Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு கட்சியில் சுமந்திரனே அதிகாரம் மிக்கவர் – சிறிதரனுக்கு, சிவஞானம் அறிவுரை

May 19, 2025 2:08 pm

தமிழரசு கட்சியில் சுமந்திரனே அதிகாரம் மிக்கவர் – சிறிதரனுக்கு, சிவஞானம் அறிவுரை

“தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர்.

இதனை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உணர்ந்து கொள்ளவேண்டும்” என தமிழரசுக் கட்சியின் பிரதித் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளின் தவிசாளர், உப தவிசாளர் நியமன சர்ச்சை தொடர்பில் இன்றைய தினம் (19.05.2025) அவர் விளக்கமளித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர்.

கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு அதிகாரம் இருக்கின்றது. அதன்படி கட்சியில் வறிதாகும் பதவி நிலைகளுக்கு மத்திய செயற்குழு உறுப்பினர்களை நியமிக்கும்.

அதன்படியே இன்றைய பதவி நிலை நியமனங்கள் செய்யப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதை சிறிதரன் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.

இதனிடையே உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அமைப்பு தொடர்பில் பல கட்சிகளுடன் பேசியிருக்கின்றோம்.

அதற்கு தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் ஓரணியில் நின்று தேசியக் கட்சிக்கு இடங்கொடுக்காத வகையில் ஆட்சி அதிகாரத்தை தமிழ் தரப்பினர் கையகப்படுத்தும் வகையில் அமைவதற்கு பங்களிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுகின்றேன்.

நான் ஆட்சி செய்வது தொடர்பில் தமிழ் தரப்பிலுள்ள கட்சிகளுடன் பேசியுள்ளேன்.

அதன்படி இன்று எமது தேசியப் பரப்பில் இருக்கும் கட்சித் தலைவர்களுக்கும் குறிப்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட ஏனைய தரப்பினரது ஆதரவு கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

ஏனையோர் கூறுவது போன்று எமது கட்சி எந்தவொரு ஒற்றுமை இணக்கபாட்டையும் குழப்பியது கிடையாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழரசு கட்சியின் பொது செயலாளர் என்பதை இதுவரை ஏற்கவில்லை என தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று வழங்கிய செவ்வியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://oruvan.com/sumanthiran-is-a-powerful-figure-in-the-ilankai-tamil-arasu-kachchi/

  • கருத்துக்கள உறவுகள்

சிறிதரன் முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இதுக்குப்பிறகும் சிறிதரன் வீட்டுக்குள்ளை இருந்தால் வேண்டா விருந்தாளிதான். ஆனால்சிறிதரன் டஎப்படியான அவமானங்களையும் சகித்துக்கொண்டு வீட்டுக்குள்ளேய இருப்பார் என்பது எனது கணிப்பு. எனென்றால் அவரை ஆதரித்தவர்கள் எல்லோரும் வெளியேறிய பின்னரும் சிறிதரன்மட்டும் அவர்கள் கோவணத்தை உருவும்வரை காத்திருக்கிறார். கோவணத்தையும் உருவினால் வீட்டைவிட்டுவெளியே போகமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

எமது கட்சி எந்தவொரு ஒற்றுமை இணக்கபாட்டையும் குழப்பியது கிடையாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாவம் இவர்! பதவிக்காக எப்படியெல்லாம் ஆமா போடுகிறார். கட்சிக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்துவதே இவர்கள்தான் என்பதை ஏற்றுக்கொள்ள பதவியாசை விடவில்லை. ஆமா, ஆமா என்று எல்லாப்பக்கமும் தலையாட்டுவார், பின்னர் எல்லோராலும் கைவிடப்படுவார். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிவஞானம் மூத்த அரசியல்வாதியா? அப்படி தெரியவில்லையே? மக்களால், கட்சியால் தெரிவு செய்யப்பட்டவர் சிறிதரன். அவரின் பதவியை முடக்கி வைத்துக்கொண்டு, பிடுங்கியெடுத்த பதவியை வைத்துக்கொண்டு ஆசைகாட்டும் சுமந்திரனின் பதவிக்காக தலையாட்டுகிறார். இவர்கள் எல்லாம் தன்னம்பிக்கையற்றவர்கள், மற்றவர்களை புகழ்ந்து, சார்ந்து வாழ்பவர்கள். இப்படியானவர்கள் இருக்குமட்டும், அவர்கள் தலையாட்டுவதில் அடிபொறுக்கிகள் தலைவராவர்.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

