Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துப்புதைகுழிகளையும் தோண்டட்டும் ஆனால் முடிவில் செம்ணி உட்பட அனைத்தும் புலிகளால் செய்யபட்ட கொலைகள் என்று முடிக்காமல் விட்டால் சரி. அத்துடன் சர்வதேச நடுநிலையாளர்கள் முன்னிலையில் தோண்டுவது சிறந்தது. அந்தக்குழுவில் இந்தியர் இருக்கக் கூடாது. அவர்களால் செய்யப்பட்ட கொலைகளுக்காகவும் தமிழர் விரோத மன நிலையிலும் எல்லாவற்றிற்கும் புலிகள் மீதே பழி போடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

thumb_large_naam.png

செம்மணி போன்று கிழக்கிலும் ஜிகாத் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளும் தோண்டப்படல் வேண்டும் - நாம் தமிழர் சமூகசேவை ஒன்றியம்.

யாழ்ப்பாணம் செம்மணி படுகொலை தொடர்பில் அரசின் கவனம் திரும்பியிருக்கின்றது. தோண்ட தோண்ட வெளிவரும் பச்சிளம் பாலகர்களின் மண்டை ஓடுகள், எலும்புக்கூடுகளும், அதிகமான உடல்கள் இருப்பதாகவும், புதைக்கப்பட்டிருப்பதாகவும், தோண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வடமாகணத்திலே தமிழர்களின் ஆதரவைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குறிப்பாக மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த அரசாங்கம் இருக்கின்றது. இந்த நிலையில் செம்மணி புதைகுழி விடயம் கவனம் செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது இது வரவேற்கத்தக்கது இதற்கு நிச்சயமாக நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

இவற்றைப்போல் கிழக்கிலும் இன்றும் கண்டுகொள்ளப்படாத படுகொலைகள், தோண்டப்பட வேண்டிய பல புதைகுழிகள் உள்ளன. அவற்றுக்கு நீதியை வேண்டித்தான் எமது நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியம் இன்று இந்த பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்துகின்றோம்.

என நாம் தமிழர சமூக சேவை ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் கோபாலன் பிரசாத் தெரிவித்துள்ளார். புதன்கிழமை (16.07.2025) மாலை களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

குறிப்பாக 1990, 1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் ஜிகாத் எனும் அமைப்பினால் பல படுகொலைகள் திட்டமிட்டு செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இந்த செய்தியை சர்வதேசத்திற்கும் தேசிய அரசாங்கத்திற்கும் சர்வதேச அரங்கிக்கிற்கும், கொண்டு வருவதற்காகவே நாம் இந்த ஊடக சந்திப்பை செய்கின்றோம்.

குறிப்பாக 20.06.1990 ஆம் ஆண்டு வீரமுனை பிள்ளையார் கோயில் படுகொலை இதன் போது 60 தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்கள்

அதேபோன்று 05.07.1990 ஆம் ஆண்டு வீரமுனையில் 13 தமிழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் 10.07.1990 ஆம் ஆண்டு வீரமுணையில் 15 தமிழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

16.07.1990 ஆம் ஆண்டு மல்வத்தை இராணுவத்தினரும் முஸ்லிம் ஊர்காவல் படையினருமாக 30 பேர் 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர்.

அதேபோன்று 26.07.1990ஆம் ஆண்டு வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் முஸ்லிம் ஊர்கால் படையினரால் மிகவும் கொடூரமான முறையில் கைது செய்யப்பட்டு காணாமல் செய்து படுகொலை செய்து இருக்கின்றார்கள்.

29.07.1990 ஆம் ஆண்டு ஆசிரியர் ஒருவர் குடும்பத்தினருடன் வெளியேறிக் கொண்டிருந்தபொழுது கடத்திச் செல்லப்பட்டு காணாமல் செய்யப்பட்டிருக்கின்றார்.

01.08.1990 ஆம் ஆண்டு சவளக்கடையில் 18 பேர் கைது செய்யப்பட்டு காணாமல் செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

அதேபோன்று 12.08.1990 ஆம் ஆண்டு வீரமுரையில் அகதி முகாமில் புகுந்து முஸ்லிம் ஊர்காவல் படையினர் வாளால் வெட்டி தாக்குதல் நடத்தியதோடு, அதில் ஆலய தர்மாகத்தா உட்பட குறிப்பாக தம்பி முத்து சின்னத்துரை உட்பட 14 பேர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதில் பலர் காயமடைந்து இருக்கிறார்கள். வீரமுனையிலே 600; வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைதீவு, வளத்தாப்பிட்டி, கணபதிபுரம், மல்வத்தை, ஆகிய கிராமங்களில் இருந்து 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லிம்களால் முற்றாக தீக்கிரியாக்கப்பட்டிருக்கின்றன.

20.06.1990 ஆம் ஆண்டிற்கும் 15.08.1990 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வீரமுனையில் மாத்திரம் 232 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 1600 க்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன.

அயல் கிராமங்களான சம்மாந்துறை முஸ்லிம்கள் சிங்கள இராணுவத்தினரின் உதவியுடன் தமிழர்களை படுகொலை செய்திருக்கின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தில் மிகவும் மோசமான தாக்குதலுக்கு உள்ளான கிராமங்களான வாழைச்சேனை, செங்கலடி, ஆரையம்பதி நீலாவணை பாண்டிருப்பு போன்ற பல கிராமங்கள் காணப்படுகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த முஸ்லிம் ஜிகாத் அமைப்பினரின் தாக்குதல்களால் பல தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் இதற்கு நிச்சயமாக இந்த அரசாங்கத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். கொலை செய்யப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும். கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். என்பதுதான் எமது கோரிக்கையாகும்.

