலேயே… போர் செய்து களைத்து விட்டார்கள்.

நாங்கள் எவ்வித வளமும் இல்லாமல்…. கப்பல் படை, விமானப்படை என்று 30 வருடம் நடத்திய போரை நினைக்க பிரமிப்பாக உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"உடன்படிக்கையை மீறுகிறது பாகிஸ்தான்" - வெளியுறவு செயலாளர் குற்றச்சாட்டு

ஸ்ரீநகரில் வெடிச்சத்தம்: விக்ரம் மிஸ்ரி கூறுவது என்ன? - நேரலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

10 மே 2025, 03:54 GMT

புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியான நிலையில் காஷ்மீரில் சில இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ''இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்களுக்கு இடையே இன்று மாலை எட்டப்பட்ட உடன்பாட்டை கடந்த சில மணி நேரமாக பாகிஸ்தான் மீறி வருகிறது.

எல்லையில் நடக்கும் அத்துமீறல்களை இந்திய ராணுவத்தினர் தடுத்து வருகின்றனர். இந்த அத்துமீறல்களுக்குப் பாகிஸ்தான்தான் காரணம், இது கண்டிக்கத்தக்கது. பாகிஸ்தான் இந்த சூழ்நிலையை நன்கு புரிந்துக்கொண்டு அத்துமீறல்களைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும் என நம்புகிறோம்'' என்றார்

சுமார் இரண்டரை நிமிடங்கள் நீடித்த இந்த செய்தியாளர் சந்திப்பில், ''நிலவரத்தை ராணுவம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, மேலும் எந்தவொரு அத்துமீறலையும் சமாளிக்க உறுதியான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

இந்தியா பாகிஸ்தான் இடையிலான சண்டை முடிவுக்கு வந்துள்ளதாக இரு தரப்பும் அறிவித்துள்ள நிலையில், ஸ்ரீநகரில் வெடிப்பு சத்தம் கேட்டதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

ஸ்ரீநகர் முழுவதும் வெடிப்பு சத்தம் கேட்டு வருவதாக ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியிருக்கிறார். அவரது எக்ஸ் வலைத்தள பதிவில், உமர் அப்துல்லா இதனை குறிப்பிட்டுள்ளார்.

எங்கிருந்து இந்த சத்தம் வருகிறது எனது தெளிவாக தெரியவில்லை என்கின்றனர் பிபிசி செய்தியாளர்கள்.

சண்டை நிறுத்தம் அறிவித்த 3 மணி நேரத்தில் இந்த வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது

பஞ்சாபின் சில பகுதிகளில் முழு மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், குஜராத்தின் உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்வி, "கட்ச் பகுதியில் பல டிரோன்கள் காணப்பட்டுள்ளன. இப்போது முழுமையான மின் தடை உள்ளது" என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

https://www.bbc.com/tamil/articles/cglek9re7l2o

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நான்கு நாட்களிலேயே… போர் செய்து களைத்து விட்டார்கள்.

நாங்கள் எவ்வித வளமும் இல்லாமல்…. கப்பல் படை, விமானப்படை என்று 30 வருடம் நடத்திய போரை நினைக்க பிரமிப்பாக உள்ளது.

இல்லையே மீண்டும் தொடங்கி விட்டார்கள் ......சந்தோசமா ???? 🤣😀

பாகிஸ்தானே இந்தியாவோ இறப்பதில்லை. ....இறப்பது மக்கள் எனவே கவலையளிக்கிறது,.....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நான்கு நாட்களிலேயே… போர் செய்து களைத்து விட்டார்கள்.

நாங்கள் எவ்வித வளமும் இல்லாமல்…. கப்பல் படை, விமானப்படை என்று 30 வருடம் நடத்திய போரை நினைக்க பிரமிப்பாக உள்ளது.

நீங்கள் கூறியபடி, நாங்கள் 30 வருடம் போரை நடத்தினோம் என்று போரை நடத்தியவர்களோ அவர்களுடன் நின்ற மக்களோ பிரமிக்கும் நிலையில் இன்று அவர்கள் இல்லை. நொந்து நூடில்ஸ் ஆக விட்டார்கள். ஆனால், அந்த முப்பது வருட ஆரம்பத்திலேயே யுத்தப் பிரதேசங்களில் இருத்து நைசாக தப்பி ஒடி வந்தவர்களே இப்படி ஆயாசமாக ஜாலியாக, நாங்கள் 30 வருடம் போரை நடத்தினோம் என்று கதையளந்து பிரமிக்க கூடிய நிலையில் உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, island said:

நீங்கள் கூறியபடி, நாங்கள் 30 வருடம் போரை நடத்தினோம் என்று போரை நடத்தியவர்களோ அவர்களுடன் நின்ற மக்களோ பிரமிக்கும் நிலையில் இன்று அவர்கள் இல்லை. நொந்து நூடில்ஸ் ஆக விட்டார்கள். ஆனால், அந்த முப்பது வருட ஆரம்பத்திலேயே யுத்தப் பிரதேசங்களில் இருத்து நைசாக தப்பி ஒடி வந்தவர்களே இப்படி ஆயாசமாக ஜாலியாக, நாங்கள் 30 வருடம் போரை நடத்தினோம் என்று கதையளந்து பிரமிக்க கூடிய நிலையில் உள்ளார்கள்.

நன்று...

வெற்றியின் பக்கங்களில் நின்று கை தட்டுவதும் கருத்து எழுதுவதும் சுலபம்.

ஒரு வேளை,ஒரு கதைக்கு.

நீங்கள் புலிகளை சாடி எழுதிய கருத்துக்களையும் மீறி... நீங்கள் முன் வைத்த குற்றச்சாட்டுக்களையும் மீறி அவர்கள் நினைத்ததை சாதித்திருந்தால்....அந்நேரம் உங்கள் கருத்து எப்படியாக இருக்கும்? அப்போதும் குற்றம் சாட்டிக்கொண்டு இருப்பீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

நன்று...

வெற்றியின் பக்கங்களில் நின்று கை தட்டுவதும் கருத்து எழுதுவதும் சுலபம்.

ஒரு வேளை,ஒரு கதைக்கு.

நீங்கள் புலிகளை சாடி எழுதிய கருத்துக்களையும் மீறி... நீங்கள் முன் வைத்த குற்றச்சாட்டுக்களையும் மீறி அவர்கள் நினைத்ததை சாதித்திருந்தால்....அந்நேரம் உங்கள் கருத்து எப்படியாக இருக்கும்? அப்போதும் குற்றம் சாட்டிக்கொண்டு இருப்பீர்களா?

புலிகளை சாடி தான் எந்த கருத்தையும் எழுதவில்லை. போராட்டத்தை முழுமையாக தன்னிச்சையாக பொறுப்பேற்றுக்கொண்ட அவர்கள் தொடர்சசியாக செய்த தவறுகளை இறுதியில் அவர்களையும் அழித்து தமிழ் மக்களுன் போராட்டதையும் பாரிய பின்னடைவுக்கு கொண்டு வந்த ஜதார்தத்தை மட்டுமே எனது கருத்தில் தெரிவித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

போர் நிறுத்தம் அறிவித்த 3 மணி நேரத்தில் மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான் - என்ன நடந்தது?

