Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காவல்நிலைய மரணங்கள், மனித உரிமை மீறல்கள், காவல் நிலைய வன்முறைகள், தமிழ்நாடு, முக ஸ்டாலின், மானாமதுரை, சிவகங்கை, அஜித்குமார்

படக்குறிப்பு, உயிரிழந்த காவலாளி அஜித் குமார்

கட்டுரை தகவல்

  • பிரபுராவ் ஆனந்தன்

  • பிபிசி தமிழுக்காக

  • 30 ஜூன் 2025, 04:32 GMT

    புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார்.

சனிக்கிழமை இரவு அஜித்குமார் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் கடுமையாக தாக்கியதே அஜித்குமார் உயிரிழக்கக் காரணம் என்று குற்றம்சாட்டி அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மடப்புரம் கிராம மக்கள் காவல் நிலைய முற்றுகையிலும் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக 6 தனிப்படை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? உயிரிழந்த அஜித் குமாருடன் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்த அவரது சகோதரர் நவீன் குமார் பிபிசி தமிழிடம் கூறியது என்ன?

10 பவுன் நகை திருடு போனதாக புகார்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக அஜித் குமார் (வயது 27) பணியாற்றி வந்தார். அந்த கோவிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற போது தங்களது நகை காணாமல் போய் விட்டதாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா என்பவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தங்களது காரை பார்க்கிங்கில் விடுமாறு காவலாளி அஜித்குமாரிடம் சாவியை கொடுத்ததாகவும், திரும்பி வந்து பார்த்த போது காரின் பின்சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். நிகிதா மற்றும் கோவில் ஊழியர்களே அஜித்குமாரை திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

காவல்நிலைய மரணங்கள், மனித உரிமை மீறல்கள், காவல் நிலைய வன்முறைகள், தமிழ்நாடு, முக ஸ்டாலின், மானாமதுரை, சிவகங்கை, அஜித்குமார்

படக்குறிப்பு, திருப்புவனம் காவல் நிலையம்

'வெள்ளிக்கிழமை மாலை தாயிடம் பேசிய அஜித் குமார்'

தகவலறிந்ததும் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு சென்று பார்த்து பேசிய போது நகையை தான் திருடவில்லை என்று அஜித் தன்னிடம் கூறியதாக பிபிசி தமிழிடம் அவரது தாயார் மாதவி தெரிவித்தார்.

திருப்புவனம் காவல் நிலையத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை இரவு அஜித் குமாரை மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை (ஜூன் 28) மாலை சுமார் 6 மணி அளவில் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாட்டு தொழுவத்தில் வைத்து காவல்துறை நடத்திய விசாரணையின் போது அஜித்குமார் கடுமையாக தாக்கப்பட்டதை பார்த்ததாக அப்பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மாட்டுத் தொழுவத்தில் இருந்து அஜித்தை காவல்துறையினர் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். திருப்புவனம் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், அஜித் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்திய பிறகு அஜித்தின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

காவல் நிலையம் முற்றுகை, கடையடைப்பு

திருப்புவனம் காவல் நிலையத்தை அஜித்குமாரின் உறவினர்களும் மடப்புரம் கிராம மக்களும் சனிக்கிழமை இரவு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து அங்கே வந்த சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷீஷ் ராவத் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அஜித்குமாரின் உறவினர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அஜித்குமார் உயிரிழந்து விட்டதை அவரது குடும்பத்தினரிடம் திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் உறுதிப்படுத்தினார். இதனால் பதற்றம் அதிகரித்ததால் திருப்புவனம் காவல் நிலையத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். அஜித்குமாரின் சொந்த ஊரான மடப்புரத்தில் கடைகள் அடைக்கப்பட்டன.

காவல்நிலைய மரணங்கள், மனித உரிமை மீறல்கள், காவல் நிலைய வன்முறைகள், தமிழ்நாடு, முக ஸ்டாலின், மானாமதுரை, சிவகங்கை, அஜித்குமார்

படக்குறிப்பு, திருப்புவனம் காவல் நிலையத்தின் முகப்பு

அஜித் குமாரின் சகோதரர் கூறியது என்ன?

"எனது அண்ணன் அஜித்தை போலீசார் கோவிலுக்கு பின்புறம் அழைத்துச் சென்ற போது அவன் நடந்து தான் சென்றான். ஆனால் திரும்பும் போது அவனை தூக்கிக் கொண்டு வந்தனர்," என்கிறார் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நவீன் குமார்.

பிபிசியிடம் பேசிய அவர், "வெள்ளிக்கிழமை மதியம் எனது அண்ணன் அஜித்குமார் கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் காரில் இருந்த தங்க நகையை திருடியதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அஜித்துக்கு கார் ஓட்ட தெரியாது என்பதால் சாவியை அஜித்தின் நண்பர்கள் அருண்குமார், வினோத் குமார் ஆகியோரிடம் கொடுத்து காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வருமாறு கூறியுள்ளார்.

ஆனால் காரை எடுத்து சென்ற இருவரும் வெகு நேரமாக காரை பார்க்கிங்கில் நிறுத்தாமல் நீண்ட தூரம் ஓட்டிச் சென்றுள்ளனர். நீண்ட நேரத்திற்கு பிறகு தான் காரை அவர்கள் கொண்டு வந்து கொடுத்துள்ளனர். கேட்டதற்கு பார்க்கிங்கில் இடமில்லாததால் வெகு தூரம் சென்று காரை நிறுத்தி இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை அஜித் போலீசாரிடம் கூறியதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு மானாமதுரை குற்றப்பிரிவு காவல் துறையினர், நான் மற்றும் பிரவீன்குமார், அருண்குமார், வினோத் குமார், அஜித் குமார் 5 பேரையும் மடப்புரம் அருகே உள்ள கண்மாய் கரை உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்," என்றார்.

காவல்துறையினர் தங்களை கடுமையாக தாக்கியதாகக் குற்றம்சாட்டிய அவர், "அஜித்தை இரண்டு நாட்களாக தொடர்ந்து அடித்தால் அவனுக்கு காயம் அதிகமாக இருந்தது," என்று கூறினார்.

மேலும் பேசிய நவீன்குமார், "காரை ஓட்டி சென்ற அருண்குமார், வினோத் குமாரை காவல்துறையினர் தனித்தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். ஆனால் அவர்கள் காருக்குள் இருந்த நகையை பார்க்கவில்லை என கூறியதால் ஒரு கட்டத்தில் போலீசார் யாருக்கோ போன் செய்து காரில் நகை இருந்தது உண்மைதானா என கேட்டனர். அதற்கு அவர்கள் 10 பவுன் தங்க நகை இருந்தது என கூறியதை அடுத்து மீண்டும் அஜித்தை போலீசார் சனிக்கிழமை காலையில் இருந்து கடுமையாக அடித்தனர்.

அடி தாங்காமல் இறுதியில் அஜித் தான் அந்த நகையை திருடியதாகவும், அந்த நகையை கோவில் பின்புறம் உள்ள கோவில் அலுவலகத்தின் பின்னால் உள்ள மாட்டு தொழுவத்தில் மறைத்து வைத்திருப்பதாக சொன்னான். மடப்புரம் கோவில் பின்புறம் எங்கள் அனைவரையும் அழைத்து சென்றனர். எங்கள் நால்வரையும் வேனில் இருக்க வைத்து விட்டு 3 காவலர்கள் அஜித்தை மட்டும் அழைத்து சென்றனர்.

காவல் நிலையத்தில் வைத்து ஏற்கனவே போலீசார் கடுமையாக தாக்கியிருந்ததால் அஜித் மிகவும் கஷ்டப்பட்டு நடந்து சென்றான். சிறிது நேரத்திற்குப் பின் போலீசார் அஜித்தை தூக்கி கொண்டு மற்றொரு வாகனத்தில் சென்றதை பார்த்தேன்." என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து, தாம் உள்பட மற்ற நால்வரையும் வேனில் இருந்து இறங்கிச் செல்லுமாறு காவல்துறை கூறியதாக நவீன்குமார் தெரிவித்தார்.

"நான் வீட்டிற்குச் சென்று நடந்ததை கூறிய பின் குடும்பத்துடன் காவல் நிலையம் சென்று கேட்டதற்கு அஜித் இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்," என்றார் நவீன் குமார்.

மகனை இழந்த வேதனையில் இருக்கும் மாதவி பிபிசி தமிழிடம் பேசிய போது, "இன்னொரு மகனுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் நிரந்தர அரசு பணி வழங்குவதாகவும், நிதி உதவி வழங்குவதாகவும் கூறுகின்றனர். இதை கொடுத்தால் என் மகன் உயிருக்கு ஈடாகுமா? அவன் திரும்பி வருவானா?" என்று கேள்வி எழுப்பினார்.

காவல்நிலைய மரணங்கள், மனித உரிமை மீறல்கள், காவல் நிலைய வன்முறைகள், தமிழ்நாடு, முக ஸ்டாலின், மானாமதுரை, சிவகங்கை, அஜித்குமார்

படக்குறிப்பு, கோவிலின் பின்புறம் இருந்த மாட்டுத் தொழுவத்தில் அஜித் குமார் தாக்கப்பட்டார் என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்

நீதிபதி நேரில் ஆய்வு

அஜித் உயிரிழந்தது தொடர்பாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் நீதிபதி வேங்கட பிரசாத் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தாசில்தார், ஆர்டிஓ உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நீதிபதி முன் ஆஜராயினர். பின்னர் பெற்றோரின் சம்மதத்துடன் அஜித்தின் உடலை உடற்கூறாய்வு செய்து, குடும்பத்திடம் ஒப்படைக்க இருப்பதாகக் கூறி அவரின் குடும்பத்தினரை அழைத்துச் சென்றனர்.

அஜித் குடும்பத்தினரை காவல்துறையினர் அழைத்து செல்லும் போது அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக மற்றும் கிராம இளைஞர் சபையினர் உள்ளிட்டடோர் அஜித்தை தாக்கிய காவலர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

காவல்நிலைய மரணங்கள், மனித உரிமை மீறல்கள், காவல் நிலைய வன்முறைகள், தமிழ்நாடு, முக ஸ்டாலின், மானாமதுரை, சிவகங்கை, அஜித்குமார்

படக்குறிப்பு, அஜித்தை தாக்கிய காவலர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என உறுதி அளிக்கும்மாறு அரசியல் கட்சியினர் கோரிக்கை

காவல்துறை கூறுவது என்ன?