பரம்பரை பரம்பரையாக தமிழர்கள் வாழ்ந்து வந்த கிராமங்கள் முஸ்லிம்களால் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு தற்போதுவரையில் சிதைவிக்குள்ளான கிராமங்களாக பாலமுனை, பாணமை, மீனோடக்கட்டு, ஒலுவில் நிந்தவூர், சம்மாந்துறை, கரவாகு, தீகபாவி, மாந்தோட்டம், கொண்டவட்டுவான், ஊரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம், போன்ற பவகிராமங்கள் இருக்கின்றன.

குறிப்பாக தமிழர்கள் பூர்விகமாகக் கொண்ட கிராமங்கள் இன்று முஸ்லிம் காடையர்களால் துடைத்தழிக்கப்பட்டு அந்த தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாறி இருக்கின்றன. இந்த சூழலில்தான் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உள்ளான தமிழ் கிராமங்களாக அட்டைப்பள்ளம், சவளைக்கடை, வீரச்சோலை, போன்ற கிராமங்கள் உள்ளன. கூறலாம்.

இவை அனைத்து படுகொலைகளையும் ஊர்காவல்படை என்ற பெயரில் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய ஜிகாத் முஸ்லிம் ஆயுத குழுக்களே இந்த படுகொலைகளை நடத்தி இருந்தார்கள். அவர்களுக்கான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். புதைகுழிகள் தோண்டப்பட வேண்டும். முஸ்லிம் புதை புலிகள் தோண்டப்படுவதற்கும் மக்களின் வாக்குமூலங்களை செய்கின்ற அதே வேளை முஸ்லிம் ஜிகாத் குழு என்று சொல்லப்படுகின்ற இந்த அமைப்பினர் அந்த அமைப்பின் பெயரில் இயங்கிய முஸ்லிம் காடையர்களையும் தேடி கண்டுபிடித்து இந்த அரசாங்கம் அவர்களை விசாரணை செய்வதோடு, அவர்களை தண்டிப்பதற்கும் குற்றவாளிகளை தண்டிப்பதற்கும் ஊர்காவல்படை என்ற பெயரில் அரசாங்கத்தில் சம்பள பட்டியலில் இருந்தவர்கள் இன்றும் அந்தந்த கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

அவர்கள் எங்கும் தப்பியோட முடியாது அவர்கள் விசாரித்து பொறுப்பானவர்களும் குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும். என்பதுதான் எமது கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சாணக்கியன், கோடீஸ்வரன், சிறிநேசன் சிறிநாத், போன்றவர்கள் பாராளுமன்றத்தில் நிச்சயமாக பேசவேண்டும். இதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற சட்டத்தரணிகள் சங்கமும் பொது அமைப்புகளும் இதற்கு ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நீதியை நிலை நாட்டுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அது மாத்திரமன்றி ஜிகாத் அமைப்பினரின் பின்னணியில் உடைக்கப்பட்ட ஓட்டமாவடி காளி கோயிலுக்கு நீதி நிச்சயமாக வழங்கப்பட வேண்டும்.

நானே அந்தக் காளி கோயிலை உடைத்தேன் அதற்கு எதிராக இருந்த நீதிபதியை மாற்றினேன் அது மாத்திரமன்றி காளி கோயிலை உடைத்து மீன் சந்தையை கட்டி அதுவும் காளி கோயில் அமைந்திருந்த கருவறையில் மூலஸ்தானத்தில் மாட்டு இறைச்சிக் கடையை போட்டு இருக்கின்றேன், என முன்னாள் அமைச்சர், முன்னாள் ஆளுநர், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி இருக்கின்றார்.

எனவே இதனை இந்த அரசாங்கமும் பாராளுமன்ற சபாநாயகர் அவர்களும் விசாரணை செய்ய வேண்டும்.

எனவே தற்போதைய பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்கள் பின்னணியில் உடைக்கப்பட்ட  எங்களுடைய காளி கோயிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட வேண்டும். அவர் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார் அவர் நீதித்துறை இவ்வாறு பயன்படுத்தி இருக்கின்றார், அவர் மாவட்ட அபிவித்துக் குழு தலைவர் என்ற பதவியை பயன்படுத்தி செய்திருக்கின்றார், இதற்கு நிச்சயமாக நீதி வழங்கப்பட வேண்டும். நிச்சயமாக இந்த அரசாங்க நீதி வழங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

எனினும் செம்மொழி புதைகுழி தோண்டப்படுகின்றது ஆங்காங்கே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு விசாரணைகள் நடைபெறுகின்ற இந்த நேரத்தில் இந்த ஜிகாத் அமைப்பின் பேரில் தமிழ் மக்களை கொன்றளித்த இந்த முஸ்லிம் காடையர்களை நிச்சயம் விசாரிக்கப்பட்டு அவர்கள் இன்றும் கிராமங்களில் வாழ்கின்றார்கள். அவர்களுக்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். என்பதே எமது கோரிக்கை இந்த காளி கோயில் விடயத்திலும் எமது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சாணக்கியன், சிறிநேசன், சிறிநாத், போன்றவர்கள் பாராளுமன்றத்திலே பேச வேண்டும். அந்த காளி கோயிலை உரிய இடத்தில் அமைப்பதற்கு நிச்சயமாக பாராளுமன்றத்தில் பேச வேண்டும் என்பது எனது கோரிக்கை.

