Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

25 JUL, 2025 | 10:18 AM

image

பாலஸ்தீன தேசத்தை பிரான்ஸ் அங்கீகரிக்கவுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் நியுயோர்க்கில் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் இந்த விடயம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/220895

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஒக்டோபர் ஏழாம் திகதி கொல்லப்பட்டவர்களின் முகத்தில் ஒங்கி அறையும் செயல் - அமெரிக்கா கடும் சீற்றம்

25 JUL, 2025 | 10:46 AM

image

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிப்பதற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தீர்மானித்துள்ளதை கடுமையாக விமர்சித்துள்ள அமெரிக்கா இது 2023 ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாசினால் கொல்லப்பட்டவர்களின் முகத்தில் அறையும் செயல் என குறிப்பிட்டுள்ளது.

இமானுவேல் மக்ரோனின் அறிவிப்பிற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

கண்மூடித்தனமான செயல் என அமெரிக்க  இராஜாங்க செயலாளர் மார்க்ரூபியோ தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதியின் யோசனையை அமெரிக்கா நிராகரிக்கின்றது என மார்க்ரூபியோ தெரிவித்துள்ளார்.

சமாதானத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் ஹமாசின் பிரச்சாரத்திற்கு இது உதவும், ஒக்டோபர் ஏழாம் திகதி பலியானவர்களின் முகத்தில் அறையும் செயல் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/220901

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா அப்படியே எங்கள் தேசத்தையும் தயவுசெய்து ........... ! 🙏

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-318.jpg?resize=750%2C375&ssl

பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் தெரிவிப்பு!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் பிரான்ஸ் ஒரு பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.

இதனால் அவ்வாறு செய்யும் முதல் G7 நாடாக பிரான்ஸ் மாறும்.

இது தொடர்பான எக்ஸ் பதிவொன்றில் பிரான்ஸ் ஜனாதிபதி, நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பாலஸ்தீன் அங்கீகாரம் குறித்த முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

மேலும், காசாவில் போர் முடிவுக்கு வருவதும், பொதுமக்கள் மீட்கப்படுவதும் இன்றைய அவசரத் தேவை.

உடனடி போர் நிறுத்தம், அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்தல் மற்றும் காசா மக்களுக்கு பாரிய மனிதாபிமான உதவிகள் தேவை என்றும் அவர் அந்தப் பதிவில் சுட்டிக்காட்டினார்.

பாலஸ்தீன அதிகாரிகள் மக்ரோனின் முடிவை வரவேற்றனர்.

அதேநேரத்தில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை “பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிக்கிறது” என்று கூறினார்.

அதேபோன்று, மக்ரோனின் அறிவிப்பை அமெரிக்கா “வலுவாக நிராகரிக்கிறது” என்று வொஷிங்டனின் வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ கூறினார்.

G7 என்பது முக்கிய தொழில்மயமான நாடுகளின் குழுவாகும், இதில் பிரான்சுடன் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி, கனடா மற்றும் ஜப்பான் ஆகியவை அடங்கும்.

தற்போது, பாலஸ்தீன அரசு ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் 140 க்கும் மேற்பட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அவற்றில் அடங்கும்.

ஆனால், இஸ்ரேலின் முக்கிய ஆதரவாளரான அமெரிக்காவும், இங்கிலாந்து உள்ளிட்ட அதன் நட்பு நாடுகளும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கவில்லை.

https://athavannews.com/2025/1440602

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, தமிழ் சிறி said:

ஆனால், இஸ்ரேலின் முக்கிய ஆதரவாளரான அமெரிக்காவும், இங்கிலாந்து உள்ளிட்ட அதன் நட்பு நாடுகளும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கவில்லை.

அமெரிக்காவும் இங்கிலாந்தும் எக்காரணம் கொண்டும் எந்தக்காலத்திலும் பலஸ்தீனம் என்ற தனிநாடு உருவாவதை விரும்பமாட்டார்கள். எக்காரணம் கொண்டும் அங்கீகரிக்கவும் மாட்டார்கள்.