முதல் கட்ட நடவடிக்கையாக, மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படைக் காவலர்களான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்தன், மணிகண்டன் 6 பேரை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதியின் அறிக்கைக்கு பின் அவர்களை கைது செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

அஜித் குமார் உடல் தகனம்

இதற்கிடையே, உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் உடல் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே அவரது குடும்பத்தினர் உடலைப் பெற்று தகனம் செய்தனர்.

காவல்துறை தடயங்களை அழிக்க முயற்சி என்று குற்றச்சாட்டு

திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் காவல்துறை தடயங்களை அழிக்க பார்க்கிறது என்று மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் குற்றம்சாட்டியுள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "திருப்புவனம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரை போலீசார் சட்டவிரோதமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தது தெரிய வருகிறது. அஜித் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அஜித்குமாரின் இறப்பை போலீசார் மறைக்க பார்க்கின்றனர். அதன் ஒரு பகுதியாக தான் திருப்புவனம் நீதிமன்ற நீதிபதி விசாரணை செய்வதற்கு முன் 6 காவலர்களையும் அவசர அவசரமாக சஸ்பெண்ட் செய்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது" என்றார்.

"ராஜாஜி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு நடந்துள்ளது. உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. தடயங்கள் அழிக்கப்பட்டாலும் உடற்கூறு ஆய்வில் முடிவில் உண்மை நிச்சயம் வெளியே வரும். தென்மண்டல ஐஜி நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று ஹென்றி திபேன் கூறியுள்ளார்.

காவல்நிலைய மரணங்கள், மனித உரிமை மீறல்கள், காவல் நிலைய வன்முறைகள், தமிழ்நாடு, முக ஸ்டாலின், மானாமதுரை, சிவகங்கை, அஜித்குமார்

படக்குறிப்பு, எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சிகள் கண்டனம்

'ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது' என சினிமா Review எழுதிய முதலமைச்சர் எங்கே இருக்கிறார்? மு.க. ஸ்டாலின், விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது, சட்டப்பேரவையில் பொய் பேசியவர் தானே நீங்கள்? இதற்கும் அதே போல் பொய் தான் பதிலாக வருமா?," என தனது எக்ஸ் பக்கத்தில் அஜித் மரணம் குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

"காவல்துறை விசாரணையின் பேரில் ஒருவரை அடித்து தாக்கி படுகொலை செய்து விட்டு, அதற்கான நடவடிக்கையாக வெறும் பணியிடை நீக்கம் மட்டும் போதும் என்று கருதுவது வெகுஜனங்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். அஜித்தின் மரணம் போலீசார் தாக்குதலால் நேர்ந்தது வெளிச்சமான நிலையிலும், ஏன் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை? ஏன் கைது செய்து விசாரணை நடத்தப்படவில்லை?," என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க., ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தாலே ஏழை, எளியோரின் உயிருக்கு பாதுகாப்பில்லை என தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

"காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம் அடைந்துள்ள நிலையில், தவறிழைத்த காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்," என தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c74zqk4ndxvo

  • Replies 50
  • Views 2.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    ■★◆●உடலில் அணிய வேண்டிய 10 பவுன் நகையை காரின் பின் சீட்டில் கழட்டி வைத்தது ஏன்..? ■★◆● அம்மா / மகள் இருவரில் அது யாருடைய நகை..? என்ன நகை அது..? ■★◆●மதுரையில் இருந்து 25கிமீ மடப்புரம் கோயிலுக்கு காரை ஓ

  • satan
    satan

    சிவநேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்யக்கோரி கையெழுத்து வேட்டை நக்கிறதாம். கேள்விப்படவில்லையா சிறியர்? எய்தவர்கள் பிடிபட வேண்டும். அம்புகளை பிடிப்பதால் பிரச்சனை தீரப்போவதில்லை.

  • goshan_che
    goshan_che

    இந்த கொலை குஜராத் ரயில் எரிப்பு பாணியில் சில சங்கி காவல் அதிகாரிகளை வைத்து பிஜேபி ஆடிய நாடகம் என இப்போ பலர் எழுத ஆரம்பிக்கிறனர். அதாவது நகை காணாமல் போகவே இல்லை, அநியாயமாக ஒரு பொய் குற்றசாட்டை கூறி, சங

  • கருத்துக்கள உறவுகள்

514369246_2803131859878323_6669971479162

இது புதுசா இருக்கே.கொலைகாரனுக்கு உடந்தையாக இருந்தார்கள் என்று அவர்கள் குடும்பத்தினர் அனைவரையும் உள்ளே பிடிச்சு போடுங்கள் காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றம் நீங்கள் நினைத்தால் என்ன வழக்கு வேணாலும் போடலாம் போட்டு அவர்களை உள்ள தூக்கி போடுங்க.

Narendira Kumar Subramaniam

  • கருத்துக்கள உறவுகள்

514833302_707002981965571_84786082423371

தமிழகம் தலை குனிந்த தருணம்.

மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது - நீதிபதிகள்.

கட்டெறும்பு

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'காவலர்கள் தாக்கிய வீடியோ': நீதிபதியிடம் போட்டுக் காட்டிய வழக்கறிஞர்கள் - நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கு, அஜித்குமார் வழக்கு

பட மூலாதாரம்,SCREENGRAB

படக்குறிப்பு, உயர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் காட்டப்பட்ட வீடியோவில் ஒரு காட்சி(இடது) உயிரிழந்த காவலாளி அஜித் குமார் (வலது)

கட்டுரை தகவல்

  • பிரபுராவ் ஆனந்தன்

  • பிபிசி தமிழுக்காக

  • 1 ஜூலை 2025, 05:04 GMT

    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு அடுத்தடுத்து பூதாகரமாகி வருகிறது. கொலை வழக்காக மாற்றப்பட்டு 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், அஜித்குமாரை காவல்துறையினர் தாக்கிய போது எடுக்கப்பட்டது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி முன்னிலையில் வழக்கறிஞர்கள் வீடியோ ஒன்றை காட்டியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக காவல்துறையினருக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை திருடு போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் காவல்துறையினர் தாக்கியதால் உயிரிழந்தார் என்பது குற்றச்சாட்டு.

இதனிடையே, சிவகங்கை மாவட்ட எஸ்பியை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் என்ன நடக்கிறது?

நீதிமன்றத்தில் நடந்த விவாதங்கள்

அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான ஹென்றி திபேன் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக்கொள்ள வேண்டி மனு தாக்கல் செய்தார். அவருடைய மனுவை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.

அஜித்குமாரை பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகளைக் கொண்டு காவல்துறையினர் தாக்கியுள்ளனர் என குறிப்பிட்டு, அதன் புகைப்படங்களை வழக்கறிஞர் ஹென்றி திபேன் தாக்கல் செய்தார். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாட்டுத்தொழுவத்தில் வைத்து அஜித் குமாரை காவல்துறையினர் அடித்த போது எடுக்கப்பட்டதாகக் கூறி நீதிபதிகளிடம் வீடியோ ஒன்று காண்பிக்கப்பட்டது.

அந்த வீடியோவில் காவலர்களாக வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டிய நபர்கள் காவலர் உடையில் அல்லாமல் சாதாரண உடையில் இருந்தனர். இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து பிபிசியால் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை. மறைவிடத்தில் இருந்தபடி ஒருவர் பதிவு செய்த வீடியோ இது என்று வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.

"தென்னந்தோப்பில் வைத்து அஜித்குமாரை காவலர்கள் தாக்கி துன்புறுத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தும் போது சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்துள்ளார். திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அஜித்குமார் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் அங்கிருந்தே விசாரணை தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவரது உடல் எதற்காக மதுரை கொண்டு செல்லப்பட்டது என்பது சந்தேகத்தை எழுப்புகிறது.

அவரது தாயாரும், சகோதரரும் 28ஆம் இரவு 12 மணி வரை, தனது மகன் குறித்து விசாரித்துள்ளனர். திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்த எஸ்.பி., உங்கள் மகன் இறந்து விட்டார் என அஜித்தின் அம்மாவிடம் கூறி உள்ளார்" என ஹென்றி திபேன் வாதிட்டார்.

"அஜித்குமார் விசாரணையின் போது தப்பித்து ஓட முயற்சித்துள்ளார் என காவல்துறை எப்போதும் போல் கதை கூறுகின்றனர்" எனவும் ஹென்றி திபேன் குறிப்பிட்டார்.

ஹென்றி திபேன்

பட மூலாதாரம்,HENRI TIPHAGNE

படக்குறிப்பு, ஹென்றி திபேன்

"திமுகவின் சேங்கைமாறன் (அவரது மனைவி பஞ்சாயத்து தலைவராக இருக்கிறார்), மகேந்திரன் திருப்புவனம் திமுக செயலர், காளீஸ்வரன், மானாமதுரை டி.எஸ்.பி ஆகியோர் அஜித் இறந்த பின்பு 50 லட்சம் தருவதாக சமரசம் பேசியுள்ளனர்." என்றும் நீதிமன்றத்தில் அவர் குற்றம் சாட்டினார்.

"திருப்புவனம் நீதித்துறை நடுவர் விசாரிக்கும் போது அவரைச் சுற்றி காவல் துறையினர் சூழ்ந்திருந்தனர். உடற்கூராய்வு தொடங்குவதற்கு முன்பாக அஜித்தின் உடலை முழுமையாக பார்க்க தாய் மற்றும் சகோதரரை அனுமதிக்கவில்லை. உடற்கூராய்வு அறிக்கை தற்போது வரை அஜித்தின் தாயிடம் வழங்கப்படவில்லை" என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பான மற்றொரு மனுவை தாக்கல் செய்திருந்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மாரீஸ்குமார், "காவல்துறையினர் 6 பேர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், 5 பேர் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜித் குமார் கூறுவது பொய் என கூறியதால், திருப்புவனம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளரும் 'நன்றாக கவனியுங்கள்' என கூறியதாக, சிறப்பு விசாரணை குழுவின் தலைமை காவலர் கூறியுள்ளார். ஆகவே அவர்கள் இருவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும். நகை காணாமல் போன சம்பவத்தில் புகார்தாரர் நிகிதா, ஒரு ஐ ஏஎஸ் அதிகாரியின் நெருங்கிய உறவினர். அதனால் தான் வழக்குப் பதிவு செய்யாமல் தாக்கி உள்ளனர்." என்று கூறினார்.

நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்

அப்போது நீதிபதிகள் இவ்வழக்கு தொடர்பாக காவல்துறைக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

  • நகை காணாமல் போன வழக்கில் ஏன் எஃப்.ஐ.ஆர். பதியவில்லை?

  • காவல்துறையினர் மாமூல் வாங்குவது தொடர்பாக வீடியோக்கள் வருகின்றன. இதுதொடர்பாக சிறப்புப் படை விசாரித்து 2 மணிநேரத்தில் நிறுத்த முடியுமென்றால் நிறுத்துங்கள். விசாரிப்பார்களா? சிறப்புப்படை எந்த அடிப்படையில், யார் சொல்லி இந்த வழக்கை கையிலெடுத்தனர்?

  • யார் இந்த வழக்கை தனிப் படையிடம் ஒப்படைத்தது? அவர்களாகவே இந்த வழக்கை கையிலெடுத்து விசாரிக்க முடியுமா?

  • உயர் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டுமென முழுமையான விவரங்களை மறைக்கக் கூடாது. மக்களுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டும். புலனாய்வு செய்வதற்கே காவல்துறை.(பொதுமக்களை) அடிப்பதற்கு காவல்துறை எதற்கு?

  • நீங்கள் முழு உண்மையையும் சொல்ல மறுக்கிறீர்கள்‌. காவல் நிலையங்களில் சிசிடிவிகள் முறையாக வேலை செய்கின்றனவா? சிசிடிவி பதிவிலிருந்து மறைக்க விரும்புகிறீர்களா? பின் ஏன் வெளியிடங்களுக்கு கொண்டு சென்று விசாரிக்கிறீர்கள்?

  • அஜித்குமாரை 2 நாட்கள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல யார் அதிகாரம் கொடுத்தது?

  • மாஜிஸ்திரேட்டுக்கு உடனடியாக பிரேத பரிசோதனை அறிக்கை அனுப்பப்படாதது ஏன்?

  • காவல்துறை, நீதித்துறை குடும்பங்களில் இப்படி நடந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?

  • மாஜிஸ்திரேட் அப்பகுதி மக்களை ஏன் விசாரிக்க அனுமதிக்கவில்லை?

  • எஸ்.பி., யை உடனடியாக இடமாற்றம் செய்தது ஏன்? எதிர்கொள்ள வேண்டியதுதானே?

  • நீதித்துறை நடுவர் உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என உத்தரவிட நேரிடும்.

மேலும், "நடவடிக்கை முக்கியம். ஆனால் எந்த வழக்கை எப்படி விசாரிக்க வேண்டுமென்பது முக்கியம். ஒட்டுமொத்த அமைப்பையும் குறை சொல்லவில்லை. மக்களைக் காக்கவே காவல்துறை. அவர்களே மக்களைத் தாக்கினால், அதன் நோக்கமே இல்லாது போய்விடும். சீருடையால் கிடைக்கும் அதிகாரம் மக்களைக் காக்கவே, அவர்களது நலனுக்கே என்பதை காவல்துறையினர் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகம் அதிக கல்வியறிவு கொண்ட மக்களைக் கொண்ட மாநிலம். இருப்பினும் இது போல் நிகழ்வது ஏற்கத்தக்கதல்ல" என நீதிபதிகள் தெரிவித்தனர்.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

அரசுத்தரப்பில், "அஜித் இரவு 8 மணி முதல் 10.30 மணிக்குள் (இறந்திருப்பார். தொடக்க நிலை விசாரணை நடந்த பிறகு தான், (நகை காணாமல் போன) வழக்கு பதிவு செய்ய முடியும்.

மேலும், "தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் அரசு நடவடிக்கை எடுக்கும். தவறு செய்தவர்களுக்கு ஒருபோதும் நாங்கள் ஆதரவாக இருக்க மாட்டோம்" என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, "திருப்புவனம் நீதித்துறை மாஜிஸ்திரேட் அவரது விசாரணை அறிக்கையை 3 மணிக்கு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர், அஜித் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்த சக்தீஸ்வரன் 3 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும்.

உடற்கூராய்வு அறிக்கையை 3 மணிக்கு நீதிமன்றத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வருக்கு சமர்ப்பிக்க வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உடற்கூராய்வு அறிக்கை கூறுவது என்ன?

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அஜித்குமாரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அங்கே வழக்கமாக ஒரு பிரேத பரிசோதனை 1 முதல் 2 மணி நேரம் மட்டுமே ஆகும். ஆனால், அஜித்குமாருக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை 5 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது. பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூடற்கூராய்வு அவரது உடலில் அசாதாரண அளவிலான தாக்கங்கள் மற்றும் காயங்கள் இருந்ததை உறுதி செய்கிறது. அதன்படி,

  • குறைந்தது 18 வெளிப்புற காயங்கள் உடலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

  • மண்டையோடு தொடங்கி, கை, முதுகு, கால்கள் என அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளன.

  • உள்ளுறுப்புகளிலும் பலவிதமான காயங்கள், ரத்தக்கசிவு போன்ற மரணத்துக்குக் காரணமாக இருக்கக்கூடிய பாதிப்புகள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

  • கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட தீவிர காயம் உயிரிழப்புக்கு நேரடியான காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

  • உளவியல் அடிப்படையில் ஏற்பட்ட அதிர்ச்சி, அழுத்தம் மற்றும் உட்புற ரத்தக்கசிவு போன்றவை கூட மரணத்துக்கு வழிவகுத்திருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

  • வெளிப்புற மற்றும் உட்புற காயங்கள் அஜித் குமார் விசாரணையின் போது போலீசாரால் தாக்கப்பட்டார் என்று குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கு, அஜித்குமார் வழக்கு

5 காவலர்கள் கைது - விடியவிடிய நடந்தது என்ன?

அஜித்குமாரின் உடற்கூராய்வு அறிக்கையின் பேரில், விசாரணைக்கு அழைத்துச் சென்று அவரை தாக்கியதாக குற்றம்சாட்டப்படும் 5 காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் உடனே அடுத்தடுத்த நடவடிக்கைகளில் காவல்துறை இறங்கியது.

  • சிவகங்கை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இருந்து இரவு 9 மணியளவில் 5 காவலர்களையும் அழைத்துக் கொண்டு வேன் புறப்பட்டது.

  • இரவு 11 மணியளவில் திருப்புவனம் காவல் நிலையத்தை அந்த வேன் சென்றடைந்தது.

  • திருப்புவனம் காவல் நிலையத்தில் 5 காவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர்களது கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன.

  • மற்ற நடைமுறைகள் முடிந்த பின்னர் நள்ளிரவு 1.15 மணியளவில் 5 காவலர்களும் வேனில் நீதிபதி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

  • நள்ளிரவு 1.45 மணியளவில் திருப்புவனம் குற்றவியல் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன்பாக 5 காவலர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

  • குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 காவலர்களையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டனர்.

  • இதைத் தொடர்ந்து திருப்புவனத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 5 பேருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

  • அதன் பின்னர், அதிகாலை 4.30 மணியளவில் 5 காவலர்களும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் ஏற்கெனவே 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், வேன் ஓட்டுநர் ராமச்சந்திரன் தவிர 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கு, அஜித்குமார் வழக்கு

படக்குறிப்பு,ஐந்து காவலர்களும் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்

சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.

அரசியல் தலைவர்களும் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கு, அஜித்குமார் வழக்கு

படக்குறிப்பு,அஜித்குமார்

வழக்கின் பின்னணி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக அஜித் குமார் (வயது 27) பணியாற்றி வந்தார். அந்த கோவிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற போது தங்களது நகை காணாமல் போய் விட்டதாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா என்பவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தங்களது காரை பார்க்கிங்கில் விடுமாறு காவலாளி அஜித்குமாரிடம் சாவியை கொடுத்ததாகவும், திரும்பி வந்து பார்த்த போது காரின் பின்சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். நிகிதா மற்றும் கோவில் ஊழியர்களே அஜித்குமாரை திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அதன் பிறகு, நகை திருடு போனதாக கூறப்படும் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் பின்புறம் உள்ள மாட்டு தொழுவத்தில் வைத்து காவல்துறையினர் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார் என்பது குற்றச்சாட்டு.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0566166nl9o

  • கருத்துக்கள உறவுகள்

514266785_122131714424708822_63229777620

514274812_801913702516834_60532648585050

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஜித்குமார் காவலர்களால் தாக்கப்பட்ட வீடியோ வைரல்!

01 JUL, 2025 | 02:37 PM

image

தமிழ்நாட்டில்போலீஸ் விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவலர்களால் தாக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூன் 27-ம் தேதி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரது காரில் 10 பவுன் நகை திருடுபோனது குறித்து அஜித்குமாரை அழைத்துச் சென்று மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது அஜித்குமார் உயிரிழந்தார்.

அஜித்குமாரை போலீஸார் கடுமையாக தாக்கி கொலை செய்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் உடலை வாங்க மறுத்த அவர்களிடம் போலீஸார் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர். பின்னர் அஜித்குமார் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அஜித்குமார் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் போலீஸ் விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் தாக்கப்பட்ட வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/218933

  • கருத்துக்கள உறவுகள்

15060753-highcourt001.webp?resize=750%2C

பொலிஸார் தாக்கியதில் உயிரிழந்த இளைஞர்! வெளியான வீடியோவால் பரபரப்பு.

சிவகங்கை அருகே, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற 28 வயதான  காவலாளி, பொலிஸாரினால்  தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில், பத்ரகாளி அம்மன் கோயிலில் அஜித்குமார் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா மற்றும் அவரது தாயார் அந்த கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களது காரை வாகன தரிப்பிடத்தில் விடுமாறு கூறி,காவலாளி அஜித்குமாரிடம் சாவியை கொடுத்ததாகவும், திரும்பி வந்து பார்த்தபோது, காரின் பின் இருக்கைக்கு  அடியில் வைத்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் நிகிதா முறைப்பாடு அளித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், நிகிதா மற்றும் கோயில் ஊழியர்களே அஜித்குமாரை திருப்புவனம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அஜித் குமார் கடுமையாக லத்தியால் தாக்கி விசாரிக்கப்பட்டுள்ளார். அப்போது வலி தாங்க முடியாமல் அஜித்குமார் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதைத்தொடர்ந்து அஜித்குமாரை தாக்கி கொலை செய்த பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி அஜித்குமார் உறவினர்கள் மடப்புரத்தில் ஜூன் 28-ம் திகதி போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து மதுரை அரச மருத்துவமனையில் அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அன்று இரவு உடல் தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து திருப்புவனம் காவல்துறையினர் டீNளுளு 190 (2) (ஏ) பிரிவின் கீழ் வழக்கு பதிந்து நீதித்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டது.

