Jump to content

Recommended Posts

Posted

இரவா பகலா குளிரா வெயிலா

இரவா பகலா குளிரா வெயிலா

என்னை ஒன்றும் செய்யாதடி

கடலா புயலா இடியா மழையா

என்னை ஒன்றும் செய்யாதடி

ஆனால் உந்தன் மௌளனம் மட்டும் ஏதோ செய்யுதடி

என்னை ஏதோ செய்யுதடி காதல் இதுதானா

சிந்தும் மணிபோலே சிதறும் என் நெஞ்சம்

கொஞ்சம் நீ வந்து கோர்த்தால் இன்பம்

நிலவின் முதுகும் பெண்ணின் மனமும்

என்றும் ரகசியம்தானா

கனவிலேனும் சொல்லடி பெண்ணே காதல் நிஜம்தானா

(இரவா பகலா குளிரா வெயிலா)

என்னை தொடும் தென்றல் உன்னை தொடவில்லயா

என்னை சுடும் காதல் உன்னை சுடவில்லயா

என்னில் விழும் மழை உன்னில் விழவில்லயா

என்னில் எழும் மின்னல் உன்னில் எழவில்லயா

முகத்திற்கு கண்கள் ரெண்டு

முத்தத்திற்கு இதழ்கள் ரெண்டு

காதலுக்கு நெஞ்சம் ரெண்டு

இப்பொது ஒன்றிங்கு இல்லையே

தனிமையிலே தனிமையிலே

துடிப்பது எதுவரை சொல்லு வெளியே

தனிமையிலே தனிமையிலே

துடிப்பது எதுவரை சொல்லு வெளியே

(இரவா பகலா குளிரா வெயிலா)

வானவில்லில் வானவில்லில் வண்ணம் எதுக்கு

வந்து தொடும் வந்து தொடும் தென்றல் எதுக்கு

அந்தி வானில் அந்தி வானில் வெட்கம் எதுக்கு

புரிந்தது புரிந்தது இன்று எனக்கு

மலையினில் மேகம் தூங்க

மலரினில் வண்டு தூங்க

உன் தோளிலே சாய வந்தேன்

சொல்லாத காதலை சொல்லிட

சொல்லி ரசிப்பேன் சொல்லி ரசிப்பேன்

சொல்லிச் சொல்லி நெஞ்சுக்குள்ள என்றும் வசிப்பேன்

அள்ளி அணைப்பேன் அள்ளி அணைப்பேன்

கொஞ்சிக் கொஞ்சி நெஞ்சுக்குள்ள உன்னை அணைப்பேன்

(இரவா பகலா குளிரா வெயிலா)

படம்: பூவெல்லாம் கேட்டுப்பார்

இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன்

பாடலாசிரியர்: பழனி பாரதி

Posted

உயிரிலே என்

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி

உனக்கென வாழ்கிறேன் நானடி

விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி

உயிருடன் சாகிறேன் பாரடி

காணாமல் போனாய் இது காதல் சாபமா?

நீ கரையை கடந்த பின்னாலும்

நான் மூழ்கும் ஓடமா?

(உயிரிலே..)

கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை

கன்களிலே தூவிவிட்டாய் மண்துகளை

இந்த சோகம் இங்கு சுகமானது

அது வரமாக நீ தந்தது

நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்

என் துணையாக வருகின்றது

ஆறாத காயங்கள் என் வாழ்க்கை பாடமா?

இனி தீயை வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா?

(உயிரிலே..)

கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்

காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே

இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா?

நான் விழுந்தாலும் மீண்டும் எழ

இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே

என்னை விட்டாயே எங்கே செல்ல?

ஆன் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி

அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும்

பழுதான தேரடி

(உயிரிலே..)