பிரான்ஸ்க்கு தேவையில்லாத வேலை.😁

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்காவும் இங்கிலாந்தும் எக்காரணம் கொண்டும் எந்தக்காலத்திலும் பலஸ்தீனம் என்ற தனிநாடு உருவாவதை விரும்பமாட்டார்கள். எக்காரணம் கொண்டும் அங்கீகரிக்கவும் மாட்டார்கள்.

பிரான்ஸ்க்கு தேவையில்லாத வேலை.😁

பிரான்ஸ் அங்கீகரித்தால்... ஜேர்மனும் அங்கீகரிக்கும் என நினைகின்றேன். 🙂

ஜேர்மன் அங்கீகரித்தால்.... பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அங்கீகரித்தற்கு சமன். 😀

கடைசியாக இங்கிலாந்தும், அமெரிக்காவும்... வீணீர் வடித்துக் கொண்டு நிற்கப் போயினம். 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது என்றால் என்ன?

Published By: RAJEEBAN 25 JUL, 2025 | 03:19 PM

image

bbc

பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அங்கீகரிப்பது பெரும்பாலும் குறியீட்டு ரீதியான ஆனால் ஆழமான அரசியல் நடவடிக்கையாக காணப்படுகின்றது.

இது ஒரு வலுவான செய்தியை சொல்வதாக அமைந்துள்ளது - மத்திய கிழக்கில் நிலையான அமைதியை அடைவதற்கான ஒரே வழி இரு அரசு தீர்வு இஸ்ரேல் அரசுடன் ஒரு பாலஸ்தீன அரசு.

பிரான்ஸ் போன்ற ஒரு பெரிய ஐரோப்பிய சக்தி இந்த நடவடிக்கையை எடுக்கும்போது அது பாலஸ்தீனியர்களுக்கு சுயநிர்ணய உரிமைக்கான உரிமை உள்ளதை வெளிப்படுத்துகின்றது.  மேலும் சிலருக்கு அவர்களின் பல தசாப்த கால ஆசை ஒரு நாள் வெற்றிபெறும் என்ற மங்கிப்போகும் நம்பிக்கையை அதிகரிக்கிறது.

ஆனால் தற்போதைய இஸ்ரேலிய அரசாங்கம் திட்டவட்டமானது - பாலஸ்தீன அரசு என்பது அதனிடம் இல்லை.

palestine_4444.jpg

மே 2024 இல் ஸ்பெயின் நோர்வே மற்றும் அயர்லாந்தைத் தொடர்ந்து பிரான்சின் நடவடிக்கை இஸ்ரேலின் எதிர்ப்பை கடினமாக்கியுள்ளது மற்றும் எதிர்கால பாலஸ்தீன அரசின் நிலமான ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை இணைப்பதற்கான அச்சுறுத்தல்களை அதிகரித்துள்ளது.

அதனால்தான் பிரிட்டனின் பிரதமர் ஸ்டார்மர் "மிகப் பெரிய தாக்கத்தை" ஏற்படுத்தும் போது மட்டுமே இங்கிலாந்து அதைச் செய்யும் என்று முன்னர் கூறியிருந்தார்.

ஆனால் பாலஸ்தீனிய துன்பம் தீவிரமடைந்து தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அமைச்சர்கள் காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்ற வேண்டும் என்று அழைப்பு விடுக்கும்போது பிரிட்டன் மற்றும் பிற உலக சக்திகள் மீது - அது மிகவும் தாமதமாகிவிடும் முன் - ஒரு நிலைப்பாட்டை எடுக்க அழுத்தம் அதிகரிக்கிறது.

காலம்தான் எல்லாமே என்று அடிக்கடி கூறப்படுகிறது.

பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பிரான்ஸ் பல மாதங்களாக சூசகமாக கூறி வந்தது. காசாவில் நிலவும் அவநம்பிக்கையான சூழ்நிலை குறித்து அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் அதைத் தடுக்க முடியாததால் உலக வல்லரசுகளிடையே ஆழ்ந்த விரக்திக்கு மத்தியில் இறுதியாக தனது நடவடிக்கையை பிரான்ஸ் எடுத்துள்ளது.

