Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-270.jpg?resize=750%2C375&ssl

உக்ரேனில் இரவு நேர ரஷ்யத் தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு, 38 பேர் காயம்!

ரஷ்யப் படைகள் கியேவ் மீது இரவு முழுவதும் பெரிய அளவிலான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர்.

இந்த தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர், 38 பேர் காயமடைந்தனர்.

மேலும், தாக்குதல் ஏழு மாவட்டங்களில் குடியிருப்பு மற்றும் பிற கட்டிடங்களை சேதப்படுத்தியதாக உக்ரேன் அதிகாரிகள் வியாழக்கிழமை (28) தெரிவித்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போரை முடிவுக்குக் கொண்டுவர மேற்கொண்ட முயற்சிகளுக்கு மத்தியில் இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது.

அதேநேரம் இந்தத் தாக்குதல், இராஜதந்திரத்திற்கு ரஷ்யாவின் பதிலை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாக உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதால், அவசர சேவைகள் தீயை அணைத்து, இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, நாடு தழுவிய தாக்குதலில் ரஷ்யா ஏவிய 598 ட்ரோன்களில் 563 மற்றும் 31 ஏவுகணைகளில் 26ஐ சுட்டு வீழ்த்தியதாக உக்ரேனிய விமானப்படை தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1445044

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

"மக்கள் இறக்காமல் இருந்தால் நல்லது" என்பதில் யார் முரண்பட முடியும்? ஆனால், மக்கள் இறப்பையும் மோதலையும் யார் தொடங்கியது, யார் கையில் தடுக்கும் வழி இருக்கிறது என்பதில் அல்லவா நீங்களும் "புரின் புரியன்மாரும்"😎 குழம்பி நிற்கிறீர்கள்? உக்ரைன் சரணடைந்து விட்டால் புரின் சும்மா சுருட்டிக் கொண்டு இருந்து விடுவாரா? 2014 இல் கிரிமியாவை சத்தமில்லாமல் கைப்பற்றிய பின்னர் புரின் சும்மா இருந்தாரா?

உக்ரைன் பிரச்சினையில் நிலையெடுத்திருக்கும் சிலருக்கு வரலாறு துண்டறத் தெரியாது. அந்த வெறுமையில் இருந்து அபிப்பிராயங்களை உருவாக்குகிறார்கள் என்பது மீள மீள நிரூபிக்கப் பட்டிருகிறது. உங்களுக்கு அந்தப் பிரச்சினை இல்லை. ஆனாலும் குழப்பம் தீரவில்லை.

வரலாறுகள் முழுமையாக தெரியும் என கூறினால் அது பொய்யாகிவிடும், யாரோ கூறியது! வரலாறு என்பது கற்பனைகள் நிறைந்தது என; ஒவ்வொரு விடயங்களையும் நாம் எப்படி அணுகுகிறோம் என்பதிலேயே இருக்கிறது பிரச்சினை, அவை வெளியில் இல்லை எம்மிடமே இருக்கும்.

திரைப்படங்களில் ஒருவரை கதாநாயகனாகவும் இன்னொருவரை மிக மோசமான வில்லனாகவும் காட்டுவார்கள் அது மனித மனதினை இலகுவாக கவர்கிறது.

யாதார்த்தத்தில் A இல்லாவிட்டால் B ஆகத்தான் இருக்கவேண்டும் என சிந்திப்பவர்கள் இருக்கிறார்கள், இது தீவிரமான இரு துருவ சிந்தனை, ஆனால் சம்பவங்கள் யதார்த்தத்தில் அப்படி இருப்பதில்லை.

பிழையான புரிதலுடன் ஒன்றை அணுகி அது பிழை என தெரிந்த பின்னும் அதனை விட்டு நகரமால் அதன் மேல் அதிக ஆர்வம் காட்டுவதனை Doubling down என்பார்கள் மனம் ஒரு விந்தையானது, நடைமுறை வாழ்க்கையில் அது அதிக வலியினை கொடுக்கும் தேவையற்ற விடயம் (நானும் விதிவிலக்காக இருந்ததில்லை).

