Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-25.jpg?resize=750%2C375&ssl=

ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!

கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 138,241 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்ததாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் காட்டுகின்றன.

இது 2024 ஜூன் மாதத்தில் வந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 21.8% அதிகமாகும்.

SLTDA வெளியிட்டுள்ள அண்மைய தரவுகளின்படி,

கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் இருந்து மொத்தம் 37,934 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், இது 27.4% ஆகும்.

மேலும், இங்கிலாந்திலிருந்து 11,628 பேரும், சீனாவிலிருந்து 8,804 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 7,299 பேரும், பாகிஸ்தானியர் 6,833 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,168,044 ஆக உள்ளது.

அவர்களில், 241,994 பேர் இந்தியாவிலிருந்தும், 112,312 பேர் ரஷ்யாவிலிருந்தும், 107,902 பேர் இங்கிலாந்திலிருந்தும் வந்துள்ளனர் என்று SLTDA குறிப்பிட்டது.

https://athavannews.com/2025/1437830

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!

சிறி இந்தப் பட்டியலில் உங்களையும் என்னையும் சேர்த்திருப்பார்களோ?

ஆடி மாதத்தில் அமெரிக்கா கனடா ஐரோப்பா விடுமுறை என்றபடியால் இரட்டிப்பாக இருக்கும்.

திருவிழாக்களும் வருகிறபடியால் இந்தமாதம் அடுத்தமாதம் கட்டாயம் கூடுதலாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சிறி இந்தப் பட்டியலில் உங்களையும் என்னையும் சேர்த்திருப்பார்களோ?

ஆடி மாதத்தில் அமெரிக்கா கனடா ஐரோப்பா விடுமுறை என்றபடியால் இரட்டிப்பாக இருக்கும்.

திருவிழாக்களும் வருகிறபடியால் இந்தமாதம் அடுத்தமாதம் கட்டாயம் கூடுதலாக இருக்கும்.

images?q=tbn:ANd9GcQqqMeLwpw1RqZ_iCcv_iU

நிச்சயமாக ஈழப்பிரியன். ஜூன் மாத கணக்கில் உங்கள் வீட்டிலிருந்து இரண்டு பேரையும், எங்கள் வீட்டில் இருந்து மூன்று பேரையும், @Paanch வீட்டிலிருந்து இரண்டு பேரையும் கணக்கில் சேர்த்து இருப்பார்கள்.

நாங்கள் ஸ்ரீலங்காவுக்கு போய் இருக்கா விட்டால்...

138,241 - 7 = 138,234 சுற்றுலா பயணிகளாக கணக்கு இருந்தது இருக்கும். 😂

இப்ப ஸ்ரீலங்காவுக்கு போன ஆட்கள் ஆரெண்டு பார்த்தால்... முன்னொரு காலத்திலை Boycott Srilanka என்று கம்பு சுத்திக் கொண்டு திரிஞ்ச ஆட்கள்தான். 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

images?q=tbn:ANd9GcQqqMeLwpw1RqZ_iCcv_iU

நிச்சயமாக ஈழப்பிரியன். ஜூன் மாத கணக்கில் உங்கள் வீட்டிலிருந்து இரண்டு பேரையும், எங்கள் வீட்டில் இருந்து மூன்று பேரையும், @Paanch வீட்டிலிருந்து இரண்டு பேரையும் கணக்கில் சேர்த்து இருப்பார்கள்.

நாங்கள் ஸ்ரீலங்காவுக்கு போய் இருக்கா விட்டால்...

138,241 - 7 = 138,234 சுற்றுலா பயணிகளாக கணக்கு இருந்தது இருக்கும். 😂

இப்ப ஸ்ரீலங்காவுக்கு போன ஆட்கள் ஆரெண்டு பார்த்தால்... முன்னொரு காலத்திலை Boycott Srilanka என்று கம்பு சுத்திக் கொண்டு திரிஞ்ச ஆட்கள்தான். 🤣

நான் ஊரை விட்டு வெளியேறியதலிருந்து இன்னும் அந்தப்பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை.

மானஸ்தன் குமாரசாமி 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நான் ஊரை விட்டு வெளியேறியதலிருந்து இன்னும் அந்தப்பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை.

மானஸ்தன் குமாரசாமி 😎

இதை எல்லாம் நாங்கள் நம்ப வேணும் என்றால்….. பாஸ் போர்ட்டை அனுப்பி வைக்கவும். அதில் குத்தியுள்ள சீல்களை பார்த்துத்தான் ஒரு முடிவுக்கு வர முடியும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

நான் ஊரை விட்டு வெளியேறியதலிருந்து இன்னும் அந்தப்பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை.

மானஸ்தன் குமாரசாமி 😎

இன்னுமா பேப்பர் கிடைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

நான் ஊரை விட்டு வெளியேறியதலிருந்து இன்னும் அந்தப்பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை.

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி.