அது மாத்திரமன்றி இது தொடர்பில் ஒரு பொது நல வழக்கு ஒன்றை சிவில் அமைப்புகள் தமிழ் உணர்வாளர்கள் தமிழ் சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து இந்த வழக்கை தாக்கல் செய்ய வேண்டும். எனது என்பது எனது பணிவான வேண்டுகோள். இதற்கு யாரும் முன்வராத பட்சத்தில் எமது நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தினராகிய ஆகிய நாம் இதற்காக பொதுநல வழக்கொன்றை நிச்சயமாக நாங்கள் வழக்கு தாக்கல் செய்து நீதியை நிலைநாட்டுவதற்கு நாங்கள் இந்த அரசாங்கத்திடம் முனைவோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/220180

இந்த அமைபினர்க்கு உள்ள தைரியம் ஒரு தமிழ் எம்பிக்கும் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

இந்த அமைபினர்க்கு உள்ள தைரியம் ஒரு தமிழ் எம்பிக்கும் இல்லை.

இதையேதான் நானும் எதிர் பார்த்தது....

நானே அந்தக் காளி கோயிலை உடைத்தேன் அதற்கு எதிராக இருந்த நீதிபதியை மாற்றினேன் அது மாத்திரமன்றி காளி கோயிலை உடைத்து மீன் சந்தையை கட்டி அதுவும் காளி கோயில் அமைந்திருந்த கருவறையில் மூலஸ்தானத்தில் மாட்டு இறைச்சிக் கடையை போட்டு இருக்கின்றேன், என முன்னாள் அமைச்சர், முன்னாள் ஆளுநர், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி இருக்கின்றார்.

இதை சொன்னதும் ...செய்ததும் மட்டுமல்ல ....இப்ப வெள்ளை வேட்டி சேட்டு

இந்த நேரத்தில் இந்த ஜிகாத் அமைப்பின் பேரில் தமிழ் மக்களை கொன்றளித்த இந்த முஸ்லிம் காடையர்களை நிச்சயம் விசாரிக்கப்பட்டு அவர்கள் இன்றும் கிராமங்களில் வாழ்கின்றார்கள். அவர்களுக்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். என்பதே எமது கோரிக்கை இந்த காளி கோயில் விடயத்திலும் எமது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சாணக்கியன், சிறிநேசன், சிறிநாத், போன்றவர்கள் பாராளுமன்றத்திலே பேச வேண்டும். அந்த காளி கோயிலை உரிய இடத்தில் அமைப்பதற்கு நிச்சயமாக பாராளுமன்றத்தில் பேச வேண்டும் என்பது எனது கோரிக்கை.

இதுக்கு இந்த முசுலிம் குரலற்ற அமைப்பு ....என்ன சொல்லப் போகுது..

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவோ அட்டூழியங்கள் தமிழர்கள் மீது இலங்கையில் முஸ்லிம் வெறியர்களால் நடத்தபட்டிருக்கின்றது.அப்படி இருக்க அவர்கள் தங்களது மத அடிப்படையில் கிளப்பிவிட்ட புரளியான இஸ்ரேலால் இலங்கைக்கு ஆபத்து யூதர்கள் இலங்கையை ஆக்கிரமிக்க போகின்றார்கள் என்பதை அப்படியே நம்பும் தமிழர்கள் இருக்கின்றார்கள் தானே

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எவ்வளவோ அட்டூழியங்கள் தமிழர்கள் மீது இலங்கையில் முஸ்லிம் வெறியர்களால் நடத்தபட்டிருக்கின்றது.அப்படி இருக்க அவர்கள் தங்களது மத அடிப்படையில் கிளப்பிவிட்ட புரளியான இஸ்ரேலால் இலங்கைக்கு ஆபத்து யூதர்கள் இலங்கையை ஆக்கிரமிக்க போகின்றார்கள் என்பதை அப்படியே நம்பும் தமிழர்கள் இருக்கின்றார்கள் தானே

அது மேற்கோபோபியா நோய்தாக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 15/7/2025 at 03:38, goshan_che said:

இப்படி ஒரு பதிலை சுமந்திரன் அல்லது சாணக்கியன் சொல்லி இருப்பின் எதிர்வினை எப்படி இருக்கும் என கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்.

