Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவலை நினைத்து உரலை இடிப்பது என்ன பானை கிளாஸ் எல்லாம் இடித்து உடைக்கலாம் எனெனில் நாங்கள் பாதுகாப்பான மேற்குலக நாடுகளில் பவுத்திரமாக இருக்கின்றோம்

  • Replies 454
  • Views 18.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    மக்களாட்சி மீது நம்பிக்கை குறைந்து வருவதனால், அதிக பணமும், பலமும் உள்ளவர்கள் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளனர். இது ஏகாதிபத்ய அரசுகளுக்கு வழி கோலுகின்றது. அரபு நாடுகளில் ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் ஆட்சி

  • எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது. பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    டிரம்ப் சீற்றம் கமெனி காட்டம் இடியை இறக்கிய இஸ்ரேல் .. ஈரான் சரவெடி .. இஸ்ரெல் அதிரடி.. இறங்கி அடிக்கும் ஈரான்.. சண்டை பிடிப்பவர்களை விட இவர்கள் "தலைப்பு" இம்சை தாங்கல சாமீ..

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

இப்போது மேற்கத்தைய ஊடகங்களில் ஈரானும் ரஷ்யாவும் மட்டுமே உலக அமைதியை கெடுத்துக்கொண்டிருக்கின்றன என்றொரு பிரமாண்டத்தை உருவாக்கிக்கொண்டு வருகின்றார்கள். ஆனால் இந்த மேற்குலகு தாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என திரும்பியும் பார்ப்பதில்லை.முன்னோக்கியும் பார்ப்பதில்லை.

அனைவருக்கும் நன்றி!

உண்மை! ஆனால், மனிதர்களுக்குச் சுடும். அவர்கள் பூனைகள். இன்றுகூட டீ.எல்.எவ் DeutschlandFunk வானொலியில் காலையில் 5:30மணிக்கு இளம் யூத அமைப்பின் தலைவரையும், 15:30க்கு ஈரான் புலம்பெயரமைப்பின் ஒருங்கிணைப்பாளரையும் செவ்விகண்டு ஒலிபரப்புகிறார்கள். இந்த ஊடகங்கள் 2009இல் சிங்களம் இன அழிப்பில் ஈடுபட்டபோது, எமது மக்கள் தினம்தோறும் வீதிகளில் நின்று அவலக் குரலெழுப்பியபோது திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

உலக அமைதியை ஒரு முனையில் வட அத்திலாந்திக் கூட்டாண்மையின் நாட்டாண்மைத்தனம் உரசிப்பார்க்கத் தீப்பற்றிய நிலை. மறுபுறத்தே மிகப்பெரும் இனவழிப்பை இஸ்ரேல் மேற்கொள்வதன் ஊடாக மத்திய கிழக்கைக் கொதிநிலையாக்கியதோடு, அனைத்துலக விதிகளுக்கு முரணாக ஈரான் மீது அத்துமீறிய தாக்குதலைத் தொடுத்துள்ளது. இதற்கு முட்டுக்கொடுப்பதில் அதிதீவிரமாக யேர்மனியும் ஈடுபட்டிருப்பதன்வாயிலாக, அதனது சனநாயக முகமூடி கிழிந்து தொங்குகிறது.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

23 hours ago, ரசோதரன் said:

அதற்கான நிகழ்தகவைக் குறைக்கும் முயற்சியே இன்று போய்க் கொண்டிருக்கின்றது. என்னதான் வட கொரியா சொன்னாலும், அவர்கள் அணு ஆயுதத்தை பிரயோகிக்கமாட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கை பொதுவாக இருக்கின்றது. ஆனால் ஈரானின் மீது அந்த நம்பிக்கை பல நாடுகளுக்கு இல்லை. மற்றும் ஈரானுடனான தீவிரவாத இயக்கங்களுக்கு இருக்கும் நெருக்கமான, வெளிப்படையான தொடர்புகளும் இந்த விடயத்தில் ஒரு காரணமாக அமைகின்றது. அணு ஆயுதங்கள் சில குழுக்களுக்கு கைமாறி விடக்கூடாதே என்ற ஒரு கவனம்.

நீங்கள் கூறுவதைப் பார்த்தால் ஊர்ச் சண்டியர்களின் நினைவுதான் வருகிறது. அதாவது பார்த்ததற்காகச் சண்டைக்குப்போதல். தர்க்கரீதியாக யோசித்தால் அமெரிக்காவும் இஸ்ரேலியர்களும் செய்த, செய்கின்ற அத்துமீறிய அநியாயங்களின் முன் இவர்களால் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நாடுகள் அணுகுண்டை ஏன் வைத்திருக்கக் கூடாது. யப்பானியர்களை எலிகளாக எண்ணி அணுகுண்டைப் போட்டழித்த அமெரிக்காவுக்கு ஈரானை அணுகுண்டு செய்யாதே என்று உத்தரவிடும் தார்மீக உரிமை இருக்கிறதா? 90 அணுகுண்டுகளை வைத்திருக்கும் இஸ்ரேலுக்கு ஈரானைத் தாக்க என்ன அருகதை இருக்கிறது போன்ற வினாக்களுக்கு விடைகாண முடியுமா? நிகழ்தகவைக் குறைத்தல் என்பது முதலில் 5000க்கு மேல் அணுகுண்டுகளை வைத்திருக்கும் அமெரிக்காவிலிருந்து தொடங்க வேண்டும். தமது அணுகுண்டுகளை அழித்தொழித்துவிட்டல்லவா ஏனைய நாடுகளைக் கேட்கவும் தாக்கவும் வேண்டும். ஐ.நா. என்று ஒரு நிறுவகம் உலகில் இருக்கிறதா? அப்படி இருந்தால் அடாத்தாக ஆபிரிக்க நாடுகளுள் இறங்கும் ஐ.நா. படைகள் இலங்கைத் தீவிலோ அல்லது இஸ்ரேலிலோ இறங்கி இன அழிப்பைத் தடுக்க முனையவில்லை. அமெரிக்கா ஆப்கான் முதல் லிபியா வரை வளர்த்தவிட்ட தீவிரவாதத்தைவிட வேறொருநாடும் செய்துவிட முடியாது. ப.வி. இயக்கத்தைப் பலவீனப்படுத்த இஸ்ரேல் உருவாக்கிய பல குழுக்களில் கைமாறிக் கட்டுமீறியதே கமாஸ்.

" இந்த உலகம் நீதியின் அச்சில் சுழலவில்லை. தார்மீகச் சட்டநெறிகளோ, மக்களின் உரிமைகளோ அல்ல, பொருளாதார வணிக நலன்கள்தான் தற்போதைய உலகப் போக்கைத் தீர்மானிக்கின்றன..." என்ற மேதகு அவர்களின் கூற்று 17 ஆண்டுகளைக் கடந்தும் பொருந்திப் போகிறது.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

22 hours ago, விசுகு said:

இது என்ன கேள்வி சகோ. துப்பாக்கி தூக்காதே என்று அணுகுண்டு வைத்திருப்பவன் சொல்வது தான் இயற்கையானது.

அதனை மாற்றியமைக்க முனைந்தவர்களை உலக வல்லாதிக்க சக்திகள் அழித்து வரும் நிலை தொடர்வதால் உலகம் தொடர்ந்தும் நசிந்தழிகிறது. ஆனால், பல சர்வாதிகாரிகளை இந்த உலகம் கடந்து நிமிர்வதும் நடந்துள்ளது. இனியும் நடக்கும் என நம்புவோம்.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nochchi said:

நீங்கள் கூறுவதைப் பார்த்தால் ஊர்ச் சண்டியர்களின் நினைவுதான் வருகிறது. அதாவது பார்த்ததற்காகச் சண்டைக்குப்போதல். தர்க்கரீதியாக யோசித்தால் அமெரிக்காவும் இஸ்ரேலியர்களும் செய்த, செய்கின்ற அத்துமீறிய அநியாயங்களின் முன் இவர்களால் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நாடுகள் அணுகுண்டை ஏன் வைத்திருக்கக் கூடாது. யப்பானியர்களை எலிகளாக எண்ணி அணுகுண்டைப் போட்டழித்த அமெரிக்காவுக்கு ஈரானை அணுகுண்டு செய்யாதே என்று உத்தரவிடும் தார்மீக உரிமை இருக்கிறதா? 90 அணுகுண்டுகளை வைத்திருக்கும் இஸ்ரேலுக்கு ஈரானைத் தாக்க என்ன அருகதை இருக்கிறது போன்ற வினாக்களுக்கு விடைகாண முடியுமா? நிகழ்தகவைக் குறைத்தல் என்பது முதலில் 5000க்கு மேல் அணுகுண்டுகளை வைத்திருக்கும் அமெரிக்காவிலிருந்து தொடங்க வேண்டும். தமது அணுகுண்டுகளை அழித்தொழித்துவிட்டல்லவா ஏனைய நாடுகளைக் கேட்கவும் தாக்கவும் வேண்டும். ஐ.நா. என்று ஒரு நிறுவகம் உலகில் இருக்கிறதா? அப்படி இருந்தால் அடாத்தாக ஆபிரிக்க நாடுகளுள் இறங்கும் ஐ.நா. படைகள் இலங்கைத் தீவிலோ அல்லது இஸ்ரேலிலோ இறங்கி இன அழிப்பைத் தடுக்க முனையவில்லை. அமெரிக்கா ஆப்கான் முதல் லிபியா வரை வளர்த்தவிட்ட தீவிரவாதத்தைவிட வேறொருநாடும் செய்துவிட முடியாது. ப.வி. இயக்கத்தைப் பலவீனப்படுத்த இஸ்ரேல் உருவாக்கிய பல குழுக்களில் கைமாறிக் கட்டுமீறியதே கமாஸ்.

