Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10 AUG, 2025 | 10:42 AM

image

கிழக்கு முஸ்லீம்கள் அரசியலில்  மறைமுகமான  அடிமைத்துவத்தின் கீழ்  இருக்கின்றமை கவலையளிக்கின்றது. பொத்துவில் அறுகம்பை பிரச்சினையானது அரசியலாக்கப்படுகின்றமை கவலையளிக்கின்றது  என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால்  தெரிவித்தார்.

கல்முனையில் சனிக்கிழமை (09) மாலை நடைபெற்ற விசேட  ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு  கருத்து வெளியிட்ட அவர்,

இஸ்ரேலுக்கு எதிரான ஸ்டிக்கர்  ஒட்டுவதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். எங்களின் கொழும்பு அலுவலகத்தில் இருக்கின்ற குப்பைகளை போடுகின்ற வாளியில் கூட இந்த ஸ்டிக்கர் ஒட்டி இருக்கின்றோம். 

இந்த ஸ்டிக்கர் ஒட்டுகின்ற  நிலைப்பாட்டில் எந்த ஒரு மாற்றமும்  இல்லை. தற்போது முஸ்லிம் அரசியல்வாதிகள் என்ன பிரச்சினைகளை பேசுகின்றார்களோ கடந்த காலங்களில் இந்தப் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அமைச்சுகளில் அவர்கள் இருந்திருக்கிறார்கள் .

அவ்வாறு அவர்கள் அன்று செய்யாது இன்று இஸ்ரேல் தொடர்பில் அரசியல் ரீதியாக பிரச்சனைக்கு உட்படுத்துகின்றார்கள். பங்களாதேஷ்காரர்கள் என்றாலும் சரி இஸ்ரேல் காரர்கள் இருந்தாலும் சரி சீனாக்காரர்கள் என்றாலும் சரி எமது நாட்டில் தேவையற்ற விடயங்களை  செய்வதை நாங்கள் அரசியல் ரீதியாக ஏற்றுக் கொள்ள மாட்டோம். 

அதற்காக நாங்கள் இஸ்ரேலியர்களை விரட்டுவதற்காக பொத்துவில் மண்ணுக்கு வர வேண்டிய தேவையில்லை. எமது தலைநகரம் கொழும்பில்  இரந்து அதாவது  எமது வீட்டிலிருந்து 30 கிலோமீட்டர் தூரம் தான் கட்டுநாயக்க  விமான நிலையம் இருக்கின்றது. 

அங்கிருந்து நாங்கள் இஸ்ரேலியர்களை மீண்டும் அவர்களை நாட்டிற்கு அனுப்பி விடுவோம். ஆனால் எமது நாட்டிற்கு உல்லாச பயணிகளாக வருகின்றவர்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். இந்த நாட்டின் பிரதான வருமான வழிகளில் சுற்றுலாத்துறை முக்கியத்துவம் பெற்றது. 

அதை மேம்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அதற்காக நாட்டின் இறைமையை பாதிக்கும் விடயங்களுக்கு அனுமதிக்க முடியாது.

எனவே தான் இலங்கையின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக மாறி வரும் சட்டவிரோத இஸ்ரேலிய  சபாத் இல்லங்களை பொத்துவில் பிரதேச சபை மூடிவிட முன்வர வேண்டும்.

பொத்துவில் அறுகம்பே பகுதியில் அரச அனுமதிகள் எதுவுமின்றி சட்டவிரோதமாக இயங்கும் இஸ்ரேலிய வழிபாட்டு தளம் (சபாத் இல்லம்)  அருகில் இருக்கும் பள்ளிவாசலும் இருள் சூழ்ந்து  இஸ்ரேலிய வழிபாட்டு தளத்தின் வாகன தரிப்பிடம் போன்று மாறியுள்ளது. 

கிழக்கில் அரசியல் செய்யும் மூன்று காங்கிரஸ் தலைவர்களும் இந்த விடயங்களில் கவனம் செலுத்தி அந்த பள்ளிவாசலை எதிர்காலத்தில் குறைந்தது மூடிவிடுவதிலிருந்தாவது பாதுகாக்க வேண்டும்.

தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின்னர் வாயால் கதைத்தவற்றை தவிர சமூகத்தின் நலனுக்காக இந்த காங்கிரஸ்காரர்கள் எதுவும் செய்யவில்லை.

கடந்த காலங்களில் வாயால் பேசிக்கொண்டிருந்ததையே இப்போதும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். வடக்கை தமிழ் முதலமைச்சர் ஆளவேண்டும் என்ற எங்களின் கொள்கைப்படி கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறோம்.

