Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தீர்மானத்தை மீறி நல்லூர் ஆலயத்திற்கு மணல் விநியோகம் - பொதுமக்கள் குற்றச்சாட்டு!

1753815730.png

வடமராட்சி அம்பன் கிழக்கில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தீர்மானத்தை மீறி பொலிஸ் பாதுகாப்புடன் நல்லூர் ஆலயத்திற்கு மணல் விநியோகிக்கப்பட்டதற்கு பொதுமக்கள் கடும் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்  வருடாந்த திருவிழாவுக்காக வருடம் தோறும் குறிப்பிட்ட மணல்மண் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இருந்து பிரதேச மக்களின் அனுமதியுடன் வழங்கப்பட்டு வந்தது. 

வருடாந்தம் வழங்கப்படும் மணல்மண் திருவிழா நிறைவடைந்ததும் விற்பனை செய்யப்படுகின்றது.   இதனையடுத்து தமது பிரதேசத்தில் கூடியளவில் மணல் அகழப்பட்டுள்ளது என்றும் தொடர்ந்தும் கிராமத்தை  அழிவிற்கு உட்படுத்தக் கூடாது என்பதன் அடிப்படையிலும், இம்முறை மணல் மண் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள்  மணல் மண் வழங்க மறுத்திருந்தனர்.

அதேவளை தொடர்ச்சியாக அம்பன் கிழக்கில் மட்டும் அகழ கூடாது என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் பிரதேச மக்களின் எதிர்ப்பின் மத்தியிலும் பொலிஸ் பாதுகாப்புடன் மண் விநியோகம் இடம்பெற்றது. 

இன்று காலை 9 மணி முதல் மண் விநியோகம் தொடர்பான முறுகல் நிலை அம்பன் பிரதேசத்தில் பிரதேச செயலர் மற்றும் கிராம மக்களுக்கு இடையில் இடம்பெற்றது. 

அம்பனிலுள்ள தனிநபர் ஒருவருக்கு கனியமணல் அகழ்வுக்கான அனுமதியைப் பெற்றுக்கொடுத்து  நல்லூர் முருகன் ஆலயத்திற்கு பிரதேச செயலரால் மணல் மண் விநியோகம் இடம் பெறுகிறது என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

https://newuthayan.com/article/%C2%A0தீர்மானத்தை_மீறி_நல்லூர்_ஆலயத்திற்கு_மணல்_விநியோகம்_-_பொதுமக்கள்_குற்றச்சாட்டு!

  • கருத்துக்கள உறவுகள்

மணல் மாஃபியாக்கள் தினமும் நூற்றுக்கணக்கான உழவு யந்திரங்களில் மண்கடத்தும் போது எதுவும் செய்யாமல் பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு, நல்லூர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்காக பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்யும் போது உடலிற்கு வீதியில் உள்ள கற்கள் உறுத்தாமல் இருக்க மணல் எடுத்தால் எதிர்ப்பு தெரிவிப்பதை எந்த விதத்தில் சேர்ப்பது. animiertes-gefuehl-smilies-bild-0415.gif

நல்லூர் கோவில் என்ன... வருடம் முழுவதுமா மண் எடுக்கப் போகின்றது. திருவிழாவிற்கு மட்டும் தானே எடுக்கின்றார்கள்.

நல்லூர் கோவில் மண்ணுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்.... "ஆபிரஹாம் சுமந்திரனின், அல்லிலோயா" கோஷ்டியாக இருக்குமோ. animiertes-gefuehl-smilies-bild-0090.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் திருவிழா முடிவடைந்ததும் செய்தியில் குறித்தபடி மணலை விற்பனை செய்துவிடாமல் எடுத்த இடத்தில் திரும்பவும் கொண்டுபோய் கொட்டிவிட்டால் இந்த மண் பிரச்சினை இப்போதைக்கு தற்காலிகமாக தீர்ந்துவிடும். ஆக மொத்தம் மணலை ஏற்றி இறக்கும் செலவை மட்டும் கோவில் ஏற்றுக்கொண்டால் நல்லது.

மேலே குறிப்பிட்ட மண் அகழ்வுக்கான அனுமதியை வைத்திருக்கும் அம்பனில் உள்ள தனி நபர்தான் இங்கு ஏதோ சுத்துமாத்து செய்கிறார் போல் தெரிகிறது. கோவில் விவகாரங்களில் அனைவரும் வெளிப்படைத்தன்மையுடன் செயலாற்றவேண்டும் என்றுதான் அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கமுடியும்.