" இந்த உலகம் நீதியின் அச்சில் சுழலவில்லை. தார்மீகச் சட்டநெறிகளோ, மக்களின் உரிமைகளோ அல்ல, பொருளாதார வணிக நலன்கள்தான் தற்போதைய உலகப் போக்கைத் தீர்மானிக்கின்றன..." என்ற மேதகு அவர்களின் கூற்று 17 ஆண்டுகளைக் கடந்தும் பொருந்திப் போகிறது.

ஜப்பானியர்கள் செய்த பாவமும் கொஞ்ச நஞ்சமல்ல.

உலகில் போர்களை நடத்துவதற்கு கூறும் காரனிகளில் அணுகுண்டும் ஒன்று, இரஸ்சியா உக்கிரேன் நேட்டோவில் சேர்ந்தால் தனக்கு பாதுகாப்பில்லை என போரினை நடத்துகிறது அல்லவா?

23 hours ago, வீரப் பையன்26 said:

ஈரான் தீவிர‌வாத‌க் குழுக்க‌ளை வைத்து இருக்கு என்றால்

அமெரிக்கா எத்த‌னை தீவிர‌வாத‌ குழுக்க‌ளை உருவாக்கி ப‌ல‌ நாட்டை நாச‌ம் செய்த‌வை லிஸ் போட்டு சொல்ல‌வா குரு👍

ஈரான் த‌ன‌து நாட்டின் இறையான்மைய‌ பாதுகாக்க‌ அணுகுண்டு செய்வ‌தில் பிழை இருப்ப‌தாக‌ அல்ல‌து த‌வ‌று இருப்பதாக‌ தெரிய‌ வில்லை👍...................

இஸ்ரேல் சில‌ தீவிர‌வாத‌ குழுக்க‌லுக்கு காசுக‌ளை கொடுத்து செய்த‌ நாச‌கார‌ செய‌ல்க‌ளை இந்த‌ உல‌க‌ம் ந‌ங்கு அறியும்...................இன்று கூட‌( ஸ் ) த‌ள‌த்தில் பார்த்தேன் இஸ்ரேல் அமைச்ச‌ர் ஒருத‌ர் ஓவ‌ரா குரைக்க‌ தொட‌ங்கினார் , ஜ‌ப்பான் மீது அணு குண்டு போட்ட‌தை ஈரானுக்கு நினைவூட்ட‌ விரும்புகிறேன் என்றார்

......................எதிரிட்ட‌ இருக்கிர‌ அதே குண்டு ஈரானிட‌மும் இருந்தால் தான் அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ நாடான‌ இஸ்ரேல் மூடிகிட்டு இருப்பான் , இல்லையேன் ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளை கொன்று குவிச்ச‌து போல் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் இஸ்லாம் நாட்ட‌வ‌ர்க‌ளை கொலை செய்வாங்க‌ள்.....................ஈரான் 2000கிலோ மீட்ட‌ர் தூர‌த்தில் இருந்து அதிவேக‌ மீசேல்க‌ள் மூல‌ம் இஸ்ரேல் த‌லை ந‌க‌ர‌த்த்தில் ப‌ல‌ இட‌ங்க‌ளை த‌ர‌ ம‌ட்ட‌ம் ஆக்கி விட்டின‌ம்

இஸ்ரேல் த‌னிக்கை செய்யுது அவ‌ர்க‌ளின் நாட்டின் அழிவுக‌ளை ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் காட்டாம‌ , இப்போது புது ச‌ட்ட‌ம் போட்டு இருக்கின‌ம் , வீடியோ பிடித்து அதை வ‌ட்சாப் மூல‌ம் அனுப்பினால் சில‌ ஆண்டு சிறையாம்😛😁........................

இன்று இஸ்ரேல் ம‌ருத்துவ‌ம‌னை மீது ந‌ட‌ந்த‌ தாக்குத‌ல் தீவிர‌வாத‌ தாக்குத‌லாம் இஸ்ரேல் அர‌சு..............ப‌ல‌ஸ்தீன‌த்தில் புற்றுநோய் ம‌ருத்துவ‌ம‌னை மீது குண்டை போட்ட‌ அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளுக்கு இப்ப‌ தான் புரியுது ம‌ருத்துவ‌ம‌னை மீது குண்டு போட்டால் அது ப‌ய‌ங்க‌ர‌ வாத‌ம் என‌ ,

இதுவ‌ரை கால‌மும் ஈரானின் மெள‌வுன‌துக்கும் பொறுமைக்கும் கிடைச்ச‌ வெற்றி இது.....................இன்னும் 2000க்கு மேல் ப‌ட்ட‌ மிசேல்க‌ள் ஈரானிட‌ம் இருக்கு அதோட‌ சீனாவில் இருந்து விமான‌ம் மூல‌ம் ஆயுத‌ங்க‌ள் ஈரானை வ‌ந்த‌டையுது........................இது ஒன்றும் 2003கிடையாது ச‌தாமுசேன் அணுகுண்டு வைத்து இருக்கிறார் என்று சொல்லி ஈராக்கை நாச‌ம் செய்த‌து போல் ஈரானை அழிக்க‌ முடியாது ,ஈரானில் அமெரிக்க‌ ப‌டைக‌ள் கை வைத்தால் பின் விலைவுக‌ள் எப்ப‌டி இருக்கும் என்ப‌த‌ அமெரிக்காவும் இஸ்ரேலும் பிற‌க்கு உண‌ருவின‌ம் ஏன் ஈரான் மேல் கைவைத்தோம் என‌............................எல்லாத்துக்கும் கால‌ம் ப‌தில் சொல்லும்.........................

வ‌ட‌ கொரியா இஸ்ரேலுக்கு எதிராக‌ அறிக்கை விட்டு இருக்கு த‌லைவ‌ன் இற‌ங்க‌னும் உல‌க‌த்தில் நில‌ ந‌டுக்க‌ம் ஏற்ப‌டும்

உல‌கில் அமைதிய‌ நிலை நாட்ட‌ப் போகிறேன் என‌ சொல்லி ஆட்சிக்கு வ‌ந்த‌ ர‌ம்ப் இப்போது மூன்றாம் உல‌க‌ போருக்கு அவ‌ரே கார‌ண‌மாய் அமைய‌ போகிறார்.......................

ஈரான் அமெரிக்கா கூட‌ பேச்சு வார்த்தைக்கு இட‌ம் இல்லை என‌ சொல்லி விட்டின‌ம்

ர‌ம்ப் (ஸ் ) த‌ள‌த்தில் இருந்து வீர‌ வ‌ச‌ன‌ம் எழுதுகிறார் அதை ஈரான் அர‌சு காமெடியாக‌ பார்க்குது உந்த‌ மிர‌ட்ட‌லுக்கு எல்லாம் தாங்க‌ள் ப‌ய‌ப்பிட‌ போவ‌து கிடையாது 48ம‌ணி நேர‌ம் கெடு கொடுத்தார் ர‌ம் , இப்ப‌ 60ம‌ணித்தியாள‌த்தை தாண்டி விட்ட‌து.............................

ம‌று ப‌டியும் சொல்லுகிறேன் இஸ்ரேல் மிக‌ப் பெரிய‌ அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ நாடு........................ayatollah ali khamenei இஸ்ரேல் கொலை செய்தால் இஸ்ரேல் என்ர‌ நாடு வ‌ரும் கால‌ங்க‌ளில் நின்ம‌தியாக‌ இருக்க‌ போவ‌து கிடையாது...................அப்ப‌டி இஸ்ரேல் ayatollah ali khamenei கொலை செய்தால் அழிவுக‌ள் ப‌ல‌ கோண‌ங்க‌ளில் வேறு மாதிரி இருக்கும்.............................

குருவை மிஞ்சிய சிஸ்சியனாகிவிட்டீர்கள், உங்கள் எழுத்துக்களை பார்ப்பதில் சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, vasee said:

ஜப்பானியர்கள் செய்த பாவமும் கொஞ்ச நஞ்சமல்ல.