1361174.jpg

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த உயர்நிலை கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தளபதிகள் பங்கேற்றனர்.படம்: பிடிஐ

புதுடெல்லி: போர் நிறுத்தம் நேற்று மாலை 5 மணிக்கு அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு 8 மணி அளவில் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதலை தொடங்கியது

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான முழுமையான போர் நிறுத்தம் நேற்று உடனடியாக அமலுக்கு வந்தது. மாலை 5 மணியுடன் இருநாடுகளை சேர்ந்த முப்படைகளும் தாக்குதலை நிறுத்திக்கொண்டதாக இருதரப்பிலும் அறிவிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தி சுற்றுலா பயணிகள் 26 பேரை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது. சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, அட்டாரி - வாகா எல்லை மூடல்,விசாக்களை ரத்து செய்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றியது என பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைளை இந்தியா மேற்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை இந்தியா முடுக்கி விட்டது. பஹல்காம் தாக்குதல் பல பெண்களின் குங்குமம் அழிய காரணமாக இருந்ததால், அதை நினைவுகூரும் விதமாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என இந்த நடவடிக்கைக்கு பெயரிடப்பட்டது. பாகிஸ்தானுக்குள் 9 இடங்களில் செயல்பட்டு வந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றின் கட்டமைப்புகளை இந்திய ராணுவம் தகர்த்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்வினையாற்றியது. எல்லை பகுதிகளில் ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலமாக தாக்குதல் நடத்தியது. எனினும், இந்தியா தனது அதிநவீன ஆயுதங்களான எல்-70 பீரங்கி, சில்கா பீரங்கி, எஸ்-400 (சுதர்சன சக்கரம்) உள்ளிட்டவற்றால் கடுமையாக பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் வீசிய ட்ரோன்கள், ஏவுகணைகளை நடுவானிலேயே இடைமறித்து அழித்தது.

அணு ஆயுத நாடுகளான இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தது உலக நாடுகளை கவலையடைய செய்தது. கடந்த 4 நாட்களாக இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவின் சமாதான முயற்சியால் இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று போர் நிறுத்தம் ஏற்பட்டது. இரு நாடுகளின் முப்படைகளும் நேற்று மாலை 5 மணி முதல் தாக்குதலை நிறுத்திக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. போர் நிறுத்தம் குறித்து முதலில் அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் முழுமையான, உடனடியான போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இருநாடுகளின் அறிவார்ந்த செயலையும், அபார புத்திசாலித்தனத்தையும் பாராட்டுகிறேன். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியதற்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இசாக் தர் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனிர் ஆகியோரை அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சர் மார்கோ ரூபியோ தொடர்பு கொண்டு பேசினார். அதன் பிறகே, ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் போர் நிறுத்தம் குறித்து அறிவித்தார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ வெளியிட்ட பதிவில், ‘துணை அதிபர் வான்ஸும், நானும் இணைந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர், புலனாய்வு தலைவர் ஆசிம் மாலிக் ஆகியோருடன் கடந்த 48 மணி நேரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.

அதன் பிறகே, இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டன. மேலும், இரு நாடுகளும் பொதுவான இடத்தில் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டது’ என்று தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்ட சிறிது நேரத்துக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் சார்பிலும் போர் நிறுத்தம் குறித்து உறுதி செய்யப்பட்டது.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவு துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது: இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல்கள் (டிஜிஎம்ஓ),நிலம், வான் மற்றும் கடல் வழியாகஅனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் 10-ம் தேதி (நேற்று) மாலை 5 மணி முதல் நிறுத்துவதாக ஒப்புக்கொண்டனர். டிஜிஎம்ஓ-க்கள் இடையிலானபேச்சுவார்த்தை மே 12-ம் தேதி (நாளை) மதியம் 12 மணிக்கு மீண்டும் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ராணுவ உயர் அதிகாரி ரகு ஆர்.நாயர் கூறும்போது, “பாகிஸ்தானுடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா கடைபிடிக்கும். அதேநேரம், இந்திய ராணுவம் முழுமையான தயார் நிலையிலும் விழிப்புடனும் இருக்கும். இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம்’’ என்றார். போர் நிறுத்தத்துக்காக முயற்சி மேற்கொண்ட அமெரிக்காவுக்கு நன்றி கூறுவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பணிந்தது பாகிஸ்தான்: போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பு, பாகிஸ்தானின் ரஃபிக்கி, முரிட், சக்லாலா, ரஹிம் யார் கான் விமான தளங்கள் உட்பட 8 ராணுவ மையங்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் நேற்று காலை குண்டு வீசின. இதை பாகிஸ்தான் ராணுவத்தால் தடுக்க முடியாமல் பலத்த சேதம் ஏற்பட்டது. பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதற்கு இந்த தாக்குதலும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தம், பாகிஸ்தான் மீதான வர்த்தக தடை, தூதரக கட்டுப்பாடுகள் ஆகியவை தொடரும். தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்திய தரப்பு நேற்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தம் அறிவித்த 3 மணி நேரத்தில் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: போர் நிறுத்தம் நேற்று மாலை 5 மணிக்கு அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு 8 மணி அளவில் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதலை தொடங்கியது. கதுவா, சம்பா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்சோரா உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் தாக்கினால் பதிலடி கொடுக்க இந்திய எல்லை பாதுகாப்பு படைக்கு முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாபின் பெரோஸ்பூர், ராஜஸ்தானின் ஜெய்சல்மார், பார்மரில் நேற்று இரவும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. ‘ஸ்ரீநகரில் தொடர்ந்து வெடிச் சத்தம் கேட்கிறது. போர் நிறுத்தம் என்ன ஆனது’ என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். போர் நிறுத்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

https://www.hindutamil.in/news/india/1361174-pak-breaks-ceasefire-within-hours-with-drone-attack-on-srinagar-2.html

  • கருத்துக்கள உறவுகள்

''நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன, ஊகங்களைத் தவிர்க்கவும்'': இந்திய விமானப்படை

1361237.jpg

இந்திய விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங்

புதுடெல்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலை நிறுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், செயல்பாடுகள் இன்னும் நடந்து வருவதாகவும், ஊகங்களை தவிர்க்குமாறும் இந்திய விமானப்படை இன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "ஆபரேஷன் சிந்தூரில் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை இந்திய விமானப்படை (IAF) துல்லியத்துடனும் தொழில்முறையுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. தேசிய நோக்கங்களுடன் இணைந்து, விவேகமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. செயல்பாடுகள் இன்னும் நடந்து வருவதால், சரியான நேரத்தில் விரிவான விளக்கவுரை வழங்கப்படும். ஊகங்கள் மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு அனைவரையும் இந்திய விமானப்படை கேட்டுக்கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மாநிலத்தில் இயல்பு நிலை: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த 4 நாட்களாக ட்ரோன் தாக்குதல், ஏவுகணை தாக்குதல், குண்டு வீச்சு போன்றவற்றை ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் எதிர்கொண்டன. பாகிஸ்தானின் வான்வழி தாக்குதல் முயற்சியை இந்திய பாதுகாப்பு படை வான் பாதுகாப்பு கவச அமைப்புகள் மூலம் இடைமறித்து அழித்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இரவு நேரங்களில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் மேற்கொண்டது. அதை சமாளிக்க நேற்று இரவும் இந்த பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை முதலே எந்தவித தாக்குதலும் இந்திய எல்லையில் நடைபெறவில்லை என தகவல் கிடைத்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பூஞ்ச், உதம்பூர், சம்பா, ரஜோரி, ஜம்மு, உரி, அக்னூர், ஸ்ரீநகர், பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ், பதன்கோட், பெரோஸ்பூர் மற்றும் ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. அதே நேரத்தில் பாதுகாப்பு படை எதிர் தரப்பின் நடவடிக்கையை கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தி சுற்றுலா பயணிகள் 26 பேரை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது. சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, அட்டாரி - வாகா எல்லை மூடல்,விசாக்களை ரத்து செய்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றியது என பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைளை இந்தியா மேற்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை இந்தியா முடுக்கி விட்டது. பஹல்காம் தாக்குதல் பல பெண்களின் குங்குமம் அழிய காரணமாக இருந்ததால், அதை நினைவுகூரும் விதமாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என இந்த நடவடிக்கைக்கு பெயரிடப்பட்டது. பாகிஸ்தானுக்குள் 9 இடங்களில் செயல்பட்டு வந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றின் கட்டமைப்புகளை இந்திய ராணுவம் தகர்த்தது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்வினையாற்றியது. எல்லை பகுதிகளில் ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலமாக தாக்குதல் நடத்தியது. எனினும், இந்தியா தனது அதிநவீன ஆயுதங்களான எல்-70 பீரங்கி, சில்கா பீரங்கி, எஸ்-400 (சுதர்சன சக்கரம்) உள்ளிட்டவற்றால் கடுமையாக பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் வீசிய ட்ரோன்கள், ஏவுகணைகளை நடுவானிலேயே இடைமறித்து அழித்தது.

