Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம் : நெஞ்சில் ஓர் ஆலயம் - 1962

குரல் : பி.சுசீலா

முத்தான முத்தல்லவோ

மிதந்து வந்த முத்தல்லவோ

கட்டான மலரல்லவோ

கடவுள் தந்த பொருளல்லவோ

(முத்தான)

சின்னஞ்சிறு சிறகுகொண்ட சிங்காரச் சிட்டல்லவோ

செம்மாதுளை பிளந்து சிரித்து வரும் சிரிப்பல்லவோ

மாவடுக் கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ

பூவின் மனமல்லவோ பொன் போன்ற குணமல்லவோ

(முத்தான)

வாழாத மனிதரையும் வாழவைக்கும் சேயல்லவோ

பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ

தாழம் குடை அல்லவோ தள்ளாடும் நடையல்லவோ

மாலைப் பொழுதல்லவோ வந்தாடும் செண்டல்லவோ

(முத்தான)

Edited by nunavilan

  • Replies 1.2k
  • Views 208.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    முதல் நீ, முடிவும் நீ மூன்று காலம் நீ... கடல் நீ, கரையும் நீ காற்று கூட நீ... மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே...   கவிஞர் தாமரையின் வரிகளில் ஒரு அழகான பாடல

  • nunavilan
    nunavilan

    பாடல்: இதுவும் கடந்து போகும் படம்: நெற்றிக்கண் பாடியவர்: சிட் சிறிராம் இசை: கிறிஸ்    

  • nunavilan
    nunavilan

    நீ என் பக்கம் ( calm down tamil version)  

சுகனுக்கு நன்றிகள்.

மடிமீது தலை வைத்து பாடல், எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கருப்பு வெள்ளை படங்களின் விசிறி நான். இந்தப் படத்தையோ படலையோ பார்த்ததில்லை. கண்ணதாசனின் காதல் சொட்டும் வரிகள். இலைமறை காயாய் வரிகளை அமைத்திருக்கிறார். பாடல் காட்சியை இப்போது தான் பார்க்கிறேன். விரசமில்லாத ஆனால் காதல் சுவை குன்றாமல் இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன் சமையலறையில் நான் உப்பா சக்கரையா

படம்: தில்

இசை: வித்யாசாகர்

பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சுஜாதா

வரிகள்: கபிலன்

உன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா?

நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா?

(உன் சமையல்..)

நீ விரல்கள் என்றால் நான் நகமா மோதிரமா?

நீ இதழ்கள் என்றால் நான் முத்தமா புன்னகையா?

நீ அழகு என்றால் நான் கவியா ஓவியனா?

(உன் சமையல்..)

நான் வெட்கம் என்றால் நீ சிவப்பா கன்னங்களா?

நான் தீண்டல் என்றால் நீ விரலா ஸ்பரிசங்களா?

நீ குழந்தை என்றால் நான் தொட்டிலா தாலாட்டா?

நீ தூக்கம் என்றால் நான் மடியா தலையணையா?

நான் இதயம் என்றால் நீ உயிரா துடித்துடிப்பா?

(உன் சமையல்..)

நீ விதைகள் என்றால் நான் வேரா விலைநிலமா?

நீ விருந்து என்றால் நான் பசியா ருசியா?

நீ கைதி என்றால் நான் சிறையா தண்டனையா?

நீ மொழிகள் என்றால் நான் தமிழா ஓசைகளா?

நீ புதுமை என்றால் நான் பாரதியா பாரதிதாசனா?

நீ...

நீ தனிமை என்றால் நான் துணையா தூரத்திலா?

நீ துணைதான் என்றால் நான் பேசவா யோசிக்கவா?

நீ திரும்பி நின்றால் நான் நிக்கவா போய்விடவா?

நீ போகிறாய் என்றால் நான் அழைக்கவா அழுதிடவா?

நீ காதல் என்றால் நான் சரியா தவறா?

உன் வலது கையில் பத்து விரல்... பத்து விரல்

என் இடது கையில் பத்து விரல்.... பத்து விரல்

தூரத்து மேகம் தூறல்கள் சிந்த

தீர்த்த மழையில் தீ குளிப்போம்..