காலங்காலமாக ஒரு இனத்தை குறிவைத்து, அவர்களது பொருளாதாரம், உடைமை, உயிர் என்பவற்றை தாக்கி அழித்து துரத்தும்போது, சிங்களத்தோடு தோளோடு தோள் நின்று வாரிச்சுருட்டியது இந்த ஈனப்பட்ட இனம். முள்ளிவாய்க்கால் அவலம் முடிந்து மக்கள் பிரதிநிதி என்று பாராளுமன்றம் போனவர், முஸ்லிம்களின் மேடைகளில் தோன்றி முஸ்லிம்களுக்கு நடந்தது இனச்சுத்திகரிப்பு என்று கூப்பாடு போட்டார். ஆனால் குறிவைத்து அப்பப்போ தாக்கியழிக்கப்பட்ட இனப்படுகொலைக்கு ஆதாரம் காணாது என்று உரத்துச்சொல்லிப்போட்டு, இன்றும் இந்த மக்களின் பிரதிநிதி தான் என்று அடாவடி பண்ணுகிறாரோ அது தெரியவில்லையா? கிழக்கு மாகாணத்த்துக்கு ஒரு முஸ்லீம் முதலமைச்சராக வந்தால் கிழக்கை முற்றாக கைப்பற்றி முஸ்லீம் மாகாணமாக மாற்றவேண்டும், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பதை இல்லாது செய்ய வேண்டுமென்ற முஸ்லிம்களோடு சேர்ந்து முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தாரே தாங்கள் அறியவில்லையா? ஊர்காவற்படை என்பது தமிழருக்ககெதிராக அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட ஒரு ஆயுத குழு. அது கிழக்கில் செய்த அட்டூ ழியங்கள் யாவரும் அறிவர். அப்படியான ஒரு அழிவு வடக்கில் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இவர்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்படிருக்கலாம். அதற்காக அவர்கள் பின் மன்னிப்பும் கேட்டிருந்தார்கள். ஆனால் இவர்கள் செய்தவற்றிற்கு மன்னிப்பு கேட்டார்களா? இல்லாதது பொல்லாதது எல்லாவற்றையும் அப்பப்போ கூறி தமிழர் தான் குற்றவாளிகள் என அவர்கள் நிறுவுகிறார்கள், அதற்கு வக்காலத்து கொடுப்பதும் நாம் தான். சிங்களம் தமிழரை தாக்கினால் அவர்களோடு கேளாமலேயே ஒன்று சேர்ந்து தாக்குகிறார்கள் தமிழரை,சிங்களம் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறை கிளம்பியபோது ஒரு முஸ்லீம் அரசியல்வாதி சொன்னார் நாட்டை இரண்டுபடுத்தும் போரில் முஸ்லிம்களை கேளாமலேயே தாம் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி போரிட்டபோதும் அரசாங்கம் தங்கள் மீது வன்முறையை கட்டவிழ்ப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் தங்களுக்கு அந்த நேரத்தில் தமிழரிடமிருந்து ஆதரவு தரவேண்டுமென்றும் பேசினார்கள். எப்படி இருக்கிறது அவர்களது நிஞாயம்? தமிழர் அதிகாரம் கேட்டால் மட்டும் தங்களுக்கும் வேண்டுமென்று கூச்சலிடுகிறார்கள். கேட்க வேண்டியது, அது என்ன அவர்களோடு சேர்ந்து கூடிக்குலாவுவது, தமிழர் கேட்டவுடன் மட்டும் இவர்களுக்கும் அந்த ஆசை வருகிறது? இந்த இனம் ஒரு கொள்கை இல்லாமல் ரத்தம் குடித்து வாழும் இனம். அதனால் சிங்களம் இவர்களை பயன்படுத்துகிறது. ஹிஸ்புல்லா, நசீர் போன்றவர்கள் அவர்களுடன் சேர்ந்தவர்கள் கிழக்கில் வேண்டுமென்றே கொலைகளை நடத்தினர் தமிழருக்கெதிராக. அதை ஹிஸ்புல்லாவே வெளிப்படையாக கூறியிருக்கிறான். கிழக்கு முஸ்லிம்களுடைய மாகாணமாக்குவதற்காக திட்டமிட்டு படுகொலைகளை நடத்தி அந்த மக்களை விரட்டினான். இப்போ பாருங்கள்... முழுமையான விசாரணைநடத்தி பறிக்கப்பட்ட நிலங்கள் மீள அந்த மக்களிடம் ஒப்படைக்கப்படவேண்டுமென்கிற நிலை வந்தால், வந்தால்.... முஸ்லிம்கள் எப்படி மாறுவார்கள் என்று! ஹி ஹி என்று கொண்டு, எந்த வெட்கமோ, குற்ற உணர்வோ இல்லாமல் வந்து ஒட்டிக்கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 13/7/2025 at 03:46, goshan_che said:

கருணா, பிள்ளையான் குழுவாக இருக்க வாய்ப்பில்லை, இது நடந்த போது அவர்கள் புலிகளில் இருந்தார்கள்.

முஸ்லிம்கள் மீது புலிகளின் இனச்சுத்திகரிப்பு என சிறிலங்கா அரசு அதை சுட்டிக்காட்டி அரபு முஸ்லீம் நாடுகளை தன் பக்கம் இழுத்துக்கொண்டது. அன்றைய காலகட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் அரசு ஆதரவில் இயங்கிய முஸ்லீம் ஊர்காவல் படையினரின் அட்டகாசம் அதிகரித்திருந்தது. தமிழ்க்கிராமங்கள் தாக்குதலுக்குள்ளாக்கியது. அப்பாவித்தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தப்படுகொலை நடத்தப்பட்டிருக்கிறது. அந்த மக்கள் நாளாந்தம் படுகொலை செய்யப்பட்டு, விரட்டப்பட்டு, காடுகளிலும் உறவினர் வீடுகளிலும் இழப்புகளோடு தஞ்சமடைந்து இருந்தபோது, இப்போது மனித நேயம் பேசும் ஒருவரும் அந்த மக்களுக்கு பாதுகாப்பளிக்கவில்லையே? அவர்களை காப்பாற்ற வேண்டிய நிலையில் அன்று புலிகளைத்தவிர யாரும் முன்வரவில்லை. அக்காலகட்டத்தில் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக இருந்தவர் விநாயக மூர்த்தி முரளிதரன். அன்று யாழ்ப்பாண தலைமையகத்திற்கு சென்ற விநாயக மூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் அடாவடி பற்றி முறையிட்டார். விநாயக மூர்த்தி முரளிதரனின் தூண்டுதலிலேயே யாழ்ப்பாணமுஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டதாக நம்பப்படுகிறது. கிழக்கு மாகாணத்தின் எதிரொலி இங்கும்நிகழ்ந்து விடக்கூடும் எனும் அச்சம் எழுந்திருக்கலாம், அப்படி ஒரு துர்ப்பாக்கிய நிலையை தவிர்ப்பதற்காக முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்றே நான் கருதுகிறேன். அங்கு அப்படியான ஒரு சூழலை முதலில் வலிந்து தோற்றுவித்தவர்கள் முஸ்லிம்களே! அன்றும் இன்றும் அவர்களுடைய குறிக்கோள், தமிழரை கிழக்கிலிருந்து அழித்தொழிப்பதே.