உலகில் போர்களை நடத்துவதற்கு கூறும் காரனிகளில் அணுகுண்டும் ஒன்று, இரஸ்சியா உக்கிரேன் நேட்டோவில் சேர்ந்தால் தனக்கு பாதுகாப்பில்லை என போரினை நடத்துகிறது அல்லவா?

குருவை மிஞ்சிய சிஸ்சியனாகிவிட்டீர்கள், உங்கள் எழுத்துக்களை பார்ப்பதில் சந்தோசம்.

எல்லாம் இவ‌ரின் வ‌ர‌லாறுக‌ளை ப‌டித்த‌ பின்பு தான்

அநீதிக்கு எதிராக‌ எழுத‌ ம‌ன‌ம் இட‌ம் கொடுக்குது...............................

Screenshot-20250618-100758-Chrome.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா போரில் இற்ங்கும் கூறுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, vasee said:

அமெரிக்கா போரில் இற்ங்கும் கூறுகிறார்.

ர‌ம் இர‌ண்டு வார‌ம் என்று சொல்லி இருக்கிறார்

இர‌ண்டு வார‌ம் முடிய‌ இன்னும் சில‌ நாட்க‌ள் எடுக்கும் என்பார் அதுக்கிடையில் இஸ்ரேலில் முக்கிய‌ இட‌ங்க‌ளை ஈரான் ஏவுக‌னைக‌ள் மிசேல்க‌ள் மூல‌ம் அழித்து விடுவின‌ம்.....................

ஹாசா ம‌க்க‌ள் விட்ட‌ க‌ண்ணீர் அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இஸ்ரேல‌ சும்மா விடாது😉......................எல்லாரையும் விட‌ பெரிய‌வ‌ர் ஆண்ட‌வ‌ர்🙏🙏🙏............................

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

ர‌ம் இர‌ண்டு வார‌ம் என்று சொல்லி இருக்கிறார்

இர‌ண்டு வார‌ம் முடிய‌ இன்னும் சில‌ நாட்க‌ள் எடுக்கும் என்பார் அதுக்கிடையில் இஸ்ரேலில் முக்கிய‌ இட‌ங்க‌ளை ஈரான் ஏவுக‌னைக‌ள் மிசேல்க‌ள் மூல‌ம் அழித்து விடுவின‌ம்.....................

ஹாசா ம‌க்க‌ள் விட்ட‌ க‌ண்ணீர் அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இஸ்ரேல‌ சும்மா விடாது😉......................எல்லாரையும் விட‌ பெரிய‌வ‌ர் ஆண்ட‌வ‌ர்🙏🙏🙏............................

ஈரான் பின் கதவு வழியாக பேச்சுவார்த்தையினை தொடர்ந்து நடத்துவதாக கூறுகிறார்கள், ஈரானிடம் வான் மேலாதிக்கம் இல்லை, அதனால் ஈரானின் வான் பரப்பிற்குள் தங்கு தடையின்றி இஸ்ரேல் விமானங்கள் நுழைகின்றன, இப்படியான நிலையில் ஈரானால் போரில் வெல்ல முடியாது அதனை மீறி வீம்பிற்கு போரில் தொடர்ந்து ஈடுபட்டால் தேவையற்ற மனித அழிவுகளே ஏற்படும், ஈரான் அணு ஆயுத முயற்சியினை கைவிட்டு சமாதானமாகவே செல்லும் என கருதுகிறேன்.

ஆனால் இஸ்ரேலால் தொடர்ச்சியாக 3 வாரத்திற்கு மேலாக வான் தாக்குதலில் ஈடுபட முடியாது தற்போது 30% சுழ்ற்சியினை விமானங்களிடையே செய்கிறது அதனை இவ்வாறு தொடரமுடியாது அல்லது அமெரிக்க இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்க வேண்டும் என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, vasee said:

ஈரான் பின் கதவு வழியாக பேச்சுவார்த்தையினை தொடர்ந்து நடத்துவதாக கூறுகிறார்கள், ஈரானிடம் வான் மேலாதிக்கம் இல்லை, அதனால் ஈரானின் வான் பரப்பிற்குள் தங்கு தடையின்றி இஸ்ரேல் விமானங்கள் நுழைகின்றன, இப்படியான நிலையில் ஈரானால் போரில் வெல்ல முடியாது அதனை மீறி வீம்பிற்கு போரில் தொடர்ந்து ஈடுபட்டால் தேவையற்ற மனித அழிவுகளே ஏற்படும், ஈரான் அணு ஆயுத முயற்சியினை கைவிட்டு சமாதானமாகவே செல்லும் என கருதுகிறேன்.

ஆனால் இஸ்ரேலால் தொடர்ச்சியாக 3 வாரத்திற்கு மேலாக வான் தாக்குதலில் ஈடுபட முடியாது தற்போது 30% சுழ்ற்சியினை விமானங்களிடையே செய்கிறது அதனை இவ்வாறு தொடரமுடியாது அல்லது அமெரிக்க இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்க வேண்டும் என கருதுகிறேன்.

அமெரிக்கா இந்த‌ப் போரில் நேர‌டியாக‌ த‌லையிடாது போல் தெரிகிற‌து வ‌ரும் செய்திக‌ளை கேட்க்க‌...................இஸ்ரேலின் வான் தாக்குத‌லுக்கு முற்றுப் புள்ளி வைக்க‌ப் ப‌டும்.......................ஈரான் பேச்சு வார்த்தைக்கு போக‌ வில்லை என‌ ஒரு த‌ர‌ப்பு சொல்லுது இன்னொரு த‌ர‌ப்பு வேறு மாதிரி சொல்லுகின‌ம் இதில் எது உண்மையென‌ தெரிய‌ வில்லை..................

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, vasee said:

ஜப்பானியர்கள் செய்த பாவமும் கொஞ்ச நஞ்சமல்ல.

உலகில் போர்களை நடத்துவதற்கு கூறும் காரனிகளில் அணுகுண்டும் ஒன்று, இரஸ்சியா உக்கிரேன் நேட்டோவில் சேர்ந்தால் தனக்கு பாதுகாப்பில்லை என போரினை நடத்துகிறது அல்லவா?

வசியவர்களே நன்றி, யப்பானியர்களது கொடுமையைக் கண்ட உலகு அதையே திருப்பி ஏன் மற்றைய இனங்கள் மீதும்,நாடுகள் மீதும் தொடர்கிறது. எல்லாம் பொருண்மிய நலன். அகதியாக ஈராயிரமாண்டுகள் அலைந்ததாகக் கூறும் இஸ்ரேலியர்கள் இன்று பலஸ்தீனர்களை அகதியாக்கி நாடற்றவராக்கும் செயற்பாடு ஏன் நிகழவேண்டும். ரஸ்யா அச்சத்தில் போரிடவில்லை. அது தற்காப்பு நிலையெடுக்கிறது. ஒன்றாக இருந்து இன்று அயலவராக இருக்கும் உக்ரேன் தனது பகைச்சக்திகளைக் குடியேற்ற முனையத் தாக்குகிறது. இன்னும் சில ஆண்டுகளின் பின் மகிந்த சொல்லியது போல் நாம் மேற்கின் போரை நடாத்தினேன் என ஜெலன்ஸ்கி சொன்னாலும் ஆச்சரியப்பட முடியாது.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

509420415_1139456478219323_3783310675353

509431343_1139456048219366_7136945801139

  • கருத்துக்கள உறவுகள்

7 நிமிடங்களில் 2,000 கிமீ பாயும்: இஸ்ரேல் மீது இரான் ஏவிய செஜில் ஏவுகணை எவ்வளவு சக்தி வாய்ந்தது?

செஜில் ஏவுகணை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இரான் 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக செஜில் ஏவுகணையை பரிசோதித்தது.

21 ஜூன் 2025, 06:48 GMT

புதுப்பிக்கப்பட்டது 31 நிமிடங்களுக்கு முன்னர்

இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையிலான மோதல் இரு நாடுகளின் போர்த் திறன்களையும், அவற்றின் ஆயுதங்களையும் பரிசோதிக்கும் ஒரு களமாகவும் அமைந்துள்ளது.

புதன்கிழமை இரவு இஸ்ரேலைத் தாக்கிய போது, முதன்முறையாக உள்நாட்டு தயாரிப்பான செஜில் ஏவுகணையைப் பயன்படுத்தியதாக, இரான் கூறியது.

செஜில் என்பது கனமான, அதிக வெடிபொருள் பொருத்தப்பட்ட நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணையாகும்.

இருப்பினும், இஸ்ரேல் பாதுகாப்புப் படை செஜிலை வெற்றிகரமாக இடைமறித்துவிட்டதாக இஸ்ரேல் கூறுகிறது .