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: மின்னலே

அழகிய தீயே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: மொழி

இசை: வித்யாசாகர்

பாடியவர்: பல்ராம் & சுஜாதா

பாடல்: வைரமுத்து

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

காற்றின் மொழி ஒலியா இசையா

பூவின் மொழி நிறமா மணமா

கடலின் மொழி அலையா நுரையா

காதல் மொழி விழியா இதழா

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்

மனிதரின் மொழிகள் தேவையில்லை

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்

மனிதர்க்கு மொழியே தேவையில்லை

(காற்றின் மொழி)

காற்று வீசும் போது திசைகள் கிடையாது

காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது

பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது

கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது

உலவித் திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது

காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது

(இயற்கையின் மொழிகள்)

வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்

வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்

உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்

ஓசை தூங்கும் ஜாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்

ஆசை தூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும்

(இயற்கையின் மொழிகள்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வசீகரா உன் நெஞ்சினிக்க

படம்: மின்னலே

இசை: கரிஸ் ஜெயராஜ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேளாமல்

படம்: அழகிய தமிழ்மகன்

இசை: ஏ.ஆர்.ரகுமான்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

பெண் : கேளாமல் கையிலே வந்தாயே காதலே

கேட்டு ரசித்த பாடல் ஒன்றை

மீண்டும் இந்த ஞாபகம் தூண்ட

கேட்டு ரசித்த பாடல் ஒன்றை

மீண்டும் இந்த ஞாபகம் தூண்ட

என்னை உன்னை எண்ணி யாரோ

எழுதியது போலவே தோன்ற....

என்னை உன்னை எண்ணி யாரோ

எழுதியது போலவே தோன்ற....

ஆண் : கேளாமல் கையிலே வந்தாயே காதலே

என் பேரை கூறிடும் உன்பேரும் கோகிலம்

பெண் : கோகிலம்.. கோகிலம் ... கோகிலம்..

நெஞ்சிலே காதலின் கால்தடம்..

கேளாமல் கையிலே வந்தாயே.. காதலே

என் ராமன் நீயெனில் உன்கையில் நான் அணில்

ஆண் : இனிமேல் இனிமேல் இந்த நானும் நானில்லை

போய்வா போய்வா என்றே எனக்கே விடைகள் தந்தேன்

பெண் : மெலிதாய் மெலிதாய் நானிருந்தேன்

மிக எளிதாய் எங்கும் நடந்தேன்

இன்று உனை நெஞ்சில் சுமந்தேன்

நான் நடந்தேன்.. நடந்தும் விழுந்தேன்

ஆண் : கூந்தலென்னும் ஏணி ஏறி

முத்தமிட ஆசைகள் உண்டு

பெண் : நெற்றி மூக்கு உதடு என்றே

இறங்கி வர படிகளும் உண்டு

ஆண் : கேளாமல் கையிலே வந்தாயே காதலே

என் பேரை கூறிடும் உன்பேரும் கோகிலம்

பெண் : பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே

பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே

ஏதோ நடக்கின்றதே ...?...

பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே

கண்ணை கண்ணை சிமிட்டும் நொடியில்

உன் உருவம் மறையும் மறையும்

அதனால் இமைகள் வேண்டாம் என்பேன்

ஆண் : பார்வை ஒன்றால் உனை அள்ளி

என் கண்ணின் சிறையில் அடைப்பேன்

அதில் நிரந்தரமாய் நீ இருக்க

இமைகள் வேண்டும் என்பேன்

பெண் : மேற்கு திசையை நோக்கி நடந்தால்

இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா

ஆண் : தூங்கும் தேவை ஏதுமின்றி

கனவுகளும் கைகளில் விழுமா

பெண் : கேளாமல் கையிலே வந்தாயே.. காதலே

என் ராமன் நீயெனில் உன்கையில் நான் அணில்

ஆண் : கோகிலம்.. கோகிலம் ... கோகிலம்

நெஞ்சிலே காதலின் கால்தடம்

பெண் : கோகிலம்.. கோகிலம் ... கோகிலம்

நெஞ்சிலே காதலின் கால்தடம்

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உரிமையடா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாலை இளவெயில் நேரம்

படம்:கஜனி

இசை: கரிஸ் ஜெயராஜ்

பாடியவர்: கார்த்திக்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: புத்தம் புது ஓலை வரும்

படம்: வேதம் புதிது

இசை: தேவேந்திரன்

பாடியவர்: சின்னக்குயில் சித்ரா

இனிய பாடல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வஞ்சிகோட்டை வாலிபனில் இருந்து

கண்ணும் கண்ணும் கலந்தே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

த்ரிஷாவும் மோதிர இடுப்பும்

தமிழ் சினிமாவில் ஒரு விஷயம் அந்தக் காலம் முதல் இன்று வரை தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறது.