On 13/7/2025 at 21:17, goshan_che said:

அருண், வருண் என்ந் திசை திருப்ப மட்டுமே முடிகிறது.

அருண் சித்தார்த் சொல்லுது, குருக்கள் மடத்தில் நடந்த படுகொலைகள் புலிகளால் நடத்தப்பட்டதாம். அதற்காக புனர்வாழ்வளிக்கபட்ட முன்னாள் புலிகளும், புலம்பெயர் புலிகளும் தண்டிக்கப்படவேண்டுமாம், இராணுவத்தோடு சேர்ந்தியங்கும் முன்னாள் புலிகள் தண்டிக்கப்படக்கூடாதாம். காசு கொடுத்து தப்பி போய் வெளிநாடுகளில் இருந்துகொண்டு போராடுகிறார்களாம். இவருக்கு அப்போது தப்பிப்போக காசு இல்லைபோலும், அந்த வயிற்ரறெரிச்சலை கொட்டுது, தனது எஜமானை சிக்க வைப்பதும், இன்னும் இந்த பிரச்சனை மறக்கப்படாமல் இருப்பதற்கும் இவர்களே காரணமாயிருப்பதால், அவர்கள் மீது கோபமும் இப்படி கதைக்க வைக்கிறது. இவன் தமிழனா? இவனை பேசாமல் என்ன செய்வது? எந்த தொழிலும் உயர்வானதே, ஆனால் இவன் இப்போது இனத்தை விற்றுசெய்யும் தொழில் ஈனத்தனமானது, அருவருக்கத்தக்கது. மரியாதையை யாரும் கேட்டுப்பெற முடியாது, அது நமது நடத்தையால் பிறர் நமக்குத் தருவது, பிறருக்கு நமது செயல் மீது ஏற்படும் ஈர்ப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/7/2025 at 17:36, ரஞ்சித் said:

குருக்கள் மடத்தையும் விசாரியுங்கள். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நீதியின் தண்டனையினைப் பெற்றுக்கொடுங்கள் என்பதே நாம் முன்வைக்க வேண்டிய கோரிக்கை.

அதில் எங்களுக்கும் மாற்றுக்கருத்தில்லை. புலிகளை தண்டிப்பதற்கு முதல் இந்த வன்முறையை தூண்டியவர்கள், அதற்கான காரணம் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக நீதிபதியை மாற்றியவர் யார், ஏன், எதற்காக காரணம் வெளிக்கொணரப்படவேண்டும். கோயில்களை இடிக்கவும், இறைச்சிக்கடை வியாபாரத்தலங்கள் அமைக்க அனுமதியளித்தவர் யார்? அனைவரும் விசாரணை வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டு அவர்களது முறைகேடான பதவிகள் பறிக்கப்பட்டு அவர்களது வங்கிக்கணக்குகள் ஆராயப்பட்டு முறைகேடான பணச்சேர்ப்பு பறிமுதல் செய்யப்பட வேண்டும். அதாவது தமிழரும் முஸ்லிம்களும் இணைந்திருந்தால் தமது திட்டம் நிறைவேற்ற முடியாது, ஆகவே எங்களை இரண்டு படுத்த அவர்களுக்கு முஸ்லிம்களின் உதவி தேவைப்பட்டது. தமிழரை பெலயீனப்படுத்த முஸ்லிம்களுக்கு கிழக்கு மாகாணத்தை தருவதாக வாக்களித்து செயற்பட்டிருக்கிறார்கள். தமிழர் முடிந்தபின் இவர்கள் நிம்மதியாக இருக்க முடியுமா? அதன் பலனை கண்டோமே. இவர்களிடம் இருந்து கிழக்கை பறிப்பது சிங்களத்துக்கு ஒன்றும் பெரிய காரியமல்ல. சொந்த காணியை பறிக்க முடியுமென்றால், கள்ளக்காணியை பறிப்பது ஒன்றும் பெரிய பிரச்னையல்லவே. அறிவு இல்லாத ஜென்மங்கள் தங்களையும் தனிமைப்படுத்தி, தமிழரையும் அழிக்கிறார்கள். அதனாற்தான் வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்தஆறு ஓடும் என்று எச்சரிக்கிறார்கள் பின் விளைவை எதிர்பாராமல். இதையே போரின் பின் விநாயக மூர்த்தி முரளிதரன், சிவநேசதுரை சந்திரகாந்தனும் சேர்ந்து கோரஸ் பாடுகிறார்கள். வடக்கு கிழக்கு இணைவது தமிழர் பெலம் பெறும் என்பது சிங்களத்துக்கு நன்றாகவே தெரியும். ஆகவே இந்த மூடர்களை அது பாவித்து தன் திட்டத்தை நிறைவேற்றுகிறது. பேசுவது தமிழ், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்று சொல்லக்கூடாதாம். அறிவு எவ்வளவு என்று பாருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு விளங்குதோ விளங்கவில்லையோ தெரியவில்லை சாத்தான்…

நாம் ஏன் 16 வருடமாக ஒரே இடத்தில் நிண்டு சுத்துகிறோம் என்பதை உங்கள் நீண்டபதில்கள் விளக்கி நிற்கிறன.