மேலும் அந்த வழக்கு பதிவில் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, கீழே விழுந்து அடிபட்டதில் உயிரிழந்ததாக கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் தீவிரமாக்கப்பட்டு வந்த நிலையில்,தலை  முதல் கை, முதுகு, கால்கள் என அனைத்திலும் காயங்கள் இருந்தன.

மேலும், 18 இடங்களில் காயங்கள் இருப்பதும், பல இடங்களில் ரத்தக் கசிவு இருந்ததும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் அஜித்குமாரை தனிப்படை காவல்துறையினர் கோயில் பின்புறம் மாட்டு தொழுவத்தில் வைத்து கம்பால் தாக்கிய காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகி தற்போது  சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1437720

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் குடும்பத்தினருடன் தொலைபேசி மூலமாக உரையாடல்

  • கருத்துக்கள உறவுகள்

514244961_31361862396746205_895630241607

■★◆●உடலில் அணிய வேண்டிய 10 பவுன் நகையை காரின் பின் சீட்டில் கழட்டி வைத்தது ஏன்..?

■★◆● அம்மா / மகள் இருவரில் அது யாருடைய நகை..? என்ன நகை அது..?

■★◆●மதுரையில் இருந்து 25கிமீ மடப்புரம் கோயிலுக்கு காரை ஓட்டிக்கொண்டு வந்த மகள் நிகிதா... பின் சீட்டில் நகை வைக்கப்பட்ட அந்த காரின் சாவியை... முன் பின் பழக்கம் இல்லாத(?) 3ஆம் நபர் ஒருவரிடம் கொடுத்து பார்க்கிங் செய்யச் சொல்லிவிட்டு கோயிலுக்குள் போனது ஏன்..?

■★◆●தனக்கு கார் ஓட்டவே தெரியாத அஜித்குமார், காரை பார்க் செய்ய ஒப்புக்கொண்டு கார் சாவியை ஏன் பெற்றுக்கொண்டார்..?

■★◆●காரில் நகை இருந்தால் அதை எடுத்துக்கொள்ள வேண்டும், அல்லது அணிந்து கொள்ள வேண்டும் என்கிற பாதுகாப்புணர்வு ஏன் அம்மா மகள் இருவருக்கும் அப்போது ஏற்படவே இல்லை..? மற்ற பொருட்கள் எனில் பெண்கள் மறப்பார்கள். கவனமின்மை சாத்தியம். ஆனால், நகையை எப்படி பெண்கள் மறந்தனர்..? அம்மா சிவகாமி கூட ஞாபகப்படுத்தவில்லையா..?

■★◆●அஜித்திடம் சாவியை பெற்று காரை எடுத்து ஓட்டி பார்க் செய்த அந்த 4வது நபர் யார்..?

■★◆●நகை காணவில்லை என்றதும், நகைக்கு சொந்தக்காரர்கள், 7கிமீ அருகேயுள்ள திருப்புவனம் காவல் நிலையத்தில் உள்ளூர் போலீசிடம் புகார் அளித்தார்களா..?

■★◆●30கிமீ தூரமுள்ள மானாமதுரையில் இருந்து யூனிஃபார்ம் அணியாமல் (லுங்கி, கோடு போட்ட பேண்ட், டி ஷர்ட், சாதா சட்டை எல்லாம் அணிந்தபடி வந்ததாக ஊர் மக்கள் கூறுகிறார்கள்) போலீஸ் தனிப்படை ஒன்று மடப்புரம் கோயிலுக்கு விசாரணைக்கு ஓடி வந்தது ஏன்..?

■★◆●பக்கத்தில் உள்ள திருப்புவனம் காவல் நிலையத்திற்கு கூட்டிப்போய் விசாரணை செய்யாமல் தனிப்பட்ட இடத்தில் விசாரணை நடந்தது ஏன்..?

■★◆●"தப்பி ஓடும்போது தடுக்கி விழுந்து காக்கா வலிப்பு ஏற்பட்டு மரணம்" என்கிற பொய் FIR போட்டது ஏன்..? போட ஒப்புக்கொண்டது ஏன்..? (யூனிஃபார்ம் போடாத டி ஷர்ட் அணிந்த ஒருவரின் பிரம்படி வீடியோ வெளியாகி காக்கா வலிப்பு கதை எல்லாம் பொய் என்றாகிவிட்டது).

■★◆●உயர் அதிகாரிகளின் உத்தரவின் படிதான் தங்கள் வீட்டுக் காவலர்கள் இதைப்போன்று மனிதமற்று சட்ட விரோதமான கொடூரத்தில் ஈடுபட்டதாக தர்ணா போராட்டம் செய்கிற கைதான காவலர் குடும்பத்தினர் கூறியுள்ளனர் எனில்... கீழ்நிலை காவலர்களுக்கு சட்ட விரோதக் கட்டளை இட்ட குற்றத்திற்காக கைதாகி சிறை செல்ல வேண்டிய அந்த உயர் அதிகாரிகள் யார்..?

■★◆●இதைவிட அதிகளவில்... 100 பவுன் 200 பவுன்... என்று நகைகள் திருடு போன வழக்கில் எல்லாம் மெத்தனம் காட்டும் போலீஸ்...இவர்களின் 10 பவுன் நகைக்காக போலீஸ் இத்தனை தீவிரமாக உடனடி நடவடிக்கையில் இறங்கியது ஏன்..?

■★◆●இந்த நிகிதா... சிவகாமி இருவரும் யார்..? இவர்களின் பின்னணி என்ன..?!

மேற்கண்டவை போன்ற பல கேள்விகள் தெளிவான பதிலற்று உள்ளன. வழக்கில் பல மர்மங்கள் விலக வேண்டியுள்ளது.

குகன் அருமைநாட்டார்

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

இது புதுசா இருக்கே.கொலைகாரனுக்கு உடந்தையாக இருந்தார்கள் என்று அவர்கள் குடும்பத்தினர் அனைவரையும் உள்ளே பிடிச்சு போடுங்கள் காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றம் நீங்கள் நினைத்தால் என்ன வழக்கு வேணாலும் போடலாம் போட்டு அவர்களை உள்ள தூக்கி போடுங்க.

சிவநேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்யக்கோரி கையெழுத்து வேட்டை நக்கிறதாம். கேள்விப்படவில்லையா சிறியர்? எய்தவர்கள் பிடிபட வேண்டும். அம்புகளை பிடிப்பதால் பிரச்சனை தீரப்போவதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'சடலமாக வருவான் என நினைக்கவில்லை' என்று கதறும் தாயார் - நகை திருட்டு புகார் கொடுத்த பெண் கூறுவது என்ன? பிபிசி கள ஆய்வு

திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கு, அஜித்குமார் வழக்கு, நவீன்குமார், சிவகங்கை

படக்குறிப்பு, காவலாளி அஜித் குமாரும் அவரை தாக்கப்பட்டதாக கூறப்படும் இடமும்

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி செய்தியாளர்

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

"என் கண் எதிரிலேயே அவனை அடித்தார்கள். குடிப்பதற்கு தண்ணீர் கேட்டான். வாயில் மிளகாய் பொடியை கரைத்து ஊற்றினார்கள். கோவிலின் பின்புறம் கூட்டிப் போய் நகை எங்கே என்று கேட்டு அடித்தனர். அங்கேயே சுருண்டு விழுந்துவிட்டான்" எனக் கூறி கண்கலங்கினார், காவலாளி அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார்.

"எங்கள் புகாரால் ஓர் உயிர் பறிபோகும் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை" என்கிறார், காவலாளி மீது புகார் கொடுத்த நிகிதா.

திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமாரை காவல்துறையினர் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோவை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் போட்டுக் காண்பித்தனர்.

கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், அவரது சொந்த ஊரான மடப்புரம் கிராமத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய களத்துக்குச் சென்றது பிபிசி தமிழ்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் மடப்புரம் அமைந்துள்ளது. 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த ஊரில் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு விவசாயம் மற்றும் அவை சார்ந்த கூலி தொழில்கள் பிரதானமாக உள்ளன.

திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கு, அஜித்குமார் வழக்கு, நவீன்குமார், சிவகங்கை

மடப்புரம் கிராமத்தில் என்ன நிலவரம்?

மடப்புரம் கிராமத்துக்கு பிபிசி தமிழ் சென்ற போது, கோவிலைச் சுற்றி கடை வைத்திருந்த வணிகர்கள் பலரும் பேசவே தயங்கினர். ஒரு சில பெண்கள், "நாங்கள் வெளியூரில் இருந்து வந்து வியாபாரம் செய்கிறோம். போலீஸ் அடித்து அந்தப் பையன் இறந்துபோன தகவலைக் கேள்விப்பட்டோம். அவர் யாருடனும் சண்டை போட்டு நாங்கள் பார்த்ததில்லை" எனக் கூறினர்.

கோவிலுக்கு அருகில் பூ வியாபாரம் செய்து வரும் ஆறுமுகத்தாய் பிபிசி தமிழிடம் பேசும்போது, "இந்த வழியாக அந்தப் பையன் வேலைக்கு வருவதைப் பார்த்திருக்கிறேன். அன்றைக்கு போலீஸ் அழைத்துக் கொண்டு போனதாக கூறினார்கள். போலீஸ் அடித்ததை நான் பார்க்கவில்லை" என்று மட்டும் பதில் அளித்தார்.

கோவிலில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ள காவலாளி அஜித்குமாரின் வீட்டுக்கு பிபிசி தமிழ் சென்றது. மிகப் பழைமையான அந்த வீடு அமைந்துள்ள தெருவில் சில அரசியல் கட்சி நிர்வாகிகளின் கார்கள் நின்றிருந்தன.

திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கு, அஜித்குமார் வழக்கு, நவீன்குமார், சிவகங்கை

படக்குறிப்பு, மாலதி

"சடலமாக வருவான் என நினைக்கவில்லை"

அஜித்குமாரின் தாய் மாலதியிடம் பிபிசி தமிழ் பேசுகையில், "சாமி கும்பிட வந்த ஒரு பெண், தனது காரை பார்க்கிங் செய்வதற்காக சாவியை என் மகனிடம் கொடுத்துள்ளார். அவன் தனக்குத் தெரிந்தவர்களிடம் சாவியைக் கொடுத்துள்ளான். சாமி கும்பிட்டுவிட்டுக் கிளம்பி போன அவர்கள், திரும்பி வந்து நகையைக் காணவில்லை எனக் கூறி கோவில் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்" என்றார்.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர், காரின் பின்சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 9.5 சவரன் நகை மற்றும் 2,500 ரூபாய் பணத்தைக் காணவில்லை என்று கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் அஜித்குமாரை திருப்புவனம் போலீஸார் விசாரித்துள்ளனர்.

"மாலை நான்கு மணியளவில் என் மகனை போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருப்பது தெரிந்தது. அங்கு அவனிடம், 'அரிசி மாவு ஆட்டி உங்களை எல்லாம் காப்பாத்தினேன். நகை எடுத்திருந்தால் கொடுத்துவிடு' எனக் கூறி அழுதேன். நான் எடுக்கவில்லை எனக் கூறினான். அங்கிருந்து போலீஸார் என்னை விரட்டிவிட்டனர்" எனக் கூறினார் மாலதி.

"மறுநாள் என் மகனை சடலமாகக் கொடுப்பார்கள் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை" என்றவாறு மாலதி கதறி அழுதார். இவரது கணவர் இறந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. மாவு வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.

நிகிதா கொடுத்த புகாரின்பேரில் ஜூன் 28ஆம் தேதி காலையில் அஜித்குமாரின் வீட்டுக்கு போலீஸார் சென்றுள்ளனர்.

திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கு, அஜித்குமார் வழக்கு, நவீன்குமார், சிவகங்கை

படக்குறிப்பு, நவீன்குமார்

"மிளகாய் பொடியை கரைத்து ஊற்றினர்"

"தனிப்படை காவலர்கள் 3 பேர் வீட்டில் சோதனை நடத்தினர். வெளியில் இருந்த வேனில் என் அண்ணன் இருந்தான். சட்டை எல்லாம் மண்ணாக இருந்தது. தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது நன்றாக அடித்துள்ளனர் எனத் தெரிந்தது" என்று அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் கூறினார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இரவு முழுக்க என் அண்ணனை தூங்கவிடவில்லை. 'உன் தம்பியை அடித்தால் சொல்வாயா?' எனக் கேட்டு என்னையும் அடித்தனர். மதியம் சாப்பிட்ட பிறகு 3 தனிப்படை போலீஸார் அண்ணனை கடுமையாக தாக்கினர். வலி தாங்க முடியாமல் நகையை எடுத்ததாக கூறியுள்ளான்" என்கிறார்.

கோவிலின் பின்புறம் நகை உள்ளதாகக் கூறியதால் அஜித்குமாரை தனிப்படை காவலர்கள் அங்கு அழைத்து சென்றுள்ளனர். " அங்கு நகை இல்லை எனத் தெரிந்ததும் கோபப்பட்டு காவலர்கள் கடுமையாக அடித்தனர். அவனது அலறல் சத்தம் கேட்டு கோவில் அருகே கடை வைத்திருந்த வியாபாரிகள் ஓடிவந்தனர்" எனக் கூறினார்.

"போகும் போது என் அண்ணன் நடந்து போனான். வரும்போது தூக்கிக் கொண்டு வந்தனர். குடிப்பதற்கு தண்ணீர் கேட்டபோது மிளகாய்ப் பொடியை கரைத்து வாயில் ஊற்றினர். அருகில் கம்பியெல்லாம் கிடந்தது. கடைசியாக என் சட்டையை கழட்டிக் கொடுத்தேன்." எனக் கூறி கண்கலங்கினார், நவீன்குமார்.

கோவிலின் பின்புறத்தில் அஜித்குமார் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாட்டுத்தொழுவத்துக்கு பிபிசி தமிழ் சென்றது. சுற்றிலும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு அந்த இடமே சுத்தம் செய்யப்பட்டிருந்தது.

அரசு வேலை மற்றும் நிவாரண உதவிகளை தருகிறோம் என்று உறுதியளிக்கப்பட்டிருப்பதாக வெளியில் பேசப்படும் தகவல் குறித்து நவீன்குமாரிடம் கேட்டபோது, "அரசு தரப்பில் உதவி செய்வதாகக் கூறினர். ஆனால், அப்படி எந்த உதவிகளும் வரவில்லை" எனக் குறிப்பிட்டார்.

"அஜித்குமாருக்கு கார் ஓட்டத் தெரியாது. அருகில் இருந்த ஆட்டோ டிரைவர்களிடம் சாவியைக் கொடுத்ததாகக் கூறினான்." என்று அவரது நண்பரும் அவருடன் பத்திரகாளியம்மன் கோவிலில் தற்காலிக காவலாளியாக பணிபுரிபவருமான வினோத் கூறினார்.

காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படும் 5 பேரில் வினோத்தும் ஒருவர். அவர் குறிப்பிடும் இரு ஆட்டோ டிரைவர்களும் காவல்துறை அழைத்துச் சென்ற 5 பேரில் அடங்குவர் என்று வினோத் கூறினார்.

திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கு, அஜித்குமார் வழக்கு, நவீன்குமார், சிவகங்கை

படக்குறிப்பு, வினோத்

காவலர்களின் குடும்பத்தினர் போராட்டம்

அங்கிருந்து திருப்புவனம் காவல் நிலையத்துக்கு பிபிசி தமிழ் சென்றபோது, குடும்பம் சகிதமாக சிலர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காவலர்களின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.

அப்போது பேசிய அவர்கள், "நன்றாக வேலை பார்த்ததாக உயர் அதிகாரிகள் நற்சான்றிதழ்களைக் கொடுத்துள்ளனர். அதை வைத்து எங்கள் குழந்தைகளை வளர்க்க முடியுமா?" எனக் கேள்வி எழுப்பினர்.

"இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட காவலர்களின் குடும்பங்களுக்கும் நியாயம் வேண்டும்" என்று குறிப்பிட்ட அவர்கள், " உயர் அதிகாரிகள் கூறும் போது கீழே உள்ளவர்கள் அதைக் கேட்டு செயல்படத்தான் செய்வார்கள். அந்தப் பையனுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை" எனக் கூறினர்.

ஆனால், உரிய அனுமதியின்றி காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தியதாகக் கூறி அவர்களை அங்கிருந்து போலீஸார் அப்புறப்படுத்தினர்.

திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கு, அஜித்குமார் வழக்கு, நவீன்குமார், சிவகங்கை

படக்குறிப்பு, திருப்புவனம் காவல் நிலையம்

"மூன்று மாதங்களாக சம்பளம் வரவில்லை"

"பத்தாவது படித்த பிறகு தனியார் கம்பெனியில் என் அண்ணன் வேலை பார்த்து வந்தான். கோவிலில் காவலாளி பணி உள்ளதாகக் கூறியதால் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு தற்காலிகமாக வேலை பார்த்து வந்தான். மூன்று மாதங்களாக அந்த சம்பளமும் கொடுக்கப்படவில்லை" எனக் கூறுகிறார், அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார்.

கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையில் புகார் அளித்த பெண்ணின் மேலிட செல்வாக்கு காரணமாகவே தன் அண்ணனை காவல்துறை தாக்கியதாக அவர் குற்றம் சுமத்தினார்.

புகார் கொடுத்த பெண் கூறுவது என்ன?

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறார் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஓர் உயிர் போனதில் மிகுந்த வேதனையில் இருக்கிறோம். இப்படி நடக்கும் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறினால் அழைத்து விசாரிப்பார்கள் என்று தான் தெரியும். காவலாளி இறந்தது கூட எங்களுக்குத் தெரியாது" எனக் கூறுகிறார்.

தானும் 76 வயதான தாய் மட்டுமே வசித்து வருவதாகக் கூறும் அவர், "எனக்கு செல்வாக்கு இருப்பதாகக் கூறுவது தவறானது. ஒன்பதரை சவரன் நகை காணாமல் போனதாக சார்பாய்வாளரிடம் புகார் கொடுத்தேன். மதியம் 2.30 மணிக்கு சென்று மாலை 7 மணிக்கு தான் காவல் நிலையத்தில் இருந்து வெளியில் வந்தோம்" என்கிறார்.

"நகையை பின்சீட்டில் வைத்திருந்ததாகக் கூறுவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதே?" என்று கேட்டபோது, "என் தாயார் வயதானவர் என்பதால் யாரும் பறித்துவிட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக காரின் பின்சீட்டில் வைத்துவிட்டுச் சென்றேன். வேண்டும் என்றே செய்யவில்லை" எனக் கூறுகிறார்.

"என் நகையை இறந்து போன காவலாளி எடுத்திருப்பாரா என உறுதியாக தெரியாது. என்னிடம் சாவி வாங்கிச் சென்றது அவர் தான். அதைத் தான் கூறினேன். எங்களுக்குக் கடவுளைத் தவிர வேறு யாரையும் தெரியாது" என்கிறார் நிகிதா.

திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கு, அஜித்குமார் வழக்கு, நவீன்குமார், சிவகங்கை

படக்குறிப்பு, திருப்புவனம் காவல் நிலையத்தில் 5 காவலர்களிடம் விசாரணை நடந்த காட்சி (இடது), காவலாளி அஜித்குமார் (வலது)

"எந்த அதிகாரமும் இல்லை" - ஆஷிஷ் ராவத்

காவல்துறை மீதான விமர்சனங்களுக்கு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆஷிஷ் ராவத்திடம் விளக்கம் பெறுவதற்காக பிபிசி தமிழ் நேரில் சென்றது.

"புதிய காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டதால், தற்போது தனக்கு எந்த அதிகாரமும் இல்லை" என்று மட்டும் அவரது தரப்பு பதிலாக பிபிசி தமிழுக்கு சொல்லப்பட்டது.

