Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-5.jpg?resize=750%2C375&ssl=1

சீட் பெல்ட் அணிவது கட்டாயம் – அமைச்சர் பிமல்!

எதிர்வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (01) காலை கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் ஆய்வுப் பயணத்தில் பங்கேற்றபோது இந்த விடயத்தைக் கூறினார்.

வீதி விபத்துகளில் அதிக எண்ணிக்கையிலான உயிர்கள் இழக்கப்படுவதாகவும், அந்த சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் இலகுரக வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவதும் கட்டாயம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கிடையில், 2011 முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இலகுரக வாகனங்களுக்கு இந்தச் சட்டம் ஓரளவு அமல்படுத்தப்பட்டாலும், லொறிகள் மற்றும் பேருந்துகள் சட்டத்தை மீறி வருகின்றன.

எனவே, இன்று முதல் பேருந்துகள் மற்றும் லொறிகளுக்கும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1437682

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

514241363_1148124720685832_5645852527840

  • கருத்துக்கள உறவுகள்

வேகக்கட்டுப்பாடு அதாவது அக்சிலேற்றரை ஏறி நின்று உழக்கினாலும் 70 km/h மேல ஓடாதவாறு செய்யுங்கோ புண்ணியமாப்போகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஏராளன் said:

வேகக்கட்டுப்பாடு அதாவது அக்சிலேற்றரை ஏறி நின்று உழக்கினாலும் 70 km/h மேல ஓடாதவாறு செய்யுங்கோ புண்ணியமாப்போகும்.

தம்பியருக்கு ஆகலும் குசும்பு கூடிப்போச்சுது 🤭

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

எதிர்வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த தடவை யாழிலிருந்து விமானநிலையம் போகும்போது நாங்கள் வந்த வான் பழைய இலக்கத்தகடு என்றபடியால் அதற்கு இருக்கைப் பட்டிகள் அணியத் தேவையில்லை என்று சாரதி சொன்னார்.

இருந்தாலும் பழக்க தோசத்தில் அணிந்திருந்தேன்.

இடையிடை அது தானாகவே கழன்று கொண்டிருந்தது.

தேடித்தேடி மீண்டும் மீண்டும் அணிந்தேன்.

பயணிகள் எல்லோரும் கட்டாயம் இருக்கைப் பட்டிகள் அணிய வேண்டுமென்றால் இலங்கையில் அநேகமான வாகனங்கள் ஓடவே முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த தடவை யாழிலிருந்து விமானநிலையம் போகும்போது நாங்கள் வந்த வான் பழைய இலக்கத்தகடு என்றபடியால் அதற்கு இருக்கைப் பட்டிகள் அணியத் தேவையில்லை என்று சாரதி சொன்னார்.

இருந்தாலும் பழக்க தோசத்தில் அணிந்திருந்தேன்.

இடையிடை அது தானாகவே கழன்று கொண்டிருந்தது.

தேடித்தேடி மீண்டும் மீண்டும் அணிந்தேன்.

பயணிகள் எல்லோரும் கட்டாயம் இருக்கைப் பட்டிகள் அணிய வேண்டுமென்றால் இலங்கையில் அநேகமான வாகனங்கள் ஓடவே முடியாது.

இதேதான் நமக்கும்...பழையவான் ..பட்டியைக் கேட்டபோது..அது தேவையில்லை...ஆனால் ஒரு கண்டிசன் ..முருகண்டியிலை கச்சான் வாங்கி உள்ளுக்கு சாப்பிடமுடியாது ...எப்படி

  • கருத்துக்கள உறவுகள்

விபத்துக்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்களை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் - பிமல் ரத்நாயக்க

01 JUL, 2025 | 04:25 PM

image

(எம்.மனோசித்ரா)

வாகன சாரதிகள் ஆசனப்பட்டிகளை அணிவதை கட்டாயமாக்குவதன் மூலம் அவர்களுக்கு தண்டனை வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமல்ல. விபத்துக்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்கு வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (1) கொழும்பிலுள்ள இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து தரிப்பிடங்களுக்குச் சென்று பேருந்து சாரதிகள் ஆசனப்பட்டியை அணிந்திருக்கின்றனரா என்று அமைச்சர் கண்காணிப்பில் ஈடுபட்டார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2011ஆம் ஆண்டு இலகு மற்றும் கனரக வாகனங்களில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் பேருந்து மற்றும் லொறி சாரதிகளுக்கு இது கட்டாயப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

எனவே, கடந்த 3 மாதங்களாக இது தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு, இந்த நடவடிக்கை தற்போது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் சாரதிகள் மாத்திரமின்றி, பின் இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்களும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்படவுள்ளது.

வீதி விபத்துக்களின்போது அதிக மரணங்கள் பதிவாகுவதற்கும் இது ஒரு பிரதான காரணியாக உள்ளது. ஆசனப்பட்டிகளை அணிவதால் பெருமளவான விபத்துக்களைக் குறைத்துக்கொள்ள முடியும்.

இலகுரக வாகனங்களிலும் பின் இருக்கைகளில் பயணிப்பவர்கள் ஆசனப்பட்டிகளை அணிந்தால் விபத்துக்கள் இடம்பெற்றாலும் உயிரிழப்புக்கள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்த முடியும்.

ஆசனப்பட்டி அணியாதவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. அவதானத்துடன் பயணித்து, விபத்துக்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். 

எனவே, ஆசனப்பட்டி அணிதல் தொடர்பில் இனி தீவிர கண்காணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. சில இடங்களில் ஆசனப்பட்டிகள் மறைக்கப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறானவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/218941

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

514467034_9925424947507059_2519680580372

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா பொலிசாரும் இடுப்பு பெல்ட் கட்டி தங்களது தொப்பையை குறைக்க வேணும் என அமைச்சர் கேட்டுள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

514467034_9925424947507059_2519680580372

10 hours ago, தமிழ் சிறி said:

514467034_9925424947507059_2519680580372

வடக்கு நோக்கி நெடுஞ்சாலை இல்லை என்றபடியால் இதுபற்றி அலட்டிக் கொள்ள தேவையில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.