செஜில் ஏவுகணை இரானின் நடான்ஸ் நகரத்திலிருந்து ஏவப்பட்டால், இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவை ஏழு நிமிடங்களில் அடைய முடியும் என்பதிலிருந்தே அதன் வேகத்தை மதிப்பிடலாம் .

ஏனென்றால், நடான்ஸிலிருந்து டெல் அவிவ் வரையிலான தூரம் சுமார் 2000 கிலோமீட்டர்.

புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்தத் தாக்குதல்கள் 'ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 3' இன் கீழ் நடத்தப்பட்டதாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கூறியுள்ளது.

இந்த தாக்குதலுக்குப் பிறகு, செஜில் ஏவுகணை பேசுபடு பொருளாக தீவிரமடைந்துள்ளது.

செஜில் ஏவுகணை எவ்வளவு சக்தி வாய்ந்தது?

செஜில் ஏவுகணை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,செஜில் ஏவுகணையின் நீளம் சுமார் 18 மீட்டர், மேலும் திட எரிபொருளால் இயக்கப்படுவதால் அது ஆபத்தானதும் கூட .

ஜூன் 19, வியாழக்கிழமை, இந்தியாவில் உள்ள இரானிய தூதரகம், ஐ.ஆர்.ஜி.சி-யை மேற்கோள் காட்டி செஜில் ஏவுகணை பற்றிய தகவலை வழங்கியுள்ளது.

"இது 'ட்ரூ ப்ராமிஸ் 3' 'ஆபரேஷனின் பன்னிரண்டாவது பதிலடி தாக்குதல் ஆகும், மிகவும் கனமான மற்றும் நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய இரண்டு-நிலைகளை கொண்ட செஜில் ஏவுகணை ஏவப்பட்டது" என்று இரானிய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது.

"செஜில் ஏவுகணைகள் திட எரிபொருளில் இயங்குகின்றன. அவை இரானின் மிகவும் துல்லியமான மற்றும் சக்தி வாய்ந்த மூலோபாய ஆயுதங்களில் ஒன்றாகும். எதிரி இலக்குகளை ஊடுருவி அழிக்கக்கூடிய திறனை அவை கொண்டுள்ளன."

செஜில் ஏவுகணை சுமார் 18 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் திட எரிபொருளால் இயங்கக் கூடியது. இது மற்ற எரிபொருட்களைக் காட்டிலும் கூடுதல் அனுகூலங்களை வழங்கக் கூடியது.

போர்க்களத்தில் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தும் இந்த ஏவுகணையை துரிதமாக ஏவுவதற்கு தயார் செய்யவும் முடியும்.

தூரம்: செஜில் ஏவுகணை அதிகபட்சமாக 2000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. இது நடுத்தர தூரம் வரை சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையாக வகைப்படுத்தப்படுகிறது. இந்த ஏவுகணையின் மூலம் இஸ்ரேல், தென்கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியாவின் சில பகுதிகள் மற்றும் இஸ்ரேல் உள்பட மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் உள்ள இலக்குகளை இரானால் தாக்க முடியும்.

சுமந்து செல்லும் எடை: இந்த ஏவுகணை சுமார் 700 கிலோ எடையுள்ள வெடிபொருளை சுமந்து செல்லக்கூடிய திறன் கொண்டது. இதன் மூலம் தாக்குதலுக்கு இலக்காகும் இடத்தல் பெரும் சேதத்தை விளைவிக்க முடியும்.

ஏவுகணையின் மொத்த எடை: ஏவப்படும் ஏவுகணையின் மொத்த எடை தோராயமாக 23,600 கி.கி. இருக்கும். அதாவது அதன் எரிபொருள், சுமந்து செல்லும் வெடிபோருள் உள்பட ஏவுகணையின் மொத்த எடை இதுவாகும்.

இந்த ஏவுகணையின் முதல் வெற்றிகரமான சோதனை 2008-ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. பரிசோதனையின் போது செஜில் ஏவுகணை 800 கி.மீ தூரம் பறந்தது. நவீன தொழில்நுட்பம் மற்றும் அதனை வழி நடத்தும் அமைப்புகளை சோதிக்க மே 2009ல் இரண்டாவது முறையாக செஜில் ஏவப்பட்டது .

அமெரிக்காவின் மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் (CSIS) தகவல்படி, செஜில் ஏவுகணையில் பல வகைகள் இருக்கக்கூடும். 2009 ஆம் ஆண்டில், 'செஜில் 2' என அழைக்கப்பட்ட ஏவுகணையை இரான் சோதித்தது. உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள், 'செஜில் 3' என்பது இன்னும் மேம்பட்டதாக இருக்கலாம் எனக் கூறுகின்றன. செஜில் 3 ஏவுகணை மூன்று நிலைகளைக் கொண்டதாகவும், அதிகபட்சமாக 4,000 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடியதாகவும் கூறப்படுகிறது.

செஜில் ஏவுகணை 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு பொதுவெளியில் சோதிக்கப்படாததால், அது படையில் சேர்க்கப்பட்டுவிட்டதா இல்லையா என்பது குறித்த நிச்சயமற்ற நிலை நீடித்தது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2021-ஆம் ஆண்டு ஒரு ராணுவப் பயிற்சியின் போது, இரான் இந்த ஏவுகணையை பயன்படுத்தியது.

இஸ்ரேல்-இரான் மோதல்: இதுவரை நடந்தது என்ன ?

ஹைப்பர்சோனிக் ஏவுகணை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவியது.

ஜூன் 13-ஆம் தேதி, டெஹ்ரான், நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் உள்ளிட்ட பல இரானிய ராணுவ மற்றும் அணுசக்தி நிலைகளை இஸ்ரேல் தாக்கியது.

இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்று இஸ்ரேல் பெயரிட்டது.

இரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளில் எந்த தீர்வும் கிடைக்கவில்லை, எனவே இரானை தாக்குவது மட்டுமே ஒரே வழி என்று இஸ்ரேல் கூறுகிறது.

தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் மீது டிரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இரான் ஏவியது.

இரான் ஏவுகணை தாக்குதலில், தெற்கு இஸ்ரேலின் பீர்ஷெபாவில் உள்ள சொரோகா மருத்துவமனை சேதமடைந்தது. இருப்பினும், மருத்துவமனைக்கு அருகில் இருந்த ராணுவ தளம் தான் தனது இலக்காக இருந்தது என்கிறது இரான்.

இந்த தாக்குதலில் 71 பேர் காயமடைந்ததாக இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அன்றிரவு முழுவதும் இஸ்ரேலின் பல பகுதிகளிலும் தாக்குதல்கள் நடந்தன.

இஸ்ரேலால் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இரான் முதல் செஜில் ஏவுகணை தாக்குதலை நடத்தியதாகக் கூறியது.

மருத்துவமனை மீதான ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, இரானில் உள்ள அரக் மற்றும் நடான்ஸ் உள்ளிட்ட பல அணுசக்தி மற்றும் ராணுவத் தளங்களை இஸ்ரேல் குறிவைத்தது.

இதற்கிடையில், அராக் கனரக நீர் உலை உட்பட இரானின் அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் இரவில் தாக்குதல் நடத்தியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce8z9y1j738o

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vasee said:

இரஸ்சியா உக்கிரேன் நேட்டோவில் சேர்ந்தால் தனக்கு பாதுகாப்பில்லை என போரினை நடத்துகிறது அல்லவா?

ஓம் அப்படி ஒரு சாட்டுக்காக புட்டின் சொல்லி கொண்டாலும் உக்ரைனிய மக்களின் சுதந்திரத்தை தொடர்ந்து மறுத்து வரும் தனது ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு வெறியை நேற்று நடந்த ரஷ்ய கூட்டம் ஒன்றில் உக்ரைன் முழுவதும் எங்களுக்கு சொந்தமானது என்று சொல்லி உறுதிபடுத்தினார். ஒரு ரஷ்ய இராணுவம் எங்கு கால் வைத்தாலும் அது எங்களுக்குச் சொந்தமானது" என்றும் அந்த ஆக்கிரமிப்பாளன் தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20250621-104401-Chrome.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நான் இஸ்ரேல் செய்த‌ கொடுமைக‌ளை ஆர‌ம்ப‌த்தில் இந்த‌ திரியில் எழுதின‌த‌

அமெரிக்கா நாட்டை சேர்ந்த‌ இளைஞ‌ன் துணிவோட‌ எல்லா உண்மைக‌ளையும் வெளி உல‌கிற்க்கு சொல்லுகிறார்

இவ‌ர் X த‌ள‌த்தில் வீடியோ போட்டால் அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்க்கின‌ம்......................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

யூத‌ர்க‌ள் ஆர்பாட்ட‌ம்

போரை நிப்பாட்டுங்க‌ள் , ஈரான் எங்க‌ளை ம‌ன்னித்து விடுங்க‌ள்................இதை தான் எதிர் பார்த்தேன் , உல‌க‌ ம‌க்க‌ள் போரை விரும்ப‌ வில்லை , அர‌சிய‌ல் போர்வைக்குள் ஒழிந்து இருக்கும் அர‌சிய‌ல் சாத்தாங்க‌ள் தான் உல‌கை அழிக்க‌ நினைக்கின‌ம்.........................