புலிகள் தவறிழைத்தார்கள், அதில் அப்பாவி முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள். முஸ்லிம் ஜிகாத், ஊர்காவல் படைகளால் தமிழர்களும் பாதிக்கப்பட்டார்கள்.

இராணுவத்தால் தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள்.

இவை அனைத்தையும் விசாரிக்க வேண்டும்.

இதில் அப்போ அதிகாரத்தில் இருந்த, இப்போ எஞ்சியுள்ள அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

இதற்கு ஈடாக ஒரு நியாயமான தீர்வு வர வேண்டும்.

இதுதான் உண்மையான நல்லிணக்க, பொறுப்புகூறும் முடிவாக இருக்கும். (Truth and reconciliation).

இதை முந்தள்ளும் இயலுமையை நாம் பெறாதவரை, உங்கள் போன்றோரின் சிந்தனை எமது மக்களை வழி நடத்தும் வரை…..

அடிப்படைவாத முஸ்லிம்களும், இலங்கை அரசும், பெளத்த பேரினவாதிகளும், அருண் சித்தார்துகளும் வென்றுகொண்டே இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

இந்த அமைபினர்க்கு உள்ள தைரியம் ஒரு தமிழ் எம்பிக்கும் இல்லை.

இதை சொன்னால் அதை ஏன் சுமந்திரனிடம் கேட்கிறீர்கள் என்பது.....???

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, விசுகு said:

இதை சொன்னால் அதை ஏன் சுமந்திரனிடம் கேட்கிறீர்கள் என்பது.....???

உங்கள் கேள்வி நியாயமானதுதான்.

ஆனால் சும் இப்போ எம்பி இல்லை.

மக்கள் பிரதிநிதிகள் என்ன செய்கிறார்கள்? இதில் சாணக்சும் அடக்கம்.

இது மட்டும் அல்ல, கரி ஆனந்தசங்கரிக்கு ஆதரவாக ஏன் இன்னும் ஊரில், புலம்பெயர் நாட்டில் யாரும் குரல் எழுப்பவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, goshan_che said:

உங்கள் கேள்வி நியாயமானதுதான்.

ஆனால் சும் இப்போ எம்பி இல்லை.

மக்கள் பிரதிநிதிகள் என்ன செய்கிறார்கள்? இதில் சாணக்சும் அடக்கம்.

இது மட்டும் அல்ல, கரி ஆனந்தசங்கரிக்கு ஆதரவாக ஏன் இன்னும் ஊரில், புலம்பெயர் நாட்டில் யாரும் குரல் எழுப்பவில்லை?

தமிழ் எம்பி மட்டுமல்ல அவர் ஒரு கட்சியின் அதிமுக்கிய தலைவர்.

ஆனால் நான் தொடர்ந்து சொல்வது தான் இது போன்று தலைவர்கள் மக்கள் பணிகள் மூலம் இனம் காணப்பட்டு மக்கள் பிரதிநிதிகளாக வரணும்.

கரி ஆனந்தசங்கரி ஒரு தேசிய வாதி. முரண்பட்ட இரு தேசங்களை கையாளும் போது....,?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விசுகு said:

தமிழ் எம்பி மட்டுமல்ல அவர் ஒரு கட்சியின் அதிமுக்கிய தலைவர்.

அப்போ சிறிதரன், கஜன் முக்காத தலைவர்களா?

தவறு அனைவர் மீதும்தான்.

15 hours ago, விசுகு said:

ஆனால் நான் தொடர்ந்து சொல்வது தான் இது போன்று தலைவர்கள் மக்கள் பணிகள் மூலம் இனம் காணப்பட்டு மக்கள் பிரதிநிதிகளாக வரணும்.

ஈழ தமிழர் வரலாற்றில் ராமனாதன் தொட்டு அப்படி வந்த ஒரு தலைவரை காட்டுங்கள் ?

15 hours ago, விசுகு said:

கரி ஆனந்தசங்கரி ஒரு தேசிய வாதி. முரண்பட்ட இரு தேசங்களை கையாளும் போது....,?

ஆனால் எமக்கான ஒரு குரல் அல்லவா? அவர் அரசியலில் முன்னிலை பெற்ற பின் கனடாவின் எம்மீதான போக்கு 180 பாகையால் திரும்பியதா இல்லையா?

இதை பாதுகாக்க வேண்டியது நம் வேலை அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

1 - அப்போ சிறிதரன், கஜன் முக்காத தலைவர்களா?

தவறு அனைவர் மீதும்தான்.

2 - ஈழ தமிழர் வரலாற்றில் ராமனாதன் தொட்டு அப்படி வந்த ஒரு தலைவரை காட்டுங்கள் ?

3 - ஆனால் எமக்கான ஒரு குரல் அல்லவா? அவர் அரசியலில் முன்னிலை பெற்ற பின் கனடாவின் எம்மீதான போக்கு 180 பாகையால் திரும்பியதா இல்லையா?