அணு ஆயுத நாடுகளான இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தது உலக நாடுகளை கவலையடைய செய்தது. கடந்த 4 நாட்களாக இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவின் சமாதான முயற்சியால் இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று போர் நிறுத்தம் ஏற்பட்டது. இரு நாடுகளின் முப்படைகளும் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் தாக்குதலை நிறுத்திக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. போர் நிறுத்தம் குறித்து முதலில் அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிவித்தார்.

ஆனால், போர் நிறுத்தம் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு 8 மணி அளவில் ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதலை தொடங்கியது. கதுவா, சம்பா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்சோரா உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் தாக்கினால் பதிலடி கொடுக்க இந்திய எல்லை பாதுகாப்பு படைக்கு முழு அனுமதி வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

https://www.hindutamil.in/news/india/1361237-operations-still-ongoing-refrain-from-speculations-says-iaf-after-india-pakistan-s-cessation-of-hostilities-agreement-2.html

  • கருத்துக்கள உறவுகள்

Amirthanayagam Nixon

*பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக்க முற்படும் இந்திய ஆங்கில ஊடகங்கள்.

*அமெரிக்கா ஏற்றுக் கொண்ட ரசிய - இந்திய உறவு?

*சர்வதேசத்தை நோக்கிய அநுரவின் காய் நகர்த்தல்

----------- ------------

பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணம், நிலப்பரப்பு அடிப்படையில் மிகவும் பெரியது. அப் பகுதியைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பலுசிஸ்தான் போராளிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர் .

ஆனால், அந்தப் போராளிகளுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கி வருவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சுமத்தி வரும் நிலையில், காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவியளிப்பதாக இந்தியா குற்றம் சுமத்தி வருகின்றது.

பழங்குடி மக்களை அதிகம் கொண்ட பலுசிஸ் தேசிய இன விடுதலைப் போராளிகளை அமெரிக்கா, பிரித்தானியா உட்பட ஐரோப்பிய ஒன்றியமும் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள நிலையிலும், 2004 ஆம் ஆண்டு பலுஸ் இன மக்களின் தன்னாட்சி கோரி, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பலுசிஸ் தேசிய விடுதலை இராணுவம் போராடி வருகின்றது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள்-----

காஷ்மீர் போராளி இயக்கங்கள் சிலவற்றை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் பெரிய அளவில் தடை விதிக்கவில்லை. ஆனால் , பலுசிஸ் இன தேசிய விடுதலை இராணுவத்தை நோக்கி பல தடைகள் விதிக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்தியா மாத்திரம் பலுசிஸ் போராளிகளுக்கு ஒத்தழைத்து வருகின்றது.

இப்பின்னணியிலேயே இந்தியா - பாகிஸ்தான் மோதல் 2000 ஆம் ஆண்டில் இருந்து மேலும் தீவிரமடைந்து வருகின்றது. காஷ்மீர் பஹல்காமில் கடந்த மாதம் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீர் போராளிகள் சுற்றுலா பயணிகள் 26 பேரை கொலை செய்த பின்னர் ஏற்பட்ட முறுகல், கடந்த சில நாட்களாக இந்திய பாகிஸ்தான் இராணுவ மோதலாக மாறியுள்ளது.

சென்ற 8 ஆம் திகதி வியாழக்கிழமை இந்தியா நடத்திய தாக்குதலில் லாகூர் நகரை பாதுகாக்க பாகிஸ்தான் இராணுவம் பல வியூகங்களை வகுக்க ஆரம்பித்துள்ளது. பாகிஸ்தான் இராணுவம் ஏவிய சீன தயாரிப்பான எச்க்யூ - 9 பி ஏவுகணை தடுப்பு ஆயுதங்களை தாக்கி அழித்துள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.

சீன தயாரிப்பு ஏவுகணைகளை இந்தியா தடுத்து அழித்தமை தொடர்பாக தற்போது உலக அரங்கில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இது பரபரப்பான தகவல் என்று இந்திய ஊடகங்கள் வர்ணிக்கின்றன..

ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கிருந்து ஏவப்பட்ட சீனத் தயாரிப்பு, எஸ் -400 என்ற தடுப்பு மையங்கள் முறியடித்தன..

இதையடுத்து இந்தியா மீது மீண்டும் வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியிருக்கிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கடும் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் இராணுவம் ஏவிய 7 ஏவுகணைகள் தடுக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமான தளத்தில் தாக்குதல் நடத்த முற்பட்ட நிலையில், இந்திய விமானப்படை பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தியாவின் இத் தாக்குதல் குறித்து வெள்ளிக்கிழமை இரவு கருத்து வெளியிட்ட அமெரிக்க பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின், இந்திய இராணுவத்தை பாராட்டியிருக்கிறார். நன்கு திட்டமிட்டு இந்தியா தாக்கியுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

எஸ் 400 என்ற ரசிய தடுப்பு ஏவுகணை?---

பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை அழிக்க இந்திய இராணுவம் பயன்படுத்திய எஸ் 400 என்ற தடுப்பு ஏவுகணை ரசியத் தயாரிப்பா என்று சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ள நிலையிலேயே அமெரிக்கப் பென்டகனின் முன்னாள் அதிகாரி பாராட்டியுள்ளமை கவனிக்கத்தக்கது.

இப் பின்னணியில்தான் சீனாவின் எச்க்யூ 9 பி என்பது என்ன என்பது பற்றியும் அதனை இந்திய இராணுவம் அழித்தது ஏன் என்ற கேள்விகள், விமர்சனங்கள் தற்போது முன்வைக்கப்படுகின்றன. சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் அதிக அளவு சக்தி வாய்ந்த ஆயுதங்களை கொள்வனவு செய்கிறது.

எஎ போர் விமானங்கள், ஏவுகணை தடுப்பு ஏவுகணை ஆயுதங்கள் உள்ளிட்ட பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களையும் சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் கொள்வனவு செய்வதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

சீனாவில் எச்க்யூ 9 வான்வெளி பாதுகாப்பு முறைமை.(HQ 9 Air Defence System) பயன்பாட்டில் உள்ளது. இதனை தமக்கு வழங்குமாறு பாகிஸ்தான் சீனாவிடம் 2015 இல் கோரியது. இதன் காரணத்தால் சீனா பாகிஸ்தானுக்கு என்று கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தனியாக ஒன்றை தயாரித்து வழங்கியுள்ளது.