  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2025 at 01:35, நியாயம் said:

சீனா ஈரானுக்கு ஆயுதங்கள் கொடுக்கின்றது என்பதற்கு என்ன ஆதாரங்கள்? அறிய ஆவல்.

சீனாவும் துருக்கியும் ஈரானுக்கு ஆயுத‌ம் கொடுத்த‌துக்கு

இர‌ண்டு நாட்டின் மீது அமெரிக்கா என்ர‌ கோமாளி நாடு பொருளாதார‌ த‌டை போட்டு இருக்கின‌ம்😁😛

அப்ப‌ இந்த‌ திரியில் ஆர‌ம்ப‌த்தில் சீனாவின் விமான‌ம் மூல‌ம் ஈரானுக்கு ஆயுத‌ம் வ‌ந்த‌து என்று நான் எழுதின‌து ச‌ரி என்று ஆகி விட்ட‌து..........................................

  • கருத்துக்கள உறவுகள்

@வீரப் பையன்26 ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இரசியா செல்வதாக ஒரு செய்தி பார்த்தேன். ஈரானின் வேண்டுதல் வான் பாதுகாப்பு ஆயுதங்களாக அமையலாம். ஈரான் தனது வான்பரப்பை பாதுக்காக்க முடியாத நிலையில் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாது.

இஸ்ரேல் ஒரு கிழமையில் ஈரான் தமது கட்டுப்பாட்டுக்குள் விழும் என தவறாக கணித்து விட்டார்கள். கடந்த வியாழ கிழமையின் போது உலகமே வியக்கும்படி சரித்திரத்தில் நிலைக்கும்படியான ஒரு சம்பவம் இடம் பெறும் என இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டது. அப்படி சொல்லிக்கொள்ளும்படியாக எதுவும் நடைபெற்றதாக தெரியவில்லை. ஈரானின் உளவு கண்காணிப்பு இஸ்ரேலின் எதிர்பாராதா தாக்குதலின் பின் உசாரடைந்து விட்டது. பல மொசாட் முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளாக ஈரானிய தரபின் தகவல்கள் செய்திகளின் வந்துள்ளன. இஸ்ரேலின் பின்னடைவுக்கு முகவர்களின் கைதுகள் காரணமாக அமையக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இரானுக்குள் ஒரு ரகசிய வலையமைப்பை உருவாக்கி தளபதிகள், ராணுவ தளங்களை 'மொசாட்' தாக்கியது எப்படி?

இஸ்ரேல் - இரான், மொசாட்

பட மூலாதாரம்,THE IDF

படக்குறிப்பு, இரானில் தாக்குதல்களை மேற்கொள்வதில் மொசாட் முக்கிய பங்கு வகித்ததாக ஊகங்கள் உள்ளன.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பிபிசி பாரசீக சேவை

  • பதவி,

  • 21 ஜூன் 2025, 08:36 GMT

    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு வெளிவந்த பல அறிக்கைகள், போர் முனை வானத்தில் மட்டுமல்ல, நிலத்திலும் இருப்பதைக் குறிக்கின்றன.

இரானில் ஆழமாக மேற்கொள்ளப்பட்ட உளவுத்துறை நடவடிக்கைகள் மற்றும் ஊடுருவும் செயல்பாடுகள் மூலம் இஸ்ரேல் இதற்கு நீண்ட காலமாக தயாராகி வந்துள்ளது.

இருப்பினும், இரானின் பாதுகாப்புப் படைகளுக்குள், இஸ்ரேல் ஊடுருவலாம் என்ற அச்சத்தை இரானிய அதிகாரிகள் ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால் இந்த முழு சம்பவத்தில் இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொசாட்டின் பங்கு எந்தளவுக்கு இருந்தது என்பதை மதிப்பிடுவது எளிதான காரியமல்ல.

இஸ்ரேல் பொதுவாக மொசாட்டின் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை.

அதேபோல், இரானில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் பிற உளவுத்துறை அமைப்புகளும் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

ஆயினும், இரானிய மண்ணில் இலக்குகளை அடையாளம் காண்பதிலும், நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் மொசாட் முக்கிய பங்கு வகித்ததாக நம்பப்படுகிறது.

இஸ்ரேல் - இரான், மொசாட்

பட மூலாதாரம்,ATTA KENARE/AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு,இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட இரானிய ராணுவத் தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் டெஹ்ரானில் ஒரு பதாகை வைக்கப்பட்டது.

இரானுக்குள் நீர்மூழ்கி எதிர்ப்பு அமைப்புகள், ஏவுகணை கிடங்குகள், கட்டளை மையங்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தனிநபர்கள் மீது ஒரே நேரத்திலும், மிகவும் துல்லியமாகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பதை பல ஊடக அறிக்கைகளும், சில இஸ்ரேலிய அதிகாரிகளின் கருத்துகளும் தெளிவுபடுத்துகின்றன.

இரானுக்குள் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த உளவுத்துறை நடவடிக்கைகள் மூலம் இந்தத் தாக்குதல்களை இஸ்ரேல் சாத்தியமாக்கியுள்ளது.

இரான் உளவுத்துறைக்கு பெரும் இழப்பு

இஸ்ரேல் - இரான், மொசாட்

பட மூலாதாரம்,MAJID SAEEDI/GETTY IMAGES

படக்குறிப்பு,இரானின் தலைநகர் டெஹ்ரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலின் புகைப்படம் (13 ஜூன் 2025)

இஸ்ரேலின் தாக்குதல்கள் இரானின் ராணுவம் மற்றும் அணுசக்தி நிலையங்களை குறிவைத்தது மட்டுமல்லாமல், அதன் உளவுத்துறை திறன்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதனால் இரான் தலைவர்களும், ராணுவத் தளபதிகளும் குழப்பமும், திகைப்பும் அடைந்துள்ளனர்.

தாக்குதல்கள் நடந்த ஐந்தாவது நாளில் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை, உளவுத்துறை அபாயங்கள் குறித்து அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் கடுமையான கவலை இருப்பதைக் காட்டுகிறது.

அந்த அறிக்கையில், அதிகாரிகள் மற்றும் அவர்களது பாதுகாப்புக் குழுக்கள் மொபைல் போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் அல்லது மடிக்கணினிகள் போன்ற எந்தவொரு தகவல் தொடர்பு நெட்வொர்க்குடனும் இணைக்கப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை அதிகாரிகளுக்கு மட்டும் அல்ல.

பொதுமக்களும் இந்த சாதனங்களை முடிந்தவரை குறைவாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த அளவிலான பொது எச்சரிக்கை என்பது வெறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமன்றி, இரானுக்குள் சைபர் பாதுகாப்பில் ஆழமான ஊடுருவல் குறித்த அச்சம் வேகமாக வளர்ந்து வருவதைக் காட்டும் ஒரு அறிகுறியாகவும் உள்ளது.

இரானுக்குள் தளவாடங்களை கடத்தி, ஒருங்கிணைத்து, ஆயுத உற்பத்தியா?

இஸ்ரேலிய மற்றும் மேற்கத்திய ஊடகங்கள் கூறுவதுபோல, இஸ்ரேலின் நடவடிக்கைகள் வெறும் முக்கியமான தகவல்களை அறிந்து கொள்வதோடு மட்டும் நின்றுவிடவில்லை.

இஸ்ரேல், இரானிய மண்ணில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களைத் தயாரிக்கவும் , அவற்றை பயன்படுத்தவும் ஒரு திட்டமிட்ட வலையமைப்பை உருவாக்கியிருப்பதாக இந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

நீண்ட காலம் நீடித்ததாகக் கூறப்படும் இந்த நடவடிக்கைகள், உள்ளூர் முகவர்களின் வலையமைப்பு, அவர்களுக்காக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு, போக்குவரத்து அமைப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டன.

சமீபத்திய தாக்குதல்களுக்கான அடித்தளம் இந்த முன்தயாரிப்புகளில் இருந்தே கட்டமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

இராக் வழியாகச் செல்லும் லாரிகள், வணிகக் கொள்கலன்கள் மற்றும் பயணிகளின் சூட்கேஸ்களில் பொருட்கள் மறைத்து வைக்கப்படும் கடத்தல் முறைகளை பயன்படுத்தி, இஸ்ரேல் டிரோன்கள் மற்றும் ஏவுகணை உபகரணங்களை ஒவ்வொன்றாக இரானுக்குள் நகர்த்தியுள்ளதாக ராணுவ விவகார கண்காணிப்பாளரான 'தி வார் சோனும்' மற்றும் பிற ஆதாரங்களும் தெரிவித்துள்ளன.