அஜித்குமார் மரண வழக்கு உடற்கூராய்வு அறிக்கைக்குப் பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்டது பெரும் திருப்பமாக அமைந்தது. 5 காவலர்கள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுவிட்டனர். சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், மானாமதுரை டிஎஸ்பியாக இருந்த சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுத்திருந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgk3ryvpekzo

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு தூரம் காரை ஓட்டி வந்த பெண், தானே வாகன தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு நடந்து சென்றிருக்கலாம், அல்லது தாயை கோவில் வாசலில் இறக்கிவிட்டு தான் சென்று நிறுத்தியிருக்கலாம். ஒரு உயிர் போய்விட்டது, இனி ஒரு உயிர் போகாமல் பாதுகாக்கலாமேயொழிய போன உயிரை திரும்பப்பெற முடியாது. கார் ஓட்டத்தெரியாதவர் சாவியை வாங்கியிருக்கக்கூடாது. வீட்டிலிருந்து பத்திரமாய் கொண்டுவந்த நகையை இவ்வாறு அசமந்தமாய் விட்டிருக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

515078708_767317709295215_88661440043562

  • கருத்துக்கள உறவுகள்

514490326_721035960527922_90161183562079

514958488_721479747150210_74597279735035

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜித்குமார் படு*லை சித்தரிக்கப்பட்ட காட்சி போல...

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொலை குஜராத் ரயில் எரிப்பு பாணியில் சில சங்கி காவல் அதிகாரிகளை வைத்து பிஜேபி ஆடிய நாடகம் என இப்போ பலர் எழுத ஆரம்பிக்கிறனர்.

அதாவது நகை காணாமல் போகவே இல்லை, அநியாயமாக ஒரு பொய் குற்றசாட்டை கூறி, சங்கிகளால் வாங்கப்பட்ட டிஸ்பி ஒருவர் மூலம் இந்த பையன் கொலை நடந்துள்ளதாம்.

நிகிதா முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு வேண்டப்பட்டவர் என கூறி பல மோசடிகளை செய்துள்ளாராம்.


திருப்புவனம் சம்பவமே அரசியல் டிராமாவா என சந்தேகம் வருது.. பாஜக மீது லைட்டை திருப்பிய டாக்டர் ஷர்மிளா

Vignesh SelvarajPublished: Thursday, July 3, 2025, 21:54 [IST]

Dr Sharmila Questions Credibility of Complainant in Ajith Kumar Case Alleges BJP-Backed Political Drama

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித் குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவலர்கள் கொடூரமாகத் தாக்கியதில் இளைஞர் அஜித் குமார் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

யார் இந்த நிக்கிதா?

அஜித் குமார் போலீசாரால் கொல்லப்பட்ட வழக்கில், புகார் அளித்த நிக்கிதா குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை மாவட்டம், திருமங்கலம் ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபெருமாள். இவர் மறைந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. இவரது மகள் நிக்கிதா முனைவர் பட்டம் பெற்றவர்; திண்டுக்கல் அரசு மகளிர் கலை கல்லுாரியில் தாவரவியல் பேராசிரியையாக உள்ளார். தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

நிக்கிதா, அவரது தாயார் ஆகியோர், திருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வசூலித்ததாகவும், அவர்களுக்கு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாகவும் பல லட்சம் ரூபாய் மோசடி வழக்கு, திருமங்கலம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் கடந்த 2011 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு மோசடி புகார்களும் நிக்கிதா மீது அளிக்கப்பட்டுள்ளன.

பயங்கர மோசடி

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் உதவியாளர்கள், அமைச்சர்கள் ஆகியோரிடம் தனக்குப் பழக்கம் இருப்பதாகவும் அவர்களிடம் பேசி அரசு வேலை வாங்கித் தருவதாகப் பலரை நிகிதா ஏமாற்றியிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தற்போது நிக்கிதா மீது அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.

திருப்புவனத்தில் நகை திருட்டு என்ற புகார் கூட பொய்யான தகவலாக இருக்கலாம் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நகை திருட்டு வழக்கில் புகார் அளித்த நிக்கிதாவின் அடுக்கடுக்கான மோசடிகள் வெளிச்சத்திற்கு வரும் நிலையில் விசாரணை வளையத்திற்குள் நிகிதா கொண்டு வரப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டாக்டர் ஷர்மிளா சந்தேகம்

இந்நிலையில், நிக்கிதாவின் பின்னணி தொடர்பாக சந்தேகங்களை எழுப்பியுள்ளார் டாக்டர் ஷர்மிளா. மதுரையை மையமாக வைத்து பாஜக நடத்தும் அரசியல் டிராமாவாக கூட இது இருக்கலாம் என சந்தேகம் கிளப்பியுள்ளார் ஷர்மிளா.

டாக்டர் ஷர்மிளா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நிக்கிதா மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவராம். முன்னாள் துணை முதலமைச்சர் தனக்கு நெருக்கம் என்று சொல்லி பல பேரிடம் பண மோசடி செய்திருக்கிறாராம். ஐஏஎஸ் அதிகாரி , காவல்துறை உயரதிகாரி என்று பலருடன் இவருக்கு நெருக்கம் இருக்கிறது.

இந்த நெருக்கத்தை பயன்படுத்தி சிவகங்கை மாவட்ட டிஎஸ்பி மூலம் எஃப்.ஐ.ஆர் கூட போடாமல் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தும் அளவுக்கு செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார். காவல்துறையில் பல கருப்பு ஆடுகள் சங்கி ஸ்லீப்பர் செல்லாக செயல்படுகிறார்கள் என்று பலமுறை பலர் விமர்சனம் செய்திருக்கின்றனர்.

பாஜகவின் டார்கெட் மதுரை

சமீபகாலமாக சங்கிகளின் டார்கெட் 'மதுரை'.. தொடர்ந்து மதுரையை மையமாக வைத்து காய் நகர்த்துகிறது பாஜக. நிகிதா தலைமறைவு... இந்த வழக்கை relevant ஆக வைக்க எதிர்கட்சிகள் காட்டும் ஆர்வம்.. 'நடுநிலையாளர்களின்' நரேட்டிவ் , கோதி மீடியா கொடுக்கும் தேசிய அளவிலான ஊடக வெளிச்சம்.

இதையெல்லாம் பார்க்கும்போது இந்த நகைத்திருட்டு என்பது ஏன் ஒரு well - orchestrated அரசியல் - டிராமாவாக இருக்கக்கூடாது என்ற சந்தேகம் தான் வருகிறது. சங்கிகள் எதையும் செய்ய துணிந்தவர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.

https://tamil.oneindia.com/news/chennai/dr-sharmila-questions-credibility-of-complainant-in-ajith-kumar-case-alleges-bjp-backed-political-d-717645.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

திருப்புவனம் சம்பவமே அரசியல் டிராமாவா என சந்தேகம் வருது.. பாஜக மீது லைட்டை திருப்பிய டாக்டர் ஷர்மிளா

திமுகவுக்கு முரட்டு முட்டுக்கொடுக்கும் இந்த நாடக நடிகை நடிகை சர்மிளா போட்ட நாடகம்தான் இது. நீதிபதி கேட்ட கேள்விக்கு பதில் கொடுப்பதை விடுத்து இது என்ன திசை திருப்பல்.நாடகம் நடித்துப்பழகிப்போனதால் ஒரு புது கதை எழுதுகிறார் இந்த நடிகை.

  • கருத்துக்கள உறவுகள்

15060753-highcourt001.webp?resize=750%2C

அஜித்தின் பிரேத பரிசோதனையில் வெளியான திடுக்கிடும் தகவல்.

சிவகங்கை அருகே, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற 28 வயதான  காவலாளி, பொலிஸாரினால்  தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும்  பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில்  அஜித்தின் பிரேத பரிசோதனை தொடர்பில்  வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையில் ” அஜித்குமாரின் உடலில், 50 வெளிப்புற காயங்கள் இருந்தன. இதில், 12 சிராய்ப்பு காயங்கள், மீதி ரத்தக்கட்டு காயங்களாக இருந்துள்ளன.

ரத்தம் கன்றிய காயங்கள் ஒவ்வொன்றும் ஒரு காயமாக இருந்தாலும், அந்த காயத்தினுள்ளே பல்வேறு ரத்தக்கட்டு காயங்கள் அடங்கியுள்ளன. வயிற்றின் நடுவே கம்பை வைத்து குத்திய காயத்துடன் மண்டையோட்டில் அடியும், மூளையில் ரத்தக்கசிவும் ஏற்பட்டுள்ளது. சிகரெட்டால் சூடு வைக்கப்பட்ட புண் இருந்தது. ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் அடித்ததால், ரத்த காயம் பல வகையாக காணப்படுகிறது.

தரையில் இழுத்துச்சென்றதால் சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கலாம் அல்லது பொலிஸார்  அடிக்கும் போது தற்காத்துக் கொள்ள போராடி இருந்ததாலும் சிராய்ப்புகள் ஏற்பட்டு இருக்கலாம். தொடர்ந்து, பல மணி நேரம் கும்பலாக சேர்ந்து இந்த சித்ரவதையை நடத்தி இருக்கலாம்”  எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1437996

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'அஜித்குமார் தாக்கப்பட்ட வீடியோவை நான் எடுத்தேன்' - சாட்சியை காக்க வழிகள் உள்ளதா?

அஜித்குமார் கொலை வழக்கு, மடப்புரம் காவலாளி கொலை வழக்கு, சக்தீஸ்வரன்

படக்குறிப்பு, அஜித்குமார் வழக்கில் முக்கிய சாட்சியான சக்தீஸ்வரன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் கூறியிருந்தார்

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • 4 ஜூலை 2025, 03:02 GMT

    புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர்

"அஜித்குமாரை தாக்கும் வீடியோவை நான் எடுத்தேன். இதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த காரணத்தால் எனக்கும் என்னைச் சார்ந்தோரின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது" என்கிறார், திருப்புவனம் தாலுகாவில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் ஊழியர் சக்தீஸ்வரன்.

தனக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் பதிவாளர், டி.ஜி.பி ஆகியோருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதன்படி, தென்மண்டல ஐஜி உத்தரவின் பேரில் ராமநாதபுரத்தில் இருந்து இரண்டு காவலர்கள் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

'இந்தியாவில் சாட்சிகளை பாதுகாப்பதற்கு பல்வேறு திட்டங்கள் இருந்தாலும் அதை மாநில அரசு முறையாக செயல்படுத்துவதில்லை' என சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகாவில் உள்ள மடப்புரம் ஊராட்சியில் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 28 ஆம் தேதியன்று வழிபாடு நடத்துவதற்காக வந்த முனைவர் நிகிதா என்பவர், தனது காரில் வைத்திருந்த ஒன்பதரை சவரன் நகையைக் காணவில்லை என திருப்புவனம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் கோவில் காவலாளி அஜித்குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர். அஜித்குமார் தாக்கப்படும் வீடியோவும் வெளியானது.