”எச்க்யூ 9பி வான்வெளி பாதுகாப்பு முறைமை” என்ற பெயர் கொண்ட இந்த ஆயுத பரிமாற்றம் தொடர்பாக ஏற்கனவே இந்தியா அதிருப்தி வெளியிட்டிருந்தது.

இந்த ஆயுதத்தில் உள்ள P என்ற எழுத்து பிரத்தியேகமாக பாகிஸ்தானை குறிக்கும். சீனாவில் பயன்படுத்தும் இந்த ஆயுதத்தில் அந்த P என்ற எழுத்து இல்லை. இந்நிலையில் தான் லாகூரை பாதுகாக்க, பாகிஸ்தான் சீனாவின் எச்க்யூ 9 பி வான் பாதுகாப்பு முறைமையை நிறுவி இருந்தது.

இதனை பாகிஸ்தான் 2021ம் ஆண்டில் இருந்து பயன்படுத்தி வருவதாக அதானி குழுமத்தின் ஆங்கில ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இது வானில் 125 கிலோமீட்டர் தொலை தூரத்தை கொண்டது. இது போர் விமானங்கள், குரூஸ் வகை ஏவுகணைகள் போன்றவற்றை 100 கிலோ மீட்டர் தூரத்திலேயே கண்டுபிடித்து அழிக்கும் வல்லமை கொண்டது.

ஆனால் பாகிஸ்தான் ஏவிய இந்த சீன ஏவுகணையை, இந்திய இராணுவம் தாக்கி அழித்தமை தொடர்பாக இந்திய ஊடகங்கள் பாராட்டும் விமர்சனங்களை முன்வைக்கின்றன.

அதேவேளை, எச்க்யூ 9-P ஏர் பாதுகாப்பு (Defense) மூலமான தாக்குதல் முறைமையை, பதில் தாக்குதல் நடத்தி அழிக்க இந்திய இராணுவம் பயன்படுத்திய ட்ரோன் இஸ்ரேல் தயாரிப்பு என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் ட்ரோன்----

இஸ்ரேல் நாட்டின் நவீன ட்ரோன் தான், பாகிஸ்தான் ஏவிய சீனத் தயாரிப்பு ஏவுகணைகளை குறி தப்பாமல் தாக்கி அழித்தது என்று இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உறுதி செய்திருக்கிறார்.

இஸ்ரேல் தயாரிப்புகளை பயன்படுத்தியே வியாழக்கிழமை இரவும் தாக்குதல் முறியடிக்கப்பட்டது என்று விக்ரம் மிஸ்ரியை மேற்கோள் காண்பித்து இந்திய ஆங்கில ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டிருக்கின்றன.

இந்தியா பயன்படுத்திய ட்ரோன், இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் என்ற ஆயுத உற்பத்தி நிறுவனம் உருவாக்கியதாகும். ரேடார் மற்றும் வான்வெளி பாதுகாப்பு முறைகளை துல்லியமாக தாக்குவது தான் இதன் சிறப்பாகும்.

இந்த ட்ரோனால் 9 மணிநேரம் வரை இடைவிடாது பறக்கக் கூடியது என்று இந்திய இராணுவ ஆய்வாளர்கள் கூறுவதாக இந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

அதேநேரம் பலுசிஸ் தேசிய இன விடுதலை போராளிகள் பாகிஸ்தான் இராணுவம் மீது தாக்குதல்களைத் தொடர்ந்துள்ளது என்றும், இதற்கு இந்தியா பின்னணி எனவும் பாகிஸ்தான் ருடே (pakistan today) என்ற ஆங்கில ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.

காஷ்மீர் போராளிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை எனவும், பாலுஸிஸ் போராளிகளை பாகிஸ்தானுக்கு எதிராக தூண்டி விடவே, இந்தியா, பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்தி உள்ளதாகவும் அந்த ஊடகம் விமர்சிக்கிறது.

புவிசார் அரசியல் - பொருளாதார நோக்கில் அமெரிக்க, இந்திய மற்றும் இஸ்ரேல் உறவும், சீன பாகிஸ்தான் உறவும் இந்த மோதல் மூலம் வெளிப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்திய ரசிய உறவும் இராணுவத் தளபாடங்கள் பரிமாற்றமும் வெளிப்பட்டுள்ளன.

ஆனால், டொனால்ட் டிரம்ப் மறைமுக ரசிய சார்ப்புத் தன்மையுடன் செயற்படுவதால், இந்தியாவுக்கு தற்போதைக்கு அது பாதுகாப்பானதாகவே இருக்கும். இந்த நிலைமை இலங்கைக்கும் சாதகமானதே.

பலுசிஸ் தேசிய இன விடுதலை போராளிகளுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் பின்னணிகள் மற்றும் பாகிஸ்தான் மீதான குற்றச்சாட்டுக்கள் பற்றி மகிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் இலங்கை இராஜதந்திரிகள் ஆய்வு நடத்தி இருந்ததை தமிழ்த் தரப்பு கவனத்தில் எடுக்க வேண்டும்.

அநுரவின் அவதானிப்பும் இராஜதந்திரமும்----

தற்போதைய அநுர அரசாங்கமும் அமெரிக்க இந்திய உறவு மற்றும் சீன உறவுகளை பயன்படுத்தும் உத்திகள் கூட, சமகால புவிசார் அரசியல் - பொருளாதார நிலைமைகளை ஆழமாக அறிந்து காய் நகர்த்துவதாகவே உள்ளது .

காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்தும், மோடிக்கு அனுதாபம் தெரிவித்து அநுர அனுப்பிய அனுதாபச் செய்தியின் உள்ளடக்கமும் முக்கியமானது.

அதேநேரம் சர்வதேச மனித உரிமைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் குறித்து ஜெனீவா மனித உரிமைச் சபையில் சீனா முன்வைத்த பரிந்துரைகள் பற்றி அநுர அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.

குறிப்பாக உள்நாட்டு மோதல்களில் சர்வதேசம் தலையிடாத முறையில் மனித உரிமை விவகாரங்கள் பற்றி சீன முன்வைத்துள்ள காரண - காரியங்களை அநுர அரசாங்கம் தீவிரமாக பரிசீலிக்கிறது.

இந்நிலையில் தமிழர் தரப்பு சர்வதேச நிலைமைகளையும் சர்வதேசத்தை நோக்கிய அநுரவின் காய் நகர்த்தல்கள் பற்றியும் ஆராயாமல் வெறுமனே தேர்தல்களில் மாத்திரம் கவனம் செலுத்துவது ஆபத்தான ஒன்று.

-அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் அமெரிக்காவால் சாத்தியமானது எப்படி? அது நீடிக்குமா?

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்

பட மூலாதாரம்,ANI/GETTY IMAGES

படக்குறிப்பு,சண்டை நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டதாக, இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது

கட்டுரை தகவல்

  • எழுதியவர், தில்நவாஸ் பாஷா

  • பதவி, பிபிசி செய்தியாளர்

  • 11 மே 2025, 06:21 GMT

    புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இரு நாடுகளுமே அதை உறுதி செய்துள்ளன. இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கையை நிறுத்துவதாக பரஸ்பரம் அறிவித்துள்ளன. இந்த சண்டை நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில், "அமெரிக்காவால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட நீண்ட நேர பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு நாடுகளும் முழுமையான மற்றும் உடனடியான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என பதிவிட்டிருந்தார்.

இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தனது சமூக ஊடக பக்கத்தில், "அனைத்து விதமான பயங்கரவாதத்துக்கும் எதிராக இந்தியா தொடர்ச்சியாக தயங்காமல் கடினமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது இனியும் தொடரும்." என பதிவிட்டிருந்தார்.

பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் இஷாக் தார், தங்கள் நாடு சண்டை நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தன் முயற்சிகளின் வாயிலாக இந்த சண்டை நிறுத்தம் சாத்தியமானதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்

இஷாக் தார் கூறுகையில், "முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் இதற்கான ராஜ தந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இவற்றில், துருக்கி, சௌதி அரேபியா மற்றும் அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மார்கோ ரூபியோவும் அடங்குவர்." என்றார். பிரிட்டன் வெளியுறவு துறை அமைச்சரும் முக்கிய பங்கை வகித்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த சண்டை நிறுத்த அறிவிப்புக்கு சில மணிநேரத்துக்கு முன்பு கூட இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலை நிகழ்த்தின; இரு நாடுகளிடமுமே அணு ஆயுதங்கள் உள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் மற்றொரு நாட்டின் விமானப்படைத் தளங்களைத் தாக்கியதாக பரஸ்பரம் கூறின.

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்ற பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த மே 6-ஆம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்களை நடத்தியது. "துல்லியமானது, நன்கு திட்டமிடப்பட்டது" என தன் நடவடிக்கையை இந்தியா விவரித்தது.

இதைத்தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்தது, இருநாடுகளும் பரஸ்பரம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்களை நிகழ்த்தின. இருநாடுகளும் எதிர் தரப்பின் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக கூறிக்கொண்டன.

இந்தியா தங்களது 3 விமானப்படைத் தளங்களுக்கு சேதம் விளைவித்ததாக, சனிக்கிழமை பாகிஸ்தான் கூறியது.

பாகிஸ்தான் விமானப்படைத் தளங்கள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தியதாக இந்தியாவும் உறுதி செய்தது.

காலையில் தாக்குதல், மாலையில் சண்டை நிறுத்தம்

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கராச்சியில் ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள்

சனிக்கிழமை காலையில் இந்தியாவில் ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் உட்பட பல நகரங்களில் குண்டுவெடிப்பு சப்தம் கேட்டது. இந்தியா மீது பதிலடி தாக்குதலை தொடங்கியிருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்தது.

"இந்தியாவும் பாகிஸ்தானும் போருக்கு மிக நெருக்கமாக வந்துள்ளதாக" சர்வதேச மற்றும் தெற்காசிய விவகாரங்கள் நிபுணரான மைக்கேல் குகல்மேன் வெள்ளிக்கிழமை இரவு தெரிவித்தார்.

ஆனால், அனைத்துவிதமான ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக இரு நாடுகளும் சனிக்கிழமை அறிவித்தன. வேகமாக சூழல் மாறிவருவது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாதுகாப்பு நிபுணர் பிரவீன் சாஹ்னி கூறுகையில், "சனிக்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோதி ராணுவ தளபதிகளுடனான சந்திப்புக்குப் பிறகு, இந்தியா இனி எந்தவொரு பயங்கரவாத தாக்குதலையும் போர் செயலாகவே கருதும் என்ற செய்தி வந்த போது, இந்த விவகாரத்தில் இந்தியா மேலும் எதையும் விரும்பவில்லை என்பது தெளிவானது." என்றார்.

சனிக்கிழமை காலையில் பாகிஸ்தானின் பதில் தாக்குதலுக்கு பிறகு குகல்மேன் எழுதுகையில், "பாகிஸ்தான் அணுசக்தி நாடாக ஆனதற்கு அடுத்த ஆண்டான 1999-ல், கார்கில் போருக்குப் பிறகு இத்தகைய சூழல் எழுந்துள்ளது. அணு ஆயுதத்தை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்த மிகப்பெரிய சோதனையாக இருக்கும். சர்வதேச மத்தியஸ்தர்கள் தற்போது துரிதமாக செயலாற்றுவார்கள்" என குறிப்பிட்டிருந்தார்.

பாதுகாப்பு நிபுணரும் மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு கல்வி நிறுவனத்தின் ஆய்வு மாணவருமான ஸ்மிரிதி எஸ் பட்நாய்க் கூறுகையில், "இரு நாடுகளும் ஏவுகணை தாக்குதல் என்ற கட்டத்தை அடைந்துள்ளன. இதற்குப் பிறகும், நிலைமை தீவிரமானால், முழு அளவிலான போர் வெடிக்கும் சூழல் ஏற்படும், ஆனால் தற்போது அப்படி நடக்கவில்லை. இப்படியான சூழலில், இரு நாடுகளும் முழு அளவிலான போர் தங்கள் நலனுக்கு நல்லதல்ல என்பதை புரிந்துகொண்டுள்ளன." என்றார்.

களச்சூழலில் என்ன மாற்றங்கள் நிகழும்?

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,சனிக்கிழமை பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனிருடன் போனில் உரையாடினார் அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ

சனிக்கிழமை பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனிருடன் போனில் உரையாடிய அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருடனும் பேசினார்.

இருநாடுகளுக்கும் இடையே சனிக்கிழமை மாலை 5:30 மணியளவில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த சண்டை நிறுத்தம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்குமா என்பது குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.

பாதுகாப்பு நிபுணரும் இந்திய ராணுவத்தில் பிரிகேடியராக பணியாற்றிய அனுபவம் பெற்றவருமான ஜீவன் ராஜ்புரோஹித் கூறுகையில், "இரு நாடுகளும் சண்டையை தொடர விரும்பவில்லை. பாகிஸ்தானுக்கு எல்லா வழிகளிலும் உதவிய அமெரிக்கா, இந்த சண்டை நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்துள்ளது. மறுபுறம், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ஒத்த நலன்களைக் கொண்டுள்ளன. அப்படியான சூழலில், சண்டை நிறுத்தம் செயல்பாட்டில் இருப்பதில் சிக்கல் இருக்காது," என்றார்.

அமெரிக்காவால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட இந்த சண்டை நிறுத்தம் நீடிக்கும் என்றே பிரவீன் சாஹ்னியும் நம்புகிறார்.

பிரவீன் சாஹ்னி கூறுகையில், "அமெரிக்கா தங்களுக்கு முக்கியம் என்பதாலேயே இரு நாடுகளும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளன. போரை நிறுத்தியது அமெரிக்கா தான். சண்டை நிறுத்தத்தைப் பொருத்தவரையில், அது நீடிக்கும். ஆனால், இரு நாடுகளும் மே 6-ஆம் தேதிக்கு முன்பு இருந்த அதே சூழலில் தான் தொடர்ந்து இருக்கும்." என்றார்.

"இரு நாடுகளுக்கும் இடையே நான்கு நாட்கள் சண்டைக்குப் பிறகு, சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது, ஆனால் களச்சூழலில் எந்தவித மாற்றமும் இருக்காது. வருங்காலத்தில் இருநாடுகளிடமிருந்தும் பகைமை உணர்வுடன் கூடிய கருத்துகளை அதிகம் எதிர்பார்க்கலாம்." என்பது அவரது கணிப்பு.