இதை பாதுகாக்க வேண்டியது நம் வேலை அல்லவா?

1- அவர்களை குப்பை என்றபடி சுமந்திரனினை குண்டுமணியாக்கும் பணிக்கான எனது கருத்து மட்டுமே.

2- பட்டறிவே பாடம்

3- உலகெங்கும் முக்கியமாக கனடாவில் அவருக்கான ஒருமித்த ஆதரவு இருக்கிறது வெளிக்கொண்டு வர பட்டிருக்கிறது. ஆனால் முள்ளில் விழுந்த சேலையின் நிலை....

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

ஆனால் சும் இப்போ எம்பி இல்லை

எம்பியாக இருந்துமட்டும் என்னத்தை சாதித்தவராக்கும்?

22 hours ago, goshan_che said:

இதில் சாணக்சும் அடக்கம்.

வரே வா அப்படி வழிக்கு என்று சொல்வார்கள். நேற்றுத்தான் சுமந்திரன், சாணக்கியன் இதை சொன்னால் விளைவு என்ன என்கிற மாதிரி கதை. இன்று இப்படி. சாணக்கியன் சிங்கள கட்சியிலிருந்து பதவிக்காக கட்சி தாவி இப்போ கிழக்கின் முதலமமைச்சர் பதவி கனவில், யாரிலும் நோகக்கூடாது என்று காத்திருக்கிறார். அன்று ஹிஸ்புல்லா சொன்னார், அதாவது கிழக்கில் முஸ்லீம், முதலமைச்சராக வந்தால் தமிழர், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்று சொல்வார்களா? சொல்ல மாட்டார்கள் என்றார், அதே இன்று, ரவுப் கக்கீம் சொல்கிறார். தமிழரசுக்கட்சிகளோடு பல விட்டுக்கொடுப்புகளை செய்திருக்கிறார்களாம், முஸ்லிம்களுக்கென்று ஒரு மாகாணம் என்றால் அது கிழக்கு மாகாணம் தானாம், அதை தாங்கள் காத்துக்கொள்ள வேண்டுமாம். அப்போ சாணக்கியன் என்ன செய்வாரென ஆரூடம் கூறியாச்சு. முதலில் சாணக்கியன் தமிழரசில் போட்டியிடும்போதே தூஷண பிக்கரை கூட்டி வந்து அப்பாவி மக்களை பயமுறுத்தி வாக்கு சேர்த்தவர். அப்பவே அடித்து சொன்னேன் சாணக்கியனின் தந்திரத்தை. அங்கே முஸ்லிம்கள் காகித ஆலையை ஆட்டையைப்போட கங்கணம் கட்டுகிறார்கள். சிறீநாத், மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தடுக்க போராடுகிறார்கள். சாணக்கியன் கனவில் மிதக்கிறார். இருந்து பாருங்கள், சாணக்கியன் கிழக்கின் முதலமைச்சர் ஆனால், இருக்கும் தமிழரின் நிலங்களும் பறிக்கப்படும். அவர்களுக்கு தமிழரும் தேவையில்லை, நிலங்களும் தேவையில்லை, பதவி மட்டும் வேண்டும். அதற்காகவே சாணக்கியன், சுமந்திரன் தமிழரசுக்கட்சிக்கு நுழைந்தனர். சிங்கள மக்களோடு வாழ்வது அதிஷ்ட்டம் என்றவர், வடக்கு கிழக்கில் எனது உயிருக்கு ஆபத்து இராணுவம் மற்றும் அதிரடிப்படையின் பாதுகாப்பு வேணும் என்று சிங்களத்திடம் கேட்டு பெற்று விட்டு, வடக்கு கிழக்கிலே வாக்கு கேட்க்கும் வெட்கம் கெட்டவர், சிங்களத்திடம் எதிர்த்து கேள்வி கேட்க்கும் தைரியம் இருக்கா? சொன்னாரே, மன்னாரில் மனித புதை குழி தோண்டினார்கள், அப்போ நானும் அங்கிருந்தேன், அதன் பிறகு அதற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லையாம். செம்மணி புதைகுழி வெளிவந்தவுடன் பேட்டி கொடுக்கிறார். ஏன் அவரால் அதை முன்கொண்டு செல்ல முடியவில்லை? இவர் சட்டத்தரணிதானே? தமிழரின் பிரதிநிதி என்று வேறு அதிகாரம் செலுத்துகிறார். அப்போ ஏன் அவரால் முடியவில்லை? நீங்களும் அப்பப்போ சுமந்திரனுக்கு எதிரும் புதிருமாக கருத்துக்களை பதிந்து நடிக்கிறீர்கள். ஆனால் உங்கள் நடிப்பு அவர்களை காப்பாற்றாது.

  • கருத்துக்கள உறவுகள்
On 18/7/2025 at 22:20, goshan_che said:

புலிகள் தவறிழைத்தார்கள், அதில் அப்பாவி முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள். முஸ்லிம் ஜிகாத், ஊர்காவல் படைகளால் தமிழர்களும் பாதிக்கப்பட்டார்கள்.