செப்டம்பரில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையில் இந்த நடவடிக்கையை முறையாக எடுக்கும்போது மற்ற உலக வல்லரசுகள் அதன் வழியைப் பின்பற்றும் என்று பிரான்ஸ் நம்புகிறது. நிச்சயமாக பெரும்பாலான நாடுகள் நீண்ட காலத்திற்கு முன்பே பாலஸ்தீன அரசை அங்கீகரித்தன; மே 2024 இல் ஸ்பெயின் அயர்லாந்து மற்றும் நோர்வேயும் அங்கீகரித்தன.

பிரான்ஸ் ஐநா பாதுகாப்பு சபை மற்றும் ஜி7 அமைப்பின் முதல் உறுப்பினர்.

பிபிசி ரேடியோ 4 இன் தி வேர்ல்ட் டுநைட் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர் இதை ஒரு "பெரிய அறிவிப்பு" என்று கூறினார்.

இஸ்ரேல் அதை எப்படிப் பார்க்கிறது அங்கீகாரத்தை "பயங்கரவாதத்திற்கான வெகுமதி" என்று கண்டிக்கிறது. அமெரிக்காவிற்கும் இந்த நேரம் தவறானது மற்றும் "பொறுப்பற்றது".

ஆனால் காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களின் எதிர்காலம் நாளுக்கு நாள் இருண்டதாகத் தோன்றுவதால் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் தங்கள் சில இராஜதந்திர ஆயுதங்களில் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் இப்போது அதிகரித்து வருகிறது.

https://www.virakesari.lk/article/220918

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1 hour ago, தமிழ் சிறி said:

பிரான்ஸ் அங்கீகரித்தால்... ஜேர்மனும் அங்கீகரிக்கும் என நினைகின்றேன். 🙂

ஜேர்மன் அங்கீகரித்தால்.... பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அங்கீகரித்தற்கு சமன். 😀

கடைசியாக இங்கிலாந்தும், அமெரிக்காவும்... வீணீர் வடித்துக் கொண்டு நிற்கப் போயினம். 😂 🤣

அய்க்......ஆசை தோசை அப்பளம் வடை பாயாசம். அதுதான் இல்லையே..😂

ஜேர்மனி பலஸ்தீனத்தை அங்கீகரிக்க போவதில்லையாம்.ஏனெண்டால் அங்கீகரிப்பது பிழையான வேலையாம்.

உக்ரேனுக்கு முக்கி முனகுபவர்கள் பலஸ்தீன விடயத்தில் பாலுக்கு காவல் பூனைக்கும் தோழன் எண்ட கதைதான்.

இன்னொரு எத்தியோப்பியாவாக மாறி விட்ட பலஸ்தீனம்.☹️

naima-abu-ful-haelt-ihren-zwei.jpg

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

எம்மீதான இனவழிப்பிற்கெதிராகச் சர்வதேசத்தில் எந்த நாடும் செயற்படுவதை எப்படி இந்தியா தடுத்து நிறுத்தியதோ அதனையே இன்று பலஸ்த்தீனர்கள் மீது இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்டிருக்கும் இனவழிப்பினை பிரான்ஸ் அல்லது அதே நிலைப்பாட்டினையுடைய பிற நாடுகள் நிறுத்த முயன்றாலும் அமெரிக்கா முன்னின்று அவற்றையெல்லாம் தடுத்து வருகிறது.

முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்ட நேரடியான தாக்குதல்கள் மூலமான படுகொலைகள், பட்டிணியினூடான படுகொலைகள் போன்று பலஸ்த்தீனத்தில் திட்டமிட்டே இஸ்ரேல் அழிக்கிறது. 2009 சிங்கள இனவாதத்தினைக் கையிலெடுத்து, தனது சந்ததியின் அரசியல் இருப்பிற்காக தமிழினவழிப்பினை மேற்கொண்ட மகிந்தவைப்போல, தனது அரசியல் ஆதாயத்திற்காக கடும்போக்கு யூதர்களைக் கூடவைத்துக்கொண்டு நெத்தன்யாகு பலஸ்த்தீன இனவழிப்பை நடத்தி வருகிறான்.