சண்டை நிறுத்தம் நீடிக்குமா?

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலில் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர்

சனிக்கிழமை மாலை 3:30 மணிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராணுவ இயக்குநர் ஜெனரல்கள் (DGMO) பேச்சுவார்த்தை நடத்திய இரண்டு மணிநேரங்களில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. எதன் அடிப்படையில் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன என்பது குறித்த மேலதிக தகவல்கள் இல்லை.

இந்த சண்டை நிறுத்தம் நீடிக்கும் என்று கூறிய ஸ்மிரிதி பட்நாயக், எனினும் எதன் அடிப்படையில் அதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது என்பதை பொறுத்தே இது இருக்கும் என கூறினார்.

பட்நாயக் கூறுகையில், "பாகிஸ்தான் இதிலிருந்து பின்வாங்கினால், அவ்வாறு செய்வதற்கு இந்தியாவுக்கு எந்த பிரச்னையும் இல்லை. சண்டை நிறுத்தம் ஏற்பட்டதற்கான நிபந்தனைகள் என்ன என்பது குறித்து அதிக தகவல்கள் இல்லை. ஆனால், இரு நாடுகளும் இதிலிருந்து முன்னோக்கி செல்வது எப்படி என்பதை யோசிப்பதற்கான வாய்ப்பை இந்த சண்டை நிறுத்தம் வழங்கும்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "மே 12-ஆம் தேதி அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடக்கும் போது சூழல் இன்னும் தெளிவாகும். பயங்கரவாதத்துக்கு எதிரான தன்னுடைய கடினமான நிலைப்பாட்டில் இந்தியா சமரசம் செய்யாது. இரு நாடுகளும் ஆக்ரோஷமாக இருப்பது குறித்து சர்வதேச சமூகங்கள் கவலை கொண்டுள்ளன. இதை மேலும் நீடிப்பது தங்களுக்கு நல்லதல்ல என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு தெரியும். பாகிஸ்தான் பதற்றத்தைக் குறைத்தால், இந்தியாவும் மேற்கொண்டு எதையும் செய்யாது என்பதை இந்தியா ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது" என்றார்.

பதற்றத்தை அதிகரிக்க இந்தியா விரும்பவில்லை

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இரு நாடுகளுக்கிடையேயான பதற்றச் சூழலில் கர்னல் சோஃபியா குரேஷி, ஊடக சந்திப்புகளில் இந்திய ராணுவம் சார்பாக விளக்கினார்

சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய கர்னல் சோஃபியா குரேஷி, "பாகிஸ்தான் ராணுவம் முன்னோக்கி துருப்புகளை நிறுத்துவதாக தெரிவிக்கிறது, இது நிலைமையை மேலும் மோசமாக்கும் நோக்கத்தைக் காட்டுகிறது" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "இந்திய ஆயுதப் படைகள் முழு எச்சரிக்கையுடன் உள்ளன. பாகிஸ்தானும் இதே முறையில் நடந்துகொண்டால், பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை என்பதை இந்திய ஆயுதப் படைகள் மீண்டும் வலியுறுத்துகின்றன." என்றார்.

நிலைமையை மேலும் மோசமாக்கும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

ஜீவன் ராஜ்புரோஹித் கூறுகையில், "நிலைமையை மேலும் மோசமாக்குவது தங்கள் நோக்கம் அல்ல என இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஏற்கெனவே கூறியுள்ளார்" என்றார்.

"இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானது - நாங்கள் பழிதீர்ப்போம் என இந்தியா கூறியது, அதைத்தான் தற்போது செய்துள்ளது. அதற்கு பழிதீர்க்க பாகிஸ்தான் ராணுவம் முடிவெடுத்தது, அங்கிருந்துதான் நிலைமை மேலும் மோசமானது. மே 7-ஆம் தேதி பாகிஸ்தான் எதிர்வினையாற்றி இருக்காவிட்டால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது." என்று அவர் கூறினார்.

இரு நாடுகளும் விரும்புவது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பாகிஸ்தானின் அரசியலிலும் அந்நாட்டு ராணுவம் தலையிடுகிறது

இந்த சூழலில் இருந்து மரியாதையான முறையில் வெளியேறுவது எப்படி என்பதுதான் இரு நாடுகளுக்கு இடையேயான மிகப்பெரிய பிரச்னை என, ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

பிரவீன் சாஹ்னி கூறுகையில், "இந்தியாவும் பாகிஸ்தானும் மேலும் சண்டையிட விரும்பவில்லை என்பது இதுவரையிலான சமிக்ஞையாக உள்ளது. முழு அளவிலான போரில் ஈடுபடுவதை இரு நாடுகளும் விரும்பவில்லை. இந்த சூழலில் இருந்து 'மரியாதையான முறையில் வெளியேற' இரு நாடுகளும் விரும்புகின்றன" என்றார்.

ஸ்மிரிதி எஸ் பட்நாயக் கூறுகையில், "பாகிஸ்தான் ராணுவம் அந்த நாட்டின் அரசியலில் அதிக செல்வாக்கு செலுத்துகிறது. பாகிஸ்தான் பட்ஜெட்டில் அதிகளவு அதன் ராணுவத்துக்கு செலவு செய்யப்படுகிறது. அப்படியான சுழலில், ராணுவம் செயலாற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் உணர்வாக உள்ளது. அப்படியான சூழலில், தாங்கள் எதிர்வினையாற்றி இருக்கிறோம் என்பதை நாட்டு மக்களிடம் காட்ட வேண்டும் என்ற அழுத்தம் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இருந்திருக்கலாம்" என கூறினார்.

இதனிடையே, இப்படியான சூழலில் தாங்கள் மரியாதைக்குரிய முறையில் சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக இரு நாடுகளும் தங்கள் மக்களுக்குக் கூறலாம்.

பிரவீன் சாஹ்னி கூறுகையில், "இந்த சூழலில் இருந்து வெளியேறுவது குறித்து கூற வேண்டுமானால், இரு நாடுகளும் தங்கள் இலக்குகளை அடைந்துள்ளதாக உணரலாம். இந்தியா பாகிஸ்தானுக்குள் தாக்குதல்களை நடத்தியது, அதேசமயம் இந்தியாவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுகிறது. இரு நாடுகளும் தாங்கள் என்ன சாதித்தோம் என்பதை தங்கள் நாட்டு மக்களுக்குக் கூறலாம்." என்றார்.

'நாங்கள் பழிதீர்த்தோம்'

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்தியாவுக்கு 'தகுந்த' பதிலடியை கொடுத்துவிட்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் சனிக்கிழமை காலை வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவுக்கு 'தகுந்த' பதிலடியை கொடுத்துவிட்டதாக தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "இந்தியா பாகிஸ்தான் மீது எங்கிருந்து தாக்குதல்கள் நடத்தியதோ அந்த ராணுவ தளங்கள் இலக்கு வைக்கப்பட்டன. இந்தியாவுக்கு நாம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளோம், அப்பாவி மக்களின் இறப்புக்கு பழிதீர்த்துள்ளோம்." என்றார்.

எதிர்கால சூழல் குறித்து பேசிய ஜீவன் ராஜ்புரோஹித், பாகிஸ்தான் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றுமா என்பதுதான் முக்கியமான கேள்வி என்றார்.

ராஜ்புரோஹித் கூறுகையில், "பாகிஸ்தான் தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டால், இரு நாடுகளுக்கும் இடையே அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடைபெறும். பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக செயல்பட முடியாது என்பது இந்தியாவின் தெளிவான நிலைப்பாடாகும்." என்றார்.

"பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக இருக்கிறதா என்பதுதான் இப்போதிருக்கும் முக்கிய கேள்வி. இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான எதிர்கால உறவின் அடிப்படையாக இது இருக்கும்." என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c93ly26692ro

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிரம்பின் நடவடிக்கைகள் இந்தியாவை சங்கடத்தில் தள்ளியுள்ளதா?

இந்தியா - பாகிஸ்தான், அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சண்டை நிறுத்த அறிவிப்பு குறித்த அமெரிக்காவின் செயல்பாடு இந்தியாவின் எதிர்வினை, அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இல்லை.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ரஜ்னீஷ் குமார்

  • பதவி, பிபிசி செய்தியாளர்

  • 13 மே 2025, 06:04 GMT

    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

"பொது அறிவு மற்றும் சிறந்த புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தியதற்கு வாழ்த்துகள்."

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான சண்டை நிறுத்தம் குறித்து விவரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வார்த்தைகள் இவை. மே 10-ஆம் தேதி மாலை 5 மணிக்கு டிரம்ப் திடீரென சண்டை நிறுத்தத்தை அறிவித்த போது, அது பல வழிகளில் இந்தியாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

டிரம்ப் இந்த அறிவிப்பை சமூக ஊடகத்தில் வெளியிட்டார். சண்டை நிறுத்தம் குறித்த முதல் தகவல் இந்தியாவிடமிருந்தோ அல்லது பாகிஸ்தானிடமிருந்தோ வரவில்லை, மாறாக அமெரிக்க அதிபரிடமிருந்து அந்த தகவல் வந்தது. அமெரிக்கா இந்த தகவலை மட்டும் வழங்காமல் பல விஷயங்களை தெரிவித்தது. அத்தகவல்கள் இந்திய வெளியுறவு கொள்கையிலிருந்து முரண்பட்டதாக உள்ளன.

டிரம்ப் தன் சமூக ஊடக பதிவில், "இரவு முழுவதும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தது. இதையடுத்து, இரு நாடுகளும் முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன." என தெரிவித்திருந்தார்.

காஷ்மீர் இருதரப்பு விவகாரம் என்பதும் எந்தவொரு மூன்றாவது நாட்டுடைய மத்தியஸ்தமும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதும் இந்தியாவின் கொள்கையாக உள்ளது.

எந்தவொரு இருதரப்பு விவகாரத்திலும் மூன்றாம் தரப்பு நாட்டின் மத்தியஸ்தத்தை இந்தியா எப்போதும் நிராகரித்து வந்துள்ளது. சீனாவுடனான எல்லை விவகாரத்திலும் இதே கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது. ஜூலை 2019-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராக டிரம்ப் முதன்முறையாக பதவி வகித்த போது அப்போதைய பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கானிடம் காஷ்மீர் விவகாரம் குறித்து மத்தியஸ்தம் செய்வதாக கூறியிருந்தார். அப்போது இதை உடனடியாக இந்தியா நிராகரித்தது.

ஜேடி வான்ஸ், நரேந்திர மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்தாண்டு பிப்ரவரியில் பாரிஸில் நடைபெற்ற ஏ.ஐ. மாநாட்டில் மோதியும் வான்ஸும் முதன்முறையாக சந்தித்துக் கொண்டனர்

மகிழ்ச்சியை வெளிப்படுத்தாத இந்தியா

அமெரிக்காவின் சண்டை நிறுத்த அறிவிப்பு குறித்த இந்தியாவின் எதிர்வினை, அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இல்லை. டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவின் அறிவிப்பைத் தொடர்ந்து இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் எக்ஸ் தள பதிவிலிருந்து, இந்த அறிவிப்பு தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லை என்பதும், அந்த அறிவிப்பு தொடர்பாக எல்லா விவகாரங்களையும் இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் தெளிவாக தெரிந்தது.

சண்டை நிறுத்தத்துக்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததாக, ஜெய்சங்கர் தன்னுடைய பதிவில் குறிப்பிடவில்லை. இந்திய வெளியுறவு அமைச்சர் தன் பதிவில், "ராணுவ நடவடிக்கையை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்படுத்தியுள்ளன. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா சமரசம் செய்துகொள்ளாது, இந்த அணுகுமுறை எதிர்காலத்திலும் தொடரும்" என தெரிவித்திருந்தார்.

மார்கோ ரூபியோ இதை எக்ஸ் பக்கத்தில் மறுபதிவு செய்திருந்தார். ஆனால் இருவருடைய கருத்துகளிலும் தெளிவாக வித்தியாசம் இருந்தது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் சண்டை நிறுத்தம் எட்டப்பட்டதாகவோ, நடுநிலையான இடத்தில் பிரச்னையை தீர்க்க பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும் என்றோ ஜெய்சங்கர் எங்கும் குறிப்பிடவில்லை.

மறுபுறம் அமெரிக்காவின் அறிவிப்பு குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பாகிஸ்தான், டிரம்புக்கு நன்றி தெரிவித்துள்ளது. இந்திய முன்னாள் ராஜ்ஜிய அதிகாரி பார்த்தசாரதியிடம், சண்டை நிறுத்தத்தை அறிவித்து இந்தியாவை அமெரிக்கா சங்கடப்படுத்தியுள்ளதா என கேள்வி எழுப்பினோம்.

ஜி பார்த்தசாரதி கூறுகையில், "டிரம்பின் மொழியை அடிப்படையாக வைத்து விவாதித்தால், அது இந்தியாவுக்கு சங்கடம் தான். ஆனால், இதை வேறொரு விதமாக பார்க்க வேண்டும். டிரம்பின் மொழி மற்றும் உரையை வைத்து அவரை எடை போடக் கூடாது. உண்மையில் என்ன நடந்தது என்பதை பார்க்க வேண்டும். பாகிஸ்தானின் பஞ்சாபில் டிரம்பின் அனுமதி இல்லாமலா தாக்குதல் நடந்தது? டிரம்ப் அதற்கு அனுமதி அளித்தார் என்பது தெரிந்ததே. இந்தியா தன்னுடைய இலக்கை அடைந்துள்ளது, அதன் பிறகு யார் சண்டை நிறுத்தத்தை அறிவித்தால் என்ன? அதனால் என்ன வித்தியாசம் ஏற்பட்டுவிடும்?" என்றார்.

வெளியுறவு துறை முன்னாள் செயலாளரும் அமெரிக்காவுக்கான இந்திய முன்னாள் தூதருமான நிரூபமா மேனன் ராவ், இந்த முழு விவகாரத்திலும் இந்தியா மற்றும் பாகிஸ்தானை ஒரே அளவுகோலில் வைத்திருக்க டிரம்ப் முயற்சிப்பதாக நம்புகிறார்.

டொனால்ட் டிரம்ப், நரேந்திர மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை ஏற்காது என்பதே இந்தியாவின் கொள்கையாக உள்ளது.