அது, கதாநாயகிகளின் உடல் அழகை, குறிப்பாக இடுப்பழகை வர்ணிக்கும் பாடல்கள்.

நாயகிகளின் தலை முடி முதல் கனுக்கால் வரை ஒன்று விடாமல் எல்லாவற்றையும் நம்ம ஊர் கவிஞர்கள் போதும் போதும் எனும் அளவுக்கு வர்ணித்து தள்ளி விட்டார்கள்.

இதில் கவிஞர்களின் கவிப் பார்வையில் அதிகம் பட்டுள்ளது இடுப்புதான். உதட்டை விட நம்ம ஆட்களுக்கு இடுப்பு மீது என்னவோ ஒரு தனி கிக். அந்த இடுப்புக்கு என்னென்ன உவமைகளைக் கூற முடியுமோ அத்தனையையும் கூறி வர்ணித்து விடுவார்கள்.

கவிஞர்களின் வர்ணணைக்குப் பொருத்தமாக பல நாயகிகளும் கிடைத்தனர் என்பதையும் சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில் சரோஜாதேவி, காஞ்சனா, வாணிஸ்ரீ என பல இடுப்பழகிகள் தமிழ் சினிமாவை மயக்கி வந்தனர்.

அப்புறம் வந்தனர் ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா வகையறாக்கள். அதற்கு அடுத்த தலைமுறையில் சிம்ரன் இடுப்பு உலகப் பிரசித்தி பெற்றது. இன்றளவும் நடிகைகளில் சிம்ரனின் இடுப்புதான் நாயகர்கள் மற்றும் ரசிகர்களின் பேவரிட்.

இப்போதும் கூட இடுப்பழகிகளுக்குக் குறைவில்லை என்றாலும் இடுப்பு என்ற பாகத்தைத் தனியாக பார்க்க முடியாத அளவுக்கு பல உப்பல் நாயகிகள்தான் இப்போது நிறைய இருக்கிறார்கள். இருந்தாலும் த்ரிஷா போன்ற சிலரிடம் இடுப்பு சற்றே எடுப்பாக இருப்பதை மறுக்க முடியாது.

கொடி இடை, பூ இடை என்று ஆரம்பித்து கொஞ்ச நாளைக்கு முன்பு இஞ்சி இடுப்பு என்பது வரை வந்து விட்டார்கள். ஒரு கவிஞர் இடுப்பை அடுப்புக்கு சமமாக பாவித்து வர்ணித்திருந்தார். காரணம், அந்த அளவுக்கு பெண் உடலிலேயே 'சூடான' ஏரியாவாம் அது.

சரி விஷயத்துக்கு வருவோம்.. இடுப்புக்கு இன்னும் கொஞ்சம் மரியாதை கொடுத்து கவிப்பேரரசு வைரமுத்து ஒரு பாட்டைத் தீட்டியுள்ளார். இந்தப் பாட்டுக்கு இடுப்பைக் கொடுத்திருப்பவர் அதாவது நடித்திருப்பவர் த்ரிஷா.

ஆதி படத்தில்தான் இந்த இடுப்புப் பாட்டு எடுப்பாக வந்திருக்கிறதாம். ஆதியாக நடிக்கும் விஜய், த்ரிஷாவைப் பார்த்து பாடுவது போல படமாக்கியிருக்கிறார்கள். பாட்டு இப்படி ஆரம்பித்து எப்படி எப்படியோ போகிறது:

''ஒல்லி ஒல்லி இடுப்பே

ஒட்டியானம் எதுக்கு?

ஒத்த விரல் மோதிரம்

போதுமடி உனக்கு...''

இந்தப் பாட்டை சமீபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலையில், நடுங்கும் குளிரில் படமாக்கியுள்ளனர். த்ரிஷாவின் இடுப்பு மடிப்பை, ஆல்ப்ஸ் மலைத் தொடர் மடிப்பில் ஓடியாடி சிலாகித்துப் பாடி சிலிர்ப்பூட்டியிருக்கிறார் விஜய்.

thatstamil.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிங் டொங் கோவில் மணி

இசை: வித்தியாசாகர்

பாடியவர்:மதுபாலகிருஸ்ணன் &மதுசிறி

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: மின்னலே

பாடல்: வெண்மதியே வெண்மதியே நில்லு

வெண்மதி வெண்மதியே நில்லு

நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லு

வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்

மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம்..

உன்னை இன்றோடு நான் மறப்பேனே

நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில்

பூத்த காதல் மேலும் மேலும்

துன்பம் துன்பம் வேண்டாம்..