இந்த சிவஞானம் மூத்த அரசியல்வாதியா? அப்படி தெரியவில்லையே? மக்களால், கட்சியால் தெரிவு செய்யப்பட்டவர் சிறிதரன். அவரின் பதவியை முடக்கி வைத்துக்கொண்டு, பிடுங்கியெடுத்த பதவியை வைத்துக்கொண்டு ஆசைகாட்டும் சுமந்திரனின் பதவிக்காக தலையாட்டுகிறார். இவர்கள் எல்லாம் தன்னம்பிக்கையற்றவர்கள், மற்றவர்களை புகழ்ந்து, சார்ந்து வாழ்பவர்கள். இப்படியானவர்கள் இருக்குமட்டும், அவர்கள் தலையாட்டுவதில் அடிபொறுக்கிகள் தலைவராவர்.  

9 hours ago, புலவர் said:

சிறிதரன் முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இதுக்குப்பிறகும் சிறிதரன் வீட்டுக்குள்ளை இருந்தால் வேண்டா விருந்தாளிதான். ஆனால்சிறிதரன் டஎப்படியான அவமானங்களையும் சகித்துக்கொண்டு வீட்டுக்குள்ளேய இருப்பார் என்பது எனது கணிப்பு. எனென்றால் அவரை ஆதரித்தவர்கள் எல்லோரும் வெளியேறிய பின்னரும் சிறிதரன்மட்டும் அவர்கள் கோவணத்தை உருவும்வரை காத்திருக்கிறார். கோவணத்தையும் உருவினால் வீட்டைவிட்டுவெளியே போகமுடியாது.

494349971_721286346962170_63955160903433

தமிழரசு கட்சியை எங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றார்கள் பாருங்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியில் சிவஞானம் வந்ததே அபத்தம் இவரது திருமணம் நடந்தது நல்லூரில் தற்போது உள்ள மாநரசபைக் கட்டிடம் கலியாண மண்டபமாக துரையப்பாவால் கட்டப்பட்டு முதலாவது திருமணம் இவரது திருமணமே ஆரம்பத்தில் அல்பிரட் துரையப்பா விசுவாசி.

இவர் நல்லூர் தொகுதி தமிழரசுக்கட்சியின் பொறுப்பில் இருக்கிறார்.

யாழ் மாநகரசபையின் 15 ம் வட்டாரத்தின் உறுப்பினர் அம்மன்வீதியில் உள்ள யாழ்பாடி விருந்தகத்தில் அழகு நிலையம் நடத்துகிறான் என்று சொல்லி விபசாரவிடுதி நடத்தியவர்.

அவரது மருமகன் இப்போது நல்லூரடியில் மாமிசம் விக்கும் உணவகத்துக்குச் சொந்தக்காரன்.

அந்த உணவகத்தில் முதல் உரிமையாளர் இப்போ நடாத்துபவரது மைத்துனர் அவர்தான் போனமுறை நல்லூர் திருவிழாவுக்க போதைப் பொருளை பொட்டலம் கட்டி வித்து பிடிபட்டு சமூகவலைத்தளங்களில் அடிபட்டவர்.

இப்ப வழக்கு வம்பு என வர கனடாவுக்கு ஓடிவிட்டார்.

ஊருக்கு ஊர் இப்போ தமிழரசுக்கட்சியில் சுகிர்தன்கள் உலாவுகிறார்கள்.

சுமந்திரன் இவ்வாறானவர்களை ஏன் உள்வாங்கியுள்ளார் என்றால் பலவீனமானவர்கள் முதுகில் அளிக்கிறுப்பவர்களே பணிந்து போவார்கள்.

இப்படி ஒரு பிரச்சனையில் சுமந்திரனும் தெரியாத்தனமாக மாட்டுபட்டவர் அது தனது கார் சாரதியின் மைத்துனர் கஞ்சா கடத்தி பிடிபட ரணில்வரைக்கும் விடையம் சென்று வெளியில எடுத்து விட்டவர்.