இந்த சாதனங்களில் மின்னணு கருவிகள் (electronic fuses), மேம்பட்ட எலக்ட்ரோ-ஆப்டிகல் கேமராக்கள், லித்தியம் பேட்டரிகள், இலகு ரக இயந்திரங்கள், ஜிபிஎஸ் அடிப்படையிலான வழிகாட்டுதல் அமைப்புகள் மற்றும் பாதுகாப்பான தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவையும் அடங்கும்.

பின்னர், பல ஆண்டுகளாக இரானின் பல்வேறு பகுதிகளில் மொசாட் அமைத்த ரகசிய இடங்களில், இந்த பாகங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களாக மாற்றப்பட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெஹ்ரானுக்கு அருகில் மூன்று மாடி கட்டிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது தற்கொலை டிரோன்களை தயாரிக்கவும் சேமிக்கவுமான ஒரு தளமாக இருந்ததாக அதிகாரிகள் விவரித்துள்ளதாகவும் இரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் - இரான், மொசாட்

பட மூலாதாரம்,MIZAN

படக்குறிப்பு,இரானின் பல்வேறு பகுதிகளில், மொசாட் அமைத்த ரகசிய இடங்களில், பாகங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு ஆயுதங்களாக மாற்றப்பட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரானிய அரசு தொலைக்காட்சி வெளியிட்ட ஒரு செய்தியில், கட்டடத்தின் உள்ளே உள்ள மேசைகள் மற்றும் அலமாரிகளில் குறைந்தது ஒரு ட்ரோன், அதன் இறக்கைகள், பல்வேறு பாகங்கள் மற்றும் கட்டுப்பாட்டு உபகரணங்கள் இருந்தது காட்டப்பட்டது.

அங்கே ஒரு 3D பிரிண்டரும் காணப்பட்டது.

'தி வார் ஸோன்' என்ற வலைதளத்தின் தகவல்படி, இந்த வகையான பிரிண்டர் யுக்ரேனில் டிரோன் பாகங்களை உருவாக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஜூன் 16 திங்கட்கிழமையன்று டெஹ்ரானில் உள்ள ஒரு பகுதியில் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில், மொசாட்டுடன் தொடர்புடைய 2 "முகவர்கள்" கைது செய்யப்பட்டதாக இரானிய காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அவர்களிடம் இருந்து 200 கிலோகிராமுக்கும் அதிகமான வெடிபொருட்கள், 23 டிரோன் பாகங்கள், லாஞ்சர்கள், கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் ஒரு நிசான் கார் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இரானின் மிகவும் முக்கியமான அணுசக்தி நிலையங்கள் அமைந்துள்ள இஸ்ஃபஹானில், ஏராளமான டிரோன் மற்றும் மைக்ரோ-டிரோன் உற்பத்திக்கான உபகரணங்கள் மற்றும் பாகங்களை வைத்திருந்த ஒரு பட்டறையை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சோதனை செய்தார். இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3D பிரிண்டர்கள் மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி டிரோன்கள் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன என்பது இந்த தகவல்களின்படி தெரியவருகின்றது.

இதனால் அதிக அளவில் பாகங்களை கடத்த வேண்டிய தேவை இல்லாமல் போவதால், இரான் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு மொசாட் சப்ளை சங்கிலியை கண்டுபிடிப்பது கடினமாகிவிட்டிருந்தது.

இந்தக் கூற்றுகளை பிபிசி சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை.

இருப்பினும், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை இரானிய பாதுகாப்பு நிறுவனங்கள் இதற்கு முன்பு பலமுறை கைது செய்துள்ளன.

ஏவுகணைகள், நவீன ஆயுதங்கள் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் பயன்படுத்துதல்

இஸ்ரேல் - இரான், மொசாட்

பட மூலாதாரம்,TELEGRAM

படக்குறிப்பு,ஸ்பைக் ஏவுகணை லாஞ்சர்களின் படங்கள், தரையில் உள்ள முக்காலி போன்ற அமைப்பின் மீது அதன் உருவத்தை மறைக்கும் உறைகளுடன் வைக்கப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களின் தகவல்களின்படி, இஸ்ரேல் ரகசிய நடவடிக்கையின் ஒரு முக்கிய அம்சமாக, இரானிய மண்ணில் உள்ள இலகுரக, துல்லியமான மற்றும் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஏவுகணை அமைப்புகள் காணப்படுகின்றன.

இத்தகைய நவீன மற்றும் சிறப்பு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை, அவற்றை இயக்குபவரின் உதவி இல்லாமல் இரானுக்குள் இருந்து சுட முடியும். தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில், இது பாரம்பரிய முறைகளை நேரடியாக சவால் செய்யும் ஒரு நடவடிக்கையாகக் கருதப்படுகின்றது.

இரானின் ஆங்கில செய்தி சேவையான பிரஸ் டிவி திங்களன்று தனது டெலிகிராம் சேனலில், "இரானிய வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த ஸ்பைக் ரக ஏவுகணைகளை இரானிய உளவுத்துறை அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.

இந்த அமைப்புகளில் இணைய-தானியங்கி மற்றும் ரிமோட் கண்ட்ரோல் பொருத்தப்பட்டிருந்தது" என்றும், "இந்த அமைப்பு மொசாட் முகவர்களால் இயக்கப்பட்டது"என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

அவை ஒரு வாகனத்திலோ அல்லது டிரோனிலோ பொருத்தப்படவில்லை.

மாறாக அவற்றை மறைக்கும் உறையுடன் கூடிய முக்காலி போன்ற அமைப்பின் மீது நிறுவப்பட்டு, தரையில் வைக்கப்பட்டிருந்தன என்பதை ஸ்பைக் லாஞ்சர் ஏவுகணைகளின் படங்கள் காட்டுகின்றன.

இந்த ஏவுகணைகளில் எலக்ட்ரோ-ஆப்டிகல் வழிகாட்டுதல் அமைப்புகள், அதிநவீன கேமராக்கள் மற்றும் செயற்கைக்கோள் தொடர்பு ஆண்டெனாக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

இதனால், தூரத்திலிருந்து கூட அவற்றுக்கு கட்டளை வழங்கப்படலாம்.

இதற்கு முன்பும், இரானில் இஸ்ரேல் ரிமோட் கண்ட்ரோல் ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

2020 நவம்பரில், இரானில் அணுசக்தி திட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு மூத்த விஞ்ஞானி, ஒரு பிக்அப் வேனில் பொருத்தப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் ஆயுதத்தால் படுகொலை செய்யப்பட்டதாகவும், சம்பவம் நடந்த நேரத்தில் தாக்குதலில் ஈடுபட்ட எந்த நபரும் சம்பவ இடத்தில் இல்லை என்றும் இரானிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இஸ்ரேல் - இரான், மொசாட்

பட மூலாதாரம்,MAJID SAEEDI/GETTY IMAGES

படக்குறிப்பு, இஸ்ரேலிய தாக்குதலால் அழிக்கப்பட்ட இரானிய கட்டிடம் (13 ஜூன் 2025)

இரானின் வான் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் அமைப்புகளை முடக்க திட்டம்

இரான் மீது வான்வழி தாக்குதல்களை நடத்துவதற்கு முன்பு, இரானின் வான் பாதுகாப்பு வலையமைப்பை முடக்க ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்துவதே இஸ்ரேலிய நடவடிக்கையின் முக்கிய பகுதி என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன.

சிறிய தற்கொலை டிரோன்கள், தரையில் இருந்து ஏவப்படும் இரானிய ஏவுகணைகள் மற்றும் மின்னணு போர் இயந்திரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் பல்வேறு முயற்சிகள் இந்த உத்தியில் இணைக்கப்பட்டிருந்தன.

இரானின் ரேடார் அமைப்புகளை முடக்குவது, வான் பாதுகாப்பு ஏவுகணை கட்டமைப்பை அழிப்பது மற்றும் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்த வசதியாக ஒரு பாதுகாப்பான வழியை உருவாக்குவது ஆகியவையே அதன் ஒட்டுமொத்த நோக்கமாக இருந்துள்ளது.

ராணுவ விவகாரங்களை மையமாகக் கொண்ட வலைத்தளங்களின்படி, இந்த நடவடிக்கையின் தொடக்கத்தில், சிறிய மற்றும் இலகுரக குவாட்காப்டர் போன்ற டிரோன்கள் மற்றும் மைக்ரோ ட்ரோன்களின் தொகுதி ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

முந்தைய மாதங்களில் இந்த டிரோன்கள் ஏற்கனவே இரானின் பல பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது.