புலிகளை தவறிழைக்க தூண்டினார்கள். ஊர்காவல் படை என்பது, கிழக்கில் தமிழ் முஸ்லீம் கலவரத்தை தூண்டுவதற்காக இராணுவப்பிரிவிலிருந்த ஒரு குழு. கிழக்கிலே தமிழர் முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருந்தால், தமது அடாவடிகளை நடத்த முடியாது என்பதற்காக, அவர்களை திட்டமிட்டு எதிரிகளாக்கியது. அப்பாவி தமிழ் மக்களை கொலை செய்தார்கள், இதனால் புலிகளை தூண்டி முஸ்லீம் மக்களை தாக்க வைத்து, அந்த வெறுப்பை, பகைமையை கொழுந்து விட்டு எரிய பண்ணுவதற்காக, மிகுதி கொலைகளை முஸ்லீம் ஊர்காவற்படையே செய்து, புலிகள் மீது பழியைப்போட்டு வன்மத்தை வளர்த்தனர். அமைதியாக இருந்த கிழக்கில் ஊர்காவல் படை எதற்கு ஸ்தாபிக்கப்பட்டது? அவர்களால் ஏன் அந்த மக்களை காப்பாற்ற முடியவில்லை? முஸ்லீம் அரபு நாடுகளின் ஆதரவை பெறுவதற்கு இதை பயன்படுத்தியவர்கள், அதை ஏன் தடுக்க தவறினார்கள்? முஸ்லிம்களுக்கு கிழக்கு மாகாணத்தை தமிழரிடம் இருந்து பறித்து தருவதாக கூறியே இத்தனை அனர்த்தங்களை அரங்கேற்றினார்கள். தூர நோக்கற்ற முஸ்லிம்கள், அற்ப வார்த்தையை நம்பி தங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் அதை உணரும்போது இவர்களை தூக்கி விடுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். எமது சொந்த நிலங்களை பறிக்கிறார்கள், விகாரை அமைக்கிறார்கள். இவர்களுக்கு இது நடப்பதற்கு எத்தனை நேரமாகும்? எனது அதிகாரத்தை பாவித்து இதை சாதித்தேன் என்கிறார் ஹிஸ்புல்லா. நாளைக்கு இந்த அதிகாரம் வேறொருவர் கைமாறும். அதிகாரம் ஒன்றுமில்லை, தமிழரை அழிக்க உதவியதற்காக கொடுக்கப்பட்ட லஞ்சம், அனுரா அரசு இதையும் விசாரிக்க வேண்டும், இதற்கு அனுமதியளித்தது யார், ஏன் என விசாரித்தால், அங்கும் ஒரு குடும்பமே சிக்கும். அவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையை பெற்றுக்கொடுத்த பெருமை ஹிஸ்புல்லாவை சாரும். அனுரா அமைதியான ஒரு நாட்டை உருவாக்க விரும்பினால், இவை எல்லாம் விசாரிக்கப்படவேண்டும். அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும், அல்லது குடியுரிமை பறிக்கப்படவேண்டும். எதிர் காலத்தில் இவர்கள் அரசியல் செய்யவோ, அரச தொழில் புரியவோ முடியாதவாறு சட்டமியற்ற வேண்டும், தடை விதிக்க வேண்டும்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

குருக்கள்மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு

Published By: VISHNU

25 AUG, 2025 | 07:15 PM

image

1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துக் கொண்டு கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த அப்பாவி முஸ்லிம்கள் ஆயுத தாரிகளால் இடைமறிக்கப்பட்டு கடத்தப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து கொலை செய்­யப்­பட்டு புதைக்கப்பட்டது சம்பந்தமாக, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் சார்பாக AMM.ரவூப் என்பவரால் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் செய்­யப்­பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை, திங்கட்கிழமை (25) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ள படி உரிய இடத்தில் புதைக்கப்பட்டுள்ள மனித எச்சங்களை தோண்டி எடுப்பதற்கான கட்டளையை நீதிவான் நீதிமன்ற நீதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலதிக நடவடிக்கைகளை களுவாஞ்சிக்குடி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். முறைப்பாட்டாளர் சார்பாக குரல்கள் இயக்க சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் சம்பவ இடமான குருக்கள்மடம் கடற்கரை வீதியின் , கடற்கரை எல்லைப்பிரதேசத்திற்கு விஜயம் செய்த களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தின் கௌரவ நீதவான் நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் சம்பவ இடத்தினை சந்தேகிக்கப்படும் இடமாக அடையாளப்படுத்தியதுடன் , பாதுகாப்பு வலயமாகவும் பிரகடனப்படுத்தி இதற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு கட்டளை இட்டார்.

இவ் வழக்கு திங்கட்கிழமை (25) காலை 9.30 மணிக்கு மீள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1000934717.jpg

1000934431.jpg

1000934715.jpg

1000934714.jpg

1000934711.jpg

https://www.virakesari.lk/article/223356

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த காய் நகர்த்தல் நாம் எதிர்பார்த்ததுதான் ....செம்மணியைவிட ..இது இனி பிரபலமாகும் ...

  • கருத்துக்கள உறவுகள்
On 17/7/2025 at 20:30, வாலி said:

பொதுவாக போதகர் நிராஜ் டேவிட்டின் காணொளிகளை அவற்றின் தலைப்பை பார்த்தவுடன் ஸ்கிப்பண்ணிப் போய்விடுவேன்.

😂

விளங்கியது. இன்று இவரின் காணொளி ஒன்று அனுப்பினார்கள். விஜய் தனது மாகாநாட்டில் ஏன் ஈழத்தமிழர்கள் பற்றி ஒரு வார்த்தை கூடப்பேசவில்லை என்பது அது. விஜய் அப்படி பேசுவார் என்று இவர் எப்படி எதிர்பார்த்தார்! காணொளியை அப்படியே நீக்கிவிட்டேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.