இன்று நடக்கும் இனவழிப்பினைத் தடுப்பதற்கு பிரான்ஸ் மட்டுமன்றி ஏனைய நாடுகளும் பலஸ்த்தீன தேசத்தை அங்கீகரிக்க முன்வர வேண்டும். இஸ்ரேலின் போரிற்கான அமெரிக்க ஆதரவினைத் தளர்த்த இன்னும் பல நாடுகள் பிரான்ஸைப் பிந்தொடர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

அய்க்......ஆசை தோசை அப்பளம் வடை பாயாசம். அதுதான் இல்லையே..😂

ஜேர்மனி பலஸ்தீனத்தை அங்கீகரிக்க போவதில்லையாம்.ஏனெண்டால் அங்கீகரிப்பது பிழையான வேலையாம்.

உக்ரேனுக்கு முக்கி முனகுபவர்கள் பலஸ்தீன விடயத்தில் பாலுக்கு காவல் பூனைக்கும் தோழன் எண்ட கதைதான்.

இன்னொரு எத்தியோப்பியாவாக மாறி விட்ட பலஸ்தீனம்.☹️

naima-abu-ful-haelt-ihren-zwei.jpg

இலங்கை அரசை போலவே இஸ்ரேலும் உணவை ஆயுதமாக பயன்படுத்துகிறது, உலக நாடுகளிலிருந்து வரும் உணவு பொருள்களை வழங்குவதற்கு இஸ்ரேல் அமெரிக்க நிறுவனத்தின் மூலமான உணவு பங்கீட்டினை வலியுறுத்துகின்றது, இதன் மூலம் அமெரிக்க இஸ்ரேல் இணைந்து உணவை ஓர் ஆயுதமாக பயன்படுத்துகின்ற நிலை காணப்படுகிறது, தன்னார்வ நிறுவனங்களின் மூலம் வினியோகிக்கப்படும் உணவு கமாசிற்கு சென்று விடும் என குற்றம் சாட்டும் இஸ்ரேல் விமானம் மூலம் பாரசூட்டில் உணவு பகிர்வதனை தடுக்கமாட்டோம் என கூறுயுள்ளதாம், ஆனால் பாரசூட்டில் முன்னர் உணவு போட்டதில் பொதுமக்கள் சிக்கி உயிர் இழந்துள்ள நிலையில் அதனை செய்ய உலக நாடுகள் விரும்ப்பாது, இஸ்ரேலின் குற்றச்சாட்டான தன்னார்வ நிறுவனங்களின் உணவு பரிமாற்றத்தினால் கமாஸ் உணவினை பெறும் என்றால் விமானத்திலிருந்து போடும் போது அது கமாசிற்கு கிடைக்காதா?

நெத்தயாகு செலன்ஸ்கி போல அதிகாரத்திற்காக எந்த எல்லைக்கும் போகும் நபர்.

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-325.jpg?resize=600%2C300&ssl

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு !

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரித்த நிலையில், தற்போது பிரித்தானியாவும் ஆதரிப்பதாக பிரித்தானிய அமைச்சரவை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பாலஸ்தீன அரசை தாம் ஆதரிப்பதாகவும் , மேலும் இதுபோன்ற நீண்டகால அரசியல் தீர்வு ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாக்கப்படுவதை உறுதிசெய்ய விரும்புகிறோம் எனவும் ஆனால் இப்போது, இன்று, துன்பத்தைத் தணிப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மேலும் காசாவில் உள்ள தீவிரமான, நியாயப்படுத்த முடியாத துன்பங்களை நாங்கள் கையாள்கிறோம் எனவும் அதுதான் இன்று நமது முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனவும் பிரித்தானிய அமைச்சரவை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதாக அந்நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோன் அறிவித்டதிருந்த நிலையில் இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

https://athavannews.com/2025/1440747

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.