Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Stop-child-abuse-image.jpg?resize=750%2C

7வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!

ஏழு வயது சிறுமியை சட்ட ரீதியான பாதுகாவலரிடம் இருந்து கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 62 வயது ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

குறித்த குற்றவாளிக்கு 30,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு, அதனை செலுத்தத் தவறினால் ஒரு வருட கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 30 இலட்சம் ரூபாவும், அவளது தாய்க்கு 10 இலட்சம் ரூபாவும் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த இழப்பீடு செலுத்தப்படாவிட்டால் மேலும் ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

தண்டனை விதிக்கப்படுவதற்கு முன், அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், குற்றவாளி ஐந்து பிள்ளைகளின் தந்தை எனவும், அவரது ஐந்து பிள்ளைகளும் பெண் குழந்தைகள் எனவும் கூறினார்.

இவ்வாறு பெண் குழந்தைகளை கொண்ட ஒரு தந்தை இத்தகைய பாலியல் துஷ்பிரயோகம் செய்தது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அவருக்கு சட்டத்தால் வழங்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டனையை விதிக்க வேண்டும் எனவும் சட்டத்தரணி கோரினார்.

குற்றவாளி சார்பில் ஆஜரான சட்டத்தரணி, குற்றவாளி 62 வயதுடையவர் எனவும், அவர் கடந்த ஏழு ஆண்டுகளாக காசநோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.

அவரது இளைய மகள் 14 வயதுடையவர் எனவும், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு லேசான தண்டனை விதிக்க வேண்டும் எனவும் சட்டத்தரணி கோரினார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், தனது மகளுக்கு ஏற்பட்ட அநீதி இன்னொரு குழந்தைக்கு ஏற்படாதவாறு குற்றவாளிக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என கோரினார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிபதி, குற்றவாளியின் குற்றத்தின் தன்மையை பரிசீலிக்கையில், குற்றவாளி தொடர்பில் மென்மையாக செயல்பட முடியாது என சுட்டிக்காட்டினார்.

ஐந்து பெண் குழந்தைகளின் தந்தையாக இருந்தும், பெண் குழந்தைகளின் மதிப்பை உணர்ந்திருக்க வேண்டிய குற்றவாளி, ஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தது கடுமையான குற்றம் என நீதிபதி குறிப்பிட்டார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று சமூகத்தில் வலுவான குரல் எழுப்பப்படும் இந்த காலகட்டத்தில், இவ்வாறான சம்பவங்களை சமூகம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், எனவே குற்றவாளி தொடர்பில் மென்மையாக செயல்பட முடியாது எனவும் கூறி, இந்த தண்டனையை நீதிபதி அறிவித்தார்.

https://athavannews.com/2025/1432991

இந்த தீர்ப்பின் மூலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு நீதி கொடுக்கப்பட்டது மட்டுமல்ல, இந்த காமுகனிடம் இருந்து 5 பெண் பிள்ளைகளும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இந்த தீர்ப்பின் மூலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு நீதி கொடுக்கப்பட்டது மட்டுமல்ல, இந்த காமுகனிடம் இருந்து 5 பெண் பிள்ளைகளும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

அண்மையில் இதே போல் இன்னொரு திரியில் உங்களுடனும் ஏராளனுடனும் இப்படியானோருக்கு “ஆண்மை நீக்கம்” செய்வது பற்றி கருத்து பரிமாறி இருந்தேன்.

யூகேயில் ஒரு பரீட்சார்த்தமாக (pilot scheme ) மருந்துகள் மூலம் ஆண்மை அகற்றும் (chemical castration) திட்டம் ஒன்றை நடைமுறைபடுத்துகிறார்கள்.

BBC News
No image preview

Chemical castration for sex offenders to be trialled in 2...

Justice Secretary Shabana Mahmood is also exploring whether chemical castration could be made mandatory.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அண்மையில் இதே போல் இன்னொரு திரியில் உங்களுடனும் ஏராளனுடனும் இப்படியானோருக்கு “ஆண்மை நீக்கம்” செய்வது பற்றி கருத்து பரிமாறி இருந்தேன்.

யூகேயில் ஒரு பரீட்சார்த்தமாக (pilot scheme ) மருந்துகள் மூலம் ஆண்மை அகற்றும் (chemical castration) திட்டம் ஒன்றை நடைமுறைபடுத்துகிறார்கள்.

BBC News
No image preview

Chemical castration for sex offenders to be trialled in 2...

Justice Secretary Shabana Mahmood is also exploring whether chemical castration could be made mandatory.

கொசான்,

Casration என்பதை ஆண்மைநீக்கம் என்பது சரியா ஏனென்றால் இது பெண்களுக்கும் பாவிக்கப்படுமாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

500923958_3983851795190119_8947810570202

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

கொசான்,

Casration என்பதை ஆண்மைநீக்கம் என்பது சரியா ஏனென்றால் இது பெண்களுக்கும் பாவிக்கப்படுமாம்

உண்மைதான்.

புணர்ச்சி-ஊக்க நீக்கம் சரியான பதமோ?

5 minutes ago, தமிழ் சிறி said:

500923958_3983851795190119_8947810570202

இப்போதைக்கு குற்றவாளிகள் ஓம்பட்டால் மட்டுமே இதை செய்வார்களாம்.

பிரச்சனை என்னெவெண்டால் யூகேயில் சிறைகள் 99% நிரம்பி விட்டது.

இந்த தண்டனைக்கு ஓம்படும் ஆட்களை வெள்ளனவாக வெளியில் விட திட்டமிடுகிறார்கள் என நினைக்கிறேன்.

ஆனால் இவை 60% மட்டுமே வினைதிறனானவையாம்.

40% இல ஒருவர் யாரும் பிள்ளையள் மீது கைவத்த்தால் - வெளியால விட்ட அமைச்சர் (பாகிஸ்தானி வம்சாவழி பெண்) கதி அதோ கதிதான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.