தலை வைத்தும் படுக்க முடியாதளவுக்கு அப்படி என்னதான் ஊரிலை செஞ்சீங்க சாமி.🫣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, தமிழ் சிறி said:

இதை எல்லாம் நாங்கள் நம்ப வேணும் என்றால்….. பாஸ் போர்ட்டை அனுப்பி வைக்கவும். அதில் குத்தியுள்ள சீல்களை பார்த்துத்தான் ஒரு முடிவுக்கு வர முடியும். 😂

visa1.jpg

Kuba-Einreise.jpg

ஏன் சோலி...இருக்கிறது இவ்வளவுதான்.😂

17 hours ago, ஈழப்பிரியன் said:

இன்னுமா பேப்பர் கிடைக்கவில்லை.

நான் வந்தவுடனையே பேப்பர் தந்திட்டாங்கள்.😎

16 hours ago, Paanch said:

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி.

தலை வைத்தும் படுக்க முடியாதளவுக்கு அப்படி என்னதான் ஊரிலை செஞ்சீங்க சாமி.🫣

சாவகச்சேரியிலை ஜேர்மனியை மாதிரி ஒரு சோசல் காசு தாற ஆபிஸ் திறக்கும் மட்டும் என்ர கால் தூசு கூட அங்கை படாது. cool

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

சாவகச்சேரியிலை ஜேர்மனியை மாதிரி ஒரு சோசல் காசு தாற ஆபிஸ் திறக்கும் மட்டும் என்ர கால் தூசு கூட அங்கை படாது. cool

கடவுளுக்கும் பிச்சைப் பாத்திரம் கொடுத்து பிச்சை எடுக்க வைத்திருக்கும் மானிட இனத்தில் பிறந்து வாழும் நாங்கள் வேறு எப்படிச் சிந்திக்க முடியும்.?????🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Paanch said:

கடவுளுக்கும் பிச்சைப் பாத்திரம் கொடுத்து பிச்சை எடுக்க வைத்திருக்கும் மானிட இனத்தில் பிறந்து வாழும் நாங்கள் வேறு எப்படிச் சிந்திக்க முடியும்.?????🤣

யான் என்ன செய்வேன் ஐயனே? 😎

அன்னதான மடம் , அடியார் மடம் என

புசித்துண்டு உடல் வளர்த்து

அறுபத்தி மூன்று நாயன்மார்களின்

குருபூசை என அலைந்து

அன்னத்தை உண்டு வாழ்ந்த

பழக்க தோசம். 😂

யான் என்ன செய்வேன் ஐயனே? 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

visa1.jpg

Kuba-Einreise.jpg

ஏன் சோலி...இருக்கிறது இவ்வளவுதான்.😂

உங்கடை பாஸ்போட்டிலை... கியூபா விசா, கைலாசா விசா எல்லாம் குத்தி இருக்கு.

என்ன அலுவலாக அந்த நாடுகளுக்கு எல்லாம் போனீங்கள். 😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-102.jpg?resize=750%2C375&ssl

இந்த ஆண்டில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை!

இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 1,204,046 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பை எடுத்துக் காட்டுவதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) தெரிவித்துள்ளது.

SLTDA இன் அண்மைய புள்ளிவிவரங்களின்படி, அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.

அதன்படி, அந்த மொத்த எண்ணிக்கை 250,047 ஆகும்.

மேலும், 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 112,732 ரஷ்ய நாட்டவர்களும், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த 111,464 நபர்களும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இதற்கிடையில், ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் 36,002 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1438467

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-189.jpg?resize=750%2C375&ssl

ஜூலை முதல் 13 நாட்களில் 79,771 சுற்றுலாப் பயணிகள் வருகை!

இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் 79,771 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் அண்மைய தரவுகளின்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,247,815 ஐத் தாண்டியுள்ளது.

முதல் 13 நாட்களில், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.

இதில் 16,329 பேர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

இது 20.5 சதவீதமாகும்.

இதற்கு அடுத்தபடியாக ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்தும், அவுஸ்திரேலியாவில் இருந்தும் அதிகளவானோர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்த ஆண்டு, இலங்கைக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.

இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 258,323 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

https://athavannews.com/2025/1439324

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-403.jpg?resize=750%2C375&ssl

1.3 மில்லியனை விஞ்சிய சுற்றுலா பயணிகளின் வருகை!

இந்த ஆண்டு இதுவரை நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியனைத் தாண்டியுள்ளது.

அதன்படி, 2025 ஜனவரி 1 முதல் ஜூலை 27 வரை 1,341,953 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள்.

அவர்களின் எண்ணிக்கை 274,919 ஆகும்.

மேலும் பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி, சீனா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வழங்கிய தகவல்களின்படி, ஜூலை மாதத்தில் கடந்த 27 நாட்களில் 173,909 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.

https://athavannews.com/2025/1441310

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

இந்த ஆண்டு இதுவரை நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியனைத் தாண்டியுள்ளது.

கோடைகால விடுமுறை திருவிழாக்கள் என்று

பாடசாலைகள் விடுமுறையில் நம்மவர்கள் போய்

ஒரு புதிய சரித்திரத்தையே படைத்து விடுவார்கள்.