ஒவ்வொரு விடயத்திற்கும் இரண்டு பக்கமல்ல பல பக்கங்களும் இருக்கலாம், நாம் எமக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்துகொள்கிறோம் அவ்வளவுதான் வித்தியாசம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

🤣 ஹிற்லர் 33% ஜேர்மனியினரின் வாக்குகளைப் பெற்று, கம்யூனிஸ்ட்களை மட்டும் அழிக்கிறேன் என்று ஆரம்பித்து, பின்னர் யூதர், கத்தோலிக்கர், ஓர் பாலினத்தவர், உடல் ஊனமுற்றோர் என்று 10 மில்லியன் பேரைக் கொன்றொழித்தது, primary தகவலா அல்லது இன்னொருவர் எழுதி வைத்து விட்டுப் போன இரண்டாம் நிலைத் தகவலா?

இது போன்ற பதிவான சம்பவங்களையே "இரு பக்கம் இருக்கிறது, பல பக்கங்கள் இருக்கின்றன" என்று சமாளிப்பது ஒன்றும் தெரியாமல் இருக்கும் ஆட்கள் செய்யும் வேலையை விட ஆபத்தான சகஜமயப்படுத்தல் எனக் கருதுகிறேன்.

ஓடாமல் நின்ற கடிகாரத்தை விட, தொடர்ந்து பிழையாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு கடிகாரத்தின் விளைவு நேர/கால நாசம் என்பார்களே? அது போன்ற நிலை உங்கள் இந்த அரை வேக்காட்டு மதிமேல் பூனை நிலை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 27/8/2025 at 16:31, ஈழப்பிரியன் said:

ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டு

யூரோ நாணயம் வந்த போது

டாலரை வீழ்த்தவே என்று பேசிக் கொண்டார்கள்.

இதை நம்பி ஈராக் ஜனாதிபதியும் யூரோவில் வியாபாரம் செய்யப் போய்

ஆளும் இல்லை நாடும் இல்லை.

வெளியே சொல்லப்படாத,ஆதாரங்கள் இல்லாத உண்மை என்றால் நீங்கள் எழுதியதுதான்.

ஆனால் வெளியே ஆதாரத்தோடு சொல்லப்பட்ட காரணம் வேறு.

சதாம் ஹுசைனும்,கடாபியும் ஈரோ நாணயத்தை கையில் எடுத்ததுதான் பெரியண்ணருக்கு எரிச்சலை ஊட்டியது. பெரியண்ணர் நேட்டோ எனும் போர்வையில் லிபியா மீது போர் தொடுத்து தன் எரிச்சலை தீர்த்து விட்டார்.அந்த நேரம் புட்டின் ஆட்சியில் இருந்திருந்தால் கடாபிக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது எனவும் பேசிக்கொள்ளப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

🤣 ஹிற்லர் 33% ஜேர்மனியினரின் வாக்குகளைப் பெற்று, கம்யூனிஸ்ட்களை மட்டும் அழிக்கிறேன் என்று ஆரம்பித்து, பின்னர் யூதர், கத்தோலிக்கர், ஓர் பாலினத்தவர், உடல் ஊனமுற்றோர் என்று 10 மில்லியன் பேரைக் கொன்றொழித்தது, primary தகவலா அல்லது இன்னொருவர் எழுதி வைத்து விட்டுப் போன இரண்டாம் நிலைத் தகவலா?

இது போன்ற பதிவான சம்பவங்களையே "இரு பக்கம் இருக்கிறது, பல பக்கங்கள் இருக்கின்றன" என்று சமாளிப்பது ஒன்றும் தெரியாமல் இருக்கும் ஆட்கள் செய்யும் வேலையை விட ஆபத்தான சகஜமயப்படுத்தல் எனக் கருதுகிறேன்.

ஓடாமல் நின்ற கடிகாரத்தை விட, தொடர்ந்து பிழையாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு கடிகாரத்தின் விளைவு நேர/கால நாசம் என்பார்களே? அது போன்ற நிலை உங்கள் இந்த அரை வேக்காட்டு மதிமேல் பூனை நிலை!