அந்த விடையத்தில் சுமந்திரனின் குடும்பி ரணில் கையில் மாட்டுப்பட்டது சிங்களத் தலைமைகளுக்கு நிறையபேர் கடன் பட்டிருக்கினம் அதுதான் எல்லோரும் அவர்களுக்கு முன்னால் பம்முகினம்.

இதே பாணியைத்தான் சுமந்திரனும் கடைப்பிடித்து ஒரு அடிமைகள் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

நக்குண்டார் நாவிழந்தார்.

ஒரு பேச்சுக்காக சொல்லுறன் இந்த அடிமைகளிடம் நாம் கேட்டு எமது தேவைகளை நிறைவேற்றுவதை விட நேரடியாக ஒற்றையாகவோ ஒருமித்தோ சிங்களவனிடம் போய்க் கேட்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

தமிழரசு கட்சியில் சுமந்திரனே அதிகாரம் மிக்கவர் – சிறிதரனுக்கு, சிவஞானம் அறிவுரை

பார் சிறிதரன் அவர்கள் சிவஞானத்தின் அறிவுரையைக்கேட்டு ஞானம் பெறவேண்டும். இல்லாவிட்டால் புஞ்சி பொறளையில் உள்ள அக்கொயனஸ் கல்லூரியில் இணைந்துகொள்ளவேண்டும்!🤔

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

494349971_721286346962170_63955160903433

தமிழரசு கட்சியை எங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றார்கள் பாருங்கள்.

உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னமே சிவஞானம் டக்கிலஸை குறிவைத்து, ஆயுதம் ஏந்தியவர்  எல்லோரும் விடுதலைக்காக போராடியவர்கள் என்று கட்டியம் கூறும்போதே நினைத்தேன், டக்கிலஸை விட இவர் ஒருபடி கீழ் என்று. உண்மையிலேயே இவர்கள் ஈ. பி. டி. பியோடு இணைவதுதான் பொருத்தமானது. வீட்டை உடைத்தாயிற்று, அங்கே குடியேறுவதுதான் இவர்களுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும்.

சிங்கள எஜமானாரோடு கூடிக்குலாவி, அவர்களுக்கு வாக்கு போடும்படி மக்களை வழிநடத்தியவர்கள், அனுரா மட்டுமே ஏதோ சிங்களகட்சி அவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கக்கூடாது என்று கூட்டம்  போட்டு கத்திவிட்டு, பின் அவர்களோடேயே டீல் போட்டு, சரிவராத சந்தர்ப்பத்தில் டக்கிலஸை வரவேற்கினம். வெட்கம், தன்மானம் கெட்டவர்கள். இந்த மனிதனுக்கு வயதிற்கு தகுந்த அறிவுமில்லை, அனுபவமுமில்லை, பட்டறிவுமில்லை. வெறும் வெத்து. 

  • கருத்துக்கள உறவுகள்

494349971_721286346962170_63955160903433

சின்ன திருத்தம் சாரே.

தமிழரசுக் கட்சியிம் ஈபிடிபி மாதிரிக் கட்சிதான்.

Rj Prasath Santhulaki

சுத்துமாத்து சுமந்திரன்... தமிழரசு கட்சிக்குள் வந்ததில் இருந்து, கட்சி .... நாய் படாத பாடு படுகுது. 😂

  • கருத்துக்கள உறவுகள்

499365917_704962679140774_49623769198683

முள்ளிவாய்க்கால் வராமல் கொழும்பில் சூட்டிங் நடாத்திய சுமந்திரன்…

இந்த பெண்மணி தான் தீவிர புலியெதிர்ப்புவாதி, 2020 இல் சுமந்திரன் மட்டக்களப்பில் இவாவை தான் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட துடியா துடித்தவர்.

புலியெதிர்ப்புவாதிகள் எல்லாம் எங்கு ஒன்றாய் சங்கமிக்கிறார்கள் என்பதை அனைவரும் உணர்ந்தால் சரி.

மட்டக்களப்பு இரகசியங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

499524520_1115783510586620_3118723855940

சுமந்திரனும், சிவஞானமும் நடத்தும் வில்லுப்பாட்டு. 😂 🤣

இந்த வருடத்தின்... மிகச் சிறந்த கருத்தோவியம். 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.