'ஒரே அளவுகோலில் இந்தியா-பாகிஸ்தான்'

நிரூபமா ராவ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "மே 10-ஆம் தேதி டிரம்ப் தன்னுடைய கருத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை ஒரே மாதிரி பாராட்டுவது, தெற்காசியாவின் புவிசார் அரசியலின் சிக்கலான தன்மையை தெளிவாக பிரதிபலிக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தானை அமெரிக்கா ஒரே அளவுகோலில் வைக்கிறது. அதேசமயம், சீனாவை எதிர்ப்பதில் இந்தியா அமெரிக்காவின் கூட்டாளியாக உள்ளது. இந்த பிராந்தியத்தில் இந்தியாவின் பங்கு மிகப்பெரிதாக உள்ளது." என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "அதிகாரப்பூர்வ தளங்கள் மற்றும் ஊடகங்களில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை இந்தியா நிராகரித்துள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமாகவே சண்டை நிறுத்தம் எட்டப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது. பதற்றம் நிறைந்த காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாதம் குறித்து இந்தியா தன் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளது. அமெரிக்கா இந்தியாவின் கூட்டாளி என நான் நம்புகிறேன், தற்காலிகமாக நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து மட்டுமே இந்த கூட்டுறவை பார்க்கக் கூடாது." என்றார்.

சிந்தனை மையமான அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் வெளியுறவு கொள்கை இயல் துறையின் துணைத் தலைவர் பேராசிரியர் ஹர்ஷ் வி பண்ட்-ம் சண்டை நிறுத்தம் குறித்து டிரம்ப் அறிவித்த போது, இரு நாடுகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாததை காட்டியதாக நம்புகிறார்.

அவர் கூறுகையில், "இந்தியா தன்னுடைய அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது, டிரம்பின் அறிவிப்பில் உள்ள குழப்பம் குறித்து பதில் அளித்துள்ளது. யாருடைய அழுத்தத்தின் கீழும் இந்தியா உள்ளதாக நான் கருதவில்லை. டிரம்பின் மொழியில் நிச்சயமாக பிரச்னை இருந்தது, ஆனால் அதுகுறித்து டிரம்புக்கு இதற்கு பின்னால் பெரிய சிந்தனை இருப்பதாக நான் நினைக்கவில்லை. டிரம்பின் மொழி இப்படித்தான் இருக்கும். மிகவும் ஒருசார்பாகத்தான் அவர் சில சமயங்களில் பேசுவார்" என்றார்.

நரேந்திர மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சௌதி அரேபியாவுக்கு மோதி சென்றிருந்த போது பஹல்காமில் தாக்குதல் நிகழ்ந்தது

'டிரம்பின் பேச்சை வைத்து எடை போடக் கூடாது'

பேராசிரியர் பண்ட் கூறுகையில், "யார் வேண்டுமானாலும் எதையும் சொல்லலாம், அதை இந்தியா கேட்கும் என்ற நிலை இப்போது இல்லை. அமெரிக்காவில் டிரம்பின் நிர்வாகம் உள்ளது என இந்தியாவுக்கு தெரியும், எனினும் பாகிஸ்தானின் பஞ்சாபை இந்தியா தாக்கியது. தன்னுடைய பேச்சின் வாயிலாக டிரம்ப் நிச்சயமாக அதிக சிக்கலை ஏற்படுத்தியுள்ளார், இதனால் இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அரசை சூழந்து கொண்டு கேள்வி எழுப்பும். 24 மணிநேரத்தில் யுக்ரேன்-ரஷ்யா போரை நிறுத்துவதாக டிரம்ப் கூறினார், ஆனால் அதை அவரால் செய்ய முடியவில்லை. அமெரிக்கா வருவது இயல்பானதுதான், ஆனால் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை செய்ய வேண்டியிருந்தது. டிரம்ப் பாகிஸ்தானை சமாதானப்படுத்தினால், அதை ஏற்றுக்கொள்வதில் இந்தியாவுக்கு ஏன் சிக்கல் இருக்கும்?" என அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அப்படியான சூழலில் சண்டை நிறுத்தம் தொடர்பாக இந்தியா மீது அழுத்தம் இருந்தது. அதேசமயம், பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (IMF) கடன் வேண்டும், அதுதொடர்பாக அந்நாட்டுக்கும் அழுத்தம் இருந்திருக்கும். ஐ.எம்.எஃப் மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை ஒரு துருப்புச் சீட்டாக அமெரிக்கா பயன்படுத்தியிருக்கும் என நினைக்கிறேன். இதனால், இரு நாடுகளுக்கிடையே ஒத்த கருத்து ஏற்பட்டுள்ளது. ஐ.எம்.எஃப்-ல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வக்களிக்கவில்லை." என கூறினார்.

ஆனால், சமீப ஆண்டுகளாக உலகம் முழுவதும் அமெரிக்காவின் நம்பகத்தன்மை குறித்த விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக, டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு நம்பகமான கூட்டாளியாக அமெரிக்காவை கருத முடியாது என்ற அச்சம் எழுந்தது. தாலிபன் மீண்டும் அதிகாரத்துக்கு வரலாம் என்ற பயம் நிலவிய சூழலில், அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்து தன் துருப்புகளை திரும்ப பெற்றுக்கொண்டது, இதையடுத்து அந்த பயம் உண்மை என நிரூபணமானது.

பனிப்போர் காலத்திலிருந்தே அமெரிக்காவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இருந்துள்ளது, ஆனால் தற்போது அமெரிக்காவுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இத்தகைய முக்கியத்துவம் இருந்த போதிலும், இந்தியா மற்றும் அமெரிக்க உறவுக்கிடையே சந்தேகம் மற்றும் நம்பகமின்மை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cnv1j0n27rqo

  • கருத்துக்கள உறவுகள்

போர் நிறுத்தம்.. நாடு நாடாக போய் பெருமிதம் பேசும் டொனால்ட் டிரம்ப்- நெருக்கடியில் மத்திய அரசு!

14 May 2025, 9:32 AM

Trumph-1.jpg

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த முயற்சிகள் குறித்து அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பெருமிதம் தெரிவித்து வருகிறார். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டை எதிர்க்கட்சிகள் கடுமையாக கேள்வி எழுப்பி வரும் நிலையில் டிரம்ப்பின் பெருமித பேச்சால் மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக Operation Sindoor ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர்ச் சூழல் உருவானது. இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளும் 4 நாட்களாக இடைவிடாமல் தாக்குதல்கள் நடத்தின.

இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையீட்டால் இருநாடுகளும் தாக்குதல்களை நிறுத்திவிட்டன. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தை டொனால்ட் டிரம்ப்தான் முதலில் அறிவித்தார். இதனையடுத்தே இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் அதிகாரப்பூர்வமாக தாக்குதல்கள் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டன.

இந்தியாவைப் பொறுத்தவரையில் 3-வது நாடு ஒன்றின் தலையீட்டை எப்போதும் அனுமதிப்பது இல்லை. ஆனால் பாகிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை மத்திய அரசு ஏன் அனுமதித்தது? என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதனால் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பாக மத்திய அரசு எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதும், பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமான படைதளத்தில் போர் வீரர்களிடையே உரையாற்றிய போதும் எதுவுமே விளக்கம் தரவில்லை.

இந்த பின்னணியில் சவுதி அரேபியா சென்ற டொனால்ட் டிரம்ப், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போரை தாமே நிறுத்தியதாக மீண்டும் பெருமிதத்துடன் பேசி இருக்கிறார். இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுடனான அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தங்களை முன்வைத்தே இந்த போர் நிறுத்தத்தை தாம் செயல்படுத்தியதாகவும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், செல்லும் நாடுகளில் எல்லாம் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்துக்கு தாமே காரணம் என இடைவிடாமல் பேசி வருவது மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. https://minnambalam.com/ceasefire-trump-claims-glory-while-indian-government-faces-heat/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.