இந்த கறுப்பு வெள்ளை இரு துருவ தீவிர சிந்தனையாளர்களை குறிவைத்து மிகைப்படுத்தப்பட்ட விளம்பர உத்தியினை வியாபாரத்தில் கைகொள்வார்கள்.

அதே போல் அரசியலில் Scare campaign எனும் உத்தியினை பயன்படுத்துவார்கள்.

எந்த விடயமும் நல்ல மாற்றத்திற்கானதாக இருக்கவேண்டும், சிலநேரங்களில் பெட்டி வெளியே நின்று சிந்திக்கும் போது ஒரு தெளிவு உருவாகும், குதிரை போல நேரே ஒரே இலக்கில் செல்வது சில வேளைகளில் பலன் தரும் ஆனால் அதனை நாம் தான் தீர்மானிக்கவேண்டும், மற்றவர்களல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vasee said:

நான் அவதானித்த வரை, நீங்கள் சில மனவியல்/சமூகவியல் தொடர்பான கலைச் சொற்களை எடுத்து வைத்திருக்கிறீர்கள். பின்னர், பொருத்தமேயில்லாத இடங்களில் அந்தச் சொற்களை இணைத்துத் தொடுத்து கருத்துக்களை எழுதுகிறீர்கள்! இதுவல்லவா நேர் கோட்டில் செல்லும் குதிரையின் குணம்😂?

நீங்கள் எழுதியிருக்கும் இந்தக் கருத்துக்கும்,நாம் உரையாடிக் கொண்டிருக்கும் நாசிகள், நவநாசிகள் செய்யும் அறப் பிறழ்வுகளைச் சுட்டிக் காட்டுவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று உங்களுக்கு மட்டுமே புரியும், எனக்கு எதுவும் பிரியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

வெளியே சொல்லப்படாத,ஆதாரங்கள் இல்லாத உண்மை என்றால் நீங்கள் எழுதியதுதான்.

ஆனால் வெளியே ஆதாரத்தோடு சொல்லப்பட்ட காரணம் வேறு.

சதாம் ஹுசைனும்,கடாபியும் ஈரோ நாணயத்தை கையில் எடுத்ததுதான் பெரியண்ணருக்கு எரிச்சலை ஊட்டியது. பெரியண்ணர் நேட்டோ எனும் போர்வையில் லிபியா மீது போர் தொடுத்து தன் எரிச்சலை தீர்த்து விட்டார்.அந்த நேரம் புட்டின் ஆட்சியில் இருந்திருந்தால் கடாபிக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது எனவும் பேசிக்கொள்ளப்பட்டது.

😂"ஆதாரங்கள் இல்லாத உண்மை" - இப்படியொரு தமிழ் சொற்றொடர் இன்று தான் அறிகிறேன்.

சரியாகத் தேடிப் பார்த்தீர்களா? 2011 இல் லிபியப் பிரச்சினை நடந்து கொண்டிருந்த போது புரின் "ஆட்சியில்" இருக்கவில்லையா? தொடர்ந்து அதிபராக இருக்க அந்த நேரத்தில் ரஷ்ய அரசியலமைப்பு இடம் கொடுக்காமையால், தன் அல்லக்கை மெட்வெடேவை அதிபராக்கி விட்டு, புரின் பிரதமராக ஆட்சி நடத்திக் கொண்டிருந்தாரே? பின்னர் 2012 இல் மீண்டும் அதிபராகியவுடன், அரசியமைப்பையும் மாற்றினார்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

நான் அவதானித்த வரை, நீங்கள் சில மனவியல்/சமூகவியல் தொடர்பான கலைச் சொற்களை எடுத்து வைத்திருக்கிறீர்கள். பின்னர், பொருத்தமேயில்லாத இடங்களில் அந்தச் சொற்களை இணைத்துத் தொடுத்து கருத்துக்களை எழுதுகிறீர்கள்! இதுவல்லவா நேர் கோட்டில் செல்லும் குதிரையின் குணம்😂?