இரானின் முக்கிய தளபதிகளுக்கு குறி

இஸ்ரேல் - இரான், மொசாட்

பட மூலாதாரம்,TASNIM/KHAMENEI

படக்குறிப்பு,இரானிய இராணுவம் மற்றும் புரட்சிகர காவல்படையின் மூத்த அதிகாரிகளை இஸ்ரேல் குறிவைக்கிறது

இரானிய ராணுவம் மற்றும் புரட்சிகர காவல்படையின் நிர்வாக அமைப்பை பலவீனப்படுத்துவதற்காக முக்கிய தளபதிகளுக்கு குறிவைத்தது தான் இஸ்ரேலின் நடவடிக்கையின் மற்றொரு முக்கிய அம்சமாகக் கருதப்படுகின்றது.

மொசாட் மற்றும் அதன் கூட்டாளிகள் உளவுத் தகவல்கள் மற்றும் ஸ்மார்ட் ஆயுதங்களை பயன்படுத்தி, இரானின் பாதுகாப்புத்துறையில் கட்டளை பிறப்பிக்கும் அதிகார கட்டமைப்பில் சேதத்தை ஏற்படுத்தி, அதன் ராணுவ தயார் நிலையை மந்தமாக்கவும் முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கையின் தொடக்கத்தில், ராணுவ தளங்கள் அல்லது ஏவுகணை ஏவுதளங்களை சில தாக்குதல்கள் குறிவைக்கவில்லை.

மாறாக, உயர் அதிகாரிகளின் வீடுகள் அல்லது அலுவலகங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த தாக்குதல்கள் இரானுக்குள் இருந்தபடியே ஸ்பைக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டன என ஊடக அறிக்கைகளும் குறிப்பிடுகின்றன.

இந்த ஏவுகணைகளால், நேரடி கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் கட்டடங்களுக்குள் இருக்கும் மனிதர்களை நேரடியாக குறிவைக்க முடியும்.

இரான் தளபதிகளுக்கு மொசாட் குறி

தாக்குதலுக்கு முன்பு மட்டுமல்லாமல், தாக்குதல் நடைபெறும் போதும் இஸ்ரேலின் உளவுத்துறை நடவடிக்கைகள் தொடர்ந்தன என்றும், அப்போது இரானின் உயர் ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டனர் என்றும் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன.

மூன்றாவது நாள் நடந்த தாக்குதலில் புரட்சிகர காவல்படையின் உளவுத்துறைப் பிரிவு தலைவர் முகமது கசெமியும் அவரது உதவியாளரும் குறிவைக்கப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை கொல்லப்பட்ட தளபதிக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட அதிகாரியும் அடுத்த 4 நாட்களுக்குப் பிறகு கொல்லப்பட்டார்.

இஸ்ரேலின் முழுமையான உத்தி பல வருடங்களாக நடந்த தயாரிப்புகளின் விளைவு என அமெரிக்க சிந்தனைக் குழு 'ஹட்சன் இன்ஸ்டிடியூட்' வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகின்றது.

இந்த திட்டத்தில், தொடர்ச்சியான தகவல் சேகரிப்பு, நேரலையில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் திட்டமிடப்பட்ட இலக்குகளை ஆழமாக அணுகும் நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2ez7yz1zmvo

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, நியாயம் said:

@வீரப் பையன்26 ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இரசியா செல்வதாக ஒரு செய்தி பார்த்தேன். ஈரானின் வேண்டுதல் வான் பாதுகாப்பு ஆயுதங்களாக அமையலாம். ஈரான் தனது வான்பரப்பை பாதுக்காக்க முடியாத நிலையில் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாது.

இஸ்ரேல் ஒரு கிழமையில் ஈரான் தமது கட்டுப்பாட்டுக்குள் விழும் என தவறாக கணித்து விட்டார்கள். கடந்த வியாழ கிழமையின் போது உலகமே வியக்கும்படி சரித்திரத்தில் நிலைக்கும்படியான ஒரு சம்பவம் இடம் பெறும் என இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டது. அப்படி சொல்லிக்கொள்ளும்படியாக எதுவும் நடைபெற்றதாக தெரியவில்லை. ஈரானின் உளவு கண்காணிப்பு இஸ்ரேலின் எதிர்பாராதா தாக்குதலின் பின் உசாரடைந்து விட்டது. பல மொசாட் முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளாக ஈரானிய தரபின் தகவல்கள் செய்திகளின் வந்துள்ளன. இஸ்ரேலின் பின்னடைவுக்கு முகவர்களின் கைதுகள் காரணமாக அமையக்கூடும்.

உண்மை தான்

நானும் ஆர‌ம்ப‌த்தில் ஈரான் உள‌வுத்துறை ஈரானில் என்ன‌ செய்கின‌ம் என‌ யோசித்தேன் ☹️, மொசாட் உள‌வுத்துறைய‌ சேர்ந்த‌ 300க்கு மேல் ப‌ட்ட‌வ‌ர்க‌ளை இந்த‌க் கிழ‌மைக்குள் கைத்து ப‌ண்ணி இருக்கின‌ம் , விசார‌னை முடிந்த‌ கையோட‌ அவைக்கு தூக்கு💪.......................சொந்த‌ நாட்டை இன்னொருத‌னுக்கு காட்டி கொடுப்ப‌தும் பெத்த‌ தாயை இன்னொருத‌னுக்கு கூட்டி கொடுப்ப‌துக்கு நிக‌ரான‌து😡........................இந்தியாவை சேர்ந்த‌ 11பேரும் மொசாட்டுக்கு ஈரானில் வேலை செய்து இருக்கின‌ம் அவ‌ர்க‌ளும் பிடி ப‌ட்டு போய் விட்டின‌ம்😁😛👍

ஈரானில் இருக்கும் மொசாட் குழுவை க‌ண்டு பிடிப்ப‌தில் ஈரான் அர‌சு மும்வ‌ர‌மாய் நிக்குது...................

ஈரானுக்கு சீக்கிர‌ம் ர‌ஸ்சியாவின் வான் பாதுகாப்பு க‌ருவி வேணும் இல்லையேன் இஸ்ரேல் வானால் ந‌ர‌க‌ வேட்டை ஆடுவாங்க‌ள்........................அதோட‌ அதி வேக‌ ஏவுக‌னைக‌ளும் ஈரானுக்கு வேனும் , அது இருந்தா தான் இஸ்ரேல் போர் விமான‌ங்க‌ளை சுட்டு வீழ்த்த‌லாம்...............................

பிந்தி கிடைத்த‌ த‌க‌வ‌லின் ப‌டி ஈரான் நாட்டு காவ‌ல்துறை அதிகாரி தான் மொசாட்டுக்கு ப‌ல‌ இட‌ங்க‌ளை காட்டி கொடுத்த‌து என‌ அறிந்தேன் இதில் எவ‌ள‌வு உண்மை இருக்கு என‌ தெரியாது.......................அந்த‌ காவ‌ல்துறை அதிகாரியிட‌ம் மொசாட் அமைப்புட‌ன் வேறு ஒரு தொழிநுட்ப்ப‌ க‌ருவி மூல‌ம் க‌தைத்த‌தை ஈரான் உள‌வுத்துறை க‌ண்டு பிடித்து விட்ட‌து😮👍

மொசாட்டை சேர்ந்த‌ 300பேரை பிடித்ததால் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை பிடிப்ப‌து சிம்பில் , மொசாட் அமைப்பை சேர்ந்த‌வ‌ர்க‌ள் ஈரானில் த‌ற்கொலை முய‌ற்ச்சி செய்ய‌ வெளிக்கிட்ட‌ போது கூட‌ ஈரான் உள‌வுத்துறை அவ‌ர்க‌ளை கைது செய்து விசாரித்து விட்டு பின்ன‌ர் தூக்கு த‌ன்ட‌னை அவைக்கான‌ நேர‌ம் வெறும் 24ம‌ணித்தியால‌ம் தான் அத‌ன் பின் உட‌ன தூக்கு த‌ன்ட‌னை 👍...........................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

காணொளி. 👉 https://www.facebook.com/100005046279476/videos/1786181235600193 👈

பாகிஸ்தானிடம் உதவி கேட்கும் இஸ்ரேல் மக்கள். 😂

அவனைத் தொடுவான் ஏன்... அவதிப் படுவான் ஏன். 🤣

24-663c6260adb2d.webp

  • கருத்துக்கள உறவுகள்

ayatollah ali khamenei வெளியிட்ட‌ அறிக்கையில் த‌ன‌க்கு பிற‌க்கு மூன்று பேரை தெரிவு செய்து இருக்கிறார்....................அவ‌ர்க‌ளின் பெய‌ர்க‌ள் விப‌ர‌ங்க‌ள் ர‌க‌சிய‌மாக‌ பேனி பாதுகாக்க‌ப் ப‌டுது🙏🥰👍....................இவ‌ர் எல்லோ த‌லைவ‌ர் , 86வ‌ய‌திலும் த‌ன‌க்கு ஏதும் ந‌ட‌க்க‌லாம் , அப்ப‌டி ந‌ட‌ந்தால் தான் நேசித்த‌ நாடு எதிரி நாட்ட‌வ‌ர்க‌ளால் சிதைந்து போய் விட‌க் கூடாது என‌ மூன்று த‌லைவ‌ர்க‌ளை நிஜ‌மித்து இருக்கிறார்...................................ஒருத‌ர கொலை செய்தால் ம‌ற்ற‌வ‌ர் வ‌ருவார் ம‌ற்ற‌வ‌ர‌ கொலை செய்தால் மூன்றாவ‌து ந‌ப‌ர் அந்த‌ இட‌த்துக்கு வ‌ருவார்.........................ayatollah ali khamenei இய‌ற்க்கையாய் ம‌ர‌ணிக்க‌னும் , அவ‌ரின் உட‌ல் ஆரோக்கிய‌த்தை பார்த்தால் 94வ‌ய‌து வ‌ரை வாழுவார்🙏🙏🙏........................