ஐன்னலின் வழி வந்து விழுந்தது

மின்னலின் ஒளி அதில் தெரிந்தது

அழகு தேவதை அதிசய முகமே

தீப்பொறி என் இரு விழிகளும்

தீக்குச்சி என என்னை உரசிட

கோடிப் பூக்களாய் மலர்ந்தது மனமே

அவள் அழகைப் பாட ஒரு மொழி இல்லையே

அளந்து பார்க்க பல விழி இல்லையே

என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே

மறந்து போ என் மனமே

வெண்மதி வெண்மதியே நில்லு

நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லு

வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்

மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம்..

உன்னை இன்றோடு நான் மறப்பேனே

நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில்

பூத்த காதல் மேலும் மேலும்

துன்பம் துன்பம் வேண்டாம்..

ஐஞ்சு நாள் வரை அவள்

பொழிந்தது ஆசையின் மழை

அதில் நலைந்தது நூறு

ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்

அது போல் எந்த நாள் வரும்

உயிர் உருகிய அந்த நாள் சுகம்

அதை நினைக்கையில்

ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்

ஒரு நிமிசம் கூட என்னை பிரியவில்லை

விபரம் ஏதும் அவள் அறிய வில்லை

என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே

மறந்து போ என் மனமே..

உன்னை இன்றோடு நான் மறப்பேனே

நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில்

பூத்த காதல் மேலும் மேலும்

துன்பம் துன்பம் வேண்டாம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றா இரண்டா ஆசைகள்

படம்: காக்க காக்க

பாடியவர்: பம்பாய் ஜெயசிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: காதல் கோட்டை

பாடல்: நலம் நலமறிய ஆவல்

நலம் நலமறிய ஆவல் உன் நலம் நலமறிய ஆவல்

நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா

தீண்டவரும் காற்றினையே நீ அனுப்பு இங்கு வேர்க்கிறதே

வேண்டுமொரு சூரியனே நீ அனுப்பு குளிர் கேட்கிறதே

கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமே

என் இதழ் உனையன்றி பிறர் தொடலாமா?

இரவினில் கனவுகள் தினம் தொல்லையே

உறக்கமும் எனக்கில்லை கனவில்லயே

கோவிலிலே நான் தொழுதேன் கோலமயில் உனைச் சேர்ந்திடவே

கோடி முறை நான் தொழுதேன் காலமெல்லாம் நீ வாழ்ந்திடவே

உன் முகம் நான் பார்க்க கடிதமே தானா

வார்த்தயில் தெரியாத வடிவமும் நானா

நிழற்படம் அனுப்பிடு என்னுயிரே

நிஜமின்றி வேரில்லை என்னிடமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்

விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்

30 நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில்

முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில்

இது எப்படி எப்படி நியாயம்

எல்லாம் காதல் செய்த மாயம்

(இது எப்படி..)

(பூவுக்கெல்லாம்..)

நிலவை பிடித்து எறியவும் முடியும்

நீல கடலை குடிக்கவும் முடியும்

காற்றின் திசையை மாற்றவும் முடியும்

கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்

ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே

ஐயோ என்னால் முடியவில்லை

சுற்றும் உலகின் விட்டம் தெரியும்

சூரியன் பூமி தூரமும் தெரியும்

கங்கை நதியின் நீளமும் தெரியும்

வங்க கடலின் ஆழமும் தெரியும்

காதல் என்பது சரியா தவறா

இதுதான் எனக்கு தெரியவில்லை

ஒற்றை பார்வை உயிரை குடித்தது

கற்றை குழல் கையீடு செய்தது

மூடும் ஆடை முத்தமிட்டது

ரத்தமெல்லாம் சுண்டிவிட்டது

ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே

ஐயோ என்னால் முடியவில்லை

மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது

மீண்டும் சோலை கொழுந்துவிட்டது

இதயம் இதயம் மலந்ர்துவிட்டது

இசை என் கதவு திறந்துவிட்டது

காதல் என்பது சரியா தவறா

இதுதான் எனக்கு தெரியவில்லை

(பூவுக்கெல்லாம்..)