இப்போது நடந்து முடிந்ததை விட்டு அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு தேவையான மண்ணை பெற்றுக்கொள்ள கோவில் நிர்வாகமும் அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சபையும் இணைந்து சுமுகமான தீர்வொன்றை காணவேண்டியது மிக அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vanangaamudi said:

நல்லூர் திருவிழா முடிவடைந்ததும் செய்தியில் குறித்தபடி மணலை விற்பனை செய்துவிடாமல் எடுத்த இடத்தில் திரும்பவும் கொண்டுபோய் கொட்டிவிட்டால் இந்த மண் பிரச்சினை இப்போதைக்கு தற்காலிகமாக தீர்ந்துவிடும். ஆக மொத்தம் மணலை ஏற்றி இறக்கும் செலவை மட்டும் கோவில் ஏற்றுக்கொண்டால் நல்லது.

இது நல்ல யோசனை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மணல் விநியோகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன!

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

நல்லூர் பெரும் திருவிழாவுக்கு என இம்முறை எடுத்து வரும் மணலை பேணிப் பாதுகாத்து தொடர்ச்சியாக பயன்படுத்துமாறு யாழ்ப்பாணம் மாநகர சபையிடம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நல்லூர் பெரும் திருவிழாவுக்கு மணலினை எடுத்து வருவது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை குறித்து விளக்கமளிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நல்லூர் பெரும் திருவிழாவுக்கான மணல் கோரிக்கை யாழ்ப்பாணம் மாநகர சபையால் எமக்கு முன்வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை மருதங்கேணி பிரதேச செயலரிடம் முன்வைத்த போது, பிரதேச செயலர் அங்குள்ள சமூகமட்ட அமைப்பினருடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடலை மேற்கொண்டு கோரிக்கையை முன்வைத்த போது அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இருந்த போதும் நாகர்கோவில் மேற்கு பிரதேசத்தை சேர்ந்த விளையாட்டு கழகம் அதற்குரிய அனுமதியை வழங்கியபோது, வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் அந்த கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்குரிய அனுமதி எம்மால் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

அதனைத் தொடர்ந்தும் சமூகமட்ட அமைப்புகளுடன் கலந்துரையாடலை தொடர்ச்சியாக மேற்கொண்ட போதும் எவரும் அதற்குரிய சம்மதத்தை தெரிவிக்காத நிலையில் தனிநபர் ஒருவர் அரச காணியிலிருந்து மண்ணை பெற்று விநியோகிப்பதற்கான கோரிக்கையை முன் வைத்திருந்தார்.

அந்த கோரிக்கையானது எம்மால் யாழ்ப்பாணத்தில் உள்ள கனியவளத் திணைக்களத்திடம் முன்வைக்கப்பட்ட நிலையில் அது கொழும்புத் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனும் சுற்றாடற்துறை அமைச்சருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதற்குரிய வசதியை எனக்கு ஏற்படுத்தித் தந்தார். இது தொடர்பாக சுற்றாடத்துறை அமைச்சருக்கு நான் தெளிவான விளக்கத்தை வழங்கினேன்.

அதனைத் தொடர்ந்து கனியவளத் திணைக்களத்திற்கு பொறுப்பாக இருக்கின்ற பணிப்பாளர் நாயகத்துடனும் தொலைபேசியில் உரையாடி இந்த விடயங்கள் தொடர்பில் தெளிவூட்டலை வழங்கியதன் அடிப்படையில் இதற்கான அனுமதியானது கொழும்பு தலைமையகத்தில் இருந்து யாழ்ப்பாணம் கனியவளத் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றது.

அதன் அடிப்படையில் நல்லூர் பெருந்திருவிழாவிற்கான மணல் விநியோகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இருப்பினும் அங்கு இருக்கின்ற சமூகமட்ட அமைப்புகள் அதற்கு எதிர்ப்பினை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இருந்த போதிலும் நாங்கள் இம்முறை யாழ்ப்பாணம் மாநகர சபையிடம், இம்முறைக்கு மணல் கிடைக்கப் பெற்றால் அந்த மணலை தொடர்ந்தும் அடுத்த திருவிழாவுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைத்திருக்கின்றோம் என தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmdmlu0d601q4qp4kyrzg80nq

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.