Posted

பாடல்: மனசுக்குள் மனசுக்குள்

படம்: அஞ்சாதே

மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே

முழுதாய் நனைந்தேன்

கருவிழி இரண்டுமே கருவரையாகிறதே

உனை நான் சுமந்தேன்

ஒரு காதல் இளம் புயல் நெஞ்சில் வீசியதால்

அழகானேன் புதிதாய் பிறந்தேன்

(மனசுக்குள்..)

இதுவரை காதலை இதயத்தில் பூட்டினேன்

இதயத்தை திறந்தின்று விடுதலை தருகிறேன்

வெட்கங்களின் இரகசியம் உணர்ந்தேன்

அந்த நொடியினில் உனக்குள்ளே தொலைந்தேன்

உயிர்த் தேடல் நிகழ்கின்ற கூடல் நாடகத்தில்

உன்னிடம் நான் படித்தேன் படைத்தேன்

(மனசுக்குள்..)

இரவெல்லாம் சூரியன் ஒளிர்வதைக் காண்கிறேன்

பகலெல்லாம் பனித்துளி சிதறியும் வேர்க்கிறேன்

நீ அருகினில் இருக்கின்ற நேரம்

மின்னல் அருவிகள் நரம்பினில் பாயும்

தினம் மோதல் நிகழ்கின்ற காதல் போர்க்களத்தில்

உன்னிடம் நான் பேபி என்பேன்

(மனசுக்குள்..)

  • 2 weeks later...
Posted (edited)

முகம் பூ மனம் பூ

விரல் பூ நகம் பூ நடக்கும் முதல் பூ

சிரிப்பு திகைப்பு

நினைப்பு தவிப்பு எனக்குள் கொழுப்பு

நடை போடும் மலர் காடி

ஒரு பூவும் போதுமா சொல்

எனை பூவாய் உன்னில் சூட

சுகமாகுமா சுமையாகுமா

இருமலர்கள் உரசுவதால் தீ தான் தோன்றுமா

(முகம் பூ..)

உதட்டின் மறைவில் உறைந்தது பெண்மை

ரோஜாப் பூவில் துளைத்த நிறம்

மீசை என்னும் காம்பினில் பார்த்தேன்

நெரிஞ்சிப் பூவில் உறுத்தும் குணம்

ஒவ்வொரு ஆரமும் சொவ்வரலி

ஒவ்வொரு விரலும் சாமந்தி

நீ என் பூ நான் உன் பூ

நாம் சேர சேர மாலை ஆகலாம்

உடை மலரே உடை மலரே

குடைவாய் உடைகாய் நீ

நானே நானே சூரிய காந்தி

என்னை சுற்றும் சூரியன் நீ

நானே நானே சந்திரப் பார்வை

என்னை வளர்த்தும் அல்லியும் நீ

உன் விரல் உரசும் ஒரு கணத்தில்

எனக்குள் நூறு சந்த்னப் பூ

உன் கண்கள் ஊதாப் பூ

ந் பார்க்கும் பார்வை பேசும் ஓசை போல்

ஒரு பொழுது சிவந்து விடும்

நானும் ஜாதிப் பூ

(முகம் பூ..)

Edited by nunavilan
Posted

பாடல் : பல்லானது பல்லானது

படம்: குருவி

இசை: வித்தியாசமான வித்தியாசகர்

Posted

பாடல்: மாமரத்து பூ எடுத்து

பாடியவர்: எஸ். என். சுரேந்தர்

Posted (edited)

பாடல்: நீயில்லை நிலவில்லை

பாடியவர்: கரிகரன்

இசை: சிற்பி

<object width="425" height="350"><param name="movie" value="http://www.youtube.com/watch?v=xmWUv5-jf2o"></param><param'>http://www.youtube.com/watch?v=xmWUv5-jf2o"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/watch?v=xmWUv5-jf2o" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"></embed></object>

Edited by nunavilan
Posted

மிக பழைய பாடல் ஒன்று. சுசிலாவின் குரலில் மிகவும் இனிமையான பாடல்.