படம்: உயிரோடு உயிராக

இசை: வித்யாசாகர்

பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், கேகே, ஹரிணி

வரிகள்: வைரமுத்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: பார்த்தாலே பரவசம்

இசை: ஏ.ஆர்.ரகுமான்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை செந்தமிழ்

படம்: என் குமரன் சன் ஓவ் மகாலட்சுமி

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான்,

மேலேயுள்ள பாடல் கீழே வேறு வடிவமாக..! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதா மனிதா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: உல்லாசம்

பாடல்: கொஞ்சும் மஞ்சள்

இசை : கார்த்திக் ராஜா பாடியவர்கள் : ஹரிஹரன் & Harini

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

கொஞ்சும் மஞ்சள் பூக்கள்

அழகே உன்னைச் சொல்லும்

தென்றல் வந்து என்னை

அங்கே இங்கே கிள்ளும்

சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்

தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்

நிலாவும் மெல்ல கண் மூடும்

கொஞ்சும் மஞ்சள் பூக்கள்

அழகே! உன்னைச் சொல்லும்

தென்றல் வந்து என்னை

அங்கே இங்கே கிள்ளும்

தீ மூட்டியதே குளிர்க் காற்று

என் வெட்கத்தின் நிறத்தினை மாற்று

உன் ஆசைக்கு எத்தனை வண்ணம்

ஒரு ராத்திரி ஓவியம் தீட்டு

வியர்வையிலே தினம்

பாற்கடல் ஓடிடும் நாளும்.

படகுகளா இது? பூவுடல்

ஆடிட இவள் மேனியை

என் இதழ் அளந்திடும் பொழுது

ஆனந்த தவம் இது!

உன் விரல் ஸ்பரிசத்தில்

மின்னலும் எழுமே!

அடடா என்ன சுகமே!

கொஞ்சும் மஞ்சள் பூக்கள்

அழகே! உன்னைச் சொல்லும்.

தென்றல் வந்து என்னை

அங்கே இங்கே கிள்ளும்.

சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்.

தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்.

நிலாவும் மெல்ல கண் மூடும்.

உன் மேனியில் ஆயிரம் பூக்கள்

நான் வாசனை பார்த்திட வந்தேன்.

புல் நுனியினில் பனித் துளி போலே

உன் உயிருக்குள் நனைந்திட வந்தேன்.

மயங்குகிறேன் அதில்,

உணர்வுகள் ஓய்ந்தது ஏனோ?

வழங்குகிறேன் இவள்

உதடுகள் காய்ந்தது இவள் சேலையில்

பூக்களும் கட்டிலின் கீழே தூங்கிடலானது.

உன் வளையோசையில் நடந்தது இரவே!

நினைத்தால் என்ன சுகமே!

கொஞ்சும் மஞ்சள் பூக்கள்

அழகே! உன்னைச் சொல்லும்.

தென்றல் வந்து என்னை

அங்கே இங்கே கிள்ளும்.

சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்.

தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்.

நிலாவும் மெல்ல கண் மூடும்.

கொஞ்சும் மஞ்சள் பூக்கள்

அழகே! உன்னைச் சொல்லும்.

தென்றல் வந்து என்னை

அங்கே இங்கே கிள்ளும்.

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்:கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

இசை: ஏ.ஆர்.ரகுமான்

பாடல்: சந்தனத் தென்றலை

குரல்: ஷங்கர் மஹாதேவன்

வரிகள்: வைரமுத்து

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்

இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்

என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா

காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌளனமா மௌளனமா

அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே

அதை நானும் மெய்ப்பிக்கத்தானே புது ஆயுள் வேண்டுமே

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்

இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்

என்ன சொல்லப் போகிறாய்…என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா

காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌளனமா மௌளனமா

அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே

அதை நானும் மெய்ப்பிக்கத்தானே புது ஆயுள் வேண்டுமே

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்

இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்

என்ன சொல்லப் போகிறாய்…என்ன சொல்லப் போகிறாய்

இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி

இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி

கண்ணாடி பிம்பம் கட்ட கயிர் ஒன்றும் இல்லையடி

கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி

நீ ஒன்று சொல்லடி பெண்ணே இல்லை நின்று கொல்லடி கண்ணே

எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்

என்னைத் துரத்தாதே உயிர் கரையேறாதே

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்

இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்

என்ன சொல்லப் போகிறாய்…என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா

காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌளனமா மௌளனமா

விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது

பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி

இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது

கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி

பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி

என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன

என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா

என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்

என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய் நியாயமா

என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய் மௌளனமா மௌளனமா

என்ன சொல்லப் போகிறாய்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: திருடா திருடா

பாடல்: புத்தம் புது பூமி வேண்டும்

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: இது வேறுலகம் தனி உலகம்

படம்: நிச்சய தாம்பூலம்

பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

Edited by nunavilan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.