கைதான ஐந்து காவலர்கள்

இந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் ஆனந்த், கண்ணன், ராஜா, பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். காவலாளி மரண வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ளதாக, தமிழ்நாடு காவல்துறை தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு, ஜூலை 1 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு எடுத்தது.

அப்போது, அஜித்குமாரை காவலர்கள் தாக்கும் வீடியோவை மனுதாரர்கள் தரப்பில் போட்டுக் காண்பித்தனர். கோவில் நிர்வாக அலுவலகத்தின் பின்புறம் உள்ள இடத்தில் வைத்து அவரைத் தாக்கியதாகவும் அப்போது ஒருவர் மறைவாக நின்று வீடியோ எடுத்ததாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

வீடியோவின் உண்மைத்தன்மையை பிபிசி தமிழால் சரிபார்க்க முடியவில்லை. ஆனால், போலீஸார் தாக்கும் வீடியோவை தான் எடுத்ததாகக் கூறிய கோவில் ஊழியர் சக்தீஸ்வரனிடம் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளீட் அமர்வு விசாரணை நடத்தியது.

வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது, எவ்வளவு நேரம் எடுக்கப்பட்டது அங்கு யார் இருந்தார்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த சக்தீஸ்வரன், கோவில் பின்புறம் உள்ள கழிவறையில் இருந்து வீடியோ எடுத்ததாக தெரிவித்தார்.

"வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்க வேண்டும்" எனக் கூறிய நீதிபதிகள், வழக்கின் ஆவணங்கள், கேமரா பதிவுகளை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டு, ஜூலை 9 ஆம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தனர்.

அஜித்குமார் மரண வழக்கு, மடப்புரம் மரண வழக்கு

படக்குறிப்பு, காவலாளி அஜித்குமாரும் அவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் இடமும்

'உயிருக்கு அச்சுறுத்தல்' - டிஜிபியிடம் மனு

இந்த நிலையில், தனக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் பதிவாளர், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு கோவில் ஊழியர் சக்தீஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், 'சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்குமாறு ஜூலை 1 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. வழக்கில் தொடர்புடைய காவலருக்கு குற்றப் பின்னணி உடைய நபர்களுடன் தொடர்பு உள்ளது' எனக் கூறியுள்ளார்.

அஜித்குமாரை போலீஸ் தாக்கும் வீடியோவை எடுத்தேன் என்பதால் தனக்கும் தன்னைச் சார்ந்துள்ளவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக சக்தீஸ்வரன் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசும்போது இதே தகவலைக் குறிப்பிட்ட சக்தீஸ்வரன், "அஜித்குமாரை காப்பாற்ற முடியாமல் தவித்தேன். வீடியோ எடுக்கும்போது யாரோ வருவது போல இருந்ததால், 30 நொடிகளுக்கு மேல் வீடியோவை எடுக்க முடியவில்லை" எனக் கூறினார்.

"அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் உள்பட வழக்கின் சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும்" எனவும் சக்தீஸ்வரன் குறிப்பிட்டார்.

சக்தீஸ்வரனின் கோரிக்கையை தொடர்ந்து அவருக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், சாட்சிகளின் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது.

அஜித்குமார் மரண வழக்கு, மடப்புரம் மரண வழக்கு

படக்குறிப்பு, கோவிலின் பின்புறம்

"சாட்சி மிக முக்கியம்...ஆனால்?" - சகாயம் சொல்வது என்ன?

"கொலை, கொள்ளை அல்லது கொடும் குற்றங்கள் சார்ந்த வழக்குகளில் நீதிமன்றத்தால் தண்டனைகளை வழங்குவதற்கு எந்தளவுக்கு ஆவணங்கள் முக்கியமோ, அதே அளவுக்கு ஒரு மனிதரின் சாட்சி மிக முக்கியமானது" எனக் கூறுகிறார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்.

ஆனால், சாட்சிகள் அச்சுறுத்தப்படுவது, அலைக்கழிப்பது போன்றவை தொடர்ந்து நடப்பதாக பிபிசி தமிழிடம் கூறிய அவர், "வழக்கு விசாரணை நடக்கும்போது சாட்சி சொல்ல வந்த நபரும் குற்றம் சுமத்தப்பட்ட நபரும் அருகருகே அமரும் சூழல்கள் ஏற்படுகின்றன" என்கிறார்.

பல்வேறு வகைகளில் சாட்சிகள் மிரட்டப்படுவதாகக் கூறும் சகாயம், "பெரும்பாலும் சாட்சிகளை ஊக்கப்படுத்தும் சூழல்கள் நீதிமன்றங்களில் இல்லை. ஒரு வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என்றால் சாட்சிகளைப் பாதுகாக்க வேண்டும்" எனக் கூறுகிறார்.

மேலும் அவர் பணியாற்றிய வழக்கு குறித்தும் மேற்கோள்காட்டினார்.

2014-ஆம் ஆண்டு மதுரையில் கிரானைட் குவாரிகளில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சட்ட ஆணையராக சகாயத்தை நீதிமன்றம் நியமித்தது. அப்போது கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. "சாட்சி சொல்வதற்கு பலர் முன்வந்தனர். புகார் கொடுத்த நபரே நேரில் வந்து நரபலி நடந்ததாகக் கூறப்பட்ட இடத்தைக் காட்டினார். அவரைப் பாதுகாக்க வேண்டியது முக்கிய பணியாக இருந்தது" எனக் கூறுகிறார் சகாயம்.

இதுதொடர்பாக, மதுரை காவல் கண்காணிப்பாளரின் கவனத்துக்குக் கொண்டு சென்றதால் சாட்சிக்கு சில மாதங்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டதாகக் கூறும் சகாயம், "அதன்பிறகு அவரது பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. தான் உட்பட 22 பேருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டது," என்று கூறுகிறார்.

சகாயத்தின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட விவகாரம், கடந்த மே மாதம் விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளித்த காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் எந்தவொரு அச்சுறுத்தலும் அவர்களுக்கு இல்லாத காரணத்தால் அவர்களின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாக கூறியிருந்தார்.

சகாயம் ஐஏஎஸ்

படக்குறிப்பு, ஒரு வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என்றால் சாட்சிகளைப் பாதுகாக்க வேண்டும் என்கிறார் சகாயம்

"நடவடிக்கை போதுமானதாக இல்லை"

"சாட்சியாக இருப்பவர்களுக்கு பாதுகாப்பின்மை என்பது பரவலாக உள்ளது. அவர்களைப் பாதுகாப்பதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கை என்பது போதுமானதாக இல்லை" எனக் கூறுகிறார் சகாயம்.

1950 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சாட்சிகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்ந்து சில பரிந்துரைகளை சட்ட ஆணையம் வழங்கியுள்ளதாகக் கூறும் சகாயம், உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு சாட்சிகள் பாதுகாப்புத் திட்டம் (Witness protection scheme) கொண்டு வரப்பட்டதாகவும் குறிப்பிட்டார் சகாயம்.

சாட்சிகள் பாதுகாப்புத் திட்டம் 2018

'வழக்கின் சாட்சிக்கு அச்சுறுத்தல் இருந்தால் அதுதொடர்பாக மாவட்ட நீதிபதி, மாவட்ட காவல்துறை உயர் அதிகாரி ஆகியோரிடம் புகார் அளிக்கலாம்' என சாட்சிகள் பாதுகாப்பு திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இத்திட்டத்தில், சாட்சிக்கான அச்சுறுத்தலை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர்.

  • சாட்சி மற்றும் அவரின் குடும்பத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது

  • விசாரணை நடக்கும்போது பாதுகாப்பு மற்றும் உடைமைகளுக்கு அச்சுறுத்தல் விளைவிப்பது

  • சாட்சி மற்றும் அவரது குடும்பத்தினரின் நற்பெயரைக் கெடுப்பது, குற்றம் இழைக்கும் தீங்குடன் அச்சுறுத்துவது போன்றவை.

இதற்காக மாநில அரசு தனது நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்க வேண்டும் எனவும் தனியார் நிறுவனங்களின் சமூக பாதுகாப்பு நிதியின் (CSR) மூலம் இவற்றை செயல்படுத்தலாம் எனவும் இத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

சாட்சியின் மனுவை பரிசீலிப்பது தொடர்பான வழிமுறைகளையும் இத்திட்டம் பட்டியலிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு சாட்சிகள் பாதுகாப்புத் திட்டம் (Witness protection scheme) கொண்டு வரப்பட்டது

மேலும் அதில்,

  • சாட்சிக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்பது குறித்து உதவி ஆணையர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி அறிக்கை அளிக்க வேண்டும்.

  • அவசர சூழல்களைப் பொறுத்து மனு நிலுவையில் உள்ளபோதே சாட்சி அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இடைக்கால பாதுகாப்பு வழங்கலாம்.

  • உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தால் உடனடி பாதுகாப்பு வழங்குவதைத் தடுக்கக் கூடாது.

  • அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கையை தயாரிப்பதில் ரகசியத்தன்மையைக் கடைபிடிக்க வேண்டும். அறிக்கையை விரைவாக தயாரித்து 5 நாட்களுக்குள் உரிய அதிகாரியை சென்றடைய வேண்டும்.

  • சாட்சியின் பாதுகாப்பு தொடர்பான முழு பொறுப்பும் மாநில காவல்துறையின் தலைவருக்கு உள்ளது.

  • பாதுகாப்பு உத்தரவு நிறைவேற்றப்பட்ட உடன் மாதம்தோறும் பின்தொடர்தல் அறிக்கையை (follow-up report) உரிய அதிகாரியிடம் பாதுகாப்புப் பிரிவு தாக்கல் செய்ய வேண்டும்.

  • பாதுகாப்பு உத்தரவை திருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் விசாரணை முடிந்ததும் உதவி காவல் ஆணையர் பொறுப்பில் உள்ள அதிகாரியிடம் இருந்து புதிய அறிக்கை கோரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படியெல்லாம் பாதுகாக்கலாம்?

சாட்சியை பாதுகாப்பதற்கான அம்சங்களையும் சாட்சிகள் பாதுகாப்புத் திட்டம் குறிப்பிட்டுள்ளது.