நீங்கள் எழுதியிருக்கும் இந்தக் கருத்துக்கும்,நாம் உரையாடிக் கொண்டிருக்கும் நாசிகள், நவநாசிகள் செய்யும் அறப் பிறழ்வுகளைச் சுட்டிக் காட்டுவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று உங்களுக்கு மட்டுமே புரியும், எனக்கு எதுவும் பிரியவில்லை!

தெரபிஸ்ட் ஆகலாம் போல இருக்கிறது🤣.

அண்மையில் ஒரு குடும்ப நிகழ்வில் ஒருவரை சந்திக்க நேர்ந்த்து, அந்த நிகழ்வில் 3 மணித்தியாலத்திற்கு மேலாக இருக்கவேண்டியதாக இருந்தது.

நல்ல மனிதர் படித்து உயர் பதவியில் இருக்கிறார், அவர் நீண்ட நேரம் தனது வெற்றிப்பயணம் (வேலை) தொடர்பாக பேசினார், அவர் ஆரம்பத்தில் எதிர்பார்த்த பிரிவு (ஒரே துறையில் வெவ்வேறுபட்ட பிரிவுகள் அந்த கற்கை நெறியில் உள்ளது) அவருக்கு கிடைக்கவில்லை அதனை ஒரு சவாலாக எடுத்து அவர் அவர் விரும்பிய துறையினை தெரிவு செய்தவர்களை விட நல்ல நிலையில் இருப்பதாக அவர் பேச்சின் சாரம்சம் இருந்தது (ஆனால் தற்போதும் மற்றவர்களின் மேல் அவருக்கு உடன்பாடில்லாமல் இருப்பதாக தோன்றியது).

அவர் ஒரு அங்கீகாரத்தினை எதிர்பார்ப்பது போல இருந்தது அவரது பேச்சில் (, நீண்ட நேரம் பேசினார் நான் எதுவித இடைமறிப்பும் செய்யவில்லை; ஒரு கட்டத்தில் அவருக்கே அதிகமாக பேசிவிட்டது போல உணர்ந்து பேச்சை நிறுத்த முயன்றார், மீன்டும் அவரை அப்படி இல்லை என கூறி தொடரக்கூறினேன் கடைசியாக போகும் போது கூறினார் என்னுடன் பேசிய பின்னர் புத்துணர்ச்சியாக உணர்வதாக கூறினார், அந்த 3 மணிநேரத்திற்கு மேலான உரையாடலில் ஆரம்பத்தில் என்னை எங்கே வேலை செய்கிறீர்கள் என கேட்டார் அதற்கு நான் வேலை செய்யும் இடத்தின் பெயரை கூறினேன், அந்த ஒரு வார்த்தையும் இல்லை தொடருங்கள் என கூறிய வார்த்தைகள்தான் முழு சம்பாசணையில் நான் பேசியது.🤣

நான் சிறுவயதில் படித்த செக்கோவின் குதிரைக்காரன் கதைதான் என்னை இப்படி மாற்றியிருக்கலாமோ என கருதுகிறேன், அந்த கதையில் ஒரு குதிரைவண்டிக்காரரின் மகன் இறந்துவிட்டார், ஆனால் அவரின் கதையினை யாரும் காது கொடுக்கவில்லை, கடைசியாக தனது குதிரைக்கு அவர் கூறியபோது அது எதேச்சையாக தலையசைத்தது, தனது கதையினை குதிரை கேட்பதாக நினைத்து குதிரையிடம் தனது கதையினை கூறுவார்.

உலக மாற்றத்திற்கேற்ப எமது சிந்தனைகள் கருத்துக்கள் காலத்திற்கு காலம் மாறவேண்டும் அவ்வாறில்லாமல் மனலில் விளையாடும் குழந்தைகள் போல் உள்ளங்கையினை இறுகப்பிடித்தால் மண் விழாது என இறுக இறுக பிடிக்கும் போதுதான் மண் அதிகமாக கொட்டுப்படும், அதனால் இந்த சம்பாசணையினை இத்துடன் விட்டுவிடுகிறேன்.🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, vasee said:

?_=%2Fm%2FNabW5Fd7IgsAAAAd%2Fclapping-le

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.