அதற்காக எதிர்வரும் காலங்களில் சகல காங்கிரஸ்காரர்களையும் பெருந்தேசிய கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து ஒரு கூட்டணியை அமைக்கும் பணியை முன்னெடுத்து வருகிறோம் என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின்  செயலாளர் நாயகமும்  கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரதி தலைவர் கலாநிதி ஹக்கீம் ஷெரீப், இணைப்பாளர் ஏ.எம். அஹூவர் உட்பட உயர்பீட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/222204

  • கருத்துக்கள உறவுகள்
On 11/8/2025 at 03:07, ஏராளன் said:

வடக்கை தமிழ் முதலமைச்சர் ஆளவேண்டும் என்ற எங்களின் கொள்கைப்படி கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறோம்.

ஓம், இவையளின்ர நிலைப்பாட்டினாற்தான் வடக்கில் தமிழர் முதலமைச்சர் ஆகிறார் இல்லையெனில் அதெல்லாம் முடியாது. இதையும் தமிழரசுக்கட்சி நம்பும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

ஓம், இவையளின்ர நிலைப்பாட்டினாற்தான் வடக்கில் தமிழர் முதலமைச்சர் ஆகிறார் இல்லையெனில் அதெல்லாம் முடியாது. இதையும் தமிழரசுக்கட்சி நம்பும்.

அப்ப ..எப்பவாம் அனுரவின் பதவிக்கு வாறதாம்...

  • கருத்துக்கள உறவுகள்

கறையான் புற்றெடுக்கும். பாம்பு குடிகொள்ளும். இது இயற்கையின் நியதி.🫣

  • கருத்துக்கள உறவுகள்

சில காலத்திற்கு முன்பு நடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஒன்றில்... தமிழர்கள் பெரும்பான்மையாக வந்து, கிழக்கு மாகாண முதமைச்சராக தமிழர் ஒருவர் வரக்கூடிய சந்தர்ப்பம் இருந்தும்... அதனை ஒரு முஸ்லீமுக்கு கொடுத்த... கபோதி தான் சம்பந்தன்.

அதற்குப் பிறகு கிழக்கு தமிழர்களை சோனகன் அடக்கி ஒடுக்கியதெல்லாம் பெரும் சோகம்.

சோனகனுக்கு முதமைச்ச ஆசையை தூண்டி விட்டு... சம்பந்தன் கூத்துப் பார்த்ததால், இப்ப அவர்கள் தொடர்ந்தும் முதலமைச்சர் கனவில் மிதக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

அதற்குப் பிறகு கிழக்கு தமிழர்களை சோனகன் அடக்கி ஒடுக்கியதெல்லாம் பெரும் சோகம்.

ஒழுங்காக இருந்த தமிழர்களையும் கருணா பிள்ளையான் அமல் பின்னால ஓடவிட்டுவிட்டு நஸீரோட சேர்ந்து மாட்டு பிரியாணி கிண்டிக்கொண்டிருந்தவர் தான் அந்த கபோதி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ஒழுங்காக இருந்த தமிழர்களையும் கருணா பிள்ளையான் அமல் பின்னால ஓடவிட்டுவிட்டு நஸீரோட சேர்ந்து மாட்டு பிரியாணி கிண்டிக்கொண்டிருந்தவர் தான் அந்த கபோதி

அம்பாறை தொகுதியில்.. சிங்களவன் பியசேன என்பனை தமிழரசு கட்சியில் போட்டியிட வைத்து... பாராளுமன்றம் அனுப்ப, அவன் ஓடிப் போய் மகிந்த கட்சியில் இணைந்து... சம்பந்தனுக்கு அல்வா கொடுத்த சம்பவமும் நடந்தது.

இப்படி.... சம்பந்தனின் ராஜதந்திரம் எல்லாம் சாயம் வெளுத்த சம்பவங்கள் நிறைய உண்டு.

சம்பந்தன், தமிழனை காட்டிக் கொடுத்து....

சாகும் மட்டும்... அரசாங்க மாளிகையில் சொகுசாக இருந்து,

அனுபவித்துப் போனது தான், அரசியலில் செய்த சாதனை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சம்பந்தன், தமிழனை காட்டிக் கொடுத்து....

சாகும் மட்டும்... அரசாங்க மாளிகையில் சொகுசாக இருந்து,

அனுபவித்துப் போனது தான், அரசியலில் செய்த சாதனை.

சுமந்திரனை தமிழரசுக் கட்சிக்குள் கொண்டு வந்ததை ஏன் மறந்தீர்கள் தம்பி.?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Paanch said:

சுமந்திரனை தமிழரசுக் கட்சிக்குள் கொண்டு வந்ததை ஏன் மறந்தீர்கள் தம்பி.?

பாஞ்ச் அண்ணை, சம்பந்தன்... தமிழருக்கு செய்த அநியாயம் ஒன்று, இரண்டு என்றால் நினைவில் வைத்திருக்கலாம். இது, வாழ்க்கை முழுக்க நயவஞ்சக வேலை செய்து விட்டு செத்துப் போனால் .. எதை என்று நினைவில் வைத்திருப்பது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.