8 hours ago, தமிழ் சிறி said:

அதன்படி, 2025 ஜனவரி 1 முதல் ஜூலை 27 வரை 1,341,953 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது

ஐரோப்பா அமெரிக்கா ஒரு அறிக்கை விட்டால்

அத்தனையும் படுத்துவிடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-23.jpg?resize=750%2C375&ssl=

சுற்றுலா பயணிகளின் வருகை மூலம் $3.7 பில்லியன் வருமானம்!

கடந்த 06 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் உள்ள சீதைஅம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்றைய தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த ஆறு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் $3.7 பில்லியன் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு அடுத்த சில மாதங்களில் மேலும் $3.7 பில்லியன் வருவாய் இலக்கை எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மூலம் இந்திய சுற்றுலாப் பயணிகள் முன்னணியில் உள்ளனர்.

மேலும் இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மத சுற்றுலாப் பயணிகளில் முன்னணியில் உள்ளனர்.

எனவே மதப் பயணத்தை ஊக்குவிக்கும் நம்பிக்கையில் அரசாங்கம் ஆலயத்துக்கு மேலும் ஒரு ஏக்கர் நிலத்தை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க மற்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுரா செனவிரட்ன ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

528052292_1313099603507744_7866731429295

https://athavannews.com/2025/1441652

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-105.jpg?resize=750%2C375&ssl

ஆகஸ்ட் முதல் 10 நாட்களில் 77,482 சுற்றுலா பயணிகள் வருகை!

2025 ஆகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 77,482 ஆக பதிவாகியுள்ளது.

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் (SLTDA) வெளியிட்டுள்ள தரவுகளின்படி,

இந்தியாவில் இருந்து மொத்தம் 13,511 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

இது 17.4% ஆகும்.

மேலும், ஆகஸ்ட் மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8,691 பேரும், இத்தாலியிலிருந்து 6,036 பேரும், சீனாவிலிருந்து 5,659 பேரும், பிரான்சிலிருந்து 5,518 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதற்கிடையில், ஆகஸ்ட் மாதத்திற்கான அண்மையபுள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,445,770 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில், 292,633 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், 140,068 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் 116,895 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என்று SLTDA குறிப்பிட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் மொத்தம் 200,244 வெளிநாட்டினர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இது ஜூலை 2024 தரவுகளுடன் ஒப்பிடும்போது 6.6% அதிகரிப்பாகும்.

https://athavannews.com/2025/1442661

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Tourists.jpg?resize=700%2C366&ssl=1

ஒக்டோபர் மாதத்தில் 9 நாட்களில் 46,000 ஐ கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!

இந்த ஆண்டின் ஒக்டோபர் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 46ஆயிரத்து 868 ஐ கடந்துள்ளது.

ஒக்டோபர் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் மொத்தம் 14 ஆயிரத்து 221 இந்தியர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன் இது சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 30.3% ஆகும்.

மேலும் இங்கிலாந்திலிருந்து 3 ஆயிரத்து 171 பேரும் ஜெர்மனியிலிருந்து 2ஆயிரத்து 652 பேரும் சீனாவிலிருந்து 4ஆயிரத்து 416 பேர் மற்றும் பங்களாதேஷிலிருந்து 2ஆயிரத்து 158 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

https://athavannews.com/2025/1450143

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Tourists.jpg?resize=700%2C366&ssl=1

1.8 மில்லியனை கடந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை!

2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகைதந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.8 மில்லியனை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

புள்ளிவிவரங்களின்படி, இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 75 ஆயிரத்து 657 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த ஆண்டில் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 லட்சத்து 1,151 ஆக அதிகரித்துள்ளது.

அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் இந்தியாவில் இருந்து வருகைதந்துள்ளதுடன் குறித்த காலப்பகுதியில் சுமார் 4 லட்சம் இந்திய சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகதந்துள்ளனர்.

இதுவரை 3 லட்சத்து 96ஆயிரத்து 274 இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரான்ஸில் இருந்து 90 ஆயிரத்து 250 பேரும் , அவுஸ்திரேலியாவில் இருந்து 81 ஆயிரத்து 040 பேரும் நெதர்லாந்தில் இருந்து 53 ஆயிரத்து 922 பேரும் அமெரிக்காவில் இருந்து 50 ஆயிரத்து 027 பேரும் இந்த ஆண்டு இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை இத்தாலியில் இருந்து 39ஆயிரத்து 932 பேரும் , கனடாவில் இருந்து 37ஆயிரத்தது 606 பேரும் ஸ்பெயினில் இருந்து 36ஆயிரத்து 430 பேரும் மற்றும் போலந்தில் இருந்து 36ஆயிரத்து 389 பேரும், இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த ஆண்டு, இரண்டு மில்லியனுக்கும் அதிகமான (2,053,465) சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கைக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இறுதியாக 2018 ஆம் ஆண்டில் வருகைதந்திருந்தனர்.

குறித்த ஆண்டில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான (2,333,796) சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.

இலங்கையின் வருடாந்திர சுற்றுலாப் பயணிகளின் வருகை நான்கு சந்தர்ப்பங்களில் இரண்டு மில்லியனைத் கடந்துள்ளதுடன் 2016, 2017, 2018 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகைந்துள்ளனர்.

https://athavannews.com/2025/1450679

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.