பாடல்:என்ன என்ன வார்த்தைகளோ

இசை: விஸ்வநாதன் -- ராமமூர்த்தி

படம்:வெண்ணிற ஆடை

வரிகள்: கண்ணதாசன்

Posted

பாடல்: உலகமெங்கும் ஒரே மொழி

Posted

பாடல்: என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு

படம்: காதலிக்க நேரமில்லை(புதியது)

Posted

பாடல்: போறாளு பொண்ணு தாயி

படம்: கருத்தம்மா

இசை: ஏ.ஆர்.ரகுமான்

Posted (edited)

பாடல்: ஆகாயம் பூமி

படம்: சாமந்திப்பூ (1980)

பாடியவர்: மலேசியா வாசுதேவன்

இசை: மலேசியா வாசுதேவன்

தற்செயலாக இந்தப்பாடலைப் பிடித்தேன்.. மலேசியா வாசுதேவன் அவர்களின் இசையில் குறைந்த அளவே படங்கள் வந்திருந்தாலும் அவருடைய பெரும்பாலான பாடல்கள் மிக இனிமையானவை. பலருக்கு மலேசியா வாசுதேவன் அவர்கள் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பதே தெரிவதில்லை. ஒரு நல்ல இசைக் கலைஞனுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான அங்கீகாரம் இவருக்குக் கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். :icon_mrgreen:

இந்தப்பாடலைக் கேட்டுப் பாருங்கள். இதில் இல்லாத இனிமையா..! உருக்கமா..!

Edited by Danguvaar
Posted

மலேசியா வாசுதேவன் அவர்களை பற்றி புதிய தகவல்..

பாடலை இன்று தான் முதல் முதல் கேட்கின்றேன்.

நன்றிகள் டங்குவார்

Posted

படம்: சக்கரைகட்டி

பாடல்:மருதாணி விழியில்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

மருதாணி விழியில் என் ?

அடி போடி தீபாளி

கங்கை என்று கானலை காட்டும் - காதல்

கானல் என்று கங்கையை காட்டும்

வாழும் பயிர்க்கு தாநீர் வேண்டும்

காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்

மருதாணி விழியில் ஏன்?

அடி போடி தீபாளி

காதல் மண் மீது சாயாது

நிஜமான காதல் தான்

நிலையான பாடல் தான்

அதன் ஓசை எந்நாளும் ஓயாது

மருதாணி

மருதாணி விழியில் ஏன்?

அவன் இதய வீட்டில் வாழு ,

காதலே <> போலே

பொக்கிஷம் போலே அவன் செமிதான்

காணவில்ல இன்னொரு பாதி

மருதாணி மருதாணி

மருதாணி விழியில் ஏன்?

அடி போடி தீபாளி

S1

--

அவன் இதய வீட்டில் வாழும்

அவள் தேகம் எங்கு போகும்

என அவன் மறந்திட மாட்டன்

சற்று நேரம் சற்று தூரம்

காதலி கை நகம் எல்லாம்

பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான்

ஒருதிக்கஹ வாழ்கிற ஜாதி

உணரவில்லை இன்னொரு பாதி

மருதாணி விழியில் ஏன்?

மருதாணி விழியில் ஏன்?

அடி போடி தீபாளி

காதல் மண் மீது சாயாது

நிஜமான காதல் தான்

நிலையான பாடல் தான்

அதன் ஓசை எந்நாளும் ஓயாது

S2:

---

அவள் அவன் காதல் நெஞ்சில்

கண்டாலே சிறு குற்றம்

அவன் நெஞ்சம் தாய் பால் போலே

எந்நாளும் பரி சுத்தம்

ஆத்திரம் நேத்திரம் மூட - பாலையும்

கல்லை அவள் பார்கிறாள்

ஆக மொத்தம் அவசர கோலம் - ஒ

அவளுகிதை காட்டும் காலம்

மருதாணி... மருதாணி....

மருதாணி விழியில் ஏன்?