எதிரியின் கையால் ம‌ர‌ணித்தால் இஸ்ரேல் த‌ன் த‌லையில் தானே ம‌ண் அள்ளி போட்ட‌ க‌தையாய் போய் முடியும்..............................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயம் said:

@வீரப் பையன்26 ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இரசியா செல்வதாக ஒரு செய்தி பார்த்தேன். ஈரானின் வேண்டுதல் வான் பாதுகாப்பு ஆயுதங்களாக அமையலாம். ஈரான் தனது வான்பரப்பை பாதுக்காக்க முடியாத நிலையில் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாது.

இஸ்ரேல் ஒரு கிழமையில் ஈரான் தமது கட்டுப்பாட்டுக்குள் விழும் என தவறாக கணித்து விட்டார்கள். கடந்த வியாழ கிழமையின் போது உலகமே வியக்கும்படி சரித்திரத்தில் நிலைக்கும்படியான ஒரு சம்பவம் இடம் பெறும் என இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டது. அப்படி சொல்லிக்கொள்ளும்படியாக எதுவும் நடைபெற்றதாக தெரியவில்லை. ஈரானின் உளவு கண்காணிப்பு இஸ்ரேலின் எதிர்பாராதா தாக்குதலின் பின் உசாரடைந்து விட்டது. பல மொசாட் முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளாக ஈரானிய தரபின் தகவல்கள் செய்திகளின் வந்துள்ளன. இஸ்ரேலின் பின்னடைவுக்கு முகவர்களின் கைதுகள் காரணமாக அமையக்கூடும்.

நேற்று மான்புமிகு புட்டின் சொன்னார் , தான் முன் கூட்டியே வான் பாதுகாப்பு க‌ருவி வேனுமா என‌ கேட்ட‌தாக‌வும் அத‌ற்க்கு ஈரான் இப்போதைக்கு தேவை இல்லை என‌ சொன்ன‌தாக‌வும் சொல்லி இருந்தார்.....................சீனாவின் தொழிநுட்ப‌ உத‌வி ஈரானுக்கு தேவை...................சீனா கொடுக்கும் ஆயுத‌ம் இஸ்ரேல‌ எப்ப‌டி புர‌ட்டி போட‌ போகுதோ தெரியாது.....................

ஜ‌டோம‌ இனி உல‌க‌ நாடுக‌ள் ந‌ம்ப‌ மாட்டின‌ம் ஈரானின் மிசேலையே த‌டுக்க‌ முடிய‌ வில்லை வ‌ல்ல‌ர‌சு நாடுக‌ளின் அதிவேக‌ ஏவுக‌னைக‌ளை இது எப்ப‌டி த‌டுக்கும்

ஜ‌டோம் க‌ண்டு பிடிச்ச‌ போது எப்ப‌டி எல்லாம் விள‌ம்ப‌ர‌ம் செய்தின‌ம் இஸ்ரேல்.............................

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை தோற்கடித்து ஸ்ரீ லங்காவின் இறைமையை பாதுகாக்க உதவிய ஈரானை இலங்கை அரசு ஆதரிக்கவில்லையே என்று கவலை கொள்கின்றார் எம்பி தாஹிர்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

புலிகளை தோற்கடித்து ஸ்ரீ லங்காவின் இறைமையை பாதுகாக்க உதவிய ஈரானை இலங்கை அரசு ஆதரிக்கவில்லையே என்று கவலை கொள்கின்றார் எம்பி தாஹிர்

அப்ப‌டியே அமெரிக்காவும் இஸ்ரேலும் இல‌ங்கைக்கு ஒன்றும் செய்ய‌ வில்லை தானே 😁😛

2006ம் ஆண்டு போர் க‌ப்ப‌ல‌ அமெரிக்கா இல‌ங்கைக்கு கொடுத்த‌து.....................இல‌ங்கை இற‌க்கும‌தி செய்த‌ போர் விமான‌ங்க‌ள் எல்லாம் இஸ்ரேல் கொடுத்த‌து (கிபிர் , ஜெட் ம‌ற்றும் ப‌ல‌வ‌கை போர் விமான‌ங்க‌ள் .......................

1990ம் ஆண்டு யாழ்பாண‌த்தில் இருந்த‌ முஸ்லிம்க‌ளை விடுத‌லைப்புலிக‌ள் விர‌ட்டி அடிக்க‌ தாங்க‌ள் தான் அவைய‌ காப்பாற்றின‌து என‌ சொல்லி அர‌பி நாடுக‌ளின் உத‌விய‌ சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சு பெற்ற‌து...................2002ம் ஆண்டு ச‌மாதான‌ கால‌த்தின் போது முஸ்லிம்க‌ள் மீண்டும் த‌மிழ‌ர் பிர‌தேச‌த்தில் வ‌ந்து வ‌ழ‌லாம் என‌ த‌லைவ‌ர் சொன்னார்...........................வ‌ர‌லாறுக‌ளை மீண்டும் ப‌டியுங்கோ ப‌ல‌ உண்மைக‌ள் வெளியில் வ‌ரும்.....................

2009ம் ஆண்டு கொத்து குண்டுக‌ளை அமெரிக்கா இஸ்ரேல் தான் இல‌ங்கைக்கு கொடுத்த‌து........................உல‌கில் த‌டை செய்ய‌ப் ப‌ட்ட‌ ஆயுத‌ங்க‌ள் உல‌கை அழிக்க‌ வ‌ந்த‌ இந்த‌ இர‌ண்டு நாடுக‌ளிட‌ம் தான் அதிக‌ம் இருக்கு ஒன்று அமெரிக்கா இன்னொன்று இஸ்ரேல்........................

ஈரான் இல‌ங்கைக்கு போருக்கு காசை அள்ளி கொடுக்க‌ அவ‌ர்க‌ளிட‌ம் போதிய‌ பண‌ம் இருந்து இருக்குமோ தெரியாது , அமெரிக்கா போட்ட‌ பொருளாதார‌ த‌டையால் ஈரான் த‌ன் சொந்த‌ நாட்டை பாதுகாப்ப‌த‌ற்க்கே கூடுத‌ல் ப‌ண‌ம் ஒதுக்க‌னும்...........................

ப‌க்க‌த்தில‌ இருக்கும் இந்தியா எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு செய்த‌ துரோக‌த்தில்😡 ஈரான் நூற்றுக்கு 2வித‌ம் கூட‌ செய்து இருக்காது👍..................இப்ப‌வும் இந்தியா இல‌ங்கை புக‌ழ் பாடுப‌வ‌ர்க‌ள் யாழில் இப்ப‌டியான‌ செய்தியை இணைப்ப‌தை பார்க்க‌ வேடிக்கையாக‌ இருக்கு😁😛.......................

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் என்ர‌ நாட்டை உருவாக்க‌ 75வ‌ருட‌த்துக்கு முத‌ல் யார் பாடு ப‌ட்டின‌மோ என‌க்கு தெரியாது...................இஸ்ரேல் என்ர‌ நாட்டை நெத்த‌னியாகு தான் அழித்தார் என‌ இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் சொல்ல‌க் கூடும்.....................

நெத்த‌னியாவுக்கு எதிரா மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌லே உள் நாட்டில் யூத‌ ம‌க்க‌ள் போராடின‌வை..........................சொந்த‌ நாட்டு ம‌க்க‌ளே இந்த‌ போர் குற்ற‌வாளிய‌ சுட்டு கொலை செய்ய‌லாம்......................இவ‌ர் பூமியில் வாழ‌ த‌குதி இல்லாத‌ ந‌ப‌ர்...............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.