  • அச்சுறுத்தலுக்கு ஏற்ப பாதுகாப்பு இருக்க வேண்டும். அவை மூன்று மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

  • விசாரணையின்போது சாட்சியும் குற்றம் சுமத்தப்பட்ட நபரும் நேருக்கு நேர் சந்திக்காமல் பார்த்துக்கொள்வது

  • தொலைபேசி அழைப்புகளைக் கண்காணித்தல்

  • சாட்சியின் தொலைபேசி எண்ணை மாற்றுவதற்கு தொலைபேசி நிறுவனத்துடன் பேசி ஏற்பாடு செய்தல்

  • சாட்சியின் வீட்டில் பாதுகாப்பு கதவுகள், சிசிடிவி, அலாரம், வேலி போன்றவற்றை நிறுவ வேண்டும்.

  • பெயர்களை மாற்றி சாட்சியின் அடையாளத்தை மறைத்தல்

  • சாட்சியின் வீட்டைச் சுற்றி வழக்கமான ரோந்து பணிகள் மற்றும் அருகில் உள்ள நகரத்துக்கு தற்காலிக வசிப்பிட மாற்றம் செய்யலாம்.

  • நீதிமன்றம் சென்று திரும்புவதற்கான அரசு வாகனம் அல்லது அரசு நிதி உதவியுடன் போக்குவரத்து வசதி வழங்குதல்

  • கேமரா முன்பு விசாரணையை நடத்த வேண்டும்.

  • சாட்சி பாதுகாப்பு நிதியில் இருந்து நிதி உதவிகள், மானியங்கள் வழங்குதல், புதிய தொழில் என தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்கலாம்.

இதனை மேற்கோள் காட்டிப் பேசிய சகாயம், "நீதிமன்றத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் சாட்சிகளைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்" என்கிறார்.

அஜித் குமாரின் தம்பி நவீன்குமார்

படக்குறிப்பு,அஜித் குமாரின் தம்பி நவீன்குமார்

"பயிற்சி முகாம் நடத்தப்படுவதில்லை" - ஹென்றி திபேன்

சாட்சிகள் பாதுகாப்பு திட்டம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய 'மக்கள் கண்காணிப்பகம்' அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன், " தமிழ்நாட்டில் இதுதொடர்பாக எந்தப் பயிற்சி முகாமும் நடத்தப்படுவதில்லை. 38 மாவட்டங்களிலும் இதுதொடர்பாக வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்" எனக் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "வழக்கறிஞர்களை விடவும் சாட்சிகள் முக்கியமானவை. சாட்சிகள் பலவீனமாக உள்ளதா என்பது புலனாய்வு அதிகாரிகளுக்கு தெரியும். ஆனால், அதை முறையாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை" எனத் தெரிவித்தார்.

சாட்சிகள் பாதுகாப்புத் திட்டத்தை காவல்துறையோ, பாதிக்கப்பட்டவர்களோ பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்ளாத சூழலே நிலவுவதாகவும் ஹென்றி திபேன் குறிப்பிட்டார்.

ஹென்றி திபேன்

பட மூலாதாரம்,HENRI TIPHAGNE/FACEBOOK

படக்குறிப்பு, சாட்சிகள் பாதுகாப்பு திட்டம் குறித்து தமிழ்நாட்டில் எந்தப் பயிற்சி முகாமும் நடத்தப்படுவதில்லை என்கிறார் ஹென்றி திபேன்

"முறையாகப் பின்பற்றப்படுகின்றன" - முன்னாள் டிஜிபி

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறார் தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், " சில வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் குற்றப் பின்னணி உடையவர்களாகவோ, வசதி படைத்தவர்களாகவோ இருந்தால் மட்டுமே இதுபோன்று சாட்சிகளை மிரட்டும் சம்பவங்கள் நடக்கின்றன" எனக் கூறுகிறார்.

சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் புகார் வந்தால் சிறப்பு பாதுகாப்பு கொடுக்கப்படுவதோடு தேவைப்பட்டால் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பையும் காவல்துறை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

சைலேந்திரபாபு

பட மூலாதாரம்,DR.SYLENDRABABU.IPS/FACEBOOK

படக்குறிப்பு, சாட்சிகள் பாதுகாக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்கிறார் சைலேந்திரபாபு

சில நேரங்களில் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பது கண்டறிய முடியாமல் போகும் நிகழ்வுகளும் நடப்பதாகக் கூறும் சைலேந்திரபாபு, "சிறிய தவறுகள் நடக்கலாமே தவிர சாட்சிகள் பாதுகாப்புக்கான வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றன" என்கிறார்.

"சாட்சிகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அது காவல்துறைக்கு கரும்புள்ளியாக மாறும். ஆகவே, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தொடர்புடைய காவல் ஆணையர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களும் வழங்கப்படுகின்றன" எனக் கூறுகிறார் சைலேந்திரபாபு.

காவல்துறை அதிகாரிகளுக்கு காவல் தொடர்பான வகுப்புகளுடன் சாட்சிகள் பாதுகாப்பு தொடர்பான வகுப்புகளும் நடத்தப்படுவதாகக் கூறும் அவர், "இதுதொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல் ஆணையர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை மறுஆய்வு செய்வது நடைமுறையாக உள்ளது" எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3enzgezpj7o

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புலவர் said:

திமுகவுக்கு முரட்டு முட்டுக்கொடுக்கும் இந்த நாடக நடிகை நடிகை சர்மிளா போட்ட நாடகம்தான் இது. நீதிபதி கேட்ட கேள்விக்கு பதில் கொடுப்பதை விடுத்து இது என்ன திசை திருப்பல்.நாடகம் நடித்துப்பழகிப்போனதால் ஒரு புது கதை எழுதுகிறார் இந்த நடிகை.

இருக்கலாம்…

சங்கிகளும் சளைத்தவர்கள் அல்ல. எந்த எல்லைக்கும் போக துணிந்தவர்கள்.

இந்த நிகிதாவை பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினால் உண்மை வெளிவரும்.

ஆனால் நான் வெறும் கம்பளைண்ட்தான் கொடுத்தேன், அடித்தது அதிகாரிகள் எனக்கு அதில் சம்பந்தமில்லை என அவர் சொல்வார்.

அரசியல்வாதிகளுக்கு, கட்சிகளுக்கு நெருக்கமாக இருப்பதை, அல்லது அப்படி இருப்பது போல் காட்டி கொண்டு, அரசியல்வாதிகள் கூட செய்ய தயங்கும், அல்லது செய்ய முடியாத அராஜகத்தை செய்பவர்கள் இந்திய அதிர்காரிகள் வர்க்கம்.

எப் ஐ ஆர் போடாமல், தனிப்படை அமைத்து, 7 சவரன் நகைக்கு விசாரணை என்பது ஏதோ ஒரு மந்திரி வீட்டு களவை விசாரிப்பது போல் நடந்துள்ளது.

அந்தளவுக்கு எங்கே இருந்து பிரஷர் வந்தது -

பொலிஸ் உயரதிகாரியா?

தலைமை செயலக அதிகாரியா?

அல்லது ஒரு அரசியல்வாதியா?

சாத்தான் குளம் போல அன்றி இங்கே உடனடியாக பிழை இல்லாதா மரண விசாரணை நடந்து, வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, காவலர்கள் சிறை எடுக்கப்பட்டு, சாட்சிக்கு ஆயுத பொலிஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு, விசாரணை சி பி ஐ வசம் ஒப்படைக்க பட்டுள்ளது.

ஆகவே கொலைக்கு பின்னாவது மாநில அரசின் நடவடிக்கைகள் பராவாயில்லாமல் உள்ளது.

ஆனால் - இந்த அதிகார துஸ்பிரயோகத்தின் பின் இருந்தது அரசியல்வாதி ஒருவரா, அல்லது வெறும் அதிகாரிகளா என்பதை அறிய சில மாதம் செல்லும்….

அதுவரை நயினாரும், எடப்பாடியும், விஜையும், சீமானும், சில யாழ்கள உறுப்பினர்களும் இதை வைத்து நன்றாக பிண அரசியல் செய்ய அவகாசம் இருக்கிறது 😀.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

இந்த நிகிதாவை பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினால் உண்மை வெளிவரும்.

நிகிதாவை உலுக்க தேவையில்லை. நிகிதா தானாகவே உலுக்க வெளிக்கிட்டால் அமைச்சர்கள்,உதவி அமைச்சர்கள்,உயரதிகாரிகள் தாங்க மாட்டார்களாம். அவர்கள் வீட்டில் ஒரு சொம்பு தண்ணீர் கூட கிடைக்காதாம். 😂

அப்படி பொது வெளியில் பெரியவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.cool

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நிகிதாவை உலுக்க தேவையில்லை. நிகிதா தானாகவே உலுக்க வெளிக்கிட்டால் அமைச்சர்கள்,உதவி அமைச்சர்கள்,உயரதிகாரிகள் தாங்க மாட்டார்களாம். அவர்கள் வீட்டில் ஒரு சொம்பு தண்ணீர் கூட கிடைக்காதாம். 😂

அப்படி பொது வெளியில் பெரியவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.cool

உங்களை நீங்களே பெரியவர் என்கிறீர்களா 😂. நான் ஏற்றுகொள்கிறேன்.

ஒரு கொலை அநியாயமாக, சட்ட விரோதமாக நடந்துள்ளது.

அதில் எவர் சம்பந்த பட்டிருந்தாலும் அவர்கள் தண்டிக்க பட வேண்டியவர்களே.

வழக்கை மத்திய அரசின் கீழ் உள்ள புலனாய்வு அமைப்பான சி பி ஐக்கு 3 நாளுக்கு முன்பே மாற்றியாகி விட்டது. அவர்கள் எந்த மாநில அரசின் அளுத்தமும் இன்றி எவரையும் உலுக்கலாம். அப்படி உலுக்கி முடிவு வரட்டுமே?

அதுவரை பொறுக்காமல் அமைச்சராம், அவராம், இவராம் என ஊகம் பரப்புவது கொலையை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே.

இதைத்தான் டாக்டர் சர்மிளா செய்வதாக (பிஜேபிக்கு எதிராக) மேலே புலவரும் கூறி உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

516039175_750112984355872_18910016673412

கள்ளச் சாராயம் குடித்து செத்தவனுக்கு பத்து லட்சம்

காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டவனுக்கு ஐந்து லட்சம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.