அடி போடி தீபாளி

கங்கை என்று கானலை காடும் - காதல்

கானல் என்று கங்கையை காட்டும்

வாழும் பயிர்க்கு தாணீர் வேண்டும்

காதல் கதைக்க கண்ணீர் வேண்டும்

மருதாணி விழியில் ஏன்?

அடி போடி தீபாளி

காதல் மண் மீது சாயாது

நிஜமான காதல் தான்

நிலையான பாடல் தான்

அதன் ஓசை எந்நாளும் ஓயாது

மருதாணி...

மருதாணி... விழியில் ஏன்?

மருதாணி.

மருதாணி ....மருதாணி ...

விழியில் ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி நுனாவிலன் .

தீபாளி...என்றால் என்ன ? எழுது பிழையா ? தா நீர் ???? பாடலில் சோகம் இழையோடுகிறது .

பதிவிற்கு நன்றி .

நிலாமதி

Posted

ஒரு இணைய தளத்தில் இருந்து பாடல் வரிகள் எடுக்கப்பட்டது. நிறைய எழுத்து பிழைகள் உண்டு.மன்னிக்கவும்.

Posted

பாடல்: கண்கள் இரண்டால்

படம்: சுப்பிரமணியபுரம்

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்

என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதேனே

சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்

என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்

பேச எண்ணி சில நாள்

அருகில் வருவேன்

பின்பு பார்வை போதும் என நான்

நினைப்பேன் நகுழ்வேனே மாற்றி

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்

ஒரு வண்ண கவிதை காதல் தான

ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே

இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத பகலும் அல்லாத

பொழுதுகள் உன்னோடு கழியுமா

தொடவும் கூடாத படவும் கூடாத

இடைவெளி அப்போது குறையுமா

மடியினில் சாய்ந்திட துடிக்குதே

மறுபுறம் நாணவும் தடுக்குதே

இது வரை யாரிடமும் சொல்லாத கதை

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்

என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதேனே

சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்

என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைத்தாய்

கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போதோ நுழைந்திட்டாய்

உடலும் அல்லாத உறவும் கொள்ளாத

கடவுளை போல் வந்து கலந்திட்டாய்

உன்னை இன்றி வேறொரு நினைவில்லை

இனி இந்த ஊனுயிர் எனதில்லை

தடையில்லை சாவிலும் உன்னோடு வாழ

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்

ஒரு வண்ண கவிதை காதல் தானா

ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே

இதை இருளிலும் படித்திட முடிகிறதே

பேச எண்ணி சில நாள்

அருகில் வருவேன்

பின்பு பார்வை போதும் என நான்

நினைப்பேன் நகுழ்வேனே மாற்றி

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்

என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதேனே

சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பி ல்

என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்

Posted

பாடல்: காதல் வைத்து

படம்: தீபாவளி

இசை: யுவன் சங்கர் ராஜா

Posted

பாடல்: அழகு குட்டி செல்லம் (றீ மிக்ஸ் பாடல்)

பாடியவர்: சங்கர் மகா தேவன்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Posted

பாடல்: உனக்குள் நானே

படம்: பச்சைகிளி முத்துசரம்

இசை: கரிஸ் ஜெயராஜ்

Posted

பாடல்: கண்ணன் வரும் வேளை

படம்: தீபாவளி

இசை: ஏ.ஆர் ரகுமான் (ஈஸ் தவறெனின் திருத்துங்கள்)

ஜம்மு பேபிக்காக , பாவனாவின் அழகிய நடனத்துடன் கூடிய பாடல்

Posted

பாடல்: ஐயோ ஐயோ

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Posted

பாடல்: நீ முத்தம் ஒன்று கொடுத்தால்

படம்: போக்கிரி

Posted

பாடல்: துளி துளியாய்

மிகவும் கவலையானது காட்சியில் வரும் இரு இளம் கலைஞர்களும் இன்று உயிரோடு இல்லை என்பது தான். :unsure:

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.